புதன், 9 மார்ச், 2022

105. (சலதாரை > சலுப்பு) சமக்கிருதச் சொற்பிறப்பியல் (Sanskrit Etymology in Tamil)

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

தோன்றும் முறை

சலதாரை

சாக்கடை

அலந்தாரை

அல் (=இருள், கருமை, கறை) + அம் (=நீர்) + தாரி (=வழி) + ஐ = அலந்தாரை >>> சலதாரை = கறையுடைய நீருக்கான வழி = சாக்கடை

சலதி

கடல்

அலதி

ஆல் (=நீர்) + அதி (=மிகுதி) = அலதி >>> சலதி = மிக்க நீரைக் கொண்டது = கடல்

சலதி

பொய் சொல்பவள்

அலறி

அல் (=மாயை, பொய்) + அறை (=சொல்) + இ = அலறி >>> சலதி = பொய் சொல்பவள்

சலதோசம்

நீரில் நனைந்து பற்றுகின்ற சளி

அலைதோயம்

ஆல் (=நீர்) + ஐ (=சளி) + தோய் (=நனை, பற்று) + அம் = அலைதோயம் >>> சலதோசம் = நீரில் நனைவதால் பற்றுகின்ற சளி.

சலந்தரம்

நீர்நிலை

அளந்தாரம்

சலதரம் (=நீர்நிலை) >>> சலந்தரம்

சலபம்

விளக்குப் பூச்சி

எலவம்

எல் (=ஒளி) + அவா (=விருப்பம்) + அம் (=பறவை, பூச்சி) = எலவம் >>> அலபம் >>> சலபம் = ஒளியை விரும்பும் பூச்சி = விளக்குப் பூச்சி

சலம்

நீர்

ஆல்

ஆல் (=நீர்) + அம் = அலம் >>> சலம்

சலம்

தள்ளாட்டம், நடுக்கம்

அலம்

அலை (=தள்ளாடு, நடுங்கு) + அம் = அலம் >>> சலம் = தள்ளாட்டம், நடுக்கம்

சலம்

சுழற்சி, சுற்று

அலம்

அலை (=திரி, சுற்று) + அம் = அலம் >>> சலம் = சுற்று

சலம்

அசைவது

அலம்

அலை (=அசை) + அம் = அலம் = அசைவது

சலம்

பிடிவாதம்

அலம்

அல் (=இன்மை) + அம் (=சொல், அடங்கு) = அலம் >>> சலம் = சொல்லுக்கு அடங்காமை = பிடிவாதம்

சலம்

எதிர்ப்பு, போட்டி

எலம்

ஏல் (=எதிர்) + அம் = எலம் >>> அலம் >>> சலம் = எதிர்ப்பு, போட்டி

சலம்

மாறுபாடு

எலம்

ஏல் (=மாறுபடு) + அம் = எலம் >>> அலம் >>> சலம் = மாறுபாடு

சலம்

திட்டு

அலம்

அலை (=வருத்து) + அம் (=சொல்) = அலம் >>> சலம் = சொல்லால் வருத்துதல் = திட்டு

சலம்

பொறாமை, கோபம்

அலம்

அல் (=இன்மை) + அம் (=பொருந்து, பொறு) = அலம் >>> சலம் = பொறாமை >> கோபம்

சலம்

பொய், வஞ்சனை

அலம்

அல் (=மாயை, பொய்) + அம் = அலம் >>> சலம் = பொய், வஞ்சனை

சலம்

துன்பம்

அலம்

அலை (=வருத்து, துன்புறுத்து) + அம் = அலம் >>> சலம் = துன்பம்

சலம்

முள்ளம்பன்றியின் முள்

அலம்

அல் (=கருமை) + அம் (=அம்பு, கூர்முள்) = அலம் >>> சலம் = கருமைநிறக் கூர்முள் = முட்பன்றியின் முள்

சலம்பு

ஓயாமல் பேசு

அலம்பு

அல் (=இன்மை) + அம் (=சொல், அடங்கு, ஓய்) + பு = அலம்பு >>> சலம்பு = ஓயாமல் பேசு

சலம்புரி

வெண்சங்கு

அலம்புரி

ஆல் (=ஒலி) + அம் (=ஒளி, வெண்மை) + புரி (=செய், முறுக்கு) = அலம்புரி >>> சலம்புரி = ஒலியைச் செய்வதற்கான முறுக்குடைய வெண்பொருள்

