சனி, 31 அக்டோபர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 54

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

வி

ஆகாயம்

மீ

மீ (=ஆகாயம்) >>> வீ >>> வி

வி

பறவை, காற்று

பை

பை (=விரி, பரப்பு, பற) >>> பீ >>> வீ >>> வி = பறப்பது. பரவுவது

வி

கண்

விழி

விழி >>> வியி >>> வீ >>> வி

வி

திசை

வழி

வழி (=திசை) >>> வயி >>> வை >>> வீ >>> வி

வி

அழகு

பை

பை (=அழகு) >>> பீ >>> வீ >>> வி

விக்கனம், விக்கினம்

தடை

வீக்கணம்

வீக்கு (=தடு) + அணம் = வீக்கணம் >>> விக்கனம் >>> விக்கினம் = தடை, இடையூறு

விக்கியாதம், விக்கியாதி

புகழ்

வீக்கியாறம்

வீக்கம் (=பெருமை) + இயை (=பொருந்து) + அறை (சொல்) + அம் = வீக்கியாறம் >>> விக்கியாதம் = பெருமை பொருந்திய சொல்.

விக்கியாபனம்

விண்ணப்பம்

முக்கியைபன்னம்

முக (=விரும்பு) + இயை (=பொருந்து) + பன்னு (=கூறு) + அம் = முக்கியைபன்னம் >>> மிக்கியபன்னம் >>> விக்கியாபனம் = விரும்பியதைப் பொருத்தமாகக் கூறுதல்.

விஞ்ஞானம்

உலகம் பற்றிய அறிவு

வைஞ்ஞானம்

வை (=உலகம்) + ஞானம் (=அறிவு) = வைஞ்ஞானம் >>> விஞ்ஞானம் = உலகத்தைப் பற்றிய அறிவு.

விக்கியானம்

உலகம் பற்றிய அறிவு

வையக்கியணம்

வையகம் (=உலகம்) + இயம் (=அறிவு) + அணம் = வையக்கியணம் >>> வைக்கியானம் >>> விக்கியானம் = உலகம் பற்றிய அறிவு.

விக்கிரகம்

இறை என்று கட்டிய உடல்

வீக்கிறாகம்

வீக்கு (=கட்டு) + இறை + ஆகம் (=உடல்) = வீக்கிறாகம் >>> விக்கிரகம் = இறையாகக் கட்டப்பட்ட உடல், உருவம்.

விக்கிரகம்

போர்

மீக்கிறாக்கம்

மிகை (=பகை) + இறு (=அழி) + ஆக்கம் (=செயல்) = மீக்கிறாக்கம் >>> விக்கிரகம் = பகையை அழிக்கும் செயல்.

விக்கிரகம்

பகை

வீக்கிராக்கம்

வீக்கு (=அழி) + இருமை (=பெருமை) + ஆக்கம் (=வளர்ச்சி) = வீக்கிராக்கம் >>> விக்கிரகம் = பெருமை மற்றும் வளர்ச்சியை அழிப்பது.

விக்கிரமம்

மிக்க வலிமை

மீக்குரவம்

மிகை (=மிகுதி) + உரம் (=வலிமை) + அம் = மீக்குரவம் >>> வீக்கிரமம் >>> விக்கிரமம் = மிக்க வலிமை, பேராற்றல்.

விக்கிரமி

சிங்கம்

விக்கிரமி

விக்கிரமம் (=மிக்க வலிமை) + இ = விக்கிரமி = மிக்க பலமுடையது

விக்கிரயம், விக்கிரை, விக்கிரயணம்

கூவி விற்பனை செய்தல்

விற்குறயம்

வில் (=விற்பனைசெய்) + குரை (=ஒலி, கூவு) = விற்குரை >>> விக்கிரை + அம் / அணம் = விக்கிரயம் / விக்கிரயணம் = கூவி விற்பனை செய்தல்.

விக்கிராந்தம், விக்கிராந்தி

அழிக்க வல்ல பெருவீரம்

மீக்குரந்தம்

மிகை (=மிகுதி) + உரம் (=வலிமை) + அந்தம் (=அழிவு) = மீக்குரந்தம் >>> விக்கிராந்தம் = அழிக்க வல்ல பேராற்றல்.

