சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
அசக்கியம் |
செய்ய இயலாதது |
அசாக்கியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆக்கு (=செய்) + இயை (=இயலு) + அம் = அசாக்கியம் >>> அசக்கியம் = செய்ய இயலாதது. |
அசகியம், அசங்கியம் |
விரும்பத் தகாதது |
அசகியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அகம் (=அன்பு, விருப்பம்) + இயை (=தகு) + அம் = அசகியம் = விரும்பத் தகாதது, அருவருப்பானது. |
அசங்கதம், அசங்கதி |
பொருத்தம் இல்லாதது |
அசக்கறம் |
அசக்கு (=கட்டு, பொருத்து) + அறு (=இல்லாகு) + அம் = அசக்கறம் >>> அசங்கதம் = பொருத்தம் இல்லாதது. |
அசங்கதம் |
பொய் |
அசாக்கறம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆக்கம் (=உண்மை) + அறை (=சொல்) + அம் = அசாக்கறம் >>> அசங்கதம் = உண்மை இல்லாத சொல். |
அசங்கதி |
ஏளனம், கிண்டல் |
அசக்கறி |
அசை (=வருத்து) + அகை (=மலர், சிரி) + அறை (=சொல்) + இ = அசக்கறி >>> அசங்கதி = வருத்துகின்ற சிரிப்புடைய சொல். |
அசங்கம் |
பற்றின்மை |
அசக்கம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அகம் (=அன்பு, பற்று) = அசக்கம் >>> அசங்கம் = பற்றின்மை |
அசங்கியம் |
எண்ணிறந்தது |
அசக்கியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அகை (=எண்ணு) + இயை (=இயலு) + அம் = அசக்கியம் >>> அசங்கியம் = எண்ண இயலாதது. |
அசங்கை |
பயமின்மை |
அச்சகை |
அச்சம் (=பயம்) + அகை (=செல், நீங்கு, இல்லாகு) = அச்சகை >>> அசங்கை = பயம் இல்லாமை. |
அசங்கை |
மதிப்பின்மை |
அசகை |
அசை (=நீங்கு, இல்லாகு) + அகை (=எண்ணு, மதி) = அசகை >>> அசங்கை = மதிப்பு இல்லாமை. |
அசஞ்சத்தி |
பற்றின்மை |
அசயத்தி |
அசை (=நீங்கு, இல்லாகு) + அத்து (=பொருந்து, பற்று) + இ = அசயத்தி >>> அசசத்தி >>> அசஞ்சத்தி = பற்று இல்லாமை |
அசஞ்சலம் |
அசைவின்மை, இயக்கம் இன்மை |
அசயலம் |
(1) அசை + அல் (=எதிர்மறை) + அம் = அசயலம் >>> அசசலம் >>> அசஞ்சலம் = அசைவின்மை. (2) அசை (=நீங்கு, இல்லாகு) + அலை (=இயங்கு) + அம் = அசயலம் >>> அசசலம் >>> அசஞ்சலம் = இயக்கம் இன்மை. |
அசட்டன், அசடன் |
ஒழுக்கம் இல்லாதவன் |
அசற்றன் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=நீதி, ஒழுங்கு) + அன் = அசற்றன் >>> அசட்டன் = ஒழுக்கம் இல்லாதவன். |
அசட்டாளம் |
ஆபாசம் |
ஆசற்றலம் |
ஆசை (=விருப்பம்) + அறம் (=நீதி, ஒழுங்கு) + அலை (=கெடு) + அம் = ஆசற்றலம் >>> அசட்டாளம் = ஒழுக்கம் கெட்ட விருப்பம் |
அசட்டாளம் |
ஒழுங்கீனம் |
அசற்றாளம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=நீதி, ஒழுங்கு) + ஆள் (=செய்) + அம் = அசற்றாளம் >>> அசட்டாளம் = ஒழுக்கம் இல்லாத செயல் |
அசட்டை |
கவனமின்மை, மதிக்காமை |
அசற்றை |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறி (=கவனி) + ஐ = அசற்றை >>> அசட்டை = கவனம் இன்மை, மதிக்காமை. |
அசடம் |
அறிவுடைய பிறவி |
அசறம் |
அசை + அறி + அம் = அசறம் >>> அசடம் = அறிவுடைய அசை பொருள். |
அசடன், அசடு |
முட்டாள் |
