சமக்கிருதத்தில் உள்ள நேரடி &
மூலத் தமிழ்ச் சொற்களின்
தோற்றம் - பகுதி 5
சொல்
|
பொருள்
|
தமிழ்ச் சொல்
|
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும் முறையும் |
~துல்லியம்
|
தெளிவு, சுத்தம்
|
துல்லியம்
|
துல்லு (=தெளி) >>> துல்லியம் = தெளிவு,
சுத்தம்
|
~துலவம், ~துலம்
|
பருத்திப் பஞ்சு
|
துலவம், துலம்
|
துல்லு (=தெளி) >>> துல்லம் (=தூய்மை)
>>> துலம், துலவம் = தூய்மையானது = பருத்திப் பஞ்சு
|
~துலாம், ~துலை
|
தராசு
|
துலாம், துலை
|
துலவம் (=பருத்திப் பஞ்சு) >>> துலாம்,
துலை = முதன்முதலில் பருத்தியை எடைபோடவே தராசினைப் பயன்படுத்தியதால் பருத்தியின்
பெயரே தராசுக்கு வந்தது.
|
~துலினி
|
இலவம் பஞ்சு
|
துலினி
|
துல்லு (=தெளி) >>> துல்லினி
>>> துலினி = தூயது
|
~துவக்கு
|
உடல்
|
துவக்கு
|
துவக்கு (=கட்டு) >>> துவக்கு =
கட்டப்பட்டது = உடல். ஒ.நோ: யா (=கட்டு) >>> யாக்கை = கட்டப்பட்டது =
உடல்.
|
~துவக்கு
|
தோல்
|
துவக்கு
|
துவக்கு (=கட்டு) >>> துவக்கு = உடலைக்
கட்டியிருப்பது.
|
~துவசம்
|
பதாகை, கொடி
|
துவசம்
|
துவை (=புகழ்) >>> துவையம்
>>> துவசம் = புகழ் சாற்றுவது = பதாகை, கொடி
|
~துவம்சம்
|
நசுக்கி அழித்தல்
|
துவச்சம்
|
துவை (=மிதி, நசுக்கு) >>> துவச்சம்
>>> துவம்சம்
|
~துவனம், ~துவனி
|
ஒலி
|
துவனம், துவனி
|
துவன்று (=கூட்டம்) >>> துவனம், துவனி
= கூட்டத்தால் உண்டாவது. ஒ.நோ: சாத்து (=கூட்டம்) >>> சத்தம்.
|
~துவாரம்
|
துளை
|
துவாரம்
|
தும்பு (=துளையிடு) >>> தும்பரம்
>>> துவாரம்
|
~துவிரம்
|
தேனீ
|
துவிரம்
|
தும்பு (=துளையிடு) >>> தும்பிரம்
>>> துவிரம் = துளைப்பது
|
~துவேசம்
|
வெறுப்பு, பகை
|
துமிசம்
|
துமி (=பிள, பகு) >>> துமிசம் (=பகை)
>>> துவேசம்
|
~துளசி,
~துளவு, ~துளவம் |
மண மூலிகை
|
துளசி, துளவு, துளவம்
|
துளர் (=மணம் வீசு) >>> துளவு, துளவம்,
துளசி = மணம் வீசும் மூலிகை
|
~துறட்டி
|
அங்குசம்
|
துறட்டி
|
துர >>> துரட்டு (=செலுத்து, ஓட்டு)
>>> துரட்டி = செலுத்த உதவும் கூரிய ஆயுதம்
|
~துனி
|
ஆறு
|
துனி
|
துனை (=ஓடு) >>> துனி = ஓடிக்கொண்டே
இருப்பது
|
~துனியா
|
உலகம்
|
துணியா
|
துணி (=வெட்டு, பிரி) >>> துணியா =
பிரிக்கப்படாத முழுமை = உலகம். ஒ.நோ: அகை + இலம் = அகிலம்
|
~தூசர்
|
வண்ணார்
|
தூசர்
|
தூய் (=கழி, நீக்கு) >>> தூசு
>>> தூசர் = ஆடைகளைச் சுத்தம் செய்பவர்..