விக்கிரேதா

விற்பவன்

விக்கிரைதா

விக்கிரை (=விற்பனை) + தா (=கொடு) = விக்கிரைதா >>> விக்கிரேதா = விற்பனை செய்து கொடுப்பவன்.

விக்கிரேயம்

விற்பனைப் பொருள்

விக்கிரேயம்

விக்கிரை (=விற்பனை) + ஏய் (=பொருந்து) + அம் = விக்கிரேயம் = விற்பனையுடன் பொருந்தியது.

விக்கினம்

தீங்கு

வீக்கினம்

வீக்கு (=அழி) + இனை (=வருத்து) + அம் = வீக்கினம் >>> விக்கினம் = வருத்தி அழிப்பது = தீங்கு.

விக்கேபம்

குறுக்குக் கோடு

வீக்கீவம்

வீக்கு (=தடு, குறுக்கிடு) + ஈவு (=வகு, பிரி) + அம் = வீக்கீவம் >>> விக்கேபம் = குறுக்காகப் பிரிப்பது.

விக்கேபம்

வீசுகை, செலுத்துகை

வீக்கேவம்

வீக்கு (=செலுத்து) + ஏவு (=வீசு) + அம் = வீக்கேவம் >>> விக்கேபம் = வீசிச் செலுத்துகை.

விக்ஞாப்பியம்

விண்ணப்பம், வேண்டுகோள்

முக்காம்மியம்

முக (=விரும்பு) + அமை (=பொருந்து) + இயம் (=சொல்) = முக்காம்மியம் >>> மிக்காப்பியம் >>> விக்ஞாப்பியம் = விருப்பத்தைப் பொருந்துமாறு கூறுதல் = விண்ணப்பம், வேண்டுகோள்.

விககம், விகங்கம்

அம்பு

வீக்ககம்

வீக்கு (=வேகமாகச் செலுத்து, கொல்) + அஃகு (=கூர்மை) + அம் = வீக்ககம் >>> விககம் = வேகமாகச் செலுத்திக் கொல்ல உதவுகின்ற கூர்மையான பொருள் = அம்பு.

விககம், விகங்கம்

சந்திரன், சூரியன்

பைகக்கம்

பை (=ஒளி) + கக்கு (=உமிழ்) + அம் = பைகக்கம் >>> பிகங்கம் >>> விககம் = ஒளியை உமிழ்வது.

விககம், விகங்கம்

மேகம்

வீக்காக்கம்

வீக்கு (=நிறை, அடக்கு) + ஆக்கம் (=நீர்) = வீக்காக்கம் >>> விககம் = நீரினை நிறைவாகத் தனக்குள் அடக்கி இருப்பது.

விககம், விகங்கம்

கிரகம்

மிககம்

மிகு (=எஞ்சு, தொங்கு) + அகம் (=இடம், வீடு) = மிககம் >>> விககம் = தொங்கும் இடம் / வீடு.

விகங்கம், விககம்

பறவை, அன்னம்

வீங்ககம்

வீங்கு (=விரை, வேகமாகச் செல்) + அகம் (=வானம்) = வீங்ககம் >>> விககம், விகங்கம் = வானத்தில் வேகமாகச் செல்வது.

விககம்

காற்றாடி, பட்டம்

வீங்ககம்

வீங்கு (=மேல்நோக்கிச் செல்) + அகம் (=வானம்) = வீங்ககம் >>> விககம், விகங்கம் = வானத்தில் மேல்நோக்கிச் செல்வது.

விகசம், விகாசம்

மலர்ச்சி

முகயம்

முகை (=மலர்) + அம் = முகயம் >>> மிகசம் >>> விகசம் = மலர்ச்சி

விகசம்

மொட்டை

மைகழம்

மை (=தலைமயிர்) + கழி (=நீக்கு) + அம் = மைகழம் >>> மிகசம் >>> விகசம் = தலைமயிர் நீக்கப்பட்டது.

விகசனம், விகசிதம்

மலர்ச்சி, சிரிப்பு

முகயணம்

முகை (=மலர்) + அணம் = முகயணம் >>> மிகசனம் >>> விகசனம் = மலர்ச்சி, சிரிப்பு.

