வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

63 - (ச்யேச்டம் -> சோலி) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

ச்^யேச்~டம்

பெருமை

ஏற்றம், சேட்டம்

ஏற்றம் (=உயர்வு, மிகுதி, பெருமை) >>> சேட்டம் >>> ச்^யேச்~டம் = பெருமை

ச்^யேச்~டன்

அண்ணன்

சேட்டன்

சேட்டம் (=பெருமை) + அன் = சேட்டன் >>> ச்^யேச்~டன் = பெரியவன் = அண்ணன்.

ச்^யோதி

ஒளி

சோதி

சோதி >>> ச்^யோதி

ச்^யோதிச~ம்

ஒளிக்கூட்டத்தால் ஆகும் பேறு

சோதீட்டம்

(2) சோதி (=ஒளி) + ஈட்டம் (=கூட்டம், பேறு) = சோதீட்டம் >>> சோதிடம் >>> ச்^யோதிச~ம் = ஒளிக்கூட்டத்தின் பேறு

ச்^ரும்பா

கொட்டாவி

சோர்வா

சோர்வு + ஆ (=வாயைத் திற) = சோர்வா >>> சொர்ப்பா >>> ச்^ரும்பா = சோர்வினால் வாயைத் திறப்பது.

ச்^வரம்

காய்ச்சல்

சுரம்

சுரம் (=வெப்பம்) >>> ச்^வரம்

ச்^வலி

ஒளிர்

ஒளி, சொளி

ஒளி >>> சொளி >>> சொலி >>> ச்^வலி

ச்^வாலை

ஒளி

ஒளி, சொளி

ஒளி >>> சொளி >>> சொலி >>> ச்^வலி >>> ச்^வாலை

ச^கத்து, ச^கத்

பூமி

சேக்கத்து

சேக்கை (=தங்குமிடம்) + அதி (=மிகுதி, பெருமை) + உ = சேக்கத்து >>> செகத்து >> சகத்து = பெரிய தங்குமிடம் = பூமி

ச^கம், ச^கா

நிலம், பூமி

சேக்கம்

சேக்கை (=சிவத்தல், தங்குமிடம்) + அம் = சேக்கம் >>> செகம் >>> ச^கம் = செந்நிறத் தங்குமிடம் = நிலம், பூமி.

ச^கனம்

பெண் குறி

அகாணம்

அகை (=தோன்று, வெளிப்படு) + ஆணம் (=உடல், இடம்) = அகாணம் >>> ச^கனம் = உடல் வெளிப்படும் இடம்

ச^கினி, சி^கினி

கஞ்சன்

அஃகீனி

அஃகு (=சுருங்கு, சிறு) + ஈனு (=கொடு) + இ = அஃகீனி >>> ச^கினி = சிறிதே கொடுப்பவன் = கஞ்சன்.

ச^ங்காரம்

மணியோசை

அக்காரம்

அகை (=விட்டு விட்டு நட) + ஆர் (=ஒலி) + அம் = அக்காரம் >>> ச^ங்காரம் = விட்டுவிட்டு ஒலிப்பது

ச^ங்காலன்

விரைந்து நடப்பவன்

ஆய்க்காலன்

ஆய் (=விரை) + கால் + அன் = ஆய்க்காலன் >>> அங்காலன் >>> ச^ங்காலன் = விரையும் காலினன்

ச^ட்கா

விரைவு

சொடுக்கை

சொடுக்கு + ஐ = சொடுக்கை >>> சொட்கா >>> ச^ட்கா = சொடுக்கு போடும் நேரம் கொண்டது = விரைவு.

ச^ட்டி

மல்யுத்தம் செய்பவன்

செற்றி

செறு (=நெருக்கு, அடக்கு, வெல்) + இ = செற்றி >>> செட்டி >>> ச^ட்டி = நெருக்கி அடக்கி வெல்பவன்

ச^டன், ச^டம்

முட்டாள்

அற்றன்

அற்றம் (=இருள், அறியாமை) + அன் = அற்றன் >>> சட்டன் >>> ச^டன் = அறியாமை கொண்டவன்

ச^டரம்

வயிறு

அட்டாரம்

அடை (=சேர், இடம்) + ஆர் (=உண்ணு) + அம் (=உணவு) = அட்டாரம் >>> ச^டரம் = உண்ணும் உணவு சேரும் இடம் = வயிறு.

ச^டிதி, ச^டுதி

விரைவு

எறிதி

எறி (=வீசு, பாய், விரை) + தி = எறிதி >>> செடிதி >>> சடிதி, சடுதி = விரைவு

ச^டுதி, ச^டுத்தி

சோதனை

அறிதி

அறி + தி = அறிதி >>> சடிதி >>> ச^டுதி = அறிதல்

ச^டை

பின்னித் திரண்டது

செற்றை

செறி (=திரள், பின்னு) + ஐ = செற்றை >>> செட்டை >>> ச^டை = பின்னித் திரண்டது

ச^ண்டா, செ^ண்டா

கொடி

சேண்டா

சேண் (=உயரம்) + தா (=உணர்த்து, அறிவி) = சேண்டா >>> செ^ண்டா >>> ச^ண்டா = உயரத்தில் இருந்து அறிவிப்பது = கொடி.

