ஞாயிறு, 24 ஜனவரி, 2021

61 - (விவா -> வேசை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

விவா

பெருமை

மீப்பு

மீப்பு (=மேன்மை, பெருமை) + ஆ = மீப்பா >>> விவா

விவா

இரவு

மைபா

மை (=இருள், கருமை) + பா (=பரப்பு) = மைபா >>> மிவா >>> விவா = இருள் / கருமை பரந்து இருப்பது = இரவு.

விவாகம்

திருமணம்

பூவாக்கம்

பூவை (=பெண்) + ஆக்கம் (=மங்கலகரம், ஆசி, செயல், பொன், ஈட்டம்) = பூவாக்கம் >> பிவாகம் >>> விவாகம் = பெண்ணுக்கு ஆசியுடன் பொன்தாலி ஈட்டும் மங்கலகரமான செயல்.

விவிதம்

பலவிதம்

மீவிதம்

மீ (=மிகுதி) + விதம் = மீவிதம் >>> விவிதம் = மிகுதியான விதம்

விவேசனம்

பகுத்தறிவு, கூரிய அறிவு

வைவேயணம்

வை (=கூர்மை) + வேய் (=அறி) + அணம் = வைவேயணம் >>> விவேசனம் = கூரிய அறிவு.

விளம்பம், விளம்பனம், விளம்பிதம்

தாமதம்

விலம்மம், விளம்பம்

(1). வில் (=வளை, முடங்கு) + அமை + அம் = விலம்மம் >>> விளம்பம் = முடங்கி அமைதல் = சோர்தல், தாமதித்தல். (2) விளம்பு (=பரப்பு, நீட்டு) + அம் = விளம்பம் = நீட்டம் = தாமதம்.

விளம்பி

தாமதி

விளம்பி

விளம்பம் (=தாமதம்) >>> விளம்பி = தாமதி

விற்பத்தி

மிக்க கல்வி அறிவு

பயிற்பதி

பயிற்பு (=கல்வி) + அதி (=மிகுதி) = பயிற்பதி >>> பைற்பத்தி >>> பிற்பத்தி >> விற்பத்தி = மிக்க கல்வி அறிவு.

விற்பத்தி

பிறக்கும் ஒழுங்கு முறை

பிறபந்தி

பிற (=தோன்று) + பந்தி (=ஒழுங்கு, முறை) = பிறபந்தி >>> விற்பத்தி = தோன்றுகின்ற ஒழுங்கு முறை.

விற்பன்னம், விற்பனம்

மிக்க கல்வி அறிவு

பயிற்பானம்

பயிற்பு (=கல்வி) + ஆன் (=மிகு) + அம் = பயிற்பானம் >>> பைற்பானம் >>> பிற்பன்னம் >>> விற்பன்னம் = கல்வி மிகுதி. 

விற்பன்னம்

அதிசயம், புதுமை

விறப்பு

விறப்பு (=அதிசயம், புதுமை) + அணம் = விறப்பணம் >>> விற்பன்னம்

விற்பன்னம்

சொற்பொழிவு

விறபணம்

விற (=மிகு) + பணி (=சொல்) + அம் = விறபணம் >>> விற்பன்னம் = மிகுதியாகச் சொல்லுதல்.

பிரசித்தி, பிரசித்தம்

புகழ்

புரயிற்றம்

(2) புரை (=பெருமை) + இறை (=சிந்து, பரவு) + அம் = புரயிற்றம் >>> பிரசித்தம் = பரவலான பெருமை..

கடகம்

வளையம், காப்பு, வட்டம்

கட்டகம், கன்றகம்

(1). கட்டு (=தழுவு, வளைத்துப் பிடி) + அகம் (=பொருள்) = கட்டகம் >>> கடகம் = வளைத்துப் பிடிக்கும் பொருள். (2) கன்று (=வளையம்) + அகம் (=பொருள்) = கன்றகம் >>> கண்டகம் >>> கடகம் = வளையப் பொருள்.

விற்று

கல்வி, அறிவு

வீறு

வீறு (=அறிவு) >>> விற்று

வின்னம், பின்னம்

கேடு, சிதைவு

வீண்

(2). வீண் (=கேடு, சிதைவு) + அம் = விண்ணம் >>> வின்னம் >>> பின்னம்

வின்னம், பின்னம்

புண், காயம்

புண்

(2). புண் + அம் = புண்ணம் >>> பின்னம் >>> வின்னம்

வின்னம், பின்னம்

வெறுப்பு, பிரிவு,, வேறுபாடு

முன்னம்

(2). முனி (=வெறு, வேறுபடு, நீக்கு) + அம் = முன்னம் >>> மின்னம் >>> வின்னம் >>> பின்னம் = வேறுபாடு, வெறுப்பு, நீக்கம், பிரிவு.

