வெள்ளி, 20 டிசம்பர், 2019

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 1

முன்னுரை:

சமக்கிருதச் சொற்களைத் தமிழர்கள் பயன்படுத்துவது சரியா தவறா என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. சமக்கிருதச் சொற்களில் காணப்படும் நேரடித் தமிழ்ச் சொற்களையும் மூலத் தமிழ்ச் சொற்களையும் பயன்படுத்தலாம் என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டது. அந்த அடிப்படையில், சமக்கிருத மொழியில் உள்ள நேரடித் தமிழ்ச் சொற்களும் மூலத் தமிழ்ச் சொற்களும் கீழ்க்காணும் பட்டியல்களில் காட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, எந்தெந்த சமக்கிருதச் சொற்கள் எந்தெந்த தமிழ்ச் சொற்களில் இருந்து எவ்வாறு தோன்றின என்றும் விளக்கப்பட்டுள்ளது.


சொல்
பொருள்
தமிழ்ச் சொல்
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
~அக்கம்
வற்றிய தானியம்
அக்கம்
அக்கு (=சுருங்கு, வற்று) >>> அக்கம் = வற்றியது
~அக்கம் / ~அக்கி
கண்
ஆகம்
ஆகம் (=கண்) >>> அக்கம் >>> அக்கி
~அக்காரம்
வெல்லம்
அக்காரம்
அல் + காரம் = அற்காரம் >>> அக்காரம் = காரத்தின் எதிர்ச்சுவை = இனிப்பு.
~அக்கி / ~அங்கி
நெருப்பு
அக்கி / அங்கி
அகை (=எரி) >>> அக்கி >>> அங்கி = எரிவது
~அக்கிரமம்
தகாத செயல்
அக்கருமம்
அல் + கருமம் (=செயல்) = அற்கருமம் >>> அக்கருமம்
~அக்கினி / ~அக்னி
தீ
அக்கினி / அக்னி
அகை (=எரி) >>> அக்கி >>> அக்கினி >>> அக்னி = எரிவது
~அகங்காரம்
செருக்கு
அகங்காரம்
அகம் (=நான்) + காரம் (=மிகுதி) = அகங்காரம் = நான் என்னும் எண்ணத்தின் மிகுதி.
~அகதி
வழியற்றவர்
அகதி
அல் + கதி (=வழி) = அற்கதி >>> அக்கதி >>> அகதி
~அகந்தை
செருக்கு
அகந்தை
அகம் (=நான்) >>> அகந்தை = நான் என்னும் எண்ணம்.
~அகம்
நான்
அகம்
அகை (=பிரி, தனி) >>> அகம் = தனியானது = நான்
~அகம்பாவம்
செருக்கு
அகம்பாவம்
அகம் (=நான்)  + பாவம் (=எண்ணம்) = அகம்பாவம் = நான் என்னும் எண்ணம்.
~அகிலம்
உலகம்
அகிலம்
அகை (=பிரிவு) + இலம் = அகையிலம் >>> அகைலம் >>> அகிலம் = பிரிவற்ற முழுமை = உலகம்.
~அங்கம்
கூறு
அங்கம்
அகை (= கூறுசெய்) >>> அக்கம் >>> அங்கம் = கூறு
~அங்கம் / ~அக்கு
எலும்பு
அங்கம் / அக்கு
அங்கு (=தங்கு) >>> அங்கம் >>> அக்கம் >>> அக்கு = தீயில் எரியாமல் தங்கி விடுவது
~அங்குசம்
குத்துக்கோல்
அங்குசம்
அக்கு (=கூர்மை) >>> அக்குசம் >>> அங்குசம் = கூரியது
~அச்`தி
எலும்பு, சாம்பல்
அத்தி
அத்து (=பொருந்து, தங்கு) >>> அத்தி >>> அச்`தி = தீயில் எரியாமல் தங்கி விடுவது.
~அசிங்கம்
அழகற்றது
அசிங்கம்
அல் + செக்கம் (=சிவப்பு, அழகு) = அற்செக்கம் >>> அச்செக்கம் >>> அசெங்கம் >>> அசிங்கம்.
