புதன், 4 மே, 2022

11. (உல்கு > ஊனம்) சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் - Tamil Etymological Dictionary - Part 11 - Ulku to Uunam

 

தமிழ்ச் சொல்

பொருள்

மேற்கோள்

தோன்றும் முறை

உல்கு

வரி

பெரு. 81

ஒல் (=பணி, கட்டு) + கோ (=அரசு) = ஒல்கோ >>> உல்கு = அரசுக்குப் பணிந்து கட்டுவது = வரி, சுங்கம்

உலக்கை

உணவைக் குத்துவதற்கான தண்டு

பெரு. 226

(1) உலை (=கலை, உடை) + அகம் (=உள்ளிடம், உணவு, தண்டு) + ஆய் (=குத்து) = உலக்காய் >>> உலக்கை = உணவினை உள்ளிட்டு  உடைப்பதற்கான தண்டு. (2) ஒல் (=பொருத்து) + ஆய் (=குத்து) + காழ் (=தண்டு, இரும்பு) = ஒலாய்க்காழ் >>> உலக்கை = இரும்பு பொருத்தப்பட்ட குத்துவதற்கான தண்டு

உலகம், உலகு

பூமி

திரு. 293, புற. 382

ஓலம் (=கடல்) + அகம் = ஒலகம் >>> உலகம் >>> உலகு = கடலால் அகப்படுத்தப் பட்டது

உலண்டு

புழு

கலி. 101

உளை (=குடை) + அண்டு (=தங்கு) = உளண்டு >>> உலண்டு = குடைந்து தங்குவது = புழு

உலப்பு

குறைவு

நற். 115

உல (=குறை) + பு = உலப்பு = குறைவு

உலவை

வற்றல், வறட்சி

நற். 62, அக. 369

உல (=குறை, வற்று) + ஐ = உலவை = வற்றல், வறட்சி

உலவை

மரக்கிளை

அக. 259

ஒலி (=தழை) + அமை (=தண்டு) = ஒலமை >>> உலவை = தழையுடைய தண்டு = மரக்கிளை

உலவை

வறண்ட மரக்கிளை

அக. 293

உலவை (=வறட்சி, மரக்கிளை) >>> உலவை = வறண்ட மரக்கிளை

உலவை

காற்று

கலி. 11

உலை (=அலைந்துதிரி, கலை) + அமை (=பொழுது) = உலமை >>> உலவை = பொழுதும் அலைந்து திரிவதும் கலைப்பதுமானது

உலா

பயணம்

அக. 81

உலை (=திரி, பயணி) + ஔ = உலவு >>> உலா = பயணம்

உலை

அடுப்பு

நற். 133

உள் (=உள்ளிடம்) + அழி (=எரி) = உளழி >>> உலயி >>> உலை = எரிப்பதற்கான உள்ளிடத்தைக் கொண்டது

உலைவு

சோர்வு

புற. 158

இளை (=சோர்) + பு = இளைப்பு >>> உலைவு = சோர்வு

உலைவு

அச்சம்

பெரு. 419

உலை (=அஞ்சு) + பு = உலைபு >>> உலைவு = அச்சம்

உவகை

மகிழ்ச்சி

மலை. 318

உவ (=மகிழ்) + கை = உவக்கை >>> உவகை = மகிழ்ச்சி

உவணம்

பருந்து

பரி. 2

ஊழ் (=சுற்று, வட்டம்) + வான் + அம் (=ஒலி, பறவை) = ஊழ்வானம் >>> உவணம் = ஒலித்தவாறு வானத்தில் வட்டமாகச் சுற்றுகின்ற பறவை

உவமம்

ஒப்பாக அமைந்தது

பதி. 73

ஒப்பு + அமை + அம் = ஒப்பமம் >>> உவமம் = ஒப்பாக அமைந்தது

உவர்

மகிழ்ச்சி

நற். 52

உவ (=மகிழ்) + அர் = உவர் = மகிழ்ச்சி

உவர்

உப்பு

அக. 387

உப்பு + அர் = உப்பர் >>> உவர்

உவர்

உப்பளம்

நற். 138

உப்பு + ஆர் (=பெறு, நிலம்) = உப்பார் >>> உவர் = உப்பினைப் பெறுகின்ற நிலம் = உப்பளம்

உவரி

கிணறு

பெரு. 98

உய் (=நுகர்) + வார் (=நீர், தோண்டு) + இ = உய்வாரி >>> உவரி = நீரை நுகர்வதற்காகத் தோண்டப்படுவது = கிணறு