அசறன் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=அறிவு) + அன் = அசறன் >>> அசடன் = அறிவு இல்லாதவன் |
அசடு |
அறியாமை |
அசறு |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=அறிவு) + உ = அசறு >>> அசடு = அறிவு இல்லாமை. |
அசடு |
ஒழுங்கீனம் |
அசறு |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=நீதி, ஒழுங்கு) + உ = அசறு >>> அசடு = ஒழுக்கம் இல்லாமை.. |
அசடு |
மேலிருந்து பெயரும் அடுக்கு |
அசேடு |
அசை (=நீங்கு, பெயர்) + ஏடு (=அடுக்கு) = அசேடு >>> அசடு = பெயரக் கூடிய அடுக்கு. |
அசடி |
ஒழுக்கமற்றவள் |
அசடி |
அசடு (=ஒழுங்கீனம்) + இ = அசடி = ஒழுக்கமற்றவள். |
அசத்தன் |
வலுவற்றவன் |
அசத்தன் |
அசை (=சோர், தளர்) + அதி (=மிகுதி) + அன் = அசத்தன் = மிக்க சோர்வுடையவன் = நோஞ்சான். |
அசத்தி, அசதி |
மிக்க சோர்வு, வலுவின்மை |
அசத்தி |
அசை (=சோர், தளர்) + அத்து (=கூடு, மிகு) + இ = அசத்தி >>> அசதி = மிக்க சோர்வு = வலுவின்மை. |
அசத்தியம், அசத்து |
பொய் |
அசற்றியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அற்றம் (=உண்மை) + இயம் = அசற்றியம் >>> அசத்தியம் = உண்மை இல்லாதது. |
அசத்து |
இருப்பில்லாதது, நிலையற்றது |
அசற்று |
அசை (=தங்கு, இரு, நிலை) + அறு (=இல்லாகு) + உ = அசற்று >>> அசத்து = இருப்பு இல்லாதது, நிலையற்றது, மாயை, பொய் |
அசதி |
ஒழுக்கம் இல்லாதவள் |
அசறி |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=நீதி, ஒழுங்கு) + இ = அசறி >>> அசதி = ஒழுக்கம் இல்லாதவள்.. |
அசதி |
ஏளனம், கிண்டல் |
ஆயறி |
ஆய் (=சிரி, வருத்தம்) + அறை (=சொல்) + இ = ஆயறி >>> அசதி = வருந்துமாறு சிரிப்பூட்டும் சொல். |
அசந்தர்ப்பம் |
காலப்பொருத்தம் இல்லாமை |
ஆயத்தருப்பம் |
ஆயு (=காலம்) + அத்து (=பொருந்து) + அறு (=இல்லாகு) + அம் = ஆயத்தறுவம் >>> அசந்தர்ப்பம் = காலப் பொருத்தம் இல்லாமை. |
அசந்துட்டி, அசந்துச்~டி |
நிறைவு இன்மை |
அசைத்துற்றி |
அசை (=நீங்கு, இல்லாகு) + துறு (=நிறை) + இ = அசைத்துற்றி >>> அசந்துட்டி >>> அசந்துச்~டி = நிறைவு இன்மை. |
அசப்பியம் |
அவைக்குப் பொருந்தாத சொல் |
அசவ்வியம் |
அசை (=நீங்கு, இல்லாகு, சொல்) + அவை (=கூட்டம்) + இயை (=பொருந்து) + அம் = அசவ்வியம் >>> அசப்பியம் = கூட்டத்தில் சொல்வதற்குப் பொருத்தமில்லாத சொல். |
அசம் |
பிறப்பற்றது |
ஆயம் |
ஆய் (=தோன்று, பிற, நீங்கப்பெறு) + அம் = ஆயம் >>> அசம் = பிறப்பு நீங்கப் பெற்றது |
அசம் |
ஆடு |
அசம் |
அசை (=அசைபோடு, ஆட்டு, முட்டு) + அம் = அசம் = அசைபோடுதல், தலையை ஆட்டுதல், முட்டுதல் ஆகிய பண்புகளைக் கொண்டது. |
அசம் |
வைக்கோல் குவியல் |
அழம் |
அழி (=மிகுதி, வைக்கோல்) + அம் = அழம் >>> அசம் = வைக்கோல் குவியல் |
அசம் |
சந்தனம் |
ஆயம் |
ஆய் (=நறுமணம், பொன், நிறம், நுண்மை, மென்மை) + அம் = ஆயம் >>> அசம் = நறுமணம் கொண்ட மென்மையான பொன்னிற நுண்பொருள். |
அசம்பந்தம் |
தொடர்பு இன்மை |
அசைபந்தம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + பந்தம் (=தொடர்பு) = அசைபந்தம் >>> அசம்பந்தம் = தொடர்பு இல்லாமை |
