சொல்
|
பொருள்
|
தமிழ்ச்
சொல்
|
தமிழ் மூலச்சொல்லும்
தோன்றும்
முறையும்
|
~நக்கம்
|
அம்மணம்
|
நக்கம்
|
நகு (=அவிழ்) >>> நக்கம் = ஆடை அவிழ்ந்த
நிலை
|
~நக்கரம், ~நக்கிரம்
|
முதலை
|
நக்கரம், நக்கிரம்
|
நகு (=சிரி) + ஆர (=போல) = நகார >>>
நக்கரம், நக்கிரம் = சிரிப்பதைப் போன்ற பல் அமைப்புடையது.
|
~நகம்
|
உகிர்
|
நகம்
|
நாங்கு (=முன்நோக்கி நீளு) >>> நாக்கு
>>> நாக்கம் >>> நகம் = முன் நோக்கி நீண்டு வளர்வது
|
~நகாசு
|
நகையலங்காரம்
|
நகாசு
|
நகை + ஆசு (=நுட்பம்) = நகாசு = நகையில் செய்யப்படும்
நுட்பமான வேலைப்பாடுகள்
|
~நகுடம்
|
மூக்கு
|
நகுடம்
|
நாங்கு (= முன் நோக்கி நீளு) >>> நாங்குடம்
>>> நகுடம் = முன்னோக்கி நீண்ட உறுப்பு
|
~நகுலம்
|
கீரி
|
நாகுலம், நகுலம்
|
நாகம் (=பாம்பு) + உலம் (=அழிவு) = நாகுலம்
>>> நகுலம் = பாம்பிற்கு அழிவை உண்டாக்கும் விலங்கு
|
~நகுலி
|
பட்டுப்பருத்தி
|
நகுலி
|
நகல் (=ஒளி, வெண்மை) >>> நகலி
>>> நகுலி = வெண்ணிற பஞ்சினைக் கொண்டது
|
~நங்கூரம்
|
கூரிய இரும்பு
|
நங்கூரம்
|
ஞாங்கர் (=வேல்) >>> ஞாங்கரம்
>>> நங்கூரம் = வேல்போல கூரிய இரும்பு.
|
~நச^ர்
|
பரிசுப்பணம்
|
நசர்
|
நய (=பாராட்டு) >>> நயர்
>>> நசர் = பாராட்டிக் கொடுப்பது
|
~நச்~டை
|
கேடு
|
நச்சை
|
நசி (=கெடு) >>> நச்சை >>>
நச்~டை = கேடு, தீங்கு
|
~நடனம்
|
நாட்டியம்
|
நடனம்
|
நாட்டு (=நிலை) >>> நாட்டனம்
>>> நடனம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை
|
~நத்தகம்
|
கந்தல்
|
நத்தகம்
|
நைந்தகம் >>> நத்தகம் = நைந்து போன ஆடை
|
~நதனு
|
மேகம், சிங்கம்
|
நதனு
|
நாதம் (=ஒலி) >>> நாதனு
>>> நதனு = ஒலி மிக்கது
|
~நதீனம்
|
கடல்
|
நதீனம்
|
நதி + இணையம் = நதீணயம் >>> நதீனம்
|
~நந்தன்
|
மகன்
|
நந்தன்
|
நந்து (=தளிர்) >>> நந்தன் = தளிர் போன்றவன்
|
~நந்தனம்
|
சோலை
|
நந்தனம்
|
நந்து (=செழி, வளர்) >>> நந்தனம் = மரம்,செடி,கொடிகள்
செழித்து வளர்ந்திருப்பது = சோலை.
|
~நந்தனை
|
மகள்
|
நந்தனை
|
நந்து (=தளிர்) >>> நந்தனை = தளிர் போன்றவள்
|
~நந்தி
|
காளைமாடு
|
நந்தி
|
நத்து (=வளம் பெருக்கு) >>> நத்தி
>>> நந்தி = வளம் பெருக்க உதவுவது.