உவலை, உவல்

சருகு

முல். 29, நற். 282

ஊழ் (=முதிர், பழு, உதிர்) + பலம் (=இலை) + ஐ = ஊழ்பலை >>> உவலை = பழுத்து உதிர்ந்த இலை = சருகு

உவலை

துன்பம்

பதி. 85

உப்பு (=இன்பம்) + அல் (=எதிர்மறை) + ஐ = உப்பலை >>> உவலை = இன்பத்தின் எதிர்மறை = துன்பம்

உவவு

முழுமை

புற. 3

ஓய்வு (=தணிவு, குறைவு) + அவி (=அழி, அறு) + உ = ஒய்வவு >>> உவவு = குறைவற்றது = முழுமை

உவவு, உவா

நிலா

புற. 65, பரி. 11

உப்பு (=இன்பம்) + அம் (=அழகு, ஒளி) + உய் (=கொடு) = உப்பமுய் >>> உவவு >>> உவா = அழகிய இனிய ஒளியைத் தருவது

உவவு

முழுநிலா

அக. 201

உவவு (=முழுமை, நிலா) >>> உவவு = முழுநிலா

உவா

யானை

பதி. 79

உப்பு (=உயர், பெரு) + ஆ (=உயிரி) = உப்பா >>> உவா = உயர்ந்து பெருத்த உயிரி = யானை

உவியல்

சமைத்தது

புற. 395

உவி (=சமை) + அல் = உவியல் = சமைத்தது

உழக்கு

அளவுப் பாத்திர வகை

கலி. 96

ஊழ் (=நிறை, கருது, அள) + அகம் (=உள்ளிடம்) + உ = உழக்கு = நிறைத்து அளப்பதற்கான உள்ளிடம் கொண்டது.

உழலை

செக்குமரம்

கலி. 106

உழ (=திரி, சுற்று) + அள் (=தண்டு) + ஐ = உழளை >>> உழலை = சுற்றுகின்ற தண்டினை உடையது = செக்கு

உழவர்

உழுபவர்

சிறு. 190

உழு + அவர் = உழவர் = உழுகின்றவர்

உழவு

உழுதல்

புற. 366

உழு + ஔ = உழவு = உழுதல்

உழுந்து, உழுத்து

பொங்கி எழும் மாவு வகை

அக. 86, புற. 299

ஊழ் (=காலமுதிர்வு, மூடு, பதனழி) + உந்து (=பொங்கு, எழு) = உழுந்து >>> உழுத்து = மூடிவைத்தால் காலமுதிர்வில் பதனழிந்து பொங்கி எழுவது

உழுவை

புலி, சிங்கம், சிறுத்தை

கலி. 1, புற. 78, நற். 205

ஊழ் (=பகை) + உவா (=யானை) + ஐ = உழுவை = யானைக்குப் பகை = புலி, சிங்கம், சிறுத்தை முதலியன

உழை

மான்

மது. 310

ஊழ் (=தசை, உடல்) + ஆய் (=அழகு, விரை) = உழாய் >>> உழை = அழகிய உடலுடன் விரையக் கூடியது = மான்

உழை

பூ

பரி. 11

ஊழ் (=மலர்) + ஐ = உழை = மலர்வது = பூ

உழை

பக்கம்

நற். 274

இழை (=நெருக்கமாகு) >>> உழை = நெருக்கம், பக்கம்

உள்ளகம்

மரப்பொந்து

பட். 267

உள் (=உள்ளிடம்) + அகம் (=மரம்) = உள்ளகம் = மரப்பொந்து

உள்ளகம்

உள்ளிடம்

பெரு. 6

உள் + அகம் (=இடம்) = உள்ளகம் = உள்ளிடம்

உள்ளகம்

நெஞ்சம்

அக. 19

உள்ளு (=நினை) + அகம் (=இடம்) = உள்ளகம் = நினைக்குமிடம்

உள்ளம், உளம்

நெஞ்சம், அறிவு

நற். 184, புற. 132, அக. 163

உள்ளு (=நினை) + அம் = உள்ளம் = நினைப்பது = நெஞ்சம், அறிவு

உள்ளல்

கருத்து

புற. 394

உள்ளு (=கருது) + அல் = உள்ளல் = கருத்து

உளி

செதுக்குவது

சிறு. 52

இளை (=குறை, செதுக்கு) + இ = இளி >>> உளி = செதுக்குவது

உளியம்

கரடி

அக. 88

உளை (=குடை) + ஈ (=ஈசல்) + அம் (=உண்ணு) = உளீயம் >>> உளியம் = ஈசல்களைக் குடைந்து உண்பது = கரடி

