செவ்வாய், 3 மே, 2022

10. (உக்கம் > உரோகிணி) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 10 - Ukkam to Urokini

 

தமிழ்ச்சொல்

பொருள்

மேற்கோள்

தோன்றும் முறை

உக்கம்

பொன்

கலி. 94

உகு (=கரை, உருகு, உமிழ்) + அம் (=அழகு, ஒளி) = உக்கம் = ஒளியை உமிழும் அழகிய உருக்கு = தங்கம்

உக்கம்

நடு, இடை

திரு. 108

உகை (=பதி, இரு) + அம் (=சமம், தூரம்) = உக்கம் = சம தூரத்தில் இருப்பது = மையம், நடு >>> இடை

உகவை

மகிழ்ச்சி

புற. 368

உக (=மகிழ்) + ஐ = உகவை = மகிழ்ச்சி

உகிர்

நகம்

திரு. 52

ஒழுகு (=வளர், நீள்) + ஈர் (=அறு, கீறு) = ஒழுகீர் >>> உகிர் = நீளமாக வளர்ந்து கீறக் கூடியது = நகம்

உகிர்

கண்ணிமை

அக. 317

உகு (=பெய், மெலி) + ஈர் (=வகு, எழுது) = உகீர் >>> உகிர் = பெய்து வகுத்து எழுதப்படும் மெல்லியது = கண்ணிமை

உச்சி

உயரம்

திரு. 185

ஒய் (=உயர்) + இ = ஒய்யி >>> உச்சி = உயரம்

உட்கு

அச்சம்

நற். 383

உள்கு (=கலங்கு, அஞ்சு) >>> உட்கு = கலக்கம், அச்சம்

உடங்கு

கூட்டம், சேர்க்கை

நற். 251, 91

உடை (=அழி, இல்லாகு) + அகை (=பிரி) + உ = உடக்கு >>> உடங்கு = பிரிவின்மை = சேர்க்கை, கூட்டம்

உடம்பாடு

கூட்டம்

பரி. 10

உடை (=அழி, இல்லாகு) + பாடு (=கூறு, பிரிவு) = உடைப்பாடு >>> உடம்பாடு = பிரிவின்மை = சேர்க்கை, ஒற்றுமை, கூட்டம்

உடம்பிடி

வேல்

பெரும். 76

உறு (=கொள், பிடி) + அம் (=போர்) + இறை (=பொழுது, கை, வீசு, எறி) + இ = உறம்மிறி >>> உடம்பிடி = போரின்போது கையினால் பிடித்து எறியப்படுவது = வேல்.

உடம்பு

உடல்

பதி. 42

உறை (=வாழிடம்) + ஆவி (=உயிர்) + உ = உறாவ்வு >>> உடம்பு = உயிருக்கான வாழிடம்

உடல்

உடம்பு

பரி. 4

உறை (=உணவு, கூடு) + அள் (=நுகர்) = உறள் >>> உடல் = உணவை நுகர்கின்ற கூடு = உடம்பு

உடல்

பகை

குறி. 159

உறு (=சேர், ஒன்று) + அல் (=எதிர்மறை) = உறல் >>> உடல் = ஒன்றாமை = மாறுபாடு, பகை

உடன்

ஒருங்கு

திரு. 174

உறு (=சேர், ஒன்று) + அன் = உறன் >>> உடன் = ஒருங்கு

உடன்

அப்பொழுது

திரு. 310

உறு (=நிகழ்) + அம் (=பொழுது) = உறம் >>> உடன் = நிகழும் பொழுது = அப்பொழுது

உடு

பிறை

குறி. 170

இறை (=சிவன், தலை, தங்கல்) + ஊழ் (=ஒளி) = இறூழ் >>> உடு = சிவனின் தலையில் தங்கி ஒளிர்வது = பிறை

உடு

அம்பு

பரி. 1

ஈண்டு (=விரை, குத்து, செறி) >>> உடு = விரைந்து சென்று குத்திச் செறிவது = அம்பு

உடுக்கை

ஆடை

நற். 64

உடு + கை = உடுக்கை = உடுத்துவது

உடுப்பு, உடும்பு

ஒருவகை ஊர்வன விலங்கு

பெரு. 200, மலை. 508

உறை (=செறி, பெருமை, தோல், சுவர், ஊன்று) + ஓப்பு (=உயர்) = உறோப்பு >>> உடுப்பு >>> உடும்பு = சுவரில் ஊன்றி உயரக் கூடிய செறிந்த பெரிய தோலுடையது.