அசம்பவம் |
நிகழக் கூடாமை |
அசைபம்பம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + பம்பு (=தோன்று, நிகழ், கூடு) + அம் = அசைபம்பம் >>> அசம்பவம் = நிகழக் கூடாமை. |
அசம்பாவிதம் |
நன்மை இல்லாத நிகழ்வு |
அசைபம்பிதம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + பம்பு (=தோன்று, நிகழ்) + இதம் (=நன்மை) = அசைபம்பிதம் >>> அசம்பாவிதம் = நன்மை இல்லாத நிகழ்வு = துன்ப நிகழ்வு. |
அசம்பை, அசம்பி |
தோளில் கட்டித் தொங்கும் பை |
அசைப்பை |
அசை (=கட்டு, ஆடு) + பை = அசைப்பை >>> அசம்பை = கட்டப்பட்டு ஆடுகின்ற பை. |
அசம்மதம் |
ஒப்புதல் இல்லாத கருத்து |
அசம்மறம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அமை (=பொருந்து, ஒப்பு) + அறி (=கருது) + அம் = அசம்மறம் >>> அசம்மதம் = ஒப்புதல் இல்லாத கருத்து = உடன்பாடு இன்மை. |
|
|
|
அசை (=நீங்கு, இல்லாகு) + அமை (=பொருந்து) + ஆயம் (=நன்மை) = அசமயாயம் >>> அசமஞ்சசம் = அவைக்குப் பொருந்தாதது. |
அசமஞ்சன் |
கெட்டவன் |
ஆசமயன் |
ஆசு (=குற்றம்) + அமை (=நிறை, செய்) + அன் = ஆசமயன் >>> அசமஞ்சன் = நிறைய குற்றங்களைச் செய்பவன். |
அசமந்தம் |
சோர்வு மயக்கம் |
அசாமத்தம் |
அசா (=சோர்வு) + மத்தம் (=மயக்கம்) = அசாமத்தம் >>> அசமந்தம் = சோர்வு மயக்கம். |
அசமயம் |
பொருத்தம் இல்லாத நேரம் |
அசமயம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அமை (=நேரம், பொருந்து) + அம் = அசமயம் = பொருத்தம் இல்லாத நேரம். |
அசமர்த்தன் |
திறமை அற்றவன் |
ஆசமறுத்தன் |
ஆசு (=நுட்பம், திறமை) + அமை + அறுதி (=இன்மை) + அன் = ஆசமறுத்தன் >>> அசமர்த்தன் = திறமை அமையப் பெறாதவன் |
அசரம் |
இயக்கம் அற்றது |
அசறம் |
அசை (=செல், இயங்கு) + அறு (=இல்லாகு) + அம் = அசறம் >>> அசரம் = இயக்கம் அற்றது. |
அசரீரி |
அறியவியலாத உடல் / உருவம் |
அச்சறீறி |
அச்சு (=உடல், உருவம்) + அறி + இறு (=முடி, இல்லாகு) + இ = அச்சறீறி >>> அசரீரி = அறிய முடியாத உடல் / உருவம் |
அசரீரி |
தோற்றமில்லாது உயரத்தில் ஒலிப்பது |
அசாரிறி |
அசை (=இல்லாகு) + ஆர் (=தோன்று, ஒலி) + இறை (=உயரம்) + இ = அசாரிறி >>> அசரீரி = தோற்றம் இல்லாது உயரத்தில் ஒலிப்பது. |
அசல் |
முதலானது, மூலம், சிறந்தது |
ஐயல் |
ஐ (=தலைமை, முதன்மை, மேன்மை) + அல் = ஐயல் >>> அசல் = முதலானது, மூலம், மேலானது, சிறந்தது, உயர்ந்தது. |
அசலம் |
அசைவற்றது |
அசலம் |
அசை + அல் (=எதிர்மறை) + அம் = அசலம் = அசைவற்றது. |
அசலம் |
மலை |
ஐயளம் |
ஐ (=மேன்மை, உயர்வு) + அளம் (=செறிவு, இடம்) = ஐயளம் >>> அசலம் = உயரமான செறிவுடைய இடம் = மலை. |
அசலன் |
கடவுள் |
அசலன் |
அசை + அல் (=எதிர்மறை) + அன் = அசலன் = அசைவற்றவன். |
அசலை |
பூமி |
அசாலை |
அசை (=உடுத்து) + ஆலம் (=கடல், நீர்) + ஐ = அசாலை >>> அசலை = கடல் நீரை உடுத்தியது. |
அசன் |
கடவுள் |
அசன் |
அசம் (=பிறப்பற்றது) >>> அசன் = பிறப்பற்றவன். |
அசனம் |
உணவு |
அசாணம் |
அசை (=உண்ணு) + ஆணம் (=பொருள்) = அசாணம் >>> அசனம் = உண்ணும் பொருள். |
அசனம் |
பசி |
அசாணம் |
