திங்கள், 30 செப்டம்பர், 2024

தமிழ் மொழிபெயர்ப்பின் எதிர்காலம்

முன்னுரை:


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” – என்றார் முண்டாசுக் கவி பாரதி. அவரது கூற்றின்படி, எந்தவொரு மொழியின் வளர்ச்சிக்கும் உதவுகிற பல்வகைக் கருவிகளில் ஒன்றுதான் மொழிபெயர்ப்பு ஆகும். அறிவியல் சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் அமைந்து இருப்பதால், ஆங்கில பாடங்களைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இதுவரை செய்யப்பட்டுள்ள மொழிபெயர்ப்புக்கள் யாவும் சாம்புவறை (software) களைப் பயன்படுத்தி உருவாக்கப் படவில்லை என்பதே உண்மை ஆகும். இன்றைய கணினி யுகத்தில், மொழிபெயர்ப்பினை எளிதாக்கவும் வேகப்படுத்தவும் பரவலாக்கவும் சாம்புவறைகளின் தேவை கண்கூடாகத் தெரிகிறது. இந்நிலையில், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு முயற்சிகளின் இன்றைய நிலைப்பாடு குறித்தும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் இக் கட்டுரை விளக்குகிறது.

ஆங்கிலம் - தமிழ் அகராதிகள்:

எந்தவொரு மொழியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பின் அடிப்படைத் தேவையாக அமைவது சொற்களஞ்சியம் அல்லது அகராதி தான். ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் இதுவரை இலக்கக் கணக்கில் உருவாக்கப் பட்டுள்ளன. அச்சிடப்பட்ட அகராதிகள் நீங்கலாக, சில இணைய தளங்களில் கூட ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் காண முடிகிறது. அதுமட்டுமின்றி, ஆங்கிலம்தமிழ் அகராதிகளாகச் செயல்படுகின்ற சில ஆன்றாய்டு செயலிகளும்  வந்துவிட்டன.

கூகுளும் தமிழ் மொழிபெயர்ப்பும்:

இத்தனை தமிழ் அகராதிகள் சாம்புவறைகளாக இருந்தும் தமிழ் மொழிபெயர்ப்புக்கென ஒரு தனித்த சிறப்பான செயலியானது இதுவரை உருவாக்கப்பட வில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது ஆகும். இதற்கான முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கி இணையதளம் வாயிலாக ஆங்கிலம்தமிழ் மொழிபெயர்ப்புக்கான வசதியை உருவாக்கி அளித்தது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய அதன் முயற்சி முழுமையான பலனைத் தந்ததா என்றால் இல்லை. கூகுளின் இந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு தமிழரே முதல் காரணம் என்றால் அது மிகையில்லை; உண்மை. இதனை சில சான்றுகளுடன் காணலாம்.

மொழிபெயர்ப்புச் சிக்கல்கள். பொருள் விளக்கக் குறைபாடு:

தமிழில் ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதைப் போல ஆங்கிலத்திலும் உண்டு.  ஒரு ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கின்ற நிலையில், அத்தனைப் பொருட்களையும் குறிப்பதாக இதுவரை எந்தவொரு ஆங்கிலம்தமிழ் அகராதியும் தமிழரால்  உருவாக்கப் படவில்லை. சான்றாக,

Case – என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பல பொருட்கள் இருப்பதனை மெரியம் வெப்புசர், காம்பிரிசு, கோலின்சு போன்ற ஆங்கில இணையதள அகராதிகளில் காணலாம். இந்த ஆங்கிலச் சொல்லானது, தோற்றம், நிலை, வடிவம், கடிந்து / குற்றம் கூறுதல், வாதம், புகார், துன்பம், நோய், உண்மை, அறிவு, கருத்து, விசயம், விவகாரம், ஆராய், மனிதன், நோயாளி, மூடுவது, உறை, பெட்டி, மூடு போன்ற பல பொருட்களைக் குறிப்பதனை மேற்கண்ட அகராதிகளில் காணலாம். ஆனால், அச்சிட்ட ஆங்கிலம்தமிழ் அகராதிகள் உட்பட இணையதள தமிழ் அகராதிகளும் தமிழ் அகராதிச் செயலிகளும் கூட இந்த ஆங்கிலச் சொல்லுக்கு ஒன்றிரண்டு பொருட்களை மட்டுமே தமிழில் சுட்டிக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

ஒரு ஆங்கிலச் சொல் குறிக்கின்ற அத்தனை பொருட்களையும் தமிழில் முழுமையாக வழங்காத குறைபாட்டுக் காரணத்தினால் கூகுள் மொழிபெயர்ப்பில் குளறுபடி உண்டாவதைக் கீழ்க்காண்பவற்றில் இருந்து அறிய முடிகிறது.