~அட்சரம்
எழுத்து
அச்சரம்
அச்சு (=எழுத்து) >>> அச்சரம் >>> அட்சரம்
~அத்தமி
அழி, மறை
அத்தமி
அற்றம் (=அழிவு) >>> அத்தம் >>> அத்தமி
~அதமம்
இழிவானது
அதமம்
அற்றம் (=இழிவு) >>> அற்றமம் >>> அத்தமம் >>> அதமம்
~அதிகம்
கூடுதல்
அதிகம்
அத்து (=கூடு) >>> அத்திகம் >>> அதிகம் = கூடுதல்
~அதிதி
விருந்தினர்
அதிதி
அத்து (=சார்) >>> அத்தி >>> அதிதி = சார்ந்திருப்போர்.
~அபத்தம்
பொய்
அபத்தம்
அவலம் (= வறுமை, இன்மை.) >>> அவறம் >>> அவற்றம் >>> அபத்தம் = இன்மை, பொய்.
~அபாயம்
அழிவு, கேடு
அபாயம்
அவை (=குத்து, அழி) >>> அவையம் >>> அபாயம்
~அம்சம்
பிரிவு, கூறு
ஆஞ்சம்
ஆய் (=களை, பிரி) >>> ஆஞ்சு >>> ஆஞ்சம் >>> அம்சம்
~அர்ச்சனை
பாட்டு, போற்றி
அர்ச்சனை
ஆர் (=ஒலி) >>> ஆர்ச்சி (=பாட்டு) >>> அர்ச்சனை
~அர்த்தம்
பாதி
அறுத்தம்
அறு (=இரண்டாக்கு) >>> அறுத்தம் (= இரண்டாக்கப் பட்டது) >>> அர்த்தம் = பாதி
~அர்த்தம்
கருத்து
அருத்தம்
அருத்து (=ஊட்டு, உணர்த்து) >>> அருத்தம் >>> அர்த்தம் = சொல்லால் ஊட்டப் / உணர்த்தப் படுவது = கருத்து.
~அர்ப்பணம்
சேர்ப்பித்தல், வழங்கல்
அருப்பணம்
ஆர் (=பொருந்து, சேர்) >>> அருப்பி (=சேர்ப்பி) >>> அருப்பணம் >>> அர்ப்பணம் = சேர்ப்பித்தல், வழங்கல்
~அலங்கரி
அழகுசெய்
அலங்கரி
அலங்கு (=ஒளிர்) >>> அலங்கரி = ஒளிரச்செய், அழகுசெய்
~அலங்காரம்
அழகு, ஒப்பனை
அலங்காரம்
அலங்கரி >>> அலங்காரம்
~அவசரம்
மேலானது
அவசரம்
உயரம் (=மேல்)  >>> உசரம் >>> ஔசரம் >>> அவசரம்.
~அவசியம்
வேட்கை, தேவை
அவசியம்
அவாய் (=வேட்கை) >>> அவாசி >>> அவசியம் = தேவை
~அவத்தை
துன்பம்
அவத்தை
அவலம் (=துன்பம்)>>> அவற்றம் >>>அவத்தம் >>>அவத்தை.
~அவமானம்
மானக்கேடு
அவமானம்
அவி (=கெடு) + மானம் = அவிமானம் >>> அவமானம்.
~அவனி
பூமி
அவனி
அவல் ( = நிலம்) >>> அவனி (=பூமி)
~அற்பம்
சிறுமை
அற்பம்
அரும்பு (=மொட்டு) >>> அருப்பம் (=சிறுமை) >>> அற்பம்.
~அற்புதம்
அருமை
அற்புதம்
அருமை + பதம் (=நிலை) = அரும்பதம் >> அருப்பதம் >> அற்புதம். = அரிய நிலை..
~அனல்
தீ
அனல்
அணர் (=மேல்நோக்கிச் செல்) >>> அணல் >>> அனல் = மேல்நோக்கிச் செல்வது = தீ
~அன்னியம்
பிறிது
அன்னியம்
ஏனைய (=பிறிது) >>> ஏனியம் >>> அன்னியம்
~ஆக்ஞை
கட்டளை
ஆணை
ஆள் (=கட்டளையிடு) >>> ஆணை >>> ஆக்ஞை =கட்டளை
~ஆகாயம்
ஒளிரும் இடம்
ஆகாயம்
அகை( = எரி, ஒளிர்) >>> அகையம் >>> ஆகாயம் = சூரியன், சந்திரன் மற்றும் விண்மீன்கள் ஒளிரும் இடம்.
