செவ்வாய், 27 ஜூலை, 2021

79 - (கக்கசம் -> கடம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

கக்கசம், கக்கிசம்

கடினமான செயல்

கக்கசம்

கக்கு (=பெருக்கெடு, மிகு) + அசை (=செய், வருந்து) + அம் = கக்கசம் = மிகவும் வருந்திச் செய்தல் = கடினமான செயல்.

கக்கம், கட்கம்

அக்குள்

கைக்கம்

கை (=உறுப்பு, இடம்) + கோ (=பொருந்து, கவி) + அம் = கைக்கம் >>> கக்கம் = கைகள் பொருந்திய கவிந்த இடம்

கக்கூசு

மலம் கழிக்குமிடம்

கக்குழு, கழிக்குழி

(1) கக்கு (=வெளிப்படுத்து, கழி) + உழி (=இடம்) + உ = கக்குழு >>> கக்கூசு = வெளிப்படுத்தும் / கழிக்கும் இடம். (2) கழி + குழி = கழிக்குழி >>> கயிக்குசி >>> கக்கூசு = கழிக்கும் குழி

கக்குரீதி

கடினமான செயல்

கக்குறுதி

கக்கு (=பெருக்கெடு, மிகு, வெளிப்படுத்து) + உறுதி (=வலிமை, ஆற்றல்) = கக்குறுதி >>> கக்குரீதி = ஆற்றலை மிகுதியாக வெளிப்படுத்துவது

ககம்

பறவை

கக்கம்

கக்கு (=பரவு, பற) + அம் = கக்கம் >>> ககம் = பறப்பது

ககம்

பெரிய அம்பு

கக்கம்

கக்கு (=பெருக்கெடு, பெரிதாகு) + அம் (=அம்பு) = கக்கம் >>> ககம் = பெரிய அம்பு.

ககபதி

பருந்து

ககபதி

ககம் (=பறவை) + பதி (=அரசன்) = ககபதி = பறவைகளின் அரசன்

ககவசுகம்

ஆலமரம்

ககவசுகம்

ககம் (=பறவை) + வசு (=மரம்) + உக (=விரும்பு, உயர்) + அம் = ககவசுகம் = பறவைகள் விரும்பும் உயரமான மரம்.

ககனம்

ஆகாயம்

கக்கணம்

கக்கு (=வெளிப்படுத்து) + அணை (=இடம்) + அம் = கக்கணம் >>> ககனம் = வெளிப்படுத்தப்பட்ட இடம்.

ககனம்

காடு

ககனம்

கா (=மரம்) + கனம் (=மிகுதி, செறிவு) = ககனம் = மரங்கள் மிகுதியாகச் செறிந்திருப்பது = காடு.

ககனம்

போர்ப்படை

கைகனம்

கை (=வருத்து, கொல்) + கனம் (=கூட்டம்) = கைகனம் >>> ககனம் = கொல்லும் கூட்டம் = போர்ப்படை

ககுத்து

திமில்

கைகுத்து

கை (=உறுப்பு, ஆற்றல்) + குத்து (=செங்குத்து, ஊன்று, பதி) = கைகுத்து >>> ககுத்து = செங்குத்தாகப் பதிந்த வலிமையுடைய உறுப்பு.

ககுபம்

திசை

கைகுவம்

கை (=பக்கம்) + குவி (=ஒருமுகப்படு) + அம் = கைகுவம் >>> ககுபம் = ஒருமுகப்பட்ட பக்கம்.

ககேசன்

சூரியன்

கங்கேசன்

கங்கு (=தீ) + ஏசு (=செலுத்து) + அன் = கங்கேசன் >>> ககேசன் = தீயைச் செலுத்துபவன் = சூரியன்

ககோதரம்

பாம்பு

கக்கூதரம்

கக்கு (=பரவு, கட) + உதரம் (=வயிறு) = கக்கூதரம் >>> ககோதரம் = வயிற்றால் கடப்பது = பாம்பு.

ககோளம்

ஆகாயம்

கக்கூளம்

கக்கு (=வெளிப்படுத்து, பரவு) + உள் (=எழுச்சி, இடம்) + அம் = கக்கூளம் >>> ககோளம் = எழுச்சியும் பரப்பும் உடைய வெளிப்படையான இடம்.

கங்கணம்

கை வளையம்

கைக்கணம்

கை + கணம் (=வட்டம், வளையம்) = கைக்கணம் >>> கங்கணம் = கை வளையம்

கங்கதம், கங்கம்

சீப்பு

கங்கத்தம்

கங்கு (=வரிசை, ஒழுங்கு) + அத்தம் (=மயிர்க்கற்றை, கை, பொருள்) = கங்கத்தம் >>> கங்கதம் = மயிர்க்கற்றையை ஒழுங்குசெய்யும் கைப்பொருள் = சீப்பு.

கங்கம், கங்கு

கழுகு

கங்கம்

கங்கு (=தீ, எலும்பு) + அம் (=உணவு, நிறம், பறவை) = கங்கம் = எலும்புகளை உண்ணும் தீநிறப் பறவை.