Case என்பதற்கு பெட்டி என்ற பொருளும் உண்டு என்று பதிவு செய்யாததால், put banana inside the case என்ற ஆங்கிலத் தொடரினைவாழைப்பழத்தைப் பெட்டிக்குள் வைஎன்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாக, “வழக்குக்குள் வாழைப்பழத்தை வைக்கவும்என்று மொழிபெயர்த்துப் படிப்பவரின் முழிகளைப் பெயர்த்து விட்டது கூகுள். கீழ்க்காணும் படத்தில் அந்த மொழிபெயர்ப்பினைக் காணலாம்


இன்னொரு மொழிபெயர்ப்பில், that was not the case  என்ற ஆங்கிலத் தொடரினைவிசயம் அதுவல்லஎன்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாகஅது அப்படி இல்லைஎன்று மொழிபெயர்த்தது கூகுள். கீழ்க்காணும் படத்தில் இதனைக் காணலாம். இந்த தவறான மொழிபெயர்ப்புக்குக் காரணம், case என்பதற்கு விசயம் என்ற பொருளும் உண்டு என்று பதிவு செய்யப்படாததே


மொழிபெயர்ப்புச் சிக்கல்கள். பல்பொருள் குழப்பம்:

ஆங்கிலச் சொல்லுக்குக் கூறப்பட்டுள்ள பல பொருட்களையும் தமிழில் பதிவு செய்யாததால் உண்டான மொழிபெயர்ப்புக் குளறுபடியை மேலே கண்டோம்.  சரி, எல்லா பொருட்களையும் முறையாக பதிவுசெய்து விட்டால், குளறுபடிகள் உண்டாகாதா?. என்று கேட்கலாம். கண்டிப்பாக அப்போதும் குளறுபடிகள் உண்டாகவே செய்யும். இதைப்பற்றிக் கீழே சில சான்றுகளுடன் காணலாம்.

Body – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உடல், பொதுமை, நடுப்பகுதி, பொருள், மணம், சேற்றுத் தன்மை ஆடை வகை, மொத்தம், கூட்டம், அடர்த்தி, நிறைவு, மறை, தடு, அரும்பச்செய், உருவம் கொடு, உருவாக்கு போன்ற பல பொருட்கள் உண்டு என்று ஆங்கில அகராதித் தளங்களில் இருந்து அறிய முடிகிறது. இப் பொருட்கள் அத்தனையையும் தமிழில் பதிவுசெய்த பின்னரும்,  எந்த இடத்தில் எந்த பொருளைப் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் கூகுளுக்கு உண்டாகிறது. கூகுளில் ஏற்பட்ட இவ்வகையான பொருள் குழப்பத்தைக் கீழ்க்காணும் ஒரு படத்தின் மூலமாகப் புரிந்துகொள்ள முயலலாம்

Body of soldiers என்ற ஆங்கிலத் தொடரினை, “வீரர்களின் கூட்டம்என்று மொழிபெயர்ப்பதற்குப் பதிலாகவீரர்களின் உடல்என்று மொழிபெயர்க்கிறது கூகுள். காரணம், பல்பொருள் குழப்பம், அதாவது பொருள் கொள்வதில் உண்டாகும் குழப்பம். தமிழ் இலக்கணப்படி, வீரர்களின் உடல் என்பது தவறு; வீரர்களின் உடல்கள் என்பதே சரி. ஆனால், ஆங்கிலத்தில் இருப்பதோ body மட்டுமே; bodies அல்ல. இது பன்மையை உள்ளடக்கி அமைந்த ஒருமைப் பொருள் வகையாகும். இப்படி ஒரு சொல்லுக்குப் பல பொருட்கள் இருக்கும் நிலையில், இடத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்வதில் உண்டாகும் நடைமுறைச் சிக்கலையே பல்பொருள் குழப்பம் என்று அழைக்கிறோம்.

மொழிபெயர்ப்புச் சிக்கல்கள். நிகர்ச்சொல் வேறுபாடு:

நிகர்ச்சொல் என்பது ஒலிப்பு அளவில் இணையான / ஒப்பான / சமமான சொல்லைக் குறிப்பதாகும். ஆங்கிலச் சொல்லுக்கான பொருட்களைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு என்றாலும் அவற்றுள் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்புக்கு இணையான சொல்லும் இருக்கும். அதுவே அந்த ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் நிகர்ச்சொல் ஆகும். இதனை கீழ்க்காணும் ஒரு சான்றினால் புரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் air, wind, gas என்று ஒரு பொருட் பன்மொழிகள் உண்டு. அதைப்போல தமிழில் வாயு, காற்று, வளி, விண்டு என்ற சொற்கள் உண்டு.  The wind blew inside the room when he aired the window என்ற ஆங்கிலத் தொடரில் wind, air என்ற இரண்டு சொற்களுக்கும் தமிழில் என்ன சொற்களைப் பயன்படுத்துவது?. இரண்டுமே இங்கே வேறுபட்ட பொருட்களைக் குறிப்பவை.