ச^ண்டி

சேர்த்துவை

அண்டி

அண்டு (=நெருங்கு, சேர்) >>> அண்டி >>> ச^ண்டி = சேர்த்துவை

ச^ண்டை

சோடி

அண்டை

அண்டு (=நெருங்கு, சேர்) + ஐ = அண்டை >>> ச^ண்டை = சேர்ந்தது

ச^தி

சேர்க்கை, தொகுதி

அத்தி

அத்து (=கூடு, சேர்) + இ = அத்தி >>> சத்தி >>> ச^தி = சேர்க்கை, தொகுதி.

ச^துமணி, ச^ந்துமணி

உடல் தேமல்

உத்திமேனி

உத்தி (=புள்ளி) + மேனி (=உடல்) = உத்திமேனி >>> சுத்துமேனி >>> ச^ந்துமணி, ச^துமணி = உடலில் உள்ள புள்ளிகள்.

ச^தை

சோடி, ஒப்பு

அத்தை

அத்து (=பொருந்து, சேர்) + ஐ = அத்தை >>> சத்தை >>> ச^தை = சேர்ந்தது, பொருத்தமானது

ச^ந்திரி

நாட்காட்டி, பஞ்சாங்கம்

ஐந்திறீ

ஐ + திறம் (=வகை, செய்தி) + ஈ (=கொடு) = ஐந்திறீ >>> அய்ந்திரி >>> ச^ந்திரி = ஐந்து வகையான செய்திகளைக் கொடுப்பது = நாட்காட்டி. ஒ.நோ: பஞ்சம் + அங்கம் = பஞ்சாங்கம்.

ச^ந்து

உயிரி

ஆத்து

ஆத்தம் (=உயிர்) + உ = ஆத்து >>> சாத்து >>> ச^ந்து = உயிருள்ளது

ச^னி

தோன்று, பிற

எண்ணு

எண்ணு (=எழு, உயர், தோன்று) >>> எண்ணி >>> செண்ணி >>> செ^னி >>> ச^னி = தோன்று, பிற. ஒ.நோ: எண்ணு (=எழு, உயர்) + இ = ஏணி = உயர்வதற்கு உதவுவது.

ச^ப்தி

ஈடானதை வசூலித்தல்

ஆற்றி

ஆற்று (=ஈடாகு, கூட்டு, சேகரி, வசூலி) + இ = ஆற்றி >>> சாத்தி >>> ச^ப்தி = ஈடாக வசூலித்தல்.

ச^ப்பு

மந்தம்

சாவு

சா (=சோர்) + உ = சாவு >>> சாப்பு >>> ச^ப்பு = சோர்வு, மந்தம்

ச^ப்பை

பொருத்து, மூட்டு

அமை

அமை (=பொருந்து) >>> சமை >>> ச^ப்பை = பொருத்து, மூட்டு

ச^ப்பை, செ^ப்பை

தாடை

ஏவாய்

ஏ (=அடுக்கு) + வாய் = ஏவாய் >>> எவ்வை >>> செப்பை >>> ச^ப்பை = வாயின் அடுக்குகள்.

ச^பம், செ^பம்

ஒலிக்கப்படுவது

செப்பம்

செப்பு (=ஒலி) + அம் = செப்பம் >>> செ^பம் >>> ச^பம் = ஒலி

ச^பர்

இறுமாப்பு

செம்மல்

செம்மல் (=தருக்கு, இறுமாப்பு) >>> செமர் >>> ச^பர்

ச^ம்பம்

இறுமாந்த பேச்சு

செம்மம்

செம்மா (=இறுமா) + அம் (=சொல்) = செம்மம் >>> ச^ம்பம் = இறுமாப்புடன் பேசுதல்.

ச^ம்பீரம்

எலுமிச்சை

அவிரம்

அவிர் (=ஒளி) + அம் (=அழகு, நீர், சாறு, உணவு) = அவிரம் >>> சபிரம் >>> ச^ம்பீரம் = சாறுடைய ஒளிமிக்க அழகான உணவு.

ச^முக்காளம், ச^மக்காளம்

விரிப்புத் துணி வகை

செமுக்காழம்

செம்மு (=பரப்பு) + காழம் (=துணி) = செமுக்காழம் >>>ச^முக்காளம் = பரப்பப்படும் துணி = விரிப்புத் துணி வகை

ச^மா, ச^மை

சங்கம், கூட்டம், மொத்தம்

செம்மை

செம்மை (=ஒற்றுமை) >>> ச^மை >>> ச^மா = ஒற்றுமைப் பட்டது = சங்கம், கூட்டம், மொத்தம்.

கோபுரம்

கோவிலின் தலைவாசல் மேல் இருப்பது

கூப்பிறம்

கூப்பு + இறை (=கை, கடவுள், வணங்கு, உயரம், இருக்கை) + அம் = கூப்பிறம் >>> கோபுரம் = கைகூப்பி வணங்கப்படும் கடவுளின் உயரமான இருக்கை. 

ச^மாத்து

கடவுளுக்காக கூடிய கூட்டம்

செம்மாத்து

செம்மை (=ஒற்றுமை) + ஆதி (=கடவுள்) + உ = செம்மாத்து >>> ச^மாத்து = கடவுளுக்காக ஒன்றுகூடியது..

ச^மாபந்தி

நிலுவை வரிக்காக கூடும் கூட்டம்

செம்மைபற்றி

செம்மை (=ஒற்றுமை) + பற்று (=வரவேண்டியது, பொருள்) + இ = செம்மைபற்றி >>> செமாபத்தி >>> ச^மாபந்தி = வரவேண்டிய பொருளுக்காக ஒன்றுகூடுவது.