|
~நந்தி
|
முரசு
|
நந்தி
|
நாதம் (=ஒலி) >>> நாத்தி
>>> நந்தி = ஒலி எழுப்புவது
|
~நந்தினி
|
பசுமாடு
|
நந்தினி
|
நத்து (=வளம் பெருக்கு) >>> நத்தினி
>>> நந்தினி = வளம் பெருக்குவது.
|
~நபம்
|
கார்மேகம்
|
நபம்
|
நம் (=நீர்) >>> நமம் >>> நபம்
= நீரை உடையது
|
~நபனம்
|
நீராட்டு
|
நபனம்
|
நம் (=நீர்) >>> நமனம் >>>
நபனம் = நீராட்டு
|
~நபாகம்
|
இருள், கார்மேகம்
|
நம் (=நீர்) + அகம் = நம்மகம் >>> நப்பகம்
>>> நபாகம் = நீரை உடையது = கார்மேகம் >>> இருள்
|
|
~நயம்
|
நீதி
|
நயம்
|
நை (=அடி, தண்டி) >>> நைய்யம்
>>> நயம் = தண்டிக்கும் முறை = நீதி
|
~நயனம்
|
கண்
|
நயனம்
|
நயன் (=அன்பு, காதல்) >>> நயனம் = காதலை
உண்டாக்குவதும் வளர்ப்பதுமான உறுப்பு
|
~நரகம், ~நரகு
|
தண்டிக்கும் இடம்
|
நரகம், நரகு
|
நரங்கு (=அடி, நொறுக்கு, தண்டி, அழி)
>>> நரகு, நரகம் = குற்றவாளிகளைத் தண்டித்துக் கொல்லும் இடம்.
|
~நர்த்தகன்
|
நடனமாடுவோன்
|
நர்த்தகன்
|
நர்த்தனம் (=நடனம்) >>> நர்த்தகன் =
நடனமாடும் ஆண்
|
~நர்த்தகி
|
நடனமாடுவோள்
|
நர்த்தகி
|
நர்த்தனம் (=நடனம்) >>> நர்த்தகி = நடனமாடும்
பெண்
|
~நர்த்தனம்
|
நடனம்
|
நர்த்தனம்
|
நிருத்தம் (=நடனம்) >> நிர்த்தனம்
>>> நர்த்தனம்
|
~நரந்தம், ~நராந்தம்
|
காக்கை
|
நரந்தம், நராந்தம்
|
நரற்று (=ஒலி, அழை, கூட்டு) >>> நரற்றம்
>>> நரத்தம் >>> நரந்தம், நராந்தம் = தன் இனத்தை அழைத்துக் கூட்டுவது.
|
~நரம்
|
மனிதப் பிறவி
|
நரம்
|
நலம் (=உயர்வு) >>> நரம் = ஏனை உயிர்களிலும்
உயர்ந்தது
|
~நரன்
|
மனிதன்
|
நரன்
|
நரம் (=மனிதப் பிறவி) >>> நரன்
|
~நவம்
|
நட்பு
|
நவம்
|
நவு (=சிரி) >>> நவம் = சிரித்து உறவாடுகை
|
~நவம்
|
கார்காலம்
|
நவம்
|
நம் (=நீர்) >>> நமம் >>> நவம்
= மழைக்காலம்
|
~நவியம், ~நவம், ~நவதை, ~நவீனம்
|
இளமை, புதுமை
|
நவியம், நவம், நவதை, நவீனம்
|
நவ்வி (=இளங் குட்டி) >>> நவ்வியம்
>>> நவியம், நவீனம், நவம், நவதை = இளமை, புதிதாய் இருக்கும் தன்மை = புதுமை
|
~நளினம்
|
மேகம், நீர்
|
நளினம்
|
நள் (=செறி, திரள்) + இனம் = நளினம் = திரளக்
கூடியவை = மேகம், நீர்.