சலமானம்

செல்லுகை

செலவு

செலவு (=செல்லுகை) + அணம் = செலவணம் >>> சலமானம்

சலரசம்

உப்பு

அலரசம்

ஆலம் (=கடல்) + அரி (=உண்டாகு, நீர்) + அசை (=தங்கு, மெலி, வற்று) + அம் (=வெண்மை, உணவு) = அலரசம் >>> சலரசம் = கடல்நீர் தங்கி வற்றுவதால் உண்டாகும் வெண்ணிற உணவு = உப்பு

சலராசி

கடல்

அலராசி

ஆல் (=நீர்) + அரை (=இடம்) + ஆசு (=பற்றுக்கோடு) + இ = அலராசி >>> சலராசி = நீருக்குப் பற்றுக்கோடாக விளங்கும் இடம் = கடல்.

சலருகம்

தாமரை

அலருகம்

அல் (=இருள்) + அரி (=வண்டு, இதழ்) + உகு (=மறை, மூடு) + அம் = அலருகம் >>> சலருகம் = இருளில் வண்டுகளை இதழ்களுக்குள் மூடுவது = தாமரை

சலலம், சலலி

முள்ளம்பன்றியின் முள்

அளலம்

அள் (=கூர்மை) + அல் (=கருமை) + அம் (=நீளம், அம்பு, முள்) = அளலம் >>> சலலம் = நீண்ட கூரிய கருநிற முள் = முள்ளம்பன்றியின் முள்

சலவர்

நெய்தல் நில மக்கள்

அலவர்

ஆலம் (=கடல்) + அர் = அலவர் >>> சலவர் = கடல் மாந்தர்

சலவன்

எதிரி, வஞ்சகன், சினமிக்கவன்

சலவன்

சலம் (=பகை, வஞ்சனை, சினம்) + அன் = சலவன் = பகைவன், வஞ்சகன், சினம் மிக்கவன்

சலவன்

அவள், பெண்பால்

அலவன்

அல் (=இன்மை) + அவன் = அலவன் >>> சலவன் = அவன் அல்லாதது = அவள் = பெண்பால்

சலவாதி

பிடிவாதக் காரன், கோப மிக்கவன்

சலவாறி

சலம் (=பிடிவாதம், கோபம்) + ஆறு (=இயல்பு, குணம்) + இ = சலவாறி >>> சலவாதி = பிடிவாத / கோப குணம் கொண்டவன்

சலவாதி

மரணச் செய்தியை பறையடிப்போன்

அலைபறி

அலை (=மரணம், அடி) + பறை (=கருவி, சொல்) + இ = அலைபறி = சலவாதி = பறையை அடித்து மரணத்தைச் சொல்பவன் 

சலவை

நீரால் கறை நீக்குதல்

அலவை

ஆலம் (=நீர், கருமை, கறை) + அவி (=நீக்கு) + ஐ = அலவை >>> சலவை = நீரால் கறைகளை நீக்குதல்

சலவை

வியர்வை

அலவை

ஆல் (=நீர்) + அவி (=புழுங்கு, வியர்) + ஐ = அலவை >>> சலவை = வியர்நீர்

சலனம், சலன்

கால்

செலாணம்

செல் (=நட) + ஆணம் (=பற்றுக்கோடு) = செலாணம் >>> சலனம் = நடப்பதற்கான பற்றுக்கோடு = கால்

சலனம்

அசைவு

செலணம்

செல் (=அசை) + அணம் = செலணம் >>> சலனம் = அசைவு

சலனம், சலனை

துன்பம்

அலணம்

அலை (=வருந்து, துன்புறு) + அணம் = அலணம் >>> சலனம் = துன்பம்

சலனம்

கலக்கம்

அலணம்

அலை (=கலங்கு) + அணம் = அலணம் >>> சலனம் = கலக்கம்

சலனன்

காற்று

அலணன்

அலை (=திரி) + அணை (=தடை, நீங்கு) + அன் = அலணன் >>> சலனன் = தடையின்றித் திரிபவன்

சலாக்கு

உலோக எழுத்து வேலைக்கான கூரிய இரும்புக் கருவி

அளாக்கு

அள் (=இரும்பு, கூர்மை) + ஆக்கம் (=உலோகம், தோற்றம், படைப்பு) + உ = அளாக்கு >>> சலாக்கு = உலோகத்தில் தோற்றங்களைப் படைப்பதற்கான கூரிய இரும்பு.

