முன்னுரை:
தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. என்ற
ஆய்வுக் கட்டுரையின் ஐந்தாம் பகுதியில் அணு இயற்பியல் குறித்த செய்திகளைத் தமிழில்
இயற்றும் முறைகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். அக்கட்டுரையில் அணுக்களின் அளவு பற்றிப்
பேசும்போது, 10^(-12) மீட்டர் என்று குறிப்பிடப்பட்டன. இதில் வரும் மீட்டர் என்பது
தொலைவினைக் குறிப்பிடும் அலகு ஆகும். இதைப்போல, ஒரு திணையின் எடை, இயக்க வேகம், அடர்த்தி
போன்ற பல்வேறு அளவுகளுக்கும் பலவகையான அலகுகள் இயற்பியலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இயற்பியலில் பயன்படுத்தப்பட்டு வரும் அலகுகளைப் பற்றியும் அவற்றுடன் தொடர்புடைய பிறவற்றைப்
பற்றியும் இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
அளவுகளும் அலகுகளும்:
அளக்கப்படுவது அளவு ஆகும். தொலைவு, எடை,
காலம், வேகம், வெப்பநிலை போன்று பலவகையான அளவுகள் உண்டு. இந்த ஒவ்வொரு அளவுக்கும் தனித்தனி
அலகு உண்டு. மேலும், ஒரு அளவுக்குரிய அலகானது ஒவ்வொரு அளவீட்டு முறைப்படி மாறவும் செய்கிறது.
இந்தப் பல்வேறு அளவீட்டு முறைகளில் மெட்ரிக் முறை எனப்படும் மீகிசெ` முறையே உலகளவில்
பயன்படுத்தப்பட்டு வருவதால், இக் கட்டுரையில் மீகிசெ முறையே பேசப்படுகிறது. மீகிசெ
முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து அலகுகளும் இதுவரையிலும் ஆங்கிலச் சொற்களாலேயே குறிப்பிடப்பட்டு
வருகின்றன. மீகிசெ முறையில் உள்ள அளவுகள் மற்றும் அலகுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அளவு அலகு குறியீடு
நீளம் மீட்டர் மீ
நிறை
கிலோகி~ராம் கிகி
காலம் செ`கண்ட்` செ
மின்னோட்டம் ஆம்பியர் ஆ
வெப்பநிலை கெல்வின் கெ
மூலக்கூறளவு மோல் மோ
எலுமச்செறிவு கேண்டி`லா கே
தளக்கோணம் ரேடி`யன் ரே
மேற்காணும் அட்டவணையில் உள்ள மீட்டர், கிலோகிராம்,
செகண்ட் போன்ற அலகுகளின் பெயர்களைத் தமிழில் மாற்ற முடியும் என்றாலும் மாற்றவேண்டிய
தேவை இருக்கிறதா எனில் தேவையில்லை என்றே கூறலாம். காரணம், இந்த அலகுகள் அனைத்தும் உலகளவில்
அனைவராலும் ஒரே பெயரால் பயன்படுத்தப்படுவன. அதுமட்டுமின்றி, கட்டுரையின் முதலாம் பகுதியான
வேதியியலில் தனிமங்களின் பெயர்களுக்குக் கொண்டதைப்போல, இயற்பியல் கண்டுபிடிப்புக்களைச்
செய்தவர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட அலகுப் பெயர்களை ( ஆம்பியர்,
கெல்வின் போன்றவை ) மொழியாக்கம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதே கண்டுபிடிப்பாளர்களுக்கு
நாம் செய்யும் மரியாதை ஆகும். எனவே இந்த அலகுகளின் பெயர்களை அப்படியே தமிழ் எழுத்துக்களைக்
கொண்டு எழுதலாம். அதேசமயம், அலகுகளுக்கான குறியீடுகளையும் தமிழ் எழுத்துக்களால் தான்
எழுதவேண்டும். விளக்கத்திற்காகச் சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.
பரப்பளவு = m^2 = மீ^2
பருமன் = m^3 = மீ^3
திசைவேகம் = m/s = மீ/செ
அடர்த்தி = kg/m^3 = கிகி/மீ^3
மின்னோட்டம் = 1.5 ஆ.
