ஞாயிறு, 15 மே, 2022

12. (எஃகம் > ஏனல்) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 12 - Eqkam to Enal

 

தமிழ்ச்சொல்

பொருள்

மேற்கோள்

தோன்றும் முறை

எஃகம், எஃகு

வேல்

பதி. 90, 45

ஆக்கம் (=கைக்கொள்ளுகை, உலோகம், படை) + உ = அக்கு >>> எஃகு = படையால் கைக்கொள்ளப்படும் உலோகம் = வேல்

எஃகு

கத்தி

நற். 247

ஆய் (=அறு, குத்து, சிறுமை) + கோ (=கூரியது) = அய்கோ >>> எஃகு = அறுக்கவும் குத்துவதற்குமான சிறிய கூர்ம்பொருள்

எஃகு

வரைகோல்

கலி. 32

ஆய் (=அழகாக்கு, சிறுமை) + கோ (=கூரியது) = அய்கோ >>> எஃகு = அழகாக்குவதற்கான சிறிய கூர்ம்பொருள் = வரைகோல்

எக்கர்

மேடு

ஐங். 19

எக்கு (=குவி) + ஆர் (=நிலம்) = எக்கார் >>> எக்கர் = குவிந்த நிலம்

எக்கர்

மணல்மேடு

மலை. 556

எக்கு (=குவி, நுட்பம், பொடி) + ஆர் (=அழகு, வெண்மை, நிலம்) = எக்கார் >>> எக்கர் =  வெண்ணிற நிலப்பொடியின் குவியல்

எகினம்

நாய்

நற். 132

எக்கு (=தாவிப்பாய்) + இனை (=துன்புறுத்து) + அம் (=கட்டளை) = எக்கினம் >>> எகினம் = கட்டளைக்குத் தாவிப்பாய்ந்து துன்புறுத்துவது = நாய்

எகினம்

அன்னம்

அக. 34

ஏகு (=நீங்கு, பிரி) + இன்மை + அம் (=அழகு, நீர், பறவை) = எகினம் = பிரிவு இல்லாத அழகிய நீர்ப் பறவை = அன்னம்

எச்சம்

குறைபாடு

புற. 28

எய் (=இளை, குறை) + அம் = எய்யம் >>> எச்சம் = குறைபாடு

எச்சம்

புகழ்

பதி. 74

இசை (=புகழ்) + அம் = இச்சம் >>> எச்சம்

எச்சில்

ஆகாயம்

பரி. 5

ஏ (=மேல்நோக்குகை) + இல் (=இன்மை, வெளி, இடம்) = எய்யில் >>> எச்சில் = மேல்நோக்குடைய வெளியிடம் = ஆகாயம்

எச்சில்

உண்டு மிஞ்சியது

புற. 258

அசை (=உண், விடு, தங்கு) + இல் (=இன்மை) = அச்சில் >>> எச்சில் = உண்ணாமல் விட்டுத் தங்கியது

எட்டு

எண் வகை

பரி. 3

ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன்கொள்ளும் திசைகளின் முற்றான எண்ணிக்கை

எடுத்தேறு

உருண்டை

பதி. 84

எடு (=திரட்டு) + தெறு (=குவி) = எடுத்தெறு >>> எடுத்தேறு = குவித்துத் திரட்டியது = உருண்டை

எண்

எட்டு

பொரு. 11

எட்டு >>> எண்ணு >>> எண்

எண்கு

கரடி

அக. 307

ஏண் (=வலிமை) + கை + ஊழ் (=கருமை, உடல்) = எண்கூழ் >>> எண்கு = வலுவான கருத்த உடலையும் கைகளையும் கொண்டது

எண்ணெய்

நல்லெண்ணை

புற. 278

எள் + நெய் = எண்ணெய் = எள்ளின் நெய்

எண்மை

வரவேற்பு

புற. 54

ஏல் (=அன்புசெய், எதிர்கொள்) + மை = என்மை >>> எண்மை = அன்புசெய்து எதிர்கொள்ளுதல் = வரவேற்பு

எந்திரம்

கரும்பாலை

ஐங். 55

இறு (=நசுக்கு, கொடு) + ஈரம் (=கரும்பு, சாறு) = இற்றீரம் >>> எத்திரம் >>> எந்திரம் = கரும்பை நசுக்கிச் சாறு கொடுப்பது