இதுபோன்ற ஒருபொருட் பன்மொழிகள் சார்ந்த மொழிபெயர்ப்பில் மிகவும் உதவியாக இருப்பவை இந்த நிகர்ச்சொற்கள் ஆகும். நிகர்ச்சொற்களைப் பயன்படுத்தாமல் மேற்கண்ட ஆங்கிலத் தொடரினை கூகுள் மொழிபெயர்த்திருக்கும் முறையைக் கீழ்க்காணும் படம் தெற்றென காட்டுகிறது

Wind என்பதற்கு விண்டு என்பதையும்  air என்பதற்குக் காற்று என்பதையும் நிகர்ச்சொற்களாகக் கொண்டிருந்தால், “அவன் சன்னலைக் காற்றியபோது அறைக்குள் விண்டு வீசியதுஎன்று தெளிவானதொரு மொழிபெயர்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் கூகுள் நிகர்ச்சொற்களைப் பயன்கொள்ளாததால், “அவன் சன்னலை ஒளிபரப்பும்போது அறைக்குள் காற்று வீசியதுஎன்ற குழப்பமான மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.

எதிர்காலத் தீர்வு என்ன?

கூகுளில் தமிழ் மொழிபெயர்ப்பில் உண்டான பல்வகைக் குழப்பங்களுக்குத் தமிழர்கள் சரியான முறையில் சொற்களை உருவாக்கிக் கூகுளுக்கு வழங்காததும் ஒரு காரணம் என்பது இப்போது புரிந்திருக்கும். இப்போது கீழ்க்காணும் கேள்விகள் மனதில் எழுவதைத் தவிர்க்க இயலாது.

Ø  இந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறை தான் என்ன?.  

Ø  பல்பொருள் குழப்பத்தை எவ்வாறு தவிர்ப்பது?

Ø  நிகர்ச்சொற்களை எவ்வாறு கையாள்வது?

 இந்த கேள்விக்கான விடைகளைக் கீழே விரிவாகக் காணலாம்.

நிகர்ச்சொற்களே நிரந்தரத் தீர்வு:

நிகர்ச்சொற்கள் என்றால் என்னவென்று முன்னர் கண்டோம். இந்த நிகர்ச்சொற்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் மொழிபெயர்ப்பில் உண்டாகும் மூன்றுவகைச் சிக்கல்களையும் சரிசெய்ய இயலும் என்பதே இக் கட்டுரையின் துணிபாகும். தமிழில் உள்ள நிகர்ச்சொற்களைப் பற்றி முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில கருத்துக்களைக் கீழே காணலாம்.

. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான நிகர்ச்சொற்கள் தமிழில் ஏற்கெனவே மிகுதியாக உள்ளன. சான்றுகள்: Sponge = பஞ்சு, Snake = நாகம், Music = முழக்கம், Split = பிள, Add = அடு, Attach = அடைசு, Kill = கொல், Hill = கல், Wind = விண்டு, Stone = தூண்.

 . தமிழில் சில நிகர்ச்சொற்கள் இயல்பான நிலையிலும் பல நிகர்ச்சொற்கள் திரிந்த நிலைகளிலும் காணப்படுகின்றன. சான்றாக, wind என்ற ஆங்கிலச் சொல்லுக்கான பல்வேறு பொருட்களைக் குறிக்கின்ற பல்வேறு தமிழ் நிகர்ச்சொற்களைக் கீழே காணலாம்.

1. விண்டுசொல்நிலை: இயல்பு. பொருட்கள்: காற்று, மூச்சு, மூச்சுவிடு, காற்றை வழங்கு / நுகர், ஆகாயம் தொடு, உச்சம் அடை, உயர்த்து.

2. வீட்டுசொல்நிலை: திரிபு. பொருட்கள்: கொல்வது, அழிப்பது.

3. வெண்டுசொல்நிலை: இயல்பு. பொருட்கள்: ஓட்டை, குழி, களை, ஓய்வெடு, முறுக்கு, சுற்று, வளை, வளைவு, திரும்பு, திருப்பு, திரி, பின்னு.

4. வெடிசொல்நிலை: திரிபு. பொருட்கள்: வாசனை, மோப்பம், மோப்பம் பிடி, குறிப்பு கொடு, ஊதி ஒலி.

5. வெட்டிசொல்நிலை: திரிபு. பொருட்கள்: பயனற்றது, வீண்பெருமை.

6. வட்டைசொல்நிலை: திரிபு. பொருட்கள்: திசை, வழிப்படுத்து, செல், செலுத்து.