கங்கர்

கல் துண்டு

கங்கரி

கங்கு (=துண்டு) + அரி (=கல்) = கங்கரி >>> கங்கர் = துண்டுக் கல்

கங்காளம்

மனித எலும்புக் கூடு

கங்காளம்

கங்கு (=எலும்பு) + ஆள் (=மனிதன்) + அம் = கங்காளம் = எலும்பு மனிதன் = மனித எலும்புக் கூடு

கங்காளம்

அகன்ற சிவப்பு நீர்ச்சட்டி

கங்காலம்

கங்கு (=தீ, சிவப்பு) + ஆல் (=அகன்ற பாத்திரம், நீர்) + அம் = கங்காலம் >>> கங்காளம் = சிவப்பான அகன்ற நீர்ப் பாத்திரம்

கங்காளி

உடல் வற்றிய ஏழை

கங்காளி

கங்கு (=எலும்பு, வெளிப்படு) + ஆள் (=மனிதன்) + இ = கங்காளி = எலும்பு வெளிப்படும் மனிதன் = உடல் வற்றிய ஏழை

கச்சகம்

குரங்கு

கய்யகம்

கை (=உறுப்பு, ஊட்டு, உண்) + அகம் (=மரம், வீடு, உயிரி) = கய்யகம் >>> கச்சகம் = மரத்தை வீடாகக் கொண்டு கையால் உண்ணும் உயிரி.

கச்சட்டம்

கோவணம்

கச்சற்றம்

கச்சு (=துணி) + அற்றம் (=மறைக்கத்தக்கது, சிறுமை) = கச்சற்றம் >>> கச்சட்டம் = மறைக்கத்தக்க சிறிய துணி.

கச்சடா

இழிவானது

கய்யறா

கயம் (=பெருமை) + அறு (=இல்லாகு) + ஆ = கய்யறா >>> கச்சடா = பெருமை இல்லாதது = இழிவானது.

கச்சதூசன்

தவளை வகை

கயதுஞ்சன்

கயம் (=நீர்நிலை, கீழ்) + துஞ்சு (=உறை, தூங்கு) + அன் = கயதுஞ்சன் >>> கசதுச்சன் >>> கச்சதூசன் = நீர்நிலையின் கீழ் உறைந்து தூங்குவது. ஒ.நோ: மண் + தூங்கு + அம் = மண்டூங்கம் >>> மண்டூகம் = மண்ணுக்குள் தூங்குவது = தவளை வகை.

கச்சந்தி

கோணிப்பை, கயிற்றுறை

காழத்தி

காழ் (=கயிறு, தோல், உறை) + அத்து (=தையல்) + இ = காழத்தி >>> கசந்தி >>> கச்சந்தி = கயிற்றால் தைத்த உறை

கச்சபம்

ஆமை

காழமம்

காழ் (=தோல், ஓடு, வலிமை) + அமை (=அடங்கு) + அம் = காழமம் >>> கசபம் >>> கச்சபம் = வலுவான ஓட்டிற்குள் அடங்குவது = ஆமை.

கச்சம்

மரக்கால், அளவை

காழம்

காழ் (=மரம், முற்று, நிறை) + அம் = காழம் >>> கசம் >>> கச்சம் = நிறைக்கப்படும் மரப் பொருள் = மரத்தாலான அளவை.

கச்சம்

பேரெண்

காழம்

காழ் (=அளவு கடந்தது) + அம் = காழம் >>> கசம் >>> கச்சம் = பேரெண்

கச்சம்

ஒப்பந்தம்

காழம்

காழ் (=முற்று, முடி, கட்டு) + அம் (=சொல்) = காழம் >>> கசம் >>> கச்சம் = முடிவான சொல்லால் கட்டப்பட்டது.

கச்சங்கம்

ஒப்பந்தம்

காழாக்கம்

காழ் (=முற்று, முடி, கட்டு) + ஆக்கம் (=சொல்) = காழாக்கம் >>> காசாங்கம் >>> கச்சங்கம் = முடிவான சொல்லால் கட்டப்பட்டது.

கச்சம்

சிறகு

கை

கை (=சிறகு) + அம் = கய்யம் >>> கச்சம்

கச்சம், கச்சன்

ஆமை

காழம்

காழ் (=தோல், ஓடு, வலிமை) + அம் = காழம் >>> கசம் >>> கச்சம் = வலுவான ஓட்டினைக் கொண்டது = ஆமை.

கச்சம்

யானை கட்டும் கயிறு

காழம்

காழ் (=மிகுதி, வலிமை, கயிறு) + அம் = காழம் >>> கசம் >>> கச்சம் = மிக வலிமையான கயிறு.

கச்சலாட்டம்

சண்டை

காய்ச்சலாட்டம்

காய்ச்சல் (=மன எரிச்சல்) + ஆடு (=எதிர், பேசு) + அம் = காய்ச்சலாட்டம் >>> கச்சலாட்டம் = மன எரிச்சலுடன் எதிர்த்துப் பேசுதல்.

கச்சவடம்

துணி வியாபாரம்

கச்சமாறம்

கச்சம் (=துணி) + மாறு (=விற்பனைசெய்) + அம் = கச்சமாறம் >>> கச்சவடம் = துணி விற்பனை செய்தல்.