வின்னியாசம், விந்நியாசம்

அம்பு விடுதல்

வின்னீயசம்

வில் + நீ (=நீக்கு) + அசை (=கட்டு, பொருத்து) + அம் = வின்னீயசம் >>> வின்னியாசம் = வில்லில் பொருத்தி நீக்குதல் = அம்பு விடுதல்.

வினயம், விநயம், வினையம்

மரியாதை, அடக்கம்

வினயம்

(2). வில் (=வளைவு, பணிவு) + நயம் (=ஒழுக்கம், பண்பாடு) = வினயம் = பணிவான ஒழுக்கம் = மரியாதை, அடக்கம், ஒடுக்கம்

வினாசம், விநாசம்

பொருள் சிதைவு

வீணாயம்

(2). வீண் (=கேடு, சிதைவு) + ஆயம் (=பொருள்) = வீணாயம் >>> வினாசம் >>> பொருள் கெடுதல் / சிதைதல்.

சங்கராந்தி

பொங்கல் பண்டிகை

சக்கராற்றி

சக்கை (=கரும்பு) + அரி (=நெல், அறுவடைசெய்) + ஆற்று (=கூட்டு, உணவளி, நடத்து) + இ = சக்கராற்றி >>> சங்கராந்தி = அறுவடைசெய்த கரும்பையும் நெல்லையும் கூட்டி உணவளித்து நடத்தப்படுவது.

வினீதன்

தண்டிக்கப் பட்டவன்

தண்டிக்கப்பட்டவன்

விநீதன் (=தண்டிக்கப்பட்டவன்) >>> வினீதன்

சாயம், சாயா

தேநீர்

சாயம்

சாய் (=இலை, இறக்கு, வடிகட்டு) + அம் (=நீர்) = சாயம் = இலையில் இருந்து வடிகட்டிய நீர்.

கசாயம்

மருந்தைக் காய்ச்சிய நீர்

காய்ச்சாயம்

காய் + சாய் (=இறக்கு, வடிகட்டு) + அம் (=மருந்து, நீர்) = காய்ச்சாயம் >>> கசாயம் = மருந்துகளைக் காய்ச்சி வடிகட்டிய நீர்.

வினோதம்

விருப்பம்

வினொற்றம்

வினை (=கருத்து, எண்ணம்) + ஒற்று (=பற்று) + அம் = வினொற்றம் >>> வினோதம் = பற்றுதலான எண்ணம்.

வினோதம், விநோதம்

இயற்கைக்கு மாறானது

வீநோறம்

வீ (=மாறு) + நோறு (=பொறு, தாங்கு, இயல்பாயிரு) + அம் = வீநோறம் >>> விநோதம் >>> வினோதம் = இயல்புக்கு மாறானது

வினோதம்

விளையாட்டு

வினொற்றம்

வினை (=தொழில், வேலை) + ஒற்று (=பற்று, விரும்பு) + அம் = வினொற்றம் >>> வினோதம் = விரும்பிச்செய்யும் வேலை

விச்சோடு

ஒவ்வாத இணை

வீச்சோடு

வீ (=மாறு) + சோடு (=இணை) = வீச்சோடு >>> விச்சோடு = மாறான இணை

விச்~ணு, விசுணு

திருமால்

மையினு

மை (=மேகம்) + இனம் (=ஒப்பு, ஆள்) + உ = மையினு >>> மிசிணு >>> விசுணு >>> விச்~ணு = மேகத்திற்கு ஒப்பானவன்.

விச~மம், விசமம்

நேர்மையின்மை, ஏமாற்றுவேலை

வீசமம்

(2). வீ (=இன்மை) + சமம் (=நேர்) = வீசமம் >>> விசமம் = நேர்மையின்மை = கரடுமுருடு, ஏமாற்றுவேலை.

விச~மம், விசமம்

ஒப்புமையின்மை, பகை

வீசமம்

வீ (=இன்மை) + சமம் (=ஒப்புமை) = வீசமம் >>> விசமம் = ஒப்புமை இன்மை = பகை.