உளை

தலைமயிர்

சிறு. 92

இளி (=இகழ்ச்சி) + ஆய் (=அழகு, கொண்டாடு, நீங்கு, மென்மை) = இளாய் >>> உளை = அழகு என்று கொண்டாடப்படுவதும் நீங்கினால் இகழப்படுவதுமான மென்மையான பொருள்

உளை

நடுக்கம்

பரி. 10

உலை (=அஞ்சு, நடுங்கு) >>> உளை = நடுக்கம்

உற்கம்

விண்கொள்ளி

புற. 41

ஒல் (=சாய், விழு) + கம் (=ஆகாயம், ஒளி) = ஒல்கம் >>> உற்கம் = ஆகாயத்தில் இருந்து ஒளிர்ந்து விழுவது = விண்கொள்ளி

உறல்

காயம்

பதி. 86

ஊறு (=காயம்) + அல் = உறல்

உறல்

கொலை

குறு. 267

ஊறு (=கொலை) + அல் = உறல்

உறல்

மிகுதி

கலி. 8

உறு (=மிகுதி) + அல் = உறல்

உறல், உறவு

அனுபவம்

அக. 4, புற. 20

உறு (=அடை, அனுபவி) + அல் = உறல் = அனுபவம்

உறல்

தோற்றம்

அக. 191

உறு (=நிகழ், தோன்று) + அல் = உறல் = தோற்றம்

உறவி

எறும்பு

அக. 339

ஈர் (=இனிமை, சிறுமை, கவர், நீளு) + அவி (=நீங்கு, செல், உணவு, உயிர்) = இரவி >>> உறவி = உணவின் இனிமையால் கவரப்பட்டு நீண்டு செல்கின்ற சிற்றுயிரி = எறும்பு

உறவு

தொடர்பு

புற. 395

உறு (=தொடு) + ஔ = உறவு = தொடர்பு

உறி

தாங்கு கயிறு

கலி. 106

இறு (=தாங்கு, இறுக்கு, கட்டு) + இ = இறி >>> உறி = தாங்குமாறு இறுக்கிக் கட்டப்படுவது = தாங்கு கயிறு

உறுகண்

கொடுமை, துன்பம்

அக. 121, பெரு. 43

உறு (=கெடு, அழி) + கண் (=அருள்) = உறுகண் = அருளின் கேடு = கொடுமை, துன்பம்

உறுதி

நிலைபேறு

புற. 61

உறு (=நிலை) + தி = உறுதி = நிலைபேறு

உறுப்பு

உடலின் பாகம்

புற. 28

ஊறு (=உடல், சேர்க்கை, வளர்) + பூ (=தோன்று) = உறுப்பூ >>> உறுப்பு = உடலுடன் சேர்ந்து தோன்றி வளர்வது

உறுப்பு

அனுபவம்

பதி. 65

உறு (=அனுபவி) + பு = உறுப்பு = அனுபவம்

உறுப்பு

வாசனை

அக. 340

உறு (=அடை, அனுபவி) + பூ (=மலர், தோன்று) = உறுப்பூ >>> உறுப்பு = மலரில் இருந்து தோன்றி அடைந்து அனுபவமாவது

உறுவர்

நண்பர், சுற்றத்தார்

புற. 205, பதி. 43

உறு (=சேர், பொருந்து) + அர் = உறுவர் = பொருந்தியோர் = நண்பர், சுற்றத்தார்

உறுவர்

பெரியோர்

புற. 381

உறு (=மிகுதி, பெருமை) + அர் = உறுவர் = பெரியவர்

உறை

மழைத்துளி

திரு. 8

இறை (=உயரம், சிறுமை, சிதறு, மிகு) >>> உறை = உயரத்தில் இருந்து மிகுதியாகச் சிதறுகின்ற சிறுபொருள் = மழைத்துளி

உறை

கவசம், மூடி

நற். 387, பரி. 10

இறு (=அழி, மறை) + ஐ = இறை >>> உறை = மறைப்பது = கவசம், மூடி

உறை

எல்லை

பதி. 66

இறு (=முடி) + ஐ = இறை >>> உறை = முடிவு, எல்லை

உறை

உணவு

பதி. 71

உறு (=அனுபவி, உண்) + ஐ = உறை = உணவு

உறை

உறுதி

கலி. 45

உறு (=நிலை) + ஐ = உறை = நிலைபேறு, உறுதி

உறை

உடை

அக. 46

ஊறு (=உடல், பொருத்துகை, நிறை) + ஐ (=மென்மை) = உறை >>> உடை = உடலில் நிறைவாகப் பொருத்தப்படும் மென்பொருள்

