செவ்வாய், 1 மார்ச், 2022

9. (இல் > ஈனில்) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 9 - Il to Eenil

 

தமிழ்ச்

சொல்

பொருள்

மேற்கோள்

பிறப்பியல்

இல், இலம், இல்லம்

வீடு

பெரு. 142, அக. 276, நற். 59

ஏல் (=ஒப்பு, அன்புசெய், பொருந்து, கூடு, தங்கு) >>> இல் = ஒத்த அன்புடையோர் கூடித் தங்குவது = வீடு

இல்லம்

தேற்றான் கொட்டை

கலி. 142

ஏல் (=பெறு) + அம் (=நீர், ஒளி) = எல்லம் >>> இல்லம் = நீரை ஒளி பெறச் செய்வது = தேற்றான் கொட்டை

இல்லி

துளை

புற. 164

இல் (=இன்மை) + இ = இல்லி = இன்மை உடையது

இல்லை

இன்மை

மலை. 426

இல (=இன்மை) + ஐ = இல்லை

இலக்கம்

விளக்கு

பரி. 13

எல் (=ஒளி) + ஆக்கு (=உண்டாக்கு) + அம் = எலாக்கம் >>> இலக்கம் = ஒளியை உண்டாக்குவது = விளக்கு

இலங்கடை

இல்லாத இடம்

நற். 174

இலம் (=இன்மை) + கடை (=இடம்) = இலங்கடை = இல்லாத இடம்

இலங்கை

தீவு

சிறு. 120

ஏல் (=நீர்) + அகம் (=இடம், உள்ளடக்கம்) + ஐ = எலக்கை >>> இலங்கை = நீரால் உள்ளடக்கப் பட்ட இடம் = தீவு

இலஞ்சி

குளம்

நற். 160

ஏல் (=நீர்) + அச்சு (=கரை, ஆதாரம்) + இ = எலச்சி >>> இலஞ்சி = கரையுடைய நீர் ஆதாரம் = குளம்

இலம்

வறுமை

மலை. 576

இல் (=இன்மை) + அம் = இலம் = இன்மை >> வறுமை

இலம்பாடு

வறுமை

புற. 378

இலம் (=வறுமை) + பாடு = இலம்பாடு

இலவம், இலவு

சிவப்பு மலர் கொண்ட மரம்

கலி. 33, பொரு. 27

இலை (=மரம், பூ) + அவி (=எரி) + அம் (=ஒப்பு, அழகு, நிறம்) = இலவம் = எரிவதைப் போன்ற நிறத்தில் அழகிய பூவுடைய மரம் = இலவ மரம்

இலை

ஆயுதக் கூரலகு, தாவரங்களின் பசுமைநிற அலகு

திரு. 46, நற். 352, பெரு. 104

ஏல் (=போரிடு, பொருத்து, மேற்கொள்) + ஐ (=மென்மை, நுண்மை, சிறுமை, கூர்மை) = எலை >>> இலை = மெலிந்து சிறுத்துக் கூரியதாகப் பொருத்திப் போரில் மேற்கொள்ளப் படுவது = ஆயுதக் கூரலகு >> தாவரத்தின் பசுமைநிற அலகு

இவணம்

இவ்விடம்

அக. 225

இவ் (=இந்த) + அணை (=இடம்) + அம் = இவணம் = இவ்விடம்

இவுளி

குதிரை

பதி. 92

ஏவு (=தூண்டு, செலுத்து) + ஒலி (=சத்தமிடு, காற்று) + ஈ (=ஒப்பு) = எவொலீ >>> இவுளி = தூண்டியதும் ஒலியெழுப்பிக் காற்றைப் போலச் செல்வது

இழப்பு

தொலைத்தல்

குறு. 349

இழ (=தொலை) + பு = இழப்பு = தொலைத்தல்

இழிசினன்

தோலை உரித்து வேலை செய்வோன்

புற. 82

ஊழ் (=தசை, மூடு, பயன்) + இசி (=உரி) + நன் = உழிசிநன் >>> இழிசினன் = தசையை மூடியிருப்பதை உரித்துப் பயன் கொள்பவன் = தோலை உரித்து வேலை செய்பவன்