விசயம்

ஐம்புலன், ஐம்பொறி

விழையம்

விழு (=பெறு) + ஐ (=ஐந்து) + அம் = விழையம் >>> விசயம் = பெறப்படும் ஐந்து (=ஐம்புலன்), பெறுகின்ற ஐந்து (=ஐம்பொறி)

விசயம்

தேசம்

வியயம்

வியம் (=பெருமை) + அயம் (=இடம்) = வியயம் >>> விசயம் = பெரிய இடம்

விசாதம்

பெரும் துன்பம்

பையதம்

பை (=துன்பம்) + அதி (=மிகுதி) + அம் = பையதம் >>> பிசதம் >>> விசாதம் = பெரும் துன்பம்

விசாரி

விசமுறிவு

விசறி

விசம் + அறு (=நீக்கு) + இ = விசறி >>> விசாரி = விசத்தை நீக்குவது

விசுவம், விசு~வம்

இருளும் ஒளியும் சமமான நாள்

மையுவம்

மை (=இருள்) + உவமை (=சமம்) + அம் (=ஒளி) = மையுவம் >>> மிசுவம் >>> விசுவம் = இருளும் ஒளியும் சமமான நிலை.

வீ

பறவை

பூழ்

பூழ் (=பறவை) >>> பீ >>> வீ

வீகம்

பூட்டு, மோதிரம்

வீக்கம்

வீக்கு (=கட்டு, பூட்டு, செறி) + அம் = வீக்கம் >>> வீகம் = பூட்டுவது (=பூட்டு), செறிக்கப்படுவது (=மோதிரம்)

வீகம்

புயல் காற்று

வீக்கம்

வீக்கு (=அடி, தாக்கு, வீசு, அழி, விரை) + அம் = வீக்கம் >>> வீகம் = விரைவாக வீசித் தாக்கி அழிக்க வல்லது = புயல் காற்று

வீகம்

பறவை

வீக்கம்

வீக்கு (=விரைந்துசெல்) + அம் = வீக்கம் >>> வீகம் = விரைந்துசெல்வது

வீகாசம்

ஆடம்பரம்

வீக்காயம்

வீக்கம் (=செருக்கு) + ஆய் (=கொண்டாடு) + அம் = வீக்காயம் >>> வீகாசம் = செருக்குடன் கொண்டாடுதல்.

வீகாசம்

உடலால் தனித்திருத்தல்

வீகாயம்

வீ (=நீங்கு, தனிப்படு) + காயம் (=உடல்) = வீகாயம் >>> வீகாசம் = உடலால் தனித்திருத்தல்.

வீசம்

விதை, முளை, மூலம்

வீழம்

(2) வீழ் (=விழு, தங்கு, வெளித்தோன்று, முளை) + அம் = வீழம் >>> வீசம் = விழுந்து தங்கி முளைப்பது = விதை, மூலம், முளை

வீசம்

மூளை

மீசம்

மிசை (=தலை) + அம் (=ஒளி, வெண்மை) = மீசம் >>> வீசம் = தலைக்குள் வெண்ணிறமாய் ஒளிர்வது.

வீசனம்

விசிறி

வீசாணம்

வீசு (=வளை) + ஆணம் (=உதவி, பொருள்) = வீசாணம் >>> வீசனம் = வீச உதவும் வளைவான பொருள்.

வீசி

அலை

வீசி

வீசு (=வளை, அசை) + இ = வீசி = வளைந்து வளைந்து அசைவது.

வீசி

அற்பம்

பூழி

பூழி (=பொடி, அற்பம்) >>> பீசி >>> வீசி

வீசி

சுகம், நன்னிலை

வீச்சு

வீச்சு (=நன்னிலை) + இ = வீச்சி >>> வீசி

வீசிமாலி

கடல்

வீசிவாளி

வீசி (=அலை) + வாள் (=நீர்) + இ = வீசிவாளி >>> வீசிமாலி = நீரலைகளைக் கொண்டது = கடல்.

வீட்சணம், வீட்சணை, வீட்சிதம்

கண் பார்வை

வீழணம், வீழிதம்

விழி (=கண், பார்) + அணம் / இதம் = வீழணம் / வீழிதம் >>> வீச்சணம் / வீச்சிதம் >>> வீட்சணம் / வீட்சிதம் = கண் பார்வை.

வீட்டுமம்

பயங்கரம்

வீற்றீவம்

விற (=மிகு, அஞ்சு) + ஈவு (=கொடு) + அம் = வீற்றீவம் >>> வீட்டுமம் = மிகுதியான அச்சத்தைத் தருவது.

வீட்டுமம்

பற்றின்மை

வீற்றுவம்

வீறு (=பொருள், வெறுப்பு) + அம் = வீற்றுவம் >>> வீட்டுமம் = பொருளை வெறுத்த நிலை.

வீடி, வீடிகை

தம்பூலம், வெற்றிலை

வீறி

வீறு (=இலை, காரம், மிகுதி, உணவு) + இ = வீறி >>> வீடி = காரம் மிக்க உண்ணத்தக்க இலை = வெற்றிலை.

