வெள்ளி, 26 ஜூன், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 34


சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

பூரம்

நிறைவு, வெள்ளம்

பூரம்

பூர் (=நிறை) + அம் = பூரம் = நிறைவு, பெருக்கம், வெள்ளம்.

பூரம்

கற்பூரம்

வீறம்

வீறு (=ஒளி, வெண்மை, துண்டு, வட்டம்) + அம் = வீறம் >>> பீரம் >>> பூரம் = ஒளி தருவதான வெண்ணிற வட்டத் துண்டு.

பூரம், பூரி

பொன்

பொலம்

பொலம் (=பொன்) >>> பூலம் >>> பூரம்

பூரம்

பழம்

பூரம்

பூர் (=நிறை, முடி) + அம் = பூரம் = நிறைவுற்றது, பழம்.

பூரம்

தேள்

வீறம்

வீறு (=வளைவு, தாக்கு, கொட்டு) + அம் = வீறம் >>> பீரம் >>> பூரம் = வளைத்துக் கொட்டுவது = தேள்.

பூரா

முழுவதும்

பூரம்

பூரம் (=நிறைவு, முழுமை) >>> பூரா = முழுவதும்

பூராயம்

ஆராய்ச்சி

பூராயம்

பூரி (=பெருக்கு) + ஆய் (=ஆராய்) + அம் = பூராயம் = ஆராய்ந்து பெருக்குதல்.

பூராயம்

கவனத்தைக் கவர்வது

பூராயம்

பூரி (=மகிழ்) + ஆய் (=தேர்ந்தெடு) + அம் = பூராயம் = மகிழ்வுடன் தேர்ந்தெடுக்கப் படுவது.

பூரி

வில்நாண்

புரி

புரி (=கயிறு) >>> பூரி = வில்லின் நாண்

பூரி

குற்றம்

புரை

புரை (=குற்றம்) >>> பூரி

பூரி

பப்பரப் புளி

பூரி

பூரி (=மிகு, பெரு) >>> பூரி = மிகவும் பெருத்த மரம்.

பூரி

ஊதுகருவி

புரி

புரை (=உள்துளை) + இ = புரி >>> பூரி = உட்டுளை உடையது

பூரி, பூரிகம், பூரிகை

எண்ணையில் உப்புவது

பூரி

பூரி (=பெரு, நிறை) >>> பூரி = காற்று நிறைந்து பெருத்து எழுகின்ற உணவு வகை.

பூரிகை

ஊதுகருவி

புரிங்கை

புரை (=உட்டுளை) + இங்கம் (=பொருள்) + இ = புரிங்கை >>> பூரிகை = உட்டுளைக் கொண்ட பொருள்.

பூரிதம்

நிரப்பப்பட்டது

பூரிதம்

பூரி (=நிரப்பு) >>> பூரிதம் = நிரப்பப்பட்டது

பூரிதம்

மிகுமகிழ்ச்சி

பூரிதம்

பூரி (=மிகு, மகிழ்) >>> பூரிதம் = மிக்க மகிழ்ச்சி.

பூரிதம்

மிகுதி

பூரிதம்

பூரி (=மிகு) >>> பூரிதம் = மிகுதி

பூரிமாயன்

நரி

புரிமாயன்

புரி + மாயம் (=தந்திரம்) + அன் >>> புரிமாயன் >>> பூரிமாயன் = தந்திரம் புரிபவன்.

பூரு

புருவம்

பூரு

வீறு (=வளைவு, துண்டு) >>> பூரு = வளைவுடைய சிறுதுண்டு.

பூருகம்

மரம்

பூருகம்

பூரி (=பெருகு, வளர்) + உகை (=எழு, உயர்) + அம் = பூருகம் = உயரமாக வளரக் கூடியது.

பூருண்டி

மல்லிகை

விருற்றி

விரை (=நறுமணம்) + உறு (=உடையதாகு, மிக்க) + இ = விருற்றி >>> பிருட்டி >>> பூருண்டி = மிக்க நறுமணம் உடையது.

பூரை

இன்மை

புரை

புரை (=பொய்) >>> பூரை = இன்மை

பூரை

பயனற்றது

புரை

புரை (=உட்டுளை) >>> பூரை = உள்ளே ஒன்றுமற்றது.