உறை

தயிர்

புற. 257

இறு (=இறுகு, கெட்டியாகு) + ஐ (=மென்மை, அழகு, வெண்மை) = இறை >>> உறை = இறுகிக் கெட்டிப்படுகின்ற மென்மையான வெண்ணிறப் பொருள் = தயிர்

உறை

சுவர்

பட். 76

இறு (=முடி, வரையறு, கட்டு) + ஐ = இறை >>> உறை = வரையறையாகக் கட்டப்படுவது = சுவர்

உறையுள்

வாழ்க்கை

பதி. 89

உறை (=தங்கு, வாழ்) + உள் = உறையுள் = வாழ்க்கை

உறையுள்

வாழ்விடம்

பரி. 17

உறை (=இடம்) + உள் (=இரு, வாழ்) = உறையுள் = வாழ்விடம்

உறைவு

தங்கல்

நற். 4

உறை (=தங்கு) + பு = உறைபு >>> உறைவு = தங்கல்

உன்னம்

கருத்து

அக. 65

ஈன் (=படை) + அம் (=சொல்) = இன்னம் >>> உன்னம் = சொல்லால் படைக்கப்படுவது = கருத்து.

ஊக்கம்

முயற்சி

பதி. 94

உய் (=நடத்து) + கம் (=வினை) = உய்க்கம் >>> ஊக்கம் = வினையை நடத்துவது = முயற்சி

ஊக்கல்

முயற்சி

பதி. 11

உய் (=நடத்து) + கால் (=உண்டாக்கு, செய்) = உய்க்கால் >>> ஊக்கல் = செயலை நடத்துவது = முயற்சி

ஊகம்

விளக்குமாற்றுப் புல்

பெரு. 122

இகு (=துடை, சுத்தஞ்செய், திரட்டு, தொகு) + அம் (=நீளம்) = ஈகம் >>> ஊகம் = திரட்டிச் சுத்தம் செய்வதற்காக நீளமாகத் தொகுக்கப் படுவது = விளக்குமாறு, விளக்குமாற்றுப் புல்

ஊகம்

கருங்குரங்கு

குறு. 249

ஊழ் (=கருமை, உடல்) + கம் (=வெண்மை, நரை, தலை) = ஊழ்கம் >>> ஊகம் = கரிய உடலும் நரைத்த தலையும் உடையது

ஊங்கு

முன்பு

நற். 31

ஊழ் (=பொழுது) + கொய் (=நீங்கு) = ஊழ்கொய் >>> ஊங்கு = நீங்கிய பொழுது = முற்பொழுது, முன்பு

ஊசல்

அமர்ந்து ஆட்டி மகிழ்வது

நற். 368

உய் (=செலுத்து) + ஆல் (=அமர், மகிழ், ஆட்டு) = உயால் >>> ஊசல் = மகிழ்ச்சிக்காக அமர்ந்து ஆட்டிச் செலுத்துவது

ஊசல்

ஆடும் காதணி

பொரு. 30

உய் (=நீங்கு, அசை) + அள் (=காது, பொருந்து) = ஊயள் >>> ஊசல் = காதில் பொருந்தி அசைவது = ஆடும் காதணி

ஊசி

தைப்பதற்கான கூரிய பொருள்

புற. 82

(1) ஓச்சு (=குத்து, நுழை, செலுத்து, உயர்த்து) + இ = ஓச்சி >>> ஊசி = குத்தி நுழைத்துச் செலுத்தி உயர்த்தப்படுவது. (2) இழை (=பின்னு, தை, நூல், பொருத்து) + இ = ஈழி >>> ஊசி = தைப்பதற்காக நூலுடன் பொருத்தப்படுவது.

ஊசி

மேற்கு

புற. 229

ஊழ் (=சூரியன், மறை) + இ = ஊழி >>> ஊசி = சூரியன் மறைவது

ஊடல்

பேச்சற்ற பிரிவு

நற். 217

உடை (=வெளிப்படுத்து, பேசு, பிரி) + அல் (=எதிர்மறை) = ஊடல் = பேச்சற்ற பிரிவு

ஊடு

நடு

நற். 366

இடை (=நடு) + உ = ஈடு >>> ஊடு

ஊண்

உணவு

பொரு. 119

உண் >>> ஊண் = உண்ணப்படுவது = உணவு

ஊதியம்

இலாபம்

புற. 154

உறு (=பெறு, மிகுதி) + ஈ (=கொடு) + அம் = உறீயம் >>> ஊதியம் = கொடுத்ததினும் மிகுதியாகப் பெறுவது = இலாபம்