பத்தின் அடுக்குகள்:
செவ்வாய், வியாழன், புவி போன்ற மீப்பெருந்திணைகள்
ஆகட்டும், கடுகு, புழுதி, அணு, வாள்நுனி, அம்புநுனி போன்ற மீச்சிறு திணைகள் ஆகட்டும்,
இவற்றின் அளவுகளைக் குறிக்கப் பத்தின் அடுக்குகளையே அறிவியலில் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
ஆங்கிலத்தில் எக்ச்`போனென்சி`யேச`ன் என்று அழைக்கப்படும் இதனைத் தமிழில் அடுக்கக முறை
என்று கூறலாம். பத்தின் அடுக்குகளை இயற்பியலில் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதைச்
சில சான்றுகளின் வழியாகக் காணலாம்.
அண்டத்தின் எல்லையின் அறிந்த தொலைவு = 10^26 மீ
புவியில் இருந்து கதிரவனின் தொலைவு = 10^11 மீ
புவியில் இருந்து நிலவின் தொலைவு = 10^8 மீ
தாளின் தடிமன் =
10^(-4) மீ
ஒளியின் அலைநீளம் = 10^(-7) மீ
அணுக்கருவின் விட்டம் = 10^(-14) மீ
அறிவியலில் பத்தின் அடுக்குகளைப் பயன்படுத்தும்போது
அதில் பலவற்றுக்குத் தனித்தனியாக பெயர்கள் அமைத்துப் பயன்படுத்துகின்றனர். சான்றாகச்
சில பெயர்களைக் கீழே காணலாம்.
10^3 = கிலோ.
10^12 = டெரா
10^24 = யோட்டா
10^(-3) = மில்லி
10^(-9) = நானோ
10^(-15) = ஃபெம்டோ
10^(-21) = செ^`ப்டோ
மேலே உள்ள பெயர்கள் அனைத்தும் பிறமொழிப்
பெயர்களாக இருப்பதால் அவற்றை எளிதில் நினைவில் கொள்ள வகையில்லை. மாறாக, இவற்றைத் தமிழ்ப்படுத்திப்
பயன்படுத்தும்போது மிக எளிதாக நினைவில் கொள்ளமுடியும். பத்தின் அடுக்குப் பெயர்களைத்
தமிழ்ப்படுத்தும் முறைகளைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.
பத்தின் மேலடுக்குப் பெயர்கள்:
பத்தின் மேலடுக்குகள் எனப்படுபவை 10^1,
10^2, 10^3 ......... போன்றவை ஆகும். இவற்றில் முதல் மூன்று அடுக்குகளுக்கு அதாவது
10^1, 10^2, 10^3 ஆகியவற்றுக்குத் தமிழில் பெயர்கள் ஏற்கெனவே உண்டு என்பதால் அவற்றைத்
தவிர ஏனைய அடுக்குகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் அமைக்கும் முறைகளைப் பார்க்கலாம்.
பத்தின் மேலடுக்குகள் என்பவை ஒன்றுக்கொன்று
பெரிதாகிக் கொண்டே செல்லும் தன்மையவை. சான்றாக, மண், கல், பாறை, குன்று, மலை ஆகியவற்றைப்
போல தம்முடைய அளவில் பெரிதாகிக் கொண்டே செல்பவை ஆகும். இப்படிப்பட்ட மீப்பெருந் திணைகளைக்
குறிப்பதற்கான தமிழ்ப்பெயர்களைத் தெரிவுசெய்ய பழந்தமிழரின் அளவியல் முறைகள் எவையேனும்
உதவுமா என்று முதலில் பார்க்கலாம்.
தமிழர்களின் பல்வேறு அளவை முறைகளை ஆராய்ந்ததில்,
கீழ்க்காணும் பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடானது பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது.
காரணம், இந்த முறையினைப் பயன்படுத்திப் பொன் முதலான பல்வேறு பொருட்களை நிறுத்துள்ளனர்
என்று விக்கிபீடி`யா கூறுகிறது. .
பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு:
(பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே
பின்பற்றப்பட்டது.)
32 குன்றிமணி 1 வராகன் 1.067 கி~ராம்
10 வராகன் 1 பலம் 10.67 கி~ராம்
8 பலம் 1 சேர் 85.33 கி~ராம்
5 சேர் 1 வீசை 426.67 கி~ராம்
1000 பலம் 1 கா 10.67 கிலோகி~ராம்
6 வீசை 1 துலாம் 2.560 கிலோகி~ராம்
8 வீசை 1 மணங்கு 3.413 கிலோகி~ராம்
20 மணங்கு 1 கண்டி (பாரம்) 68.2667 கிலோகி~ராம்
மேலுள்ள வாய்ப்பாடுகளில் வராகன், பலம் ஆகிய
சொற்கள் வடமொழியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அவை நீங்கலான ஏனை வாய்ப்பாடுகளை அவற்றுக்குரிய
எடைகளுக்கேற்ப ஏறுவரிசைப் படுத்தும்போது கீழ்க்கண்ட வாய்ப்பாட்டு வரிசைமுறை கிடைக்கிறது.
குன்றிமணி <<< சேர்
<<< வீசை <<< துலாம் <<< மணங்கு <<< கா
<<< கண்டி
மேற்காணும் தமிழ்ப்பெயர்களை அவற்றின் வரிசைமுறைப்படி
பத்தின் மேலடுக்குப் பெயர்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதன்
மூலம், நமது முன்னோரின் மறக்கப்பட்ட அளவியல் முறைசார்ந்த பெயர்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு
வந்துவிடும். மேற்காணும் பெயர்களில் வரும் குன்றிமணியைச் சுருக்கமாகக் குன்றி என்று
குறிப்பிடுவது இலக்கிய வழக்கம். துலாம் என்ற பெயரை வடமொழி என்று சிலர் தவறாகக் கருதுவர்.
இப்பெயரானது சங்க இலக்கியத்திலேயே பயன்படுத்தப்பட்ட தூய தமிழ்ச்சொல் ஆகும். இனி, இப்பெயர்களுடன்
'அ' விகுதியைச் சேர்த்து பத்தின் மேலடுக்குப் பெயர்களைக் குறிப்பதற்குக் கீழ்க்காணுமாறு
பயன்படுத்தலாம். மேலே கண்டவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மேலடுக்குகளின் தமிழ்ப்பெயர்ப்
பட்டியலைக் கீழே காணலாம்.
பத்தின் மேலடுக்குகளின் தமிழ்ப்பெயர்ப் பட்டியல்:
வ.
எண் |
பத்தின்
அடுக்கு |
ஆங்கில
முன்னீடு
|
தமிழ்
முன்னீடு
|
தமிழ்க் குறியீடு
|
1
|
101
|
டெ`கா
|
பதி
|
ப
|
2
|
102
|
கெ`க்டோ
|
நூற்று
|
நூ
|
3
|
103
|
கிலோ
|
ஆயிர
|
ஆ
|
4
|
106
|
மெகா~
|
குன்றிய
|
கு
|
5
|
109
|
சி^கா~
|
சேர
|
சே
|
6
|
1012
|
டெரா
|
வீசைய
|
வீ
|
7
|
1015
|
பீட்டா
|
துலாவ
|
து
|
8
|
1018
|
எக்சா`
|
மணங்க
|
ம
|
9
|
1021
|
சீ^`ட்டா
|
காவ
|
கா
|
10
|
1024
|
யோட்டா
|
கண்டிய
|
க
|
இவற்றில் பத்து, நூறு, ஆயிரப் பெயர்கள் நீங்கலாக
ஏனைய தமிழ்ப் பெயர்களை எளிதில் நினைவில் கொள்ள கீழ்க்காணும் தொடர்மொழி பயனுள்ளதாக இருக்கும்.
அதாவது, கு, சே, வீ, து, ம, கா, க ஆகிய குறியீடுகளை வரிசைமாறாமல் நினைவில் கொள்ள கீழ்க்காணும்
தொடர்மொழி ஏதுவாக இருக்கும்.