பூரை

நிறைவு

பூரை

பூரி (=நிறை, முடி) + ஐ = பூரை = நிறைவு, முடிவு.

பூலதை

மண்புழு

பூலத்தை

புலம் (=மண்) + அத்து (=தங்கு) + ஐ = பூலத்தை >>> பூலதை = மண்ணுக்குள் தங்குவது.

பூலோகம்

பூமி

பூலோங்கம்

புலம் (=மண்) + ஓங்கு (=பரவு, மிகு) + அம் = பூலோங்கம் >>> பூலோகம் = மண் மிகுதியாகப் பரவியிருப்பது.

பூவலயம்

பூமி

பூவலாயம்

பூவல் (=செம்மண்) + ஆயம் (=தொகுதி, பரப்பு) = பூவலாயம் >>> பூவலயம் = செம்மண் பரப்பு.

பூவிலி

இறைவன்

பூவிலி

பூ (=பிறப்பு) + இல் + இ = பூவிலி = பிறப்பற்றவன் = இறைவன்

பூறு

குதம்

பூறு

பீறு (=வெளிப்படு) >>> பூறு = மலம் வெளிப்படும் வழி.

பூன்றம்

நிறைவு

முற்றம்

முற்று (=நிறை) + அம் = முற்றம் >>> பூன்றம்

பூனதம்

பொன்னால் ஆனது

பொன்னத்தம்

பொன் + அத்தம் (=பொருள்) = பொன்னத்தம் >>> பூனதம் = பொன்னாலான பொருள்.

பெகுலம்

பேரெண்

வெகுளம்

வெகு (=மிகு) + உள் (=எண்ணு) + அம் = வெகுளம் >>> பெகுலம் = மிகுதியான எண்ணிக்கை

பெங்கு

தீய ஆசை

வெஃகு

வெஃகு (=பிறர் பொருளை விரும்பு) >>> பெங்கு.

பெட்டகம், பேடகம், பேடிகை

பெட்டி, கலம்

பெற்றகம்

பெறு (=கொள்) + அகம் (=உள்) = பெற்றகம் >>> பெட்டகம் >>> பேடகம், பேடிகை = உள்ளே கொள்ளக் கூடியது.

பெட்டன்

பொய்யன்

வெற்றன்

வெறுமை (=பொய்) + அன் = வெற்றன் >>> பெட்டன் = பொய்யன்

பெட்டி

கொள்கலம்

பெற்றி

பெறு (=கொள்) + இ = பெற்றி >>> பெட்டி = கொள்ளக் கூடியது.

பெட்டு

பொய்

வெற்று

வெறுமை (=பொய்) + உ = வெற்று >>> பெட்டு = பொய்

பெட்டை

குருடு, இருள்

வெற்றாய்

வெறுமை (=இன்மை) + ஆய் (=ஒளி) = வெற்றாய் >>> பெட்டை = ஒளி அற்ற நிலை = குருடு, இருள்.

பெடம்

மிகுதி

வெறம்

வெறு (=மிகு) + அம் = வெறம் >>> பெடம் = மிகுதி.

பெத்தம், பெந்தம்,பெத்து, பெந்தனம்

கட்டு, பந்தம்

வித்தம்

விதி (=கட்டு) + அம் = வித்தம் >>> வெத்தம் >>> பெத்தம் >>> பெந்தம், பெந்தனம், பெத்து = கட்டு. ஒ.நோ: விதை >>> வெதை.

பெத்தரிக்கம்

பெருமை

பீற்றலிகம்

பீற்றல் (=பெருமை) + இகம் = பீற்றலிகம் >>> பெத்தரிக்கம்

பெந்தகம்

கட்டு, அடைமானம்

வித்தாக்கம்

விதி (=கட்டு) + ஆக்கம் (=பொருள்) = வித்தாக்கம் >>> வெந்தகம் >>> பெந்தகம் = கட்டப்பட்ட / ஈடுவைக்கப்பட்ட பொருள்.

பெந்தி

அடக்கு

விதி

விதி (=கட்டு) >>> வெதி >>> பெந்தி = கட்டு, அடக்கு

பெந்து

சுற்றம்

வித்து

விதி (=கட்டு, பிணி) + உ = வித்து >>> வெத்து >>> பெந்து = பிணிப்பு / உறவு உடையவர்கள்.

