வெள்ளி, 2 ஏப்ரல், 2021

சமக்கிருதத்தில் உள்ள நேரடி / மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 70

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

அவதாரம்

காப்பதற்காக எடுக்கும் பிறப்பு

ஏமதாரம்

ஏமம் (=காப்பு) + தரு (=தோன்று, பிற) + அம் = ஏமதாரம் >>> அவதாரம் = காப்பதற்காகத் தோன்றுவது / பிறப்பது.

அவதாரம்

பிரிவு

அமைதறம்

அமைதி (=பொருத்தம், சேர்க்கை) + அறு (=இல்லாகு) + அம் = அமைதறம் >>> அமதாரம் >>> அவதாரம் = சேர்க்கை இல்லாமை.

அவதரி

பிற

அவதரி

அவதாரம் (=பிறப்பு) >>> அவதரி = பிற

அவதாதம்

வெண்மை

அமைதாதம்

அமை (=அழகு, நிறம்) + தாது (=சுக்கிலம்) + அம் = அமைதாதம் >>> அமதாதம் >>> அவதாதம் = சுக்கிலத்தின் நிறம்.

அவதாரணம்

உறுதி, நிச்சயம்

ஏமதாரணம்

ஏமம் (=வலிமை) + தரு + அணம் = ஏமதாரணம் >>> அவதாரணம் = வலிமை தருவது.

அவதாரிகை

முன்னுரை

அவாதாரிகை

அவை + ஆதி (=முதல், முன்) + ஆர் (=ஒலி, கூறு) + இக (=திரள், தொகு) + ஐ = அவாதாரிகை >>> அவதாரிகை = அவையின் முன் தொகுத்துக் கூறப்படுவது.

அவதானம், அபதானம்

பெருமை மிக்க செயல்

அமதணம்

அமை (=செய்) + அதி (=மிகுதி, பெருமை) + அணம் = அமதணம் >>> அவதானம் >>> அபதானம் = பெருமை மிக்க செயல்.

அவதானம்

நினைவு, ஞாபகம், கவனம்

அமறணம்

அமை (=கொள்) + அறி (=நினை) + அணம் = அமறணம் >>> அவதானம் = நினைவில் கொள்ளுதல் = கவனிப்பு, ஞாபகம்

அவதானி

கவனி, நினை

அவதானி

அவதானம் (=நினைவு, கவனம்) >>> அவதானி

அவதி

அவசரம்

அவாறி

அவம் (=மாறு) + ஆறு (=பொறு) + இ = அவாறி >>> அவதி = பொறுமைக்கு மாறு

அவதி

துன்பம்

ஏமறி

ஏமம் (=இன்பம்) + அறு (=இல்லாகு) + இ = ஏமறி >>> அவதி = இன்பம் இல்லாதது.

அவதி

தவணை

அமறி

அமை (=காலம்) + அறு (=வரையறு) + இ = அமறி >>> அவதி = வரையறுத்த காலம்.

அவதி

அளவு, எல்லை

அமறி

அமை + அறி (=அள) = அமறி >>> அவதி = அளவு அமைந்தது = எல்லை, அளவு.

அவதி

கணிப்பு, கணக்கு

அமறி

அமை + அறி (=கணி) = அமறி >>> அவதி = கணிப்பு அமைந்தது = கணிப்பு, கணக்கு.

அவதூதன்

பற்றற்றவன்

அவாதுறன்

அவா (=ஆசை) + துற + அன் = அவாதுறன் >>> அவதூதன் = ஆசையைத் துறந்தவன்.

அவந்தரை

குழப்பம்

ஏமற்றறை

ஏமம் (=உறுதி) + அறி (=கருது) + அறு (=இல்லாகு) + ஐ = ஏமற்றறை >>> அமத்தரை >>> அவந்தரை = கருத்தில் உறுதி இல்லாமை.

அவந்தரை

தனிமையில் வாடுதல்

அவந்தரை

அவி (=புழுங்கு, வாடு) + அந்தரம் (=தனிமை) + ஐ = அவந்தரை = தனிமையில் வாடுதல்.

அவந்தரை

தீங்கு, வீண்

ஏமாற்றறை

ஏமம் (=நன்மை, பயன்) + ஆற்று (=கொடு) + அறு (=இல்லாகு) + ஐ = ஏமாற்றறை >>> அமத்தரை >>> அவந்தரை = நன்மை / பயன் தராததது.

அவந்தன்

பயனற்றவன்

ஏமற்றன்

ஏமம் (=நன்மை, பயன்) + அறு (=இல்லாகு) + அன் = ஏமற்றன் >>> அவத்தன் >>> அவந்தன் = நன்மை / பயன் அற்றவன்.

