வியாழன், 11 பிப்ரவரி, 2021

64 - (அக்கம் -> அச்சுறை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

சத்தியம்

உண்மை

அற்றம்

(2) அற்றம் (=உண்மை) + இயம் = அற்றியம் >>> சத்தியம்

சதுக்கம்

சமாதி

அற்றிங்கம்

அற்றம் (=முடிவு, இறுதி, மரணம்) + இங்கு (=தங்கு) + அம் = அற்றிங்கம் >>> சத்திக்கம் >>> சதுக்கம் = மரணித்தோர் தங்கும் இறுதியான இடம்.

அஃகம், அக்கம்

தானியம்

அஃகம்

அஃகு (=சுருங்கு, சிறு) + அம் (=உணவு) = அஃகம் = சிறிய உணவு

அக்கசாலை

கொல்லன் பட்டறை

அகைச்சாலை

அகை (=எரி, அடி, துண்டாக்கு) + சாலை = அகய்ச்சாலை >>> அக்கசாலை = எரித்தல், அடித்தல், துண்டாக்குதல் முதலான வேலைகளைச் செய்யும் இடம் = கொல்லன் பட்டறை

அக்கடா

ஓய்வு

ஆக்கறை

ஆக்கம் (=செயல்) + அறை (=இன்மை) = ஆக்கறை >>> அக்கடை >>> அக்கடா = செயலின்மை = ஓய்வு.

அக்கடி

பயணச் சோர்வு

அக்கடி

அகை (=வருந்து) + அறை (=அலை) + இ = அக்கறி >>> அக்கடி = அலைச்சலால் உண்டாகிய வருத்தம்

அக்கதம், அக்கதை

முழு தானியம்

அக்கற்றம்

அக்கம் (=தானியம்) + அற்றம் (=முடிவு, முழுமை) = அக்கற்றம் >>> அக்கதம் = முழு தானியம்

அக்கப்போர்

வம்புச் சண்டை

ஆக்கப்போர்

ஆக்கம் (=சொல்) + போர் (=சண்டை) = ஆக்கப்போர் >>> அக்கப்போர் = சொல்லால் சண்டை இடுதல்.

அக்கபிரம்

மாமரம்

அகைவீரம்

அகை (=எரி, தளிர்) + வீரை (=மரம்) + அம் = அகைவீரம் >>> அக்கபிரம் = எரிநிறத் தளிர் கொண்ட மரம்.

அக்காரம்

கரும்பு

அக்காரம்

அகம் (=இன்பம்) + ஆர் (=தண்டு, பொருந்து, உண்) + அம் (=நீர்) = அக்காரம் = இனிய நீர் உணவு பொருந்திய தண்டு = கரும்பு

அக்காரம்

சர்க்கரை

அக்காரம்

அகை (=எரி, காய்ச்சு) + ஆர் (=தண்டு, பெறு, உண்) + அம் (=நீர்) = அக்காரம் = தண்டின் நீரைக் காய்ச்சிப் பெற்ற உணவு.

சருக்கரை, சர்க்கரை

கரும்பில் பெற்ற இனிப்பு

அருக்காரை

அருக்கு (=காய்ச்சு) + ஆர் (=தண்டு, பெறு, உண்) + ஐ = அருக்காரை >>> சருக்கரை >>> சர்க்கரை = தண்டிலிருந்து பெற்றுக் காய்ச்சிய உணவு.

சக்கரை

கரும்பில் பெற்ற இனிப்பு

அக்காரை

அகை (=எரி, காய்ச்சு) + ஆர் (=தண்டு, பெறு, உண்) + ஐ = அக்காரை >>> சக்கரை = தண்டிலிருந்து பெற்றுக் காய்ச்சிய உணவு

அக்காரம்

ஆடை

அக்காரம்

அகை (=தடு, மறை) + ஆர் (=அணி) + அம் = அக்காரம் = மறைப்பதற்காக அணியப்படுவது.

அக்கம்

கயிறு

ஆக்கம்

ஆக்கு (=கட்டு) + அம் = ஆக்கம் >>> அக்கம் = கட்ட உதவுவது

அக்கம், அக்கு

கண்

ஆகம்

ஆகம் (=கண்) >>> அக்கம்

அக்கம்

தங்கநாணயம்

ஆக்கம்

ஆக்கம் (=பொன், செய்யப்பட்டது, பணம்) >>> அக்கம் = பொன்னால் செய்யப்பட்ட பணம்.

அக்கம்

பொன்

ஆக்கம்

ஆக்கம் (=பொன்) >>> அக்கம்

அக்கம்

குறுக்குக் கோடு

அக்கம்

அகை (=தடு, குறுக்கிடு) + அம் = அக்கம் = குறுக்கிடுவது = பூகோளத்தின் குறுக்குக்கோடு.

அக்கரம்

மாமரம்

அக்காரம்

அகை (=எரி, தளிர்) + ஆர் (=நிறை) + அம் = அக்காரம் >>> அக்கரம் = எரிநிறத் தளிர் நிறைந்தது.