இழிபு

இறக்கம்

பதி. 24

இழி (=இறக்கு) + பு = இழிபு = இறக்கம்

இழிபு, இழிவு

தாழ்வு

பரி. 5, கலி. 2

இழி (=தாழ்) + பு = இழிபு = தாழ்வு

இழுக்கு

குழைந்த நிலம்

குறி. 258

இழை (=குழை) + உகம் (=பூமி, நிலம்) + உ = இழுக்கு = குழைந்த நிலம்

இழுது

குழைவுடைய உணவு

புற. 150

இழை (=குழை, பொருந்து) + ஊது (=உண்) = இழூது >>> இழுது = குழைவு பொருந்திய உணவு = வெண்ணெய், கொழுப்பு, தேன் முதலியன

இழை

நூல், கயிறு, தாலி

பொரு. 80, நற். 394, புற. 34

இழு (=நீளமாக்கு) + ஐ (=மென்மை) = இழை = நீளமாக்கிய மெலிதான பொருள் = நூல், கயிறு, தாலி போன்றன

இழை

நகை, தங்கம்

பொரு. 85, நற். 274

இழு (=நீளமாக்கு) + ஐ (=மென்மை, அழகு) = இழை = மெலித்து நீளமாக்கப்படும் அழகிய பொருள் = நகை, தங்கம்

இழை

மலர்

நற். 391

ஊழ் (=மலர்) + ஐ = உழை >>> இழை = மலர்வது

இழை

இமை

மது. 623

ஊழ் (=மலர், திற, தசை, ஒளி, மூடு) + ஐ (=மென்மை) = உழை >>> இழை = ஒளிக்காக மூடித் திறக்கும் மெல்லிய தசை.

இழை

அழகுப் பூச்சு

குறி. 3

எழு (=தோன்று, பரப்பு, பூசு) + ஐ (=அழகு, மென்மை) = எழை >>> இழை = அழகு தோன்றுமாறு மெலிதாகப் பூசுவது

இழை

பூந்தாது

கலி. 56

ஊழ் (=மலர்) + ஐ (=நுண்மை, அழகு) = உழை >>> இழை = மலரிலுள்ள அழகிய நுண்பொருள் = பூந்தாது

இழை

ஆடை

புற. 383

ஊழ் (=தசை, உடல், மூடு) + ஐ (=மென்மை) = உழை >>> இழை = உடலை மூடுகின்ற மென்பொருள் = ஆடை

இளமை

அழகும் வலிமையும் சான்ற பருவம்

நற். 126

எல் (=வலிமை, ஒளி, அழகு) + அமை (=பொருந்து, பருவம்) = எலமை >>> இளமை = அழகும் வலிமையும் பொருந்திய பருவம்.

இளி

இகழ் சிரிப்பு

அக. 33

எள் (=இகழ்ந்து சிரி) + இ = எளி >>> இளி = இகழ் சிரிப்பு

இளிவு

இகழ்ச்சி

குறு. 283

எள் (=இகழ்) + இ = எளி >>> இளி = இகழ்ச்சி

இளிவரவு

இகழ்சொல்

பரி. 10

இளிவு (=இகழ்ச்சி) + அரவு (=சொல்) = இளிவரவு = இகழ்சொல்

இளை

பாதுகாப்பு, காவல்

பதி. 28

ஏல் (=எதிர், பகை, தடு, மேற்கொள்) + ஐ = எலை >>> இளை = பகையைத் தடுக்க மேற்கொள்வது = காவல்

இளை

இளமை

அக. 310

இளமை + ஐ = இளை

இளைஞர், இளையர்

இளமை உடையோர்

மது. 311, ஐங். 198

இளை (=இளமை) + அர் = இளையர் >>> இளைஞர் = இளமையை உடையவர்

இளைஞர், இளையர்

வீரர்

குறி. 129, அக. 74

இலை (=ஆயுதக் கூரலகு) + அர் = இலையர் >>> இளைஞர் = ஆயுதக் கூரலகைக் கொண்டவர் = வீரர்