குசேலன் வீட்டுத் துணியோ மகாகந்தை.
இனி மேற்காணும் பட்டியலில் உள்ள தமிழ்க்குறியீடுகளைப்
பயன்படுத்திச் சில சான்றுகளைக் கீழே காணலாம்.
புவியில் இருந்து நிலவின் தொலைவு =
384.4 x 10^6 மீட்டர் = 384.4 கு.மீ.
புவியில் இருந்து கதிரவனின் தொலைவு =
149.6 x 10^9 மீட்டர் = 149.6 சே.மீ
புவியின் எடை = 5.972 x 10^24 கிலோகிராம்
= 5.972 க.கி.
ஒளியின் வேகம் = 300 X 10^6 மீட்டர் / செகண்ட்
= 300 கு.மீ/செ.
கணினியின் அக வல்வட்டின் சேமத்திறன் =
500 x 10^9 பை`ட் = 500 சே.பை`
கணினியின் புற வல்வட்டின் சேமத்திறன் =
500 x 10^12 பை`ட் = 500 வீ.பை`
அதுமட்டுமின்றி, பத்தின் மேலடுக்குகளாக வரும்
நிறுத்தல் அளவைகளில் சில ஆங்கிலச் சொற்களைக் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தி வழங்கலாம்.
1 கிலோகி~ராம் = ஆயிர கி~ராம்
>>> ஆக்கி
1 குவிண்டால் = நூறு கிலோகி~ராம்
>>> நூகிகி >>> நூக்கி
1 டன் = ஆயிர கிலோகி~ராம் = 1 குன்றிய கி~ராம்
>>> குங்கி
தற்காலத்தில் மில்லியன், பி`ல்லியன், ட்ரில்லியன்
முதலான பெயர்கள் மிகவும் அதிகமாகப் புழங்கப்படுகிறது. அவற்றைத் தமிழில் எவ்வாறு வழங்குவது
என்று கீழே காணலாம்.
MILLION = மில்லியன் = குன்றியம்
MILLIONAIRE = மில்லியனேர் = குன்றியன்
/ குன்றன்
BILLION = பி`ல்லியன் = சேரம்
BILLIONAIRE = பி`ல்லியனேர் = சேரன்
TRILLION = ட்ரில்லியன் = வீசையம் / விசயம்
TRILLIONAIRE = ட்ரில்லியனேர் = விசயன்
QUADRILLION = குவாட்`ரில்லியன் = துலாவம்
QUADRILLIONAIRE = குவாட்`ரில்லியனேர் =
துலாவன் / துலான்
பத்தின் கீழடுக்குப் பெயர்கள்:
பத்தின் கீழடுக்குகள் எனப்படுபவை
10^(-1), 10^(-2), 10^(-3) ..... போன்றவை ஆகும். இவை உண்மையில் பத்தின் மேலடுக்குகளின்
தலைகீழ் ஆகும். பத்தின் கீழடுக்குகளுக்குத் தமிழ்ப்பெயர்கள் அமைக்கும் முறையினைக் கீழே
விரிவாகப் பார்க்கலாம்.
பத்தின் கீழடுக்குகள் என்பவை ஒன்றுக்கொன்று
சிறிதாகிக் கொண்டே செல்லும் தன்மையவை. சான்றாக, மலை, குன்று, பாறை, கல், மண் ஆகியவற்றைப்
போல தம்முடைய அளவில் சிறிதாகிக் கொண்டே செல்பவை ஆகும். இப்படிப்பட்ட மீச்சிறு திணைகளைக்
குறிப்பதற்கான தமிழ்ப்பெயர்களைத் தெரிவுசெய்ய பழந்தமிழரின் அளவியல் முறைகள் எவையேனும்
உதவுமா என்று முதலில் பார்க்கலாம்.
