சொல் 
 | 
  
பொருள் 
 | 
  
தமிழ்ச் 
சொல் 
 | 
  
மூலச்சொல்லும் 
தோன்றும் முறையும் 
 | 
 
~அக்கு 
 | 
  
எலும்பு 
 | 
  
அக்கு 
 | 
  
அஃகு (=குறை, எஞ்சு) >>> அக்கு = எரிந்தபின் எஞ்சுவது = எலும்பு 
 | 
 
~அக்ச~ம், ~அட்சம் 
 | 
  
குறுக்கம் 
 | 
  
அக்கம் 
 | 
  
அக்கு (=சுருங்கு, குறுகு) >>> அக்கம்
  = குறுக்கம் >>> அக்ச~ம் 
 | 
 
~அச்`திவாரம் 
 | 
  
அடிவாரம் 
 | 
  
அடிவாரம் 
 | 
  
அடிவாரம் >>> அச்~டிவாரம் >>> அச்~திவாரம் 
 | 
 
~அசனம் 
 | 
  
உணவு 
 | 
  
அயினி 
 | 
  
அயினி (=உணவு) >>> அசினி
  >>> அசினம் >>> அசனம் 
 | 
 
~அஞ்சனம் 
 | 
  
கருமை, குற்றம் 
 | 
  
அஞ்சில் 
 | 
  
அஞ்சில் (=மை, கருமை) >>> அஞ்சனம் = கருமை, குற்றம் 
 | 
 
~அதிகாரம் 
 | 
  
வழிநடத்தும் செயல், ஆளுமை 
 | 
  
ஆதிகாரம் 
 | 
  
ஆறு (=வழி) >>> ஆது (=வழிப்படுத்து) >>> ஆதி (= வழிநடத்துவோன்
  = இறைவன்) + காரம் (=செயல்) = ஆதிகாரம் >>> அதிகாரம் = வழிநடத்துவோன் செயல் = ஆளுமை 
 | 
 
~அதிகாரி 
 | 
  
ஆள்பவன் 
 | 
  
ஆதிகாரி 
 | 
  
ஆதிகாரம் (=ஆளுமை) >>> ஆதிகாரி 
 | 
 
~அதிசயம் 
 | 
  
பெருவியப்பு 
 | 
  
அதிசையம் 
 | 
  
அதி (=மிகுதி) + சையம் (=வியப்பு) = அதிசையம் = பெருவியப்பு 
 | 
 
~அந்தம் 
 | 
  
முடிவு, அழிவு 
 | 
  
அற்றம் 
 | 
  
அறு (=முடி, அழி) >>> அற்றம் >>> அத்தம் >>> அந்தம் 
 | 
 
~அந்தரம் 
 | 
  
வெட்டவெளி 
 | 
  
அற்றாரம் 
 | 
  
அல் (=இன்மை) + தாரம் (=பொருள்) = அற்றாரம் >>> அத்தாரம் >>> அந்தரம் = பொருள் ஏதும் இல்லாத இடம் = வெட்டவெளி 
 | 
 
~அபராதம் 
 | 
  
குற்றம் 
 | 
  
அவலாறம் 
 | 
  
அவல் (=பள்ளம், இழிவு) + ஆறு (=நெறி) = அவலாறு >>> அவலாறம் >>> அபராதம் = இழிவைத் தரும் நெறி = குற்றம். 
 | 
 
~அபராதி 
 | 
  
குற்றவாளி 
 | 
  
அவலாறி 
 | 
  
அபராதம் (=குற்றம்) >>> அபராதி
  = குற்றவாளி 
 | 
 
~அம்பரம் 
 | 
  
ஆடை 
 | 
  
அப்பரம் 
 | 
  
அப்பு (=சாத்து, அணி) >>> அப்பரம் >>> அம்பரம் = அணியப்படுவது 
 | 
 
~அயனம் 
 | 
  
பயணம், தூரம் 
 | 
  
அயனம் 
 | 
  
அயல் (=அருகிடம்) >>> அயலு (= அருகு, நெருங்கு, செல்) >>> அயனம்
  = செலவு, பயணம், தூரம் 
 | 
 
~அவதி 
 | 
  
எல்லை. அளவு 
 | 
  
அமைதி 
 | 
  
அமை (=அடக்கு, கட்டுப்படுத்து)
  >>> அமைதி >>> அமதி >>> அவதி = கட்டுப்படுத்துவது = எல்லை, அளவு. 
 | 
 