அக்கரம்

எழுத்து, கல்வி

ஆக்கறம்

ஆக்கு (=உருவாக்கு) + அறி + அம் = ஆக்கறம் >>> அக்கரம் = அறிவதற்காக படைப்பது = எழுத்து, கல்வி.

அக்கரன்

கடவுள்

ஆக்காரன்

ஆக்கு (=படை) + ஆர் (=பூமி, உலகம்) + அன் = ஆக்காரன் >>> அக்கரன் = உலகைப் படைத்தவன் = கடவுள்

அக்கன்

நாய்

அக்கன்

அகை (=செலுத்து, ஏவு) + அன் = அக்கன் = ஏவப்படுபவன்.

அகதி, அக்கத்தி

வீட்டை இழந்தவன்

அக்கற்றி

அகம் (=வீடு, இடம்) + அறு (=இல்லாகு, இழ) + இ = அக்கற்றி >>> அக்கத்தி >>> அகதி = வீடு / இடத்தை இழந்தவன்.

அக்கி

கண்

ஆகம்

ஆகம் (=கண்) + இ = அக்கி

அக்கி, அங்கி

தீ

அக்கி

அகை (=எரி) + இ = அக்கி = எரிவது = தீ.

அக்கிரணி

முதல்வன்

அக்கிறாணி

அகம் (=இடம்) + இறை (=தலைமை) + ஆண் + இ = அக்கிறாணி >>> அக்கிரணி = தலைமை இடத்து ஆண்.

அக்கிரம்

முதன்மை, உச்சி, நுனி

அக்கிறம்

அகம் (=இடம்) + இறை (=தலைமை) + அம் = அக்கிறம் >>> அக்கிரம் = தலைமை இடம் = முதன்மை, உச்சி, நுனி.

அக்கிரமம்

அநீதி

அக்கிறைமம்

அகை (=முறி) + இறை (=நீதி) + மம் = அக்கிறைமம் >>> அக்கிரமம் = முறிக்கப்பட்ட நீதி.

அக்கிராசனம்

அவைத் தலைமை

அக்கிரசனம்

அக்கிரம் (=முதன்மை) + சனம் (=மக்கள் கூட்டம்) = அக்கிரசனம் >>> அக்கிராசனம் = மக்கள் கூட்டத்தின் முதன்மை

அக்கிராசனர்

அவைத் தலைவர்

அக்கிரசனர்

அக்கிரம் (=முதன்மை) + சனம் (=மக்கள் கூட்டம்) + அர் = அக்கிரசனர் >>> அக்கிராசனர் = மக்கள் கூட்டத்தின் முதல்வர்.

அக்கினி

பசி, தீ

அக்கினி

அகம் (=வயிறு, பொருள்) + இனை (=எரி) + இ = அக்கினி = (1) வயிற்றுள் எரிவது  (2) பொருளை எரிப்பது.

அக்கு

எலும்பு

ஆக்கூ

ஆக்கம் (=உறுதி) + ஊ (=தசை) = ஆக்கூ >>> அக்கு = தசைக்கு உறுதியாக இருப்பது = எலும்பு

அக்கு

காளையின் திமில்

ஆக்கூ

ஆக்கம் (=உறுதி, உயர்வு, மிகுதி) + ஊ (=தசை) = ஆக்கூ >>> அக்கு = உறுதியான உயர்ந்த மிகுதியான தசை.

அக்கு, அக்குசு

பற்று, உரிமை

அகம்

அகம் (=பொருள், இடம், அன்பு, பற்று) + உ = அக்கு = பொருளின் / இடத்தின் மீதான பற்று = உரிமை.

அக்குணி

மிகச்சிறிய அளவினது

அக்குணி

அஃகு (=சுருங்கு, நுணுகு) + உண்மை (=தன்மை) + இ = அக்குணி = நுணுகிய தன்மை கொண்டது.

அகங்காரம்

செருக்கு

அகங்கரம்

அகம் (=செருக்கு) + கரம் = அகங்கரம் >>> அகங்காரம்.

அகங்காரம்

கடும் கோபம்

அகைக்கறம்

அகை (=உயர், மிகு) + கறு (=சின) + அம் = அகைக்கறம் >>> அகங்காரம் = மிகுந்த சினம்

அகங்கரி

செருக்கு, சின

அகங்கரி

அகங்காரம் (=செருக்கு, கோபம்) >>> அகங்கரி = செருக்குறு, சின

அகசியம்

பகடி, ஏளனம்

அகயியம்

அகை (=மலர், சிரி) + இயம் (=சொல், பேச்சு) = அகயியம் >>> அகசியம் = சிரிப்பூட்டும் பேச்சு = பகடி, ஏளனம்.

அகசு

பகல்

அகாயு

அகை (=எரி, ஒளிர்) + ஆயு (=காலம்) = அகாயு >>> அகசு = ஒளிரும் காலம் = பகல்.

அகடியம்

அநீதி

அகறியம்

அகை (=முறி) + அறம் (=நீதி) + இயம் = அகறியம் >>> அகடியம் = முறிக்கப்பட்ட நீதி.

