செவ்வாய், 13 அக்டோபர், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 51

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றிய முறையும்

வல்லியம்

கொடி

வல்லியம்

வல (=சுற்று, படர்) + இய (=இயங்கு) + அம் = வல்லியம் = சுற்றிப் படர்ந்து இயங்குவது.

வல்லியம்

மஞ்சள்

வாலீயம்

வால் (=ஒளி, அழகு) + ஈ (=தா) + அம் = வாலீயம் >>> வல்லியம் = ஒளியும் அழகும் தருவது.

வல்லியம்

இடையர் சேரி

பாலீயம்

பால் + ஈ (=வழங்கு) + அம் = பாலீயம் >>> வல்லியம் = பால் வழங்கப்படும் இடம் = இடையர் சேரி.

வல்லீகம்

பெருங்காயம்

மல்லிகம்

மல் (=நறுமணம்) + இகு (=கரைத்து விடு) + அம் (=உணவு) = மல்லிகம் >>> வல்லீகம் = நறுமணத்திற்காக உணவில் கரைத்து விடப்படுவது.

வல்லுரம்

காடு

வல்லுறம்

வல் (=வன்மை) + உறை (=உறைவிடம்) + அம் = வல்லுறம் >>> வல்லுரம் = வன்மை உடைய உறைவிடம் = காடு. ஒ.நோ: வன்மை + அம் = வனம் = வன்மை உடையது = காடு.

வல்லுரம்

மணல்

வாலுரம்

வால் (=வெண்மை) + உரை (=பொடி) + அம் = வாலுரம் >>> வல்லுரம் = வெண்ணிறம் கொண்ட துகள்.

வல்லுரம்

புல்வெளி, வயல்

வள்ளுறம்

வளம் (=பசுமை, செழிப்பு) + உறை (=தங்கு, இடம்) + அம் = வள்ளுறம் >>> வல்லுரம் = பசுமை / செழிப்பு தங்கிய இடம்.

வல்லுரம்

பூங்கொத்து

பல்லுறம்

பல் + உறை (=மலர்) + அம் = பல்லுறம் >>> வல்லுரம் = பல மலர்களைக் கொண்டது.

வல்லுரம், வள்ளுரம்

பச்சை மாமிசம்

வள்ளூறம்

வளம் (=பசுமை) + ஊறு (=தசை) + அம் = வள்ளூறம் >>> வள்ளுரம் >>> வல்லுரம் = பசுமையான தசை.

வல்லுரம்

தனிமை

பாளுறம்

பாளம் (=துண்டு) + உறை (=தங்கு) + அம் = பாளுறம் >>> வல்லுரம் = துண்டாகத் தங்கிய நிலை.

வல்லுவம்

வெற்றிலை

பல்லுவம்

பலம் (=இலை) + உவ (=மகிழ்) + அம் (=உணவு) = பல்லுவம் >>> வல்லுவம் = மகிழ்ச்சிக்காக உண்ணப்படும் இலை.

வல்லூகம்

கரடி, கருங்குரங்கு

மாலிகம்

மால் (=கருமை) + இகம் (=உடல்) = மாலிகம் >>> வல்லுகம் = கருநிற உடலைக் கொண்டது = கரடி, கருங்குரங்கு

வல்லூரம்

பாழ்நிலம், வன்மை மிக்க நிலம்

மாளுறம், வல்லுறம்

(1). மாள் (=கெடு, வீணாகு) + உறை (=இடம்) + அம் = மாளுறம் >>> வல்லூரம் = வீணாகிய இடம். (2). வல் (=வன்மை) + உறை (=இடம்) + அம் = வல்லுறம் >>> வல்லூரம் = வன்மையான இடம்.

வலக்காரம்

தந்திரம், பொய்

மலக்காரம்

மலக்கு (=மயக்கம், ஏமாற்றம்) + ஆர் (=பொருந்து) + அம் = மலக்காரம் >>> வலக்காரம் = ஏமாற்றம் பொருந்தியது = தந்திரம், பொய்.

வலங்கம்

குடும்பம்

வலாகம்

வல (=இணை, சேர்) + அகம் (=தான், வீடு) = வலாகம் >>> வலங்கம் = தனது வீட்டுடன் இணைந்தவர்கள்.