பழந்தமிழரின் அளவியல் முறைகளை ஆராய்ந்ததில்,
சிற்றிலக்கம், கீழ்வாயிலக்கம் மற்றும் எண் கூற்று வாய்ப்பாடுகள் ஆகியவை இருப்பது விக்கிபீடி`யாவின்
வழி கண்டறியப்பட்டது. இவற்றில் பயன்படுத்தப் பட்டிருக்கும் வடமொழி சார்ந்த பெயர்கள்
நீங்கலாக உள்ள பல தமிழ்பெயர்களும் கலைச்சொற்களாகப் பயன்படுத்த முடியாத வண்ணம் நீளமாகவோ
(சான்று: குரல்வளைப்படி, நுண்மணல்) பிறிதொரு திணையைக் குறிப்பதாகவோ (சான்று: வெள்ளம்,
முந்திரி) இருக்கின்றன. பழந்தமிழர் பயன்படுத்திய கீழ்வாய் இலக்கப் பெயர்களில் இம்மியும்
மும்மியும் மட்டுமே கலைச்சொல்லாகும் தகுதி பெறுவதாகத் தோன்றுவதால் அவை அப்படியே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
ஏனையவற்றுக்குப் புதிதாகப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இப்பெயர் சூட்டுதலில் மேற்கொள்ளப்பட்ட
வழிகள் / நெறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மக்கள் பயன்படுத்தும் விதைகளில் மிகச்சிறியதாக
அறியப்படும் வெண் சிறு கடுகினைக் குறிக்க ஐயவி என்பது சங்கத் தமிழர்கள் பயன்படுத்திய
சொல்லாகும். இவ்விதையின் விட்டம் ஏறத்தாழ ஒரு மில்லிமீட்டர் என்று அறியப்படுவதால்,
பத்தின் முதலாவது கீழடுக்கிற்கு ஐயவி என்ற பெயர் சூட்டலாம்.
2. இரண்டாவது கீழடுக்கிற்கு இம்மி என்ற பெயர்
பொருத்தமாக இருக்கும். காரணம், இம்மியும் இரண்டும் ஒரே மோனையைக் (முதலெழுத்தை) கொண்டிருப்பதால்
நினைவில் கொள்வதும் எளிதாகும்.
3. மூன்றாவது கீழடுக்கிற்கு மும்மி என்ற
பெயர் பொருந்துவதாகத் தோன்றுகிறது. காரணம், மும்மியும் மூன்றும் ஒரே மோனையுடையவை என்பதால்,
நினைவில் கொள்வதும் எளிதாகும்.
4. ஆறாவது கீழடுக்கிற்கு அஃகம் / அக்கம்
என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். காரணம், அஃகுதல் என்றால் நுண்ணியதாதல் என்ற பொருள்
உண்டு. மேலும் ஆறு என்ற சொல்லும் அஃகம் என்ற சொல்லும் ஒரே மோனையினை உடையவை. எனவே, அஃகம் என்ற சொல்லினை ஆறாவது கீழடுக்கிற்கான
பெயராக அமைக்கலாம்.
5. ஒன்பதாவது கீழடுக்கு மிக இன்றியமையாத
ஒன்றாகும். காரணம், ஒரு திணையானது இந்த அளவுக்கு மிகச்சிறியதாகப் பொடிசெய்யப் படும்போது
அதன் பரப்புவிசையில் பெரும் மாற்றம் உண்டாவதால், அதன் செயல்திறன் மிகவும் கூடுவதாகவும்
இதனால் பல நன்மைகள் விளைவதாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அளவிலான ஒரு
திணையானது தொட்டாலே பறக்கும் அளவிற்கு ஒரு புழுதியாகத் தோன்றும். புழுதி என்பதைக் குறிக்கப்
பூழி என்ற சங்கத் தமிழ்ச்சொல்லும் உண்டு. எனவே, பூழி என்ற சொல்லுடன் அம் விகுதி சேர்த்து
பூழியம் என்ற சொல்லை ஒன்பதாவது கீழடுக்கினைக் குறிப்பதற்கு அதாவது நானோ என்ற சொல்லுக்குப்
பதிலாக பயன்படுத்தலாம்.