அகண்டம், அகண்டிதம்

முழுமை

அகற்றம்

அகை (=முறி, அறு) + அற்றம் (=இன்மை) = அகற்றம் >>> அகட்டம் >>> அகண்டம் = முறிக்கப் / அறுக்கப் படாதது = முழுமையானது

அகண்டம்

வட்டமான விளக்கு

அகண்டம்

அகை (=எரி, ஒளிர்) + அண்டு (=வளையம், வட்டம்) + அம் = அகண்டம் = வட்டமான விளக்கு.

அகண்டன், அகண்டிதன்

கடவுள்

அகண்டன்

அகண்டம் (=முழுமை) >>> அகண்டன் = முழுமையானவன்

அகண்ணியம்

அவமானம்

அகண்ணியம்

அகை (=மதி) + அணை (=கெடு) + இயம் (=சொல்) = அகண்ணியம் = மதிப்பைக் கெடுக்கும் சொல்.

அகத்தாழம்

மாலைநேர்ம்

அகைத்தாழம்

அகை (=எரி, ஒளிர்) + தாழ் (=குறை) + அம் = அகைத்தாழம் >>> அகத்தாழம் = ஒளி குறையும் காலம் = மாலைப் பொழுது

அகந்தை

செருக்கு

அகந்தை

அகம் (=செருக்கு) + தை = அகந்தை.

அகம்

மரம்

அகம்

அகை (=தோன்று, கிளை, செழி, வளர், உயர்) + அம் = அகம் = தோன்றிக் கிளைத்து உயர்ந்து வளர்வது.

அகம்

பூமி

அகம்

அகம் (=இடம்) >>> அகம் = பூமி

அகம்

மலை

அகம்

அகை (=தோன்று, உயர்) + அம் = அகம் = உயர்ந்து தோன்றுவது

அகம்

பாவம், குற்றம்

அகம்

அகை (=அடி, வருத்து, அறு, கொல்) + அம் = அகம் = அடித்தல், கொல்லுதல், வருத்துதல் = குற்றம், பாவம்.

அகம்

கறை

அழுக்கு

அழுக்கு (=கறை) + அம் = அழுக்கம் >>> அய்க்கம் >>> அகம்

அகம்

ஆசை, அன்பு

ஏக்கம்

ஏக்கம் (=ஆசை, விருப்பம்) >>> அகம்

அகம்

செருக்கு

அகம்

அகை (=பிரி, தனி, உயர், மதி, எண்ணு) + அம் = அகம் = தானே உயர்வு என்று எண்ணுதல்.

அகம்

உயிர்

அகம்

அகை (=தோன்று, செலுத்து, இயக்கு) + அம் = அகம் = தோன்றி இயக்குவது = உயிர்.

அகம்

மனம்

அகம்

அகை (=மதி, எண்ணு) + அம் = அகம் = எண்ணம் = மனம்.

அகம்

பொருள்

ஆக்கம்

ஆக்கம் (=பொருள்) >>> அகம்

அகம்

நீர்

ஆக்கம்

ஆக்கம் (=நீர்) >>> அகம்

அகம்பன்

அசைவு இல்லாதவன்

அகவ்வன்

அகை (=செல், அசை) + அவி (=கெடு, இல்லாகு) + அன் = அகவ்வன் >>> அகம்பன் = அசைவு இல்லாதவன்.

அகம்மியம்

அணுகக் கூடாதது / இயலாதது

அகவ்வியம்

அகை (=செல், அணுகு) + அவி (=கெடு, இல்லாகு) + இயை + அம் = அகவ்வியம் >>> அகம்மியம் = அணுகக் கூடாதது, அணுக இயலாதது.

அகம்மியம்

அறியக் கூடாதது / இயலாதது

அகவ்வியம்

அகை (=மதி, அறி) + அவி (=கெடு, இல்லாகு) + இயை + அம் = அகவ்வியம் >>> அகம்மியம் = அறியக் கூடாதது, அறிய இயலாதது.

அகமம்

மரம்

அகம்

அகம் (=மரம்) + அம் = அகமம்

அகமருடணம், அகமருடம்

பாவத்தை மாற்றுதல்

அகமருட்டணம்

அகம் (=பாவம்) + மருட்டு (=மாற்று) + அணம் = அகமருட்டணம் >>> அகமருடணம் = பாவத்தை மாற்றுதல்.

அகர்த்தவியம்

செய்யக் கூடாதது

ஆக்கார்தபியம்

ஆக்கு (=செய்) + ஆர் (=பொருந்து) + தபு (=கெடு) + இயம் = ஆக்கார்தபியம் >>> அகர்த்தவியம் = பொருத்தம் கெட்ட செயல்.

அகர்முகம்

வைகறை

அகரிமுகம்

அகை (=எரி, ஒளிர்) + அரி (=பொழுது) + முகை (=தோன்று) + அம் = அகரிமுகம் >>> அகர்முகம் = ஒளி தோன்றும் பொழுது

அகரம்

பாதரசம்

ஆய்கறம்

ஆய் (=ஒளி, வெண்மை) + கறை (= நஞ்சு) + அம் (=நீர்) = ஆய்கறம் >>> ஐகரம் >>> அகரம் = வெண்மையாய் ஒளிரும் நச்சு நீர்.