ச^மாய்

சிறப்பு, பெருமை

செம்மை

செம்மை (=சிறப்பு, பெருமை) >>> ச^மாய்

ச^மீன்

நிலம்

சேபின்

சே (=தங்கு, சிவப்பு) + பின் (=இடம்) = சேபின் >>> ச^மீன் = தங்குவதற்கான சிவந்த இடம் = நிலம்

ச^மீன்தாரி, ச^மீன்தார்

நிலம் உடையவர்

சேபின்தரி

சேபின் (=நிலம்) + தரி (=கொள்) = சேபின்தரி >>> ச^மீன்தாரி = நிலம் உடையவர்.

செ^யந்தி, ச^யந்தி

பிறந்தநாள் விழா

எழாற்றி

எழு (=தோன்று, பிற) + ஆற்று (=கூடு, நடத்து) + இ = எழாற்றி >>> செயாத்தி >>> செயந்தி = பிறப்புக்காக கூடி நடத்தப்படுவது.

செ^யம், ச^யம்

வெற்றி

எழம்

(2) எழு (=வெல்) + அம் = எழம் >>> செயம் >>> ச^யம் = வெற்றி. ஒ.நோ: விழு = தோல்வியடை.

ச^ர்ச்ச^ர்ம்

போரில் சிதைக்கப் பட்டது

செருச்செறம்

செரு (=போர், சண்டை) + செறு (=அழி, சிதை) + அம் = செருச்செறம் >>> ச^ர்ச்ச^ரம் = போரில் / சண்டையில் சிதைக்கப் பட்டது.

ச^ர்ச்ச^ரை

ஒலிகளின் கலப்பு

அரிச்சேரை

அரி (=ஒலி) + சேர் (=கல) + ஐ = அரிச்சேரை >>> சரிச்செரை >>> ச^ர்ச்ச^ரை = ஒலிகளின் கலப்பு

ச^ரப்

சிறப்பு

சிறப்பு

சிறப்பு >>> செறப்பு >>> ச^ரப்

ச^ராயத்து

வேளாண் குடி

செறாயாற்று

செறு (=வயல்) + ஆயம் (=வருமானம், கூட்டம்) + ஆற்று (=ஈட்டு) = செறாயாற்று >>> ச^ராயத்து = வயலில் வருமானம் ஈட்டும் கூட்டம் = வேளாண் குடிகள்.

ச^ராயு

பனிக்குடம், கருப்பை

உறாயு

உறை (=வசி, பை) + அயம் (=நீர்) + உ = உறாயு >>> சுராயு >>> ச^ராயு = வசிக்கின்ற நீருடைய பை = பனிக்குடம், கருப்பை

ச^ராயுச^ம்

கருப்பையில் இருந்து பிறப்பன

உறாயுயம்

உறாயு (=கருப்பை) + உய் (=வெளிப்படு, தோன்று) + அம் = உறாயுயம் >>> சுராயுசம் >>> ச^ராயுச^ம் = கருப்பையில் இருந்து தோன்றுவது.

ச^ரி

சீரணமாக்கு

செரி

செரி (=சீரணமாக்கு) >>> ச^ரி

ச^ரிகை

உலோக இழை

அருகை

அரி (=மென்மை) + உகு (=உருகு) + ஐ = அருகை >>> சரிகை = மெல்லிதாக உருக்கப்பட்டது.

ச^ரீப்

அளவீடு

அறீவு

அறி (=அள) + ஈவு (=பகு, பிரி) = அறீவு >>> சரீபு >>> ச^ரீப் = பிரித்து அளத்தல்.

ச^ரூர்

விரைவு, அவசரம்

எறூர்

எறி (=பாய்) + ஊர் (=செல், இயங்கு) = எறூர் >>> செரூர் >>> ச^ரூர் = பாய்ச்சலான இயக்கம் = விரைவு, அவசரம்

ச^ரை

நரைமயிர்

அராய்

அரி (=மயிர்) + ஆய் (=வெண்மை) = அராய் >>> சரை >>> ச^ரை = வெண்ணிற மயிர்.

ச^ல்தி

விரைவு, அவசரம்

செலுந்தி

செல் (=இயங்கு) + உந்து (=எறி, விரையச்செய்) + இ = செலுந்தி >>> ச^ல்தி = விரைவான இயக்கம்.

ச^ல்லடம்

அரைக்கால் ஆடை

சல்லாடம்

சல்லி (=சிறுமை) + ஆடை + அம் = சல்லாடம் >>> ச^ல்லடம் = சிறிய ஆடை.

ச^ல்லடை

பிரித்தெடுக்க உதவுவது

சல்லறை

சல்லி (=சிறுதுண்டு) + அறு (=பிரி) + ஐ = சல்லறை >>> ச^ல்லடை = சிறிய துண்டுகளைப் பிரிப்பது

ச^ல்லாலி

பல நிறங்களில் தொங்குவது

சல்லெல்லி

சல்லி (=தொங்கல்) + எல் (=ஒளி, நிறம்) + இ = சல்லெல்லி >>> ச^ல்லாலி = பல நிறங்களில் தொங்குவது

ச^ல்லி

தெளிவு

எல்லி

எல் (=ஒளி, விளக்கம்) + இ = எல்லி >>> செல்லி >>> ச^ல்லி = விளக்கம் உடையது = தெளிவு

ச^ல்லி

காளைமாடு

அல்லி

அலம் (=கலப்பை, சுற்று) + இ = அல்லி >>> ச^ல்லி = கலப்பையுடன் சுற்றி வருவது.