|
~நளினம்
|
தாமரை
|
நளினம்
|
நளி (=குளிர்ச்சி) >>> நளினம் = குளிர்ச்சி
மிக்க மலர்
|
~நாகணவாய், ~நாகணம்
|
மைனா
|
நாகணவாய், நாகணம்
|
நகை (=ஒளி) + கண் + வாய் = நாகணவாய் = ஒளி பொருந்திய
கண்களையும் வாயினையும் கொண்ட்து
|
~நாகம்
|
பாம்பு
|
நாகம்
|
நாங்கு (=முன்னோக்கி நீள்) >>>> நாக்கு
>>> நாக்கம் >>> நாகம் = நாக்கினை அடிக்கடி முன்னோக்கி நீட்டுவது.
|
~நாகம்
|
மேகம்
|
நாகம்
|
நாகம் (=பாம்பு) >>> நாகம் = மேகம்.
பாம்பு மற்றும் மேகத்திடையிலான ஒற்றுமைகள்: ஊர்தல், சீறுதல், வெளிப்படுத்துதல் (நாக்கு,
மின்னல்). ஒ.நோ: பாம்பு, அரவு போன்ற பெயர்களும் மேகம் & நாகத்தைக் குறிப்பதே.
|
~நாகம்
|
மலை
|
நாகம்
|
நாகம் (=மேகம்) >>> நாகம் =மேகங்கள்
படியுமிடம்
|
~நாகம்
|
ஆகாயம்
|
நாகம்
|
நாகம் (=மேகம்) >>> நாகம் = மேகங்கள்
ஊருமிடம்
|
~நாகம்
|
ஓசை
|
நாகம்
|
நாகம் (=மேகம்) >>> நாகம் = மேகங்கள்
எழுப்பும் ஓசை
|
~நாகம்
|
குரங்கு
|
நாகம்
|
நகு (=சிரி) >>> நாகம் = மனிதரைப் போலச்
சிரிப்பது
|
~நாகல், ~நாகை
|
நாவல் பழம்
|
நாகல், நாகை
|
நாகு (=இளமை, திரட்சி) >>> நாகல், நாகை
= திரண்டு பளபளக்கும் செழிப்பான பழம். பி.கு: நாகைப் பழங்கள் நிறைந்த ஊரே நாகப்பட்டினம்
ஆயிற்று.
|
~நாகினி
|
வெற்றிலை
|
நாகினி
|
நாகு (=இளமை, திரட்சி) >>> நாகினி =
திரண்டு பளபளக்கும் செழிப்பான இலை.
|
~நாச்`தி
|
அழிவு, இன்மை
|
நாத்தி
|
நந்து (=அழி, கெடு) >>> நத்து
>>> நாத்தி = அழிவு, இன்மை
|
~நாசி
|
மூக்கு
|
நாசி
|
நாழி (=துளை) >>> நாயி >>>
நாசி = துளையுடையது
|
~நாசினி
|
கொல்வது
|
நாசினி
|
நசி (=கொல், அழி) >>> நாசினி = கொல்வது
|
~நாடகம்
|
நடனம்
|
நாடகம்
|
நாட்டு (=நிலை) >>> நாட்டகம்
>>> நாடகம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை.
|
~நாட்டியம்
|
நடனம்
|
நாட்டியம்
|
நாட்டு (=நிலை) >> நாட்டியம் = பல்வேறு
நிலைகளைக் காட்டும் கலை.
|
~நாடா
|
கயிறு
|
நாடா
|
நாட்டு (=பிணி, கட்டு) >>> நாடா = கட்ட
உதவுவது
|
~நாடி
|
குருதிக் குழாய்
|
நாடி
|
நடி (=ஆடு, துடி) >>> நாடி = துடிப்பது
|
~நாணயம்
|
துளைக்காசு
|
நாணயம்
|
நாண் (=கயிறு) + ஏய் (=பொருத்து) + அம்
>>> நாணேயம் >>> நாணயம் = கயிற்றில் பொருத்தப்பட்ட துளைக்காசு.