~ஆசனம்
இருக்கை
ஆதனம்
அத்து (=பொருந்து) >>> ஆதனம் = பொருந்தும் இடம்.
~ஆசி
வாழ்த்து
ஆசீர்
ஆ (=ஆகுக)  + சீர் (=சிறப்பு) = ஆசீர் (=சிறப்பு உண்டாகட்டும்)  >>> ஆசி = வாழ்த்து.
~ஆசை
வேட்கை
ஆசை
ஆச்சி (= தாய்)>>>ஆசை = குழந்தையிடம் தாய் கொள்வது
~ஆத்மா
உயிர்
ஆதம்
அத்து(=பொருந்து)>>> ஆதம்=உடலுடன் பொருந்தியிருப்பது
~ஆபத்து
துன்பம்
ஆபத்து
அவலம் (=துன்பம்) >>> அவற்றம் >>> அவத்தம் >>> ஆபத்து.
~ஆப்தம்
விருப்பம், பற்று
ஆத்தம்
அத்து (=பொருந்து, பற்று) >>> ஆத்தம் >>> ஆப்தம்
~ஆபாசம்
அவைக்கு ஒவ்வாதது
ஆபாசம்
அவை + அல் = அவையல் >>> ஆபயல் >>> ஆபாசம் = அவைக்கு ஒவ்வாதது.
~ஆயுதம்
கருவி
ஆயுதம்
அழுத்து (=குத்து) >>> ஆயுதம் = குத்தும் கருவி.
~ஆரம்பம்
தொடக்கம்
ஆரம்பம்
அரும்பு (=தோன்று) >>> ஆரம்பம் = தோற்றம், தொடக்கம்
~ஆலயம்
வீடு, கோவில்
ஆலயம்
அளை (=வீடு) >>> அளையம் >>> ஆலயம்.
~இச்~டம்
விருப்பம்
இச்சம்
இசை (=விரும்பு) >>> இச்சை, இச்சம்
~இச்சை
விருப்பம்
இச்சை
இசை (=விரும்பு) >>> இச்சை, இச்சம்
~இதம்
அன்பு
இதம்
ஈரம் (=அன்பு) >>> ஈதம் >>> இதம்
~இரகசியம்
மறைசெய்தி
அலகயம்
அலகை (=பிணம்) >>> ரகச்`ய >>> இரகசியம் = பிணம்போல ஒரேயடியாக மறைக்கப்படுவது
~இரதம்
அன்பு
இரதம்
இரங்கு (=அன்புசெய்) >>> இரந்தை >>> இரதம்.
~இருதயம்
குருதி கடத்துவது
குருதியம்
குருதி + இயம் = குருதியம் >>> க்`ருத`யம் >>> இருதயம்..
~இலேசு
மெலிவு
இலேசு
இளை (=மெலி) >>> இளேசு >>> இலேசு
~உத்தமம்
உயர்வானது
உத்தமம்
உந்து (= உயர், எழு) >>> உந்தமம் >>> உத்தமம்
~உதயம்
எழுச்சி
உதயம்
உந்து (= எழும்பு) >>> உந்தயம் >>> உதயம் = எழுச்சி.
~உதரம்
வயிறு
உதரம்
உந்து (= பெருகு) >>> உந்தரம் >>>உதரம் = பெருத்து எழுவது
~உந்தி
வயிறு
உந்தி
உந்து (= பெருகு) >>> உந்தி = பெருத்து எழுவது
~உலோகம்
மாழை
உருக்கு
உருகு >>> உருக்கு >>> உலோகம்.