|
~தூசி
|
பிசிர், அற்பம்
|
தூசி
|
துய் (=பஞ்சு நுனி) >>> தூசி = பஞ்சின்
நுனி போன்ற துகள், அற்பமான பொருள்
|
~தூசு
|
சுத்தம், ஆடை
|
தூசு
|
தூய் (=கழி, நீக்கு) >>> தூசு = சுத்தம்,
சுத்தம் செய்யப்பட்ட ஆடை.
|
~தூரி, ~தூரிகை
|
பூசுகோல்
|
தூரி, தூரிகை
|
துவர் (=பூசு) >>> துவரி >>>
தூரி >>> தூரிகை
|
~தெய்வம்
|
கடவுள், தலைவன்
|
தெய்வம்
|
தய் (=உருவாக்கு) >>> தய்யம்
>>> தெய்யம் >>> தெய்வம் = உருவாக்குபவன் = கடவுள், தலைவன்
|
~தேகம்
|
உடல்
|
தேயம்
|
தை (=சேர், பொருத்து) >>> தையம்
>>> தேயம் >>> தேகம் = சேர்த்து உருவாக்கப்பட்டது. ஒ.நோ: யா
>>> யாக்கை.
|
~தேதி
|
நாள்
|
தேதி
|
திகை (=துணி) >>> திகதி >>>
தேதி = துணியப்படுவது
|
~தேயம்
|
செல்வம்
|
தேயம்
|
தேய் (=கழி, அழி) >>> தேயம் =
கழியக்கூடியது. ஒ.நோ: செல் >>> செல்வம்
|
~தேவன்
|
கடவுள்
|
தேவன்
|
தெய்வம் (=கடவுள்) >>> தேவன்
|
~தைரியம்
|
துணிவு
|
தகரியம்
|
தகர் (=அடித்து நொறுக்கு) >>> தகரியம்
= அடித்து நொறுக்கும் வலிமை.
|
~தைலம்
|
பூசும் எண்ணை
|
தைலம்
|
தேய் (=பூசு) >>> தேய்லம் >>>
தைலம் = பூசப்படுவது
|
~தோச~ம்
|
குற்றம், கோணல், குறைபாடு
|
தோசம்
|
தொழு (=வளை, குறுகு) >>> தோசம் =
வளைவு, குறுக்கம் = கோணல், குற்றம், குறைபாடு
|
~தோத்திரம்
|
பாட்டு
|
சோத்திரம்
|
ஓது (=பாடு) >>> ஓத்து (= பாட்டு)
>>> சோத்து >>> சோத்திரம் >>> ச்`தோத்ர >>>
தோத்திரம்
|
~நச்~டம்
|
குறைபாடு, சேதம்
|
நட்டம்
|
நள் (= வெட்டு, குறை) >>> நட்டம் =
வெட்டு, குறைபாடு
|
~நட்சத்திரம்
|
விண்மீன்
|
நகைத்திறம்
|
நகை (=ஒளி)
+ திறம் (=கூட்டம்) >>> நகைத்திறம் >>> நகத்திறம்
>>> நக்ச~த்ரம் >>>நட்சத்திரம் = ஒளிரும் கூட்டம்
|
~நதி
|
ஆறு
|
நதி
|
நந்து (=தழை) >>> நத்து
(=தழைக்கச்செய்) >>> நத்தி >>> நதி = தழைக்கச் செய்வது.
|
~நாசம்
|
அழிவு
|
நாசம்
|
நை (= அழி) >>> நாசம்
|
~நாதி
|
கூட்டம்
|
நாதி
|
ஞா (= கட்டு, சேர்) >>> ஞாதி
>>> நாதி = சேர்க்கை, கூட்டம்
|
~நாமம்
|
பெயர்
|
நாமம்
|
நாவு (=கூறு, அழை) >>> நாமம் =
அழைக்கப்படுவது
|
~நானம்
|
குளியல்
|
நானம்
|
நனை >>> நானம்
|
~நித்திரை
|
தூக்கம்
|
நித்திறை
|
நிது (=மூடு) + இறை (=இமை) >>> நித்திறை >>> நித்திரை = இமைகளை மூடச் செய்வது.
