ஞாயிறு, 27 ஜனவரி, 2019

அன்றாடக் கலைச்சொல் அகராதி - தொகுதி 9




                             அன்றாடக் கலைச்சொல் அகராதி  - தொகுதி 9

      பிறசொல்                        கலைச்சொல்         மேல்விளக்கம் / பயன்பாடு
number
எண்

numeral
எண்ம

numeric
எண்சார்

numerical
எண்சார

digit
விரன்
விரல் போலப் பிரித்து எண்ணப்படுவது
digital
விரன
Digital Communication  =  விரனக் கமதி
digitalize
விரங்கு

digitalized
விரங்கிய

digitalizer
விரங்கி

digitalization
விரங்கியம்

alter
மிலை
இச்சட்டையை மிலைத்து அணிந்துகொண்டேன்
altered
மிலைந்த

alteration
மிலைவு

alternate
மிலைசால்
இச்சிக்கலுக்கு மிலைசால் தீர்வுண்டா?
cap
சிமை / சிமரி
சிமை + மருவு = உச்சியில் பொருந்துவது
capped
சிமைய / சிமரிய
இந்த சிமரி உன் தலைக்குப் பொருந்துகிறது.
capital
சீமை
சிமை >>> சீமை
capitalize
சிமிர்

capitalized
சிமிரிய

capitalizer
சிமிரி

capitalization
சிமிரியம்

caps
சிமிர்

bar
பணை
Iron Bar = இரும்பணை
rod
குணில்
Iron Rod = இருங்குணில்
scroll (verb)
கொட்கு

scrolling
கொட்பு

tab
கண்டம் / கட்டம்

print screen
திரைப்பொருநு
திரையில் உள்ளதை அச்சிடு
scroll lock
கொட்பூட்டு
கொட்பு + பூட்டு
pause
தட்கு

break
நெமிர்

insert
செருகு

delete
நீக்கு

home
மனை

page up
மேல்புறம்

end
இறுதி

page down
கீழ்ப்புறம்

number lock
எண்பூட்டு

system request
செவ்வேட்பு
செவ்வி வேட்பு
escape
மீள்

caps lock
சிமிர்ப்பூட்டு

shift
அணரி

control
கந்து

alter
மிலை

enter
எய்து

windows
சின்னுழை
சிறிய நுழைவாயில்
function
துளா

spacebar
மாகப்பணை

up arrow
மீக்கணை / மேற்கணை

down arrow
கீழ்க்கணை

left arrow
இடக்கணை

right arrow
வலக்கணை

backspace
இடங்கழி
இடப்புறம் உள்ளதை அழி
tilde
~
அலை
acute
`
அக்குணி
exclamation
!
மருட்கை
asperand
@
ஆங்கண்
hash
#
அரில்
dollar
$
டாலர்
percent
%
கீநூறு
degree

தித்தி
caret
^
வள்  (பெருமை, கூர்மை)
ampersand
&
மற்றும் / மேலும்
asterisk
*
விண்மீன்
parenthesis open
(
இடப்பிறை
parenthesis close
)
வலப்பிறை
hyphen
 -
கிடை
underscore
_
கீழ்க்கோடு
plus
+
கூட்டு
equal
=
சமன்
brace open
{
இடச்சிலை
brace close
}
வலச்சிலை
bracket open
[
இட முயங்கை
bracket close
]
வல முயங்கை
pipe
|
மதலை
back slash
\
வீழ்கோடு
forward slash
 /
தாழ்கோடு
division
 /
வகுத்தல்
multiply
*
பெருக்கல்
minus
-
கழிவு
colon
:
நிரை (15:11:14 போல நிரைத்துக் காட்ட உதவுவது)
semicolon
;
பானிரை (பானாள் என்பதைப் போல)
quote
"
சாற்று
quoted
சாற்றிய

quotation
சாற்றியம்

apostrophe
 '
விடுகை
less than
குறைவு
greater than
மிகுதி
comma
,
கீறல்
period
.
புள்ளி
question mark
?
கேள்விக் குறி
source (noun)
மற்கண்
மல் +  கண் =  வளம் நிறைந்த இடம்
source (verb)
மற்கு

sourcing
மற்கை

outsource
புறமற்கு

outsourcing
புறமற்கை

digital versatile disc
விசாநே
விரனஞ் சான்ற நேமி
disc
நேமி

diverse
நெறிமாறு

diversion
நெறிமாற்றம்

diversity
நெறிமாறுபாடு

diversify
நெறிமாற்று

diversified
நெறிமாற்றிய

diversification
நெறிமாற்றுகை

diversifier
நெறிமாற்றி

diversifying
நெறிமாற்றும்

divisor
வகுதி
வகுக்கும் எண்
dividend
வகுந்து
வகுபடும் எண்
quotient
ஈவு

remainder
மீதி

flange
எருத்து

flanged
எருத்திய

flanger
எருத்தி

flanging
எருத்தல்

pollute
மாசுறு

polluted
மாசுற்ற

pollution
மாசுறல் / மாசுபாடு

pollutant
மாசு

depollute
மாசறு

depolluted
மாசறுத்த

depollution
மாசறுப்பு

depolluting
மாசறுக்கும்

dope
ஆசு

doped
ஆசுறு

doping
ஆசுறல்

dopant
ஆசு

undoped
ஆசுறா

extrinsic semiconductor
ஆசுறு பாலிகர்

intrinsic semiconductor
ஆசுறா பாலிகர்

drug
வழும்பு
இயல்பை மாற்றும் போதைப்பொருள்
drug (verb)
வழும்பு
He has been Drugged.
drugged
வழும்புறு
அவர் வழும்பப் பட்டார்
narcotics
வழை
இயல்பை மாற்றும் போதைப்பொருள்
drink
மடு / குடி / பருகு