~ஏகம்
ஒன்று
ஏகம்
எஃகம் (=கூர்மை) >>> ஏகம் = நுனி, புள்ளி, ஒன்று
~ஏத்தனம்
பாத்திரம்
ஏத்தனம்
ஏந்து (=முன்னால் நீட்டு) >>> ஏந்தனம் >>> ஏத்தனம் = உணவுக்காக முன்னால் நீட்டப்படுவது.
~ஏனம்
பாத்திரம்
ஏனம்
ஏல் (=ஏற்றுக்கொள்) >>>ஏலம் >>>ஏனம் = ஏற்கும் பாத்திரம்
~ஓமம்
யாகம்
ஓமம்
ஓம்பு (= வளர்) >>> ஓமம் = தீ வளர்த்தல் = யாகம்
~ஔசதம்
மருந்து
ஔசதம்
அமிழ்தம் (=மருந்து) >>> அவிழ்தம் >>> ஔசதம்
~கபடம்
வஞ்சனை
கபடம்
கப்பு (=மூடு, மறை) >>> கப்படம் >>> கபடம் = மறைப்பு.
~கபம்
சளி
கபம்
கப்பு (= மூடு, அடை) >>> கப்பம் >>> கபம் = அடைப்பது
~கபாடம்
கதவு
கபாடம்
கப்பு (=மூடு, மறை) >>> கப்படம் >>> கபாடம் = மறைப்பது.
~கம்மல்
அடைப்பு
கம்மல்
கப்பு (= மூடு, அடை) >>> கம்மு >>> கம்மல் = சளி அடைப்பு
~கருணை
குழந்தைப் பாசம்
கருணை
கரு (=குழந்தை) +  நெய் (=அன்பு) = கருநெய் >>> கருணை = குழந்தையின்மேல் தாய் கொள்ளும் அன்பு. (ஒ.நோ: எள் + நெய் = எண்ணை. )
~கவுளி
பல்லி
கவுளி
கூ (=கூப்பிடு) + விளி (=ஒலி) = கூவிளி >>> கெவிளி >>> கவுளி = கூப்பிடுவதைப் போல ஒலிப்பது = பல்லி.
~கிரகணம்
செந்நிறமாதல்
குருக்கணம்
குரு (=சிவப்பு) + கண் = குருக்கண் (=சிவந்த கண்) >>> குருக்கணம் >>> க்~ரக`ண >>> கிரகணம் = சந்திரனும் சூரியனும் சிவந்த கண்போலச் செந்நிறம் அடைதல்.
~கிரகம்
கோள்
கிரகம்
கிறங்கு (= சுற்று) >>> கிறங்கம் >>> கிரகம் = சுற்றுவது.
~கிரண்யம்
தங்கம், செல்வம்
இருநிதி
இருநிதி (=செல்வம்) >>> க்`ரந்ய >>> கிரண்யம்
~கிலம்
கொல்வது
கிலம்
கீள் (=பிள) >>> கிளம் >>> கிலம் = பிளப்பது, கொல்வது
~கீர்த்தி
புகழ்
சீர்த்தி
சீர் >>> சீர்த்தி (=புகழ்) >>> கீர்த்தி.
~குக்குடம்
கோழி
குக்குடம்
குருகு (=கோழி) >>> குருகுடம் >>> குக்குடம்
~கோச்~டி
கூட்டம்
கோட்டி
கூடு >>> கூட்டம் >>> கோட்டி >>> கோச்~டி
~கோத்திரம்
கொள்வகை
கோத்திரம்
கோல் (=எடு) + திறம் (=முறை) >>>கோற்றிறம் >>>கோத்திறம் >>>கோத்திரம் = பெண்ணை / ஆணை எடுக்கும் முறை.
~கௌடில்யம்
வளைவு
குடிலம்
குடிலம் (=வளைவு) >>> கௌடில்யம்
~சக`ச்`ரம்
ஆயிரம்
ஆயிரம்
ஆயிரம் >>> சாயிரம் >>> ச`க`ச்`ரம்
~சங்கம்
கூட்டம்
சங்கம்
அங்கண் (=கூட்டம்) >>> சங்கம்
~சத்தியம்
உண்மை
சத்தியம்
அத்து (=பொருந்து, தங்கு) >>> அத்தியம் (=நிலைபெறுதல்) >>> சத்தியம் = நிலையானது = உண்மை
~சதி
வஞ்சனை
சதி
சாத்து (=மூடு) >>> சாத்தி >>> சதி = மூடுகை, மறைப்பு
~சந்தர்ப்பம்
ஒத்த சமயம்
செந்தறுப்பம்
செம்மை (=ஒற்றுமை) + தறுவாய் (=நேரம்) = செந்தறுவாய் >>> செந்தறுப்பம் >>> சந்தர்ப்பம் = ஒத்த சமயம்.