கச்சளம், காச^ல்

கண்மை

கய்யலம்

கை (=அலங்காரம், வரி, சிறுமை, நுட்பம்) + அல் (=இருள், கருமை) + அம் = கய்யலம் >>> கச்சளம் >>> காச^ல் = அலங்கார வரிக்கான நுண்ணிய கரும்பொருள் = கண்மை.

கச்சளம்

இருள்

கேழலம்

கேழ் (=ஒளி) + அல் (=இன்மை) + அம் (=பொழுது) = கேழலம் >>> காசளம் >>> கச்சளம் = ஒளி இல்லாத பொழுது = இருள்.

கச்சா

முதிராதது, பக்குவமற்றது

கய்யா

கயம் (=மென்மை) + ஆ = கய்யா >>> கச்சா = மென்மையானது = முதிர்ச்சி இல்லாதது, பக்குவமற்றது.

கச்சால்

மீன் பிடி கூடு

கய்யாள்

கயல் (=மீன்) + ஆள் (=கைக்கொள், பிடி) = கய்யாள் >>> கச்சால் = மீனைப் பிடிக்க உதவுவது.

கச்சான்

மேற்குத் திசை, வெப்பக் காற்று

காயேண்

காய் (=சுடு, வெப்பமூட்டு) + ஏண் (=எல்லை, திசை) = காயேண் >>> கசான் >>> கச்சான் = வெப்பமூட்டும் திசை = மேற்கு. பி.கு: நான்கு திசைகளில் மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குக் கோடை என்று பெயர்.

கச்சிதம்

ஒழுங்கு

கய்யிதம்

கை (=ஒழுங்கு) + இதம் = கய்யிதம் >>> கச்சிதம்

கச்சு

அணி, ஆடை

கய்யு

கை (=அலங்கரி, அணி) + உ = கய்யு >>> கச்சு = அணியப்படுவது

கச்சு

கயிறு

காழ்

காழ் (=கயிறு) + உ = காழு >>> காசு >>> கச்சு

கச்சு

கடி, உண்ணு

கய்யு

கை (=ஊட்டு) + உ = கய்யு >>> கச்சு = உண்பி, உண்ணு, கடி

கச்சு

பசுங்காயுணவு

காய்

காய் + உ = கய்யு >>> கச்சு = காயுணவு = பச்சைக் காய்கறிக் கூட்டு

கச்சுரி

தீ, வெப்பம்

கய்யுறி

கை (=சிறுமை) + உறை (=நீர், எரி) + இ = கய்யுறி >>> கச்சுரி = நீரை எரித்துச் சிறுக்கச் செய்வது = தீ, வெப்பம்

கச்சுரை, கச்சூரம்

பேரீச்சம் பழம்

காழ்ச்சுரம்

காழ் (=முற்று, பழு, இரத்தினம், நிறம்) + சுரம் (=பாலைநிலம்) = காழ்ச்சுரம் >>> கச்சூரம், கச்சுரை = இரத்தின நிறமுடைய பாலைநிலப் பழம்.

கச்சூரம்

கழற்சிக் காய்

காயுரம்

காய் (=ஆட்டக்கருவி, கொட்டை) + உரம் (=வலிமை) = காயுரம் >>> காசுரம் >>> கச்சூரம் = ஆட்டக்கருவி ஆகும் வலிமையான கொட்டை.

கச்சேரி

தொழில் செய்யுமிடம்

கஞ்சேரி

கம் (=தொழில்) + சேரி (=தெரு, இடம்) = கஞ்சேரி >>> கச்சேரி = தொழில் நடக்கும் தெரு / இடம்.

கச்சேரி

சூதாடுமிடம்

காய்ச்சேரி

காய் (=சூதாடுகருவி) + சேரி (=சேருமிடம்) = காய்ச்சேரி >>> கச்சேரி = சூதாடுகருவிக்காக சேருமிடம்.

கச்சை

தழும்பு

காயம்

காயம் (=தழும்பு) + ஐ = காயை >>> கசை >>> கச்சை

கச்சை, கசை

கவசம்

காழை

காழ் (=இரும்பு, தோல்) + ஐ = காழை >>> காசை >>> கசை, கச்சை = இரும்பால் ஆன தோல் = கவசம்.

கச்சை

கயிறு

காழை

காழ் (=நூல், வலிமை) + ஐ = காழை >>> காசை >>> கச்சை = வலுவான நூல் = கயிறு.

கச்சை

ஆடை

காழை

காழ் (=நூல், தோல்) + ஐ = காழை >>> காசை >>> கச்சை = நூலினால் ஆன தோல் = ஆடை.

கச்சோடி

வெற்றிலை

காழ்ச்சோடி

காழ் (=இரத்தினம், நிறம், வலிமை, கொட்டை) + சோடி (=துணை) = காழ்ச்சோடி >>> கச்சோடி = இரத்தின நிறங்கொண்ட வலுவான கொட்டையாகிய பாக்கிற்கு சோடியாக இருப்பது = வெற்றிலை.

கச்சோதம்

மின்மினிப் பூச்சி

காழுந்தம்

காழ் (=கருமை, இருள், ஒளி) + உந்தி (=பறவை) + அம் = காழுந்தம் >>> கசுத்தம் >>> கச்சோதம் = இரவில் ஒளிரும் பறவை.

