சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 3
னுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
சொல்
|
பொருள்
|
தமிழ்ச் சொல்
|
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும் |
~திரம்
|
உறுதி, வலிமை
|
திரம்
|
திறல் (=வலிமை) >>> ச்`திர
>>> திரம் = உறுதி
|
~திரவம்
|
பாய்பொருள்
|
திரவம்
|
துரவு (=ஓடு, பாய்) >>> துரவம்
>>> திரவம்
|
~திரவிணம்
|
செல்வம்
|
திரவிணம்
|
துரவு (=ஓடு, செல்) >>> துரவினம்
>>> திரவிணம் = ஓடக் / செல்லக்கூடியது = செல்வம். ஒ.நோ : செல்
>>> செல்வம்
|
~திரவியம்
|
செல்வம்
|
திரவியம்
|
துரவு (=ஓடு, செல்) >>> துரவியம்
>>> திரவியம் = ஓடக் / செல்லக்கூடியது = செல்வம். ஒ.நோ : செல்
>>> செல்வம்
|
~திரவியம்
|
வாசப்பொருள்
|
திரவியம்
|
திறம் (=திசை) + இயம் (=பரவல்) = திறவியம்
>>> திரவியம் = திசையெங்கும் பரவுவது = வாசனை >>> வாசப்பொருள்
|
~திராட்சை
|
கொத்துப் பழம்
|
திராக்கை
|
திரக்கு (=கொத்து)>>> திராக்கை
>>> திராக்சை~>>> திராட்சை
|
~திராணி
|
வலிமை
|
திராணி
|
திறன் (=வலிமை) >>> திறானி
>>> திராணி
|
~திராலம்
|
தண்ணீர்ப்பழம்
|
திராலம்
|
திரள் (=பரு, உருண்டையாகு) >>> திரளம்
>>> திராலம் = பருத்து உருண்டையாய் இருப்பது
|
~திராவகன்
|
அறிஞன்
|
திராவகன்
|
திறம் (=கல்வி) + அகன் = திறவகன் >>>
திராவகன் = கல்வி அறிவுடையவன்
|
~திராவணம்
|
ஓட்டுகை
|
திராவணம்
|
துரப்பு (=ஓட்டு) >>> துரப்பணம்
>>>துராவணம்>>>திராவணம்
|
~திராவிடம்
|
தென்னிந்தியா
|
தென்பீடம்
|
தென்பீடம் >>> தெற்பீடம் >>> திராவிடம்
|
~திருக்கு
|
கண்
|
தெருட்சி
|
தெருட்டு (=அறிவி, விளக்கு) >>>
தெருட்சி >>> திருட்சி >>> த்`ருக்சி~ >>> திருக்கு
= அறியச்செய்வது, விளக்குவது
|
~திருச்~டி
|
கண், பார்வை
|
தெருட்டி / திருட்டி
|
தெருட்டு (=அறிவி, விளக்கு) >>>
தெருட்டி >>> திருட்டி >>> திருச்~டி = அறியச் செய்வது,
விளக்குவது
|
~திருசியம்
|
காணப்படுவது
|
தெருட்சியம்
|
தெருட்டு (=அறிவி, விளக்கு) >>>
தெருட்சி >>> தெருட்சியம் >>> த்`ருக்ச்~ய >>>
திருசியம் = அறியப்படுவது
|
~திருட்டி
|
விளக்கு, கற்பி
|
தெருட்டு
|
தெருட்டு (=அறிவி, விளக்கு) >>>
தெருட்டி >>> திருட்டி = அறியச் செய், விளக்கு