ச^லதி

கடல்

சலதி

சலம் (=நீர்) + அதி (=மிகுதி) = சலதி >>> ச^லதி = மிகுதியான நீர்

ச^லம், சலம்

நீர்

ஆல்

ஆல் (=நீர்) + அம் = ஆலம் >>> சாலம் >>> சலம் >>> ச^லம்

ச^லுப்பு, ச^ல்பு, ச^லிப்பு

சலதோசம்

சலப்பூ

சலம் (=நீர்) + பூ (=அரும்பு) = சலப்பூ >>> ச^ல்பு >>> ச^லுப்பு = நீர் அரும்புதல் = மூக்கில் நீர் வழிதல்.

ச^வனம்

வேகம்

ஏவணம்

ஏவு (=விரையச்செய்) + அணம் = ஏவணம் >>> சேவனம் >>> ச^வனம் = விரைவு, வேகம்

ச^வ்வு

மென் தோல்

செம்மூ

செம்மு (=மூடு) + ஊ (=தசை) = செம்மூ >>> செவ்வு >>> ச^வ்வு = தசையை மூடியிருப்பது = மெல்லிய தோல்.

ச^வளி, ச^வுளி

ஆடை

செம்மேலி

செம்மு (=மூடு, கட்டு) + மேல் (=உடல்) + இ = செம்மேலி >>> சம்மலி >>> ச^வளி = உடலை மூடிக்கட்ட உதவுவது.

ச^வாப்

விடை

செப்பு

செப்பு (=விடை) + அம் = செப்பம் >>> செவ்வம் >>> ச^வாப்

ச^வான்

வீரன், இளைஞன்

சேவாண்

சே (=காளை) + ஆண் = சேவாண் >>> ச^வான் = காளைமாட்டைப் போன்ற ஆண்.

ச^வாகி`ர்

செம்மணிக் கல்

செவ்வகிர்

செம்மை (=சிவப்பு, அழகு, ஒளி) + வகிர் (=துண்டு, கல்) = செவ்வகிர் >>> ச^வாகி`ர் = அழகுடன் ஒளிரும் சிவப்புநிறக் கல்.

ச^ன்மம், செ^ன்மம்

பிறப்பு

எண்மம்

எண்ணு (=தோன்று, பிற) + மம் = எண்மம் >>> செண்மம் >>> செ^ன்மம் >>> ச^ன்மம் = பிறப்பு

ச^ன்மி

நிலத்துக்காரர்

அன்னமி

அன்னம் (=பூமி, நிலம்) + அமை + இ = அன்னமி >>> சன்னமி >>> ச^ன்மி = நிலம் உடையவர்.

ச^ன்னல்

பலகணி, சாளரம்

சான்னல்

சால் (=நிறை, மிகு) + நல் (=வறுமை, இன்மை, ஓட்டை) = சான்னல் >>> ச^ன்னல் = மிக்க ஓட்டைகள் நிறைந்தது. ஒ.நோ: நல் (=ஓட்டை) + இ = நல்லி = ஓட்டையுள்ளது = குழாய், நல்லி எலும்பு.

சாளரம்

பலகணி

சாலறம்

சால் (=நிறை, மிகு) + அறை (=குகை, சுரங்கம், ஓட்டை) + அம் = சாலறம் >>> சாளரம் = மிக்க ஓட்டைகள் நிறைந்தது.

ச^ன்னியம்

பிறந்தது

எண்ணியம்

எண்ணு (=தோன்று, பிற) + இயம் = எண்ணியம் >>> செண்ணியம் >>> ச^ன்னியம் = தோன்றியது, பிறந்தது.

ச^னகம்

தோன்றும் இடம், மூலம்

எண்ணகம்

எண்ணு (=தோன்று) + அகம் (=இடம்) = எண்ணகம் >>> செண்ணகம் >>> ச^னகம் = தோன்றும் இடம், மூலம்

ச^னம்

உயிர்த் தொகுதி

அணம்

அணை (=பிற, கூடு) + அம் = அணம் >>> சணம் >>> ச^னம் = உயிர்களின் கூட்டம்.

ச^னனம்

பிறப்பு

அணணம்

அணை (=பிற) + அணம் = அணணம் >>> சணணம் >>> ச^னனம் = பிறப்பு.

ச^னனி

தாய்

அணணீ

அணணம் (=பிறப்பு) + ஈ (=கொடு) = அணணீ >>> சணணி >>> ச^னனி = பிறப்பைக் கொடுப்பவள் = தாய்

ச^னாப்

தலைமை

சென்னம்

சென்னி (=தலை) + அம் = சென்னம் >>> செனாப் >>> ச^னாப் = தலைமை.

ச^னாபா

உயிர்களின் பெருங்கூட்டம்

சனமா

சனம் (=உயிர்த் தொகுதி) + மா (=பெருமை) = சனமா >>> ச^னாபா = உயிர்களின் பெருங்கூட்டம்

ச^னானா

பெண்

அணணை

அணணம் (=பிறப்பு) + ஐ = அணணை >>> சணணை >>> ச^னானா = பிறப்புக்கு உரியவள் = பெண்.

ச^னானா

பெண்களின் அந்தப்புரம்

ஆணணை

ஆண் + அணை (=தடை, இடம்) = ஆணணை >>> சாணணை >>> ச^னானா = ஆண்கள் தடைசெய்யப்பட்ட இடம்.

சா^க்கிரதை

கண் விழிப்பு, கவனம்

ஆக்கிரறை

ஆகம் (=இமை) + இரு + அறு (=பிள, திற) + ஐ = ஆக்கிரறை >>> சாக்கிரதை = இமைகளைத் திறந்து இருத்தல்.