கசகர்ணம்

பெருமுயற்சி

கயகரணம்

கயம் (=பெருமை) + கரணம் (=செயல்) = கயகரணம் >>> கசகர்ணம் = பெருஞ்செயல்

கசடு

குற்றம்

கயடு

கயம் (=கேடு) + அடை (=கொடு) + உ = கயடு >>> கசடு = கேடு தருவது = குற்றம்

கசடு

அடிமண்டி, அழுக்கு

கயடு

கயம் (=நீர், கீழ்நிலை, மென்மை) + அடை (=சேர், தங்கு, பொருள்) + உ = கயடு >>> கசடு = நீரின் கீழ்நிலையில் தங்கும் மென்மையான பொருள்.

கசடு

சந்தேகம்

கழறு

காழ் (=ஒளி, தெளிவு, முற்று, முடி) + அறை (=இன்மை) + உ = கழறு >>> கசடு = தெளிந்த முடிவின்மை = சந்தேகம்

கசதி, கச்`தி

நோய், துன்பம்

கயாற்றி

கை (=வருந்து) + ஆற்று (=கொடு) + இ = கயாற்றி >>> கசத்தி >>> கசதி = வருத்தத்தைக் கொடுப்பது = நோய், துன்பம்

கசப்பு

கைத்தொழில்

கயமு

கை + அமை (=செய்) + உ = கயமு >>> கசப்பு = கையால் செய்யப்படுவது

கசம்

யானை

கழம்

காழ் (=வலிமை, கருமை, பெருமை) + அம் = கழம் >>> கயம் >>> கசம் = வலிமையும் கருமையும் பெருமையும் உடையது = யானை.

கசம், கேசம்

தலைமயிர்

காழம்

(2) காழ் (=கருமை, நூல், ஒப்பு) + அம் (=நீளம்) = காழம் >>> காசம் >>> கசம், கேசம் = நீண்ட கருப்பு நூல் போன்றது = தலைமயிர்.

கயம்

தாமரை

கயம்

காய் (=எரி, ஒப்பு) + அம் (=நீர்) = கயம் = நீரில் எரிவதைப் போன்றது

கசம்

கை நீளம்

கயம்

கை + அம் (=நீளம்) = கயம் >>> கசம் = கை நீளம்.

கசர்

மிச்சம், மீதி

கழார்

காழ் (=மிகு) + ஆர் (=தங்கு) = கழார் >>> கசர் = மிக்குத் தங்கியது

கசர்

குறைவு

கயார்

கயம் (=தேய்வு) + ஆர் (=பொருந்து) = கயார் >>> கசர் = தேய்வு பொருந்தியது = குறைவு.

கசரத்து

உடற்பயிற்சி

கயாரற்று

காயம் (=உடல்) + ஆர் (=விரும்பு) + அறு (=வருத்து) + உ = கயாரற்று >>> கசரத்து = விரும்பி உடலை வருத்துதல்.

கசவம்

கடுகு

கழாய்வம்

காழ் (=கருமை, விதை) + ஆய்வு (=நுணுக்கம்) + அம் (=உணவு) = கழாய்வம் >>> கசவம் = கருமையான நுண்ணிய விதையுணவு.

கசற்பம்

மஞ்சள்

கழருப்பம்

காழ் (=தோல், ஒளி, வலிமை, மரத்துண்டு) + அருப்பு (=தோன்றச்செய்) + அம் = கழருப்பம் >>> கசறுப்பம் >>> கசற்பம் = தோலுக்கு ஒளியைத் தோன்றச்செய்யும் வலிமையுடைய மரத்துண்டு.

கசானா

பொக்கிசம்

கழாணா

காழ் (=மிகு, வைரம், இரத்தினம்) + ஆணம் (=கொள்கலம்) + ஆ = கழாணா >>> கசானா = வைர இரத்தினங்கள் மிக்க கொள்கலம்

கசாப்பு

உண்ணத்தக்க மாமிசம்

கழாப்பு

கழி (=மாமிசம்) + ஆப்பு (=உணவு) = கழாப்பு >>> கசாப்பு = உண்ணக் கூடிய மாமிசம்.

கசாயம்

காய்ச்சிவடிகட்டிய மருந்துநீர்

காய்ச்சாயம்

காய்ச்சு + ஆய் (=பிரித்தெடு, வடிகட்டு) + அம் (=மருந்து, நீர்) = காய்ச்சாயம் >>> கசாயம் = காய்ச்சி வடிகட்டிய மருந்து நீர்.

கசாயி

மாமிசத்திற்காக கொல்பவன்

கழழி

கழி (=மாமிசம்) + அழி (=கொல்) = கழழி >>> கசாயி = மாமிசத்திற்காகக் கொல்பவன்

கசாலா

துன்பம், நோய்

கழளா

கழி (=நீங்கு) + அளி (=இன்பம்) + ஆ = கழளா >>> கசாலா = இன்பம் நீங்கியது = துன்பம், நோய்

கசாலை

சமையலறை

காய்ச்சாலை

காய்ச்சு (=சமை) + ஆலை (=இடம்) = காய்ச்சாலை >>> கசாலை = சமைக்கும் இடம் = சமையலறை

கசிதம்

இரத்தினங்களைப் பதிக்கை

கழுதம்

காழ் (=இரத்தினம்) + உதை (=ஊன்று, பதி) + அம் = கழுதம் >>> கசுதம் >>> கசிதம் = இரத்தினங்களைப் பதிக்கை