|
~திருடம்
|
வலிமை, இரும்பு
|
தெறுடம்
|
தெறு (=குவி, திரட்டு) >>> தெறுடம்
(=திரட்சி) >>> திருடம் = திரட்சியால் உண்டாகும் வலிமை, வலிய பொருள்
|
~திருணம்
|
தேனீ, தேள்
|
தெறுணம்
|
தெறு (=கொட்டு) >>> தெறுணம்
>>> திருணம் = கொட்டுவது
|
~திருணம்
|
வில்
|
திருணம்
|
திரும்பு (=வளை) >>> திருமம்
>>> திருணம் = வளைந்தது
|
~திருதி
|
கழுவும் மருந்து
|
திருதி
|
திருத்து (=கழுவு) >>> திருத்தி
>>> திருதி
|
~திருப்தி
|
நிறைவு
|
திருத்தி
|
திருந்து (=முற்று, நிறைவுறு) >>>
திருத்தி >>> திருப்தி
|
~திரோகிதம்
|
மறைக்கப்பட்டது
|
திரோகிதம்
|
திருக்கு (=வஞ்சனை) >>> திருக்கிதம்
>>> திரோகிதம்
|
~திவசம்
|
வெயில், ஒளி, பகல், நாள்
|
திவசம்
|
தவ்வு (=உலர், காய்) >>> தவசு
(=காயச்செய்) >>> தவசம் (=காய்ந்தது) >>> திவசம் = காயச்
செய்வது = வெயில்.
|
~திவ்வியம்
|
இன்பம், நன்மை
|
திவ்வியம்
|
தீவியம் (=இன்பம்) >>> திவ்வியம்
>>> திவ்ய
|
~தினம்
|
தீ, வெயில், பகல், நாள்
|
தினம்
|
தின் (=உண், அழி) >>> தினம் = உண்டு
அழிப்பது.
நீரையும் பொருட்களையும் உண்டு அழிப்பது = தீ, வெயில், பகல் >>> நாள் |
~தீட்சணம்
|
எரிப்பு, காரம், மிளகு
|
தீச்சணம்
|
தீய் (=எரி) >>> தீச்சு (=எரியச்செய்)
>>> தீச்சனம் >>> தீட்சணம் = எரிவதைப் போன்ற சுவையும்
பொருளும்
|
~தீட்சணம்
|
மரணம்
|
தீச்சணம்
|
தீச்சு (=எரி, கொல், அழி) >>> தீச்சனம்
>>> தீட்சணம்
|
~தீட்சணம்
|
கூர்மை, ஆயுதம்
|
தீட்டணம்
|
தீட்டு (=கூராக்கு) >>> தீட்டணம்
>>> தீட்சணம்
|
~தீட்சிதர்
|
ஆசான்
|
தீட்டிதர்
|
தீட்டு (=விளக்கு) >>> தீட்டிதர்
>>> தீட்சிதர் = விளக்குபவர்
|
~தீட்சை
|
விளக்கம், கல்வி
|
தீட்டை
|
தீற்று (=விளக்கு) >>> தீட்டு
>>> தீட்டை >>> தீட்சை
|
~தீத்தகம்
|
தங்கம்
|
தீத்தகம்
|
தீற்று (=விளக்கு) >>> தீற்றகம்
>>> தீத்தகம் = விளக்கம் / ஒளியை அகத்தே கொண்டது = தங்கம்.
|
~தீதை
|
அறிவு, கல்வி
|
தீதை
|
தீற்று (=விளக்கு) >>> தீத்து
>>> தீத்தை >>> தீதை = விளக்கம் தருவது = அறிவு, கல்வி.
|
~தீப்தி / ~தீப்தம்
|
ஒளி, அழகு
|
தீத்தி/ தீத்தம்
|
தீற்று (=விளக்கு) >>> தீத்து
>>> தீத்தம், தீத்தி >>> தீப்தம், தீப்தி = விளக்கம் உடையது =
ஒளி, அழகு.