அசை (=உண்ணு) + ஆணம் (=பற்று, விருப்பம்) = அசாணம் >>> அசனம் = உண்ணும் விருப்பம். |
அசனம் |
கொழுப்பு |
ஆயாணம் |
ஆய் (=வெண்மை, மென்மை, பிரித்தெடு) + ஆணம் (=உடல், உணவு) = ஆயாணம் >>> அசனம் = உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மென்மையான வெண்ணிற உணவு. |
அசனம் |
பகுதி |
ஆயணம் |
ஆய் (=பிரித்தெடு, பகு) + அணம் = ஆயணம் >>> அசனம் = பகுதி |
அசனம் |
அளவு |
ஆயணம் |
ஆய் (=அறி, அள) + அணம் = ஆயணம் >>> அசனம் = அளவு |
அசனவேதி |
சீரகம் |
அசனவேற்றி |
அசனம் (=பசி) + ஏற்று (=தோன்றச்செய்) + இ = அசனவேற்றி >>> அசனவேதி = பசி தோன்றச் செய்வது. |
அசனி |
இடி |
ஆயாணி |
ஆயம் (=மேகம், கூட்டம்) + ஆணை (=கட்டளை) + இ = ஆயாணி >>> அசனி = மேகக் கூட்டத்தின் கட்டளை. |
அசாக்கிரம், அசாக்கிரதை |
செய்ய மறந்து இருத்தல் |
அசாக்கிரம் |
அசை (=சோர், மற) + ஆக்கு (=செய்) + இரு + அம் = அசாக்கிரம் = செய்ய மறந்து இருத்தல். |
அசாத்தியம் |
செய்ய இயலாதது |
அசாற்றியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆற்று (=செய்) + இயை (=இயலு) + அம் = அசாற்றியம் >>> அசாத்தியம் = செய்ய இயலாதது. |
அசாதாரணம் |
இயல்பாக நடவாதது |
அசாறாரணம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=இயல்பு) + ஆர் (=தோன்று, நட) + அணம் = அசாறாரணம் = அசாதாரணம் = இயல்பாக நடவாதது |
அசாந்தம் |
அமைதி இல்லாமை |
அசாற்றம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆறு (=பொறு) + அம் = அசாற்றம் >>> அசாத்தம் >>> அசாந்தம் = பொறுமை இன்மை |
ஆசாமி, அசாமி |
மனிதன் |
ஆயமி |
ஆய் (=அறி, சிந்தி) + அமை (=பொருந்து) + இ = ஆயமி >>> ஆசாமி, அசாமி = சிந்தனை பொருந்தியவன் = மனிதன். |
அசாரம் |
சாறு இல்லாதது |
அசாரம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அரி (=வடிகட்டு) + அம் (=நீர்) = அசாரம் = வடிகட்டும் நீர் அற்றது, சாறில்லாதது. |
அசாரம் |
பயன் அற்றது |
அசாறம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறம் (=நன்மை, பயன்) = அசாறம் >>> அசாரம் = நன்மை / பயன் அற்றது. |
அசாரம் |
தலைமை மண்டபம் |
ஐயறம் |
ஐ (=உயர்வு, தலைமை) + அறை (=இடம்) + அம் = ஐயறம் >>> அசாரம் = உயரமான தலைமை இடம். |
அசி |
வாள், கத்தி |
ஆயி |
ஆய் (=நுண்மை, கூர்மை, குத்து, பிரி, வெட்டு) + இ = ஆயி >>> அசி = குத்துகின்ற / வெட்டுகின்ற கூரிய பொருட்கள். |
அசி |
சிரிப்பு, சிரி |
ஆயி |
ஆய் (=கொண்டாடு, மகிழ், சிரி) + இ = ஆயி >>> அசி = சிரிப்பு |
அசி |
உண்ணு |
அசை |
அசை (=உண்ணு) >>> அசி |
அசிகை |
சிரித்து மகிழும் பேச்சு |
ஆயிகை |
ஆய் (=மகிழ், சிரி) + இகு (=சொல், பேசு) + ஐ = ஆயிகை >>> அசிகை = சிரித்து மகிழ்ந்து பேசுதல். |
அசிங்கம் |
கழிவுப் பொருள் |
ஆயிங்கம் |
ஆய் (=மலம், கழிவு) + இங்கம் (=பொருள்) = ஆயிங்கம் >>> அசிங்கம் = கழிவுப் பொருள். |
அசிங்கம் |
பொருத்தமற்றது |
அசுக்கம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + உக (=பொருந்து) + அம் = அசுக்கம் >>> அசிங்கம் = பொருத்தமற்றது. |
அசித்தி |
கைகூடாமை |
அசிற்றி |