உடை

ஆடை

திரு. 138

ஊறு (=உடல், பொருத்துகை, நிறை) + ஐ (=மென்மை) = உறை >>> உடை = உடலில் நிறைவாகப் பொருத்தப்படும் மென்பொருள்

உடைமை

பொருள்

புற. 199

உறை (=பொருள்) + மை = உறைமை >>> உடைமை

உடைமை

இருப்பு

நற். 88

உறை (=தங்கு, இரு) + மை = உறைமை >>> உடைமை = இருப்பு

உண்டி

உணவு

குறு. 156

உண் + இ = உண்ணி >>> உண்டி = உண்ணப்படுவது

உண்டி

நுகர்ச்சி

மலை. 83

உண் (=நுகர்) + இ = உண்ணி >>> உண்டி = நுகர்ச்சி

உண்டிகை

கூட்டம்

பரி. 6

ஒட்டு (=சேர், கூடு) + கை = ஒட்டுகை >>> உண்டிகை = கூட்டம்

உண்மை

உளதாகுதல்

புற. 182

உள் (=உளதாகு) + மை = உண்மை = உளதாகுதல்

உண்மை

அனுபவம்

குறு. 352

உண் (=நுகர், அனுபவி) + மை = உண்மை = அனுபவம்

உண்மை

கருத்து

ஐங். 169

உள் (=எண்ணு) + மை = உண்மை = எண்ணம், கருத்து

உணக்கல், உணங்கல்

உலர்த்திய உணவுத்துண்டு

நற். 45, அக. 20

ஊண் (=உணவு) + அகை (=வெட்டு, எரி, வாட்டு) + அல் = உணக்கல் = வெட்டித் தீயில் வாட்டிய உணவு

உணர்ச்சி

அறிவு

புற. 197

உணர் (=அறி) + சி = உணர்ச்சி = அறிவு

உணர்வு

அறிவு

கலி. 25

உணர் (=அறி) + பு = உணர்பு >>> உணர்வு = அறிவு

உணவு, உணா

நுகர்பொருள்

புற. 396, மது. 660

உண் (=நுகர்) + ஔ = உணவு >>> உணா = நுகர்பொருள்.

உத்தரியம்

இரவிக்கை, மேலாடை

கலி. 96

உந்தி (=வயிறு, மேல்) + ஆர் (=நிறை, மறை, அணி) + இயம் = உந்தாரியம் >>> உத்தரியம் = வயிற்றுக்கு மேலே நிறைவாக மறைத்து அணிவது = இரவிக்கை, மேலாடை

உத்தி

தலை

நற். 129

இறை (=தலை) + இ = இற்றி >>> உத்தி

உத்தி

புள்ளி

அக. 202

இறை (=அற்பம், துகள், புள்ளி) + இ = இற்றி >>> உத்தி

உத்தி

தோற்றம்

திரு. 23

உந்து (=வெளிப்படு, தோன்று) + இ = உந்தி >>> உத்தி = தோற்றம்

உதவி

வறுமை / துன்பம் நீக்கல்

அக. 231, குறு. 225

உத்து (=நீக்கு) + எவ்வம் (=வறுமை, துன்பம்) + இ = உத்தெவ்வி >>> உதவி = வறுமை / துன்பம் நீக்குதல்

உதள்

ஆடு

பெரு. 151

உத்தி (=தலை) + அள் (=வலிமை, முட்டு) = உத்தள் >>> உதள் = தலையினால் வலுவாக முட்டுவது = ஆடு

