தமிழ்ச்
சொல் |
பொருள் |
மேற்கோள் |
பிறப்பியல் |
இகணை |
முரசு
செய்யும் மரம் |
அக.
131 |
இகு
(=முரசறை, வீழ்த்து) + அண் (=தண்டு, மரம்) + ஐ = இகணை = முரசு அறைய வீழ்த்தப்படும்
மரம் |
இகல் |
செருக்கு |
கலி.
105 |
இகு
(=தாழ், பணி) + அல் (=இன்மை) = இகல் = பணிவு இன்மை = செருக்கு |
இகல் |
ஒப்பு |
திரு.
166 |
இகு
(=பணி, ஒப்பு) + அல் = இகல் |
இகல் |
மாறுபாடு,
பகை |
பதி.
14, பதி. 60 |
இகு
(=பணி, ஒப்பு) + அல் (=இன்மை) = இகல் = ஒப்பு இல்லாதது = மாறுபாடு, பகை |
இகல் |
ஒலி |
நெடு.
116 |
இகு
(=ஒலி) + அல் = இகல் |
இகல் |
மிகுதி |
பட்.
72 |
இகு
(=திரள், மிகு) + அல் = இகல் = மிகுதி |
இகல் |
துரத்துகை |
பதி.
75 |
இகு
(=ஓட்டு, துரத்து) + அல் = இகல் = துரத்துகை |
இகல் |
பெருமை |
பரி.
1 |
இகு
(=தாழ்) + அல் (=இன்மை) = இகல் = தாழ்வற்றது |
இகல் |
போர் |
குறி.
27 |
இகு
(=திரள், கூடு, கொல்) + அல் = இகல் = கூடிக் கொல்லுதல் = போர் |
இகல் |
ஒழுகல் |
கலி.
134 |
இகு
(=சொரி, ஒழுகு) + அல் = இகல் = ஒழுகல் |
இகல் |
பிரிவு |
நற்.
180 |
இகு
(=திரள், சேர்) + அல் (=இன்மை) = இகல் = சேர்ந்து இல்லாமை = பிரிவு |
இகல் |
ஓட்டம்,
விரைவு |
கலி.
50 |
இகு
(=ஓடு, விரை) + அல் = இகல் = ஓட்டம், விரைவு |
இகல் |
வெற்றி |
பதி.
72 |
இகு
(=வீழ்த்து, வெல்) + அல் = இகல் = வெற்றி |
இகல் |
போட்டி |
அக.
97 |
இகு
(=சேர், கல, வீழ்த்து) + அள் (=வலிமை) = இகள் >>> இகல் = வலிமையால் வீழ்த்த
கலந்து கொள்வது |
இகுப்பம் |
பள்ளம் |
மலை.
367 |
இகு
(=தாழ்) + அம் = இகுவம் >>> இகுப்பம் = தாழ்வானது = பள்ளம் |
இகுளை |
தோழி |
நற்.
64 |
இகு
(=சேர், கல) + உள் (=உள்ளம், மனம்) + ஐ = இகுளை = மனதோடு கலந்தவள் = தோழி, மனைவி |
இச்சம் |
இன்பம் |
பரி.
7 |
இசை
(=இனிமை, இன்பம்) + அம் = இச்சம் = இன்பம் |
இசை |
நீண்ட
மெல்லொலி |
முல்.
8 |
இழை
(=இழு, நீட்டு, மென்மையாகு, ஒலி) >>> இசை = மென்மையாக நீட்டி ஒலிப்பது |
இசை |
புகழ்,
பெருமை |
திரு.
61 |
இழி
(=தாழ்) + ஆய் (=நீங்கு) = இழாய் >>> இசாய் >>> இசை = தாழ்வு நீங்கியது
= பெருமை, புகழ் |
இசை |
வரி |
பட்.
121 |
இழை
(=விதி, திரட்டு, வசூலி) >>> இசை = விதித்து வசூலிக்கப் படுவது = வரி |
இசை |
விளைச்சல்,
இலாபம் |
பதி.
50 |
இழை
(=திரட்டு, பெருக்கு) >>> இசை = பெருக்கம், விளைச்சல், இலாபம் |
இசை |
அவமானம் |
புற.
21 |
இழி +
ஐ = இழை >>> இசை = இழிவு, அவமானம் |
இஞ்சி |
கிழங்கு
வகை |
மது.
289 |
உய்
(=உண், எடு) + சீ (=சளி, போக்கு, கிளறு, தோண்டு) = உய்ச்சீ >>> இஞ்சி =
சளியைப் போக்குகின்ற தோண்டி எடுக்கப்படும் உணவு |
இஞ்சி |
கோட்டை
மதில், சுற்றுச் சுவர் |
மலை.