கசிதம்

சிறு துடுப்பு

காழிறம்

காழ் (=துடுப்பு) + இறை (=சிறுமை) + அம் = காழிறம் >>> கசிதம் = சிறிய துடுப்பு

கசுத்தி

நோய், துன்பம்

கயுந்தி

கை (=வருந்து) + உந்து (=கொடு) + இ = கயுந்தி >>> கசுத்தி = வருத்தத்தைக் கொடுப்பது = நோய், துன்பம்

கசுமாலம், கச்`மாலம்

இழிவானது, இழிவானவன்

கழிமாலம்

கழி (=நீங்கு, அழி) + மால் (=பெருமை) + அம் = கழிமாலம் >>> கசிமாலம் >>> கச்`மாலம், கசுமாலம் = பெருமை அழிந்தது / அழிந்தவன்

கசூர், கசூரி

கவனமின்மை

கழோர்

கழி (=நீங்கு, இல்லாகு) + ஓர் (=கவனி) = கழோர் >>> கசோர் >>> கசூர் = கவனம் இல்லாமை.

கசை

பிரம்பு

கழை

கழை (=மூங்கில், பிரம்பு) >>> கசை

கஞ்சம்

வட்டதாளம்

காழம்

காழ் (=இரும்பு, வட்டம்) + அம் (=சொல், ஒலி) = காழம் >>> காசம் >>> கஞ்சம் = இரும்பால் ஆன ஒலிக்கின்ற வட்டம்.

கஞ்சம்

நீர்ப்பாத்திரம்

கய்யம்

கை (=ஊட்டு, ஊற்று) + அம் (=நீர்) = கய்யம் >>> கச்சம் >>> கஞ்சம் = நீர் ஊற்றப்படுவது = நீர்ப்பாத்திரம்

கஞ்சம்

பொய், வஞ்சனை

காயம்

காய் (=ஒப்பு, போலி) + அம் (=சொல்) = காயம் >>> காசம் >>> கஞ்சம் = போலியான சொல் = பொய், வஞ்சனை

கஞ்சம்

தாமரை

கயம்

காய் (=எரி, ஒப்பு) + அம் (=நீர்) = கயம் >>> கசம் >>> கஞ்சம் = நீரில் எரிவதைப் போன்றது

கஞ்சம்

நீர்

கயம்

கயம் (=நீர்) >>> கசம் >>> கஞ்சம்

கஞ்சன்

சிறிதளவே கொடுப்பவன்

கய்யன்

கை (=சிறுமை, ஊட்டு, கொடு) + அன் = கய்யன் >>> கச்சன் >>> கஞ்சன் = சிறிதளவே கொடுப்பவன்

கஞ்சன்

ஊனமுற்றவன்

கய்யன்

கயம் (=குறைபாடு) + அன் = கய்யன் >>> கச்சன் >>> கஞ்சன் = குறைபாடு உடையவன் = ஊனமுற்றவன் = நொண்டி, குறளன் ....

கஞ்சனம், கஞ்சனை

கண்ணாடி

காழணம்

காழ் (=ஒளி, பளிங்கு) + அணம் = காழணம் = காசனம் >>> கஞ்சனம் = ஒளிரும் பளிங்கு.

கஞ்சனம்

வட்ட தாளக் கருவி

காழணம்

காழ் (=இரும்பு, வட்டம்) + அணை (=பொருந்து) + அம் (=சொல். ஒலி) = காழணம் >>> கசனம் >>> கஞ்சனம் = பொருந்தி ஒலிக்கும் இரும்பு வட்டம் = வட்டமான தாளக் கருவிகள்.

கஞ்சனை

வாசனைப் பாத்திரம்

கஞ்சென்னை

கம் (=வாசனை) + சென்னி (=பாத்திரம்) + ஐ = கஞ்சென்னை >>> கஞ்சனை = வாசனைப் பாத்திரம் = நறுமணப் புகைக் கலசம்

கஞ்சா

கள்

காழ்ச்சாய்

காழ் (=மரம்) + சாய் (=ஒளி, வெண்மை, வடிகட்டு) = காழ்ச்சாய் >>> கச்சா >>> கஞ்சா = மரத்தில் இருந்து வெண்ணிறமாய் வடிகட்டியது.

கஞ்சா

போதை தரும் இலை

காழ்ச்சாய்

காழ் (=மன உறுதி) + சாய் (=அழி, இலை) = காழ்ச்சாய் >>> கச்சா >>> கஞ்சா = மன உறுதியை அழிக்கும் இலை.

கஞ்சி

வடிக்கப்பட்ட உணவு

கயிழி

காயம் (=உணவு) + இழி (=வடி) = கயிழி >>> கைசி >>> கஞ்சி = வடிக்கப்பட்ட உணவு.