இளையர்

காவலர்

பரி. 6

இளை (=பாதுகாப்பு, காவல்) + அர் = இளையர் = காவலர்

இற்றை

இந் நாள்

புற. 112

இ (=இந்த) + நெய் (=ஒளிர், பகல்செய்) = இந்நெய் >>> இன்னை >>> இன்றை >>> இற்றை = இந்தப் பகல் = இந் நாள்

இறகு

இறக்கை

நற். 329

ஏறு (=உயரம், கட) + அகை (=இடைவிடு, அடி) + உ = எறகு >>> இறகு = உயரத்தில் கடப்பதற்காக இடைவிட்டு அடிக்கப் படுவது = இறக்கை

இறடி

தினை

குறு. 214

இறை (=மரம், தண்டு, உயரம், சிறுமை) + அடை (=சேர், முளை, உணவு) + இ = இறடி = தண்டின் உயரத்தில் முளைத்துச் சேர்ந்திருக்கும் சிறு உணவு

இறத்தல்

கடத்தல்

குறு. 363

இற (=கட) + தல் = இறத்தல் = கடத்தல்

இறப்பு

சாவு

புற. 74

இற (=சா) + பு = இறப்பு = சாவு

இறப்பு

கடப்பு

குறு. 209

இற (=கட) + பு = இறப்பு = கடப்பு

இறவு, இறா

மீன் வகை

அக. 220, ஐங். 179

இறை (=உடல், வளை, வரி, தங்கல்) + அம் (=நீர்) + உ = இறமு >>> இறவு = வளைந்த உடலில் வரிகளுடன் நீரில் வாழக் கூடியது = மீன் வகை

இறால்

மீன் வகை

அக. 286

இறை (=உடல், வளை, வரி, தங்கல்) + ஆல் (=நீர்) = இறால் = வளைந்த உடலில் வரிகளுடன் நீரில் வாழக் கூடியது.

இறல், இறால், இறாஅல்

தேன் கூடு, தேன்

கலி. 22, கலி. 39, நற். 168, அக. 348

உறை (=உயரம், பொருந்து, கூடு, குத்து, சொரி, உணவு, துளி) + அள் (=மரம், செறி, இனிமை) = உறள் >>> இறல் =  மரத்தின் உயரத்தில் பொருந்தியதும் குத்தினால் செறிவுடைய இனிய உணவுத் துளிகளைச் சொரிவதுமான கூடு = தேன் கூடு >> தேன்

இறுக்கல்

பணிந்து கொடுத்தல்

புற. 97

இறு (=பணி, கொடு) + கல் = இறுக்கல் = பணிந்து கொடுத்தல்

இறுதி

முடிவு

கலி. 10

இறு (=முடி) + தி = இறுதி = முடிவு

இறுதி

கேடு

கலி. 34

இறு (=கெடு) + தி = இறுதி = கேடு

இறும்பு

காடு

மலை. 205

இறை (=மரம், இருத்தல்) + உப்பு (=பெரு, மிகு) = இறுப்பு >>> இறும்பு = மரங்கள் மிக்கு இருப்பது = காடு

இறும்பு

மலை

நற். 154

இறை (=உயரம், இடம்) + உப்பு (=பெரு) = இறுப்பு >>> இறும்பு = பெருத்து உயர்ந்த இடம் = மலை

இறும்பூது

அதிசயம்

பதி. 32

இறை (=விழி) + உப்பு (=உயர்) + உறு (=நிகழ்) = இறுப்புறு >>> இறும்பூது = விழிகள் உயருமாறு நிகழ்வது

இறும்பூது

தேனீ, வண்டு

மலை. 358

உறை (=துளி, உணவு) + உப்பு (=இனிமை) + ஊது (=ஒலி, உண்) = உறுப்பூது >>> இறும்பூது = இனிய உணவுத் துளியை ஒலித்தவாறு உண்பது = தேனீ, வண்டு

இறை

கூரை, தாழ்வாரம்

பெரு. 265, முல். 87

ஏறு (=குடிபுகு, உயரம், மேல்) + ஆழ் (=மறை) = எறாழ் >>> இறை = குடிபுகுவதன் மேல் மறைப்பு = கூரை, தாழ்வாரம்