சா^கரணம்

கண் விழிப்பு, கவனம்

ஆக்கறணம்

ஆகம் (=இமை) + அறு (=பிள, திற) + அணம் = ஆக்கறணம் >>> சா^கரணம் = இமைகளைத் திறந்து இருத்தல்.

சா^கை

தங்குமிடம்

சேக்கை

சேக்கை (=தங்குமிடம்) >>> சா^கை

சா^ங்கலம்

வறண்ட பூமி

ஆக்கலம்

அகம் (=இடம், பூமி) + அலம் (=வறுமை, வறட்சி) = ஆக்கலம் >>> சா^ங்கலம் = வறண்ட பூமி

சா^ங்கிரி

சுற்றிச்செய்த இனிப்பு

ஏங்கிறி

ஏம் (=இனிமை) + கிறு (=சுற்று) + இ = ஏங்கிறி >>> சேங்கிரி >>> சா^ங்கிரி = சுற்றிச்செய்த இனிப்பு

சா^ட்டி, சா^ட்டை

அடிக்கும் கோல்

சாற்றி

சாற்று (=அடி) + இ / ஐ = சாற்றி / சாற்றை >>> சாட்டி / சாட்டை >>> சா^ட்டி / சா^ட்டை = அடிக்க உதவுவது

சா^ட்டியம்

அறியாமை

அற்றம்

அற்றம் (=அறியாமை) + இயம் = ஆற்றியம் >>> சா^ட்டியம்

சா^ட்டியம்

நோய், மெலிவு, பலவீனம்

ஆட்டியம்

அடு (=வருத்து, உருக்கு, மெலியச்செய்) + இயம் = ஆட்டியம் >>> சா^ட்டியம் = வருத்துவது, மெலியச்செய்வது, மெலிவு

சா^டா

முழுவதும்

அற

அற (=முழுவதும்) >>> ஆட >>> சா^டா

சா^டி

பழிசுமத்து

சாட்டு

சாட்டு (= பழிசுமத்து) + இ = சாட்டி >>> சா^டி

சா^டி

கொள்கலம்

சாடி

அடை (=கொள், பொருள்) + இ = ஆடி >>> சாடி >>> சா^டி = கொள்ளும் பொருள்.

சா^டி

விளக்குமாறு

செற்றி

செற்றை (=குப்பை, கூட்டம்) + இ = செற்றி >>> செட்டி >>> சா^டி = குப்பைகளைக் கூட்டுவது

தூபம், தூமம்

புகை

துப்பம்

துப்பு (=தீ, உமிழ், தூய்மை, வெண்மை, பொருள்) + அம் = துப்பம் >>> தூபம் >>> தூமம் = தீ உமிழ்கின்ற வெண்ணிறப் பொருள்.

சா^டை

பொருத்தம், ஒப்புமை, சாயல்

ஆடை

அடு (=ஏற்றதாகு, பொருந்து, ஒப்பு) + ஐ = ஆடை >>> சா^டை = பொருத்தம், ஒப்புமை.

சா^த்தியம், சா^தீயம்

நடிப்பு, வஞ்சனை

ஏத்தியம்

எத்து (=ஏமாற்று) + இயம் (=தன்மை) = ஏத்தியம் >>> சேத்தியம் >>> சா^த்தியம் = ஏமாற்றும் தன்மை = நடிப்பு.

சா^த்திரை

கடவுளுக்கான விழா

சாற்றிறை

சாறு (=விழா) + இறை (=கடவுள்) = சாற்றிறை >>> சா^த்திரை = கடவுளுக்கான விழா.

சா^தகம்

பிறப்பின் பலன் கூறும் கட்ட அமைப்பு

ஏறகம்

ஏறு (=தோன்று, பிற) + அகை (=கூறுபாடு, கட்டம், மதிப்பு) + அம் (=சொல்) = ஏறகம் >>> சேதகம் >>> சா^தகம் = பிறப்பின் மதிப்பைச் சொல்லும் கட்டங்களைக் கொண்டது.

சா^தம்

பிறப்பு, பிறந்தது

ஏறம்

ஏறு (=தோன்று, பிற) + அம் = ஏறம் >>> சேதம் >>> சா^தம் = தோற்றம், பிறப்பு, பிறந்தது.

சா^தி

கூட்டம், இனம்

சாத்து, ஆற்றி

(1) சாத்து (=கூட்டம், குழு) + இ = சாத்தி >>> சா^தி. (2) அறு (=பிரி) + இ = ஆற்றி >>> சாத்தி >>> சா^தி = பிரிவு, வகை, இனம்

சா^தீயம்

சாதியுடன் தொடர்புடையது

சாதீயம்

சாதி (=இனம்) + இயை (=பொருந்து) + அம் = சாதீயம் >>> சா^தீயம் = இனத்துடன் பொருந்தியது.

சா^ப்பியம்

தாமதம்

யாவியம்

யா (=நீட்டு, தாமதி) + இயம் = யாவியம் >>> யாப்பியம் >>> சா^ப்பியம் = தாமதம், நீட்டம்.

சா^பிதா, சா^ப்தா

பட்டியல்

ஏவிதை

ஏ (=வரிசை) + வித (=சொல்) + ஐ = ஏவிதை >>> சேபிதய் >>> சா^பிதா = சொற்களின் வரிசை = பட்டியல்.