வலதி

அழகி

வாலதி

வால் (=அழகு) + அதி (=மிகுதி) = வாலதி >>> வலதி = மிகுந்த அழகுடையவள்

வலதி

திறமைசாலி

வலதி

வலம் (=திறமை) + அதி (=மிகுதி) = வலதி = மிக்க திறமையுடையவள்

வலம்பம்

நேர்கோடு

வளவ்வம்

வளை (=வளைவு) + அவி (=நீக்கு) + அம் = வளவ்வம் >>> வலம்பம் = வளைவு நீக்கப்பட்டது = நேர்கோடு.

வலம்பை

கழி, தண்டு

வலம்பை

வலம்பம் (=நேர்கோடு) + ஐ = வலம்பை = நேரானது = கழி, தண்டு

வலயம்

வட்டம், வட்டமானவை, வட்டப் பகுதி

வளையம்

வளையம் (=வட்டம்) >>> வலயம் = வட்டம்., வட்டமாக இருக்கும் சக்கரம், வளையல் முதலிய பொருட்கள் மற்றும் வட்டமாகச் சூழ்ந்திருக்கும் பகுதி.

வலயம்

கடல்

மாலயம்

மால் (=பெருமை) + அயம் (=நீர், பள்ளம்) = மாலயம் >>> வலயம் = பெரிய நீருடைய பள்ளம் = கடல்.

வலயம்

வட்டக் குளம்

வலயம்

வலம் (=வட்டம்) + அயம் (=குளம்) = வலயம் = வட்டக் குளம்.

வலயம்

தோட்டம்

பள்ளாயம்

பள்ளம் + ஆயம் (=வருவாய், வரி) = பள்ளாயம் >>> வலயம் = வருவாயையும் அரசுக்கு வரியையும் தரும் பள்ளம்.

வலயம்

பாத்தி

மாலயம்

மால் (=வரம்பு) + அயம் (=சேறு, இடம்) = மாலயம் >>> வலயம் = வரம்புகளைக் கொண்ட சேறுமிக்க இடம்.

வலயம்

எல்லை

மாலயம்

மால் (=எல்லை) + அயம் (=இடம்) = மாலயம் >>> வலயம் = இடத்தின் எல்லைக் கோடு.

வலவை

வெட்கமில்லாத ஆண் / பெண்

வளவை

வளை (=நாணு) + அவி (=நீங்கு) + ஐ = வளவை >>> வலவை = நாணம் நீங்கியவர் = வெட்கமற்றவர்.

வலாகம், வலாகு, வலாகை

கொக்கு

வாலாகம்

வால் (=வெண்மை) + ஆகம் (=உடல்) = வாலாகம் >>> வலாகம் = வெண்ணிற உடலைக் கொண்டது.

வலாகம்

நீர்

வாலாக்கம்

வால் (=தூய்மை) + ஆக்கு + அம் = வாலாக்கம் >>> வலாகம் = தூய்மை ஆக்குவது.

வலாசகம்

தவளை

வலாயகம்

வல (=ஒலி) + அயம் (=நீர், சேறு) + அகம் (=உள்) = வலாயகம் >>> வலாசகம் = நீர் / சேற்றுக்குள் இருந்து ஒலி எழுப்புவது.

வலிசம், வளிசம்

தூண்டில்

வலியம்

வலி (=இழு, வளை, இரும்பு) + அம் (=நீர்) = வலியம் >>> வலிசம் = நீரில் இழுக்கப்படும் வளைவான இரும்பினைக் கொண்டது.

வலிதம்

சுற்றுப்புறம், சுற்றுச்சூழல்

வலிறம்

வலம் (=வட்டம், சுற்று) + இறை (=தங்கு) + அம் = வலிறம் >>> வலிதம் = சுற்றிலும் தங்கி இருப்பது.

வலிதம்

நடுக்கம், வலிப்பு

வலுறம்

வலி (=இழு, அசை) + உறு + அம் = வலுறம் >>> வலிதம் = இழுப்பு / அசைவு உறுதல்

வலீமுகம்

குரங்கு

பலிமுகம்

பலிமுகம் (=குரங்கு) >>> வலீமுகம்

வலூகம்

தாமரைத் தண்டு

வலுகம்

வலி (=ஆழ், தண்டு) + உகை (=பதி) + அம் (=நீர், உணவு) = வலுகம் >>> வலூகம் = நீருக்குள் ஆழ்ந்து பதிந்துள்ள தண்டு உணவு.