|
~நீதி
|
காக்கும் முறை
|
நீதி
|
நிழற்று (= காப்பாற்று) >>> நிழத்து
>>> நியத்து >>> நியதி >>> நீதி = காப்பாற்றும்
முறை.
|
~பங்கம்
|
கூறு
|
பங்கம்
|
பகு (= கூறுசெய்) >>> பக்கம்
>>> பங்கம்
|
~பந்தம்
|
பற்று, உறவு,
|
பந்தம்
|
பற்று >>> பற்றம் >>> பத்தம்
>>> பந்தம்.
|
~பயணம்
|
செலவு
|
பயணம்
|
பாய் (=ஒழுகு, செல்) >>> பாயணம்
>>> பயணம்
|
~பயம்
|
அச்சம்
|
பயம்
|
பேஎம் ( = அச்சம்) >>> பேயம்
>>> பயம்
|
~பாகம்
|
கூறு
|
பாகம்
|
பகு (= கூறுசெய்) >>> பாகம்
|
~பாசம்
|
விருப்பம், அன்பு
|
பாசம்
|
பாயம் (=விருப்பம்) >>> பாசம்
|
~பாசனம்
|
நீர் பாய்ச்சுதல்
|
பாசனம்
|
பாய் >>> பாய்ச்சு >>> பாசனம்
|
~பாத்திரம்
|
கலம்
|
பாத்திரம்
|
பத்தர் (=உண்கலம்) >>> பாத்திரம்
|
~பாவம்
|
கருமை, குற்றம்
|
பாவம்
|
பாம்பு (=கார்மேகம்) >>>பாப்பு
>>> பாபம் >>>பாவம் =கருமை
|
~பிரம்மை
|
கலக்கம், மயக்கம்
|
பிறம்மை
|
பிறழ் (=கலங்கு) >>> பிறழ்மை
>>> பிறம்மை >>> பிரம்மை
|
~பிரயாணம்
|
செலவு
|
பயணம்
|
பாய் (=ஒழுகு, செல்) >>> பாயணம்
>>> ப்ரயாணம்
|
~பிராந்தம்
|
கலக்கம், மயக்கம்
|
பிறாந்தம்
|
பிறழ் (=கலங்கு) >>> பிறழ்த்தம்
>>> பிறாத்தம் >>> பிறாந்தம்
|
~பிராந்தி
|
மயக்கம், மது
|
பிறாந்தி
|
பிறழ் (=கலங்கு) >>> பிறழ்த்தி
>>> பிறாத்தி >>> பிறாந்தி >>> பிராந்தி = மயக்கம்
தருவது.
|
~பிரியம்
|
அன்பு
|
பிரியம்
|
வீரை (= தாய்) >>> பிரியம் = தாய்
குழந்தையிடம் கொள்வது
|
~பிருத்வி
|
பூமி
|
பருதி
|
பருதி >>> ப்ருத்வி >>>
பிருத்வி
|
~மத்திமம்
|
இடைப்பட்டது
|
மத்திமம்
|
பாதி (=நடு) >>> பாதிமம் >>>
மாதிமம் >>> மத்திமம்
|
~மத்தியம்
|
நடுப்பகுதி
|
மத்தியம்
|
பாதி (=நடு) >>> பாதியம் >>
மாதியம் >>> மத்தியம்
|
~மரணம்
|
சாவு
|
மரணம்
|
மறம் (=கொலை) >>> மறன் >>>
மரணம்
|
~மரியாதை
|
பழகிய காரணம்
|
மருவாதி
|
மருவு (=பழகு) + ஆதி (=காரணம்) = மருவாதி
>>> மரியாதை = பழகிய காரணம்
|
~முத்திரை
|
அடையாளம்
|
முத்திரை
|
முத்து (=பதி) >>> முத்திரை =
பதிக்கப்படுவது
|
~மூஞ்சூறு
|
எலிவகை
|
மூஞ்சூறு
|
முகம் + சூறு (=தோண்டு) >>> முகஞ்சூறு
>>> மூஞ்சூறு = முகத்தால் தோண்டும் சிறிய எலி.