|
~நாதசுரம்
|
துளைக்கருவி
|
நாதசுரம்
|
நாதம் (=ஒலி) + சுரம் (=நெடுந்துளை) = நாதசுரம்
= ஒலியை எழுப்பும் நீண்ட துளையைக் கொண்ட இசைக்கருவி
|
~நாத்திகம்
|
கடவுள் மறுப்பு
|
நாத்திகம்
|
நாத்தி (=இன்மை) >>> நாத்திகம் = கடவுள்
இன்மை வாதம்
|
~நாதம்
|
சங்கொலி, ஒலி
|
நாதம்
|
நத்து (=சங்கு) >>> நத்தம்
>>> நாதம் = சங்கின் ஒலி, ஒலி
|
~நாதம்
|
விந்து
|
நாதம்
|
நத்து (=தழைக்கச்செய்) >>> நத்தம்
>>> நாதம் = இனத்தைத் தழைக்கச் செய்வது
|
~நாதன்
|
கணவன்
|
நாதன்
|
நத்து (=தழைக்கச்செய்) >>> நத்தன்
>>> நாதன் = இனத்தைத் தழைக்கச் செய்பவன்.
|
~நாதி
|
பெருங்காயம்
|
நாதி
|
நாறு (=மண) >>> நாறி >>> நாதி
= மணம் வீசுவது
|
~நாந்தல்
|
மப்புமந்தாரம்
|
நாந்தல்
|
நது (=மறை) >>> நந்து >>> நந்தல்
>>> நாந்தல் = மேகங்கள் கூடி மறைத்தல்.
|
~நாந்தி
|
முன்னுரை
|
நாந்தி
|
நந்து (=தோன்று) >>> நாந்தி = தோற்ற
உரை
|
~நாந்தி
|
முதுகு
|
நாந்தி
|
நது (=மறை) >>> நந்து >>> நாந்தி
= மறைப்புப் பகுதி
|
~நாபி
|
தொப்புள்
|
நாபி
|
நாப்பம் (=நடு) >>> நாப்பி
>>> நாபி = நடுவில் இருப்பது
|
~நாபிரம்
|
விந்து
|
நாபிரம்
|
நம் (=நீர்) >>> நமிரம்
>>> நாபிரம் = நீர் போன்றது
|
~நாமம்
|
நெற்றிக்கோடு
|
நாமம்
|
நாப்பம் (=நடு) >>> நாமம் = நெற்றி நடுவிலிடும்
கோடு
|
~நாமம்
|
பெயர்
|
நாமம்
|
நாவு (=அழை) >>> நாவம் >>>
நாமம் = அழைக்கப்படுவது
|
~நாமம்
|
போற்றி, பாட்டு
|
நாமம்
|
நாவு (=பாடு) >>> நாவம்
>>> நாமம் = பாட்டு, போற்றி
|
~நாமம்
|
தராசு முள்
|
நாமம்
|
நாப்பம் (=நடு) >>> நாமம் = தராசின்
நடுமுள்
|
~நாயகம்
|
மேம்பாடு, தலைமை
|
நாயகம்
|
நயம் (=மேம்பாடு) + அகம் = நயகம்
>>> நாயகம் = மேம்பாட்டினை உடைமை = தலைமை
|
~நாயகன், ~நாயன்
|
தலைவன்
|
நாயகன், நாயன்
|
நாயகம் (=தலைமை) >>> நாயகன். நயம்
(=மேம்பாடு) >>> நயன் >>> நாயன் = மேம்பாட்டினை உடையவன்
|
~நாயகி, ~நாயிகை
|
தலைவி
|
நாயகி, நாயிகை
|
நாயகம் (=தலைமை) >>> நாயகி, நாயிகை
|
~நாரதம்
|
மேகம்
|
நாரதம்
|
நரலு (=ஒலி) >>> நரறு >>> நரறம்
>>> நரதம் >>> நாரதம் = ஒலிப்பு மிக்கது
|
~நாரநிதி
|
கடல்
|
நாரநிதி
|
நாரம் (=நீர்) + நிதி = நாரநிதி = நீரெனும் செல்வம்
மிக்கது
|
~நாரம்
|
நீர்
|
நாரம்
|
நார் (=ஈரம்) >>> நாரம் = ஈரப்படுத்துவது
= நீர்
|
~நாராயணன்
|
திருமால்
|
நாராயணன்
|
நாரம் (=உயிர்கள்) + ஆயன் = நாராயன்
>>> நாராயணன் = உயிர்களை மேய்ப்பவன்.