விகசி

மலர், சிரி

விகசி

விகசனம் (=மலர்ச்சி, சிரிப்பு) >>> விகசி = மலர், சிரி

விகடம்

சிரிப்பூட்டுதல்

முகாடம்

முகை (=மலர்) + ஆடு (=செய்) + அம் = முகாடம் >>> மிகடம் >>> விகடம் = மலரச்செய்தல், சிரிக்க வைத்தல்

விகடம்

வேறுபாடு

மிகடம்

மிகு (=மாறு) + அடை + அம் = மிகடம் >>> விகடம் = மாற்றம்

விகடம்

செருக்கு

மிகடம்

மிகு (=செருக்குறு) + அடை + அம் = மிகடம் >>> விகடம் = செருக்கு

விகடம்

இணைந்து ஆடும் நடனம்

முகாட்டம்

முகை (=கூட்டம்) + ஆடு + அம் = முகாட்டம் >>> மிகடம் >>> விகடம் = கூடி ஆடும் ஆட்டம்.

விகடம்

பயங்கரமானது

பைங்கடம்

பை (=அச்சம்) + கடுமை (=மிகுதி) + அம் = பைங்கடம் >>> பிக்கடம் >>> விகடம் = மிகுதியான அச்சம் தருவது

விகடம்

கரடுமுரடு

வீங்கடம்

வீங்கு (=பெரு) + அடு + அம் = வீங்கடம் >>> விகடம் = அடுத்தடுத்து பெருத்து இருப்பது.

விகடம்

பரப்பு

மிகடம்

மிகு (=கட, பரவு) + அடை + அம் = மிகடம் >>> விகடம் = பரவலானது

விகடம்

மிகுதி

மிகடம்

மிகை + அடை + அம் = மிகடம் >>> விகடம் = மிக்கு அடைந்தது

விகடம்

பேரழகு

பைங்கடம்

பை (=அழகு) + கடுமை (=மிகுதி) + அம் = பைங்கடம் >>> பிக்கடம் >>> விகடம் = மிகுதியான அழகு

விகடம்

பொய், வஞ்சனை

முக்கறம்

மிகு (=மாறு) + அறை (=சொல்) + அம் = மிகறம் >>> விகடம் = சொல் மாறுதல் = பொய், வஞ்சனை.

விகடம்

தொந்தரவு

மிகடம்

மிகு (=செருக்குறு) + அடு (=வருத்து) + அம் = மிகடம் >>> விகடம் = செருக்கினால் வருத்துதல்.

விகடம்

நரகம்

மிகற்றம்

மிகை (=தவறு, தண்டனை) + அற்றம் (=மரணம், பள்ளம்) = மிகற்றம் >>> விகட்டம் >>> விகடம் = மரணமுற்றோர் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படுகின்ற பள்ளம்.

விகடி

நீர்

வீகறி

வீ (=அழி, நீக்கு) + கறை (=மாசு, அழுக்கு) + இ = வீகறி >>> விகடி = மாசுகளை நீக்குவது.

விகண்டை, விகண்டிதம்

மறுப்பு, எதிர்ப்பு, பகை

மிகண்டை

மிகு (=மாறு) + அண்டு (=ஏலு) + ஐ = மிகண்டை >>> விகண்டை = ஏற்பில் இருந்து மாறுதல்.

விகண்டி

மறு, எதிர், பகை, வேறுபடு

மிகண்டி

மிகு (=மாறு) + அண்டு (=ஏலு) + இ = மிகண்டி >>> விகண்டி = ஏற்பில் இருந்து மாறுபடு..

விகண்டை

துறவு

முகற்றை

முக (=விரும்பு) + அறு (=இல்லாகு) + ஐ = முகற்றை >>> மிகட்டை >>> விகண்டை = விருப்பம் அற்ற நிலை.

விகண்டிதம்

அடங்காமை

வீகட்டிதம்

வீ (=அழிவு, இன்மை) + கட்டிதம் (=கட்டுப்பாடு) = வீகட்டிதம் >>> விகண்டிதம் = கட்டுப்பாடு இன்மை

விகணனம்

பகுத்து அறிதல், கணித்தல்

மிகணணம்

மிகு (=சிந்தி, அறி) + அணி (=வகு, பகு) + அணம் = மிகணணம் >>> விகணனம் = பகுத்து அறிதல், கணித்தல்

விகணனம்

தியானம்

மிகாணணம்

மிகு (=அறி, சிந்தி) + ஆணம் (=உறுதிப்பொருள்) + அணம் = மிகாணணம் >>> விகணனம் = உறுதிப்பொருளைச் சிந்தித்தல்.

