சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
வாசனம், வாசனை |
மணம் |
வாசம் |
வாசம் (=மணம்) + அணம் = வாசணம் >>> வாசனம் >>> வாசனை |
வாசனம் |
பேச்சு |
வசனம் |
வசனம் (=பேச்சு) >>> வாசனம் |
வாசனம் |
ஆடை |
வசனம் |
வசனம் (=ஆடை) >>> வாசனம் |
வாசனம், வாசனை |
அனுபவ அறிவு |
வாயணம் |
வாய் (=நிகழ், பெறு) + அணம் = வாயணம் >>> வாசனம் = நிகழ்வதில் இருந்து பெறப்படுவது. |
வாசனி |
பந்தல் |
மாயணி |
மாய் (=மறை, மூடு) + அண் (=மேலிடம்) + இ = மாயணி >>> வாசனி = மேலிடத்தை மூடி மறைத்திருப்பது. |
வாசாங்கியம் |
மிளகு |
வாசாக்கியம் |
வாசம் (=மணம்) + அகை (=எரி) + இயை (=பொருந்து) + அம் (=உணவு) = வாசாக்கியம் >>> வாசாங்கியம் = மணமும் எரிச்சலும் பொருந்திய உணவுப் பொருள். |
வாசாகாரம் |
வீட்டின் உள்பகுதி |
வாசாகாரம் |
வாசம் (=வீடு) + அகம் (=உள்ளே, இடம்) + ஆர் (=தங்கு) + அம் = வாசாகாரம் = வீட்டின் உள்ளே தங்குமிடம். |
வாசாடம் |
பேச்சுத் திறமை |
வாயடம் |
வாய் (=மொழி, பேச்சு) + அடு (=வெல்) + அம் = வாயடம் >>> வாசாடம் = பேச்சில் வெல்லுதல். |
வாசாலம், வாசாலகம் |
பேச்சுத் திறமை |
வாயாளம் |
வாய் (=மொழி, பேச்சு) + ஆள் + அம் = வாயாளம் >>> வாசாலம் = பேச்சை ஆளுமை செய்தல். |
வாசி |
வேறுபாடு, விகிதம் |
வாசி |
வசி (=பிள, பிரி) >>> வாசி = பிரிவு, வேறுபாடு, விகிதம் |
வாசி |
இயல்பு |
பாழி |
பாழி (=தன்மை) >>> வாசி = இயல்பு, தகுதி |
வாசி |
பலன் |
பயம் |
பயம் (=பலன்) + இ = பாயி >>> வாசி |
வாசி |
படி, சொல், கல் |
வாயி |
வாய் (=மொழி, சொல்) + இ = வாயி >>> வாசி = சொல், படி, கல் |
வாசி |
இசை |
பாயி |
பாயம் (=இசை) + இ = பாயி >>> வாசி = இசை, மீட்டு |
வாசி |
இசைப்பாட்டு, இசைக்குழல் |
பாயி |
பாயம் (=இசை) + இ = பாயி >>> வாசி = இசைப்பாட்டு, இசைக்கும் குழல். |
வாசி |
மண |
பாயி |
பாய் (=பரவு, மண) + இ = பாயி >>> வாசி |
வாசி |
குதிரை |
பாயி |
பாய் (=விரை, ஓடு) + இ = பாயி >>> வாசி = விரைந்து ஓடுவது |
வாசி |
பறவை |
பாயி |
பாய் (=பரவு, பற) + இ = பாயி >>> வாசி = பறவை |
வாசி |
மூச்சு |
வாழி |
வாழ் (=உயிர்த்திரு) + இ = வாழி >>> வாசி = உயிர்ப்பு, மூச்சு |
வாசி |
அம்பு |
வாசம் |
வாசம் (=அம்பு) >>> வாசி |
வாசி |
நியாயம் |
வழி |
வழி (=ஒழுங்கு, முறை) >>> வாசி = முறை, நியாயம் |
வாசி, வாசிகை |
வளைவு |
வாசி |
வசி (=வளை) >>> வாசி >>> வாசிகை = வளைவு |
வாசி |
வீடு |
வாசி |
வசி (=தங்கு) >>> வாசி = தங்குமிடம் = வீடு |