சா^ம்பூநதம், சா^ம்புநதம்

தங்கம்

அயமுன்னதம்

அயம் (=உலோகம்) + உன்னதம் (=மேன்மை) = அயமுன்னதம் >>> ஆம்முன்னதம் >>> சா^ம்புநதம் = மேன்மையான உலோகம்

சா^மம்

நள்ளிரவு

யாமம்

யாமம் >>> சாமம் >>> சா^மம்

சா^மாத்தா

மருமகன்

ஆமைந்தன்

ஆ (=உறவுமுறையாகு) + மைந்தன் (=மகன்) = ஆமைந்தன் >>> சாமத்தன் >>> சா^மாத்தா = உறவினால் மகனாக ஆனவர்

சா^மீன்

பிணை

யாவீன்

யா (=கட்டு, பிணி) + ஈன் (=கொடு) = யாவீன் >>> சா^மீன் = பிணை கொடுத்தல்.

சா^மியம்

பிணை

யாவீயம்

யா (=கட்டு, பிணி) + ஈ (=கொடு) + அம் = யாவீயம் >>> சா^மியம் = பிணை கொடுத்தல்.

சா^யா

மனைவி

செய்யாள்

செய்யாள் (=மனைவி) >>> சா^யா

சா^ரணம்

அடுத்தபொருளின் சாறுண்ணுதல்

சாராணம்

சார் (=அடுத்திரு, சாறு) + ஆணம் (=பொருள், உணவு) = சாராணம் >>> சா^ரணம் = அடுத்திருக்கும் பொருளின் சாறினை உண்ணுதல்

சா^ரத்வம்

விபச்சாரம்

சாரத்தபம்

சாரம் (=ஒழுக்கம், நடத்தை) + தபு (=கெடு) + அம் = சாரத்தபம் >>> சா^ரத்வம் = கெட்ட நடத்தை

சா^ரி

இறையிலி நிலம்

ஆரீ

ஆர் (=அனுபவி, பூமி, நிலம்) + ஈ (=கொடு) = ஆரீ >>> சா^ரி = அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்ட நிலம்.

சா^ல்ரா, சா^லரி

கைத்தாளம்

சல்லரி

சல்லரி >>> சா^ல்ரா

சா^னவாசம்

பெண்ணின் வீட்டிற்குச் செல்லுதல்

அணைமாழம்

அணை (=இடம், பொருந்து, மண, அடை) + மாழை (=பெண்) + அம் = அணைமாழம் >>> சா^னவாசம் = மணக்கவுள்ள பெண்ணின் இடத்தை அடைதல்.

சா^ச்^வல்யம்

பேரொளி

ஏயொளியம்

ஏ (=மிகுதி) + ஒளி + அம் = ஏயொளியம் >>> சேசொலியம் >>> சா^ச்^வல்யம் = மிகுதியான ஒளி.

சா^ச்`தி

மிகுதி

ஏற்றம்

ஏற்றம் (=மிகுதி) + இ = ஏற்றி >>> சேத்தி >>> சா^ச்`தி = மிகுதி

சி^கண்டி

தொல்லை கொடுப்பவன்

இக்காட்டி

இக்கு (=துன்பம்) + ஆட்டு (=அலை) + இ = இக்காட்டி >>> சி^கண்டி = துன்புறுத்தி அலைவிப்பவன்.

சி^கினா

வண்ண இழைகள்

ஐகுணை

ஐ (=அழகு, மென்மை, நுண்மை) + குணம் (=நிறம்) + ஐ = ஐகுணை >>> சைகுணா >>> சி^கினா = அழகிய நிறமும் மென்மையும் நுண்மையும் கொண்டவை.

சி^குடு, சி^குண்டு

பிசுபிசுப்புத் தன்மை

ஐக்கூறு

ஐக்கம் (=ஒன்றுகை, ஒட்டுகை) + ஊறு (=தொடுகை) = ஐக்கூறு >>> சைக்குடு >>> சி^குடு, சி^குண்டு = தொட்டால் ஒட்டும் பண்பு.

சி^த்தன்

ஏமாற்றுக் காரன்

எத்தன்

எத்து (=ஏமாற்று) + அன் = எத்தன் >>> செத்தன் >>> சி^த்தன் = ஏமாற்றுக் காரன்

சி^தம்

வெல்லப்பட்டது

இறம்

இறு (=வெல், முடி) + அம் = இறம் >>> சி^தம் = வென்று முடிந்தது

சி^ந்தகி

உடைமை

உற்றகி

உறு (=அடை) + அகம் (=பொருள்) + இ = உற்றகி >>> சுத்தகி >>> சி^ந்தகி = அடைந்த பொருட்கள்.

சி^ம்பு

இழு

சாம்பு

சாம்பு (=இழு) >>> சா^ம்பு >>> சி^ம்பு

சி^ம்பு

உயர்த்து, நெம்பு

ஊவு

ஊ (=உயரம்) + உ = ஊவு >>> சூபு >>> சி^ம்பு = உயர்த்து, நெம்பு

சி^மிக்கி, சு^மிக்கி

காதணி

செவிக்கி

செவி (=காது) + இகு (=தாழ், தொங்கு) + இ = செவிக்கி >>> செமிக்கி >>> சி^மிக்கி = காதில் தொங்குவது.

சி^ராயத்து, சி^ராயித், சி^ராயதி

பயிரிடத் தயாரான வயல்

செறாயத்து

செறு (=வயல்) + ஆயத்தம் (=தயார்) + உ = செறாயத்து >>> சி^ராயத்து = தயாராக இருக்கும் வயல்.