~அனு - 
 | 
  
அணுக்கமான 
 | 
  
அண்ணு 
 | 
  
அண்ணு (=நெருங்கு) >>> அன்னு >>> அனு = நெருங்கிய 
 | 
 
~அனுபூதி 
 | 
  
அனுபவ அறிவு 
 | 
  
அண்புத்தி 
 | 
  
அண் (=அடை) + புத்தி (=அறிவு) = அண்புத்தி >>> அனுபூதி = அடையப்பட்ட அறிவு. 
 | 
 
~ஆகர்சகம் 
 | 
  
கவர்வது 
 | 
  
ஆகர்சகம் 
 | 
  
ஆகர்ச்சு (=இழு, கவர்) >>> ஆகர்சகம் = கவரக்கூடியது 
 | 
 
~ஆகர்சணம் 
 | 
  
ஈர்ப்பு 
 | 
  
ஆகர்சணம் 
 | 
  
ஆகர்சி (=இழு) >>> ஆகர்சணம்
  = இழுக்கை, ஈர்ப்பு 
 | 
 
~ஆகர்சி 
 | 
  
இழு, கவர் 
 | 
  
ஆகர்ச்சு 
 | 
  
ஆகாரம் (=உணவு) >>> ஆகர்ச்சு
  >>> ஆகர்சி = உண்ணு, உணவை இழு, கவர். 
 | 
 
~ஆகரணம் 
 | 
  
கொள்ளுகை 
 | 
  
ஆகரணம் 
 | 
  
ஆகாரம் (=உணவு) >>> ஆகரணம்
  = உணவு உட்கொள்ளுகை, கொள்ளுகை. 
 | 
 
~ஆகரி 
 | 
  
கொள் 
 | 
  
ஆகரி 
 | 
  
ஆகரணம் (=கொள்ளுகை) >>> ஆகரி = கொள் 
 | 
 
~ஆகாரம் 
 | 
  
சிற்றுண்டி 
 | 
  
அக்காரம் 
 | 
  
அக்கு (=சுருங்கு) + ஆர் (=உண்ணு) + அம் = அக்காரம் >>> ஆகாரம் = சுருக்கமாக உண்ணப்படுவது. 
 | 
 
~ஆகாரம் 
 | 
  
உருவம், வடிவம் 
 | 
  
ஆக்கரம் 
 | 
  
ஆக்கு (=உருவாக்கு, வரை) >>> ஆக்கரம்
  >>> ஆகாரம் = உருவம், வடிவம் 
 | 
 
~ஆகிருதம் 
 | 
  
கொள்ளப்பட்டது 
 | 
  
ஆகரிதம் 
 | 
  
ஆகரி (=கொள்) >>> ஆகரிதம்
  = கொள்ளப்பட்டது 
 | 
 
~ஆச்சாரம் 
 | 
  
ஒழுக்கம், நடத்தை 
 | 
  
அயரம் 
 | 
  
அயர் (=நட, செல், ஒழுகு) >>> அயரம் >>> அசரம்
  >>> ஆச்சாரம் = ஒழுக்கம், நடத்தை. 
 | 
 
~ஆட்சேபம் 
 | 
  
தடை 
 | 
  
ஆட்சேமம் 
 | 
  
ஆள் + சேமம் (=காவல்) = ஆட்சேமம் >>> ஆட்சேபம் = ஆட்காவல் >>> காப்பு, தடை 
 | 
 
~ஆட்சேபி 
 | 
  
தடு 
 | 
  
ஆட்சேமி 
 | 
  
ஆட்சேமம் (=தடை) >>> ஆட்சேமி
  >>> ஆட்சேபி 
 | 
 
~ஆதாரம் 
 | 
  
தாங்கிநிற்பது, பற்றுக்கோடு 
 | 
  
ஆறாரம் 
 | 
  
ஆறு (=அமை, பொறு, தாங்கு) + ஆரம் (=கால், தண்டு) = ஆறாரம் >>> ஆதாரம்
  = தாங்குகின்ற கால் / தண்டு. 
 | 
 
~ஆதேயம், ~ஆதேசம் 
 | 
  
தாங்கப்படுவது 
 | 
  
ஆறேயம் 
 | 
  
ஆறு (=அமை, பொறு, தாங்கு) + ஏய் (=பொருந்து) + அம் = ஆறேயம் >>> ஆதேயம்
  = தாங்கப்படுவது. 
 | 
 