அசை (=நீங்கு, இல்லாகு) + இறு (=முடி, கைகூடு) + இ = அசிற்றி >>> அசித்தி = கைகூடாமை. |
அசித்து |
அறிவற்றவை |
அசிற்று |
அசை (=நீங்கு, இல்லாகு) + இறை (=கருத்து, அறிவு) + உ = அசிற்று >>> அசித்து = அறிவு இல்லாதது. |
அசிதம் |
இருள் |
ஆயிறம் |
ஆய் (=அழகு, ஒளி) + இறு (=அழி, இல்லாகு) + அம் = ஆயிறம் >>> அசிதம் = ஒளி இல்லாமை. |
அசிந்திதம் |
அறிய முடியாதது |
அசிற்றிறம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + இறை (=கருத்து, அறிவு) + இறு (=முடி, இயலு) + அம் = அசிற்றிறம் >>> அசித்திதம் >>> அசிந்திதம் = அறிய இயலாதது. |
அசிந்தியம் |
அறிய இயலாதது |
அசிற்றியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + இறை (=கருத்து, அறிவு) + இயை (=இயலு) + அம் = அசிற்றியம் >>> அசித்தியம் >>> அசிந்தியம் = அறிய இயலாதது. |
அசிபத்திரகம் |
கரும்பு |
ஆயீபத்திரகம் |
ஆய் (=நுண்மை, மென்மை, கூர்மை, வெண்மை) + ஈ (=படை) பத்திரம் (=இலை) + அகம் (=மரம், தண்டு) = ஆயீபத்திரகம் = அசிபத்திரகம்= நுட்பமான மென்மையான வெண்ணிற கூரிய நார்களைக் கொண்ட இலைகளைப் படைத்த தண்டு / மரம். |
அசிரி |
கழிவு / கறை படிந்தவன் |
ஆயிரி |
ஆய் (=மலம், கழிவு, கறை) + இரு (=தங்கு, படி) + இ = ஆயிரி >>> அசிரி = கழிவு / கறை படிந்தவன். |
அசினம் |
விலங்குத் தோல் |
அசூனம் |
அசை (=சுற்றிக் கட்டு) + ஊன் (=தசை) + அம் = அசூனம் >>> அசினம் = தசையைச் சுற்றிக் கட்டியிருப்பது. |
அசீதளம் |
கற்பூரம் |
ஆயிற்றலம் |
ஆய் (=சிறுமை, அழகு, ஒளி, வெண்மை) + இறு (=கொடு) + அலம் (=சுழற்சி, வட்டம்) = ஆயிற்றலம் >>> அசித்தளம் >>> அசீதளம் = ஒளிதரும் வெண்ணிற வட்டமான சிறிய பொருள். |
அசீரணம் |
சீரணம் ஆகாமை |
அசேரணம் |
அசை (=உணவு, இல்லாகு) + எரி + அணம் = அசேரணம் >>> அசீரணம் = உணவு எரிக்கப் படாமை. |
அசீரணம், அசீரியம் |
அழிவற்றது |
அசிறணம், அசிறியம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + இறு (=அழி) + அணம் / இயம் = அசிறணம் / அசிறியம் >>> அசீரணம் / அசீரியம் = அழிவற்றது. |
அசீவம் |
வாழ்வு அற்றவை |
அசுய்வம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + உய்வு (=வாழ்க்கை) + அம் = அசுய்வம் >>> அசூவம் >>> அசீவம் = வாழ்வு அற்றவை. |
அசுகம் |
துன்பம், நோய் |
அசுகம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + உக (=விரும்பு, மகிழ்) + அம் = அசுகம் = மகிழ்ச்சி இல்லாதது = துன்பம், நோய் |
அசுகை |
சந்தேகம் |
ஆசு |
ஆசு (=சந்தேகம்) + கை = ஆசுகை >>> அசுகை |
அசுசி, அசூசி |
அசுத்தம் |
ஆசியி |
ஆசு (=குற்றம், கறை) + இயை (=பொருந்து) + இ = ஆசியி >>> அசுசி = கறை பொருந்தியது. |
அசுணம் |
பூனை |
அசுணம் |
அசை (=பாடு, ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் = அசுணம் = இசையை அனுபவிப்பது. |
அசுணன் |
பூண்டு |
ஆயுணன் |
ஆய் (=காரம், வெண்மை, பிரி) + உண் + அன் = ஆயுணன் >>> அசுணன் = காரமான வெண்மையான பிரிவுகளுடைய உணவு. |
அசுத்தம் |
தூய்மையின்மை |
அசூத்தம் |
அசை (=தங்கு, பொருந்து) + ஊத்தை (=கழிவு) + அம் = அசூத்தம் >>> அசுத்தம் = கழிவுகள் பொருந்தி இருத்தல். |