உதிரல்

உதிர்ந்த மலர்

பதி. 7

உதிர் + ஆல் (=மலர்) = உதிரால் >>> உதிரல் = உதிர்ந்த மலர்

உதைப்பு

செலுத்துகை

அக. 24

உதை (=செலுத்து) + பு = உதைப்பு = செலுத்துகை

உந்தி

ஆறு

மது. 245

உறை (=நீர், மிகு, செல், நீளம்) + இ = உற்றி >>> உத்தி >>> உந்தி = மிகுதியாக நீண்டு செல்லும் நீர் = ஆறு

உந்தி

கண்ணிமை

குறி. 140

இறை (=கண்ணிமை) + இ = இற்றி >>> உத்தி >>> உந்தி

உந்தி

வட்டம்

பரி. 13

உந்து (=உருட்டு) + இ = உந்தி = உருட்டுவது = உருளை, வட்டம்

உந்தூழ்

மூங்கில்

மலை. 133

உந்து (=தோற்றுவி, பெருக்கு) + ஊழ் (=தீ, சிந்து) = உந்தூழ் = தீயைத் தோற்றுவித்துச் சிந்திப் பெருக்குவது = மூங்கில்

உப்பு

வெண்ணிறப் பொடி

பட். 29

உய் (=உண், இன்புறு, இடு) + பூ (=வெண்மை, சிறுமை, பொடி) = உய்ப்பூ >>> உப்பு = உணவின் இனிமைக்காக சிறிதாக இடப்படும் வெண்ணிறப் பொடி

உப்பு

இன்பம்

அக. 390

உய் (=அனுபவி, இன்புறு) + பு = உய்ப்பு >>> உப்பு = இன்பம்

உம்பர்

உவ்விடம்

குறு. 11

உ + ஆர் (=இடம்) = உவ்வார் >>> உம்பர் = உவ்விடம்

உம்பர்

மேலிடம்

பரி. 11

ஒய் (=உயர்) + பார் (=இடம்) = ஒய்பார் >>> உம்பர் = உயரமான இடம் = மேலிடம்

உம்பர்

தேவர்

பரி. 17

இமை + ஆ (=எதிர்மறை) + ஆர் = இம்மார் >>> உம்பர் = இமைக்காதவர் = தேவர்

உம்பல்

குழந்தை

பெரு. 31

ஓம்பு (=தோற்றுவி, பாதுகா, வளர்) + அல் = ஒம்பல் >>> உம்பல் = தோற்றுவித்துப் பாதுகாத்து வளர்க்கப்படுவது = குழந்தை

உம்பல்

யானை

மலை. 429

உப்பு (=உயர், பெரு) + அல் (=கருமை) = உப்பல் >>> உம்பல் = உயர்ந்து பெருத்து கருநிறம் கொண்டது = யானை

உமண்

உப்பு, உப்பு வணிகர்

நற். 374, அக. 173

உய் (=உண், இன்புறு, இடு) + மண் (=பொடி, தூய்மைசெய்) = உய்மண் >>> உமண் = உணவில் இனிமைக்காக இடப்படும் தூய்மையான பொடி = உப்பு >>> உப்பு வணிகர்

உமணர்

உப்பு வணிகர்

சிறு. 55

உமண் (=உப்பு) + அர் = உமணர் = உப்பு வணிகர்

உய்தி

பரிகாரம்

புற. 34

உய் (=ஈடேற்று) + தி = உய்தி = ஈடேற்றம், பரிகாரம்

உய்வு

தப்பிக்கை

குறி. 166

உய் (=தப்பு) + பு = உய்பு >>> உய்வு = தப்பித்தல்

உயக்கம், உயங்கல்

உடல் சோர்வு

பதி. 68, அக. 199

ஓய் (=சோர்) + ஆகம் (=உடல்) = ஒயாகம் >>> உயக்கம் = உடல் சோர்வு

உயவு, உயவல்

சோர்வு

நற். 131, ஐங். 377

(1) ஓய் (=சோர்) + ஔ = ஒயவு >>> உயவு = சோர்வு. (2) உயவு (=சோர்வு) + அல் = உயவல்

உயவல்

வறுமை, பசி

புற. 375

உய் (=நுகர்) + அவி (=அழி, இல்லாகு) + அல் = உயவல் = நுகர்வதற்கு இல்லாமை = வறுமை, பசி