|
~மூத்திரம்
|
சிறுநீர்
|
மூத்திரம்
|
முந்நீர் (=கடல்) >>> முந்நீரம்
>>> முந்திரம் >>> மூத்திரம் = கடல்நீரைப் போல உப்புடைய நீர்.
|
~மையம்
|
கூடுமிடம்
|
மையம்
|
மொய் (=கூடு, குவி)>>> மொய்யம்
>>>மையம் = கூடுமிடம்
|
~மோசம்
|
கேடு
|
மோசம்
|
மூசு (= கெடு) >>> மூசம் >>>
மோசம் = கேடு
|
~யவனம்
|
அழகு, இளமை
|
யவனம்
|
அவ்வை (=அழகு) >>> யவ்வை >>>
யவ்வனம் >>> யவனம்
|
~யாகம்
|
எரி வளர்த்தல்
|
யாகம்
|
அகை (=எரி) >>> ஆகம் >>>
யாகம் = எரி வளர்த்தல்
|
~யாசகம்
|
வேட்கை
|
யாசகம்
|
ஆசை (=வேட்கை) >>> யாசி (=வேண்டு)
>>> யாசகம்
|
~யுவதி
|
இளைஞி
|
யுவதி
|
அவ்வை (=அழகு) >>> யவ்வை >>>
யவ்வதை >>> யுவதி = இளமை அழகுடைய பெண்
|
~யுவன்
|
இளைஞன்
|
யுவன்
|
அவ்வை (=அழகு) >>> யவ்வை >>>
யவ்வன் >>> யுவன் = இளமை அழகுடைய ஆண்
|
~யூகம்
|
கருத்து
|
யூகம்
|
ஊக்கம் (=எண்ணம்) >>> யூக்கம்
>>> யூகம்
|
~யோக்கியம்
|
ஒழுக்கம்
|
யோக்கியம்
|
ஒழுக்கு >>> ஒழுக்கியம் >>>
ஓய்க்கியம் >>> யோக்கியம்
|
~யோகம்
|
ஊழ்கம்
|
யோகம்
|
ஊழ்கு (=ஆழ்ந்து சிந்தி) >>>ஊழ்கம்
>>>யூழ்கம் >>> யோகம்
|
~ரட்சை
|
கருணை
|
இரக்கம்
|
இரக்கம் >>> ரக்சா~ >>> ரட்சை
|
~ரத்தம்
|
குருதி
|
இரத்தம்
|
இறுத்து (=கொல், வடியச்செய்) >>>
இறுத்தம் >>> இரத்தம் = கொல்லும்போது வடிவது.
|
~ரத்தினம்
|
பட்டை தீட்டிய மணி
|
அரத்தினம்
|
அரம் + தினம் = அரந்தினம் >>>
அரத்தினம் >>> ரத்தினம் = அரத்தால் தின்னப்பட்டது = பட்டை தீட்டியது.