drinks
மடுதி / குடி / பருக்கு
Cool Drink  =  தண்மடுதி / தண்பருக்கு
drunk
மடுத்த

drunkard / drinker
மடுதர்

male drunkard
மடுதன்

female drunkard
மடுதை

drinking
மடுப்பு

drinkable
மடுசால்
குடிக்கத் தக்க
non drinkable
மடுசாலா
குடிக்கத் தகாத
drinkability
மடுசான்மை

liquor
மட்டு / மது

firm (noun)
இறும்பனம்
அது ஒரு புகழ்மிக்க இறும்பனம் ஆகும்.
firmly
இறும்பென

confirm
இறும்பு
மலைபோல உறுதிப்படுத்து
confirmed
இறும்பிய
நீங்கள் உங்கள் பயணத்தை இன்னும் இறும்பவில்லை
confirming
இறும்பும்

confirmation
இறும்பியம்

establish
நிறுவு

established
நிறுவிய

establishment
நிறுவனம்

establishing
நிறுவும்

permanent
இறும்பேர்
இறும்பு + ஏர் =  மலையினைப் போல /  நிரந்தரமான
permanently
இறும்பேராய்
இந்த வீட்டில் இறும்பேராய் நீங்கள் தங்கலாம்.
temporary
போதேர்
போது + ஏர் =  மலர்/பொழுதைப் போல /  தற்காலிகமான
temporarily
போதேராய்
எங்க எறுழில போதேரா நீங்க வேலைசெய்யலாம்
temporal
போதுறு
பொழுது சார்ந்த
stall (noun)
அல்கிடம் /  அல்கி
தற்காலிகமாக தங்கும் இடம்
stall
அல்கு

stalled
அல்கிய

install
அற்கு
துன்னு என்ற சொல்லும் உண்டு
installed
அற்கிய

installation
அற்கியம்

installment
அற்கம் / தவணை
மொத்தப் பணத்தையும் பத்து அற்கமா கட்டலாம்.
installer
அற்கி

reinstall
மீளற்கு

reinstalled
மீளற்கிய

reinstallation
மீளற்கியம்

reinstaller
மீளற்கி

space
மாகம்

spaceship
மாகத்தேர்

spaced
மாகுறு

spacer
மாகர்

spacing
மாகை

compass
மாதி  /  திசகா
திசை காட்டும் கருவி
world
உலகம்

universe
மாதிரம்

universal
மாதிர

v.i.p
மாதித்தர்
மா + தித்தர் = பெரும் புள்ளி
university
மாதிரளை
பல்கலைக் கழகம், ஒற்றுமை
news
மாதிகை / செய்தி / சேதி
நான்கு திசைகளில் இருந்தும் வருவது
newspaper
சேதிகை
சேதியைக் கைமேல் தருவது
news reporter
மாதிகர்
செய்தி சேகரிப்பாளர்
world games
மாத்திளா
மா + திளா = பெரும் விளையாட்டு
light
எல் /  ஒளி

light source
எல்லி

luminous
எல்லிய

luminosity
எல்லியம்

luminance
எல்லணம்

illuminate
எல்லேற்று
ஒளியினை பாய்ச்சு
illuminated
எல்லேற்றிய

illuminator
எல்லேற்றி

illuminance
எல்லுறுகை

illuminating
எல்லேற்றும்

illumination
எல்லேற்றம்

luminous flux
எல்லியச் சாரை

flux
சாரை

current
பரிசாரம்
ஓடிக்கொண்டிருக்கும் சாரம்
current news
பரிசார சேதிகள்

currency
பரிசில்
ஓடிக்கொண்டிருக்கும் சில்லறை
concurrent
ஒப்பரிசார்

concurrence
ஒப்பரிசார்வு

concurred
ஒப்பரிசார்ந்த

ammeter
பசாகன்
பரிசாரத்தை அளவிடும் கன்னல்
control
கந்து

controlled
கந்துறு

controlling
கந்தும்

controller
கந்தி

uncontrolled
கந்துறா

controllable
கந்தேலி
கந்து + ஏலி = கட்டுப்படுத்தக் கூடியவை
uncontrollable
கந்தேலா
கட்டுப்படுத்த முடியாதவை
controller of examinations
உரஞ்சங்களின் கந்தி
இதன் சுருக்கமான C.O.E  யை உரந்தி எனலாம்.
hero
தீரன்
இந்தப் படத்தோட தீரன் யார்?
heroine
தீரிகா
இந்தப் படத்தோட தீரிகா ரொம்ப அழகு.
heroism
தீரம்