அவந்தி, அவந்திகை

கிளி

அம்பறி

அம் (=சொல், அழகு) + பறை (=பேசு, பறப்பு) + இ = அம்பறி >>> அவ்வதி >>> அவந்தி = சொல்வதைப் பேசும் அழகிய பறவை.

அவந்தி

பழைய சோறு, காடி

அவாதி

அவி (=உணவு, சோறு) + ஆதி (=பழமை) = அவாதி >>> அவந்தி = பழைய சோறு.

அவநம்பிக்கை

நம்பிக்கை இன்மை

அவநம்பிக்கை

அவம் (=இன்மை) + நம்பிக்கை = அவநம்பிக்கை.

அவநதன்

பணிவுடைய தலைவன்

அவநாதன்

அவம் (=பணிவு) + நாதன் (=தலைவன்) = அவநாதன் >>> அவநாதன் = பணிவுடைய தலைவன்

அவம்

அழிவு, முடிவு, இன்மை

அவம்

அவி (=அழி) + அம் = அவம் = அழிவு, முடிவு, இன்மை.

அவம், அவன்

கேடு, குற்றம், பழி

அவம்

அவி (=கெடு) + அம் = அவம் = கேடு, குற்றம், பழி.

அவம்

மாற்றம், திரிபு

அவம்

அவி (=கெடு, மாறு) + அம் = அவம் = மாற்றம், திரிபு.

அவம்

துன்பம், வருத்தம்

அவம்

அவி (=புழுங்கு, வருந்து) + அம் = அவம் = வருத்தம்

அவம்

பணிவு, இழிவு

அவம்

அவி (=பணி, தாழ்) + அம் = அவம் = பணிவு, தாழ்வு, இழிவு.

அவம்

குறைவு

அவம்

அவி (=குறை) + அம் = அவம் = குறைவு

அவமதி, அவமதிப்பு

மதிப்புக் குறைவு / இழிவு

அவமதி, அவமதிப்பு

அவம் (=இழிவு, குறைவு) + மதி (=மதிப்பு) = அவமதி = மதிப்பை இழிவுசெய்தல் / குறைத்தல்.

அவமானம்

மதிப்புக் குறைவு / இழிவு

அவமானம்

அவம் (=இழிவு, குறைவு) + மான் (=அள, மதி) + அம் = அவமானம் = மதிப்பை இழிவுசெய்தல் / குறைத்தல்.

அவயம்

அடைகாத்தல்

அமயம்

அமை (=படை, பொருந்து, அமர்) + அம் = அமயம் >>> அவயம் = படைப்பதற்காகப் பொருந்தி அமர்தல்.

அவயம்

அடைக்கலம்

ஏமயம்

ஏமம் (=பாதுகாப்பு) + அயம் (=இடம்) = ஏமயம் >>> அவயம் = பாதுகாக்கும் இடம்.

அவயவம்

உடல் உறுப்புக்கள்

அமையாப்பம்

அமை (=பொருந்து) + யாப்பு (=உடல்) + அம் = அமையாப்பம் >>> அமயவம் >>> அவயவம் = உடலில் பொருந்தி இருப்பவை.

அவயவி

உறுப்பினர்

அவயமி

அவை (=சங்கம்) + அமை (=சேர்) + இ = அவயமி >>> அவயவி = சங்கத்தைச் சேர்ந்தவர்.

அவர்ணியம்

உவமானம்

அமண்ணியம்

அமை (=ஒப்பு) + அணி (=சூட்டு, பொருள்) + அம் = அமண்ணியம் >>> அவர்ணியம் = ஒப்பாகச் சூட்டும் பொருள்.

அவரகாத்திரம்

கால்

அபரகாத்திரம்

அபரகாத்திரம் (=கால்) >>> அவரகாத்திரம்

அவரயன், அவரசன்

தம்பி

அவாரயன்

அவம் (=தாழ்வு, கீழ்) + ஆர் (=தோன்று, பிற) + ஐயன் (=மூத்தோன்) = அவாரயன் >>> அவரயன் >>> அவரசன் = மூத்தவனுக்குக் கீழே பிறந்தவன்.

அவராகம்

விருப்பம் இன்மை

அமரகம்

அமர் (=விருப்பம்) + அகை (=நீங்கு, இல்லாகு) + அம் = அமரகம் >>> அவராகம் = விருப்பம் இல்லாமை

அவரோகணம், அவரோகம்

இறங்கு ஓசை

அவாரோங்கணம்

அவம் (=மாறு) + ஆர் (=ஒலி) + ஓங்கு (=ஏறு) + அணம் = அவாரோங்கணம் >>> அவரோகணம் = ஏற்றத்தின் மாறான ஒலி.