பெந்தை

பெரிதாய் வளர்ந்தது

மீற்றை

மீறு (=பெரிதாய் வளர்) + ஐ = மீற்றை >>> பீத்தை >>> பெந்தை = பெரிதாய் வளர்ந்தது.

மேமான்

விருந்தினர்

பெம்மான்

பெம்மான் (=கடவுள்) >>> மேமான் = கடவுள் போன்றவர். ஒ.நோ: அதிதி தேவோ பவ = விருந்தினர் கடவுளைப் போன்றவர்.

பெருவனம்

கடல்

பெருவன்னம்

பெரு (=பெரிய) + அன்னம் (=நீர்) = பெருவன்னம் >>> பெருவனம் = பெரிய நீர்ப் பரப்பு = கடல்.

பேகம்

தவளை

பேகம்

பேகே + அம் = பேகம் = பேகே பேகே என்று ஒலிப்பது.

பேசகம்

மேகம்

பெயாக்கம்

பெய் (=பொழி) + ஆக்கம் (=நீர்) = பெய்யாக்கம் >>> பேசகம் = நீரைப் பொழிவது = மேகம்.

பேசகம்

வால் நுனி

வீழக்கம்

வீழ் (=வால்) + அஃகு (= கூர்) + அம் = வீழக்கம் >>> பீசகம் >>> பேசகம் = வாலின் கூரிய பகுதி.

பேசகம்

நுழைவாயில்

வேயகம்

வேய் (=துளை, வழி) + அகம் (=உள்) = வேயகம் >>> பேசகம் = உள்ளே செல்லும் வழி.

பேசகி

யானை

பேயாக்கி

பே (=பெரிய) + ஆக்கம் (=உடல்) + இ = பேயாக்கி >>> பேசகி = பெரிய உடலைக் கொண்டது.

பேசி

தசை

மெய்யி

மெய் (=உடல்) + இ = மெய்யி >>> பேசி = தசை.

பேசி

ஆடை

பெய்யி

பெய் (=அணி) + இ = பெய்யி >>> பேசி = அணியப்படுவது.

பேசி

நரம்பு

பெய்யி

பெய் (=கட்டு) + இ = பெய்யி >>> பேசி = கட்ட உதவுவது.

பேசி

மலர், அரும்பு

பெய்யி

பெய் (=தூவு, சொரி) + இ = பெய்யி >>> பேசி = தூவப்படுவது, சொரியப்படுவது = மலர்.

பேசி

மின்னல்

பேழி

பேழ் (=பிள) + இ = பேழி >>> பேசி = விண்ணைப் பிளப்பது.

பேசி

முட்டை

வேயி

வேய் (=மூடு, சூழ்) + இ = வேயி >>> பேசி = சூழ்ந்து மூடியிருப்பது = முட்டை.

பேசிலம்

யானை

பேயில்லம்

பே (=பெரிய) + இல்லம் (=வீடு, உடல்) = பேயில்லம் >>> பேசிலம் = பெரிய உடலைக் கொண்டது

பேட்டா

தலைப்பாகை

வேட்டா

வேடு (=விளிம்பைச் சுற்றிக் கட்டும் ஆடை) + ஆ = வேட்டா >>> பேட்டா = தலையைச் சுற்றிக் கட்டும் ஆடை.

பேட்டி

விரித்துப் பேசுகை

பீற்றி

பீற்று (=விரித்துக் கூறு) + இ = பீற்றி >>> பீட்டி >>> பேட்டி = விரித்துக் கூறுதல்.

பேட்டு

கரை

வேடு

வேடு (=விளிம்பு) >>> பேட்டு = பட்டையான விளிம்பு., கரை.

பேட்டை

ஊர்

பேட்டை

பேடு (=ஊர்) + ஐ = பேட்டை

வேட்டை

சுற்றி வளைத்தல்

வேட்டை

வேடு (=சுற்றி வளை) + ஐ = வேட்டை = சுற்றி வளைத்தல்.

பேடணம்

பொடியாக்கல், திரிகைக்கல்

வீறணம்

வீறு (=கூறுசெய்) + அணம் = வீறணம் >>> பீடணம் >>> பேடணம் = கூறுசெய்தல், பொடியாக்குதல், பொடிசெய்ய உதவுவது.