சலாகை, சலாகு

இரும்பு ஊசி

அளாகை

அள் (=இரும்பு, கூர்மை) + ஆகம் (=கண்) + ஐ = அளாகை >>> சலாகை = கண்ணுடைய கூரிரும்பு

சலாகை

காந்தம்

அளகை

அள் (=இரும்பு) + அகை (=ஈர்) = அளகை >>> சலாகை = இரும்பை ஈர்ப்பது = காந்தம்

சலாகை

வரிச்சல் கட்டை

அளகை

அள் (=செறி, கட்டை) + அகம் (=வீடு, உள், மரம்) + ஐ = அளகை >>> சலாகை = வீட்டுக்குள்ளே செறியப்படும் மரக் கட்டை = வரிச்சல் கட்டை

சலாகை

இரும்புத் தடி

அளகை

அள் (=இரும்பு) + அகம் (=மரம், தண்டு) + ஐ = அளகை >>> சலாகை = இரும்புத் தண்டு

சலாகை

ஒளிமணி

எலக்கை

எல் (=ஒளி) + அக்கம் (=மணி) + ஐ = எலக்கை >>> அலாகை >>> சலாகை = ஒளிமணி

சலாகை

தோள் வலயம்

அளாகை

அள் (=செறி, இரும்பு) + ஆகம் (=மார்பு, தோள்) + ஐ = அளாகை >>> சலாகை = தோளில் செறியும் இரும்பு

சலாகை

ஓட்டைக் காசு

அளக்கை

அளை (=ஓட்டை) + அக்கம் (=நாணயம், காசு) + ஐ = அளக்கை >>> சலாகை = ஓட்டைக் காசு

சலாகை

கடப்பாரை

அளகை

அள் (=இரும்பு, கூர்மை) + அகம் (=மரம், தண்டு) + ஐ = அளகை >>> சலாகை = கூரிய இரும்புத் தண்டு

சலாங்கு

கோழி

அளகு

அளகு (=கோழி) >>> சளக்கு >>> சலாங்கு

சலாங்கு

கொசு

அலகு

அலகு (=கொசு) >>> சலக்கு >>> சலாங்கு

சலாசயம்

நீர்நிலை

அளசயம்

அளம் (=இடம்) + அசை (=தங்கு) + அம் (=நீர்) = அளசயம் >>> சலாசயம் = நீர் தங்கியிருக்கும் இடம்

சலாத்தி

திரைச்சீலை

ஞலற்றி

ஞால் (=தொங்கு, விழு) + அற்றம் (=மறைப்பு) + இ = ஞலற்றி >>> சலாத்தி = விழுந்து தொங்கி மறைப்பது

சலாத்து

குலுக்கு

அலாற்று

அலை (=அசை) + ஆற்று (=கூட்டு, கல) = அலாற்று >>> சலாத்து = கலப்பதற்காக அசை = குலுக்கு

சலாபத்து

சுதந்திரம், எளிது

அலாப்பற்று

அல் (=இன்மை) + ஆப்பு (=கட்டு, தடை) + அறம் (=தன்மை) + உ = அலாப்பற்று >>> சலாபத்து = கட்டற்ற / தடையற்ற தன்மை = சுதந்திரம், எளிது

சலாபத்து, சலாவத்து

மிகுதி, பெருமை

அளவத்து

அளவு + அதி (=மிகுதி) + உ = அளவத்து >>> சலாவத்து >>> சலாபத்து = அளவு மிக்கது

சலாபம்

கடலில் மூழ்கிப் பொக்கிசம் எடுத்தல்

அலேமம்

அலை (=கடல், திரி) + ஏமம் (=மறைப்பு, பொக்கிசம்) = அலேமம் >>> சலாபம் = பொக்கிசத்திற்காகக் கடலுக்குள் மறைந்து திரிதல்

சலாம்

வணக்கம்

அளம்

ஆள் (=மனிதர்) + அம் (=அடங்கு, பணி, சொல்) = அளம் >>> சலாம் = மனிதரைப் பணிந்து சொல்வது

சலார்

விலைப்பணம்

அளார்

அள் (=கொள்) + ஆர் (=ஒப்பு, பெறு) = அளார் >>> சலார் = கொண்டதற்கு ஒப்பாகப் பெறப்படுவது = விலைப்பணம்

சலார்

விருது

அளார்

அளி (=கொடு, கூறு) + ஆர் (=அருமை) = அளார் >>> சலார் = அருமையைக் கூறிக் கொடுப்பது = விருது

சலாவணி

பணத்தின் பரவலால் உண்டாகும் பயன்

செலேமணி

செல் (=பரவு, பயனுறு) + ஏமம் (=பொன், பணம்) + அணை (=உண்டாகு) + இ = செலேமணி >>> செலாவணி >>> சலாவணி = பணத்தின் பரவலால் ஆகும் பயன்.