இறை

கண்ணிமை, கண்

மது. 414, பரி. 9

உறு (=உறுப்பு, உண்டாக்கு, செய்) + ஐ (=அழகு, சிறுமை, மென்மை) = உறை >>> இறை = அழகு செய்யப்படுவதான மெல்லிய சிறிய உறுப்பு = கண்ணிமை >> கண்

இறை

மூட்டு

குறி. 123

உறு (=பொருத்து) + ஐ = உறை >>> இறை = பொருத்து, மூட்டு

இறை

கப்பம், வரி

மலை. 319

இறு (=தாழ், பணி, கொடு) + ஐ (=அரசன், தலைவன்) = இறை = அரசர்க்கு / தலைவர்க்குப் பணிந்து கொடுப்பது = வரி

இறை

சொல்

நற். 43

இறு (=சொல்லு) + ஐ = இறை = சொல்

இறை

மரம், தண்டு

நற். 172

இறு (=முறி) + ஐ = இறை = முறிவது = கிளை, மரம், தண்டு

இறை

மேல், உயரம்

நற். 113

ஏறு (=உயர்) + ஐ = எறை >>> இறை = உயரம், மேல்

இறை

வீடு, கூடு

நற். 71

இறு (=தங்கு) + ஐ = இறை = தங்குவது = வீடு, கூடு

இறை

நிழல், இருள்

குறு. 92

ஏறு (=ஒளி, உண்டாகு) + ஆய் (=நீங்கு) = எறாய் >>> இறை = ஒளி நீங்குவதால் உண்டாவது = இருள், நிழல்

இறை

தங்கல்

ஐங். 142

இறு (=தங்கு) + ஐ = இறை = தங்கல்

இறை

நிலம், பூமி

பதி. 54

இறு (=தங்கு, நிலை) + ஐ = இறை = நிலையானது = நிலம்

இறை

காவல், பாதுகாப்பு

பதி. 82

இறு (=கெடு, அழி) + ஆய் (=நீக்கு) = இறாய் >>> இறை = கேட்டை / அழிவை நீக்குவது = காவல், பாதுகாப்பு

இறை

கொலை

பரி. 11

இறு (=அழி, கொல்) + ஐ = இறை = கொலை

இறை, இறைவன்

கடவுள், அரசன்

பரி. 15, கலி. 78, பரி. 17, புற. 316

ஏறு (=உயிர்) + ஐ (=தலைமை) = எறை >>> இறை = உயிர்களின் தலைமை = கடவுள் >> அரசன்

இறை

ஊர்

அக. 167

இறை (=தங்கல், நிலம்) >>> இறை = தங்கும் நிலம் = ஊர்

இறை

கரை

அக. 346

ஈறு (=எல்லை, கரை) + ஐ = இறை

இறைச்சி

இன்பம்

கலி. 8

இறு (=துன்புறு) + ஆய் (=நீங்கு) + சி = இறாய்ச்சி >>> இறைச்சி = துன்பம் நீங்கியது = இன்பம்