பேடம்

ஆடு

வெட்டம்

வெட்டு + அம் (=உண்ணு) = வெட்டம் >>> பேடம் = வெட்டி உண்ணப்படுவது.

பேடம்

தெப்பம்

மீறம்

மீறு (=மேலோங்கு) + அம் (=நீர்) = மீறம் >>> பீடம் >>> பேடம் = நீரின் மேல் ஓங்கி இருப்பது.

பேடி

அச்சம், அஞ்சு

வீறி

விற (=அஞ்சு) + இ = வீறி >>> பீடி >>> பேடி = அஞ்சு, அச்சம்

பேடி

கைவிலங்கு

பேடி

பிடி (=பற்று, பிணி) >>> பீடி >>> பேடி = பிணிக்க உதவுவது

பேடிசம்

போலிவேலை

வேடியம்

வேடம் (=போலி) + இயம் =வேடியம் >>> பேடிசம்= போலிவேலை

பேத்துவம்

பால், நெய்

பெய்த்துவ்வம்

பெய் (=சொரி) + துவ்வு (=உண்ணு) + அம் = பெய்த்துவ்வம் >>> பேத்துவம் = பெய்து உண்ணப்படுவது = பால், நெய்.

பேதகம்

மனவேறுபாடு

வேறகம்

வேறு + அகம் (=மனம்) = வேறகம் >>> பேதகம் = மன வேறுபாடு

பேதம்

வேறுபாடு

வேறம்

வேறு + அம் = வேறம் >>> பேதம் = வேறுபாடு

விகல்பம், விகற்பம்

இணக்கம் இன்மை

வீகலப்பம்

(2). வீ (=இன்மை) + கலப்பு (=இணக்கம்) + அம் = வீகலப்பம் >>> விகல்பம் >>> விகற்பம் = இணக்கம் இன்மை

பேதனம்

ஒன்றைப் பிறிதாக்குகை

வேறணம்

வேறு (=மாற்று) + அணம் = வேறணம் >>> பேதனம் = ஒன்றை இன்னொன்றாக மாற்றுதல்.

பேதனம்

பன்றி

வேறன்னம்

வேறு (=பிரி, பிள) + அன்னம் (=பூமி) = வேறன்னம் >>> பேதனம் = பூமியைப் பிளப்பது.

பேதா

சேவகன்

வீறாள்

வீறு (=வளை, பணி) + ஆள் = வீறாள் >>> பீதாள் >>> பேதா = பணிவுடைய ஆள் = சேவகன்.

பேதி

பிரிப்பது

வேறி

வேறு (=பிரி) + இ = வேறி >>> பேதி = பிரிப்பது

பேதி

பாதரசம்

வீறி

வீறு (=ஒளி, வெண்மை, துளி) + இ = வீறி >>> பீதி >>> பேதி = வெண்ணிறமாய் ஒளிரும் துளி.

பேதி

உடை, பிள

வீறி

வீறு (=வெட்டு, பிள) + இ = வீறி >>> பீதி >>> பேதி = உடை, பிள

பேதி

மாற்று

வேறி

வேறு + இ = வேறி >>> பேதி = வேறாக்கு, மாற்று.

பேதி

மயங்கு, கலங்கு

வீறி

வீறு (=சுற்று, கலங்கு) + இ = வீறி >>> பீதி >>> பேதி = கலங்கு, மயங்கு

பேதிதம், பேதிப்பு

பிளத்தல்

வீறிதம்

வீறு (=வெட்டு, பிள) + இதம் = வீறிதம் >>> பீதிதம் >>> பேதிதம் = பிளத்தல், வெட்டுதல்.

பேதி

வயிறு கலங்குதல்

பேதி

பேதி (=கலங்கு) >>> பேதி = வயிறு கலங்கிக் கழிதல்.

பேது

மயக்கம், அறிவின்மை

பீது

வீறு (=சுற்று, கலங்கு) >>> பீது >>> பேது = கலக்கம், மயக்கம், அறிவின் மயக்கம் = அறிவின்மை.

பேது

இரகசியம்

மேது

மெத்து (=நிரப்பு, புதை) >>> மேது >>> பேது = புதைக்கப்பட்டது.