. திரிபுற்ற நிகர்ச்சொற்களை இயல்பு நிலைக்கு மாற்றுவதன் மூலம் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக ஒரேயொரு நிகர்ச்சொல்லாகக் காட்டமுடியும். சான்றாக, வீட்டு > விண்டு, வெண்டு > விண்டு என்று விகாரித்தோ, வெடி+ > விண்டு, வெட்டி+ > விண்டு, வட்டை+ என்று பொருத்தமான விகுதிகளைச் சேர்த்தோ விண்டு என்ற ஒற்றை தமிழ்ச்சொல்லினை ஆங்கிலச் சொல்லான wind க்கு ஈடானதாகக் காட்டலாம்.

இவ்வகையில் சொற்களை உருவாக்குவதனை நிகர்த்தல் முறை எனலாம். திபொச என்னும் ஆன்றாய்டு செயலியானது இந்த நிகர்த்தல் முறையினைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட நிகர்ச்சொற்களையே அதன் ஆங்கிலம்  தமிழ் அகராதிப் பகுதியில் முன்வைக்கிறது.  

தமிழ் மொழிபெயர்ப்பில் நிகர்ச்சொற்களின் பயன்பாடு:

தமிழில் உள்ள நிகர்ச்சொற்களைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பில் உண்டாகுகின்ற பலவகையான சிக்கல்களையும் எவ்வாறு தீர்க்கலாம் என்பதனை இங்கே சில சான்றுகளுடன் காணலாம்.


நிகர்த்தல்
முறையானது பல்வேறு பொருட்களுக்கு அல்லது விளக்கங்களுக்குப் பதிலாக ஒற்றை நிகர்ச்சொல்லையே பயன்படுத்துகிறது. சான்றாக, case என்பதற்குக் கச்சி என்ற ஒற்றை நிகர்ச்சொல்லையே பயன்படுத்துகிறது. கச்சி என்ற சொல் இயல்பான நிகர்ச்சொல்லாகவும் காய்+, காஞ்சி, கை+ போன்ற சொற்களில் இருந்து திரிந்த நிகர்ச்சொல்லாகவும் அமைந்து ஆங்கிலச் சொல் குறிக்கின்ற அத்தனை பொருட்களையும் சுட்டி நிற்கின்றது. இப்படி பல்வேறு பொருள் விளக்கங்களைப் பயன்படுத்தாமல் ஒற்றை நிகர்ச்சொல்லையே மொழிபெயர்ப்பில் பயன்படுத்துவதால் பொருளில் குறைபாடு உண்டாவதே இல்லை.  முன்னர்கண்ட சான்றுகளில், case என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கச்சி என்ற ஒற்றை நிகர்ச்சொல்லை மட்டுமே பயன்படுத்தும்போது கீழ்க்காணும் தெளிவான சீரான மொழிபெயர்ப்புக்களைப் பெறலாம்.

Put banana inside the case = “வாழைப்பழத்தைக் கச்சிக்குள் வை” (கச்சி = உறை, பெட்டி)

That was not the case = “கச்சி அதுவாக இருந்ததில்லை” (கச்சி = விசயம், கருத்து)

 


அதைப்போல
, body என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பூதி என்ற ஒற்றை நிகர்ச்சொல்லையே பயன்படுத்துகிறது. பூதி என்ற சொல் இயல்பான நிகர்ச்சொல் ஆகவும், பொத்தி, பொதி ஆகிய சொற்களில் இருந்து திரிந்த நிகர்ச்சொல்லாகவும் அமைந்து body என்ற ஆங்கிலச் சொல் குறிக்கின்ற அத்தனை பொருட்களையும் சுட்டி நிற்கின்றது. மொழிபெயர்ப்பில் பல்வேறு பொருள் விளக்கங்களைப் பயன்படுத்தாததால் எந்த இடத்தில் எந்த பொருள் வரும் என்ற பல்பொருள் குழப்பம் தவிர்க்கப்பட்டு கீழ்க்காணும் தெளிவான மொழிபெயர்ப்புகள் கைகூடுகின்றன.

Body of soldiers = “வீரர்களின் பூதி” (பூதி = கூட்டம்)

Human body = “மனித பூதி” (பூதி = உடல்)

முடிவுரை:

கூகுள் மொழிபெயர்ப்பு உட்பட எந்தவொரு சாம்புவறை சார்ந்த மொழிபெயர்ப்பாக இருந்தாலும் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு சமமாக ஒரு தமிழ் நிகர்ச்சொல்லையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு சிக்கலின்றி எளிதாகவும் வேகமாகவும் நடைபெறும். தமிழ் மொழிபெயர்ப்பில் தற்போதுள்ள சிக்கல்களைத் தீர்க்க இதுவே சரியான எதிர்கால நடைமுறையாக இருக்கும் என்று இந்த கட்டுரை பரிந்துரைக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.