அசுத்தை |
கெட்ட நடத்தை உடையவள் |
அசிற்றை |
அசை (=செல், நட) + இறு (=கெடு) + ஐ = அசிற்றை >>> அசுத்தை = கெட்ட நடத்தை உடையவள். |
அசுபம் |
துன்பம் |
அசுவம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + உவ (=மகிழ், விரும்பு) + அம் = அசுவம் >>> அசுபம் = மகிழ்ச்சி இல்லாதது. |
அசுரன் |
பயங்கர வடிவும் வலிய உடலும் கொண்டவன் |
அச்சுரன் |
அச்சு (=பயம், உடல், தோற்றம்) + உரம் (=வலிமை) + அன் = அச்சுரன் >>> அசுரன் = பயமுறுத்தும் தோற்றமும் வலுவான உடலும் கொண்டவன். |
அசுவாரசியம் |
விருப்பமற்றது, விருப்பமின்மை |
அசுவாறயியம் |
அசை (=தங்கு, பொருந்து) + உவ (=மகிழ், விரும்பு) + அறை (=இன்மை) + இயம் = அசுவாறயியம் >>> அசுவாரசியம் = மகிழ்ச்சி / அல்லது விருப்பம் பொருந்தாமை.. |
அசுழம் |
நாய் |
அசுழம் |
அசை (=தங்கு, ஒலி, நீட்டு, உணவு, வருந்து) + உழ (=பழகு, அலை) + அம் = அசுழம் = உணவுக்காக அலைந்து வருந்துவதும் பழகித் தங்குவதும் நீட்டி ஒலிப்பதும் ஆனது. |
அசூயை, அசுயை |
பொறாமை, காழ்ப்புணர்வு |
அசூழை |
அசை (=குன்று, கெடு) + ஊழ் (=எண்ணு, முதிர், காழ்) + ஐ = அசூழை >>> அசூயை = கேடு நினைக்கும் காழ்ப்புணர்வு. |
அசோகம் |
துன்பமின்மை |
அசோங்கம் |
அசை (=வருந்து) + ஓங்கு (=நீங்கு, இல்லாகு) + அம் = அசோங்கம் >>> அசோகம் = வருத்தம் இன்மை. |
அசௌக்கியம், அசௌகரியம் |
துன்ப மிகுதி |
அசோங்கியம் |
அசை (=வருந்து, துன்புறு) + ஓங்கு (=பெருகு) + இயம் = அசோங்கியம் >>> அசௌக்கியம் = துன்பம் மிக்க நிலை. |
அஞ்சம் |
அன்னம் |
ஆயம் |
ஆய் (=பால், பிரி) + அம் (=நீர்) = ஆயம் >>> அசம் >>> அஞ்சம் >>> அம்சம் = பாலில் இருந்து நீரைப் பிரிப்பது. |
அஞ்சம், அம்சம் |
பிரிவு, கூறுபாடு |
ஆயம் |
ஆய் (=பிரி) + அம் = ஆயம் >>> அசம் >>> அஞ்சம் >>> அம்சம் = பிரிவு, கூறுபாடு. |
அஞ்சம், அம்சம் |
அழகு |
ஆய் |
ஆய் (=அழகு) + அம் = ஆயம் >>> அசம் >>> அஞ்சம் >>> அம்சம் |
அஞ்சல் |
சத்திரம் |
அச்சல் |
அசை (=செல், தங்கு, கட்டு) + அல் = அச்சல் >>> அஞ்சல் = செல்லும் வழியில் தங்குவதற்காக கட்டப்பட்டது. |
அஞ்சல், அஞ்சி |
கடிதம் |
ஆசல் |
ஆசு (=எழுது, இலக்கு, விரைவு) + அல் = ஆசல் >>> அஞ்சல் = இலக்கை விரைந்தடையும் எழுத்து. |
அஞ்சலி |
வவ்வால் |
அச்சலி |
அசை (=தங்கு, தண்டு, கிளை, தொங்கு, இயங்கு) + அல் (=பகல், இரவு) + இ = அச்சலி >>> அஞ்சலி = பகலில் கிளையில் தொங்கியவாறு தங்குவதும் இரவில் இயங்குவதும் ஆனது. |
அஞ்சலி |
பலாப்பழம் |
அச்சளி |
அசை (=தண்டு) + அளி (=கனி, தோன்று, செறி, பெரு) = அச்சளி >>> அஞ்சலி = தண்டில் தோன்றும் செறித்துப் பெருத்த கனி. |
அஞ்சலி |
வணக்கம் |
அச்சளி |
அசை (=வளை, பணி, சொல்) + அளி (=அன்பு) = அச்சளி >>> அஞ்சலி = அன்புடன் பணிந்து கூறப்படுவது. |
அஞ்சலி |
கைகளால் அள்ளப்பட்டது |
அச்சள்ளி |
அசை (=உணவு) + அள்ளு (=கைகளால் முக) + இ = அச்சள்ளி >>> அஞ்சலி = கைகளால் முகக்கப்படும் உணவு. |
அஞ்சலி |
அம்பு |
ஆயள்ளி |