|
~தீபம்
|
விளக்கு, ஒளி
|
தீபம்
|
தீய் (=எரி) >>> தீய்ப்பு >>>
தீப்பு >>> தீபம் = எரிவது
|
~தீபனம்
|
பசி
|
தீபனம்
|
தீப்பு (=நெருப்பு) >>> தீப்பனம்
>>> தீபனம் = தீ போன்றது
|
~தீபனம்
|
மஞ்சள்
|
தீபனம்
|
தீபம் (=ஒளி) >>> தீபனம் = ஒளியைப்
போன்ற நிறத்தது
|
~தீபி
|
புலி
|
தீபி
|
தீப்பு (=நெருப்பு) >>> தீப்பி
>>> தீபி = நெருப்பைப் போன்ற உடல் நிறம் கொண்ட விலங்கு
|
~தீர்க்கம்
|
நீளம்
|
தீர்க்கம்
|
தீர் (=நீளமாகு) >>> தீர்க்கம் = நீளம்
|
~தீர்க்கம்
|
முடிவு
|
தீர்க்கம்
|
தீர் (=முடி) >>> தீர்க்கம் = முடிவு
|
~தீர்த்தம்
|
நீர்
|
தீர்த்தம்
|
திருத்து (=கழுவு) >>> தீர்த்தம் =
கழுவ உதவுவது
|
~தீரம்
|
துணிச்சல்
|
தீரம்
|
திறம் (=துணிச்சல்) >>> தீரம்
|
~தீரம்
|
கரை
|
தீரம்
|
தீர் (=நீளமாகு) >>> தீரம் = நீளமானது
|
~தீரம்
|
அம்பு
|
தீரம்
|
தீர் (=செல், செலுத்து) >>> தீரம் =
செலுத்தப்படுவது
|
~தீவனம்
|
உணவு
|
தீவனம்
|
துவ்வு (=உண்) >>> துவ்வனம்
>>> திவ்வனம் >>>தீவனம்
|
~தீவிரம்
|
கொடுமை, கடுமை, கோபம்
|
தீவிரம்
|
தெவ்வு (=எதிர், சின) >>> தெவ்விரம்
>>> தீவிரம் = சினம், கடுமை, கொடுமை
|
~தீவு
|
கடல்சூழ் நிலம்
|
தீவு
|
திப்பு (=குவி, பெரு) >>> திப்பை
(=மேடு) >>> தீபம் >>> தீவம் >>> தீவு = மேடான இடம்.
|
~தீனம்
|
வறுமை
|
தீனம்
|
தின் (=உண்ணு, குறை) >>> தீனம் =
குறைவு, வறுமை
|
~துக்கம்
|
வருத்தம்
|
துக்கம்
|
துகை (=வருந்து) >>> துக்கம்
|
~துக்கம்
|
மரணம்
|
துக்கம்
|
தூங்கு (=சாவு) >>> துக்கு
>>> துக்கம் = சாவு
|
~துக்கு
|
மாவு, பொடி
|
துக்கு
|
துகை (=இடி) >>> துக்கு =
இடிக்கப்பட்டது.
|
~துக்குணி, ~துக்கடி
|
துண்டு
|
துக்குணி, துக்கடி
|
துகை (=இடி, குற்று) >>> துக்கடி,
துக்குணி = இடிக்கப் / குத்தப்பட்டது = சிறிய துண்டு
|
~துகினம்
|
பனித்துளி
|
துகினம்
|
தூங்கு (=தொங்கு) >>> தூங்கினம்
>>> துகினம் = இலை நுனியில் தொங்கிக் கொண்டிருப்பது
|
~துங்கம்
|
உயரம், மலை, பெருமை
|
துங்கம்
|
தூக்கு (=உயரம்) >>> துங்கம் = உயரம்,
உயரமானது (மலை), பெருமை.