~சந்திரன்
நிலவு
சந்திரன்
சந்தி (=மாலை) >>> சந்திரன் = மாலையில் தோன்றுபவன்.
~சந்தேகம்
ஐயம்
செந்தேகம்
செத்து (=பிள, பிரி) + ஏகம் (=ஒன்று) = செத்தேகம் >>> செந்தேகம் >>> சந்தேகம் = பிளவுபட்ட ஒன்று
~சந்தோசம்
நல் இன்பம்
செந்தூசம்
செம்மை (=நன்மை) + துச்சி (=இன்பம்) = செந்துச்சி (= நல் இன்பம்) >>> செந்தூசம் >>> சந்தோசம்
~சபம்
ஓதுதல்
செபம்
செப்பு (=ஓது) >>> செப்பம் >>> செபம்
~சபை
கூட்டம்
சபை
அவை (=கூட்டம்) >>> சவை >>> சபை
~சம்பத்து
சொத்து
செம்பத்து
செம்மு (=நிறை)  + பற்று (=பொருள்) >>>செம்பற்று >>> செம்பத்து = நிறைத்தபொருள் = சொத்து
~சம்பந்தம்
ஒன்றிய உறவு
செம்பந்தம்
செம்மை (=ஒற்றுமை)  +  பற்று (=உறவு) >>> செம்பற்று >>> செம்பற்றம் >>>செம்பத்தம் >>>செம்பந்தம் = ஒன்றிய உறவு
~சம்புகம்
நரி
செம்புகம்
செம்பு (= செம்மை) >>> செம்புகம் = செம்புநிற விலங்கு
~சம்மணம்
சமப் பொருத்தம்
சம்மணம்
சமம் + அணம் >>> சம்மணம் = சமமாகப் பொருந்தல்
~சம்மதம்
ஒத்த கருத்து
செம்மதம்
செம்மை (=ஒற்றுமை)  + மதி (=கருத்து) = செம்மதி >>> செம்மதம் = ஒருமித்த கருத்து. .
~சமர்ப்பணம்
சிறப்பித்து வழங்குதல்
செமர்ப்பணம்
செம்மை (=சிறப்பு) + அருப்பணம் (=வழங்கல்) = செம்மருப்பணம் >>> செமர்ப்பணம் >>> சமர்ப்பணம்
~சமாசம்
ஒன்றிய கூட்டம்
செமாசம்
செம்மை (=ஒற்றுமை) + ஆயம் (=கூட்டம்) = செம்மாயம்>>> செம்மாசம்>>> செமாசம் = ஒருமித்தோர் கூட்டம்..
~சமுத்திரம்
கடல்
சமுத்திரம்
சுந்து (= நீர்) >>> சுந்திரம் (=நீர்த் தொகுதி) >>> சௌந்திரம் >>> சவுத்திரம் >>> சமுத்திரம்.
~சயனம்
படுக்கை
சயனம்
சாய் (=வீழ்) >>> சாயனம் >>> சயனம் = வீழும் இடம்.
~சரம்
மாலை
சரம்
சார் (= பொருத்து) >>> சாரம் >>> சரம் = ஒன்றுடன் ஒன்றாகப் பொருத்திச் செய்யப்படுவது = ,மாலை
~சரிதை
வரலாறு
சரிதை
ஆறு (= பாதை) >>> சாறு >>> சரிதை = கடந்துவந்த பாதை.
~சருமம்
தோல்
சருமம்
சார் (=பொருந்து, ஒட்டு) >>> சருமம் = ஒட்டியிருப்பது.
~சவம்
பிணம்
சவம்
அவி (=கெடு, கொல்) >>> சவி >>> சவம் = கொல்லப்பட்டது.