இன்பம், இன்பு

துன்பம் இல்லாதது

கலி. 141, கலி. 148

இன்மை + பை (=துன்பம்) + உ = இன்பு = துன்பம் இல்லாதது = இன்பம்

இன்மை

வறுமை

புற. 3

இல் (=இல்லாகு) + மை (=பசுமை, செழிப்பு) = இன்மை = செழிப்பு இல்லாமை = வறுமை

இன்மை

இல்லாமை

நற். 247

இல் (=இல்லாகு) + மை = இன்மை = இல்லாமை

இன்று

இல்லாமை

குறு. 34

இன்மை (=இல்லாமை) + து = இன்று

இன்று, இன்றை

இந்நாள்

மது. 478, குறு. 199

இற்றை (=இந்நாள்) + உ = இற்று >>> இன்று

இன்னது

இனியது

கலி. 54

இனிமை + அது = இன்னது = இனியது

இன்னம்

இனிமை

குறு. 307

இனிமை + அம் = இன்னம்

இன்னர்

நடுக்கம்

பரி. 4

இனை (=அஞ்சு, நடுங்கு) + அர் = இன்னர் = நடுக்கம்

இன்னல்

துன்பம்

மலை. 374

இனை (=வருந்து) + அல் = இன்னல் = வருத்தம், துன்பம்

இன்னா

துன்பம்

குறு. 202

இனை (=வருந்து) + ஆ = இன்னா = வருத்தம், துன்பம்

இன்னாது

துன்பம் உடையது

ஐங். 331

இனிமை + ஆ (=எதிர்மறை) + து = இன்னாது = இனிமை இல்லாதது = துன்பம் உடையது

இன்னாமை

துன்பம்

குறு. 326

இனிமை + ஆ (=எதிர்மறை) + மை = இன்னாமை = துன்பம்

இனம், இனன்

கூட்டம், மிகுதி, பெருமை

பொரு. 204, பட். 18, பதி. 67, நற். 242

இணை (=கூடு) + அம் = இணம் >>> இனம் = கூட்டம், மிகுதி, பெருமை

இனம், இனன்

சமைத்த உணவு

மது. 214, புற. 399

ஈன் (=படை, செய்) + அம் (=உணவு) = இனம் = படைத்த / செய்த உணவு

இனம்

கன்று, சிறுமை

நெடு. 4, நற். 163

ஈன் (=பிறப்பி) + அம் = இனம் = பிறப்பித்தது = கன்று >> சிறுமை

இனம்

ஒலி

நற். 19

இனை (=புலம்பி அழு, ஒலி) + அம் = இனம் = ஒலி

இனம்

கருமை

கலி. 131

இன்மை + அம் (=ஒளி) = இனம் = ஒளி இன்மை = இருள், கருமை

இனம்

தனிமை

அக. 334

இன்மை + அம் (=பொருந்து, சேர்) = இனம் = சேராமை

இனம்

அச்சம்

புற. 370

இனை (=அஞ்சு) + அம் = இனம் = அச்சம்

இனம்

மேகம்

பரி. 6

ஈன் (=படை) + அம் (=நீர்) = இனம் = நீரைப் படைப்பது

இனம்

தேன்

பரி. 8

இனிமை + அம் (=உணவு, பூ) = இனம் = பூவிலுள்ள இனிய உணவு = தேன்

இனம்

பசு, மாடு

கலி. 143, அக. 314

ஈன் (=கொடு) + அம் (=பால்) = இனம் = பால் தருவது = பசு >> மாடு

இனம்

உயிர்

அக. 39

ஈன் (=படை) + அம் = இனம் = படைக்கப்பட்டது = உயிர்

இனிது, இனிமை

இன்பம்

மது. 657, அக. 6

இனை (=வருந்து) + ஈ (=நீங்கு) + மை / து = இனீமை / இனீது >>> இனிமை / இனிது = வருத்தம் நீங்கியது = இன்பம்