அவரோதம்

அந்தப்புரம்

அவேறோறம்

அவை (=இடம்) + ஏறு (=நுழை, ஆண்) + ஒறு (=கண்டி) + அம் = அவேறோறம் >>> அவரோதம் = ஆண்கள் நுழைவது கண்டிக்கப்பட்ட இடம்.

அவலம்

பலவீனம்

ஏமலம்

ஏமம் (=வலிமை) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அவலம் = வலிமையின் எதிர்மறை.

அவலம், அவலை

துன்பம், நோய், கவலை

ஏமலம்

ஏமம் (=இன்பம்) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அவலம் = இன்பத்தின் எதிர்மறை.

அவலம்

வறுமை

ஏமலம்

ஏமம் (=நிதி, செல்வம்) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அவலம் = நிதி / செல்வத்தின் எதிர்மறை

அவலம்

நிலையாமை, மாயை, பொய்

ஏமலம்

ஏமம் (=வலிமை, உறுதி) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அவலம் = உறுதியின் எதிர்மறை.

அவலம், அவளம்

தீமை, வீண், குற்றம்

ஏமலம்

ஏமம் (=நன்மை, பயன்) + அல் (=எதிர்மறை) + அம் = ஏமலம் >>> அவலம் = நன்மை / பயனின் எதிர்மறை

அவலம்

தாழ்வு, இழிவு

அவலம்

அவல் (=பள்ளம், தாழ்வு) + அம் = அவலம் = தாழ்வு, இழிவு

அவலம்

அழுகை

ஏம்பலம்

ஏம்பல் (=ஒலி, வருத்தம்) + அம் = ஏம்பலம் >>> அவலம் = வருந்தி ஒலித்தல்.

அவலம்

அவசரம், பதற்றம்

அமலம்

அமை (=பொறு) + அல் (=எதிர்மறை) + அம் = அமலம் >>> அவலம் = பொறுமையின் எதிர்மறை

அவலம்பம்

தஞ்சம், சரணாகதி, பற்றுக்கோடு

ஏமளவ்வம்

ஏமம் (=பாதுகாப்பு) + அளி + அவை (=இடம்) + அம் = ஏமளவ்வம் >>> அவலம்பம் = பாதுகாப்பு அளிக்கும் இடம்.

அவலம்பி

சரணடை

அவலம்பி

அவலம்பம் (=சரணாகதி) >>> அவலம்பி = சரணடை

அவலி

வருந்து, அழு, பதறு

அவலி

அவலம் (=துன்பம், அழுகை, பதற்றம்) >>> அவலி = துன்புறு, வருந்து, அழு, பதறு

அவலை

காடு

அமலை

அமல் (=மிகு, பரவு, செறி) + ஐ = அமலை >>> அவலை = மிகுதியாகப் பரவிய செறிவுடையது

அவலோகம், அவலோகனம்

பார்வை

ஐம்பாலோக்கம்

ஐம்பால் (=கண்ணிமை) + ஓக்கு (=உயர்த்து) + அம் = ஐம்பாலோக்கம் >>> அவலோகம் = கண்ணிமையை உயர்த்துதல்.

அவனி

பூமி

அமணி

அம் (=நீர்) + அணை (=சூழ்) + இ = அமணி >>> அவனி = நீரால் சூழப்பட்டது = பூமி.

அவனிபன்

அரசன்

அவனிமன்

அவனி (=பூமி, நிலம்) + மன் (=தலைவன்) = அவனிமன் >>> அவனிபன் = நிலத்தின் தலைவன்

அவச்`து

பயனற்றது

அவத்தம்

அவத்தம் (=பயனற்றது) >>> அவத்து >>> அவச்`து

அவாச்சியம்

சொல்ல இயலாதது

அவச்சியம்

அவி (=அழி, இல்லாகு) + அசை (=சொல்) + இயம் = அவச்சியம் >>> அவாச்சியம் = சொல் இல்லாதது.

அவாதிதம்

கண்டிக்கப் படாதது

அம்மறிறம்

அம் (=சொல்) + மறு + இற (=இல்லாகு) + அம் = அம்மறிறம் >>> அவாதிதம் = சொல்லால் மறுக்கப்படாதது.

அவாந்தரம்

இடைவெளி, வெற்றிடம்

அவந்தரம்

அவம் (=இன்மை, வெளி) + அந்தரம் (=நடு, இடை) = அவந்தரம் >>> அவாந்தரம் = இடைவெளி.

அவாந்தரம்

உதவி இல்லாமை

அவாதாரம்

அவி (=அழி, இல்லாகு) + ஆதாரம் (=உதவி) = அவாதாரம் >>> அவாந்தரம் = உதவி இல்லாமை.