வீணை

ஒருவகை நரம்பிசைக் கருவி

வீணை

விண் (=ஒலிக்குறிப்பு, தெறித்தல் குறிப்பு, வெளியாதல் குறிப்பு) + ஐ = வீணை = விண் விண் எனத் தெறிக்கும் ஓசையை வெளிப்படுத்துவது.

வீதம்

பங்கீடு, பங்கு

வீறம்

வீறு (=வெட்டு, பகு) + அம் = வீறம் >>> வீதம் = பகுத்தல், பகுக்கப்பட்டது

வீதம்

கைவிடப்பட்டது

வீறம்

வீறு (=நீக்கு, கைவிடு) + அம் = வீறம் >>> வீதம் = கைவிடப்பட்டது

வீதம்

அமைதி, பொறுமை

முற்றம்

முற்று (=மேற்கொள், தாங்கு, பொறு) + அம் = முற்றம் >>> மித்தம் >>> வீதம் = பொறுமை, அமைதி

வீதராகம்

பற்றின்மை, துறவு

வீறாரகம்

வீறு (=பொருள், நீக்கு) + ஆர் (=விரும்பு) + அகம் (=உள்ளம்) = வீறாரகம் >>> வீதராகம் = உள்ளத்திலிருந்து பொருட்பற்றினை நீக்குதல்.

வீதராகன்

துறவி

வீறாரகன்

வீறாரகன் (=பற்றற்றவன்) >>> வீதராகன்

வீதா

பயனின்றி

வீதல்

வீதல் (=வறுமை, வெறுமை) >>> வீதா = வெறுமனே, பயனின்றி

வீதி

பங்கிடு, ஆராய்

வீறு

வீறு (=அறு, பகு) + இ = வீறி >>> வீதி = பங்கிடு, ஆராய்

வீதி

தெரு, வழி, ஒழுங்கு, வரிசை

முறை

(2). முறை (=வழி, ஒழுங்கு, வரிசை) + இ = மூறி >>> மீதி >>> வீதி = வழி, தெரு, ஒழுங்கு, வரிசை

வீதி

அகலம்

வீறு

வீறு (=பெருமை) + இ = வீறி >>> வீதி = அகலம்.

வீதி

ஒளி

வீறு

வீறு (=ஒளி) + இ = வீறி >>> வீதி

வீதி

மேடை

வீறி

வீறு (=மிகு, உயரமாகு, இடம்) + இ = வீறி >>> வீதி = உயரமான இடம்.

வீதி, பீதி

அச்சம்

வீறி

விற (=அஞ்சு) + இ = வீறி >>> வீதி >>> பீதி = அச்சம்

வீதி

குதிரை

வீறி

வீறு (=விரை, வலிமை, விலங்கு) + இ = வீறி >>> வீதி = விரைந்து பாயக் கூடிய வலிமையான விலங்கு.

வீதிகோத்திரன்

சூரியன்

வீறீகோற்றிறன்

வீறு (=ஒளி, மிகுதி) + ஈ (=கொடு) + கோல் (=வளை, சுழல்) + திறம் (=உடல்) + அன் = வீறீகோற்றிறன் >>> வீதிகோத்திரன் = மிகுதியான ஒளியை வழங்கியவாறே சுழலும் உடலினன் = சூரியன்

வீபத்து

சந்திரன்

மைபத்து

மை (=இருள்) + பதம் (=ஒளி) + உ = மைபத்து >>> மிபத்து >>> வீபத்து = இருளில் ஒளிர்பவன்.

வீமம்

அச்சம், அஞ்சத்தக்கது

பைமம்

பை (=அஞ்சு) + மம் = பைமம் >>> பிமம் >>> வீமம் = அச்சம், அஞ்சத்தக்கது

வீமம்

பருமன்

விம்மம்

விம்மு (=பரு) + அம் = விம்மம் >>> வீமம் = பருமன்

வீயம்

விதை

வீழம்

வீழ் (=விழு, தங்கு, முளை) + அம் = வீழம் >>> வீயம் >>> வீசம் = விழுந்து தங்கி முளைப்பது.