~ஆமயம் 
 | 
  
நோய், துன்பம் 
 | 
  
அன்மையம் 
 | 
  
அன்மை (=துன்பம், வருத்தம்) >>> அன்மையம் >>> ஆமயம் = துன்பம் தருவது = நோய் 
 | 
 
~ஆர்த்தி 
 | 
  
நோய், பந்தம் 
 | 
  
ஆர்த்தி 
 | 
  
ஆர்த்து (=கட்டு, பிணி) >>> ஆர்த்தி =பிணித்திருப்பது = பிணி, கட்டு 
 | 
 
~ஆனந்தம் 
 | 
  
மகிழ்ச்சிப் பெருக்கு 
 | 
  
ஆனந்தம் 
 | 
  
ஆல் (=மகிழ்) + நந்து (=பெருகு) + அம் = ஆனந்தம் = மகிழ்ச்சிப் பெருக்கு. 
 | 
 
~ஆனந்தி 
 | 
  
மகிழ் 
 | 
  
ஆனந்தி 
 | 
  
ஆனந்தம் (=மகிழ்ச்சி) >>> ஆனந்தி = மகிழ் 
 | 
 
~இதம் 
 | 
  
இனிமை 
 | 
  
இதம் 
 | 
  
இன் (=இனிமை) + தம் >>>இன்றம் >>>இற்றம் >>>இத்தம்
  >>> இதம் 
 | 
 
~இதயம் 
 | 
  
மனம், நெஞ்சம் 
 | 
  
இதயம் 
 | 
  
இந்து (=கருத்து) + ஆயம் (=தொகுதி) = இந்தாயம் >>> இத்தாயம் >>> இதயம் = கருத்துக்களின் தொகுதி. 
 | 
 
~இந்தம் 
 | 
  
புளி 
 | 
  
இற்றம் 
 | 
  
இறு (=வடிகட்டு) >>> இற்றம் >>> இத்தம்
  >>> இந்தம் = வடிகட்டி எடுக்கப்படும் சாற்றினைக் கொடுக்கும் பழம். 
 | 
 
~இந்திரம் 
 | 
  
கிழக்கு 
 | 
  
இந்திரம் 
 | 
  
இந்திரன் (=சூரியன்) >>> இந்திரம்
  = சூரியன் தோன்றும் திசை 
 | 
 
~இந்திரன் 
 | 
  
சூரியன் 
 | 
  
இந்திரன் 
 | 
  
இந்து (=கடல்) >>> இந்திரன்
  = கடலின்மேல் தோன்றுபவன். ஒ.நோ: சந்தி (=மாலை) >>> சந்திரன்
  = மாலையில் தோன்றுபவன். 
 | 
 
~இந்திரியம் 
 | 
  
விந்து 
 | 
  
இந்தரியம் 
 | 
  
இந்து (=கரு) + அரி (=உண்டாக்கு) + அம் = இந்தரியம் >>> இந்திரியம் = கருவினை உண்டாக்குவது 
 | 
 
~இந்திரியம் 
 | 
  
புலன், பொறி 
 | 
  
இந்தரியம் 
 | 
  
இந்து (=கருத்து) + அரி (=உண்டாக்கு) + அம் = இந்தரியம் >>> இந்திரியம் = கருத்துக்களை உண்டாக்குவது. 
 | 
 
~இந்து 
 | 
  
கரடி, கரி 
 | 
  
இந்து 
 | 
  
இதழ் (=மூடுவது) >>> இத்து
  (=மூடு, மறை) >>> இந்து = மூடிமறைப்பதால் உண்டாகும் கருமை >>> கருநிறத்தவை. 
 | 
 
~இந்து 
 | 
  
சந்திரன் 
 | 
  
இந்து 
 | 
  
இன் (=இனிமை) + து = இன்று >>> இற்று >> இத்து >>> இந்து = இனிமை தரும் கதிர்களைக் கொண்டது. 
 | 
 
~இந்து 
 | 
  
நீர், கடல், ஆறு 
 | 
  
இந்து 
 | 
  
இன் (=இனிமை) + து = இன்று >>> இற்று >>> இத்து
  >>> இந்து = இனிமையானது = நீர் >>> கடல், ஆறு. 
 | 
 
~இந்துளி, ~இந்துளம் 
 | 
  
நெல்லிக்காய் 
 | 
  
இந்துளி, இந்துளம் 
 | 
  
இந்து (=நீர்) + உள் + இ >>> இந்துளி, இந்துளம் = இனிய நீரினை உடைய காய். 
 | 
 
~உபத்திரம், ~உபத்திரவம் 
 | 
  
துன்பம் 
 | 
  
உப்பற்றிறம் 
 | 
  
உப்பு (=இன்பம்) + அல் + திறம் (=செயல்) = உப்பற்றிறம்
  = உபத்திரம் >>> உபத்திரவம் = இன்பம் அல்லாத செயல். 
 | 
 
~உபதானம் 
 | 
  
மூலம் 
 | 
  
உம்பதானம் 
 | 
  
உம்பு (=தோன்று) + தானம் (=இடம்) = உம்பதானம் >>> உப்பதானம் >>> உபதானம் = தோன்றுமிடம்
  = மூலம் 
 | 
 
~உபாதை, ~உவாதி, ~உபாதி 
 | 
  
துன்பம் 
 | 
  
உப்பறை 
 | 
  
உப்பு (=இன்பம்) + அறை (=அறுப்பது, அழிப்பது) = உப்பறை >>> உபாதை
  >>> உபாதி, உவாதி = இன்பத்தை அழிப்பது 
 | 
 