உயவு, உயா

வருத்தம்

நற். 82, அக. 19

உய் (=இன்புறு) + அவி (=அழி, இல்லாகு) + உ = உயவு >>> உயா = இன்பம் இல்லாமை = துன்பம், வருத்தம்

உயவு

ஆறுதல், தேற்றுதல்

ஐங். 477

உழை (=வருந்து) + அவி (=குறை) + உ = உழவு >>> உயவு = வருத்தத்தைக் குறைத்தல் = ஆறுதல் சொல்லுதல்

உயிர்

உடலை இயக்குவது

நற். 72

ஊழ் (=தசை, உடல்) + ஈர் (=இழு, இயக்கு) = உழீர் >>> உயிர் = உடலை இயக்குவது.

உயிர்

எழுத்தொலி, ஒலி

குறி. 100, நற். 310

உய் (=அறிவி) + ஈர் (=எழுது) = உயீர் >>> உயிர் = எழுத்தை அறிவித்தல் = எழுத்தொலி >>> ஒலி

உரம், உரன்

வலிமை, துணிச்சல்

திரு. 121, நற். 246, சிறு. 115

உறை (=இறுகு, வலுப்படு) + அம் = உறம் >>> உரம் = வலிமை >>> துணிச்சல்

உரல்

உலக்கையால் குத்தப்படுவது

அக. 9

உறை (=உயரம், செறி, இடம், குத்து, உணவு) + அள் (=தண்டு, இரும்பு) = உறள் >>> உரல் = இரும்பினைச் செறித்த உயரமான தண்டினால் உணவைக் குத்தும் இடம்

உரவு

மிகுதி, பெருமை

மலை. 326, பெரு. 453

உறை (=பெருமை) + ஔ = உறவு >>> உரவு = பெருமை, மிகுதி

உரவு

ஒலி

பெரு. 350

உரை (=ஒலி) + ஔ = உரவு = ஒலி

உரவு

வலிமை

மலை. 211

உறை (=இறுகு, வலுப்படு) + ஔ = உறவு >>> உரவு = வலிமை

உரவு

நஞ்சு

நற். 285

உறை (=உணவு) + அவி (=கொல்) + உ = உறவு >>> உரவு = கொல்லும் உணவு = நஞ்சு

உரவு

வெம்மை

அக. 114

உறை (=சுடு) + ஔ = உறவு >>> உரவு = சூடு, வெம்மை

உரன்

உடல்

அக. 92

உரு (=உடல்) + அன் = உரன்

உரன்

திமில்

சிறு. 190

உரு (=பிண்டம், வளர், பெருமை, தோன்று, உடல்) + ஆன் (=காளை) = உரான் >>> உரன் = காளையின் உடலில் தோன்றி பெரிதாக வளரும் பிண்டம்

உரால்

செல்லுகை, ஒழுகுகை

மது. 387, பதி. 47

ஊர் (=செல்லு, ஒழுகு) + அல் = உரல் >>> உரால் = செல்லுகை, ஒழுகுகை

உரி

தோல்

பொரு. 83

ஊறு (=தசை, தொடுகை உணர்வு) + இயை (=பொருந்து) = உறியை >>> உரி = தசையுடன் பொருந்தித் தொடுகை உணர்வுடையது = தோல்

உரிது

மகிழ்ச்சி

அக. 256

உறு (=அடை) + இதம் (=இன்பம்) + உ = உறிது >>> உரிது = இன்பம் அடைதல் = மகிழ்ச்சி

உரிமை

உறவு

பரி. 8

உறு (=பொருந்து, உறவுகொள்) + மை = உறுமை >>> உருமை >>> உரிமை = உறவு.