|
~நாராயம், ~நாராசம்
|
அம்பு, எழுத்தாணி
|
நாராயம், நாராசம்
|
நார் (=நரம்பு) + ஆழ் (=மூழ்கு) + அம் = நாராழம்
>>> நாராயம் >>> நாராசம் = மூழ்கும் நரம்பு >>> அம்பு
|
~நாரி
|
இடுப்பு
|
நாரி
|
நார் (=கயிறு, கொடி) >>> நாரி = கொடிபோல
மெல்லியது
|
~நாரி, ~நாரிகை
|
பெண், தாய்
|
நாரி, நாரிகை
|
நார் (=அன்பு, பாசம்) >>> நாரி, நாரிகை
= அன்புடையவள்.
|
~நாரிகேளம்
|
தேங்காய்
|
நாரிகோளம்
|
நார் + இ + கோளம் = நாரிகோளம் >>> நாரிகேளம்
= நாரினை உடைய கோளவடிவப் பொருள்
|
~நாலி
|
முத்து
|
நாலி
|
நல் (=வெண்மை) >>> நாலி = வெண்ணிறத்தது
|
~நாலி
|
கந்தைத்துணி
|
நாலி
|
நாலு (=தொங்கு) >>> நாலி = கிழிந்து
தொங்கும் துணி
|
~நாலிகை
|
மூங்கில்
|
நாழிகை
|
நாழி (=துளை) >>> நாழிகை
>>> நாலிகை = உள்ளே துளையுடையது.
|
~நாலிகை, ~நாளிகம்
|
தாமரை
|
நாளிகை, நாளிகம்
|
நளி (=குளிர்ச்சி) >>> நளிகை
>>> நாளிகை >>> நாளிகம், நாலிகை = குளிர்ந்த மலர்.
|
~நாழிகை
|
24 நிமிடம்
|
நாளிகை
|
நாள் + இகு (=உடை) + ஐ = நாளிகை >>>
நாழிகை = ஒரு நாளின் உடைந்த கூறு.
|
~நாளம்
|
குழாய்
|
நாழம்
|
நாழி (=துளை) >>> நாழம்
>>> நாளம் = துளையுடையது
|
~நிச^ம்
|
உறுதி, உண்மை
|
நெசம்
|
நெஞ்சு (=துணிவு, உறுதி) >>> நெச்சு
>>> நெச்சம் >>> நெசம் >>> நிச^ம்
|
~நிச்சயம்
|
உறுதி, துணிவு
|
நெச்சியம், நிச்சயம்
|
நெஞ்சு (=துணிவு, உறுதி) >>> நெஞ்சியம்
>>> நெச்சியம் >>> நிச்சயம்
|
~நிசா~
|
இருள், இரவு
|
நிசல், நிசா
|
நிழல் (=இருள்) >>> நியல்
>>> நிசல் >>> நிசா~
|
~நிதானம்
|
பொறுமை
|
நியத்தனம், நிதானம்
|
நிழல் (=குளிர்ச்சி) + தனம் = நிழற்றனம்
>>> நிழத்தனம் >>> நியத்தனம் >>> நிதானம் = குளிர்ந்த
தன்மை, பொறுமை
|
~நிருத்தம்
|
நிலை, நடனம்
|
நிருத்தம்
|
நில் >>> நிறுத்து >>> நிறுத்தம்
(=நிலை) >>> நிருத்தம் = பல்வேறு நிலைகளைக் காட்டும் கலை. ஒ.நோ: நாட்டு
(=நிலை) >>> நாட்டியம்
|
~நீச்சம், ~நீசம்
|
பள்ளம், இழிவு, தாழ்வு
|
நீச்சம், நீசம்
|
நீச்சு (=கழுவு, குளிப்பாட்டு) >>> நீச்சம்,
நீசம் = கழுவும் / குளிப்பாட்டும் பள்ளம் >>> இழிவு, தாழ்வு.