அகரம்

ஊர்

அகாரம்

அகம் (=இடம்) + ஆர் (=நிறை, பொருந்து, தங்கு, கூடு) + அம் = அகாரம் >>> அகரம் = நிறைவாய்க் கூடித் தங்கும் இடம்.

அகராதி

அ எழுத்தில் தொடங்குவது

அகராதி

அகரம் (= அ எழுத்து) + ஆதி (=தொடக்கம்) = அகராதி = அ எழுத்தில் தொடங்குவது.

அகளங்கம்

தூய்மை

அகலகம்

அகல் (=நீங்கு) + அகம் (=கறை) = அகலகம் >>> அகளங்கம் = கறை நீங்கியது.

அகளம்

உடல்/வடிவம் இன்மை

ஆகலம்

ஆகம் (=உடல், வடிவம்) + அல் (=எதிர்மறை) + அம் = ஆகலம் >>> அகளம் = உடல் / வடிவம் இன்மை.

அகற்பம்

இயற்கை

அகரும்பம்

அகை (=பிரி, தனி) + அரும்பு (=தோன்று) + அம் = அகரும்பம் >>> அகர்ப்பம் >>> அகற்பம் = தானே தோன்றியது.

அகற்பன்

கடவுள்

அகரும்பன்

அகை (=பிரி, தனி) + அரும்பு (=தோன்று) + அன் = அகரும்பன் >>> அகர்ப்பன் >>> அகற்பன் = தானே தோன்றியவன்.

அகச்`மாத்து, அகசுமாத்து

திட்டமிடாமல் நிகழ்வது

அகைமத்து

அகை (=அறு, இல்லாகு, தோன்று, நிகழ்) + மதி (=எண்ணு, திட்டமிடு) + உ = அகைமத்து >>> அகய்மாத்து >>> அகச்`மாத்து = திட்டமிடாமல் நிகழ்வது.

அகாடி

முன்புறம்

அகாடி

அகை (=தோன்று) + அடி (=முதல்) = அகாடி = முதலில் தோன்றுவது = முன்புறம்.

அகாதம்

மிக்க ஆழம்

அகாழுந்தம்

அகை (=தாமதி, நீளு) + அழுந்து (=ஆழம்) + அம் = அகாழுந்தம் >>> அகாய்த்தம் >>> அகாதம் = நீண்ட ஆழம்.

அகாதம்

ஆழம் மிக்க நீர்

அகாழுந்தம்

அகை (=செழி, மிகு) + அழுந்து (=ஆழம்) + அம் (=நீர்) = அகாழுந்தம் >>> அகாய்த்தம் >>> அகாதம் = ஆழம் மிகுந்த நீர்.

அகாரம்

வீடு

அகாரம்

அகம் (=இடம்) + ஆர் (=தங்கு) + அம் = அகாரம் = தங்குமிடம்

அகி

பாம்பு

ஆய்கை

ஆய் (=கொத்து, நஞ்சு) + கை  (=சின, செலுத்து) = ஆய்கை >>> ஆகி >>> அகி = சினம்கொண்டு கொத்தி நஞ்சைச் செலுத்துவது.

அகி

இரும்பு

அயகை

அயம் (=உலோகம்) + கை (=வலிமை) = அயகை >>> ஆகி >>> அகி = வலுவான உலோகம்

அகிஞ்சனன்

ஏழை

அகிஞ்சாணன்

அகம் (=வயிறு) + இஞ்சு (=வற்று, சுருங்கு) + ஆணம் (=பொருள்) + அன் = அகிஞ்சாணன் >>> அகிஞ்சனன் = வயிறும் பொருளும் வற்றிச் சுருங்கியவன்.

அகிஞ்சை, அகிம்சை

துன்புறுத்தாமை

அகிஞ்சை

அகை (=வருத்து, அடி) + இஞ்சு (=வற்று, இல்லாகு) + ஐ = அகிஞ்சை >>> அகிம்சை = வருத்துதல் இல்லாதது.

அகிதம்

துன்பம்

அகிதம்

அகை (=வருத்து, அடி) + இதம் = அகிதம் = வருத்தம், துன்பம்

அகிதம்

இடையூறு

அகிதம்

அகை (=தடு) + இதம் = அகிதம் = தடை, இடையூறு.

அகிதன்

பகைவன்

அகிதன்

அகிதம் (=இடையூறு) + அன் = அகிதன் = இடையூறு செய்பவன்

அகிருத்தியம்

செய்யக் கூடாதவை

அகிறுத்தியம்

அகை (=தடு) + இறுத்து (=செய்) + இயம் = அகிறுத்தியம் >>> அகிருத்தியம் = தடுக்கப்பட்ட செயல்.

அகிலம்

பூமி

அகிலம்

அகை (=செழி, பெரு) + இல் (=வீடு) + அம் = அகிலம் = பெரிய வீடு

அகிலம்

பிரபஞ்சம், பெருவெளி

அகிலம்

அகை (=செழி, பெரு) + இல் (=இடம், வெளி) + அம் = அகிலம் = பெருவெளி, பேரிடம், பிரபஞ்சம்.