|
~துங்கன்
|
சந்திரன்
|
துங்கன்
|
துங்கி (=இரவு) >>> துங்கன் = இரவில்
வருபவன்
|
~துங்கி
|
இரவு
|
துங்கி
|
தூங்கு (=உறங்கு) >>> துங்கி =
உறங்கும் நேரம்
|
~துச்~டம்
|
பழி, குற்றம்
|
துட்டம்
|
தூற்று (=பழி) >>> தூட்டு >>>
துட்டம் >>> துச்~டம் = பழிக்கத்தக்க செயல், குற்றம்.
|
~துச்~டி
|
மரணம்
|
துச்சி
|
துஞ்சு (=சாவு) >>> துஞ்சி
>>> துச்சி >>> துச்~டி
|
~துச்சம்
|
சிறுமை
|
துச்சம்
|
துய் (=பஞ்சு நுனி) >>> துய்யம்
>>> துச்சம் = பஞ்சு நுனி போன்ற சிறுமை
|
~துண்டி
|
அலகு, மூக்கு, ஆயுதம்
|
துண்டி
|
துண்டி (=வெட்டு, கிழி) >>> துண்டி =
வெட்ட / கிழிக்க உதவுவது = பறவையின் அலகு / மூக்கு, ஆயுதம்
|
~துத்தம்
|
உணவு, பால்
|
துத்தம்
|
துற்று (=உண்) >>> துற்றம்
>>> துத்தம் = உணவு
|
~துத்து
|
பொய், வஞ்சனை
|
துத்து
|
தத்து (=ஓட்டை) >>> துத்து = ஓட்டையைப்
போன்றது
|
~துதி
|
புகழ்மாலை
|
துதி
|
துறு (=சூட்டு) >>> துது >>>
துதி = சூட்டப்படுவது
|
~துந்தி, ~துந்தம்
|
பெருவயிறு
|
துந்தி, துந்தம்
|
துதை (=செறி, பெரு)>>> துந்தி,
துந்தம்= செறிந்து பெருப்பது
|
~துந்துளம்
|
எலி
|
துந்துளம்
|
தத்து (=ஓட்டை) >>> துத்து
>>> துத்துளம் >>> துந்துளம் = ஓட்டைக்குள் வசிப்பது = எலி
|
~துப்பட்டி
|
ஆடை
|
துப்பட்டி
|
துய் (=வெண்மை, மென்மை) + பட்டி (=ஆடை) =
துய்ப்பட்டி = துப்பட்டி = வெண்ணிற மெல்லிய மேலாடை
|
~துப்பம்
|
வெண்ணை, நெய்
|
துப்பம்
|
துய் (=வெண்மை, மென்மை) >>> துய்ப்பம்
>>> துப்பம் = வெண்மையும் மென்மையும் கொண்ட உணவு.
|
~துப்பு
|
உளவுச் சான்று
|
துப்பு
|
துய் (=பஞ்சு நுனி) >>> துய்ப்பு
>>> துப்பு = பஞ்சு நுனி போல கிடைக்கும் மிகச் சிறிய சான்று
|
~தும்பா
|
சுரை உண்கலம்
|
தும்பா
|
தூம்பு (=துளை) >>> தும்பா =
துளைக்கப்பட்ட சுரைக்காய் போன்ற உண்கலம்
|
~தும்பி
|
யானை
|
தும்பி
|
தூம்பு (=துளை) >>> தும்பி = கையில்
துளை கொண்டது
|
~தும்பி
|
தேனீ, வண்டு
|
தும்பி
|
தும்பு (=துளையிடு) >>> தும்பி =
துளைப்பது
|
~துர்
|
கெட்ட, தீய
|
துர்
|
துரு (=குற்றம், பழி) >>> துர் =
குற்றமுள்ள, பழிக்கத்தக்க, கெட்ட, தீய
|
~துரகம்,
~துரங்கம், ~துரகதம் |
குதிரை, மனம்
|
துரகம், துரங்கம், துரகதம்
|
துரக்கு (=ஓட்டு, செலுத்து) >>>
துரக்கம் >>> துரங்கம், துரகம், துரகதம் = ஓட்டப் / செலுத்தப்படுவது