எந்தை, என்னை

என் தந்தை, என் தலைவன்

குறி. 20, புற. 175, புற. 308

என் + ஐ (=தந்தை, தலைவன்) = என்னை >>> எந்தை = என் தந்தை, என் தலைவன்

எமியம்

தனக்குத்தானே

குறு. 172

எம் + இயை (=சேர்) + எம் = எமியெம் >>> எமியம் = தன்னோடு தானே சேர்ந்து = தனக்குத்தானே

எயில்

கோட்டை மதில்

பதி. 20

ஏ (=செலுத்து, அம்பு, மேல்) + இல் (=இடம்) = எயில் = மேலிருந்து அம்பு செலுத்துவதற்கான இடத்தைக் கொண்டது

எயிறு

பல்

குறி. 131

ஆய் (=கொண்டாடு, சிரி, சிறுமை, வெண்மை) + உரு (=தோன்று, வடிவம்) = அயுரு >>> எயிறு = சிரித்தால் வெண்ணிறத்தில் சிறு வடிவத்தில் தோன்றுவது = பல்

எயிறு

கண்

அக. 217

எழு (=உயர், தோன்று) + இறை (=இமை) + உ = எழிறு >>> எயிறு = இமைகள் உயர்ந்தால் தோன்றுவது = கண்

எயினர்

வேடர்

பட். 266

எய் (=அம்பு, செலுத்து) + இனை (=வருத்து, கொல்) + அர் = எயினர் = அம்பினைச் செலுத்திக் கொல்பவர்

எரி

தீ

நற். 177

ஆர் (=பற்று, பரவு, உண்) + ஈ (=அழிவு) = அரீ >>> எரி = பற்றிப் பரவி உண்டு அழிப்பது = தீ

எரு

மலம்

பெரு. 154

அரி (=நீக்கு, துளை) + ஊழ் (=பதனழி, நாறு) = அரூழ் >>> எரு = துளைவழி நீக்கப்படும் பதனழிந்து நாறும் பொருள் = மலம்

எருத்தம், எருத்து

கழுத்து

கலி. 105, நற். 81

இறை (=தலை, இடம்) + ஊறு (=உடல், பொருந்துகை) + அம் = இறூற்றம் >>> எருத்தம் = உடலுடன் தலை பொருந்தும் இடம்

எருத்தம், எருத்து

காளை

கலி. 104, பட். 52

(1) எருது (=காளை) + அம் = எருத்தம். (2) எருது (=காளை) + உ = எருத்து

எருத்து

உயிர்

புற. 40

இறை (=கூடு, தங்கல்) + உந்து (=தோன்று, இயக்கு) = இறுந்து >>> எருத்து = கூட்டில் தோன்றித் தங்கி இயக்குவது = உயிர்

எருது

காளை

புற. 102

ஏர் (=எழுச்சி, கலப்பை) + உந்து (=செலுத்து) = எருந்து >>> எருது = எழுச்சியுடன் கலப்பையைச் செலுத்துவது = காளை

எருந்து

சிப்பி

சிறு. 58

இறை (=கண்ணிமை, கூடு, ஒப்பு) + உதி (=தோன்று) + உ = இறுத்து >>> எருந்து = கண்ணிமையைப் போலத் தோன்றும் கூட்டினை உடையது = சிப்பி

எருமை

மாட்டு வகை

நற். 60

ஏர் (=கலப்பை) + ஒய் (=மெதுமை, இழு) + மை (=கருப்பு, பிறவி) = எரொய்மை >>> எருமை = கலப்பையை மெதுவாக இழுக்கின்ற கருநிறப் பிறவி

எருவை

செந்தலைப் பருந்து

புற. 373

இறை (=தலை, சிறகு) + ஊ (=தசை, உடல்) + பை (=வலிமை, சிவ, பெரு) = இறூபை >>> எருவை = பெரிய சிவந்த தலையும் பெரிய உடலும் வலுவான சிறகுகளும் கொண்டது

எல்லரி

கைத்தாளம்

மலை. 10

அள் (=பற்று, இரும்பு) + ஆர் (=பொருத்து, வட்டம், ஒலி) + இ = அள்ளாரி >>> எல்லரி = பற்றிப் பொருத்தி ஒலிக்கப்படும் வட்டமான இரும்பு = கைத்தாளம்