heroic
தீர
Heroic Deed  =   தீரச் செயல்
villain male
இமிலன்
காளையின் திமில் போன்ற செருக்குடையவன்
villainism
இமிலம்

villainous
இமிலேர்
செருக்குடைய
villainy
இமிலை
செருக்குடைய செயல்
villain female
இமிலி

speed
வேகம்

speedy
வேகமான

velocity
கதழ்வு

velocious
கதழ்வுறு

accelerate
முடுக்கு
வண்டிய முடுக்கி ஓட்டு
accelerated
முடுக்கிய

acceleration
முடுக்கம்

accelerator
முடுக்கர்

decelerate
ஒடுக்கு
வண்டிய ஒடுக்கி நிப்பாட்டு.
decelerated
ஒடுக்கிய

deceleration
ஒடுக்கம்

decelerator
ஒடுக்கர்

federate
கந்தணை
கந்து + அணை = ஒரே தூணொடு பொருந்து
federated
கந்தணைந்த

federation
கந்தணம்

federal
கந்தண
Federal Government  = கந்தண அரசு
fediverse
கந்திரம்
கந்தணம் (federation)  +  மாதிரம் (universe)
thermion
தெற்சாரணு

thermionic
தெற்சாரண்

coffee
கபகா
கசப்புச்சுவையும் பழுப்புநிறமும் கொண்ட காழ் (கொட்டை)
kinetic
பரிபு
இயக்கத்துடன் தொடர்புடைய
kinetics
பரிபேதியல்
பரிபு + ஏது + இயல்
kinematics
பரிபியல்
பரிபு + இயல்
kinetic energy
பரிபாற்றல்

potential energy
நோனாற்றல்

energy
ஆற்றல் / காழ்ப்பு

energetic
காழ்மிகு

energize
காழ்த்து

energizing
காழ்த்தும்

energizer
காழ்த்தர்

efficiency
திறன்

efficient
திறன்மிகு

force
விசை

forced
விசைத்த

forcing
விசைக்கும்

forceful
விசைமிகு

forceless
விசையறு

enforce
விசி
இறுகக் கட்டு,  கட்டுக்குள் கொண்டுவா
enforced
விசித்த

enforcement
விசிப்பு

archive (noun)
இகுப்பம்

archive
இகுப்பு

archived
இகுப்பிய

archival
இகுப்ப / இகுப்புறு

metal
அயில் / ஐல்
முவனி, மாழை என்ற பெயர்களும் இதற்குண்டு
metallic
அயில / ஐல

metalloid
அயினிகர் / ஐனிகர்
அயில் + நிகர்
metallurgy
அயிலியம் / ஐலியம்

metallurgist
அயிலியர் / ஐலியர்

metallurgical
அயிலிய / ஐலிய

metallize
அயிற்று

metallized
அயிற்றிய

metallization
அயிற்றியம்

metallizer
அயிற்றி

non-metal
அல்லயில் / அல்லை

non-metallic
அல்லைய

electroplate
மினுத்தைற்று
மினுத்து + அயிற்று = மின்சாரம் பாய்ச்சி மாழை பூசுதல்
electroplated
மினுத்தைற்றிய

electroplating
மினுத்தைற்றல்

tangle
பிணங்கு

tangled
பிணங்கிய

entangle
பிணக்கு

entangled
பிணக்கிய

entanglement
பிணக்கம்

negative
பொன்றி
அழிக்கும் தன்மை கொண்ட
negate
பொன்று

negated
பொன்றிய

negation
பொன்றல்

negativity
பொன்றியம்

positive
ஓம்பி
காக்கும் தன்மை கொண்ட
positivity
ஓம்பியம்

oppose
எதிர்

opposed
எதிர்த்த

opposite
எதிரிட / எதிர்ப்புற

opposition
எதிர்ப்பு

create
உந்து

created
உந்திய

creative
உந்தி

creativity
உந்தியம்

creator
உந்தை

creation
உந்தல் / உம்பல்

cast
வார்
உருவாக்கு
casted
வார்த்த

casting
வார்ப்பு

caster
வாரி

castable
வாரடை
வார்க்கப்படத் தகுதியானவை
castables
வாரடைகள்

fract
அரி

fracture
அரினம்

fraction
அரில்

fractional
அரில

fractal
அரிலி

diffract
வணர்
மோதும் அலையினை விலக்கு / பரப்பு
diffracted
வணரிய

diffraction
வணர்ப்பு

diffractor
வணரி
மோதும் அலையினை விலக்கும் / பரப்பும் தடை
diffractive
வணரக

refract
பீலி
மயில்தோகை போலப் பலவாகப் பிரி
refracted
பீலிய

refraction
பீலியம்

refracting
பீலுறு

refractive
பீலக

infract
மீறு
விதிகளை முறி /  மீறு
infracted
மீறிய

infraction
மீறல்

infractor
மீறி

refractory
கவானிய
மலை (கவான்) போல மாறாது எதிர்த்துநில்
refractoriness
கவானியம்

refractories
கவானிகள்