92, அக. 195 |
ஊழ்
(=பகை, மூடு, தடு) + சூழ் (=தாக்கு, சுற்று, கட்டு) = ஊழ்ச்சூழ் >>> உஞ்சு
>>> இஞ்சி = பகைவரின் தாக்குதலைத் தடுக்கச் சுற்றிக் கட்டுவது |
இட்டிகை |
செங்கல் |
அக.
167 |
இடு
(=நிரப்பு, உண்டாக்கு, கட்டு) + இகம் (=நிலம், மண், பொருள்) + ஐ = இட்டிகை = மண்ணை
நிரப்பி உண்டாக்கப்படும் கட்டுமானப் பொருள் = செங்கல் |
இட்டு |
சிறுமை |
மது.
482 |
இறை
(=அற்பம், சிறுமை) + உ = இற்று >>> இட்டு |
இட்டு |
சிதைவு |
நற்.
65 |
இடி
(=சிதை) + உ = இட்டு = இடிபாடு, சிதைவு |
இட்டு |
பொடி,
மாவு |
பரி.
10 |
இறை
(=அற்பம், பொடி) + உ = இற்று >>> இட்டு |
இட்டு |
பயணம் |
அக.
128 |
இறை
(=செல், பயணி) + உ = இற்று >>> இட்டு |
இடங்கர் |
முதலை |
குறி.
257 |
இறை
(=இருத்தல், நொடி, தாக்கல், மறைப்பு) + கார் (=நீர், கருமை) = இறைக்கார்
>>> இடங்கர் = நீரில் மறைந்திருந்து நொடியில் தாக்குகின்ற கருநிறத்தது |
இடம், இடன் |
மார்பு,
இடதுபக்கம் |
அக.
52, அக. 127, பெரு. 462 |
இறை
(=மார்பு) + அம் = இறம் >>> இடம் = மார்பு >>> இடது பக்கம் |
இடம், இடன் |
நிலம் |
பொரு.
245, நற். 324 |
இறு
(=தங்கு, நிலை) + அம் = இறம் >>> இடம் = நிலையானது = நிலம். ஒ.நோ: நில்
+ அம் = நிலம் |
இடம், இடன் |
சுட்டப்படுவது |
மலை.
533, அக. 162 |
இடு
(=குறி, சுட்டு) + அம் = இடம் = சுட்டப்படுவது |
இடம் |
வீடு |
முல்.
86 |
இறு
(=தங்கு, கட்டு) + அம் = இறம் >>> இடம் = தங்குவதற்காகக் கட்டுவது = வீடு |
இடம், இடன் |
பொழுது |
நற்.
25, மது. 239 |
இறை
(=பொழுது) + அம் = இறம் >>> இடம் |
இடம் |
அளவு |
நற்.
126 |
ஈறு
(=எல்லை, அளவு) + அம் = இறம் >>> இடம் |
இடம் |
கொடை |
பதி.
52 |
இடு
(=கொடு) + அம் = இடம் = கொடை |
இடம் |
கீறல் |
அக.
29 |
இட (=பிள,
கீறு) + அம் = இடம் = கீறல் |
இடம் |
பங்கு |
புற.
235 |
இட (=பிள,
பகு) + அம் = இடம் = பகுத்தது = பங்கு |
இடர் |
துன்பம் |
குறு.
400 |
இறு
(=அழி, வருத்து) + அர் = இறர் >>> இடர் = வருத்தம், துன்பம் |
இடன் |
உயர்வு,
மிகுதி, பெருமை |
பொரு.
65 |
இறை
(=உயர்வு) + அம் = இறம் >>> இடம் >>> இடன் = உயர்வு, பெருமை, மிகுதி |
இடன் |
கட்டு,
பிணி |
குறு.
265 |
இறு
(=கட்டு) + அம் = இறம் >>> இடம் >>> இடன் = கட்டு, பிணி |
இடன் |
பிளவு,
பிரிவு |
கலி.
92 |
இட (=பிள,
பிரி) + அம் = இடம் >>> இடன் |
இடன் |
பிறப்பு,
தோற்றம் |
அக.
160, நற். 182 |
உறு
(=தொடங்கு, தோன்று) + அம் = உறம் >>> இடம் >>> இடன் = தோற்றம்,
பிறப்பு |
இடன் |
துன்பம் |
புற.