அகிலம்

முழுமை

அகிலம்

அகை (=கிளை, பிரி) + இலம் (=இன்மை) = அகிலம் = பிரிவற்றது

அகிலம்

நீர், மழை, கடல்

ஆக்கிளம், அகிளம்

(1) ஆக்கம் (=படைப்பு) + இளை (=மேகம்) + அம் = ஆக்கிளம் >>> அகிலம் = மேகத்தின் படைப்பு = மழை, நீர். (2) அகம் (=பூமி) + இளை (=கட்டுவேலி) + அம் = அகிளம் >>> அகிலம் = பூமிக்குக் கட்டுவேலியாய் இருப்பது = கடல், நீர்.

அகுட்டம்

மிளகு

அகூட்டம்

அகை (=எரி, மிகு) + ஊட்டம் (=உணவு) = அகூட்டம் >>> அகுட்டம் = எரிச்சல் மிக்க உணவு.

அகுதி

வீட்டை இழந்தவன்

அகிறி

அகம் (=வீடு, இடம்) + இறு (=வீழ், தோலு, இழ) + இ = அகிறி >>> அகுதி = வீட்டை / இடத்தை இழந்தவன்.

அகோரம்

கடுங்கோபம்

அகோறம்

அகை (=எரி, சின) + உறு (=மிகுதி) + அம் = அகோறம் >>> அகோரம் = மிகுந்த சினம்

அங்கணம்

முற்றம்

அக்காணம்

அகை (=செல், முற்படு) + ஆணம் (=வீடு, இடம்) = அக்காணம் >>> அங்கணம் = வீட்டின் முன்புள்ள இடம்.

அங்கணம்

சாக்கடை, சேறு

அக்காணம்

அக்கு (=கறை) + ஆணம் (=குழம்பு) = அக்காணம் >>> அங்கணம் = கறையுடைய குழம்பு = சாக்கடை, சகதி.

அங்கணம்

இடம்

அக்கணம்

அகம் (=இடம்) + அணம் = அக்கணம் >>> அங்கணம்

அங்கணம்

கட்டட அறைகள்

அக்காணம்

அகை (=தடு, பிரி) + ஆணம் (=வீடு) = அக்காணம் >>> அங்கணம் = வீட்டின் தடுக்கப்பட்ட பிரிவுகள்.

அங்கணம்

தூண்களின் இடைவெளி

அக்காணம்

அகை (=இடைவெளி) + ஆணம் (=தூண்) = அக்காணம் >>> அங்கணம் = தூண்களுக்கு இடையிலான வெளி.

அங்கணி, அங்கனி

கற்றாழை

அக்காணி

அகை (=அறு, வெளிப்படுத்து, எரி, ஒளிர்) + ஆணம் (=குழம்பு) + இ = அக்காணி >>> அங்கணி = அறுத்தால் ஒளிரும் குழம்பினை வெளிப்படுத்துவது.

அங்கதம்

ஒருவகை வசைச்சொல்

அங்கறம்

அங்கம் (=உறுப்பு) + அறை (=சொல், பள்ளம், தாழ்வு) + அம் = அங்கறம் >>> அங்கதம் = உறுப்புப் பெயர்சொல்லி தாழ்த்துதல்..

அங்கதம்

பொய்

ஆக்கறம்

ஆக்கம் (=உண்மை) + அறு (=இல்லாகு) + அம் = ஆக்கறம் >>> அங்கதம் = உண்மை இல்லாதது.

அங்கதம்

தோள் வளையம்

அக்காதம்

ஆகம் (=மார்பு, தோள்) + ஆதி (=வட்டம், வளையம்) + அம் = அக்காதம் >>> அங்கதம் = தோள் வளையம்.

அங்கதம்

பாம்பு

அக்கறம், அங்கறம்

(1). அகம் (=வயிறு) + அறு (=செல்) + அம் = அக்கறம் >>> அங்கதம் = வயிற்றால் செல்வது. (2) அங்கம் (=விசம்) + அறு (=கொல்) + அம் = அங்கறம் >>> அங்கதம் = விசத்தால் கொல்வது.

அங்கம்

உடல்

ஆகம்

ஆகம் (=உடல்) >>> அக்கம் >>> அங்கம்

அங்கம்

உறுப்பு, பிரிவு

அக்கம்

அகை (=கிளை, பிரி) + அம் = அக்கம் >>> அங்கம் = பிரிவு, உறுப்பு

அங்கம்

எலும்பு

அக்கு

அக்கு (=எலும்பு) + அம் = அக்கம் >>> அங்கம்

அங்கம்

உயிர்

அகம்

அகம் (=உயிர்) >>> அக்கம் >>> அங்கம்

அங்கம்

விசம்

அக்கம்

அகை (=கொல்லு) + அம் (=உணவு) = அக்கம் >>> அங்கம் = கொல்லும் உணவு = விசம்.

அங்கம்

அடையாளம்

அக்கம்

அகை (=தோன்று, அறி) + அம் = அக்கம் >>> அங்கம் = அறியப்படும் தோற்றம் = அடையாளம்.

அங்கம்

அழகு

அக்கம்

அகை (=ஒளிர், தோன்று) + அம் = அக்கம் >>> அங்கம் = ஒளிரும் தோற்றம் = அழகு.