பேமாலம், பேமாளம்

முட்டாள்

வீவாலம்

வீ (=இன்மை) + வால் (=ஒளி, அறிவு) + அம் = வீவாலம் >>> பீமாலம் >>> பேமாலம் = அறிவின்மை, அறிவற்றவன்.

பேமானி

பெருமை கெட்டவன்

வீமாணி

வீ (=கேடு) + மாண் (=பெருமை) + இ = வீமாணி >>> பீமானி >>> பேமானி = பெருமை கெட்டவன்.

பேயம்

நீருணவு

பெயம்

பெய் (=ஊற்று, சொரி) + அம் (=உணவு) = பெயம் >>> பேயம் = ஊற்றப்படும் உணவு வகைகள்.

பேயமன்று

தண்ணீர்ப் பந்தல்

பேயமன்று

பேயம் (=நீருணவு) + மன்று (=இடம்) = பேயமன்று = நீருணவு கொடுக்கப்படும் இடம்.

பேயூடம்

பால், மோர்

பெயூட்டம்

பெய் (=ஊற்று) + ஊட்டு + அம் = பெயூட்டம் >>> பேயூடம் = ஊற்றி ஊட்டப்படுவது = பால், மோர் முதலியன.

பேரண்டம்

நரி

புரட்டம்

புரட்டு (=தந்திரம்) + அம் = புரட்டம் >>> பெரட்டம் >>> பேரண்டம் = தந்திரம் மிக்க விலங்கு = நரி.

பேரம்

உற்ற மதிப்பு

பெறம்

பெறு (=மதிப்புறு) + அம் = பெறம் >>> பேரம் = உற்ற மதிப்பு

பேரம்

வடிவம், உடல், சிலை

பெயரம்

பெயர் (=தோன்று) + அம் = பெயரம் >>> பேரம் = தோன்றுவது, தோற்றம், வடிவம், உடல், சிலை.

பேரி, பேரிகை, பேரியம்

பறை

பீலி

பீலி (=பறை) >>> பீரி >>> பேரி, பேரியம், பேரிகை

பேரு

கடல்

பேரு

பெரு (=பெருகு) >>> பேரு = பெருக்கம் உடையது.

பேரு

சூரியன், தீ

பீரு

வீறு (=ஒளி) >>> பீரு >>> பேரு = ஒளி தருவது.

பேரை

நீர்

பேரை

பெரு (=பெருகு) + ஐ = பேரை = பெருகும் இயல்புடையது.

பேலகம்

தெப்பம்

மேலாக்கம்

மேல் + ஆக்கம் (=நீர்) = மேலாக்கம் >>> பேலகம் = நீரின் மேல் இருப்பது = தெப்பம்.

பேலம்

பங்கு

பிளம்

பொளி (=துண்டு) + அம் = பொளம் >>> பொலம் >>> பேலம் = துண்டு செய்யப்பட்டது = பங்கு

உச்சரி

தனியாக்கி ஒலி

உய்யாரி

உய் (=நீக்கு, தனியாக்கு) + ஆர் (=ஒலி) + இ = உய்யாரி >>> உச்சாரி >>> உச்சரி = தனியாக்கி ஒலி

உச்சரிப்பு

தனியாக்கி ஒலித்தல்

உய்யாரிப்பு

உய் (=நீக்கு, தனியாக்கு) + ஆர் (=ஒலி) + இ = உய்யாரி >>> உச்சாரி >>> உச்சரி >>> உச்சரிப்பு = தனியாக்கி ஒலித்தல்

பேலம்

கொட்டை

பேளம்

பேள் (=உண்டு கழி) + அம் = பேளம் >>> பேலம் = உண்டபின் கழிக்கப்படுவது.

பேலவம்

மென்மை

மெலிவம்

மெலிவு (=மென்மை) + அம் = மெலிவம் >>> பேலவம்

பேலி

குதிரை

புயலி

புயல் + இ = புயலி >>> பூலி >>> பேலி = புயல்போல ஓடுவது.

பேவகூப்பு

முட்டாள்

வீபகுப்பு

வீ (=இன்மை) + பகுப்பு (=பகுத்தறிவு) = வீபகுப்பு >>> பீவகூப்பு >>> பேவகூப்பு = பகுத்தறிவு இன்மை.