ஊதுலை

காற்று உலை

அக. 96

ஊதை (=காற்று) + உலை = ஊதுலை = காற்று உலை

ஊதை

காற்று

நற். 15

உந்து (=அசை, வீசு, மோது, தள்ளு) + ஐ = உந்தை >>> ஊதை = அசைவதும் வீசுவதும் மோதித் தள்ளுவதும் ஆனது = காற்று

ஊதை

பனித்துகள்

அக. 183

உறை (=இறுகச்செய், நீர்த்துளி) >>> ஊதை = இறுகச்செய்த நீர்த்துளி = பனித்துகள்

ஊமன், ஊம், ஊமை

பேச்சற்றவன்

குறு. 58, புற. 28, மலை. 501

உய் (=அறிவி, பேசு) + மை (=மலடு, பிறவி) + அன் = உய்மன் >>> ஊமன் = மலட்டுப் பேச்சுடைய பிறவி

ஊர்

ஓரூர் மக்கள், வாழிடம்

புற. 392, ஐங். 31

ஓர் (=ஒன்றுபடு, கூடு, ஆலோசி) >>> ஊர் = ஒற்றுமையாய்க் கூடி ஆலோசிப்போர் = ஒரு ஊர் மக்கள் > மக்கள் வாழிடம்

ஊர்தி

வாகனம்

புற. 27

ஊர் (=பயணி) + தி = ஊர்தி = பயணிப்பது = வாகனம்

ஊர்தி

நடை

புற. 305

ஊர் (=செல், நட) + தி = ஊர்தி = நடை

ஊரல்

பூச்சு

அக. 102

உரை (=மெருகு, பூசு) + அல் = ஊரல் = பூச்சு

ஊழி

வாழ்நாள்

திரு. 164

ஊழ் (=மறை, காலம்) + ஈ (=படை, தோன்று) = ஊழீ >>> ஊழி = தோன்றி மறையும் காலம் = வாழ்நாள்

ஊழி

முறைமை

மது. 21

ஊழ் (=முறைமை) + இ = ஊழி = முறைமை

ஊழி

பெருங்காலம்

பதி. 90

ஊழ் (=முதிர், பெருகு, காலம்) + இ = ஊழி = பெருங்காலம்

ஊழி

முடிவுகாலம்

பரி. 2

ஊழ் (=முடிவு, காலம்) + இ = ஊழி = முடிவு காலம்

ஊழி

காலம்

பரி. 2

ஊழ் (=காலம்) + இ = ஊழி

ஊற்றம்

வலிமை

புற. 366

உறை (=இறுகு, வலுவடை) + அம் = ஊற்றம் = வலிமை

ஊற்று

சுரப்பது

பெரு. 98

ஊறு (=சுர) + உ = ஊற்று = சுரப்பது

ஊற்றுக்களம்

குரல்வளை

கலி. 103

ஊறு (=உடல்) + கலி (=ஒலி, தோன்று) + அம் = ஊறுக்கலம் >>> ஊற்றுக்களம் = உடலில் ஒலி தோன்றுமிடம் = குரல்வளை

ஊற்று

பற்றுக்கோடு

கலி. 146

உறு (=சார்ந்திரு, உறுதியாகு) + உ = ஊற்று = சார்ந்திருக்கும் உறுதியைக் கொண்டது = பற்றுக்கோடு

ஊறல்

சுரப்புநீர்

நற். 333

ஊறு (=சுர) + ஆல் (=நீர்) = ஊறால் >>> ஊறல் = சுரந்த நீர்

ஊறு

தொடுகை

மது. 385

உறு (=தொடு) >>> ஊறு = தொடுகை

ஊறு

தங்கல்

மலை. 41

உறு (=தங்கு) >>> ஊறு = தங்கல்

ஊறு

துன்பம்

மலை. 284

உறு (=வருந்து) >>> ஊறு = வருத்தம், துன்பம்

ஊறு

காயம்

மலை. 332

உறு (=சிதை, காயமடை) >>> ஊறு = சிதைவு, காயம்

ஊறு

தசை

பதி. 51

உறு (=தோன்று, தங்கு) + உய் (=உயிர்) = ஊறுய் >>> ஊறு = உயிர் தோன்றித் தங்குவது = உடல் > தசை

ஊன், ஊனம்

மாமிசம்

அக. 169, பதி. 21

உய் (=உயிர், நீக்கு) + உண் = உயுண் >>> ஊன் = உயிரை நீக்கி உண்ணப்படுவது = மாமிசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.