வள்ளியம்

மிளகு

பாலீயம்

பாலை (=வெப்பம், எரிச்சல்) + ஈ (=தா) + அம் (=உணவு) = பாலீயம் >>> வள்ளியம் = எரிச்சல் தரும் உணவு.

வள்ளியம்

புல்லாங்குழல், ஊதுகுழல்

வள்ளியம்

வள்ளி (=தண்டு) + இயம் (=இசைக்கருவி) = வள்ளியம் = தண்டு போன்ற இசைக்கருவி.

வள்ளியம்

படகு

வள்ளம்

வள்ளம் (=படகு) + இயம் = வள்ளியம்

வளகம்

பவளம்

வல்லாக்கம்

வல் (=வலிமை, மேடு) + ஆக்கம் (=நீர், திரள்) = வல்லாக்கம் >>> வளகம் = நீருக்குள் திரண்டு வலிமையான மேடாக இருப்பது.

வளு

இளமை

வளமை

வளமை (=இளமை) + உ = வளு

வற்கம், வல்கம்

கடிவாளம்

வலக்கம்

வலி (=கட்டுப்படுத்து, இழு) + அக்கம் (=கயிறு) = வலக்கம் >>> வல்கம் >>> வற்கம் = இழுத்துக் கட்டுப்படுத்தும் கயிறு.

வற்கம்

மரப்பட்டை

வல்கம்

வல்கம் (=மரப்பட்டை) >>> வற்கம்

வற்கரி

சொம்பு

பறைக்கரி

பறை (=முகவை) + கரம் (=கை) + இ = பறைக்கரி >>> வற்கரி = கையால் பிடிக்கும் முகவை = சொம்பு, குவளை.

வற்கலை

மரவுரி

வற்களை

வற்கம் (=மரப்பட்டை) + அளை (=தழுவு) = வற்களை >>> வற்கலை = தழுவும் மரப்பட்டை = மரப்பட்டையால் ஆன உடை.

வற்குலிகம்

கரிச்சான் குருவி

வாற்கீளிகம்

வால் + கீளு (=பிள) + ஈகை (=குருவி) + அம் = வாற்கீளீகம் >>> வற்குலிகம் = பிளந்த வாலையுடைய குருவி.

வற்சம்

பசுங் கன்று

மறாயம்

மறி (= கன்று) + ஆயம் (=பசு) = மறாயம் >>> வறசம் >>> வற்சம் = பசுக்கன்று.  

வற்சம்

குழந்தைப் பருவம்

மறியம்

மறி (= குட்டி) + அம் = மறியம் >>> வறிசம் >>> வற்சம் = குட்டி / குழந்தைப் பருவம்.

வற்சம், வல்சம்

பால்முலை

பாலாயம்

பால் + ஆய் (=உண்ணு) + அம் = பாலாயம் >>> வலசம் >>> வல்சம் >>> வற்சம் = பால் உண்ணும் இடம்.  

வற்சரம்

ஆண்டு

வரையாரம்

வரை (=காலம்) + ஆர் (=நிறை) + அம் = வரையாரம் >>> வற்சரம் = காலத்தின் நிறைவு.

வற்சலம்

பேரன்பு

பரிசாலம்

பரி (=அன்பு) + சால் (=மிகுதி) + அம் = பரிசாலம் >>> வற்சலம் = மிகுதியான அன்பு

வற்சலை, வற்சலம்

ஈன்ற பசு

மறியளை

மறி (=கன்று) + அளி (= ஈனு, கூடியிரு) + ஐ = மறியளை >>> வற்சலை = கன்றினை ஈன்று கூடியிருப்பது.

வற்சன்

மகன்

மறாயன்

வற்சம் (=குட்டி) + அன் = வற்சன் = மகன்

வற்சை

குழந்தை

மறாயை

வற்சம் (=குட்டி) + ஐ = வற்சை = குழந்தை

வற்சை

கன்று ஈனாத மாடு

வறுஞ்சை

வறுமை (=இன்மை) + சே (=மாடு, கன்று) + ஐ = வறுஞ்சை >>> வற்சை = கன்று இல்லாத மாடு.