பேளிகை, பேலிகை

உண்டு கழித்த எச்சம்

பேளிங்கை

பேள் (=கழி) + இங்கம் (=பொருள்) + ஐ = பேளிங்கை >>> பேளிகை, பேலிகை = உண்டு கழித்த பொருள்.

பேனம்

குமிழி, நுரை

மின்னம்

மின் (=ஒளி, வெண்மை) + அம் (=நீர்) = மின்னம் >>> மீனம் >>> மேனம் >>> பேனம் = நீரின் மேல் தோன்றும் வெண்பொருள்.

பேனவாகி

இடியோசை

மின்னவாக்கி

மின் (=மின்னல்) + அம் + வாக்கு + இ = மின்னவாக்கி >>> மீனவாகி >>> மேனவகி >>> பேனவாகி = மின்னலின் பேச்சு.

 

பேனன்

சூரியன், சந்திரன்

மின்னன்

மின் (=ஒளி) + அன் = மின்னன் >>> மீனன் >>> மேனன் >>> பேனன் = ஒளி தருபவன் = சூரியன், சந்திரன்.

பேச^ரா

குடியற்ற ஊர்

வீசரம்

வீ (=இன்மை) + சரம் (=இயங்கு திணை) = வீசரம் >>> பீசரா >>> பேச^ரா = இயங்கும் உயிர்கள் இல்லாத இடம்.

பேசா^

தாழ்வு

வீழம்

வீழ் (=தாழ்) + அம் = வீழம் >>> பீசம் >>> பேசா^ = தாழ்வு

பேசா^ர்

பெரும் பிடிவாதம்

பேசலம்

பே (=பெரிய) + சலம் (=பிடிவாதம்) = பேசலம் >>> பேசாரம் >>> பேசா^ர் = பெரும் பிடிவாதம் பண்ணுகை.

பேச்~

பாராட்டு

பேழ்

பேழ் (=பெருமை) >>> பேச்~ = பெருமைக்குரியது என பாராட்டுகை

பைகிரி

நாய்

பைக்கிரி

பைக்கம் (=பிச்சை) + இரை (=உணவு) + இ = பைக்கிரி >>> பைகிரி = பிச்சையாகப் போடுவதை உண்பது.

பைசல்

தீர்மானம்

வீயல்

வீ (=முடி) + அல் = வீயல் >>> பீசல் >>> பைசல் = முடிவு.

பைசல்

மரணம்

வீயல்

வீ (=சாவு) + அல் = வீயல் >>> பீசல் >>> பைசல் = சாவு

பைசாசம்

இரும்பு

பையாயம்

பை (=வலிமை) + ஆயம் (=பொருள்) = பையாயம் >>> பைசாசம் = வலிமையான பொருள்.

பைர்

கால்

பேர்

பெயர் (=இடமாறு) >>> பேர் >>> பைர் = இடமாற உதவுவது

பைசார்

செருப்பு

பேசர்

பெயர் (=கால்) >>> பேசர் >>> பைசார் = காலில் அணிவது.

பைசாரம்

பிரதேசம்

வியலம்

வியல் (=அகன்ற, பரந்த) + அம் = வியலம் >>> பிசரம் >>> பைசாரம் = அகன்ற / பரந்த இடம்.

பைசு

பால்

பையு

பை (=பொங்கு, வெண்மை) + உ = பையு >>> பைசு = பொங்கும் இயல்புடைய வெண்ணிறப் பொருள்.

பிசுனம், பைசுனம்

கஞ்சத் தன்மை

பிசுணம்

பிசு (=ஒட்டு) + உண் + அம் = பிசுணம் >>> பிசுனம் >>> பைசுனம் = கையில் ஒட்டியிருப்பதை உண்ணக் கொடுத்தல்.

பிசுனாறி, பிசினாறி, பிசினன், பிசினி

கஞ்சத் தன்மை கொண்டவன்

பிசுணாரி

பிசு (=ஒட்டு) + உண் + ஆர் (=கொடு) + இ = பிசுணாரி >>> பிசுனாறி >>> பிசினாறி, பிசினி, பிசினன் = கையில் ஒட்டியிருப்பதை உண்ணக் கொடுப்பவன்.