சி^ராயத்து, சி^ராயித், சி^ராயதி

வேளாண்மை

செறாயாற்று

செறு (=வயல்) + ஆயம் (=வருமானம்) + ஆற்று (=ஈட்டு) = செறாயாற்று >>> செராயத்து >>> சி^ராயத்து = வயலில் வருமானம் ஈட்டுதல் = வேளாண்மை

சி^ல்லா

வரம்புடைய நிலம்

எல்லை

எல்லை (=வரம்பு, அளவை, இடம்) >>> செல்லய் >>> சி^ல்லா = வரம்பு அளக்கப்பட்ட இடம்.

சி^ல்லு

குளிர்ச்சி

ஈளை

ஈளை (=ஈரம், குளிர்ச்சி) + உ = இள்ளு >>> சி^ல்லு

சி^லேபி

வளைவுகளைக் கொண்ட இனிப்பு

சிலேமி

சிலை (=வில், வளைவு) + ஏம் (=இனிமை) + இ = சிலேமி >>> சி^லேபி = வளைவுகளைக் கொண்ட இனிப்பு வகை.

சி^க்`வா, சிகுவை

நாக்கு

இகுவாய்

இகு (=அசை) + வாய் = இகுவாய் >>> சிகுவாய் >>> சிகுவை >>> சி^க்`வா = வாய்க்குள் அசைவது.

சீ^டி

ஏணி

ஏறிழி

ஏறு (=உயர்) + இழி (=இறங்கு) = ஏறிழி >>> சேடியி >>> சீ^டி = ஏற இறங்க உதவுவது = ஏணி

சீ^தம்

சம்பளம்

செயிறம்

செய் + இறு (=பதிலாகக் கொடு) + அம் = செயிறம் >>> செய்தம் >>> சேதம் >>> சீ^தம் = செய்ததற்கு பதிலாகக் கொடுக்கப்படுவது.

சீ^மூதம்

மேகம்

ஈவூறம்

ஈவு (=கொடை) + உறை (=மழை) + அம் = ஈவூறம் >>> சீ^மூதம் = மழையைக் கொடுப்பது = மேகம்

சீ^மூதம்

இடையீடு இன்றி

ஈவின்றம்

ஈவு (=ஒழிகை, இடையீடு) + இன்றி + அம் = ஈவின்றம் >>> சீமித்தம் >>> சீ^மூதம் = இடையீடு இன்றி.

சீ^ரணம், சீர்ணம்

செரிமானம்

சேரணம்

செரி + அணம் = சேரணம் >>> சீ^ரணம் >>> சீ^ர்ணம்

சீ^ரகம்

சீரகம்

சேரக்கம்

செரி + அக்கம் (=தானியம்) = சேரக்கம் >>> சீரகம் >>> சீ^ரகம் = செரிக்க உதவும் தானியம்.

சீ^ரா, சீ^ரை

வெல்லப் பாகுநீர்

ஈரை

ஈர் (=இனிமை, நெய்ப்பு, நீர்) + ஐ = ஈரை >>> சீரை >>> சீ^ரா = நெய்ப்புத் தன்மை கொண்ட இனிப்பு நீர் = வெல்லப் பாகு

சீ^வன்

உயிரி, உயிர்

சேவன்

சே (=தங்கு, வாழ்) + அன் = சேவன் >>> சீவன் >>> சீ^வன் = வாழ்வது = உயிரி, உயிர்.

சீ^வனம், சீ^வியம்

வாழ்க்கை

சேவணம், சேவியம்

சே (=தங்கு, வாழ்) + அணம் / இயம் = சேவணம் / சேவியம் >>> சீ^வனம் / சீ^வியம் = வாழ்தல் = வாழ்க்கை.

சீ^வனாம்சம்

வாழ்வதற்குக் கடமைப்பட்ட பொருட்செல்வம்

சேவணாயம்

சேவணம் (=வாழ்க்கை) + ஆயம் (=கடமை, பொன், செல்வம்) = சேவணாயம் >>> சேவனாச்சம் >>> சீ^வனாம்சம் = வாழ்வதற்குக் கடமைப்பட்ட செல்வம்.

சீ^வாணு

புரோட்டாபிளாசம்

சேவாணு

சேவன் (=உயிர்) + ஆணம் (=பற்றுக்கோடு, குழம்பு போன்றது) + உ = சேவாணு >>> சீ^வாணு = உயிர்க்குப் பற்றுகோடாகிய குழம்பு போன்ற பொருள் = PROTOPLASM

சீ^விதம்

வாழ்நாள்

சேபுறம்

சே (=தங்கு, வாழ்) + புறம் (=காலம்) = சேபுறம் >>> சீவுதம் >>> சீ^விதம் = வாழும் காலம்.

சீ^னி

சேணம்

சேணம்

சேணம் + இ = சேணி >>> சீ^னி

சு^த்தி, சு^த்தே

செருப்பு

உத்தேய்

உதை (=கால், பாதம்) + ஏய் (=பொருந்து) = உத்தேய் >>> சு^த்தே = பாதங்களில் பொருந்துவது.