அங்கம்

இடம்

அகம்

அகம் (=இடம்) >>> அக்கம் >>> அங்கம்

அங்கம்

போர்

அக்கம்

அகை (=தாக்கு, வெட்டு, கொல்) + அம் = அக்கம் >>> அங்கம் = தாக்கி / வெட்டிக் கொல்வது = போர்.

அங்கம்

கட்டில்

அக்கம்

அகை (=தாமதி, சோர், தூங்கு, உயர்) + அம் = அக்கம் >>> அங்கம் = தூங்குவதற்கான உயரமான இடம்.

அங்கம்

பொருள்

ஆக்கம்

ஆக்கம் (=பொருள்) >>> அங்கம்

அங்கமணி

சீதனம்

அங்கமணீ

அங்கம் (=பொருள்) + மணம் + ஈ (=கொடு) = அங்கமணீ >>> அங்கமணி = திருமணத்தில் கொடுக்கப்படும் பொருள்.

அங்கரக்கா

நீண்ட அங்கி

அக்காராக்கம்

அகை (=தாமதி, நீளு) + ஆர் (=அணி) + ஆக்கம் (=ஆடை) = அக்காராக்கம் >>> அங்கரக்கா = நீளமாக அணியப்படும் ஆடை.

அங்கலாய்

மனம் கலங்கு

அக்கலை

அகம் (=மனம்) + அலை (=கலங்கு) = அக்கலை >>> அங்கலாய் = மனம் கலங்கு

அங்கவடி

குதிரையில் ஏறும் படி

அகைப்படி

அகை (=உயர், ஏறு) + படி = அகைப்படி >>> அகப்படி >>> அங்கவடி = ஏறுவதற்கான படி.

அங்கன்

மகன்

அக்கன்

அகை (=தோன்று, பிற) + அன் = அக்கன் >>> அங்கன் = பிறந்தவன்

அங்கனை

பெண்

அக்காணை

அகம் (=அன்பு, காதல்) + ஆண் + ஐ = அக்காணை >>> அங்கனை = ஆணைக் காதலிப்பவள்.

அங்காடி

கடை

அக்கடி

அகம் (=பொருள், இடம்) + அடை (=விலை, பெறு) + இ = அக்கடி >>> அங்காடி = பொருளை விலைக்குப் பெறும் இடம்.

அங்காமி

நிரந்தரம் இல்லாத

அற்கவி

அற்கு (=நிலைபெறு) + அவி (=கெடு, அழி) = அற்கவி >>> அக்கமி >>> அங்காமி = நிலையற்ற

அங்காரகம்

மரக்கரி

அக்கரகம்

அகை (=எரி, அறு, துண்டாக்கு) + அரை (=பாதி) + அகம் (=மரம்) = அக்கரகம் >>> அங்காரகம் = பாதி எரிந்த மரத் துண்டுகள்.

அங்காரகன்

நெருப்பு

அக்காரகன்

அகை (=எரி) + ஆர் (=உண்ணு) + அகம் (=பொருள்) + அன் = அக்காரகன் >>> அங்காரகன் = பொருளை எரித்து உண்பவன்

அங்காரிகை

கரும்பு

அக்காரிகை

அகம் (=இனிமை, நீர்) + ஆர் (=தண்டு) + இகு (=கொடு) + ஐ = அக்காரிகை >>> அங்காரிகை = இனிய நீரைத் தரும் தண்டு

அங்கி

முழுமை, முதன்மை

அங்கி

அங்கம் (=பிரிவு) + இ = அங்கி = பிரிவை உடையது = முழுமை, முதன்மை

அங்கி

நீளமானது

அக்கி

அகை (=தாமதி, நீளு) + இ = அக்கி >>> அங்கி = நீளமானது

அங்கி

சூரியன்

அக்கீ

அகை (=உயர், எரி, ஒளிர்) + ஈ (=கொடு) = அக்கீ >>> அங்கி = உயரத்தில் இருந்து வெப்பமும் ஒளியும் தருபவன்

அங்கிசம்

உறுப்பு, கிளை, பிரிவு

அக்கியம்

அகை (=கிளை, பிரி) + இயை (=பொருந்து) + அம் = அக்கியம் >>> அங்கிசம் = பிரிவு பொருந்தியது.

அங்கிதம்

தழும்பு, அடையாளம்

அக்கிறம்

அகை (=தோன்று, அறு, கீறு) + இறு (=தங்கு) + அம் = அக்கிறம் >>> அங்கிதம் = கீறலின் தங்கிய தோற்றம் = தழூம்பு, அடையாளம்

அங்கிரி

பாதம்

அங்கிரி

அங்கம் (=இடம், நிலம், உறுப்பு, உடல்) + இரு (=தங்கு, பதி) + இ = அங்கிரி = நிலத்தில் பதியும் உடல் உறுப்பு

அங்கிரி

மரம்

அங்கிறி

அங்கம் (=நிலம், உயிர்) + இறை (=உயரம், தங்கல்) + இ = அங்கிறி >>> அங்கிரி = நிலத்தில் பொருந்தி உயரும் உயிரி.