~உற்பத்தி 
 | 
  
பொருள் பெருக்கம் 
 | 
  
உருவேற்று 
 | 
  
உரு (=பொருள்) + ஏற்று (=பெருக்கு) = உருவேற்று >>> உருவேத்து >>> உர்பேத்து >>> உற்பத்தி = பொருளைப் பெருக்குதல். 
 | 
 
~கரணம் 
 | 
  
செயல் 
 | 
  
கரணம் 
 | 
  
கரு (=உண்டாக்கு, செய்) >>> கரணம்
  = செய்யும் வினை 
 | 
 
~கரணம் 
 | 
  
கருவி 
 | 
  
கரணம் 
 | 
  
கரு (=உண்டாக்கு, செய்) >>> கரணம்
  = செய்ய உதவுவது. 
 | 
 
~கரம் 
 | 
  
கை 
 | 
  
கரம் 
 | 
  
கரு (=உண்டாக்கு, செய்) >>> கரம் = செய்ய உதவும் உறுப்பு 
 | 
 
~கருமம் 
 | 
  
செயல் 
 | 
  
கருமம் 
 | 
  
கரு (=உண்டாக்கு, செய்) >>> கருமம்
  = செயல், ஆக்கம் 
 | 
 
~களங்கம் 
 | 
  
கருப்பு, கறை 
 | 
  
களங்கம் 
 | 
  
கள் (=கருமை) + அங்கம் (=பொருள்) = களங்கம் = கரும்பொருள். 
 | 
 
~காமியம் 
 | 
  
ஆசை 
 | 
  
காமம் 
 | 
  
காமம் (=ஆசை) >>> காமியம் 
 | 
 
~காரணம் 
 | 
  
மூலம் 
 | 
  
காரணம் 
 | 
  
கரு (=மூலம்) >>> காரணம்
  = செயலுக்கான மூலம் 
 | 
 
~காரம் 
 | 
  
தொழில், வினை 
 | 
  
காரம் 
 | 
  
கரு (=உண்டாக்கு, செய்) >>> காரம்
  = செயல், தொழில். 
 | 
 
~காளம், ~காலா 
 | 
  
கருமை 
 | 
  
காளம், காளா 
 | 
  
கள் (=கருமை) >>> காளம்
  >>> காளா >>> காலா = கருமை 
 | 
 
~கிருதம் 
 | 
  
செய்யப்பட்டது 
 | 
  
கருதம் 
 | 
  
கரு (உண்டாக்கு, செய்) >>> கருதம்
  >>> கிருதம் = செய்யப்பட்டது. 
 | 
 
~கிருதி 
 | 
  
செயல் 
 | 
  
கருதி 
 | 
  
கரு (உண்டாக்கு, செய்) >>> கருதி
  >>> கிருதி = செயல்.. 
 | 
 
~சக்கம்மாள் 
 | 
  
கொற்றவை 
 | 
  
சக்கம்மாள் 
 | 
  
அக்கு (=எலும்பு) >>> சக்கு
  + அம்மாள் >>> சக்கம்மாள் = எலும்புமாலை அணிந்தவள். 
 | 
 
~சக்கரம் 
 | 
  
சுழலும் வட்ட வடிவப் பொருள் 
 | 
  
செக்காரம் 
 | 
  
செக்கு (=சுழல்) + ஆரம் (=வட்டம்) = செக்காரம் >>> செக்கரம் >>> சக்கரம் = சுழலும் வட்ட வடிவப் பொருள். 
 | 
 
~சக்கி 
 | 
  
கொற்றவை 
 | 
  
சக்கி 
 | 
  
அக்கு (=எலும்பு) >>> சக்கு
  >>> சக்கி = எலும்புமாலை அணிந்தவள். 
 | 
 
~சகடம் 
 | 
  
சக்கரம், வண்டி 
 | 
  
செக்கடம் 
 | 
  
செக்கு (=சுழல்) + அடை (=சேர்) = செக்கடை >>> செக்கடம்
  >>> செகடம் >>> சகடம் = சுழன்றவாறு சேர்வது. 
 | 
 
~சகணம் 
 | 
  
சாணம், மலம் 
 | 
  
சக்கணம் 
 | 
  
சக்கை (=கழிவு) >>> சக்கணம்
  >>> சகணம் = கழிவுப்பொருள் 
 | 
 
~சகதி 
 | 
  
சேறு 
 | 
  
செகளி 
 | 
  
செம்மை + களி (=குழைவு) = செங்களி >>> செக்களி >>> செகளி
  >>> சகளி >>> சகடி, சகதி 
 | 
 