வாசிகம் |
நடப்புச் செய்தி |
வாயிங்கம் |
வாய் (=நிகழ், நேர்) + இங்கம் (=அறிவு) = வாயிங்கம் >>> வாசிகம் = நிகழ்ந்ததைப் பற்றிய அறிவு. |
வாசிகை |
மலர்மாலை |
வயிகை |
வயம் (=கட்டு) + இகம் (=நறுமணம், பொருள்) + ஐ = வயிகை >>> வாசிகை = கட்டப்பட்ட நறுமணப் பொருள் |
வாசிதம் |
பல்வகை ஒலிகள் |
வாயிறம் |
வாய் (=ஒலி, குரல்) + இறை (=சிதறு) + அம் = வாயிறம் >>> வாசிதம் = சிதறுபட்ட குரல்கள் |
வாசிதம் |
அறிவு |
மாசிறம் |
மாசு (=அறியாமை) + இறு (=அழி) + அம் = மாசிறம் >>> வாசிதம் = அறியாமையை அழிப்பது |
வாசிதம் |
குடியேற்றம் |
வாயிறம் |
வாய் (=நிகழ்) + இறு (=தங்கு) + அம் = வாயிறம் >>> வாசிதம் = தங்குதல் நிகழ்கை. |
வாசிரம் |
நாற்சந்தி |
வாயிரம் |
வாய் (=வழி, இடம்) + இரி (=நீங்கு, பிரி) + அம் = வாயிரம் >>> வாசிரம் = வழிகள் பிரியும் இடம். |
வாசிரம் |
வீடு |
வசிரம் |
வசி (=தங்கு) + இரு + அம் = வசிரம் >>> வாசிரம் = தங்கி இருக்கும் இடம் = வீடு |
வாசிரம் |
பகல் |
பய்யிரம் |
பை (=ஒளி) + இரு + அம் = பையிரம் >>> பய்யிரம் >>> வச்சிரம் >>> வாசிரம் = ஒளி இருக்கும் பொழுது = பகல். |
வாசிரி |
இறுமாப்பு |
வாயிறி |
வாய் (=நிகழ், நட) + இறு (=இறுக்கம்) + இ = வாயிறி >>> வாசிரி = இறுக்கமாக நடத்தல். |
வாசிரி |
பெருமதிப்பு |
மாயிரி |
மா + இருமை (=பெருமை) + இ = மாயிரி >>> வாசிரி = பெருமதிப்பு |
வாசினி |
பெண் குதிரை |
வாசினி |
வாசி (=குதிரை) + இனி = வாசினி = பெண் குதிரை |
வாசினை |
படித்தல், இசைத்தல் |
வாசினை |
வாசி (=படி, இசை) + னை = வாசினை = படித்தல், இசைத்தல் |
வாசீபு |
கட்டுப்பாடு, ஒழுக்கம் |
வசிபு |
வசி (=வளை, கட்டுப்படு) + பு = வசிபு >>> வாசீபு = கட்டுப்பாடு, ஒழுக்கம். |
வாசு |
அரசன், கடவுள் |
வசு |
வசி (=வளை, கட்டுப்படுத்து, ஆள்) + உ = வசு >>> வாசு = ஆள்பவன் = அரசன், இறைவன். |
வாசுகி |
பாம்பு |
மய்யுகி |
மை (=நஞ்சு) + உகு (=உமிழ்) + இ = மய்யுகி >>> வச்சுகி >>> வாசுகி = நஞ்சினை உமிழ்வது. |
வாசுரை |
உலகம் |
வசிரை |
வசி (=வீடு, உறைவிடம்) + இருமை (=பெருமை) + ஐ = வசிரை >>> வாசுரை = பெரிய உறைவிடம் = உலகம் |
வாசுரை |
இரவு |
பய்யிறை |
பை (=ஒளி) + இறு (=அழி, முடி) + ஐ = பய்யிறை >>> வச்சிரை >>> வாசுரை = ஒளியின் முடிவு. |
வாசுரை |
இளம்பெண் |
பாசுறை |
பசுமை (=அழகு, இளமை) + உறு (=மிகுதி) + ஐ = பாசுறை >>> வாசுரை = அழகும் இளமையும் மிக்கவள். |
வாசுரை |
பெண்யானை |
மாசூரை |