அவாப்தம்

அடையப்பட்டது

அமத்தம்

அமை (=பொருந்து) + அத்து (=சேர்) + அம் = அமத்தம் >>> அவாப்தம் = சேர்ந்து பொருந்தியது.

அவாயம்

மறைகேடு

அபாயம்

அபாயம் >>> அவாயம்

அவாரி

தடை இல்லாமை

அவாரி

அவி (=அழி, இல்லாகு) + ஆரி (=கதவு, தடை) = அவாரி = தடை இல்லாமை.

அவாலத்து

பிறர்மேல் பொறுப்பு சாட்டுகை

அவாளாற்று

அவி (=மாற்று) + ஆள் + ஆற்று (=சுமத்து, செய்) = அவாளாற்று >>> அவாலத்து = செயலை / கடமையை ஆள் மாற்றிச் சுமத்துதல்.

அவிக்கினம்

ஆபத்து இல்லாதவை

அவிக்கீனம்

அவி (=அழி, இல்லாகு) + இக்கு (=ஆபத்து) + ஈனு (=தா) + அம் =  அவிக்கீனம் >>> அவிக்கினம் = ஆபத்தைத் தராதவை.

அவிகாரம், அவிகாரி

மாற்ற முடியாதது

அவிகாரம்

அவி (=மாற்று, முடி, இல்லாகு) + காரம் (=செயல்) = அவிகாரம் = மாற்றம் செய்ய முடியாதது.

அவிச்சின்னம்

இடைவிடாமை

அவிச்சின்னம்

அவி (=அழி, இல்லாகு) + சின்னம் (=முறிவு, இடையீடு) = அவிச்சின்னம் = முறிவு / இடையீடு இல்லாமை

அவிச்சை, அவிஞ்சை

கல்வி இன்மை

அவிச்சை

அவி (=அழி, இல்லாகு) + இசை (=பாட்டு, கல்வி) = அவிச்சை = கல்வி இல்லாமை

அவிசாரம்

ஆராய்ச்சி / அறிவு இல்லாமை

அவியறம்

அவி (=அழி, இல்லாகு) + அறி (=ஆராய்) + அம் = அவியறம் = அவிசாரம் = ஆராய்ச்சி / அறிவு இல்லாமை

அவிசாரம்

கவலையின்மை

அவியறம்

அவி (=அழி, இல்லாகு) + அறு (=வருத்து) + அம் = அவியறம் = அவிசாரம் = வருத்தம் இல்லாமை

அவிசாரம்

கெட்ட நடத்தை, வேசித்தனம்

அவிசாரம்

(1) அவி (=அழி, கெடு) + சாரம் (=இயக்கம், நடத்தை) = அவிசாரம் = கெட்ட நடத்தை. (2) அவி (=மாற்று) + சார் (=கூடு, புணர்) + அம் = அவிசாரம் = மாற்றிப் புணர்தல்.

அவிசாரி

வேசி

அவிசாரி

அவிசாரம் + இ >>> அவிசாரி

அவிசுவாசம்

நன்றியை நினையாமை

அவிசூழ்பயம்

அவி (=அழி, இல்லாகு) + சூழ் (=கருது, நினை) + பயம் (=பலன், நன்மை, நன்றி) = அவிசூழ்பயம் >>> அவிசுவாசம் = நன்மையை / நன்றியை நினைத்துப் பாராமை.

அவிசுவாசம்

நம்பிக்கை இன்மை

அவிசூழ்வயம்

அவி (=அழி, இல்லாகு) + சூழ் (=கருது, எண்ணு) + வயம் (=வலிமை, உறுதி) = அவிசூழ்வயம் >>> அவிசுவாசம் = எண்ணத்தில் உறுதி இல்லாமை.

அவித்தை

அறிவின்மை

அவித்தை

அவி (=அழி, இல்லாகு) + இதம் (=அறிவு) + ஐ = அவித்தை = அறிவு இல்லாமை

அவிதா

உயிர்க்கு உதவு என்று அழைத்தல்

அவிதா

ஆவி (=உயிர்) + தா (=அழை, அருள்செய்) = அவிதா = உயிர்க்கு அருள்செய் என்று அழைத்தல்.

அவிவேகம்

மதிநுட்பம் இன்மை

அவிவேகம்

அவிவு (=அழிவு, இன்மை) + எஃகு (=மதிநுட்பம்) + அம் = அவிவேகம் = மதிநுட்பம் இல்லாமை.