விகணிதம்

கணிப்புக்கு அப்பாற்பட்டது

மீகணிதம்

மீ (=மேலே, அப்பால்) + கணிதம் (=கணிப்பு) = மீகணிதம் >>> விகணிதம் = கணிப்புக்கு அப்பாற்பட்டது.

விகணிதம்

தீர்ப்பு

மிகாணிறம்

மிகு (=சிந்தி, கருது) + ஆணை (=சொல்) + இறு (=முடி) + அம் = மிகாணிறம் >>> விகணிதம் = முடிவாகச் சொல்லப்படும் கருத்து.

விகர்த்தன், விகர்த்தனன்

சூரியன்

பைகருத்தன்

பை (=ஒளி) + கருத்தா (=செய்பவன்) + அன் = பைகருத்தன் >>> பிகர்த்தன் >>> விகர்த்தன் = ஒளி செய்பவன்.

விகத்தன்

சூரியன்

வீகற்றன்

வீ (=அழி) + கறை (=இருள்) + அன் = வீகற்றன் >>> விகத்தன் = இருளை அழிப்பவன்.

விகத்தனம், விகதனம்

தற்புகழ்ச்சி

மிகய்த்தானம்

மிகை (=செருக்கு) + தான் + அம் = மிகய்த்தானம் >>> விகத்தனம் = தான் என்ற செருக்கு, தற்புகழ்ச்சி.

விகதம்

மரணம்

வைகற்றம்

வைகு (=தங்கு, வாழ்) + அற்றம் (=முடிவு) = வைகற்றம் >>> விகத்தம் >>> விகதம் = வாழ்வின் முடிவு = மரணம்.

விகதம்

கடன் தீர்க்கை

வீக்கறம்

வீக்கு (=கட்டு, பிணை) + அறு (=தீர்) + அம் = வீக்கறம் >>> விக்கதம் >>> விகதம் = கட்டு / பிணையைத் தீர்த்தல்.

விகம்பிதம்

அச்ச நடுக்கம்

பைகம்பிதம்

பை (=அஞ்சு) + கம்பி (=அதிர்) + இதம் = பைகம்பிதம் >>> பிகம்பிதம் >>> விகம்பிதம் = அச்சத்தால் அதிர்தல்.

விகமம்

பிரிவு, தனிமை

மிகமம்

மிகு (=எஞ்சு, தனி) + அமை + அம் = மிகமம் >>> விகமம் = தனித்து அமைந்திருத்தல் = தனிமை, பிரிவு.

விகமனம்

கெட்ட நடத்தை

மிகைவண்ணம்

மிகை (=கேடு) + வண்ணம் (=குணம்) = மிகைவண்ணம் >>> விகமனம் = கெட்ட குணம்.

விகரளம், விகராளம்

நரகம்

மிகறளம்

மிகை (=தவறு, தண்டனை) + அறு (=இல்லாகு, சாவு) + அளம் (=பள்ளம்) = மிகறளம் >>> விகரளம் = இறந்தவர்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படும் பள்ளம்.

விகலம்

குறைவு

மிகலம்

மிகை (=மிகுதி) + அல் (=எதிர்மறை) + அம் = மிகலம் >>> விகலம் = மிகுதியின் எதிர்மறை = குறைவு.

விகலம்

கலக்கம், மயக்கம்

மிகலம்

மிகு (=சிந்தி, அறி) + அலை (=தடுமாறு) + அம் = மிகலம் >>> விகலம் = தடுமாறும் சிந்தனை / அறிவு.

விகலம், விகலை

காலப் பிரிவு

வீகாலம்

வீ (=நீக்கம், பிரிவு) + காலம் = வீகாலம் >>> விகலம் = காலப் பிரிவு

விகலிதம்

கலங்கி வடிதல்

விகலிறம்

விகலம் (=கலக்கம்) + இறு (=வடி) + அம் = விகலிறம் >>> விகலிதம் = கலங்கி வடிதல்.

விகலிதம்

கலங்கிச் சிந்துதல்

விகலிறம்

விகலம் (=கலக்கம்) + இறை (=சிந்து) + அம் = விகலிறம் >>> விகலிதம் = கலங்கிச் சிந்துதல்.