உரிவை

தோல்

திரு. 129

உரி (=தோல்) + மை = உரிமை >>> உரிவை

உரு

அச்சம்

நற். 192

இரி (=அஞ்சு) + உ = இரு >>> உரு = அச்சம்

உரு, உருவு

தோற்றம்

கலி. 38, புற. 271

இறை (=இமை, உயரம்) + உய் (=அறி) = இறுய் >>> உரு = இமைகளை உயர்த்தி அறியப்படுவது = தோற்றம்

உரு, உருவு

அழகு

பதி. 88, நற். 82

இருமை (=கருமை, கறை) + உய் (=நீங்கு) = இருய் >>> உரு = கருமை / கறை நீங்கியது = ஒளி, அழகு

உரு

உயரம்

நற். 299

ஊர் (=உயர்) + உ = உரு = உயரம்

உரு

தண்டு

பட். 171

இறை (=தண்டு) + உ = இறு >>> உரு

உருக்கு

தீயில் உருகுவது

பொரு. 43

ஊர் (=நெகிழ், பரவு) + உக்கம் (=தீ) + உ = உருக்கு = உருக்கு = தீயில் நெகிழ்ந்து பரவுவது

உருப்பு

வெப்பம்

நற். 43

உரு (=எரி, சுடு) + பு = உருப்பு = சூடு, வெப்பம்

உருப்பு, உருபு

தோற்றம்

சிறு. 7, பரி. 3

உரு (=தோற்றம்) + பு = உருபு >>> உருப்பு = தோற்றம், வடிவம்

உரும், உருமு

கார்மேகம்

பதி. 90, பரி. 9

உறை (=மழை) + ஈவு (=கொடை) = உறீவு >>> உருமு >>> உரும் = மழையைக் கொடுப்பது = கார்மேகம்

உரும்பு

அழிவு

பதி. 26

இறு (=அழி) + பு = இறுப்பு >>> உரும்பு = அழிவு

உருவம்

நிறம்

திரு. 241

உரு (=தோற்றம், நிறம்) + அம் = உருவம்

உருவம்

அழகு

சிறு. 251

உரு (=அழகு) + அம் = உருவம்

உருவம்

சிவப்பு

கலி. 103

உரு (=எரி, நிறம்) + அம் = உருவம் = எரியின் நிறம் = சிவப்பு

உருவம்

கருப்பு

கலி. 104

உரும் (=கார்மேகம்) + அம் (=நிறம்) = உருமம் >>> உருவம் = கார்மேகத்தின் நிறம் = கருப்பு

உருவம்

பணம்

கலி. 136

உரு (=உருவமுள்ளது, வட்டப்பொருள், தன்மை) + அம் (=ஒளி) = உருவம் = ஒளிரும் தன்மையும் உருவமும் உடைய வட்டப் பொருள் = பணம்.

உருள்

உருண்டை

பரி. 5

உரு (=வட்டம், திரள்) + உள் (=இரு) = உருள் = வட்டமாகத் திரண்டு இருப்பது = உருண்டை

உருள்

பழங்கால வழிப்போக்கர் உணவுக்கலன்

அக. 121

உறை (=பாத்திரம், உணவு, செறி, ஆடைக்கவசம்) + உள் = உறுள் >>> உருள் = உள்ளே செறிந்த உணவையும் ஆடைக் கவசமும் உடைய பாத்திரம் = பழங்கால வழிப்போக்கர் உணவுக் கலன்

உருளி, உருளை

சக்கரம்

பதி. 27, பெரு. 188

உருள் + இ = உருளி = உருளக் கூடியது = சக்கரம்

உரை

பொடி

திரு. 145

இறு (=சிறிதாகு) + ஐ = இறை >>> உரை = சிறுமை, பொடி

உரை

பேச்சு

நற். 36

இறு (=சொல், பேசு) + ஐ = இறை >>> உரை = பேச்சு

உரை

பெருமை

நற். 185

ஊர் (=உயர்) + ஐ = உரை = உயர்வு, பெருமை

உரோகிணி

சக்கரவடிவ நட்சத்திரம்

நெடு. 163

உரு (=வட்டவடிவம்) + ஓகம் (=கூட்டம்) + இனை (=எரி, ஒளிர்) + இ = உரோகினி >>> உரோகிணி = வட்டவடிவ ஒளிக் கூட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.