வீர்தி

வேலி

புரிறி

புர (=பாதுகா) + இறை (=வளை, கட்டு) + இ = புரிறி >>> பிரிதி >>> வீர்தி = பாதுகாப்பிற்காக வளைத்துக் கட்டப்பட்டது = வேலி

அட்டம், அச்~டம்

எட்டு

எட்டம்

எட்டு + அம் = எட்டம் >>> அட்டம் >>> அச்~டம். ஒ.நோ: செந்தூரம் >>> சதுரம். செம்மம் >>> சமம்

வீரட்டானம்

போரிட்டு வென்ற இடம்

வீறட்டாணம்

வீறு (=வெற்றி) + அடு (=போரிடு) + ஆணம் (=இடம்) = வீறட்டாணம் >>> வீரட்டானம் = போரிட்டு வென்ற இடம்.

வீரணி

மிளகு

வீறாணி

வீறு (=காரம், மிகுதி) + ஆணம் (=உணவு) + இ = வீறாணி >>> வீரணி = காரம் மிக்க உணவு

வீரந்தரம்

மார்புக் கவசம்

வீறந்தரம்

வீறு (=மார்பு) + அந்தரம் (=மறைப்பு, ஆடை) = வீறந்தரம் >>> வீரந்தரம் = மார்பை மறைக்கும் ஆடை.

வீரம்

மேன்மை, வலிமை, துணிச்சல்

வீறம்

வீறு (=வெற்றி, செருக்கு, மேன்மை) + அம் = வீறம் >>> வீரம் = வெல்வதற்கான செருக்கு, துணிச்சல், வலிமை, மேன்மை

வீரம்

மிளகு, இஞ்சி

வீறம்

வீறு (=காரம், மிகுதி) + அம் (=உணவு) = வீறம் >>> வீரம் = காரம் மிக்க உணவுப் பொருள் = மிளகு, இஞ்சி

வீரம்

கஞ்சி

பூரம்

புரை (=பொருந்து, கல, பழமை) + அம் (=நீர், உணவு) = பூரம் >>> பீரம் >>> வீரம் = நீர் கலந்த பழைய உணவு

வீரம்

முதுகு

புறம்

புறம் (=முதுகு) >>> பிரம் >>> வீரம்

வீரம்

அத்திப்பழம்

வீறம்

விற (=சின, சிவ, செறி, திரள்) + அம் (=உணவு)  = வீறம் >>> வீரம் = செறிந்து திரண்ட சிவப்புநிற உணவு.

வீரம்

மலை

வீறம்

வீறு (=உயர், பெரிதாகு, இடம்) + அம் = வீறம் >>> வீரம் = உயரமான பெரிய இடம் = மலை.

வீரன், வீரம்

நெருப்பு

வீறம்

வீறு (=எரி) + அம் = வீறம் >>> வீரம் = எரிவது

வீரன்

கூத்தாடி

 

வீறு (=வளை, ஆடு) + அன் = வீறன் >>> வீரன் = ஆடுபவன்

வீராசனம்

போர்க்களம்

வீராயாணம்

வீரம் + ஆய் (=கொண்டாடு) + ஆணம் (=இடம்) = வீராயாணம் >>> வீராசனம் = வீரம் கொண்டாடப்படும் இடம்.

வீராணம்

பெரும்பறை

வீறாணம்

வீறு (=அடி, ஒலி, பெருமை, வட்டம்) + ஆணம் (=பொருள்) = வீறாணம் >>> வீராணம் = அடித்து ஒலிக்கப்படும் வட்டமான பெரிய பொருள்.

வீரியம்

வலிமை, துணிச்சல், பெருமை

வீறு

வீறு (=செருக்கு, பெருமை, வெற்றி) + இயம் = வீறியம் >>> வீரியம் = வீரம், பெருமை, வலிமை.

வீரியம்

விதை, விந்து

விரை

விரை (=விதை, விந்து) + இயம் = வீரியம்

வீரியம்

ஒளி

வீறு

வீறு (=ஒளி) + இயம் = வீறியம் >>> வீரியம்

வீரியம்

பறை

வீறியம்

வீறு (=அடி, ஒலி, வட்டம், பொருள்) + இயம் = வீறியம் >>> வீரியம் = அடித்து ஒலிக்கப்படும் வட்டமான பொருள்.

வீருதம்

தூறு, புதர்

வீறுந்தம்

வீறு (=நிலம், செறிவு) + உந்து (=தோன்று, வளர்) + அம் = வீறுந்தம் >>> வீருதம் = நிலத்தில் தோன்றி செறிந்து வளர்வது.

வீரை

மனைவி, தாய்

பூரை

புரி (=விரும்பு, அன்புசெய், படை) + ஐ = பூரை >>> பீரை >>> வீரை = அன்புசெய்பவளும் படைப்பவளும் ஆகியவள்.

வீரை

வாழைப் பழம்

வீறை

வீறு (=ஒளி, மிகுதி, செறிவு, கொத்து, உணவு) + ஐ = வீறை >>> வீரை = ஒளிமிக்க கொத்தான உணவுப் பொருள்.