ஈயாமை

கொடாமை

புற. 165

ஈ (=கொடு) + ஆ (=எதிர்மறை) + மை = ஈயாமை = கொடாமை

ஈகுநர்

கொடுப்போர்

புற. 235

ஈகு (=கொடு) + நர் = ஈகுநர் = கொடுப்போர்

ஈகை

கொடை

மலை. 580

ஈகு (=கொடு) + ஐ = ஈகை = கொடை

ஈகை

தங்கம்

குறி. 126

இகு (=உருக்கு, கொடு) + ஐ (=அழகு) = ஈகை = அழகு தரும் உருக்கு = தங்கம்

ஈகை

இன்பம்

கலி. 32

ஈ (=நீங்கு) + கை (=வருந்து) = ஈகை = வருத்தமின்மை

ஈகை

பறவை

கலி. 95

ஈ (=படை) + கை (=சிறகு) = ஈகை = சிறகு படைத்தது

ஈங்கண்

இவ்விடம்

நற். 70

இ (=இந்த) + கண் (=இடம்) = ஈங்கண் = இவ்விடம்

ஈங்கனம், ஈங்ஙனம்

இவ்வாறு

புற. 208, குறு. 336

இ (=இந்த) + கண் (=ஓட்டை, வழி) + அம் = ஈங்கணம் >>> ஈங்கனம் = இவ்வழி, இவ்வாறு

ஈங்கு

இவ்விடம்

நற். 168

இ (=இந்த) + கு (=பூமி, இடம்) = ஈங்கு = இவ்விடம்

ஈங்கு

இவ்வாறு

நற். 378

இ (=இந்த) + குழை (=ஓட்டை, வழி) = ஈங்குழை >>> ஈங்கு = இவ்வழி, இவ்வாறு

ஈட்டம்

காலம்

பரி. 2

இறை (=காலம்) + அம் = ஈற்றம் >>> ஈட்டம்

ஈட்டம்

கூட்டம்

பரி. 12

ஏற்றம் (=மிகுதி) >>> ஈட்டம் = கூட்டம்

ஈட்டி

வேல்

பரி. 5

இறு (=எறி, கொல், குத்து) + இ = ஈற்றி >>> ஈட்டி = குத்திக் கொல்வதற்காக எறியப்படுவது = வேல்.

ஈதல்

கொடை

புற. 139

ஈ (=கொடு) + தல் = ஈதல் = கொடை

ஈமம்

மிகுதியாக அடுக்கியது

புற. 231

ஏ (=அடுக்கு, பெருக்கம்) + அம் = ஏவம் >>> ஈமம் = அடுக்கிப் பெருக்கியது

ஈமம்

பிணம்

புற. 256

ஈவு (=ஒழிவு, மரணம்) + அம் (=பொருந்து, அடை) = ஈவம் >>> ஈமம் = மரணம் அடைந்தது = பிணம்

ஈயல்

கறையான்

நற். 59

ஈ (=பூச்சி, அழி) + அள் (=செறி, உண், கட்டை) = ஈயள் >>> ஈயல் = கட்டைகளை உண்டு அழித்துச் செறியும் பூச்சி

ஈயல்மூதாய்

தம்பலப் பூச்சி

அக. 139

இயல் (=ஊர்) + பொறி (=தீ, நிறம், வண்டு,  + ஆய் (=அழகு, மென்மை, சிறுமை) = ஈயல்பொறாய் >>> ஈயல்மூதாய் = அழகிய தீநிறத்தில் மெதுவாக ஊரும் சிறிய வண்டு

ஈர்க்கு

எழுதுகோல்

மது. 708

ஈர் (=எழுது) + கொழு (=கோல்) = ஈர்க்கொழு >>> ஈர்க்கு = எழுதுகின்ற கோல்

ஈர்ந்தை

தோலாடை

புற. 180

ஈர் (=அறு, உரி) + தை (=மூட்டு, அணி) = ஈர்ந்தை = அறுத்து உரித்து மூட்டி அணியப்படுவது = தோலாடை

ஈரம்

அன்பு

சிறு. 93

இரு (=பொருத்து, பிணி) + அம் (=உயிர்) = ஈரம் = உயிர்களைப் பிணிப்பது = அன்பு

ஈரம்

நீர்ப்பற்று

நெடு. 16

இரு (=பொருந்து, பற்று) + அம் (=நீர்) = ஈரம் = நீர்ப்பற்று

ஈரம்

இரத்தம்

கலி. 95

எரி (=தீ) + அம் (=நிறம், நீர்) = ஏரம் >>> ஈரம் = தீநிற நீர்

ஈருள்

கல்லீரல்

அக. 294

ஈர் (=இழு, இனிமை, உண், நுண்மை) + உள் = ஈருள் = உணவின் இனிப்பை இழுத்து நுட்பமாய் உள்ளடக்குவது

ஈழம்

இலங்கைத் தீவு

பட். 191

இழை (=சூழ்) + அம் (=நீர்) = ஈழம் = நீரால் சூழப்பட்டது = தீவு

ஈற்று

பிரசவம்

நற். 179

ஈன் (=படை) + தூ (=தசை, உடல்) = ஈன்றூ >>> ஈற்று = உடலைப் படைத்தல் = பிரசவம்

ஈனல்

பிரசவம்

அக. 95

ஈன் (=படை, பிரசவி) + அல் = ஈனல் = பிரசவம்

ஈனில்

பிரசவ அறை

குறு. 85

ஈன் (=படை, பிரசவி) + இல் (=வீடு, அறை) = ஈனில் = பிரசவிக்கும் வீடு / அறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.