|
~ராசி
|
வீடு
|
இறஞ்சி
|
இறைஞ்சு (= தாழ், வீழ்) >>> இறஞ்சி
>>> றாசி >>> ராசி = தாழும் / வீழும் இடம் = வீடு
|
~ராட்டினம்
|
சுழல்வது
|
உருட்டினம்
|
உருள் >>> உருட்டு >>>
உருட்டினம் >>> ராட்டினம்
|
~ராட்டை
|
சுழல்வது
|
உருட்டை
|
உருள் >>> உருட்டு >>>
உருட்டை >>> ராட்டை
|
~ரிசி~
|
மாமுனிவர்
|
எரிசி
|
எரி (= தீ) >>> எரிச்சு (=தீ வளர்) >>> எரிச்சி >>> எரிசி >>> ரிசி~ = தீ வளர்க்கும் முனிவர்
|
~ருசி
|
இனிமை
|
இறுசி
|
இறைச்சி (=இனிமை) >>> இறுசி
>>> ருசி
|
~ரூபம்
|
உருவம்
|
உருவம்
|
உருவம் >>> ரூபம்
|
~ரேகை
|
ஓடும் வரி
|
இரிகை
|
இரி (=ஓடு, செல்) >>> இரிகை
>>> ரேகை = ஓடுவது
|
~ரோகம்
|
நோய்
|
உறுகண்
|
உறுகண் >>> றோகம் >>> ரோகம்
|
~லக்கினம்
|
தோன்றும் பிரிவு
|
இலக்கினம்
|
இலங்கு (=தோன்று) + இனம் (=பிரிவு) = இலங்கினம்
(= தோன்றும் பிரிவு) >>> இலக்கினம் >>> லக்கினம்
|
~லாபம்
|
செலவுபோக உரித்தாவது
|
உளப்பம்
|
உளப்படு (=உரியதாகு) >>> உளப்பம்
>>> லாபம் = செலவு போக தனக்கு உரியதாக அமைவது.
|
~லிங்கம்
|
சிவ வடிவம்
|
இலிங்கம்
|
இலிர் (=முளை) >>> இலிங்கு (=முளைத்து
ஓங்கு) >>> இலிங்கம் = முளைத்து ஓங்குவது.
|
~லோபம்
|
கஞ்சத்தனம்
|
உலவம்
|
உலவு (=கூசு)>>>உலவம் >>>லோபம்
= கொடுக்கக் கூசுதல்
|
~வசி
|
இரு, வாழ்
|
வசி
|
வை (= இரு) >>> வசி
|
~வாசம்
|
மணம்
|
வாசம்
|
பாய் (= பரவு) >>> பாசு >>>
வாசம் = பரவக்கூடியது
|
~விசம்
|
நஞ்சு
|
விசம்
|
வீழ் (=சாகு) >>> வீயு (=சாகடி)
>>> விசம் = சாகடிப்பது..
|
~விசயம்
|
விருப்பம்
|
விசயம்
|
விழை (=விரும்பு) >>> விழையம்
>>> விசயம்
|
~விசாலம்
|
அகலம்
|
விசாலம்
|
வியல் (=அகன்ற) >>> வியலம்
>>> விசாலம்
|
~விடயம்
|
பேச்சு, செய்தி
|
விடயம்
|
விடு (=சொல்) >>> விடயம் =
சொல்லப்படுவது
|
~வியாபாரம்
|
கூவி விற்றல்
|
யாவாரம்
|
யா (=சொல், கூவு) + வார் (=கொடு) >>>
யாவார் (= கூவிக் கொடு) >>> யாவாரம் >>> வ்யாபார்
>>> வியாபாரம்
|
~வியாபாரி
|
கூவி விற்பவர்
|
யாவாரி
|
யாவாரம் >>> யாவாரி
|
~விரயம்
|
செலவு
|
விரயம்
|
விரை (=செல்) >>> விரையம் >>>
விரயம்
|
~விவசாயம்
|
வேளாண்மை
|
பைஞ்சாயம்
|
பைஞ்சாய் (=பசும்பயிர்) >>> பைஞ்சாயம்
>>> வைஞ்சாயம் >>> வேசாயம் >>> விவசாயம்
|
~விவசாயி
|
வேளாண் மக்கள்
|
பைஞ்சாயி
|
பைஞ்சாயம் >>> பைஞ்சாயி
|
~வேசம்
|
மறைப்பு
|
வேசம்
|
வேய் (= அணி, மறை) >>> வேசம் = அணிந்து
மறைத்தல்
|
~வேதம்
|
மறைபொருள்
|
வேதம்
|
வேய் (= மறை) >>> வேய்தம்
>>>வேதம் = மறைக்கப்பட்டது
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.