வீவதம்

காவடித்தண்டு

மீமாறம்

மீ (=மேலே) + மாறு (=எதிர், தாங்கு, தண்டு) + அம் = மீமாறம் >>> வீவதம் = மேலே தாங்கும் தண்டு.

சித்தம்

கருத்து

இற்றம்

இறை (=கருத்து) + அம் = இற்றம் >>> சிற்றம் >>> சித்தம்

சித்தர்

இறைவனை அறிந்தவர்

இற்றர்

இறை (=கடவுள், அறிவு) + அர் = இற்றர் >>> சிற்றர் >>> சித்தர் = இறைவனை அறிந்தவர்.

பகு~, பகு

மிகுதியான

வெகு

வெகு (=மிகுதியான) >>> வகு >>> பகு~. ஒ.நோ: செந்தூரம் >>> சதுரம், செம்மம் >>> சமம், செம்பத்து >>> சம்பத்து.

வெகுரசம்

கரும்பு

வெக்கீரயம்

வெக்கை (=கதிர், புல்) + ஈர் (=இனிமை) + அயம் (=நீர்) = வெக்கீரயம் >>> வெகிரசம் >>> வெகுரசம் = இனிய நீரைக் கொண்ட கதிருடைய புல்.

வெகுரூபன்

பச்சோந்தி

வெகூருவன்

வெகு (=பல) + உருவம் (=நிறம்) + அன் = வெகூருவன் >>> வெகுரூபன் = பல நிறங்களைக் கொள்வது.

வெங்கம்

வறுமை

வெக்கம்

வேகு (=உலர், வற்று) + அம் = வெக்கம் >>> வெங்கம் = வற்றியநிலை, வறுமை.

வெச்சம்

துளை

வேய்

வேய் (=துளை) + அம் = வேயம் >>> வெச்சம்

வெஞ்சனம்

சமைத்த காய்கறி

வேயாணம்

வே (=வேகு) + ஆணம் (=உணவு, காய்கறி) = வேயாணம் >>> வெச்சாணம் >>> வெஞ்சனம் = வெந்த / சமைத்த காய்கறி

வெஞ்சனம்

மெய்யெழுத்து

பெய்யாணம்

பெய் (=எழுது) + ஆணம் (=மெய், உடல்) = பெய்யாணம் >>> வெச்சாணம் >>> வெஞ்சனம் = மெய் எழுத்து

வெட்டி

செயல்

பெற்றி

பெற்றி (=செயல்முறை) >>> வெட்டி.

வெட்டி

வீண்

வெறுமை

வெறுமை (=வீண்) + இ = வெற்றி >>> வெட்டி

வெண்டை

வெண்டைக்காய்

வீற்றை

வீறு (=ஒளி, வெண்மை, விதை) + ஐ = வீற்றை >>> வெட்டை >>> வெண்டை = வெண்ணிற விதைகளைக் கொண்டது. ஒ.நோ: விடை >>> வெடை, விதை >>> வெதை, கிண்டு >>> கெண்டு, இலி >>> எலி.

வெத்தம்

ஒளி, தெளிவு

வீறு

வீறு (=ஒளி) + அம் = வீற்றம் >>> வெத்தம் = ஒளி, தெளிவு

வெதரி

இலந்தைப் பழம்

விதாரி

விதை (=கொட்டை) + ஆர் (=பெருமை, சிவப்பு, உண்) + இ = விதாரி >>> வெதரி = பெரிய கொட்டையைக் கொண்ட செந்நிற உண்பொருள்.

வெதிர், வதிர்

செவிடு

வீறில்

(2) வீறு (=ஒலி, அறிவு) + இல் (=இன்மை) = வீறில் >>> வெதிர் >>> வதிர் = ஒலி அறிவு இன்மை = செவிட்டுத் தன்மை.

வெதிரேகம்

வேறுபாடு, எதிர்மறை

வேறிரேகம்

வேறு (=மாறுபடு) + இரு + ஏகம் (=ஒற்றுமை) = வேறிரேகம் >>> வெதிரேகம் = ஒற்றுமைக்கு மாறுபட்டு இருப்பது.

வெந்தம்

பற்று, விருப்பம்

வித்தம்

விது (=விரும்பு) + அம் = வித்தம் >>> வெந்தம் = விருப்பம்

வெந்தயம், வெந்தியம்

கசப்பான விதை

வீழ்த்தீயம்

(2) வீழ் (=விதை, இல்லாகு) + தீயம் (=இனிப்பு) = வீழ்த்தீயம் >>> வெந்தியம் >>> வெந்தயம் = இனிப்பு இல்லாத விதை.