மா (=யானை) + சூர் (=அச்சம்) + ஐ = மாசூரை >>> வாசுரை = அச்சம் உடைய யானை = பெண் யானை |
வாஞ்சை |
விருப்பம் |
பாயம் |
பாயம் (=விருப்பம்) + ஐ = பாயை >>> வாசை >>> வாஞ்சை |
வாஞ்சனம், வாஞ்சனை |
விருப்பம் |
பாயம் |
பாயம் (=விருப்பம்) + அணம் = பாயணம் >>> வாசனம் >>> வாஞ்சனம் >>> வாஞ்சனை |
வாஞ்சி |
விரும்பு |
வாஞ்சை |
வாஞ்சை (=விருப்பம்) >>> வாஞ்சி = விரும்பு |
வாஞ்சிதம், வாஞ்சினம் |
விரும்பப் பட்டது |
பாயிறம் |
பாயம் (=விருப்பம்) + இறு (=தங்கு) + அம் = பாயிறம் >>> வாசிதம் >>> வாஞ்சிதம் = விருப்பமாகத் தங்கியது |
வாஞ்சினி |
பேராசை கொண்டவள் |
வாஞ்சினி |
வாஞ்சை (=விருப்பம்) + இனம் (=கூட்டம், மிகுதி) + இ = வாஞ்சினி = மிக்க விருப்பம் உடையவள் |
வாட்டம், வாடி, வாட்டியம் |
தோட்டம் |
பாட்டம் |
பாட்டம் (=வயல்) >>> வாட்டம் = தோட்டம் |
வாட்டம், வாடை |
தெரு, வழி |
பட்டம் |
பட்டம் (=வழி) >>> வாட்டம் = வழி, தெரு |
வாட்டி |
தடவை |
பாட்டம் |
பாட்டம் (=முறை, தடவை) + இ = பாட்டி >>> வாட்டி |
வாட்டியம் |
வீடு |
பட்டம் |
பட்டம் (=வீடு) + இயம் = பாட்டியம் >>> வாட்டியம் |
வாடகை, வாடை |
விட்டுவிட்டுச் செலுத்துவது |
பாட்டகை |
பாட்டம் (=குத்தகை) + அகை (=விட்டுவிட்டுச் செலுத்து) = பாட்டகை >>> வாடகை = விட்டுவிட்டுச் செலுத்தப்படும் குத்தகைப் பணம். |
வாடகை |
சுற்று வட்டாரம் |
வட்டகை |
வட்டம் + அகம் (=இடம், நிலம்) + ஐ = வட்டகை >>> வாடகை = வட்டமான நிலப்பரப்பு. |
வாடகை |
தெரு |
பாறகை |
பாறு (=கட, பிரி) + அகம் (=நிலம்) + ஐ = பாறகை >>> வாடகை = கடப்பதற்கான நிலப் பிரிவு |
வாடகை |
வயல், தோட்டம் |
பாறகை |
பாறு (=கீறு, உழு) + அகம் (=நிலம்) + ஐ = பாறகை >>> வாடகை = உழப்படும் நிலம். |
வாடகை |
மண்சுவர் |
மாற்றகை |
மாற்று (=நிலம், மண், மறை) + அகை (=எழுப்பு) = மாற்றகை = வாட்டகை >>> வாடகை = மண்ணால் எழுப்பப்படும் மறைப்பு. |
வாடகை |
தொழுவம் |
பட்டி |
பட்டி (=தொழுவம்) + அகம் (=இடம்) + ஐ = பட்டகை >>> வாடகை |
வாடி |
சுவர் |
மறி |
மறை (=தடு) + இ = மறி >>> வாடி = தடுப்பது. |
வாடி |
முற்றம், வெட்டவெளி |
மன்று |
மன்று (=வெளி) + இ = மன்றி >>> மற்றி >>> வட்டி >>> வாடி = வெட்டவெளி = முற்றம். |
வாடி, வாடிகை |
வீடு |
பட்டம் |
பட்டம் (=வீடு) + இ = பட்டி >>> வாடி |
வாடி |
உலர்ப்பிடம் |
வாட்டி |
வாட்டு (=உலர்த்து) + இ = வாட்டி >>> வாடி = உலர்த்தும் இடம் |
வாடி, வாடை |
சிற்றூர் |
பட்டி |
பட்டி (=சிற்றூர்) >>> வாடி |
வாடி |
தொழுவம் |