விகற்பம், விகற்பு

வேறுபாடு, கோணல், தவறு

மிகருப்பம்

(2). மிகு (=மாறு) + அருப்பம் (=வழி, நெறிமுறை) = மிகருப்பம் >>> விகற்பம் = நெறிமுறையில் இருந்து மாறுதல்.

விகற்பம்

இனம்

மிகார்ப்பம்

மிகு (=மாறு) + ஆர்ப்பு (=கட்டு, கூட்டம்) + அம் = மிகார்ப்பம் >>> விகற்பம் = மாறுபட்ட கூட்டம் = இனம்.

விகற்பம்

பகுத்தறிவு

மிகறுப்பம்

மிகு (=சிந்தி, அறி) + அறுப்பு (=பகுப்பு) + அம் = மிகறுப்பம் >>> விகற்பம் = பகுத்து அறிதல். 

விகற்பி

வேறுபடுத்து, பகுத்தறி

விகற்பி

விகற்பம் (=வேறுபாடு, பகுத்தறிவு) >>> விகற்பி = வேறுபடுத்து, பகுத்தறி

விகாதம்

தடை, இடையூறு, கேடு

வீக்கற்றம்

வீக்கு (=தடு) + அற்றம் (=வருத்தம், கேடு) = வீக்கற்றம் >>> விக்கத்தம் >>> விகாதம் = தடுக்கும் வருத்தம் / கேடு

விகாதி

தடைசெய்

விகாதி

விகாதம் (=தடை) >>> விகாதி = தடைசெய்

விகாரம்

மாறுபாடு, வேறுபாடு

மிகாரம்

(2). மிகு (=மாறு) + ஆர் (=பொருந்து) + அம் = மிகாரம் >>> விகாரம் = பொருந்துவதில் இருந்து மாறுதல்.

விகாரம்

சரணாலயம்

புகறம்

புகு (=சரணடை) + அறை (=வீடு) + அம் = புகறம் >>> பிகரம் >>> விகாரம் = சரணடையும் வீடு.

விகாரி

வேறுபடுத்து

விகாரி

விகாரம் (=வேறுபாடு) >>> விகாரி = வேறுபடுத்து

விகாரியம்

வேறுபாடு அடைவது

விகாரியம்

விகாரம் (=வேறுபாடு) + இயை (=பொருந்து, அடை) + அம் = விகாரியம் = வேறுபாடு அடையும் செய்யப்படு பொருள்.

விகிதம்

பகுக்கும் அளவு

மிகிறம்

மிகு (=பிரி, பகு) + இறை (=அளவு) + அம் = மிகிறம் >>> விகிதம் = பகுக்கும் அளவு.

விகிதம்

அனுகூலம்

மிகிதம்

மிகு + இதம் (=நன்மை) = மிகிதம் >>> விகிதம் = மிக்க நன்மை

விகிதம்

நட்பு

வீக்கிதம்

வீக்கு (=கட்டு, சேர்) + இதம் (=இன்பம், மகிழ்ச்சி) = வீக்கிதம் >>> விகிதம் = இன்பம் / மகிழ்ச்சி தரும் சேர்க்கை.

விகிதம்

செயல்

புகிறம்

புகு (=நிகழ்) + இறு (=செய்) + அம் = புகிறம் >>> பிகிதம் >>> விகிதம் = செய்யும் நிகழ்வு.

விகிருதம், விகிர்தம்,விகிருதி

வேறுபாடு, பகை, வெறுப்பு

மிகிருத்தம்

மிகு (=மாறு) + இருத்து (=பொருத்து) + அம் = மிகிருத்தம் >>> விகிருதம் >>> விகிர்தம் = பொருந்துவதில் இருந்து மாறுதல் = வேறுபாடு, பகை.

விகிருதம், விகிர்தம்

பொய், வஞ்சனை

மிகிறிதம்

மிகு (=மாறு) + இறை (=சொல்) + இதம் = மிகிறிதம் >>> விகிருதம் >>> விகிர்தம் = சொல்லில் இருந்து மாறுதல்.

விகிர்தம்

நரகம்

மிகிறற்றம்

மிகை (=தவறு, தண்டனை) + இறு (=அழி, சாவு) + அறை (=பள்ளம்) + அம் = மிகிறற்றம் >>> விகிரத்தம் >>> விகிர்தம் = இறந்தவர்கள் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படும் பள்ளம்.