வெந்து

சுற்றம்

பெற்று

பெறு (=அடை, சேர்) + உ = பெற்று >>> வெந்து = சேர்ந்தவர்கள்.

வெளிசம்

தூண்டில் முள்

விலெயம்

வில் (=வளைவு) + எய் (=செலுத்து, செறி) + அம் (=நீர்) = விலெயம் >>> வெளிசம் = நீரில் எறியப்படும் வளைவான பொருள்.

வேகசரம்

ஒட்டகம்

வெக்கயாரம்

வெக்கை (=வெப்பம்) + அயம் (=நிலம்) + ஆர் (=தங்கு) + அம் = வெக்கயாரம் >>> வேகசரம் = வெப்பமான நிலத்தில் தங்குவது.

வேகடம், வேகடை

கல்மணியைச் சுத்தமாக்குதல்

வயக்கறம்

வயக்கு (=ஒளிரச்செய்) + அறை (=அறுத்தல், கல்) + அம் = வயக்கறம் >>> வைக்கடம் >>> வேகடம் = கல்லை அறுத்து ஒளிரச்செய்தல்

வேகடம், வேகடை

நுணுக்கமான வேலைப்பாடு

வைகட்டம்

வை (=கூர்மை, நுட்பம்) + கட்டு (=வளை, அமை) + அம் = வைகட்டம் >>> வேகடம் = நுட்பமான வளைவுகளை அமைத்தல்

வேகடம், வேகடை

இளமைப் பருவம்

பைகட்டம்

பை (=அழகு, இளமை) + கட்டம் (=பருவம்) = பைகட்டம் >>> பேகடம் >>> வேகடம் = இளமைப் பருவம்

வேகடன்

இளைஞன்

பைகட்டன்

வேகடம் (=இளமைப் பருவம்) + அன் = வேகடன்

வேகநாசனம்

கோழை, சளி

வீக்கநாசாணம்

வீக்கம் (=தடை) + நாசி (=மூக்கு) + ஆணம் (=குழைவான பொருள்) = வீக்கநாசாணம் >>> வேகநாசனம் = மூக்கில் தடை ஏற்படுத்தும் குழைவான பொருள் = கோழை, சளி.

வேகம், வேகிதை

விரைவு, விசை, பரவல்

வீங்கம்

வீங்கு (=விரை, பரவு) + அம் = வீங்கம் >>> வேகம் = விரைவு, விசை, பரவல்

வேகம்

வலிமை

பிகு

பிகு (=கடினம், வலு) + அம் = பீகம் >>> வேகம் = வலிமை

வேகம்

கோபம்

வேகம்

வேகு (=சின) + அம் = வேகம் = சினம்

வேகம்

மனக் கலக்கம்

வேகம்

வேகு (=மனம் புழுங்கு, கலங்கு) + அம் = வேகம் = மனக் கலக்கம்

வேகம்

மிகுதி

மீகம்

மிகு + அம் = மீகம் >>> வீகம் >>> வேகம் = மிகுதி

வேகம்

விந்து

வீங்கம்

வீங்கு (=விரை) + அம் (=வெண்மை, நீர்) = வீங்கம் >>> வேகம் = விரையக் கூடிய வெண்ணிற நீர்.

வேகம்

நஞ்சு

வீக்கம்

வீக்கு (=அழி, கொல்) + அம் (=உணவு) = வீக்கம் >>> வேகம் = கொல்லும் உணவு.

வேகம்

கெட்ட நாற்றம்

வீகம்

வீ (=அழிவு, கேடு) + கம் (=மணம்) = வீகம் >>> வேகம் = கெட்ட மணம்

வேகம்

வெள்ளநீர்

வீங்கம்

வீங்கு (=விரை, பெருகு) + அம் (=நீர்) = வீங்கம் >>> வேகம் = விரைந்து வரும் நீர்ப் பெருக்கம்

வேகம்

கீழ், தாழ்வு

வெக்கம்

வெக்கம் (=அவமானம், இழிவு) >>> வேகம் = இழிவு, தாழ்வு

வேகம்

உடல்

வீக்கம்

வீக்கு (=கட்டு) + அம் = வீக்கம் >>> வேகம் = கட்டப்பட்டது = உடல். ஒ.நோ: யா / யாக்கு (=கட்டு) + ஐ >>> யாக்கை = கட்டப்பட்டது.

வேகர்

தூதர்

வீக்கர்

வீக்கு (=கட்டு, கூட்டு, சேர்) + அர் = வீக்கர் >>> வேகர் = கூட்டி / சேர்த்து வைப்பவர் = தூதர்.