6. பன்னிரெண்டாவது கீழடுக்கிற்குப் பொடிசார்ந்த
பெயர் வைக்காமல் ஏதேனும் ஒரு திணையின் கூர்மையுடன் தொடர்புறுத்திப் பெயர் அமைக்கலாம்.
வேட்டையாடுவதற்கு மனிதன் பயன்படுத்திய பல்வகை ஆயுதங்களில் ஒன்றுதான் வில்-அம்பு ஆகும்.
இதில் அம்பின் கூர்மையே அதன் பயன்பாட்டுக்கு முதன்மைக் காரணமாகும். அம்பினைக் குறிக்கும்
பல தமிழ்ச்சொற்களில் ஏ என்பதும் ஒன்றாகும். அம்பின் கூரிய முனையினைப் போன்ற அளவினது
என்னும் பொருளில் ஏநுதி என்னும் பெயரினை பன்னிரெண்டாவது கீழடுக்கிற்குப் பெயராக வைக்கலாம்.
7. பதினைந்தாவது கீழடுக்கிற்கும் ஆயுதக்
கூர்மையைக் கொண்டே பெயர் வைக்கலாம். வேட்டைக்கு வில்-அம்பு தேவை என்றால் போருக்குத்
தேவை கூர்வாள் ஆகும். அம்பில் ஒரேயொரு முனை மட்டுமே கூரிது என்பதால் அது குத்தித் துளைக்கும்
தன்மைகொண்டது. ஆனால், வாளில் கூரிய புள்ளிகள் பலவாக நீண்டிருப்பதால் அது பிளந்து /
வெட்டிச் செல்லும் தன்மையது. அம்பைக் காட்டிலும் கூர்மை மிகுதி கொண்டதால் வாளின் முனையினைக்
குறிக்கும் வாணுதி (வாள்+நுதி) என்ற சொல்லைப் பதினைந்தாவது கீழடுக்கினைக் குறிக்கப்
பயன்படுத்தலாம்.
8. இதுவரையிலும் திணைகளின் பொடியான தன்மை
மற்றும் கூர்மைத் தன்மைகளின் அடிப்படையில் பெயர் வைத்தாயிற்று. இனிவரும் கீழடுக்குகளுக்குப்
பெயரமைக்கத் திணைகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் துறை சார்ந்த பெயர்களை வைக்கலாம்.
திணை என்பது தொட்டு அடையத்தக்கவற்றைக் குறிக்கும் என்றால் துறை என்பது கற்று அடையத்தக்கவற்றைக்
குறிக்கும். சான்றாகச் சிலவற்றை இங்கே விளக்கமாகக் காணலாம்.
எண்மை, ஒண்மை, நுண்மை ஆகிய பண்புப்பெயர்கள்
தமிழில் உண்டு. இவையாவும் கல்வி அறிவுடன் மிக நெருங்கிய தொடர்புடையவை. கல்வி கற்றலின்
மூலம் அடையப்படும் இப்பண்புகளில் எண்மை என்பது அனைவரிடத்திலும் தங்குதடையின்றி நட்புடன்
பழகுதலையும், ஒண்மை என்பது ஐயமில்லாத அறிவின் தெளிவினால் உண்டாகும் அடக்கத்தையும்,
நுண்மை என்பது அறிவின் ஆழம் மற்றும் அகற்சியினால் உண்டாகும் புலமையையும் குறிப்பதாகும்.