|
~நீமம்
|
ஒளி
|
நீமம்
|
நீள் >>> நீள்மம் >>> நீமம்
= மிகமிக நீளமானது = ஒளி
|
~பிராணம்
|
மூச்சு
|
பீரணம், பிராணம்
|
பீர் (=வெளியேறு) + அணை (=வந்தடை) = பீரணை
>>> பீரணம் >>> பிராணம் = வெளியேறி வந்தடைவது
|
~பீரங்கி
|
குண்டைப் பாய்ச்சும் கருவி
|
பீரங்கி
|
பீர் (=விரைந்து வெளிப்படு) + அங்கி (=தீ) = பீரங்கி
= குண்டினை விரைந்து பாய்ச்சும்போது தீயை உண்டாக்கும் கருவி
|
~புச்~பம்
|
மலர்
|
புய்ப்பம்
|
புய் (=பறி) >>> புய்ப்பம்
>>> புச்~பம் = பறிக்கப்படுபவை
|
~பூர்ணிமா
|
முழுநிலா
|
பூர்நிமா
|
பூரி (=நிறை) + நீமம் (=ஒளி) = பூரிநீமம்
>>> பூர்நிமா >>> பூர்ணிமா = நிறைவான ஒளி தருவது
|
~பொக்கிசம்
|
செல்வம்
|
பொக்கிசம்
|
பொங்கு (=செல்வச் செழிப்பு) >>> பொங்கியம்
>>> பொங்கிசம் >>> பொக்கிசம் = செல்வம்
|
~பொம்மை
|
பொய் வடிவம்
|
பொம்மை
|
பொய்ம்மை >>> பொம்மை = பொய்யான வடிவம்
|
~பௌர்ணமி
|
முழுநிலா
|
பூர்நிமா
|
பூர்ணிமா >>> பௌர்ணமை, பௌர்ணமி
|
~மலம்
|
கெட்ட கழிவு
|
மளம்
|
மாள் (=கழி) >>> மாளம் >>>
மளம் >>> மலம் = கழிக்கப்பட வேண்டிய கெட்ட பொருள்
|
~யாதனை
|
துன்பம்
|
யாதனை
|
ஏதம் (=துன்பம்) >>> யேதம்
>>> யாதம் >>> யாதனை
|
~யோசனை
|
சிந்தனை
|
ஓசனை, யோசனை
|
ஓர் (=சிந்தி) >>> ஓர்ச்சி
>>> ஓர்ச்சனை >>> ஓசனை >>> யோசனை = சிந்தனை, கருத்து
|
~யோசனை
|
தூரம்
|
யோசனை
|
ஓச்சு (=செலுத்து) >>> ஓச்சனை
>>> ஓசனை >>> யோசனை = செலுத்தப்படும் தூரம்
|
~விச்`வாசம்
|
விருப்பமும் இணக்கமும்
|
வீழ்வசம், விசுவாசம்
|
வீழ் (=விரும்பு) + வசம் (=இணக்கம்) = வீழ்வசம்
>>> விச்`வாசம் = விருப்பத்துடன் கூடிய இணக்கம்
|
~வியாதி
|
நோய்
|
யாதி
|
அவதி (=நோய்) >>> யவதி >>>
யாதி >>> வியாதி
|
~வீதி
|
வழி, தெரு
|
வீதி
|
வீறு (=பிரி, வகு) >>> வீறி
>>> வீதி = வகுக்கப்பட்டது
|
புதன், 19 பிப்ரவரி, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 7
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)