வேகரம்

கொடுஞ்செயல்

வீகரம்

வீ (=அழிவு, கேடு) + கரம் (=செயல்) = வீகரம் >>> வேகரம் = கேட்டைத் தரும் செயல்.

வேகரம்

உறைப்பு

வேகரம்

வே (=எரி) + கரம் = வேகரம் = எரிச்சல்

வேகாரி

கட்டாய வேலை

வீக்காரி

வீக்கு (=கட்டு, அடக்கு, வற்புறுத்து) + ஆர் (=செய்) + இ = வீக்காரி >>> வேகாரி = வற்புறுத்திச் செய்வித்தல்.

வேகி

ஏமாற்றிக் கொள்பவன் / ள்

வேகி

வெஃகு (=பறி, ஏமாற்றிக் கொள்) + இ = வேகி = ஏமாற்றிக் கொள்பவன் / கொள்பவள்.

வேங்கியம்

வெட்கம்

வெக்கம்

வெக்கம் + இயம் = வேக்கியம் >>> வேங்கியம்

வேசகம்

வால் நுனி, வால்

பேசகம்

பேசகம் (=வால் நுனி) >>> வேசகம்

வேசகம்

வீடு

வேயகம்

வேய் (=பொருந்து, தங்கு) + அகம் (=உள்ளிடம்) = வேயகம் >>> வேசகம் = தங்குகின்ற உள்ளிடம்

வேசடை

துக்கம்

வேயடை

வே (=மனம் புழுங்கு, கலங்கு) + அடை (=தன்மை) = வேயடை >>> வேசடை = மனம் கலங்கிய நிலை.

வேசம்

மூடிமறைத்தல்

வேயம்

வேய் (=மூடு, மறை) + அம் = வேயம் >>> வேசம் = மூடி மறைத்தல்.

வேசம்

நுழைதல்

மூழம்

முழை (=நுழை) + அம் = மூழம் >>> மீசம் >>> வீசம் >>> வேசம் = நுழைந்து வருதல்.

வேசம்

வீடு

வேயம்

வேய் (= பொருந்து, தங்கு, அணி, கட்டு) + அம் = வேயம் >>> வேசம் = தங்குவதற்காக கட்டப்பட்டது.

வேசம்

கோபம்

வேயம்

வே (=சின) + அம் = வேயம் >>> வேசம் = சினம்

வேசரம்

ஒட்டகம்

வேயாரம்

வெய் (=வெப்பம்) + ஆர் (=பூமி, தங்கு) + அம் = வேயாரம் >>> வேசரம் = வெப்பமான பூமியில் தங்குவது

வேசரி

கோவேறு கழுதை, கழுதை

வேயாரி

வேய் (=மூடு, கட்டு) + ஆர் (=தாங்கு, சும) + இ = வேயாரி >>> வேசரி = கட்டிய மூட்டையைத் தாங்கிச் சுமப்பது.

வேசறவு

மனக் கலக்கம், துன்பம்

வேயரவு

வே (=மனம் புழுங்கு, கலங்கு) + அரவு (=விகுதி) = வேயரவு >>> வேசறவு = மனம் புழுங்குதல், கலக்கம், துயரம்.

வேசனம்

வயல்

பையாணம்

பை (=பசுமை) + ஆணம் (=இடம், நிலம்) = பையாணம் >>> பிசானம் >>> பேசனம் >>> வேசனம் = பசுமையான நிலம்.

வேசனம்

வீடு

வேயாணம்

வேய் (=பொருந்து, தங்கு) + ஆணம் (=பற்றுக்கோடு) = வேயாணம் >>> வேசனம் = தங்குவதற்கான பற்றுக்கோடு.

வேசனம்

வாசல்

வேயணம்

வேய் (=துளை, வழி) + அணை (=அடை, சேர்) + அம் = வேயணம் >>> வேசனம் = அடைவதற்கான வழி

வேசி, வேசை, வேசா

விலைமகள்

பையீ

பை (=பணம், இளமை, அழகு) + ஈ (=வழங்கு) = பையீ >>> பீசி >>> பேசி >>> வேசி = பணத்திற்காக இளமை அழகினைக் கொடுப்பவள்.

வேசை, வேசி

சம்பளம்

பையீ

பை (=வருத்தம், உழைப்பு, பணம்) + ஈ (=கொடு) = பையீ >>> பீசி >>> வீசி >>> வேசி / வேசை = உழைப்பிற்காக கொடுக்கப்படும் பணம்

1 கருத்து:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.