எல்லி

பகை

நற். 121

ஏல் (=எதிர்) + இ = எல்லி = எதிர்ப்பு, பகை

எல்லை, எல்லு, எல்லி

பகல்

பொரு. 233, நற். 59, நற். 41

எல் (=ஒளி) + ஐ = எல்லை = ஒளி உடையது = பகல்

எல்லி

மலர்

நற். 169

இலை (=இதழ்) + இ = இல்லி >>> எல்லி = இதழ்களைக் கொண்டது = மலர்

எல்லி

இரவு

நற். 354

(1) எல் (=ஒளி) + ஈ (=அழிவு) = எல்லீ >>> எல்லி = ஒளியின் அழிவு = இரவு. (2) அல் (=இரவு) + இ = அல்லி >>> எல்லி

எல்லை

முடிவு

மது. 71

இல் (=இல்லாகு, முடி) + ஐ = இல்லை >>> எல்லை = முடிவு

எலி

நாசம் செய்யும் உயிரி

குறு. 107

அளை (=பொந்து, கூடியிரு, உணவு) + ஈ (=அழிவு) = அளீ >>> எலி = பொந்துக்குள் கூடியிருந்து உணவை அழிப்பது

எலுவன்

நண்பன்

நற். 50

ஏல் (=அன்புசெய்) + உவ (=விரும்பு, மகிழ்) + அன் = எலுவன் = விரும்பி அன்புசெய்து மகிழ்பவன் = நண்பன்

எவ்வம்

துன்பம்

நற். 97

அவி (=வாடு, துன்புறு) + அம் = அவ்வம் >>> எவ்வம் = துன்பம்

எவ்வம்

பிரிவு

நற். 130

அவி (=நீங்கு, பிரி) + அம் = அவ்வம் >>> எவ்வம் = பிரிவு

எவ்வம்

கடல்

பரி. 19

எவ்வு (=உயரத்தாவு) + அம் (=நீர்) = எவ்வம் = உயரத் தாவும் நீரைக் கொண்டது = கடல்

எவ்வம்

வறுமை, பட்டினி

புற. 393

(1) அவி (=இல்லாகு) + அம் = அவ்வம் >>> எவ்வம் = இல்லாமை = வறுமை. (2) அவி (=உணவு, இல்லாகு) + அம் = அவ்வம் >>> எவ்வம் = உணவின்மை = பட்டினி

எழால்

பருந்து

குறு. 151

எழு (=உயர்) + ஆல் (=ஒலி, சுற்று) = எழால் = உயரத்தில் ஒலித்தவாறே சுற்றுவது = பருந்து

எழால்

ஏழிசை

குறு. 323

ஏழ் + ஆல் (=ஒலி, இசை) = எழால் = ஏழிசை

எழில்

ஊக்கம்

திரு. 157

ஆழ் (=சோம்பு) + இல் = அழில் >>> எழில் = சோம்பலின்மை

எழில்

அழகு

நற். 379

அழி (=நீங்கு) + எல் (=கருமை, கறை) = அழெல் >>> எழில் = கறை நீங்கியது = அழகு

எழில்

தோற்றம்

பட். 231

ஆழ் (=மறை) + இல் = அழில் >>> எழில் = மறைவின்மை = தோற்றம்

எழிலி

மேகம்

பரி. 1

எழு (=தோன்று, உயர், பெருகு, பரவு) + இல் (=வெளி, ஆகாயம்) = எழில் = தோன்றி உயர்ந்து பெருகி ஆகாயத்தில் பரவக் கூடியது = மேகம்

எழினி

திரைத்துணி

முல் 64

எழு (=தோன்று, பரவு, விரி) + இன்மை + இ = எழினி = தோன்றாதிருக்க விரிக்கப்படுவது = திரைத்துணி

எழுத்து

வரிவடிவம்

ஐங். 352

எழு (=தோன்று) + ஊத்து (=ஒலி) = எழூத்து >>> எழுத்து = ஒலியின் / ஒலிக்கப்படும் தோற்றம் = வரிவடிவம்