ஆய் (=விரை, குத்து) + அள் (=செறி) + இ = ஆயள்ளி >>> அசலி >>> அஞ்சலி = விரைந்துசென்று குத்திச் செறிவது. |
அஞ்சனம் |
பூசுமை |
ஆசாணம் |
ஆசு (=நுட்பம், பற்று, பூச்சு) + ஆணம் (=குழம்பு, பொருள்) = ஆசாணம் >>> அஞ்சனம் = பூசப்படும் நுட்பமான குழைபொருள். |
அஞ்சனம் |
இருள், கருமை |
ஆயணம் |
ஆய் (=ஒளி) + அணை (=அவி, அழி) + அம் = ஆயணம் >>> அசனம் >>> அஞ்சனம் = ஒளியின் அழிவு = இருள், கருமை |
அஞ்சனம் |
குற்றம், பாவம் |
ஆசு |
ஆசு (=குற்றம்) + அணம் = ஆசணம் >>> அஞ்சனம் = பாவம் |
அஞ்சனம் |
யானை |
ஐயாணம் |
ஐ (=பெருமை) + ஆணம் (=உடல்) = ஐயாணம் >>> அச்சனம் >>> அஞ்சனம் = பெரிய உடலைக் கொண்டது = |
அஞ்சனா |
விளைச்சல் மதிப்பு |
ஆயெண்ணை |
ஆயம் (=விளைச்சல்) + எண் (=அள, மதி) + ஐ = ஆயெண்ணை >>> அஞ்செனா >>> அஞ்சனா = விளைச்சல் மதிப்பு. |
அஞ்சி |
வணங்கு |
அசை |
அசை (=வளை, பணி, வணங்கு) + இ = அச்சி >>> அஞ்சி |
அஞ்சு |
ஒளி, அழகு |
ஆய் |
ஆய் (=அழகு, ஒளி) + உ = ஆயு >>> அசு >>> அஞ்சு |
அஞ்ஞாதம் |
அறியப்படாமை |
அச்சறம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + அறி + அம் = அச்சறம் >>> அஞ்சதம் >>> அஞ்ஞாதம் = அறியப்படாமை. |
அஞ்ஞானம் |
அறியாமை |
அச்சாணம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆணம் (=அறிவு) = அச்சாணம் >>> அஞ்சானம் >>> அஞ்ஞானம் = அறிவின்மை |
அட்சதை |
வாழ்த்தித் தூவப்படுவது |
ஆசெறை |
ஆசி (=வாழ்த்து) + எறி (=தூவு) + ஐ = ஆசெறை >>> அச்செதை >>> அட்சதை = வாழ்த்தித் தூவப்படுவது |
அட்சம் |
கண் |
ஆயம் |
ஆய் (=அறி, பார், ஒளி) + அம் = ஆயம் >>> அசம் >>> அச்சம் >>> அட்சம் = ஒளியால் பார்ப்பது = கண். |
அட்சயம் |
குறைவற்றது |
அச்சாயம் |
அசை (=நீங்கு, இல்லாகு) + ஆய் (=சுருங்கு, குறை) + அம் = அச்சாயம் >>> அட்சயம் = குறைவு இல்லாதது, முழுமை |
அட்சயன் |
கடவுள் |
அச்சாயன் |
அச்சாயம் (=முழுமை) + அன் = அச்சாயன் >>> அட்சயன் |
அட்சரம் |
எழுத்து |
அச்சறம் |
அசை (=ஒலி) + அறி (=பயில்) + அம் = அச்சறம் >>> அட்சரம் = பயிலப்படும் ஒலி |
அட்டகம் |
எட்டுடையது |
எட்டகம் |
எட்டு + அகம் = எட்டகம் >>> அட்டகம் = எட்டைக் கொண்டது |
அட்டகாசம் |
வெற்றிக் களிப்பால் ஆகும் பெருஞ்சிரிப்பு |
அட்டகாயம் |
அடு (=வெல்) + அகை (=எழு, பெரு) + ஆய் (=மகிழ், களி, சிரி) + அம் = அட்டகாயம் >>> அட்டகாசம் = வெற்றிக் களிப்பால் எழுகின்ற பெருஞ்சிரிப்பு. |
அட்டம் |
பக்கம் |
அட்டம் |
அடு (=சார்) + அம் = அட்டம் = சார்ந்திருப்பது. |
அட்டம் |
பகை |
அன்றம் |
அன்று (=பகை) + அம் = அன்றம் >>> அற்றம் >>> அட்டம் |
அட்டம் |
குறுக்கீடு, தடை |
அட்டம் |
அடை (=தடு, குறுக்கிடு) + அம் = அட்டம் = குறுக்கீடு, தடை. |
அட்டம் |
மாடிவீடு |
ஏற்றம் |
ஏறு (=உயர், தங்கு) + அம் = ஏற்றம் >>> அட்டம் = உயரமான தங்குமிடம். |
அட்டம், அச்~டம் |
எட்டு |
எட்டு |
எட்டு + அம் = எட்டம் >>> அட்டம் >>> அச்~டம் |
அட்டமம் |
எட்டாவது |
எட்டமம் |
எட்டு + அமை + அம் = எட்டமம் >>> அட்டமம் = எட்டாக அமைந்தது. |
அட்டவணை |
குறுக்கு நெடுக்குடையது |
அட்டபாணை, அற்றமணை |