பட்டி |
பட்டி (=தொழுவம்) >>> வாடி |
வாடி |
விற்குமிடம் |
மாறி |
மாறு (=விற்பனைசெய்) + இ = மாறி >>> வாடி = விற்குமிடம் |
வாடை |
வரிசை |
வட்டை |
வட்டை (=வரி) >>> வாடை = வரிசை |
வாடை |
மருந்து |
மாற்று |
மாற்று (=மருந்து) + ஐ = மாற்றை >>> வாட்டை >>> வாடை |
வாணகம், வாணம், பாணம்,வாணி |
அம்பு |
பாணகம் |
பணி (=ஏவு) + அஃகம் (=கூர்மை) = பாணகம் >>> வாணகம் = ஏவப்படும் கூரிய பொருள். |
வாணகம், வாணம் |
வான வேடிக்கை |
வானகம் |
வான் + அகை (=விட்டுவிட்டுச் செலுத்து, ஒளிர்) + அம் = வானகம் >>> வாணகம் = வானத்தில் விட்டுவிட்டுச் செலுத்தப்பட்டு ஒளிர்வது |
வாணகம் |
பசுவின் மடி |
பானாகம் |
பால் (=அமிழ்தம், இடம்) + நாகு (=பசு, கன்று) + அம் (=உணவு) = பானாகம் >>> வாணகம் = கன்று பசுவிடம் பால் உண்ணுமிடம். |
வாணகம் |
புல்லாங்குழல் |
பாணகம் |
பணை (=மூங்கில், இசைக்கருவி) + அகை (=அறு) + அம் = பாணகம் >>> வாணகம் = மூங்கிலை அறுத்துச்செய்த இசைக்கருவி |
வாணகம் |
தனிமை |
மாணகம் |
மாண் (=நிலை, தன்மை) + அகை (=அறு, பிரி, தனி) + அம் = மாணகம் >>> வாணகம் = தனித்திருக்கும் நிலை. |
வாணம் |
தீ |
வன்னி |
வன்னி (=தீ) + அம் = வன்னம் >>> வாணம் |
வாணலி |
தீயில் வாட்ட உதவும் சட்டி |
வன்னலி |
வன்னி (=நெருப்பு, தீ) + அலை (=வருத்து, வாட்டு) + இ = வன்னலி >>> வாணலி = நெருப்பில் / தீயில் வாட்ட உதவுவது |
வாணி |
சொல் |
பன்னி |
பன்னு (=பேசு) + இ = பன்னி >>> பணி >>>> வாணி = பேச்சு, சொல் |
வாணி |
கல்வி |
மாண் |
மாண் (=கல்வி) + இ = மாணி >>> வாணி |
வாணி |
மிடறு |
பணீ |
பண் (=ஒலி) + ஈ (=கொடு, வழங்கு, பிறப்பி) = பணீ >>> வாணி = ஒலியைப் பிறப்பிக்கும் இடம் = மிடறு |
வாணி |
நீர் |
பனி |
பனி (=நீர்) >>> வாணி |
வாணிகம், வாணிபம் |
வியாபாரம் |
பண்ணிகம் |
(2). பண்ணு (=விற்பனைசெய்) + இகம் (=பொருள்) = பண்ணிகம் >>> வணிகம், வாணிகம் = பொருளை விற்பனை செய்தல். |
வாணிகன் |
வியாபாரி |
வாணிகன் |
வாணிகம் (=வியாபாரம்) + அன் >>> வாணிகன் = வியாபாரி |
வாணிகன் |
தராசு |
மானிகன் |
மானம் (=சமம், அளவுகருவி) + இகம் (=பொருள்) + அன் = மானிகன் >>> வாணிகன் = பொருட்களைச் சமமாக அளக்க உதவும் கருவி |
வாணிச்சியம் |
வியாபாரம் |
பண்ணிசீயம் |
பண்ணு (=விற்பனைசெய்) + இசை (=இலாபம்) + இயம் = பண்ணிசீயம் >>> வாணிச்சியம் = இலாபத்தில் விற்பனை செய்தல் |
வாணிதம் |
கள் |
மானிறம் |
மான் (=மயங்கு) + இறு (=வடி) + அம் (=நீர், உணவு) = மானிறம் >>> வாணிதம் = மயக்கத்தைத் தரும் வடிகட்டிய நீருணவு. |