விகிர்தன்

கடவுள்

மீகீர்த்தன்

மீ (=மேலான) + கீர்த்தி (=புகழ்) + அன் = மீகீர்த்தன் >>> விகிர்தன் = மேலான புகழை உடையவன்

விகிரம்

உடைந்து சிதறுதல், துண்டு

மிகிறம்

மிகு (=பிரி, உடை) + இறை (=சிந்து, சிதறு) + அம் = மிகிறம் >>> விகிரம் = உடைந்து சிதறுதல், உடைந்து சிதறியது, துண்டு

விகிரம்

பறவை

மைகீறம்

மை (=வானம்) + கீறு (=கட) + அம் = மைகீறம் >>> மிகிரம் >>> விகிரம் = வானத்தைக் கடப்பது.

விகுணம்

கெட்டகுணம்

மைகுணம்

மை (=குற்றம்) + குணம் = மைகுணம் >>> மிகுணம் >>> விகுணம் = குற்றமுள்ள குணம்.

விகுணி

குணங்கெட்டவன்

விகுணி

விகுணம் (=கெட்டகுணம்) + இ = விகுணி = குணம் கெட்டவன்

விகுணி

கள்

மைகுணி

மை (=மயக்கம், நீர்) + குணம் (=தன்மை) + இ = மைகுணி >>> மிகுணி >>> விகுணி = மயக்கும் தன்மை உடைய நீர்.

விகுதி

முடிவில் சேர்க்கப்படுவது

வீக்கிறி

வீக்கு (=கட்டு, சேர்) + இறு (=முடி) + இ = வீக்கிறி >>> விகுதி = முடிவில் சேர்க்கப்படுவது.

விகேசம்

தலைவழுக்கை

வீகேசம்

வீ (=இன்மை) + கேசம் (=தலைமயிர்) = வீகேசம் >>> விகேசம் = தலைமயிர் இல்லாதது.

விங்களம்

குறைவு

விகலம்

விகலம் (=குறைவு) >>> விக்களம் >>> விங்களம்

விங்களம்

மாறுபாடு, திரிவு, பகை

மிகலம்

மிகல் (=மாறுபாடு, பகை) + அம் = மிகலம் >>> விக்களம் >>> விங்களம் = மாறுபாடு, திரிவு, பகை

விங்களம்

வஞ்சனை, பொய்

முக்காளம், மிக்களம்

(1). முக்கு (=அடை, மறை) + ஆள் (=செய்) + அம் = முக்காளம் >>> மிங்களம் >>> விங்களம் = மறைத்துச் செய்தல். (2). மிகு (=மாறு) + அளை (=சொல்லு) + அம் = மிக்களம் >>> விங்களம் = சொல் மாறுதல்.

விங்களம்

பின் வாங்குதல்

பிற்காலம்

பிற்காலி (=பின்வாங்கு) + அம் = பிற்காலம் >>> விக்காளம் >>> விங்களம் = பின் வாங்குதல்.

விங்களம்

களிம்பு, கலவை

வீக்களம்

வீக்கு (=கட்டு, சேர்) + அளி (=குழைவு) + அம் = வீக்களம் >>> விங்களம் = குழைவான சேர்மம்.

விங்களி

பகை, வேறுபடு

விங்களி

விங்களம் (=பகை) >>> விங்களி = பகை, முரணு, வேறுபடு

விங்களி

ஏமாற்று

விங்களி

விங்களம் (=வஞ்சனை) >>> விங்களி = வஞ்சி, ஏமாற்று

விங்களி

நிலை கலங்கு

விங்களி

விங்களம் (=களிம்பு) >>> விங்களி = களிம்பு போல நிலைகலங்கு

விங்களி

பிரி, நீக்கு, குறை

விங்களி

விங்களம் (=குறைவு) >>> விங்களி = குறை, நீக்கு, பிரி

விங்களி

பின்வாங்கு

பிற்காலி

பிற்காலி (=பின்வாங்கு) >>> பிக்காலி >>> விங்களி

விச்சம்

தாமரை

பையம்

பை (=எரி) + அம் (=நீர்) = பையம் >>> பிசம் >>> விச்சம் = நீரில் எரிவதைப் போன்ற மலர்.