வல்மீகம், வன்மீகம்

கறையான் புற்று

வல்மூகம்

வல் (=மேடு, மண்) + முகை (=குகை) + அம் = வல்மூகம் >>> வல்மீகம் >>> வன்மீகம் = குகைபோன்ற அமைப்புடைய மண்மேடு.

வன்னம்

தங்கம்

பட்டம்

பட்டம் (=தங்கம்) >>> வண்ணம் >>> வன்னம்

வன்னனம், வன்னனை

வருணனை

வண்ணணம்

வண்ணி (=புகழ், எழுது) + அணம் = வண்ணணம் >>> வன்னனம் >>> வன்னனை = புகழ்ந்து எழுதுதல்.

வன்னி

நெருப்பு

வன்னி

வன்மை (=சினம், எரிவு) + இ = வன்னி = எரிவுடையது.

வன்னி

குதிரை

வன்னி

வன்மை (=வேகம், வலிமை) + இ = வன்னி = வேகமும் வலிமையும் கொண்ட விலங்கு.

வன்னி

பிரம்மச்சாரி

மணநி

மண (=கூடு, மணஞ்செய்) + நை (=கெடு, இல்லாகு) + இ = மணநி >>> மண்ணி >>> வன்னி = மணம்செய்தல் இல்லாகியவன்.

வன்னி

கிளி

பன்னி

பன்னு (=பேசு) + இ = பன்னி >>> வன்னி = பேசும் பறவை.

வன்னிகருப்பம்

மூங்கில்

வன்னிகருப்பம்

வன்னி (=தீ) + கருப்பம் (=பிரசவிப்பது) = வன்னிகருப்பம் = தீயைப் பிரசவிப்பது = மூங்கில் மரங்கள்.

வன்னிகை

எழுதுகோல்

வன்னிகை

வன்னி (=எழுது) + கை = வன்னிகை = எழுது கருவி.

வன்னியம்

சுதந்திரம்

வண்ணியம்

வண்ணம் (=பிரிவு, தனிமை) + இயம் (=தன்மை) = வண்ணியம் >>> வன்னியம் = தனித்த தன்மை = சுதந்திரம்.

வன்னியம்

பகை

வன்மை

வன்மை (=பகை) + இயம் = வன்னியம் = பகைமை

வனசம்

தாமரை

வன்னயம்

வன்னி (=தீ, நெருப்பு) + அயம் (=குளம், நீர்) = வன்னயம் >>> வனசம் = குளநீரில் நெருப்பு போலத் தோன்றும் மலர்.

வனசை

சந்தனம்

மணாயை

மண் (=பூசு, சாந்து) + ஆய் (=நறுமணம்) + ஐ = மணாயை >>> வனசை = பூசப்படும் நறுமணச் சாந்து.

வனம்

காடு, சோலை

வனம்

வன்மை (=கடுமை) + அம் = வனம் = கடுமை உடையது. ஒ.நோ: கடுமை + உ = காடு = கடுமை உடையது.

வனம்

சுடுகாடு

வன்னம்

வன்னி (=தீ, எரி) + அம் = வன்னம் >>> வனம் = தீயால் எரிக்குமிடம்

வனம்

மரணம்

மாணம்

மாணு (=சாவு) + அம் = மாணம் >>> வனம் = மரணம்

வனம், பானம்

நீர்

பனி

(1). பனி (=நீர்) + அம் = பானம் >>> வனம். (2) வானம் (=நீர்) >>> வனம்

பானி

நீர்

பனி

பனி (=நீர்) >>> பானி

வனம்

அருவி

மானம்

மான் (=மலை) + அம் (=நீர்) = மானம் >>> வனம் = மலையில் இருந்து விழுகின்ற நீர் = அருவி.

வனம்

வீடு

மனை

மனை (=வீடு) + அம் = மனம் >>> வனம்

வனம்

வழி

வண்ணம்

வண்ணம் (=வழி) >>> வனம்

வனம்

துளசி

மணம்

மணம் (=மதிப்பு, வளமை, வாசனை) >>> வனம் = மதிப்புடைய வளமான வாசனைப் பொருள்..