~சகளம் 
 | 
  
மார்பு, உடல் 
 | 
  
சகலம் 
 | 
  
அகலம் (=மார்பு) >>> சகலம்
  >>> சகளம் = உடல் 
 | 
 
~சிந்தனை, ~சிந்தை 
 | 
  
கரு, கருத்து 
 | 
  
இந்து, சிந்தனை, சிந்தை 
 | 
  
இதழ் (=மூடுவது) >>> இத்து
  (=மூடு, மறை) >>> இந்து >>> சிந்து
  >>> சிந்தை = வெளிப்படுத்தாமல் மறைக்கப்படுவது = கரு, கருத்து 
 | 
 
~சிந்தி 
 | 
  
கருது 
 | 
  
சிந்தி 
 | 
  
சிந்து (=கருத்து) >>> சிந்தி
  = கருது 
 | 
 
~சிந்து 
 | 
  
நீர், கடல், ஆறு 
 | 
  
சிந்து 
 | 
  
இந்து (=நீர், கடல், ஆறு) >>> சிந்து 
 | 
 
~சுவாசம் 
 | 
  
மூச்சு 
 | 
  
சூழ்வாசம் 
 | 
  
சூழ் (=சுற்று) + வாசம் (=மூச்சு) >>> சூழ்வாசம் >>> சூவாசம் >>> சுவாசம்
  = சுற்றிவரும் மூச்சுக் காற்று. 
 | 
 
~சுவாசி 
 | 
  
மூச்சுவிடு 
 | 
  
சூழ்வாசி 
 | 
  
சூழ்வாசம் (=மூச்சு) >>> சூழ்வாசி
  >>> சுவாசி = மூச்சுவிடு 
 | 
 
~சேச்~டை, ~சேட்டை 
 | 
  
செயல் 
 | 
  
சேச்சை 
 | 
  
செய் >>> சேச்சு (=செய்வி) >>> சேச்சை >>> சேச்~டை >>> சேட்டை 
 | 
 
~சையம் 
 | 
  
வியப்பு 
 | 
  
சையம் 
 | 
  
ஐ (=வியப்பு) >>> ஐயம் >>> சையம் 
 | 
 
~தாசனம் 
 | 
  
கலக்கம் 
 | 
  
தாழனம் 
 | 
  
தாழ் (=குலை, கலங்கு) >>> தாழனம் >>> தாசனம் = கலக்கம் 
 | 
 
~தாரம் 
 | 
  
மனைவி, பந்தம் 
 | 
  
தாரம் 
 | 
  
தார் (=கயிறு) >>> தாரம்
  = கயிற்றால் உண்டாகும் பந்தம், கயிற்றால் பந்தம் உற்றவள் = மனைவி. 
 | 
 
~தானம், ~ச்`தானம் 
 | 
  
நிலம், இடம் 
 | 
  
தானம் 
 | 
  
(2) தன்மை (=நிலை) >>> தானம் = நிலைகொண்டது = நிலம், இடம். 
 | 
 
~தொந்தம் 
 | 
  
பற்று 
 | 
  
தொற்றம் 
 | 
  
தொற்று (=பற்று) >>> தொத்து
  >>> தொத்தம் >>> தொந்தம் = பற்று 
 | 
 
~தோசம் 
 | 
  
குறைபாடு, கோணல் 
 | 
  
தொய்யம் 
 | 
  
(2) தொய் (=குறை, வளை) >>> தொய்யம் >>> தோசம்
  = குறைபாடு, வளைவு, கோணல். 
 | 
 
~நகி` 
 | 
  
இன்மை 
 | 
  
நை 
 | 
  
நை (=அழிவு, இன்மை) >>> நய் >>> நஇ >>> நகி` 
 | 
 
~நி 
 | 
  
இன்மை 
 | 
  
நை 
 | 
  
நை (=அழிவு, இன்மை) >>> நி = இன்மை குறிக்கும் முன்னொட்டு 
 | 
 
~நிக்கிரகம் 
 | 
  
அழிக்கை, கைவிடல் 
 | 
  
நீக்குறுகை 
 | 
  
நீக்கு >>> நீக்குறுகை = அழிக்கப்படுதல், கைவிடப்படல் >>> நிக்கிரகம் 
 | 
 
~நிகண்டு 
 | 
  
அகராதியின் முன்னோடி 
 | 
  
நிகண்டு 
 | 
  
நிகர் >>> நிகள் (=இணை) >>> நிகட்டு >>> நிகண்டு = சொல்லுக்குப் பொருளை இணைத்து / நேர்த்துக் கூறுவது. 
 | 
 