வாணியம் |
விற்பனை |
பண்ணியம் |
பண்ணு (=விற்பனைசெய்) + இயம் = பண்ணியம் >>> வாணியம் |
வாணினி, வாணிதி |
நடன மங்கை |
பாணினி, பாணிதி |
பாணி (=நடனம்) + இனி / தி = பாணினி / பாணிதி >>> வாணினி / வாணிதி = நடனமாடும் பெண். |
வாணிதி |
வெட்கமற்ற பெண் |
மானிறி |
மானம் (=வெட்கம்) + இறு (=அழி, கெடு) + இ = மானிறி >>> வாணிதி = வெட்கம் அழிந்தவள் / கெட்டவள் |
வாணிதி |
அறிவு மிக்கவள் |
பாணிறி |
பாண் (=பாட்டு, அறிவு) + நிறை + இ = பாணிறி >>> வாணிதி = அறிவு மிக்கவள். |
வாத்தியம் |
இன்னிசைக் கருவி |
பாத்தியம் |
பதம் (=இனிமை) + இயம் (=இசைக்கருவி) = பாத்தியம் >>> வாத்தியம் = இன்னிசைக் கருவி. |
வாத்தியார் |
ஆசிரியர் |
மாத்தீயார் |
மதி (=அறிவு) + ஈ (=கொடு, வழங்கு) + ஆர் = மாத்தீயார் >>> வாத்தியார் = அறிவினைக் கொடுப்பவர். |
வாத்தியார் |
புரோகிதர் |
மாத்தீயார் |
மா (=பெருமை) + தீ + ஆர் = மாத்தீயார் >>> வாத்தியார் = தீயினைப் பெருக்குபவர். |
வாத்து |
கிளை |
பாறு |
பாறு (=கிளை) >>> வாத்து |
வாத்சல்யம் |
மிக்க அன்புடைமை |
மாத்தளியம் |
மதம் (=மிகுதி) + அளி (=அன்பு) + இயம் = மாத்தளியம் >>> வாத்சல்யம் = மிகுதியான அன்புடைமை |
வாதகம் |
இடையூறு |
மாறகம் |
மறு (=தடு) + அகம் = மாறகம் >>> வாதகம் = தடுப்பது |
வாதப்பிரமி |
மான் |
வாதவிரைவி |
வாதம் (=காற்று) + விரைவி = வாதவிரைவி >>> வாதப்பிரமி = காற்றைப் போல விரையக் கூடியது. |
வாதம் |
வில்வம் |
பந்தம் |
பந்து + அம் (=உணவு) = பந்தம் >>> வாதம் = பந்து போன்ற உணவு. |
வாதனம் |
சீலை |
மாற்றணம் |
மறை + அணி + அம் = மாற்றணம் >>> வாத்தனம் >>> வாதனம் = மறைக்க உதவும் அணி. |
வாதனம், வாதனை |
அனுபவ அறிவு |
மாந்தணம் |
மாந்து (=உண், அனுபவி) + அணை (=அடை) + அம் = மாந்தணம் >>> வாதனம் = அனுபவத்தால் அடையப் பெறுவது. |
வாதனம், வாதனை |
துன்பம் |
வாதணம் |
வதை (=துன்புறுத்து) + அணம் = வாதணம் >>> வாதனம் >>> வாதனை = துன்பம். |
வாதாசனம் |
பாம்பு |
வயிறாயணம் |
வயிறு + அயணம் (=பயணம்) = வயிறாயணம் >>> வய்றாசனம் >>> வாதாசனம் = வயிற்றால் பயணம் செல்வது. |
வாதாயனம் |
சன்னல் |
வாதாயணம் |
வாதம் (=காற்று) + ஆய் (=சிறுமை, துளை) + அணை (=அடை) + அம் = வாதாயணம் >>> வாதாயனம் = காற்று அடைவதற்காக சிறிய துளைகளைக் கொண்டது. |
வாதாரி |
வேப்பமரம் |
பைதரி |
பைது (=பசுமை, குளிர்ச்சி) + அரி (=அறு, இலை) = பைதரி >>> வாதாரி = குளிர்ச்சி தருகின்றதும் அறுப்பதைப் போன்றதுமான பச்சிலைகளைக் கொண்டது. |