விச்சா

நோக்கமின்றி, சும்மா

வீழா

வீழ் (=விரும்பு) + ஆ (=எதிர்மறை) = வீழா >>> வீசா >>> விச்சா = விருப்பம் ஏதுமின்றி, சும்மா

விச்சாத்தி

மாணவன்

விச்சாற்றி

விச்சை (=கல்வி) + ஆற்று (=தேடு, நாடு, செய்) + இ = விச்சாற்றி >>> விச்சாத்தி = கல்வியை நாடிச் செய்பவன்.

விச்சித்தி, விச்சிந்தி

இடைமுறிவு, தொடர்பு அறுகை

மையிறி

மையம் (=நடு, இடை) + இறு (=முறி) + இ = மையிறி >>> மிசிதி >>> விச்சித்தி, விச்சிந்தி = இடைமுறிவு, தொடர்பு அறுகை.

விச்சிரமம், விச்சிராமம்

ஓய்வு

முச்சிருவம்

முசி (=தளர்) + இரு (=தங்கு) + அம் = முச்சிருவம் >>> மிச்சிருமம் >>> விச்சிரமம் = தளர்வாகத் தங்குதல்.

விச்சிரமி

ஓய்வெடு

விச்சிரமி

விச்சிரமம் (=ஓய்வு) >>> விச்சிரமி = ஓய்வெடு

விச்சிராணனம்

கொடை

விச்சுரனாணம்

வீசு (=கொடு) + உரன் (=விருப்பம்) + ஆணம் (=பொருள்) = விச்சுரனாணம் >>> விச்சிராணனம் = பொருளை விரும்பிக் கொடுத்தல்.

விச்சிராந்தி

ஓய்வு

முச்சிரத்தி

முசி (=தளர்) + இரு + அத்து (=பொருந்து) + இ = முச்சிரத்தி >>> மிச்சிராந்தி >>> விச்சிராந்தி = தளர்வாகப் பொருந்தி இருத்தல்.

விச்சிராமம்

மலம் கழித்தல்

பீயிறவம்

பீ (=மலம்) + இற (=கழி, நீக்கு) + அம் = பீயிறவம் >>> விசிரமம் >>> விச்சிராமம் = மலம் கழித்தல்.

விச்சிரானம்

பேதிமருந்து

பீயிறாணம்

பீ (=மலம்) + இற (=கழி) + அணை (=உதவி) + அம் (=மருந்து) = பீயிறாணம் >>> விசிரானம் >>> விச்சிரானம் = மலம் கழிக்க உதவுகின்ற மருந்து = பேதி மருந்து

விச்சிரும்பனம்

பூக்கள் மலர்தல்

விச்சிருப்பணம்

வீ (=பூ) + சிரிப்பு (=மலர்ச்சி) + அணம் = விச்சிரிப்பணம் >>> விச்சிரும்பனம் = பூக்களின் மலர்ச்சி.

விச்சிரும்பனம்

கடுங்கோபம்

மீயுருப்பணம்

மீ (=மிக) + உருப்பு (=சினம்) + அணம் = மீயுருப்பணம் >>> விசுரும்பனம் >>> விச்சிரும்பனம் = மிக்க சினம் = கடுங்கோபம்

விச்சிலிட்டம், விச்சிலிச்~டம்

பிரிவுற்றது

மிச்சிலுற்றம்

மிச்சில் (=எஞ்சுபொருள்) + உறு (=அடை) + அம் = மிச்சிலுற்றம் >>> விச்சிலிட்டம் >>> எஞ்சுபொருளாக அடைந்தது.

விச்சிலேடம்

காதலர்களின் பிரிவு

வீயுளேற்றம்

வீ (=காற்று, உயிர்) + உள்ளு (=விரும்பு, காதலி) + எற்று (=வெட்டு, பிரி) + அம் = வீயுளேற்றம் >>> விசுலேட்டம் >>> விச்சிலேடம் = காதலிக்கும் உயிர்களின் பிரிவு.

விச்சின்னம்

இடைமுறிவு

வீயீனம்

வீ (=பிரிவு) + ஈன் (=உண்டாக்கு) + அம் = வீயீனம் >>> விசினம் >>> விச்சின்னம் = பிரிவு உண்டாக்குதல்

விச்சின்னம்

கருக்கலைவு

வீயீனம்

வீ (=அழிவு) + ஈன் (=கருப்பம்) + அம் = வீயீனம் >>> விசினம் >>> விச்சின்னம் = கருப்பம் அழிதல்.