அங்கீகாரம், அங்கீகரணம்

ஒப்புதல் வழங்கல்

அக்கிகாரம்

அகம் (=மனம், கருத்து) + இகு (=கொடு) + ஆர் (=பொருந்து, ஒப்பு) + அம் = அக்கிகாரம் >>> அங்கீகாரம் = ஒப்புதல் கருத்து வழங்கல்

அங்கீகரி

ஒப்புதல் வழங்கு

அக்கிகாரி

அகம் (=மனம், கருத்து) + இகு (=கொடு) + ஆர் (=பொருந்து, ஒப்பு) + இ = அக்கிகாரி >>> அங்கீகரி = ஒப்புதல் கருத்து வழங்கு.

அங்கீகாரம்

வரவேற்பு

அக்கிங்காரம்

அகம் (=வீடு) + இங்கு (=புகு, நுழை) + ஆர் (=ஒப்பு, ஏற்றுக்கொள்) + அம் (=சொல்) = அக்கிங்காரம் >>> அங்கீகாரம் = வீட்டுக்குள் நுழைவதை ஏற்றுக்கூறும் சொல்.

அங்குசம்

வாழை

அக்கூழம்

அகை (=செழி, எரி, ஒளிர்) + ஊழ் (=பழு) + அம் = அக்கூழம் >>> அங்குசம் = ஒளிர்கின்ற செழிப்பான பழம்.

அங்குசம்

செலுத்துகின்ற கூர்ம்பொருள்

அக்குயம்

அஃகம் (=கூர்மை) + உய் (=செலுத்து, பயன்கொள்) + அம் = அக்குயம் >>> அங்குசம் = செலுத்தப் பயன்படும் கூர்ம்பொருள்.

அங்குசவி

கொள்ளு

அக்குழமி

அஃகம் (=தானியம்) + உழ (=சுற்று, வட்டமிடு) + அம் (=உணவு) + இ = அக்குழமி >>> அங்குசவி = வட்டமான தானிய உணவு.

அங்குட்டம்

பெருவிரல்

அங்கூன்றம்

அங்கை (=விரல்) + ஊன்று (=அழுந்தவை) + அம் = அங்கூன்றம் >>> அங்குட்டம் = அழுந்த வைக்கப்படும் விரல்.

அங்குரம்

முளை

அக்குரம்

அஃகம் (=கூர்மை) + உரு (=தோன்று, பிற) + அம் = அக்குரம் >>> அங்குரம் = கூர்மையுடன் பிறப்பது = முளை.  

அங்குரி

முளை

அக்குரி

அக்குரம் (=முளை) >>> அக்குரி >>> அங்குரி

அங்குலம்

விரல் அகலம்

அங்குளம்

அங்கை (=விரல்) + உள் (=இடம், கருது, அள) + அம் =  அங்குளம் >>> அங்குலம் = விரலின் இட அளவு.

அங்குலம், அங்குலி

விரல்

அங்குலம், அங்குலி

அங்கை (=உள்ளங்கை) + உலை (=கலை, பிரி) + அம் = அங்குலம் = உள்ளங்கையில் இருந்து பிரிவது.

அங்குலிகம், அங்குலி, அங்குலியம்

மோதிரம்

அங்குளிங்கம்

அங்கை (=விரல்) + உள் + இங்கு (=அழுத்து, செறி) + அம் = அங்குளிங்கம் >>> அங்குலிகம் = விரலினுள் அழுத்திச் செறிக்கப்படுவது.

அங்குலி தோரணம்

நெற்றியில் வரைந்த தொங்கலணி

அல்குலிழை தோரணம்

அல்குல் (=நெற்றி) + இழை (=வரை) + தோரணம் (=தொங்கல்) = அல்குலிழைதோரணம் >>> அற்குலியைதோரணம் >>> அக்குலீத்தோரணம் >>> அங்குலித்தோரணம் = நெற்றியில் வரையப்பட்ட தொங்கல் அணி.

அங்குத்தான், அங்குச்`தான்

தைப்போர் விரலில் அணியும் கூடு

அங்குற்றான்

அங்கை (=விரல்) + உறை (=குத்து, கூடு) + ஆன் (=நீங்கு, விலகு) = அங்குற்றான் >>> அங்குத்தான் >>> அங்குச்`தான் = விரலில் குத்துவதை விலக்கும் கூடு.

அச்சகாரம்

முன்பணம்

அச்சகாரம்

அச்சு (=ஆதாரம், உறுதி) + அகம் (=பொருள்) + ஆர் (=கட்டு) + அம் = அச்சகாரம் = உறுதிக்காக கட்டப்படும் பொருள்.

அச்சம்

இலேசு

ஆயம்

ஆய் (=மென்மை) + அம் = ஆயம் >>> அச்சம் = மெலிவு, இலேசு

அச்சம்

நஞ்சு

ஆய்

ஆய் (=நஞ்சு) + அம் = ஆயம் >>> அச்சம்

அச்சயன்

கடவுள்

அச்சயன்

அச்சு (=ஆதாரம்) + அயம் (=பூமி, உலகம்) + அன் = அச்சயன் = உலகிற்கு ஆதாரமானவன்

அச்சரம்

எழுத்து

அச்சாரம்

அசை (=சொல்) + ஆர் (=கட்டு, ஒலி) + அம் = அச்சாரம் >>> அச்சரம் = சொல்லைக் கட்டும் ஒலி = எழுத்து.