126 |
இறு
(=அழி, வருத்து) + அம் = இறம் >>> இடம் >>> இடன் = வருத்தம், துன்பம் |
இடி |
இடியோசை |
திரு.
121 |
ஏறு
(=இடியோசை) + இ = எறி >>> இடி |
இடி |
மாவு |
மலை.
512 |
இறை
(=அற்பம், பொடி) + இ = இறி >>> இடி = மாவு |
இடி |
ஒலி |
அக.
309 |
எறி
(=ஒலி) >>> இடி |
இடிப்பு |
துன்பம் |
நற்.
23 |
எறி
(=அழி, வருத்து) + பு = எறிப்பு >>> இடிப்பு = வருத்தம், துன்பம் |
இடுக்கண் |
துன்பம்,
நோய் |
மலை.
18 |
இறு
(=அழி, வருத்து) + கண் (=கருது, உடல்) = இறுக்கண் >>> இடுக்கண் = கருத்தினை
/ உடலை வருத்துவது = துன்பம், நோய் |
இடும்பை |
நோய்,
துன்பம் |
நற்.
148 |
இறு
(=அழி) + பை (=உடல் வலிமை) = இறுப்பை >>> இடும்பை = உடலின் வலிமையை அழிப்பது
= நோய் |
இடும்பை |
வறுமை |
புற.
169 |
இறு
(=அழி, இல்லாகு) + பை (=பணம், பொருள்) = இறுப்பை >>> இடும்பை = பொருள் இல்லாமை |
இடை |
வழி |
குறு.
153 |
இட (=பிள)
+ ஐ = இடை = பிளவு, வழி |
இடை |
இடம் |
நற்.
314 |
இடம்
+ ஐ = இடை |
இடை |
இடுப்பு |
பதி.
79 |
இறை
(=நடுவுநிலைமை, சிறுமை, வளை) >>> இடை = சிறுத்து வளைந்து நடுவில் உள்ளது
= இடுப்பு |
இடை |
நடு |
ஐங்.
390 |
இறை
(=நடுவுநிலைமை) >>> இடை = நடுவானது |
இடை |
கடமை |
பெரு.
445 |
இறை
(=கடமை) >>> இடை |
இடை |
போர் |
மது.
349 |
இறு
(=சேர், கூடு, அழி) + ஐ = இறை >>> இடை = கூடி அழித்தல் = போர் |
இடை, இடையன் |
ஆடு மாடு
வளர்ப்போர் |
நற்.
266, அக. 94 |
ஏறு
(=ஆடு, மாடு, வளர்) + ஐ = எறை >>> இடை = ஆடு மாடுகளை வளர்ப்பவர் = இடையர் |
இடை |
அழிவு,
சிதைவு |
குறு.
180 |
இறு
(=அழி, சிதை) + ஐ = இறை >>> இடை |
இடை |
பொழுது |
குறு.
335 |
இறை
(=பொழுது) >>> இடை |
இடை |
உயரம்,
உச்சி |
பரி.
21 |
இறை (=உயரம்,
உச்சி) >>> இடை |
இடை |
சொல் |
கலி.
3 |
இறு
(=சொல்) + ஐ = இறை >>> இடை |
இடை |
பிரிவு |
கலி.
10 |
இட (=பிள,
பிரி) + ஐ = இடை = பிரிவு |
இடை |
முடிவு |
கலி.
24 |
இறு
(=முடி) + ஐ = இறை >>> இடை = முடிவு |
இடை |
வெளி |
கலி.
55 |
இற (=இல்லாகு)
+ ஐ = இறை >>> இடை = இன்மை |
இடை |
காளை |
கலி.
105 |
ஏறு
(=காளை) + ஐ = எறை >>> இடை |
இடை |
உணவு |
அக.
271 |
உறை
(=உணவு) >>> இடை |
இடை |
கை |
அக.
286 |
இறை
(=கை) >>> இடை |
இடை |
உண்மை |
அக.
303 |
இடு
(=ஏற்றிச்சொல், நீக்கு) + ஐ = இடை = ஏற்றிச் சொல்வது நீக்கப்பட்டது = உண்மை |
இடை |
தடை |
புற.
54 |
இறை
(=மறைப்பு, தடுப்பு) >>> இடை = தடை |
இடை |
பிணம் |
புற.
245 |
இற (=சாவு)
+ ஐ = இறை = செத்தது = பிணம் |
இடை |
தாழ்வாரம் |
புற.
332 |
இறை
(=தாழ்வாரம்) >>> இடை |
இடைகழி |
நில எல்லை |
புற.