வாதி |
தடு |
மறி |
மறி (=தடு) >>> வாதி |
வாதி |
துன்புறுத்து |
பாறீ |
பாறு (=கேடு, துன்பம்) + ஈ (=கொடு) = பாறீ >>> வாதி = துன்பத்தைக் கொடு = துன்புறுத்து. |
வாதி |
வாதாடு |
மாற்றீ |
மாற்று (=சொல்) + ஈ (=கொடு, வழங்கு) = மாற்றீ >>> வாத்தி >>> வாதி = மாற்றிமாற்றிச் சொல்லை வழங்குதல். |
வாதி |
பேசுபவன் |
வாதி |
வாதம் (=சொல்) + இ = வாதி = சொல்பவன் |
வாதிப்பு |
துன்பம் |
வாதிப்பு |
வாதி (=துன்புறுத்து) + பு = வாதிப்பு = துன்பம் |
வாது |
அறு |
பாறு |
பாறு (=கிழி, அறு) >>> வாது |
வாது |
மரக்கிளை |
பாறு |
பாறு (=கிளை) >>> வாது |
வாது |
சொல் |
மாற்று |
மாற்று (=பேச்சு) >>> மாத்து >>> வாது |
வாதுவன் |
பாகன் |
மாதூவன் |
மா (=விலங்கு) + தூவு (=ஓட்டு, செலுத்து) + அன் = மாதூவன் >>> வாதுவன் = விலங்கைச் செலுத்துபவன். |
வாதூகம் |
செம்பு |
மாறுகம் |
மறம் (=சிவப்பு) + உகு (=நெகிழ், உருகு) + அம் = மாறுகம் >>> வாதூகம் = சிவப்பு நிறத்தில் உருகக் கூடியது. |
வாதை |
நோய் |
வாதை |
வதை (=துன்புறுத்து) >>> வாதை = துன்பம் கொடுப்பது |
வாந்தவன் |
நண்பன் |
பற்றவன் |
பற்று (=அன்பு) + அவா (=விருப்பம்) + அன் = பற்றவன் >>> வத்தவன் >>> வாந்தவன் = அன்பும் விருப்பமும் உடையவன். |
வாந்தி |
வாந்தி எடுத்தல் |
பறி |
பறி (=உடம்பு, ஒலியுடன் வெளிப்படு, முன்செல், பாரம்) >>> வதி >>> வாந்தி = உடலில் இருந்து ஒலியுடன் வெளிப்பட்டு முன்செல்லக் கூடிய பாரம். |
வாபம் |
பறிக்கை |
வவ்வம் |
வவ்வு (=பறி) + அம் = வவ்வம் >>> வப்பம் >>> வாபம் = பறித்தல். |
வாபம் |
நெய்கை |
பாவு |
பாவு (=நெசவு) + அம் = பாவம் >>> வாபம் |
வாபம் |
விதை |
பாவம் |
பாவு (=நாற்றுநடு, விதை) + அம் = பாவம் >>> வாபம் = விதை |
வாவி, வாபி |
நீர்நிலை, பள்ளம் |
வவ்வி |
வவ்வு (=பறி, தோண்டு) + இ = வவ்வி >>> வாவி >>> வாபி = தோண்டப்பட்டது = பள்ளம், நீர்நிலை |
வாபீசு, வாபசு |
திருப்பிக் கொடுத்தல் |
வம்பீயு |
வம்பு (=எதிர்ப்பு, சமம்) + ஈ (=கொடு) + உ = வம்பீயு >>> வப்பீசு >>> வாபீசு >>> வாபசு = கொடுத்ததைச் சமமாக எதிர்த்துக் கொடுத்தல் |
பாமம், வாமம் |
ஒளி, அழகு |
பைமம் |
பை (=ஒளி, அழகு) + மம் = பய்மம் >>> பாமம் >>> வாமம் |
வாமம் |
இடது பக்கம் |
பழிமம் |
பழி (=நிந்தி, விலக்கு) + மம் = பழிமம் >>> வயிமம் >>> வாமம் = விலக்கப்பட்ட பக்கம். |
வாமம் |
நேர்மை இன்மை |
வம்பம் |