~சவரம்
மயிர்மழிப்பு
சவரம்
ஓரி (= மயிர்) >>> சோரி >>> சௌரி >>> சவரி >>> சவரம்
~சவரி
மயிர்
சவரி
ஓரி (= மயிர்) >>> சோரி >>> சௌரி >>> சவரி
~சனம்
உயிர், மக்கள்
சனம்
அணவு (=தோன்று) >>> சணவு >>> சணம் >>> சனம் = தோன்றியது = உயிர், மக்கள்.
~சன்னியாசி
துறவி
சென்னியாசி
சென்னி (=மண்டையோடு) + யாசி = சென்னியாசி (=மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர்.) >>> சன்னியாசி
~சனி
தோன்று
சணவு
அணவு (=தோன்று) >>> சணவு
~சாக்கிரம்
விழிப்பு
சாக்கிரம்
ஆகம் (= விழி) >>> சாகம் >>> சாக்கிரம் = விழிப்பு
~சாகை
தங்குமிடம்
சேக்கை
சேக்கை (=படுக்கை) >>> சாக்கை >>> சாகை = தங்குமிடம்
~சாசனம்
கட்டளை
சாசனம்
சாய் >>> சாய்ச்சு (=பணியச்செய்) >>> சாச்சனம் >>> சாசனம் = பணியச் செய்வது = கட்டளை.
~சாத்தியம்
முடிக்கும் வழி
சாத்தியம்
சாத்து (=மூடு, முடி)  +  இயம் (=வழி) =சாத்தியம்.
~சாத்திரம்
விரிவான செய்தி
சாத்திரம்
சாற்று (=விரித்துக் கூறு) >>> சாத்து >>> சாத்திரம் = விரித்துக் கூறுவது. . (சாத்திரம் x சூத்திரம்)
~சாதாரணம்
வழக்கம், இயல்பு
தாரணம்
தாரணை (=உலக வழக்கு) >>> தாரணம் >>> சாதாரணம்
~சாதி
கூட்டம்
சாதி
சாத்து (=கூட்டம்) >>> சாத்தி >>> சாதி.
~சாதி
முடி
சாதி
சாத்து (=மூடு, முடி) >>> சாத்தி >>> சாதி
~சாது
அடியார்
சாது
ஆறு(=அமைதிகொள்) >>> சாறு >>>சாது = அமைதியானவர்
~சாதுரியம்
முடிக்கும் அறிவு
சாத்துரம்
சாத்து (=மூடு,முடி) + உரம் (=அறிவு) = சாத்துரம்>>>சாதுரியம்
~சாபம்
அழிசொல்
சாபம்
அவி (=கெடு, அழி) >>> சவி >>> சாவம் >>> சாபம் = அழிந்துபோ என்று கூறுதல்.
~சாமானியம்
இயல்பு வழக்கு
சமனியம்
அமை (=இயல்பாயிரு) >>> சமை >>> சமன் (=இயல்பு) + இயம் (=வழி) = சமனியம். >>> சாமானியம்
~சாமி
முனிவர்
சாமி
அவி >>> சவி >>> சாமி = சாபம் கொடுப்பவர்.
~சாயம்
நிறம்
சாயம்
சாய் (=வீழ்த்து) >>> சாயம் = வீழ்த்தப்பட்டது = ஒரு பொருளில் இருந்து வீழ்த்தப்பட்ட சாறு.
~சாயா
தேநீர், நிழல்
சாயா
சாய் (=வீழ்த்து) >>> சாயா = வீழ்த்தப்பட்டது = ஒரு பொருளில் இருந்து வீழ்த்தப்பட்ட சாறு மற்றும் நிழல்.
~சாரங்கம்
வில்
சாரங்கம்
சார்  (= சாய், வளை) + அங்கம் = சாரங்கம் = வளைவானது.
~சாரணர்
பின்பற்றுவோர்
சாரணர்
சார் (= பொருந்து) >>> சாரணர் = பொருந்திச் செல்பவர்
~சாரம்
சாறு
சாரம்
சாறு >>> சாறம் >>> சாரம்.




 ............ தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.