கஞ்சிகை

குதிரை வண்டி

கெச்சுகை

கேசி (=குதிரை) + உகை (=செலுத்து) = கெச்சுகை >>> கஞ்சிகை = குதிரையால் செலுத்தப்படுவது = குதிரை வண்டி

கஞ்சிகை

பல்லாக்கு

கயூக்கை

கை (=தோள்) + ஊக்கு (=மிகுதி, பன்மை, ஏற்று, செலுத்து) + ஐ = கயூக்கை >>> கசுகை >>> கஞ்சிகை = பல தோள்களில் ஏற்றிச் செலுத்தப்படுவது = பல்லாக்கு. ஒ.நோ: பல் + ஆகம் (=தோள்) + உய் (=செலுத்து) = பல்லாக்குய் >>> பல்லாக்கு = பல தோள்களால் செலுத்தப்படுவது

கஞ்சிகை

ஆடை

காழ்சிக்கை

காழ் (=நூல், மிகு) + சிக்கு (=பின்னு, கிடை) + ஐ = காழ்சிக்கை >>> கச்சிகை >>> கஞ்சிகை = மிகுதியான நூலினைப் பின்னிக் கிடைத்தது

கஞ்சிகை, கஞ்சுகி

திரைச்சீலை

கச்சிகை

கச்சு (=ஆடை, துணி) + இகு (=தாழ்ந்து விழு, விரி, தடு, மறை) + ஐ = கச்சிகை >>> கஞ்சிகை = தாழ்ந்து விழுந்து விரிந்து மறைக்கும் துணி.

கஞ்சிரா

சிறிய கைப்பறை

காழெறாய்

காழ் (=வட்டம், தோல்) + எறி (=அடி, ஒலி) + ஆய் (=சிறு) = காழெறாய் >>> கசெரா >>> கஞ்சிரா = அடித்து ஒலிக்கப்படும் சிறிய வட்டத் தோல்.

கஞ்சிலி

கைப்பறை

காழ்ச்சிலி

காழ் (=வட்டம், தோல்) + சிலை (=அடி, ஒலி) + இ = காழ்ச்சிலி >>> கச்சிலி >>> கஞ்சிலி = அடித்து ஒலிக்கப்படும் வட்டமான தோல்.

கஞ்சுகம், கஞ்சுகி

ஆடை

காழ்சிக்கம், கய்யிகம்

(1) காழ் (=நூல், மிகு) + சிக்கு (=பின்னு, கிடை) + அம் = காழ்சிக்கம் >>> கச்சுகம் >>> கஞ்சுகம் = மிகுதியான நூலினைப் பின்னிக் கிடைத்தது = ஆடை. (2) காயம் (=உடல்) + இகு (=விரி, தடு, மறை) + அம் = கய்யிகம் >>> கச்சிகம் >>> கஞ்சுகம் = உடலில் விரிந்து மறைப்பது = ஆடை.

கஞ்சுகம்

பாம்புத்தோல்

காழுகம்

காழ் (=தோல்) + உகம் (=பாம்பு) = காழுகம் >>> கசுகம் >>> கஞ்சுகம் = பாம்புத் தோல்

கஞ்சுகன், கஞ்சுகி

மெய்க் காப்பாளன்

கய்யிகன்

காயம் (=உடல், மெய்) + இகு (=தடு, காப்பாற்று) + அன் = கய்யிகன் >>> கச்சிகன் >>> கஞ்சுகன் = மெய்க் காப்பாளன்

கஞ்சுகி

பாம்பு

காழுகி

காழ் (=தோல்) + உகு (=உதிர், உரி) + இ = காழுகி >>> கசுகி >>> கஞ்சுகி = தோலை உரிப்பது = பாம்பு

கஞ்சுளி

சட்டை

கய்யிளி

காயம் (=உடல்) + இளை (=பாதுகாப்பு, மெலி) + இ = கய்யிளி >>> கச்சிளி >>> கஞ்சுளி = உடலைப் பாதுகாக்கும் மெல்லிய பொருள்.

கட்கம்

வாள்

கடிங்கம்

கடி (=வெட்டு, கூர்மை) + இங்கம் (=பொருள்) = கடிங்கம் >>> கடிகம் >>> கட்கம் = வெட்டுகின்ற கூரிய பொருள்.

கட்சம்

புத்தகம்

கட்சம்

காட்சி (=அறிவு, இடம்) + அம் = கட்சம் = அறிவைக் காணும் இடம்

கட்சி

பிரிவு, பகுதி

கட்சி

கள் (=பறி, பிரி) + சி = கட்சி = பிரிவு, பகுதி

கட்சி

உறங்குமிடம்

கடிசி

கடி (=காவல், விழிப்பு, விலக்கு, இடம்) + சி = கடிசி >>> கட்சி = விழிப்பை விலக்கும் இடம் = உறங்குமிடம். ஒ.நோ:  கடி (=காவல், விழிப்பு, விலக்கு) + இல் (=இடம்) = கட்டில் = விழிப்பை விலக்கும் இடம்.

கட்சி

போர்க்களம்

கடிசி

கடி (=சின, வெட்டு, கொல், ஓசை, மிகுதி, இடம்) + சி = கடிசி >>> கட்சி = சினந்து வெட்டிக் கொல்லும் ஓசை மிக்க இடம் = போர்க்களம்.