175 |
இடை
(=இடம், நிலம்) + கழி (=முடி) = இடைகழி = நிலத்தின் முடிவு |
இணர் |
பூ |
திரு.
28 |
இன்
(=இனிமை) + ஆர் (=காம்பு, பொருந்து, உண்) = இனார் >>> இணர் = இனிய உணவுடன்
காம்பில் பொருந்தியது = மலர் |
இணர் |
கொத்து |
பட்.
18 |
இணை
(=சேர்) + அர் = இணர் = சேர்ந்தது = கொத்து |
இணர் |
பூங்கொத்து |
குறி.
69 |
இணர்
(=பூ, கொத்து) >>> இணர் = பூங்கொத்து |
இணர் |
மனம்,
உள்ளம் |
நற்.
118 |
உணர்
(=கருது) >>> இணர் = கருதுவது = மனம், நெஞ்சம், உள்ளம் |
இதக்கை |
காயின்
மேல் உறை |
அக.
365 |
இறை
(=உச்சி, மேல், நடு, உறை, பொருந்து) + காய் = இறைக்காய் >>> இதக்கை = காயின்
மேலே நடுவில் பொருந்தி இருக்கும் உறை. |
இதணம் |
காவல்
பரண் |
நற்.
216 |
இறை
(=மேல், தங்கல், காவல்) + அணை (=மரம், கட்டு, இடம்) + அம் = இறணம் >>> இதணம்
= இடத்தைக் காவல்செய்ய மேலே மரத்தால் கட்டும் தங்குமிடம் |
இதல் |
குருவி |
புற.
319 |
உந்தி
(=உயரம், பறவை) + அல் (=இன்மை) = உந்தல் >>> இதல் = உயரத்தில் பறக்கின்ற
உயரம் இல்லாத பறவை |
இதழ் |
மலர்,
மலரேடு |
பொரு.
27, பெரு. 114 |
ஈ (=தேனீ,
கொடு) + தாழ் (=ஒலி, வணங்கு, விரும்பு, படி) = ஈதாழ் >>> இதழ் = ஒலித்து
வணங்கிப் படியும் தேனீக்களுக்கு விரும்பியதைக் கொடுப்பது = மலர் >>> மலரின்
மெல்லிய ஏடு |
இதழ் |
கண்ணிமை |
நெடு.
164 |
இறை
(=கண், காவல்) + ஆழ் (=புதை, மறை) = இறாழ் >>> இதழ் = கண்ணைக் காத்து மறைப்பது |
இதழ் |
காட்சி,
உருவம் |
ஐங்.
334 |
இறை
(=கண்) + ஏழ் (=தோன்று) = இறேழ் >>> இதழ் = கண்ணுக்குத் தோன்றுவது = காட்சி,
உருவம் |
இதழ் |
உதடு |
பரி.
20 |
இறை
(=கூட்டம், சொல், காவல்) + ஆழ் (=புதை, மறை) = இறாழ் >>> இதழ் = சொல்லைக்
காத்து மறைக்க கூட்டப் படுவது = உதடு |
இதழ் |
இலை |
அக.
37 |
இறை
(=மரம்) + ஏழ் (=தோன்று, மிகு) = இறேழ் >>> இதழ் = மரத்தில் மிகுதியாகத்
தோன்றுவது = இலை |
இதன் |
அறிவு |
புற.
381 |
இறை
(=விடை, அறிவு) + அம் = இறம் >>> இதம் >>> இதன் = அறிவு |
இதன் |
இதயம் |
குறு.
263 |
இறை
(=நெஞ்சு, இதயம்) + அம் = இறம் >>> இதம் >>> இதன் = இதயம், நெஞ்சம் |
இதை |
கப்பல்
பாய் |
மது.
376 |
உறை
(=துணி, நீளம், உயரம், பெருமை, மிகு) = இதை = நீளமும் உயரமும் மிக்க பெரிய துணி
= கப்பல் பாய் |
இதை |
உழப்படாத
நிலம் |
அக.
140 |
உறை
(=இறுகு, இடம்) >>> இதை = இறுகிய இடம் = உழப்படாத நிலம் |
இந்திரன் |
மேகம் |
பரி.
8 |
ஈ (=படை)
+ திரை (=கடல், அலை, மித, திரள்) + அன் = இந்திரன் = கடலால் படைக்கப்பட்டு மிதந்து
அலைந்து திரளக் கூடியது = மேகம் |
இந்திரன் |
சூரியன் |
பரி.
24 |
ஈ (=படை)
+ திரு (=ஒளி) + அன் = இந்திரன் = ஒளியைப் படைப்பவன் = சூரியன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.