விச்சை

அறிவு, கல்வி, வித்தை

பையை

பை (=ஒளி, விளக்கம்) + ஐ = பையை >>> பிசை >>> விச்சை = விளக்கம் உடையது = கல்வி, அறிவு, வித்தை

விச்சை

தெரு

புழை

புழை (=வழி, தெரு) >>> பிசை >>> விச்சை

விசக்கணன்

பண்டிதன்

விச்சைக்கணன்

விச்சை (=கல்வி) + கண் (=அறிவு) + அன் = விச்சைக்கணன் >>> விசக்கணன் = கல்வி அறிவு உடையவன்

விசகலி

மல்லிகை

வீசகலி

வீசு (=மண, நாறு) + அகல் (=பரவு, மிகு) + இ = வீசகலி >>> விசகலி = மிகுதியாகப் பரந்து மணம் வீசுவது.

விசகலிதம்

சிதைவு, குறைபாடு

பிசகலிதம்

பிசகல் (=குற்றம், குறை) + இதம் = பிசகலிதம் >>> விசகலிதம் = குறைபாடு, சிதைவு.

விசங்கடம்

பெரும் பரப்பு

வியக்கடம்

விய (=பரவு) + கட (=மிகு) + அம் = வியக்கடம் >>> விசங்கடம் = மிகுதியான பரப்பு.

விசசனம்

கொலை

வீயழாணம்

வீ (=பறவை, உயிர்) + அழி (=நீக்கு) + ஆணம் (=உடல்) = வீயழாணம் >>> வீசசாணம் >>> விசசனம் = உடலில் இருந்து உயிரை நீக்குதல்.

விசசனம்

நரகம்

வீயயணம்

வீ (=சாவு, தவறு, அடி) + அயம் (=பள்ளம்) + அணம் = வீயயணம் >>> விசசனம் = இறந்தவர்கள் செய்த தவறுக்காக அடிக்கப்படும் பள்ளம்

விசதம்

வெளிப்படை ஆனது

மையறம்

மை (=இருள், மறைப்பு) + அறு (=இல்லாகு) + அம் = மையறம் >>> மிசதம் >>> விசதம் = மறைப்பு அற்றது.

விசதம்

வெண்மை, தூய்மை

மையறம்

மை (=களங்கம், கருமை) + அறு (=இல்லாகு) + அம் = மையறம் >>> மிசதம் >>> விசதம் = கருமை / களங்கம் அற்றது.

விசதம்

எச்சில்

பீச்சறம்

பீச்சு (=வெளிப்படுத்து) + அறை (=பிளவு, வாய்) + அம் (=நீர்) = பீச்சறம் >>> விசதம் = வெளிப்படுத்திய வாய் நீர்.

விசம்

தாமரைநூல்

விச்சம்

விச்சம் (=தாமரை) >>> விசம் = தாமரையின் நூல்

விசம்

நஞ்சு

வீயம்

(2) வீ (=அழி, கொல்) + அம் (=உணவு) = வீயம் >>> விசம் = கொல்லும் உணவு.

விசம், வீசம்

அளவு

விசை

விசை (=தடவை) + அம் = வீசம் >>> விசம் = அளவு

விசம்

செலவு

வீழம்

விழு (=கழி) + அம் = வீழம் >>> விசம் = கழிந்தது

விசம்

படிக்காசு

வீசம்

வீசு (=மிகு, கொடு) + அம் = வீசம் >>> விசம் = மிகுதியாகக் கொடுக்கப்படும் பணம்.

விசமம்

இடைவிட்டு வருவது

வீயமம்

வீ (=பிரிவு, இடைவெளி) + அமை + அம் = வீயமம் >>> விசமம் = இடைவெளி அமைந்தது.

விசமம்

சமமின்மை

வீசமம்

வீ (=இன்மை) + சமம் = வீசமம் >>> விசமம் = சமமின்மை

விசமம்

தீங்கு, கேடு

வீயமம்

வீ (=அழிவு, கேடு) + அமை (=பொருந்து) + அம் = வீயமம் >>> விசமம் = அழிவு / கேடு பொருந்தியது.