~நிகதம் 
 | 
  
பேச்சு 
 | 
  
நிகழ்த்தம் 
 | 
  
நிகழ்த்து (=பேசு) >>> நிகழ்த்தம்
  >>> நிகதம் = பேச்சு 
 | 
 
~நிகம் 
 | 
  
ஒளி 
 | 
  
நிகம் 
 | 
  
நிகர் (=ஒளிர்) >>> நிகம்
  = ஒளிர்வது 
 | 
 
~நிகமம் 
 | 
  
தெரு 
 | 
  
நிகமம் 
 | 
  
நிகர் >>> நிகவு (=இணை) >>> நிகவம் >>> நிகமம் = இணையாக / நேராக அமைந்திருப்பது = தெரு. 
 | 
 
~நிகரம் 
 | 
  
கூட்டம், குவியல் 
 | 
  
நிகரம் 
 | 
  
நிகர் (=இணை) >>> நிகரம்
  = இணைப்பு, சேர்க்கை, கூட்டம், குவியல் 
 | 
 
~நிகலம் 
 | 
  
கழுத்து, பிடரி 
 | 
  
நிகளம் 
 | 
  
நிகர் >>> நிகள் (=இணை) >>> நிகளம் >>> நிகலம் = தலையை உடலுடன் இணைப்பது = கழுத்து, பிடரி. 
 | 
 
~நிகளம் 
 | 
  
சங்கிலி, பந்தம் 
 | 
  
நிகளம் 
 | 
  
நிகர் >>> நிகள் (=இணை) >>> நிகளம் = இணைப்பு, இணைக்க உதவுவது = சங்கிலி. 
 | 
 
~நிகாசம் 
 | 
  
ஒப்புமை 
 | 
  
நிகழம் 
 | 
  
நிகழ் (= நேர், ஒப்பு) >>> நிகழம் >>> நிகயம் >>> நிகாயம்
  >>> நிகாசம் = ஒப்புமை 
 | 
 
~நிகாதம் 
 | 
  
வஞ்சனை 
 | 
  
நிகர்த்தம் 
 | 
  
நிகர்த்து (=போலச்செய்) >>> நிகர்த்தம் >>> நிகாதம் = போலச்செயல், ஏமாற்று 
 | 
 
~நிகாதன் 
 | 
  
வஞ்சகன் 
 | 
  
நிகர்த்தன் 
 | 
  
நிகாதம் >>> நிகாதன் 
 | 
 
~நிகாயம் 
 | 
  
கூட்டம் 
 | 
  
நிகழம் 
 | 
  
நிகழ் (= நேர், இணை) >>> நிகழம் >>> நிகயம் >>> நிகாயம்
  = இணைப்பு, கூட்டம் 
 | 
 
~நிகாரம் 
 | 
  
வெண்பனி 
 | 
  
நைகாரம் 
 | 
  
நை (=இன்மை) + காரம் (=கருமை) = நைகாரம் >>> நிகாரம்
  = கருமை அற்றது = வெண்மை >>> வெண்ணிறப் பனி. 
 | 
 
~நிகாரம் 
 | 
  
அவமதிப்பு, வசை, தவறு. 
 | 
  
நீகாரம் 
 | 
  
நீ (=இழிவு) + காரம் (=செயல்) >>> நீகாரம் >>> நிகாரம்
  = இழிவு தரும் / செய்யும் செயல் = அவமதிப்பு, தவறு, வசை. 
 | 
 
~நிகிதம் 
 | 
  
போர்ப்படை 
 | 
  
நிகர்த்தம் 
 | 
  
நிகர்த்து (=போரிடு) >>> நிகர்த்தம்
  >>> நிகதம் >>> நிகிதம் = போர்செய்வது 
 | 
 
~நிகிதம் 
 | 
  
பொருத்தமற்றவை 
 | 
  
நீக்கிதம் 
 | 
  
நீக்கு >>> நீக்கிதம் >>> நிகிதம் = நீக்கப்பட வேண்டியவை 
 | 
 
~நிகிருதி 
 | 
  
நிந்தை, தீங்கு 
 | 
  
நீகிருதி 
 | 
  
நீ (=இழிவு) + கிருதி (=செயல்) >>> நீகிருதி >>> நிகிருதி = இழிவு தரும் / செய்யும் செயல் = நிந்தை, தீங்கு. 
 | 
 
~நிகிலம் 
 | 
  
முழுமை 
 | 
  
நெகிலம் 
 | 
  
நெகு (=பிள) + இலம் = நெகிலம் >>> நிகிலம் = பிளவற்றது 
 | 
 
~நிகு 
 | 
  
மஞ்சள் 
 | 
  
நிகு 
 | 
  
நிகம் (=ஒளி) >>> நிகு = ஒளி பொருந்தியது = மஞ்சள் 
 | 
 
~நிகுச்~டம், ~நிகுட்டம் 
 | 
  
ஒலி 
 | 
  
நிகட்டம் 
 | 
  
நிகர் >>> நிகள் (=இணை) >>> நிகட்டு (=கூட்டு) >>> நிகட்டம்
  (=கூட்டம்) >>> நிகுட்டம் >>> நிகுச்~டம் = கூட்டத்தால் உண்டாவது. 
 | 
 