அவிவாதம்

மாறுபாடு இல்லாமை

அவிவன்றம்

அவிவு (=அழிவு, இன்மை) + அன்று (=மாறுபாடு) + அம் = அவிவன்றம் >>> அவிவத்தம் >>> அவிவாதம் = மாறுபாடின்மை

அவிருத்தம்

சரியாகப் பொருந்துவது

அமிருத்தம்

அமை (=சரியாகு) + இருத்து (=பொருத்து) + அம் = அமிருத்தம் >>> அவிருத்தம் = சரியாகப் பொருந்துவது

அவிரோதம்

காலத்தால் மாறாதது

அவிறொத்தம்

அவி (=மாறு) + இறு (=அழி, இல்லாகு) + ஒத்து (=காலம்) + அம் = அவிறொத்தம் >>> அவிரோதம் = காலத்தால் மாறாதது.

அவினயம், அவிநயம்

பணிவு இல்லாமை

அவிநயம்

அவி (=அழி, இல்லாகு) + நயம் (=பண்பாடு, பணிவு) = அவிநயம் >>> அவினயம் = பண்பாடு / பணிவு இல்லாமை

அவினாசி, அவிநாசி

கடவுள்

அவிநாசி

அவி (=அழி, இல்லாகு) + நாசம் (=அழிவு) + இ = அவிநாசி >>> அவினாசி = அழிவு இல்லாதவன்

அவினாபாவம்

நீங்காமல் உடன் நிகழ்வது

அமிணைபவம்

அமை (=பொருந்து) + இணை + பவ (=நிகழ்) + அம் = அமிணைபவம் >>> அவினாபாவம் = இணையாகப் பொருந்தி நிகழ்வது.

அவினாபூதம்

நீக்கமற இருப்பது

அவிணைமுறம்

அவி (=அழி, இல்லாகு) + இணை (=சேர்) + முறி (=இடையறு) + அம் = அவிணைமுறம் >>> அவினாபூதம் = இடையறவு இல்லாமல் சேர்ந்திருப்பது.

அவினி, அபின்

இன்ப மயக்கம் தரும் பொடி

ஏமீனி

ஏமம் (=இன்பம், மயக்கம், பொடி) + ஈனு (=கொடு) + இ = ஏமீனி >>> அவினி = இன்பமும் மயக்கமும் தருகின்ற பொடி.

அவீசி

நரகம்

அவீழி

அவி (=வருத்து, தவறு, சாவு) + இழி (=தாழ்) = அவீழி >>> அவீசி = இறந்தவர்களைத் தவறுக்காக வருத்தும் தாழ்வான இடம்.

அவுசு

ஒழுங்கு

ஆசு

ஆசு (=ஒழுங்கு) >>> ஔசு >>> அவுசு

அவுட்டு, ஔட்டு

பல வண்ணங்களில் சிதறும் வெடி

அமிற்று

அம் (=ஒளி, நிறம்) + இறை (=சிதறு) + உ = அமிற்று >>> அவுட்டு >>> ஔட்டு = பல நிறங்களில் சிதறுவது.

அவுணன்

அரக்கன்

அவுணன்

அவி (=அழி, கொல்) + உண் + அன் = அவுணன் = கொன்று உண்பவன்.

அவுதசியம்

பால்

அமுதசியம்

அமுதம் + அசை (=உணவு) + இயம் (=தன்மை) = அமுதசியம் >>> அவுதசியம் = அமுதத்தின் தன்மை கொண்ட உணவு.

அவுதா

அம்பாரி

அப்புந்தா

அப்பு (=யானை, அம்பு) + உந்து (=உயர், செலுத்து) + ஆ = அப்புந்தா >>> அவுதா = யானையின் உயரத்தில் அம்பு செலுத்துமிடம்.

அவல்தார், அவுல்தார்

கட்டளை இடுபவன்

ஏவல்தாரி

ஏவல் (=கட்டளை) + தரு (=கொடு) + இ = ஏவல்தாரி >>> அவல்தார் >>> அவுல்தார் = கட்டளை கொடுப்பவன்.

அவேத்தியன்

அறியப்படாதவன்

அவ்வேற்றியன்

அவி (=அழி, இல்லாகு) + ஏற்று (=நினை, அறியப்படு) + இயன் = அவ்வேற்றியன் >>> அவேத்தியன் = அறியப்படாதவன்

அளகம்

கண்ணிமை

அளாகம்

அளி (=காப்புசெய்) + ஆகம் (=கண்) = அளாகம் >>> அளகம் = கண்ணைக் காப்பது.

அளகம்

நீர்

அளகம்

அள் (=திரள், பெருகு) + அகம் (=பொருள், உணவு) = அளகம் = திரண்டு பெருகும் உணவுப் பொருள்.