|
~துரம்
|
பொறுப்பு, பாரம்
|
துரம்
|
தரி (=தாங்கு) >>> துரி >>>
துரம் = தாங்கப்படுவது
|
~துரவு
|
கிணறு
|
துரவு
|
துருவு (=தோண்டு) >>> துரவு =
தோண்டப்பட்டது
|
~துரி
|
பாரம்
|
துரி
|
தரி (=தாங்கு) >>> துரி =
தாங்கப்படுவது
|
~துரிதம்
|
ஓட்டம், வேகம்
|
துரிதம்
|
துரத்து (=ஓட்டு) >>> துரத்தம்
>>> துரிதம்
|
~துரியம்
|
பொதிமாடு
|
துரியம்
|
தரி (=தாங்கு) >>> தரியம் >>>
துரியம் = தாங்குவது
|
~துருக்கம்
|
கோட்டை, மதில்
|
துருக்கம்
|
தூர் (=மறை) >>> தூர்க்கு >>>
துருக்கம் = மறைப்பினைச் செய்வது = கோட்டை, மதில்
|
~துருத்தி
|
தோல்
|
துருத்தி
|
தூர் (=மறை) >>> தூர்த்தி >>>
துருத்தி = மறைப்பது= தோல்
|
~துருத்தி
|
வயிறு, பை, உறை
|
துருத்தி
|
தூர் (=திணி, நிறை) >>> தூர்த்தி
>>> துருத்தி = திணித்து நிறைக்கப்படுவது = வயிறு, பை, உறை
|
~துருப்பு
|
உளவுச் சான்று
|
துருப்பு
|
துரும்பு (=பிசிர்) >>> துருப்பு =
பிசிர் நுனி போன்ற சிறு சான்று
|
~துருமம்
|
கலக்கம்
|
துருமம்
|
தெருமம் (=கலக்கம்) >>> துருமம்
|
~துருவம்
|
குழி
|
துருவம்
|
துருவு (=தோண்டு) >>> துருவம் =
தோண்டப்பட்டது
|
~துருவம்
|
முனை, கூர்மை
|
துருவம்
|
துரும்பு (=பிசிர்) >>> துருப்பு
>>> துருப்பம் >>> துருவம் = பிசிர் நுனி போன்ற முனை, கூர்மை.
|
~துருவம்
|
வீடுபேறு, உறுதி
|
துருவம்
|
துறு (=அடை, சேர்) >>> துறுவம்
>>> துருவம் = அடையப்படுவது = வீடுபேறு, உறுதி
|
~துருவம்
|
குழி, வழி
|
துருவம்
|
துருவு (=தோண்டு) >>> துருவம் =
தோண்டப்பட்டது.
|
~துரை
|
தலைவன்
|
துரை
|
துர (=செலுத்து, இயக்கு) >>> துரை =
இயக்குபவன்
|
~துரோகம்
|
வஞ்சனை
|
துரோகம்
|
(1) துருவு (=துளையிடு) >>> துருவகம்
(=ஓட்டை) >>> துரோகம் = ஓட்டையைப் போன்றது = பொய், வஞ்சனை. (2)
துருக்கம் (=மறைப்பு) >>> துரோகம் = வஞ்சனை. (3) திருக்கம் (=வஞ்சனை)
>>> துருக்கம் >>> துரோகம்.
|
~துரோணம்
|
நாழி, தொன்னை
|
துரோணம்
|
துருவு (=குழி) >>> துருவணம் >>>
துரோணம் = குழியுடையது = நாழி, தொன்னை
|
~துரோணம்
|
வில்
|
துரோணம்
|
துரவு (=எய்) >>>துரவணம்
>>>துரோணம் =எய்ய உதவுவது.
|
~துரோணி
|
படகு
|
துரோணி
|
துருவு (=குழி) >>> துருவணி
>>> துரோணி = குழியுடையது
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.