~நிகுஞ்சம் 
 | 
  
குகை, புதர்வீடு 
 | 
  
நெகிஞ்சம் 
 | 
  
நெகிழம் (=சிலம்பு) >>> நெகிசம்
  >>> நெகிஞ்சம் >>> நிகுஞ்சம் = காற்சிலம்பு போல உள்ளீடற்ற குகை, புதர்வீடு முதலியன.. 
 | 
 
~நிகுஞ்சனம் 
 | 
  
கொலை 
 | 
  
நெகுஞ்சனம் 
 | 
  
நெகு (=அழி) + சனம் (=உயிர்) >>> நெகுச்சனம் >>> நெகுஞ்சனம் >>> நிகுஞ்சனம் = உயிரை அழித்தல் = கொலை. 
 | 
 
~நிகுத்தை 
 | 
  
கதவு 
 | 
  
நெகுத்தை 
 | 
  
நெகு (=பிள) >>> நெகுத்து
  (=திற) >>> நெகுத்தை >>> நிகுத்தை = திறக்கப்படுவது 
 | 
 
~நிகுதி 
 | 
  
வரையறை 
 | 
  
நெகுதி 
 | 
  
நெகு (=பிள, வகு) >>> நெகுதி >>> நிகுதி = வகுக்கப்பட்டது 
 | 
 
~நிகூடம் 
 | 
  
ஆழம் 
 | 
  
நெகுடம் 
 | 
  
நெகு (=பிள, துளை) >>> நெகுடம் (= பிளவு, துளை) >>> நிகூடம் =  பிளவு / துளையின் ஆழம். 
 | 
 
~நிகேதம், ~நிகேதகம், ~நிகேதனம் 
 | 
  
வீடு, கோயில், நகரம் 
 | 
  
நெகிதம் 
 | 
  
நெகு (=பிள, துளை) >>> நெகிதம் (=பிளவு, துளை) >>> நிகேதம் = வீடு. ஒ.நோ: (1) விடர் (=பிளவு) >>> வீடு. (2) இல்லி (=துளை) >>> இல்லம். ஆதியில் இயற்கையாய் அமைந்த பிளவுகளும் துளைகளுமே மனிதன் உட்பட அனைத்து உயிரிகளும் வாழும் இடமாகும். கோயில் = இறைவன் வீடு, நகரம் = வீட்டுத் தொகுதி. 
 | 
 
~நிச்`சா`ரம் 
 | 
  
பயனின்மை 
 | 
  
நியசாரம் 
 | 
  
நிய (=இன்மை) + சாரம் (=பயன்) = நியசாரம் >>> நிச்`சா`ரம் 
 | 
 
~நிச்`தாரம் 
 | 
  
விடுதலை 
 | 
  
நியதாரம் 
 | 
  
நிய (=இன்மை) + தாரம் (=பந்தம்) = நியதாரம் >>> நிச்`தாரம் = பந்தம் இன்மை = விடுதலை. 
 | 
 
~நிச்~ 
 | 
  
இன்மை 
 | 
  
நிழ, நிய 
 | 
  
நிழ (=இல்லையாகு) >>> நிய >>> நிச்~ = இன்மை 
 | 
 
~நிச்~கபடம் 
 | 
  
வஞ்சனையின்மை 
 | 
  
நியகபடம் 
 | 
  
நிய (=இன்மை) + கபடம் (=வஞ்சனை) = நியகபடம் >>> நிச்~கபடம் 
 | 
 
~நிச்~கம், நிட்கம் 
 | 
  
நாணயம், பொன் 
 | 
  
நெக்கம் 
 | 
  
நெக்கு (=இளகு, உருகு) >>> நெக்கம் >>> நிச்~கம் >>> நிட்கம் = உருக்கி வார்க்கப்பட்டது
  = நாணயம், பொன். 
 | 
 
~நிச்~களங்கம் 
 | 
  
கறையின்மை 
 | 
  
நியகளங்கம் 
 | 
  
நிய (=இன்மை) + களங்கம் (=கறை) =நியகளங்கம் >>> நிச்~களங்கம் 
 | 
 
~நிச்~களம், ~நிட்களம் 
 | 
  
உடலற்ற, உருவமற்ற 
 | 
  
நைச்சகளம் 
 | 
  
நை (=இன்மை) + சகளம் (=உடல்) = நைச்சகளம் >>> நிச்சகளம் >>> நிச்~களம் = உடலின்மை, உருவமின்மை 
 | 
 