கட்டங்கம்

மழு, வாள்

கட்டங்கம்

கடி (=வெட்டு, கூர்மை) + அங்கம் (=பொருள்) = கட்டங்கம் = வெட்டுகின்ற கூரிய பொருள் = மழு, வாள்

கட்டம், கச்~டம்

துன்பம்

கேடு

கேடு (=துன்பம்) + அம் = கெட்டம் >>> கட்டம் >>> கச்~டம்

கட்டம்

கழிவு, மலம்

கெட்டம்

கெடு (=திரி, நீக்கு, கழி) + அம் = கெட்டம் >>> கட்டம் = கழிக்கப்படும் திரிபுற்ற பொருள்.

கட்டம்

படித்துறை

கட்டம்

கடை (=இடம், தாழ்வு, இறக்கம்) + அம் (=நீர்) = கட்டம் = நீரில் இறங்கும் இடம் = நீர்த்துறை.

கட்டம்

நிலை, காலம்

கடி

கடி (=காலம்) + அம் = கட்டம் = காலம், நிலை

கட்டம்

மோவாய்

கட்டம்

கடி (=பற்களை ஒருசேர இறுக்கு, இடம்) + அம் = கட்டம் = பற்களை ஒருசேர இறுக்கும் இடம் = மோவாய்.

கட்டனை

தரையைச் சமமாக்குகை

கட்டணை

கட்டு (=இறுக்கு, கட்டிடம்) + அணை (=இடம், தரை) = கட்டணை >>> கட்டனை = கட்டிடத்தின் தரையை இறுகச் செய்தல்.

கட்டாவணி

கதிர் அறுப்பு

கட்டமணி

கடு (=பறி, அறு) + அம் (=உணவு) + அணை (=உண்டாக்கு, விளைவி, கட்டு) + இ = கட்டமணி >>> கட்டாவணி = விளைவித்த உணவை அறுத்துக் கட்டுதல்.

கட்டாணி

கதிர் அறுப்பு

கட்டணி

கடு (=பறி, அறு) + அணை (=உண்டாக்கு, விளைவி, கட்டு) + இ = கட்டணி >>> கட்டாணி = விளைவித்ததை அறுத்துக் கட்டுதல்.

கட்டாயம்

மிக உறுதி, அதி அழுத்தம்

கட்டாயம்

கடுமை (=மிகுதி) + ஆயம் (=உறுதி) = கட்டாயம் = மிக உறுதி, அதிக அழுத்தம், பலவந்தம்

கட்டாரி

குத்துவாள், சூலம்

கட்டெறி

கடு (=பறி, அறு) + எறி (=கொட்டு, குத்து) = கட்டெறி >>> கட்டாரி = குத்தி அறுப்பது = குத்துவாள், சூலம்

கட்டாவு

கதிர் அறுப்பு

கட்டமு

கடு (=பறி, அறு) + அமை (=புல், பயிர், உண்டாக்கு, கட்டு) + உ = கட்டமு >>> கட்டாவு = உண்டாக்கிய பயிரை அறுத்துக் கட்டுதல்.

கட்டியம்

குறி சொல்கை

கட்டியம்

கட்டு (=குறி) + இயம் (=சொல்) = கட்டியம் = குறி சொல்லுதல்

கட்டியம்

புகழ்மாலை

கட்டியம்

கட்டு (=பா இயற்று, சூட்டு) + இயம் (=சொல்) = கட்டியம் = சொற்களால் பா இயற்றிச் சூட்டுதல் = புகழ்மாலை.

கட்டில்

தூங்குமிடம், படுக்கை

கட்டில்

கடி (=காவல், விழிப்பு, விலக்கு) + இல் (=இடம்) = கட்டில் = விழிப்பை விலக்கும் இடம் = தூங்குமிடம்

கட்டுவாங்கம்

மழு, வாள்

கடிவகம்

கடி (=கூர்மை) + வகு (=பிள, வெட்டு) + அம் = கடிவகம் >>> கட்டிவாக்கம் >>> கட்டுவாங்கம் = வெட்டுகின்ற கூரிய பொருள் = மழு, வாள்

கட்டுவை

தூங்குமிடம், படுக்கை

கடிவை

கடி (=காவல், விழிப்பு, விலக்கு) + வை (=இடம்) = கடிவை >>> கடுவை >>> கட்டுவை = விழிப்பை விலக்கும் இடம் = தூங்குமிடம்

கட்டை

பாடை

கட்டை

கட்டை (=படுக்கை, சாவு) >>> கட்டை = செத்தவரின் படுக்கை.

கடகம்

பாத்திரம், பெட்டி

கட்டகம்

கட்டை (=தாழ்வு, பள்ளம்) + அகம் (=உள், பொருள்) = கட்டகம் >>> கடகம் = உள்ளே பள்ளமான பொருள் = பாத்திரம், பெட்டி

கடகம்

நண்டு

கட்டகம்

கட்டு (=தழுவு, வளைத்துப்பிடி) + அகை (=அறு, வெட்டு) + அம் = கட்டகம் >>> கடகம் = வளைத்துப் பிடித்து வெட்டுவது = நண்டு.