அச்சாரம்

முன்பணம்

ஆயாரம்

ஆயம் (=உறுதி, பணம்) + ஆர் (=கட்டு) + அம் = ஆயாரம் >>> அச்சாரம் = உறுதிக்காக கட்டப்படும் பணம்

அச்சன்

தந்தை

ஐயன், அய்யன்

ஐயன் (=தந்தை) >>> அய்யன் >>> அச்சன்

அச்சா

நல்லது

ஆயை

ஆயம் (=இலாபம், நன்மை) + ஐ = ஆயை >>> அச்சை >>> அச்சா = நன்மை உடையது.

அச்சாறு

ஊறுகாய்

அச்செயிறு

அசை (=நடுங்கு, உணவு) + எயிறு (=பல்) = அச்செயிறு >>> அச்சேறு >>> அச்சாறு = பற்களை நடுங்கச் செய்யும் உணவு.

அச்சானம்

அறியாமை

அச்சாணம்

அசை (=குறை) + ஆணம் (=அறிவு) = அச்சாணம் >>> அச்சானம் = அறிவுக் குறைபாடு.

அச்சாணியம், அச்சானியம்

துன்பக்குறியால் வருந்துகை

அச்சாணியம்

அசா (=துன்பம், வருந்து) + ஆணம் (=தோற்றம், குறி, அறிவு) + இயம் = அச்சாணியம் = துன்பக்குறியை அறிந்து வருந்துதல்.

அச்சிரம்

கடுமையான குளிர்

அச்சீரம்

அசை (=நடுங்கச்செய்) + ஈரம் (=குளிர்) = அச்சீரம் >>> அச்சிரம் = நடுங்கச் செய்யும் குளிர் = கடுங்குளிர்.

அச்சு

சுழற்றும் கிடைமரம்

அச்சு

அசை (=கிட, பொருந்து, கலக்கு, சுழற்று) + உ = அச்சு = கிடையாகப் பொருந்தி சுழலச் செய்வது.

அச்சு

ஆதாரம், மூலம், வலிமை

ஆசு

ஆசு (=பற்றுக்கோடு) >>> அச்சு = ஆதாரம், அடிப்படை, மூலம், உறுதி, வலிமை.

அச்சு

உடல்

அச்சு

அசை (=கட்டு) + உ = அச்சு = கட்டப்பட்டது = உடல்.

அச்சு

கரை, வரப்பு

அச்சு

அசை (=தங்கு, கிட, கட்டு) + உ = அச்சு = தங்குவதற்காக கிடையாகக் கட்டப்பட்டது = கரை, வரப்பு.

அச்சு

உயிர்

அச்சூ

அசை (=தங்கு, இயக்கு + ஊ (=தசை, உடல்) = அச்சூ >>> அச்சு = உடலில் தங்கி இயக்குவது = உயிர்

அச்சு

உயிரெழுத்து

அச்சு

அச்சு (=உயிர், எழுத்து) >>> அச்சு = உயிரெழுத்து.

அச்சுதம்

வாழ்த்தித் தூவப்படுவது

ஆசிறம்

ஆசி (=வாழ்த்து) + இறை (=தூவு) + அம் = ஆசிறம் >>> அச்சிதம் >>> அச்சுதம் = வாழ்த்தித் தூவப்படுவது.

அச்சுதம்

அழிவின்மை

அச்சிறம்

அசை (=நீங்கு, இல்லாகு) + இறு (=அழி) + அம் = அச்சிறம் >>> அச்சுதம் = அழிவு இன்மை.

அச்சுதன்

கடவுள்

அச்சிறன்

அசை (=நீங்கு, இல்லாகு) + இறு (=அழி) + அன் = அச்சிறன் >>> அச்சுதன் = அழிவு இல்லாதவன்

அச்சுவம், அசுவம்

குதிரை

அச்சேவம்

ஆசு (=விரைவு) + ஏ (=ஒப்பு, அம்பு, செருக்கு) + அம் = அச்சேவம் >>> அச்சுவம், அசுவம் = அம்பென விரையும் செருக்குடையது. ஒ.நோ: (1) எய் >>> உய் (=செலுத்து). (2) ஏர் >>> ஊர் (=ஏறு, எழு)

அச்சுறை

உடல்

அச்சுறை

அச்சு (=உயிர்) + உறை (=தங்குமிடம்) = அச்சுறை = உயிர் தங்குமிடம் = உடல்.

ச~ட்டு

ஆறு

ஆறு

ஆறு >>> சாடு >>> ச~ட்டு

ச~ரப்

கள், மது

அருப்பம்

அருப்பம் (=கள்) >>> சருப்பம் >>> ச~ரப்

ச~ராய்

அரைக்கால் சட்டை

அராய்

அரை (=இடுப்பு, பாதி) + ஆய் (=கொய், அசை) = அராய் >>> ச~ராய் = பாதியாகக் கொய்யப்பட்டு இடுப்பில் அசைவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.