~நிச்~காமியம் 
 | 
  
ஆசையின்மை 
 | 
  
நியகாமியம் 
 | 
  
நிய (=இன்மை) + காமியம் (=ஆசை) = நியகாமியம் 
 | 
 
~நிச்~டாபரன் 
 | 
  
ஒழுக்கசீலன் 
 | 
  
நிச்சப்பரன் 
 | 
  
நிச்சம் (=நிலை) + பரவு (=ஒழுகு) + அன் = நிச்சப்பரன்
  >>> நிச்~டாபரன் = நிலையாக ஒழுகுபவன். 
 | 
 
~நிச்~டீவனம் 
 | 
  
வாந்தி 
 | 
  
நீத்தீவனம் 
 | 
  
நீ (= தள்ளு, வெளியேற்று) + தீவனம் (=உணவு) = நீத்தீவனம் >>> நிச்~டீவனம் = உண்டதை வெளியேற்று = வாந்தியெடு 
 | 
 
~நிச்~டூரம் 
 | 
  
செருக்கு 
 | 
  
நெட்டுரம் 
 | 
  
நெட்டு (=செருக்கு) >>> நெட்டுரம் >>> நிச்~டூரம் 
 | 
 
~நிச்~டை, ~நிட்டை 
 | 
  
தியானம் 
 | 
  
நிச்சை 
 | 
  
நெஞ்சு (=எண்ணம், உறுதி) >>> நெச்சு >>> நிச்சு >>> நிச்சை
  >>> நிச்~டை = ஒரே பொருளை உறுதியாக எண்ணுதல்.. 
 | 
 
~நிச்~பத்தி 
 | 
  
நிச்சயம், உண்மை 
 | 
  
நியமாற்றி 
 | 
  
நிய (=இன்மை) + மாற்றி (=மாற்றம்) = நியமாற்றி >>> நிச்~பாத்தி >>> நிச்~பத்தி = மாற்றமில்லாதது
  = உண்மை. 
 | 
 
~நிச்~பலம் 
 | 
  
பயனின்மை 
 | 
  
நியபலம் 
 | 
  
நிய (=இன்மை) + பலம் (=பயன்) = நியபலம் >>> நிச்~பலம் 
 | 
 
~நிச்சலம் 
 | 
  
அசைவின்மை 
 | 
  
நெச்சலம் 
 | 
  
நெஞ்சு (=உறுதி) >>> நெச்சு
  >>> நெச்சல் >>> நெச்சலம் >>> நிச்சலம் 
 | 
 
~நிச்சலை 
 | 
  
பூமி 
 | 
  
நெச்சலை 
 | 
  
நெஞ்சு (=உறுதி) >>> நெச்சு
  >>> நெச்சல் >>> நெச்சலை = உறுதியானது = பூமி. 
 | 
 
~நிச்சாரகம் 
 | 
  
காற்று 
 | 
  
நெச்சறுகம் 
 | 
  
நெஞ்சு (=உறுதி) + அறுகம் = நெஞ்சறுகம் >>> நெச்சறுகம் >>> நிச்சாரகம் = உறுதியின்றி / ஒரு நிலையின்றித் திரிவது. 
 | 
 
~நிச்சாலங்கம் 
 | 
  
மலை 
 | 
  
நைச்சலங்கம் 
 | 
  
நை (=இன்மை) + சலங்கு (=அசைவு) + அம் = நைச்சலங்கம்
  >>> நிச்சாலங்கம்
  = அசைவற்றது. 
 | 
 
~நிச்சி 
 | 
  
உறுதிசெய் 
 | 
  
நெச்சி 
 | 
  
நெஞ்சு (=உறுதி) >>> நெச்சி
  >>> நிச்சி = உறுதிசெய் 
 | 
 
~நிச்சிதம் 
 | 
  
உறுதி 
 | 
  
நெச்சிதம் 
 | 
  
நெஞ்சு (=உறுதி) >>> நெச்சு
  >>> நெச்சிதம் >>> நிச்சிதம் 
 | 
 
~நிச்சிந்தை 
 | 
  
கவலையின்மை 
 | 
  
நைச்சிந்தை 
 | 
  
நை (=அழிவு, இன்மை) + சிந்தை (=கருத்து, கவலை) = நைச்சிந்தை >>> நிச்சிந்தை = கவலையின்மை. 
 | 
 
~நிச்சேட்டை 
 | 
  
செயலின்மை 
 | 
  
நைச்சேச்சை 
 | 
  
நை (=இன்மை) + சேச்சை (=செயல்) = நைச்சேச்சை >>> நிச்சேச்சை >>> நிச்சேச்~டை >>> நிச்சேட்டை
  = செயலின்மை 
 | 
 
~நிசப்தம் 
 | 
  
அமைதி 
 | 
  
நைசத்தம் 
 | 
  
நை (=இன்மை) + சத்தம் (=ஒலி) = நைசத்தம் >>> நிசத்தம் >>> நிசப்தம் = ஒலியின்மை 
 | 
 
சனி, 7 மார்ச், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 8
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.