அளகம்

பன்றிமுள்

அளகம்

அள் (=செறிவு, கூர்மை, வலிமை) + அகம் (=உடல், பொருள்) = அளகம் = உடலில் செறிந்திருக்கும் கூரிய வலிமையான பொருள்.

அளகம்

பெண்மயிர்

அளகம்

அள் (=செறி) + அகை (=நீளு) + அம் = அளகம் = நீண்டு செறிந்திருப்பது.

அளிகம்

நெற்றி

அளுக்கம்

அளி (=பூசு) + உக்கம் (=தலை, நடு) = அளுக்கம் >>> அளிகம் = பூசப்படும் தலையின் நடுப்பகுதி.

அற்கன்

சூரியன்

அருக்கன்

அருக்கன் (=சூரியன்) >>> அற்கன்

அற்பக்கியன்

சிற்றறிவு உடையவன்

அருப்பக்கியன்

அருப்பம் (=சிறுமை) + அகம் (=அறிவு) + இயன் = அருப்பக்கியன் >>> அற்பக்கியன் = சிற்றறிவு உடையவன்.

அற்பம்

சிறுமை, இழிவு, நாய்

அருவம்

அருமை (=சிறுமை) + அம் = அருவம் >>> அருப்பம் >>> அற்பம் = சிறுமை, இழிவு, இழிவாகக் கருதப்படும் விலங்கு.

அற்பம்

மெல்லியது

அரிமம்

அரி (=மென்மை) + மம் = அரிமம் >>> அருப்பம் >>> அற்பம்

அற்பரம்

படுக்கை

அலுப்பாரம்

அலுப்பு (=தளர்வு, சோர்வு) + ஆர் (=தங்கு, இடம்) + அம் = அலுப்பாரம் >>> அல்பரம் >>> அற்பரம் = சோர்ந்து தங்குமிடம்

அற்புதம்

அருமையும் புதுமையும் ஆனது

அருப்புதம்

அருமை + புதுமை + அம் = அருப்புதம் >>> அற்புதம் = அருமையும் புதுமையும் ஆனது.

அற்புதம்

புத்தழகு

அர்புதம்

ஆர் (=அழகு) + புதுமை + அம் = அர்புதம் >>> அற்புதம் = புத்தழகு

அத்தக்கூலி

நாட்கூலி

அற்றைக்கூலி

அற்றை + கூலி = அற்றைக்கூலி >>> அற்றக்கூலி >>> அத்தக்கூலி = அன்றைக்குரிய கூலி

அறாமி, அராமி

போக்கிரி

அறவி

(2) அறம் (=நன்மை) + அவி (=அழி, கெடு) = அறவி >>> அறாமி >>> அராமி = நன்மை கெட்டவன்.

அன்னுவயம், அன்வயம்

பரம்பரை, தொடர்ச்சி

அணிபாயம்

ஆணி (=ஆதாரம், மூலம்) + பாய் (=பரவு) + அம் = அணிபாயம் >>> அன்னுவயம் = மூலத்தில் இருந்து பரவியது.

அன்வயி

தொடர்

அன்வயி

அன்வயம் (=தொடர்ச்சி) >>> அன்வயி = தொடர்

அன்னபம்

ஆலமரம்

அன்னமம்

ஆனை + அமை (=தங்கு, தகு, இடம்) + அம் = அன்னமம் >>> அன்னபம் = யானைகள் தங்குவதற்கு ஏற்ற இடம்.

அன்னம்

உணவு

அன்னம்

ஆன் (=நிறை, இல்லாமல்போ) + அம் = அன்னம் = நிறைந்து பின்னர் இல்லாமல் போவது.

அன்னல், அனல், அனலம், அனலி

தீ, புகை

அன்றல்

அன்று (=சின, எரி) + அல் = அன்றல் >>> அன்னல் >>> அனல் = எரிவது = தீ, புகை, வெப்பம்

அன்னவம்

கடல்

அன்னமம்

ஆன் (=மிகுதி) + அம் (=நீர்) + அம் = அன்னமம் >>> அன்னவம் = மிக்க நீருடையது.

அன்னியம், அந்நியம்

வேறு, மாறுபாடு உடையது

என்னியம்

ஏனை (=பிறிது) + இயம் (=தன்மை) = என்னியம் >>> அன்னியம் >>> அந்நியம் = பிறிதின் தன்மை கொண்டது = வேறு.

அன்னியாயம்

நியாயமற்றது

அன்னியாயம்

அல் + நியாயம் = அன்னியாயம் = நியாயம் அல்லாதது

அன்னியோன்னியம்

ஒன்றுகூடி நெருக்கமாக இருத்தல்

அணியொன்னியம்

அணிமை (=நெருக்கம்) + ஒன்னு (=கூடு) + இயம் = அணியொன்னியம் >>> அன்னியோன்னியம் = நெருங்கிக் கூடி இருத்தல்.