(1) அட்டம் (=குறுக்கு) + பாணி (=நீட்டம், நெடுக்கு) + ஐ = அட்டபாணை >>> அட்டவணை = குறுக்கும் நெடுக்கும் உடையது. (2) அறு (=வகு) + அமை + அணி (=வரிசை) + ஐ = அற்றமணை >>> அட்டவணை = வரிசையாக வகுத்து அமைக்கப்பட்டது. |
அட்டாணி |
கோட்டைச் சுவர்மேல் வீடு |
ஏற்றணி |
ஏறு (=உயர்) + அணை (=சுவர், தங்குமிடம்) + இ = ஏற்றணி >>> அட்டாணி = சுவரின் உயரே உள்ள தங்குமிடம். |
அட்டாலை, அட்டாலம் |
உயரத்தில் உள்ள வீடு |
ஏற்றளை, ஏற்றளம் |
ஏறு (=உயர், தங்கு) + அளம் (=இடம்) + ஐ = ஏற்றளை >>> அட்டாளை >>> அட்டாலை = உயரத்தில் உள்ள தங்குமிடம். |
அட்டி |
தடை, தாமதம் |
அட்டி |
அடை (=தடு, தாமதி) + இ = அட்டி = தடை, தாமதம் |
அட்டிகை, அட்டியல் |
கனமான தங்க நகை |
அட்டீகை |
அடை (=திணி, செறி, கனம், செய்) + ஈகை (=பொன்) = அட்டீகை >>> அட்டிகை = கனமாகச் செறித்துச் செய்த தங்க நகை. |
அடக்கம் |
பறை |
அடக்கம் |
அடி (=தட்டு, ஒலி) + அக்கு (=தோல்) + அம் = அடக்கம் = தட்டி ஒலிக்கப்படும் தோற்பொருள். |
அடத்தி |
மொத்த விற்பனை |
அடத்தி |
அடை (=விலை, கொள், வாங்கு, பொருள்) + அத்து (=கூடு, மிகு) + இ = அடத்தி = மிகுதியான பொருளை விலைக்கு வாங்குதல். |
அடத்தி |
இலாபம், தரகு |
அடத்தி |
அடை (=விலை, கொள், பொருள்) + அத்து (=கூடு) + இ = அடத்தி = பொருளின் விலையை விட கூடுதலாகக் கொள்வது |
அடம் |
பிடிவாதம் |
அற்றம் |
அற்றம் (=முடிவு) >>> அட்டம் >>> அடம் = தீர்மானம், பிடிவாதம் |
அடம் |
வன்மம், பகை |
அற்றம் |
அற்றம் (=அழிவு, கேடு, தீர்மானம், எண்ணம்) >>> அட்டம் >>> அடம் = அழிப்பதற்கான / கெடுப்பதற்கான தீர்மானம். |
அடம் |
கேடு |
அற்றம் |
அற்றம் (=அழிவு, கேடு) >>> அட்டம் >>> அடம் |
அடவி |
காடு, தோட்டம் |
அடவி |
அடை (=இலை, செறி, இடம்) + அவை (=கூட்டம், மிகுதி) + இ = அடவி = இலைகள் மிகுதியாகச் செறிந்திருக்கும் இடம். |
அடவி |
மிகுதியான செறிவு |
அடவி |
அடை (=செறி) + அவை (=கூட்டம், மிகுதி) + இ = அடவி = மிகுதியான செறிவு |
அடாசு |
கெட்டுப்போனது |
அடாழு |
அடை (=உறு, பொருள்) + அழி (=கெடு) + உ = அடாழு >>> அடாசு = கேடு உற்ற பொருள் |
அடாத்து, அடாத்காரம் |
பலாத்காரம் |
அடாற்று |
அடு (=வருத்து) + ஆற்று (=வலியடை, செய்) = அடாற்று >>> அடாத்து = வலிமையால் வருத்திச் செய்யப்படுவது. |
அடாத்து |
அவமரியாதை |
அடாற்று |
அடி (=கீழ், தாழ்வு) + ஆற்று (=செய்) = அடாற்று >>> அடாத்து = தாழ்வு செய்தல். |
அடாத்து |
காரணம் இல்லாமை |
அறாத்து |
அறு (=இல்லாகு) + ஆதி (=காரணம்) + உ = அறாத்து >>> அடாத்து = காரணம் இல்லாமை. |
அடாவந்தி |
அநியாயம் |
அடாவற்றி |
அடு (=பொருந்து) + ஆ (=எதிர்மறை) + அறம் (=நியாயம்) + இ = அடாவற்றி >>> அடாவத்தி >>> அடாவந்தி = பொருந்தா நியாயம் |
அடாவந்தி |
பெருந்துன்பம் |
அடவதி |
அடு (=மிகு) + அவதி (=துன்பம்) = அடவதி >>> அடாவந்தி = மிக்க துன்பம். |
அடாவந்தி |
பொய்யுரை |
அற்றவற்றி |
அற்றம் (=பொய்) + அறை (=சொல், உரை) + இ = அற்றவற்றி >>> அட்டவத்தி >>> அடாவந்தி = பொய்யாக உரைக்கப்படுவது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.