சலான்

பணம் செலுத்தும் குறிப்பு

செலாண்

செல் (=பணம், பணி, செலுத்துகைக் குறிப்பு) + ஆண் (=தலைமை) = செலாண் >>> சலான் = தலைமைக்குப் பணிந்து பணத்தைச் செலுத்துவதற்கான குறிப்பு.

சலி

அசை, வருந்து

அலை

அலை (=அசை, வருந்து) + இ = அலி >>> சலி

சலி

சோர், தளர்

அலி

அல் (=மயக்கம், சோர்வு) + இ = அலி >>> சலி = சோர்

சலி

வெறு

எலீ

ஏல் (=விரும்பு) + ஈ (=இல்லாகு) = எலீ >>> அலி >>> சலி = விருப்பம் இல்லாகு = வெறு

சலி

கோபப்படு

அலி

அலி (=தீ) >>> சலி = எரி >> சின

சலி

ஒலி

ஆல்

ஆல் (=ஒலி) + இ = அலி >>> சலி

சலிகை, சலுகை

செல்வாக்கு

அலிகை

ஆல் (=ஒலி, வாக்கு) + இக (=கட, செல்) + ஐ = அலிகை >>> சலிகை = செல்லக்கூடிய வாக்கு

சலிகை, சலுகை

விரும்பியவாறு நடத்தல்

அளிகை

அளி (=விருப்பம்) + இக (=செல், நட) + ஐ = அளிகை >>> சலிகை = விரும்பியபடி நடத்தல்

சலிகை, சலுகை

ஆதரவு, உதவி

அளிகை

அளி (=கொடு) + கை = அளிகை >>> சலிகை = கைகொடுத்தல் = உதவி, ஆதரவு

சலிகை, சலுகை

நெருங்கிய பழக்கம்

அளிகை

அளி (=கல, பேசு, மகிழ்) + கை = அளிகை >>> சலிகை = கலந்து பேசி மகிழ்தல் = நெருங்கிப் பழகுதல்

சலிசு, சலீசு

எளிமை, மலிவு

எளியு

எளிமை + உ = எளியு >>> அலிசு >>> சலிசு >>> சலீசு = எளிமை, மலிவு

சலிப்பு

சோர்வு, வெறுப்பு

சலிப்பு

சலி (=சோர், வெறு) + பு = சலிப்பு = சோர்வு, வெறுப்பு

சலிப்பு

கோபம்

சலிப்பு

சலி (=சின) + பு = சலிப்பு = சினம்

சலிலம்

நீர்

அலிலம்

அலி (=நெருப்பு) + இல் (=அழிவு) + அம் = அலிலம் >>> சலிலம் = நெருப்பை அழிப்பது = நீர்

சலீகம்

போர்

அளீகம்

அளி (=கல, கூடு) + இகு (=கொல்) + அம் = அளீகம் >>> சலீகம் = கூடிக் கொல்லுதல் = போர்

சலு

நீர்

ஆல்

ஆல் (=நீர்) + உ = அலு >>> சலு

சலுப்பன்

மிகுதியாகப் பேசுபவன்

அலுப்பன்

ஆல் (=ஒலி, பேசு) + உப்பு (=பெரு, மிகு) + அன் = அலுப்பன் >>> சலுப்பன் = மிகுதியாகப் பேசுபவன்

சலுப்பு

துண்டு

அலுவ்வு

அல் (=இன்மை) + உவா (=முழுமை) + உ = அலுவ்வு >>> சலுப்பு = முழுமை அற்றது = குறைபட்டது, துண்டு

சலுப்பு

கிளை நுனி

அளூழ்ப்பு

அள் (=மரம், கிளை) + ஊழ் (=முடிவு) + பு = அளூழ்ப்பு >>> சலுப்பு = கிளையின் முடிவு

சலுப்பு

சளி

அலூழ்ப்பு

ஆல் (=நீர்) + ஊழ் (=தசை, உடல், முற்று, ஒளி, பகை, வெண்மை) + பு = அலூழ்ப்பு >>> சலுப்பு = வெண்ணிறத்தில் முற்றி உடலுக்குப் பகையாகும் நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.