கடகம்

காப்பு,விலங்கு, வளையம், வட்டம்

கட்டகம்

கட்டு (=மணிக்கட்டு, வளைத்துப்பிடி, அணி) + அகம் (=பொருள்) = கட்டகம் >>> கடகம் = மணிக்கட்டை வளைத்துப் பிடிக்குமாறு அணியும் பொருள் = கைக்காப்பு, கைவிலங்கு, வளையம், வட்டம்

கடகம், கடகு, கேடகம்

கேடகம்

கட்டகம்

கட்டு (=தடு, மறை) + அகை (=அடி, தாக்கு) + அம் = கட்டகம் >>> கடகம் >>> கேடகம் = தாக்குவதைத் தடுத்து மறைப்பது.

கடகம்

போர்ப்படை

கட்டகம்

கட்டு (=பொருந்து, கூட்டம்) + அகை (=அறு, முறி, கொல்) + அம் = கட்டகம் >>> கடகம் = பொருந்திக் கொல்லும் கூட்டம்

கடகம்

சுவர்

கட்டகம்

கட்டு (=உண்டாக்கு, மறை) + அகம் (=உள்) = கட்டகம் >>> கடகம் = உள்ளிருப்பதை மறைக்கக் கட்டப்படுவது = சுவர்.

கடகம்

மலைப்பக்கம்

கடகம்

கடை (=பக்கம்) + அகம் (=மலை) = கடகம் = மலைப்பக்கம்

கடகம்

யானைக் கூட்டம்

கடாக்கம்

கடம் (=யானை) + ஆக்கம் (=திரள், கூட்டம்) = கடாக்கம் >>> கடகம் = யானைக் கூட்டம்

கடகன்

தரகன்

கட்டாக்கன்

கட்டு (=கூட்டு, முடி) + ஆக்கம் (=காரியம், செல்வம், பணம்) + அன் = கட்டாக்கன் >>> கடகன் = பணத்திற்காக காரியத்தைக் கூட்டி முடிப்பவன்

கடகன்

வல்லவன்

கட்டாக்கன்

கட்டு (=உறுதி, வலிமை) + ஆக்கம் (=செயல்) + அன் = கட்டாக்கன் >>> கடகன் = செயல் வலிமை உடையவன்

கடகு

மெய்க்காப்பு

கட்டாகு

கட்டு (=காவல்) + ஆகம் (=உடல், மெய்) + உ = கட்டாகு >>> கடகு = மெய்க்காப்பு

கடுதாசி, கடதாசி

கடிதம்

கட்டிதழி

கட்டு (=எழுது, பேசு) + இதழ் (=தாள்) + இ = கட்டிதழி >>> கட்டுதசி >>> கடுதாசி >>> கடதாசி = எழுத்தால் பேசும் தாள் = கடிதம்

கடம்

மதநீர், யானை, யானைக் கதுப்பு

கடம்

கடுமை (=சினம், மதம்) + அம் (=நீர்) = கடம் = மத நீர் >>> மதநீர் சொரிவது (=யானை), மதநீர் தோன்றும் இடம் (= யானைக் கதுப்பு)

கடம்

கயிறு

கட்டம்

கட்டு (=இறுக்கு, சேர்) + அம் = கட்டம் >>> கடம் = இறுக்கிச் சேர்க்க உதவுவது = கயிறு.

கடம்

மயானம்

காடு

காடு (=மயானம்) + அம் = கடம்

கடம்

வழி

கடம்

கட (=செல்) + அம் (=நீளம்) = கடம் = நீண்டு செல்வது = வழி

கடம்

குடம்

கட்டம்

கட்டு (=தேக்கு, உருவாக்கு, வளைப்பு) + அம் (=நீர்) = கட்டம் >>> கடம் = நீரைத் தேக்குவதற்காக வளைத்து உருவாக்கப்பட்டது = குடம்.

கடம்

உடல்

கட்டை

கட்டை (=உடல்) + அம் = கட்டம் >>> கடம்

கடம்

மரமஞ்சள்

கட்டம்

கட்டு (=உடல், கூட்டு, பூசு) + அம் (=அழகு, ஒளி) = கட்டம் >>> கடம் = உடலுக்கு அழகிய ஒளியைக் கூட்ட பூசப்படுவது = மரமஞ்சள்.

கடம்

மலைப்பக்கம்

கட்டு

கட்டு (=மலைப்பக்கம்) + அம் = கட்டம் >>> கடம்

ஆவேசம்

தீயசத்தி பீடித்தல்

ஆவேயம்

ஆவி (=பேய்) + ஏய் (=பொருந்து) + அம் = ஆவேயம் >>> ஆவேசம் = பேய் பொருந்துதல் = தீயசத்தி பீடித்தல்.

கூசா, கூசா^

பாத்திரம்

குழிசா

குழிசி (=பாத்திரம்) + ஆ = குழிசா >>> குயிசா >>> கூசா

திமிங்கலம், திமிங்கிலம்

மரக்கலத்தை அழிக்கும் மீன்

துமிங்கலம்

(2) துமி (=நீர், பிள, அழி) + கலம் (=மரக்கலம்) = துமிங்கலம் >>> திமிங்கலம் >>> திமிங்கிலம் = நீரில் மரக்கலத்தைப் பிளந்து அழிப்பது.

பல்லாக்கு, பல்லக்கு

சிவிகை

பல்லாக்குய்

(2) பல் + ஆகம் (=தோள்) + உய் (=செலுத்து) = பல்லாக்குய் >>> பல்லாக்கு, பல்லக்கு = பல தோள்களால் செலுத்தப்படுவது.