அனகம்

தீங்கற்றது

அனகம்

அன்மை (=தீங்கு) + அகை (=நீங்கு, இல்லாகு) + அம் = அனகம் = தீங்கு இல்லாதது

அனகன்

ஆணழகன்

அணகன்

அணி (=அழகு) + அகம் (=உடல்) + அன் = அணகன் >>> அனகன் = அழகிய உடலைக் கொண்டவன்

அனகன்

கடவுள்

அனகன்

அன்மை (=இன்மை, அழிவு) + அகை (=நீங்கு, இல்லாகு) + அன் = அனகன் = அழிவு இல்லாதவன்

அனங்கம்

உடலற்றது

அனங்கம்

அன்மை (=இன்மை) + அங்கம் (=உடல்) = அனங்கம்= உடலற்றது

அனசனம்

உண்ணாநோன்பு

அன்னாயணம்

அன்னம் (=உணவு) + ஆய் (=நீக்கு) + அணம் = அன்னாயணம் >>> அனசனம் = உணவை நீக்குதல்.

அனத்தம்

பயனற்றது, தீங்கு

அனற்றம்

அன்மை (=இன்மை) + அறம் (=நன்மை, பயன்) + அம் = அனற்றம் >>> அனத்தம் = நன்மை / பயன் அற்றது.

அனந்தம்

முடிவற்றது, ஆகாயம்

அனந்தம்

அன்மை (=இன்மை) + அந்தம் (=முடிவு) = அனந்தம் = முடிவற்றது, எல்லையற்றது, ஆகாயம்

அனந்தம்

பொன்

அணத்தம்

அணி (=அழகு, அலங்கரி) + அத்தம் (=செல்வம்) = அணத்தம் >>> அனந்தம் = அழகுடைய அலங்கார செல்வம்.

அனந்தர், அனந்தல்

தூக்கம்

அணத்தல்

அணை (=படுக்கை, அடங்கு) + அத்து (=சேர்) + அல் = அணத்தல் >>> அனந்தல், அனந்தர் = படுக்கையில் சேர்ந்து அடங்குதல்.

அனந்தர், அனந்தல்

மயக்கம்

அனற்றல்

அன்மை (=இன்மை) + அறி (=உணர்) + அல் = அனற்றல் >>> அனத்தல் >>> அனந்தல், அனந்தர் = உணர்வின்மை.

அனந்தர், அனந்தல்

உணர்ச்சி வசப்படுதல்

அனற்றல்

ஆன் (=நிறை, மிகு) + அறி (=உணர்) + அல் = அனற்றல் >>> அனத்தல் >>> அனந்தல், அனந்தர் = உணர்ச்சி மிகுதல்

அனந்தை

பூமி

அனத்தை

ஆன் (=நிறை, பெரு) + அத்து (=சிவப்பு, இடம்) + ஐ = அனத்தை >>> அனந்தை = சிவப்பான பெரிய இடம்.

அனர்த்தம்

பயனற்றது, தீங்கு, பொருளற்றது

அனருத்தம்

அன்மை (=இன்மை) + அருத்தம் (=பொருள், பயன்) = அனருத்தம் >>> அனர்த்தம் = பொருள் / பயன் அற்றது, தீங்கு.

அனர்க`ம்

தகுதியற்றது

அணருகம்

அண் (=பொருந்து, தகு) + அருகு (=இல்லாகு) + அம் = அணருகம் >>> அனர்க`ம் = பொருத்தம் / தகுதி இல்லாதது

அனலி

சூரியன்

அனலீ

அனல் (=நெருப்பு, வெப்பம்) + ஈ (=கொடு) = அனலீ >>> அனலி = வெப்பம் தருபவன்

அனவத்தை

முடிவு பெறாமைக் குற்றம்

அனவந்தை

அன்மை (=இன்மை) + அவம் (=குற்றம்) + அந்தம் (=முடிவு) + ஐ = அனவந்தை >>> அனவத்தை = முடிவுறாமைக் குற்றம்

அனவரதம்

எப்போதும்

அனமரற்றம்

ஆன் (=நீங்கு) + அமர் (=இல்லாகு, இரு) + அற்றம் (=காலம்) = அனமரற்றம் >>> அனவரதம் = நீங்காமல் இருக்கும் காலம்.