வம்பு (=வஞ்சனை, பொய்) + அம் = வம்பம் >>> வம்மம் >>> வாமம் = ஏமாற்றுகை, நேர்மையின்மை |
வாமம் |
எதிரிடை |
வம்பம் |
வம்பு (=எதிர்ப்பு) + அம் = வம்பம் >>> வம்மம் >>> வாமம் |
வாமம் |
தீமை |
பாவம் |
பாவம் (=தீமை) >>> வாமம் |
வாமம் |
பாம்பு |
பாம்பு |
பாம்பு + அம் = பாம்பம் >>> வாம்மம் >>> வாமம் |
வாமம் |
முலை |
பயவம் |
பயம் (=பால்) + அம் (=உண்ணு, ஊட்டு) = பயவம் >>> பாமம் >>> வாமம் = பால் ஊட்டுவது. |
வாமம் |
செல்வம் |
மாவம் |
மா (=செல்வம்) + அம் = மாவம் >>> வாமம் |
வாமனம், வாமம் |
குட்டையான உடலமைப்பு |
பம்மாணம் |
பம்மு (=தாழ், குன்று) + ஆணம் (=உடல்) = பம்மாணம் >>> வாமனம் = குன்றிய உடலமைப்பு. |
வாமம் |
தொடை |
பம்பம் |
பம்பு (=செறி, பரவு, நீளு) + அம் = பம்பம் >>> வம்மம் >>> வாமம் = செறிவுடைய நீண்ட உறுப்பு. |
வாமனம் |
யானை |
மாவாணம் |
மா (=பெருமை, கருமை) + ஆணம் (=உடல்) = மாவாணம் >>> வாமனம் = பெரிய கரிய உடலைக் கொண்டது |
வாமை, வாமா |
இளம்பெண் |
வாமை |
வாமம் (=ஒளி, அழகு) + ஐ = வாமை = ஒளியும் அழகும் உடையவள் = இளம்பெண். |
வாயிதா, வாய்தா |
தவணை, காலக்கெடு |
வாயிறா |
வாய் (=வாய்ப்பு) + இறு (=கட்டு, கொடு) + ஆ = வாயிறா >>> வாயிதா >>> வாய்தா = கட்டுவதற்காக கொடுக்கப்படும் வாய்ப்பு |
வாயதம் |
காக்கை |
வாயறம் |
வாய் (=நிகழ், நட) + அறை (=ஒலி, கூறு) + அம் = வாயறம் >>> வாயதம் = நிகழ இருப்பதை ஒலித்துக் கூறுவது. |
வாயம் |
நீர் |
பயம் |
பயம் (=நீர்) >>> வாயம் |
வாயம் |
பெய்தல் |
மாழம் |
மழை (=பொழி, பெய்) + அம் = மாழம் >>> வாயம் = பெய்கை |
வாயன் |
தூதன் |
வாயன் |
வாய் (=செய்தி) + அன் = வாயன் = செய்தியாளன் |
வாயன் |
இடையன் |
பாயன் |
பயம் (=பால்) + அன் = பாயன் >>> வாயன் = பால்காரன் |
வாயனம் |
இனிப்பான உணவு |
பாயன்னம் |
பயம் (=இனிமை) + அன்னம் (=உணவு) = பாயன்னம் >>> வாயனம் = இனிப்பான உணவுப் பொருள். |
வாயு |
காற்று |
பாயு |
பாய் (=விரை, பரவு, குத்து, தாக்கு) + உ = பாயு >>> வாயு = விரையும் பரவும் குத்தும் தாக்கும் இயல்புகளைக் கொண்டது |
வாயுதாரு |
மூங்கில் |
வாயுந்தாரு |
வாய் (=ஓட்டை) + உந்து (=உயர்) + ஆர் (=தண்டு) + உ = வாயுந்தாரு >>> வாயுதாரு = ஓட்டையுடைய உயரமான தண்டினைக் கொண்ட மரம் = மூங்கில். |
வாயுதாரு |
மேகம் |
மாழுதாரு |
மழை + உதாரம் (=கொடை) + உ = மாழுதாரு >>> வாயுதாரு = மழையைக் கொடுப்பது = மேகம். |
தொடர்ந்து வாசிக்கிறேன். அயரா உழைப்பிற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :))
நீக்கு