எளிது

இடையூறு / தடை அற்றது

மது. 145

இல் (=இன்மை) + ஊறு (=இடையூறு, தடை) = இலூறு >>> எளிது = இடையூறு / தடை அற்றது

எற்றம்

துணிவு

கலி. 144

எறி (=வெட்டு, துணி) + அம் = எற்றம் = துணிதல்

எறும்பி, எறும்பு

இனிப்பை நுகர்ந்தூரும் சிற்றுயிரி

அக. 377, பதி. 30

ஈர் (=அறு, துண்டாக்கு, சிறுமை, கவர், நீளு) + உப்பு (=உணவு) + இ = இருப்பி >>> எறும்பி = உணவைச் சிறிய துண்டுகளாக்கிக் கவர்ந்து நீளும் சிற்றுயிரி

எறுழ்

தசைவலிமை

பதி. 31

இறு (=இறுகு, வலுவடை) + ஊழ் (=தசை) = இறூழ் >>> எறுழ் = தசை வலிமை

என்பு

எலும்பு

புற. 68

ஏண் (=வலிமை) + பூ (=தோன்று, வெண்மை, உடல்) = எண்பூ >>> என்பு = உடலில் வெண்மையாய்த் தோன்றும் வலுவான பொருள்

என்பு

அன்பு

அக. 31

அன்பு >>> என்பு

என்றூழ்

கோடை வெயில்

ஐங். 324

இனை (=எரி) + ஊழ் (=வெயில்) = இன்னூழ் >>> என்றூழ் = எரிக்கும் வெயில் = கோடை வெயில்

அம்பு

முல். 84

ஆய் (=விரை, குத்து, நுண்மை, கூர்மை) >>> ஆ >>> ஏ = விரைந்து சென்று குத்தும் கூர்ம்பொருள் = அம்பு

பெருக்கம்

நற். 116

எழு (=வளர், பெருகு) + இ = எழி >>> ஏ = பெருக்கம்

ஏக்கழுத்து

திமிர்

பரி. 7

அகம் (=நெஞ்சம்) + அழுத்தம் + உ = ஆக்கழுத்து >>> ஏக்கழுத்து = நெஞ்சழுத்தம் = திமிர்

ஏடு

இதழ்

பொரு. 159

எய் (=இளை, மெலி) + இறு (=சிறு) = எயிறு >>> ஏடு = மெலிவுடைய சிறிய பொருள்

ஏணி

ஏறி இறங்க சார்த்துவது

பெரு. 347

அண (=உயர், ஏறு, சார்த்து) + இழி (=இறங்கு) = ஆணிழி >>> ஏணி = ஏறி இறங்க சார்த்தப்படுவது

ஏணி

எல்லை

மது. 199

அணை (=முடி) + இ = ஆணி >>> ஏணி = முடிவு, எல்லை

ஏத்தம்

ஒலி

மலை. 341

அறை (=ஒலி) + அம் = ஆற்றம் >>> ஏத்தம்

ஏதம்

துன்பம்

அக. 236

அறு (=வருத்து) + அம் = ஆறம் >>> ஏதம் = வருத்துவது

ஏதம்

அவமானம்

நற். 173

அற்றம் (=அவமானம்) >>> எத்தம் >>> ஏதம்

ஏது

பருவம்

ஐங். 462

அற்றம் (=பருவம்) + உ = ஆற்று >>> ஏத்து >>> ஏது

ஏது

முறை

அக. 132

ஆறு (=முறை) >>> ஏது

ஏது

உறவு

நற். 161

அத்து (=பொருத்து) >>> எத்து >>> ஏது = பொருத்தம், உறவு

ஏது

கட்டி

குறு. 285

இறு (=இறுகு) >>> ஏது = இறுகியது = கட்டி

ஏது

அமைதி

நற். 144

ஆறு (=அமைதியாகு) >>> ஏது = அமைதி

ஏந்தல்

தலைமை

குறு. 180

இறை (=தலைமை) + அல் = ஈற்றல் >>> ஏத்தல் >>> ஏந்தல்

ஏமம்

இன்பம்

பரி. 11

இழும் (=இனிமை) + அம் = இழுமம் >>> ஈமம் >>> ஏமம் = இன்பம்

ஏமம்

உறுதி, வலிமை

புற. 39, பரி. 3

ஆவி (=வலிமை, உறுதி) + அம் = ஆவம் >>> ஏமம்

ஏமம்

இரவு

அக. 187

அவி (=அழி) + அம் (=ஒளி, பொழுது) = ஆவம் >>> ஏமம் = ஒளி அழிந்த பொழுது = இரவு

ஏமம்

காவல்

பதி. 68

அவி (=கெடு, நீக்கு) + அம் = ஆவம் >>> ஏமம் = கேட்டினை நீக்குதல் = காவல்

ஏமம்

பொய்

மலை. 306

அவம் (=பொய்) >>> ஏமம்

ஏமம்

பெருமை

பரி. 24

அமை (=நிறை, பெருகு) + அம் = ஆமம் >>> ஏமம் = பெருக்கம், பெருமை

ஏமம்

தங்கம்

குறி. 32

ஈவு (=கொடை, பொருள்) + அம் (=அழகு, ஒளி) = ஈவம் >>> ஏமம் = அழகைத் தரும் ஒளிரும் பொருள் = தங்கம்