அனன்னியம்

வேறன்மை

அனன்னியம்

அன்மை + அன்னியம் (=வேறு) = அனன்னியம் = வேறன்மை

அனாதி, அநாதி

தொடக்கமற்றது, கடவுள்

அனாதி

அன்மை (=இன்மை) + ஆதி (=தொடக்கம்) = அனாதி = தொடக்கமற்றது = கடவுள்

அனாமத்து

இன்னார்க்குரியது என்ற ஆணை இல்லாதது

அனம்பற்று

அன்மை (=இன்மை) + அம் (=ஆணை) + பற்று (=உரிமை) = அனம்பற்று >>> அனாமத்து = உரிமை ஆணை இல்லாதது

அனாமயம்

நோயின்மை

அணைவயம்

அணை (=அழி, இல்லாகு) + வயா (=நோய்) + அம் = அணைவயம் >>> அனாமயம் = நோய் இல்லாமை

அனாயம்

வீண்

அனாயம்

அன்மை (=இன்மை) + ஆயம் (=வருமானம், பயன்) = அனாயம் = பயனற்றது.

அனாயம்

நியாயமற்றது

அன்னயம்

அல் + நயம் (=நீதி) = அன்னயம் >>> அனாயம் = நீதியற்றது

அனாயாசம், அனாயசம்

வருந்தி முயலுதல் இன்மை

அனாயசம்

அன்மை (=இன்மை) + ஆய் (=வருந்து) + அசை (=முயலு) + அம் = அனாயசம் = வருந்தி முயலுதல் இன்மை

அனாரதம்

எப்போதும்

அனறற்றம்

ஆன் (=நீங்கு) + அறு (=இல்லாகு) + அற்றம் (=காலம்) = அனறற்றம் >>> அனாரதம் = நீக்கம் இல்லாத காலம்.

அனிகம், அனீகம்,அனீகினி

போர்ப்படை

அணிகம்

அணி (=கூட்டம்) + இகு (=கொல், வீழ்த்து) + அம் = அணிகம் >>> அனிகம் = கொன்று வீழ்த்தும் கூட்டம்

அனிருதம்

பொய்

அணிறுதம்

ஆணை (=உண்மை) + இறுதி (=அழிவு, இன்மை) + அம் = அணிறுதம் >>> அனிருதம் = உண்மை இன்மை

அனிலம்

காற்று

அன்னிலம்

அல் + நிலை + அம் = அன்னிலம் >>> அனிலம் = நிலையற்றது

அனுக்கிரகம்

அச்சம் நீக்கி அன்பு காட்டுதல்

அனுக்கிறகம்

அனுக்கம் (=அச்சம், வருத்தம்) + இறு (=அழி, கொடு) + அகம் (=அன்பு) = அனுக்கிறகம் >>> அனுக்கிரகம் = அச்சத்தை / துன்பத்தை அழித்து அன்பைக் கொடுத்தல்.

அனுக்கிரகி

அருள்செய்

அனுக்கிறகி

அனுக்கிறகம் (=அருள்) >>> அனுக்கிறகி >>> அனுக்கிரகி

அனுஞ்ஞை, அனுக்கை

கட்டளை, அனுமதி

அணுய்யை

ஆணை (=கட்டளை, சொல்) + உய் (=செலுத்து, விடு) + ஐ = அணுய்யை >>> அனுஞ்ஞை >>> அனுக்கை = விடுவதற்கான சொல், செலுத்துவதற்கான கட்டளை.

அனுகதம்

தொடர்ந்து செல்வது

அண்ணுகதம்

அண்ணு (=நெருங்கு, தொடர்) + கதி (=இயங்கு, செல்) + அம் = அண்ணுகதம் >>> அனுகதம் = தொடர்ந்து செல்வது

அனுகம்பம்

இரக்கம்

அணுகாமம்

அணு (=உயிர்) + காமம் (=அன்பு) = அணுகாமம் >>> அனுகம்பம் = உயிர்கள் மீது கொள்ளும் அன்பு.

நரம்

மனிதப் பிறவி

நறம்

நாறு (=மண, புகழ்பெறு, பிற) + அம் = நறம் >>> நரம் = புகழ்பெற்ற பிறவி.

நரன்

மனிதன்

நறன்

நறம் (=மனிதப்பிறவி) + அன் = நறன் >>> நரன் = மனிதன்.

2 கருத்துகள்:

  1. இதையெல்லாம் காண இன்ப அதிர்ச்சியாக உள்ளது நண்பர். இப்படிப் பார்த்தால் செங்கிருதச் சொற்கள் என்று நாம் கருதும் பலவும் தமிழாகத்தான் இருக்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறுதியாக. சமக்கிருதம் என்ற பெயர் மட்டுமே அவருடையது. அங்குள்ள சொற்கள் அனைத்தும் நமதே. :)

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.