சு^ரம்

வெப்பம்

சுரம்

சுரம் (=வெப்பம்) >>> சு^ரம்

சு^லும்

செருக்கு, கொடுமை

சிலுப்பு

சிலுப்பு (=இறுமாப்பு, செருக்கு, கொடுமை) >>> சிலும்பு >>> சு^லும்

சூ^ல்

ஆடை

சவுளி

சவுளி (=ஆடை) >>> சௌலி >>> சூ^ல்

சூ^ல்

நடிப்பு, பொய்

இல்லி

இல்லி (=துளை, பொய்) >>> சில்லி >>> சூலி >>> சூ^ல்

சூ^ர்மானா

தண்டத் தொகை

செயிர்பணம்

செயிர் (=குற்றம், வருத்து, தண்டி) + பணம் = செயிர்பணம் >>> சேர்மணம் >>> சூ^ர்மானா = குற்றத்திற்கான தண்டனைப் பணம்.

சூ^லா

ஊஞ்சல்

உயலை

உய் (=செலுத்து, தள்ளு) + அலை (=ஆட்டு) = உயலை >>> ஊலய் >>> சூ^லா = தள்ளி ஆட்டப்படுவது.

செ^கம்

வாழுமிடம், பூமி

சேக்கை

சேக்கை (=தங்கும் இடம்) + அம் = சேக்கம் >>> செகம் = பூமி.

செ^கைரா

பண்டசாலை

இங்காயறை

இங்கு (=தங்கு, செறி) + ஆயம் (=பொருள்) + அறை = இங்காயறை >>> சிக்கய்ரை >>> செ^கைரா = பொருள் செறிந்த அறை.

செ^த்தன்

சாக்கிரதை

ஏற்றன்

ஏற்று (=செலுத்து, நினை) + அன் = ஏற்றன் >>> சேத்தன் >>> செ^த்தன் = நினைவைச் செலுத்துதல் = கவனம்.

செ^ந்து

உயிரி, உயிர்

எற்று

ஏறு (=தோன்று, பிற) + உ >>> எற்று >>> செத்து >>> செ^ந்து = தோன்றுவது / பிறப்பது = உயிர், உயிரி.

சோ^சியம்

கணித்துச் சொல்லுதல்

உய்யியம்

உய் (=அறி, கணி) + இயம் (=சொல்) = உய்யியம் >>> ஊசியம் >>> சூசியம் >>> சோ^சியம் = கணித்துச் சொல்லுதல்.

சோ^டனம்,சோ^டிப்பு, சோ^டனை

அலங்காரம்

ஒட்டணம்

ஒட்டு (=கூட்டு) + அணி (=அழகு) + அம் = ஒட்டணம் >>> சொட்டனம் >>> சோடனம், சோடனை = அழகைக் கூட்டுதல்

சோ^டி, சோ^டு

இணை

ஒட்டி

ஒட்டு (=பொருந்து, சேர்) + இ = ஒட்டி >>> சொட்டி >>> சோ^டி = பொருந்தி / சேர்ந்து இருப்பவை.

சோ^டிகை

உரிமையைக் கைவிடுதல்

ஒட்டிகை

ஒட்டு (=பற்று, உரிமை) + இக (=நீக்கு, கைவிடு) + ஐ = ஒட்டிகை >>> சொட்டிகை >>> சோ^டிகை = உரிமையைக் கைவிடுதல்.

சோ^டு

செருப்பு

சோடு

சோடி (=இணை) + உ = சோ^டு = இணைந்தே இருப்பது

சோ^த்திரை

பாட்டுக் கச்சேரி

ஒத்திறை

ஒத்து (=இசை, பாட்டு) + இறை (=நிறை, மிகு) = ஒத்திறை >>> சொத்திரை >>> சோ^த்திரை = மிகுதியான பாட்டும் இசையும்

சோ^தி

ஒளி

சூழ்த்தீ

(2) சூழ் (=சுற்றியிரு) + தீ = சூழ்த்தீ >>> சூத்தி >>> சோ^தி = தீயைச் சுற்றி இருப்பது = வெளிச்சம்.

சோ^ர்

கடுமை

ஒறு

ஒறு (=தண்டி, கடி) >>> சொறு >>> சோ^ர் = கடுமை

சோ^ல்னா

தோளில் கட்டியது

சுவலிணை

சுவல் (=தோள்) + இணை (=சேர், கட்டு) = சுவலிணை >>> சௌல்னய் >>> சோ^ல்னா = தோளில் கட்டியது.

சோ^லி

வேலை

ஊளி

உளை (=உடலை வருத்து) + இ = ஊளி >>> சூலி >>> சோ^லி = உடலை வருத்துவது = வேலை.

ரூபாய்

இந்தியப் பணம்

உருபை

உரு (=உருவம்) + பை (=பணம்) = உருபை >>> ரூபாய் = உருவம் தாங்கிய பணம்.

பைசா

சிறு பணம்

பையாய்

பை (=பணம்) + ஆய் (=சிறுமை) = பையாய் >>> பைசாய் >>> பைசா = சிறு பணம்

பீங்கான்

வேலைப்பாடும் அழகும் கொண்ட கற்பொருள்

பைங்கன்

பை (=வலிமை, அழகு, ஒளிர்) + கன் (=வேலைப்பாடு, கல்) = பைங்கன் >>> பீங்கான் = அழகிய வேலைப்பாடு கொண்ட ஒளிரக்கூடிய வலிமையான கற்பொருள்.

 

 

 

தமிழ்ச்சொற்கள் தோன்றும் விதம்:

சொந்தம்

உறவு

சுற்றம் >>> சொத்தம் >>> சொந்தம்

பொந்து

ஓட்டை

புற்று >>> பொத்து >>> பொந்து

கொண்டல்

மேகம்

குன்று (=மலை) + அல் (=தங்கு) = குன்றல் >>> கொண்டல் = மலைமேல் தங்குவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.