ஏர்

கலப்பை

புற. 338

ஈர் (=அறு, கீறு, இழு) >>> ஏர் = கீறியவாறு இழுக்கப் படுவது = கலப்பை

ஏராளர்

உழவர்

பதி. 76

ஏர் (=கலப்பை) + ஆளர் = ஏராளர் = கலப்பையை ஆள்வோர்

ஏரி

நீர்நிலை

பட். 39

அரி (=நீர், கட்டு) >>> ஆரி >>> ஏரி = கட்டப்பட்ட நீர்

ஏவல்

கட்டளை

புற. 26

ஏ (=செலுத்து, இயக்கு) + அல் = ஏவல் = இயக்குவது

ஏவல்

அம்பெய்தல்

அக. 215

ஏ (=செலுத்து, அம்பு) + அல் = ஏவல் = அம்பு செலுத்துதல்

ஏழகம்

ஆடு

பட். 141

எழு (=கிளர், உயர்) + அகை (=இடைவிடு, அடி, தாக்கு) + அம் (=சண்டை) = ஏழகம் = இடைவிட்டுக் கிளர்ந்து உயர்ந்து தாக்கிச் சண்டையிடுவது = ஆடு

ஏழு

ஆறினை அடுத்த எண்

பரி. 3

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=எண்ணு, ஒளி) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை

ஏழை

பெண்

கலி. 55

அழி (=மிகுதி) + ஐ (=மென்மை, அழகு) = ஆழை >>> ஏழை = மென்மையும் அழகும் மிக்கவள் = பெண்

ஏழை

வண்டு

கலி. 107

அழி (=வண்டு) + ஐ = ஆழை >>> ஏழை

ஏழை

அறியாமை

கலி. 114

அழி (=இல்லாகு) + ஐ (=நுட்பம், அறிவு) = ஆழை >>> ஏழை = அறிவின்மை

ஏற்றம்

ஏற்றுகை

அக. 107

ஏற்று + அம் = ஏற்றம் = ஏற்றுகை

ஏற்றம்

நீரேற்றுகை

மது. 90

ஏற்று + அம் (=நீர்) = ஏற்றம் = நீரேற்றுகை

ஏறு

ஆண்

குறு. 319

எறுழ் (=தசைவலிமை) + இ = எறுழி >>> ஏறு = தசை வலிமை உடையது = ஆண்

ஏறு

காளை

கலி. 105

ஏர் (=கலப்பை) + உய் (=செலுத்து, நடத்து) = ஏருய் >>> ஏறு = கலப்பையைச் செலுத்த நடத்தப்படுவது = காளை

ஏறு

இடிமின்னல்

குறி. 49

எறி (=ஒலி, பாய், வெட்டு, ஒளிர்) + உ = ஏறு = ஒலியுடன் பாய்ந்து வெட்டும் ஒளி = இடிமின்னல்

ஏறு, ஏறை

தலைமை

பதி. 38, புற. 157

இறை (=தலைமை) + உ = ஈறு >>> ஏறு

ஏற்றை

ஆண்

குறு. 141

ஏறு (=ஆண்) + ஐ = ஏற்றை

ஏனம்

பன்றி

பெரு. 110

ஈன் (=நிலம், விளை, வெளியேற்று) + அம் (=உணவு) = ஈனம் >>> ஏனம் = நிலத்தில் விளைந்ததை வெளியேற்றி உண்பது

ஏனம்

யானை

பதி. 16

ஆனை + அம் = ஆனம் >>> ஏனம்

ஏனல்

விளைநிலம், விளைபயிர்

நற். 288, மலை. 108

ஈன் (=நிலம், விளை) + அல் = ஈனல் >>> ஏனல் = விளைநிலம், நிலத்தின் விளைந்த பயிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.