பைதா

சக்கரம்

வீறம்

வீறு (=சுற்று) + அம் = வீறம் >>> பீதம் >>> பைதா = சுற்றுவது

விந்து

உருவாக்க வல்ல துகள்

வித்து

வீற்று (=உருவாக்கு, துகள்) >>> வித்து >>> விந்து = உருவாக்க வல்ல துகள்.

பைதிருகம்

தந்தையால் பெற்றது

பிதிருகம்

பிதிர் (=தந்தை) + உகு (=கொடு) + அம் = பிதிருகம் >>> பைதிருகம் = தந்தை கொடுத்தது

பைமாலி

போரினால் அழிவுற்றது

வீமலி

வீ (=அழி) + மலை (=எதிர், போரிடு) + இ = வீமலி >>> பீமாலி >>> பைமாலி = போரிட்டு அழிக்கப்பட்டது.

பைமாச்`, பைமாச்~

பசுமை அளவீடு

பைமாயம்

பைமை (=பசுமை) + ஆய் (=அள) + அம் = பைமாயம் >>> பைமாசம் >>> பைமாச்` = பசுமை அளவீடு.

பைரி

வல்லூறு

வயிரி

வயிர் (=வலிமை, சினம்) + இ = வயிரி >>> வைரி >>> பைரி = வலிமையும் சினமும் மிக்க பறவை.

பொக்கிசம், பொக்கசம்

செல்வம், பொன் மூட்டை

பொங்கியம், பொற்கிழம்

(2) பொங்கு (=செழி, ஒளிர்) + இயம் = பொங்கியம் >>> பொக்கிசம் = செழிப்பினைத் தருவதான ஒளிரும் பொருட்கள் = செல்வம். (3). பொன் + கிழி (=பை, மூட்டை) + அம் = பொற்கிழம் >>> பொற்கிசம் >>> பொக்கிசம் = பொன் மூட்டை.

பொக்கணம்

கிழிந்த பை

பொக்கணம்

பொக்கு (=துளை) + அணி (=துணி) + அம் = பொக்கணம் = துளையுடைய / கிழிந்த துணிப்பை.

பொக்கணி

இடிக்கும் உரல்

மொக்காணி

மொக்கு (=அடி, இடி) + ஆணம் (=கலம்) + இ = மொக்காணி >>> பொக்கணி = இடிக்கப்படும் கலம்.

பொக்கணி

பெரிய கொள்கலம்

பொங்காணி

பொங்கு (=பெரு) + ஆணம் (=கொள்கலம்) + இ = பொங்காணி >>> பொக்கணி = பெரிய கொள்கலம்.

பொக்கணி

தொப்புள்

பொக்கணி

பொக்கு (=துளை) + அணை (=முடிச்சு இடு, மூடு) + இ = பொக்கணி = முடிச்சு இட்டு மூடப்பட்ட துளை.

பொக்கரணி

பூக்களுடைய நீர்க்கரை

பூங்கரைநீர்

பூ + கரை + நீர் = பூக்கரைநீர் >>> பொக்கரணி = பூக்களைக் கொண்ட நீர்க்கரை. ஒ.நோ: ஊர் + உண் + நீர் = ஊருணி.

சமூகம்

பெருங் கூட்டம்

செம்மூக்கம்

செம்மு (=நிறை, கூடு) + ஊக்கம் (=மிகுதி) = செம்மூக்கம் >>> செமூகம் >>> சமூகம் = மிகுதியான கூட்டம்.

சமுதாயம்

உறவுக் கூட்டம்

செம்முதாயம்

செம்மு (=நிறை, கூடு) + தாயம் (=சொந்தம்) = செம்முதாயம் >>> செமுதாயம் >>> சமுதாயம் = சொந்தங்களின் கூட்டம்.

வாகனம்

வண்டி

வாங்கணம்

வாங்கு (=பூட்டு, இழு, செலுத்து) + அணம் = வாங்கணம் >>> வாகனம் = பூட்டி இழுத்துச் செல்லப்படுவது.

அனுமதி

இசைவு

அண்ணுமதி

அண்ணு (=ஒப்பு, இசை) + மதி (=கருத்து, சொல்) = அண்ணுமதி >>> அனுமதி = இசைவான சொல்.