இம்மூன்று பண்புகளையும் ஒழுக்கத்துடன் கல்வி கற்ற மாந்தரிடம் அன்றிப் பிறரிடம் காண்பது
அரிது. எண்மை, ஒண்மை, நுண்மை ஆகிய மூன்று உயர்திணைப் பண்புகளும் அஃறிணைகளின் மேற்கண்ட
பண்புகளைக் காட்டிலும் மிகமிக மென்மையானவை என்பதால் மீதமுள்ள மூன்று கீழடுக்குகளுக்கும்
இவற்றை அடிப்படையாகக் கொண்டே பெயர் வைக்கலாம். இதற்காக,
எண்மையினை எட்பம் என்றும்
ஒண்மையினை ஒட்பம் என்றும்
நுண்மையினை நுட்பம் என்றும்
மேலே முன்னர் கண்ட அஃகம், பூழியம் போன்ற
சொற்களைப் போலவே அம் விகுதிகொண்ட பெயர்ச்சொற்களாக மாற்றிப் பெயர் சூட்டலாம். இம் மூன்று
பெயர்களிலும்,
எட்பமும் எட்டும் ஒரே மோனையைக் கொண்டிருப்பதால்
இதனைப் பதினெட்டாவது கீழடுக்கைக் குறிக்கவும்
ஒட்பமும் ஒன்றும் ஒரே மோனையைக் கொண்டிருப்பதால்
இதனை இருபத்தி ஒன்றாம் கீழடுக்கைக் குறிக்கவும்
நுட்பமும் நான்கும் ஒரே மோனையைக் கொண்டிருப்பதால்
இதனை இருபத்தி நான்காம் கீழடுக்கைக் குறிக்கவும் பயன்படுத்தலாம்.
இவ்வாறு சில அடிப்படை விதிகளைப் பின்பற்றிப்
பெயர்களை அமைப்பதன் மூலம் அப்பெயர்கள் நினைவில் நன்கு பதிவதுடன் அவற்றைப் பயன்படுத்தும்போது
எவ்விதக் குழப்பமும் நேராது. மேலே கண்ட விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கீழடுக்குகளின்
தமிழ்ப்பெயர்ப் பட்டியலைக் கீழே காணலாம்.
பத்தின் கீழடுக்குகளின் தமிழ்ப்பெயர்ப் பட்டியல்:
வ.
எண் |
பத்தின்
அடுக்கு |
ஆங்கில
முன்னீடு
|
தமிழ் முன்னீடு
|
தமிழ்க் குறியீடு
|
1
|
10-1
|
டெ`சி
|
ஐயவி
|
ஐ
|
2
|
10-2
|
சென்டி
|
இம்மி
|
இ
|
3
|
10-3
|
மில்லி
|
மும்மி
|
மு
|
4
|
10-6
|
மைக்ரோ
|
அஃகம்
|
அ
|
5
|
10-9
|
நானோ
|
பூழியம்
|
பூ
|
6
|
10-12
|
பிக்கோ
|
ஏநுதி
|
ஏ
|
7
|
10-15
|
ஃபெம்டோ
|
வாணுதி
|
வா
|
8
|
10-18
|
ஆட்டோ
|
எட்பம்
|
எ
|
9
|
10-21
|
செ^`ப்டோ
|
ஒட்பம்
|
ஒ
|
10
|
10-24
|
யோக்டோ
|
நுட்பம்
|
நு
|
மேலே பட்டியலில் கண்ட கீழடுக்குத் தமிழ்பெயர்களைப்
பயன்படுத்தும் முறைகளைப் பற்றிச் சில சான்றுகளுடன் கீழே காணலாம்.
கை`ட்`ரச^ன் அணுக்கரு விட்டம் = 1.7566
x 10^(-15) மீட்டர் = 1.7566 வா.மீ
ஃப்ரான்சி`யம் அணுவின் ஆரம் = 348 x
10^(-12) மீட்டர் = 348 ஏ.மீ.
இவை மட்டுமின்றி, இவைபோல இன்னும் பல ஆங்கிலச்
சொற்களுக்குத் தமிழில் கலைச்சொற்களை உருவாக்க இந்த பட்டியல் உதவுகிறது. சான்றாக, சில
சொற்களை மட்டும் கீழே காணலாம்.
MICROSCOPE = அஃகநோக்கி
MICROSCOPIC = அஃகநோக்கு
MICRO MATERIAL = அஃகத்திணை
MICRO PARTICLE = அஃகுணி
MICRO ORGANISM / MICROBE = அஃகுயிரி
MICRO BIOLOGY = அஃகுயிரியல்
MICRO ELECTRONICS = அஃகேற்றையம்
NANO MATERIAL = பூழியத் திணை
NANO SCIENCE = பூழிய அறிவியல்
NANO TECHNOLOGY = பூழிய உத்தியல்
.............. தொடரும்...........