வனம்

புற்று

மனை

மனை (=மண், உருவாக்கு, வீடு) + அம் = மனம் >>> வனம் = மண்ணால் உருவாக்கப்பட்ட வீடு.

வனம்

அழகு, இளமை

வண்ணம்

வண்ணம் (=அழகு) >>> வனம்

வனம்

மிகுதி

வன்மை

வன்மை (=மிகுதி) + அம் = வனம்

வனமுதம்

மேகம்

வானமூற்றம்

வானம் (=மழை) + ஊற்று (=பெய்) + அம் = வானமூற்றம் >>> வானமூத்தம் >>> வனமுதம் = மழையைப் பெய்வது.

வனரஞ்சனி

முலைப்பால்

வனாராயன்னி

வனம் (=இளமை, குட்டி) + ஆர் (=பருகு) + ஆயம் (=பால்) + அன்னை (=தாய்) + இ = வனாராயன்னி >>> வனரஞ்சனி = குட்டியானது அன்னையிடம் பருகும் பால்.

வனருகம்

தாமரை

வனாருக்கம்

வனம் (=நீர்) + ஆர் (=தோன்று) + உக்கம் (=நெருப்பு) = வனாருக்கம் >>> வனருகம் = நீரில் தோன்றும் நெருப்பு போன்ற மலர்.

வனாகி

முயல்

வானகி

வான் (=வெண்மை, விலங்கு) + அகை (=விட்டுவிட்டுச் செல்) + இ = வானகி >>> வனாகி = விட்டுவிட்டுச் செல்லும் வெண்ணிற விலங்கு.

வனாந்தரம்

பாலைவனம்

வன்னாந்தரம்

வன்னி (=நெருப்பு, சுடு) + ஆம் + தரை (=நிலம்) + அம் = வன்னாந்தரம் >>> வனாந்தரம் = நெருப்பெனச் சுடும் நிலப் பரப்பு உடையது.

வனி

வெப்பம், காய்ச்சல்

வன்னி

வன்னி (=நெருப்பு) >>> வனி = வெப்பம், காய்ச்சல்

வனிகை

தோப்பு

வனிகை

வனம் (=சோலை) + இகு (=தொகு) + ஐ = வனிகை = சோலைகளின் தொகுப்பு.

வனிதை

இளம் பெண்

வனிறை

வனம் (=அழகு, இளமை) + இறு (=தங்கு, பொருந்து) + ஐ = வனிறை >>> வனிதை = அழகும் இளமையும் பொருந்தியவள்.

வனிதை

மனைவி

மனிறை

மனை (=வீடு) + இறை (=தங்கல், ஆட்சி) = மனிறை >>> வனிதை = வீட்டில் தங்கி ஆள்பவள்.

வனோற்சாகம்

காண்டாமிருகம்

வனுரிசாகம்

வன்மை (=வலிமை) + உரி (=தோல்) + சாகம் (=உடல், இலையுணவு) = வனுரிசாகம் >>> வனோற்சாகம் = வலிமையான தோலையுடைய உடலைக் கொண்ட இலையுண்ணும் விலங்கு.

வசா^

தள்ளுபடி

வழா

வழி (=கழி) + ஆ = வழா >>> வசா^ = கழிவு, தள்ளுபடி

வச்`திரம்

உடை

மாற்றிறம்

மாற்று (=துணி) + இறு (=கட்டு, உடு) + அம் = மாற்றிறம் >>> வத்திரம் >>> வச்`திரம் = உடுத்தும் துணி.

வச்`து

பொருள்

பற்று

பற்று (=பொருள், செல்வம்) >>> வத்து >>> வச்`து.

வச்`து

போதைப் பொருள்

மத்து

மதம் (=போதை) + உ = மத்து >>> வச்`து = போதை தருவது

வக்ச~ம்

முலை

பய்யம்

பயம் (=பால், கொடை) + அம் >>> பய்யம் >>> வச்சம் >>> வக்ச~ம் = பால் தருவது.

வாக்கு

சொல்

வாக்கு

(1). வகு (=சொல்) >>> வாக்கு (2). வாங்கு (=அழை, கூறு) >>> வாக்கு.

வாக்கியம்

சொற்றொடர்

வாக்கியம்

வாக்கு (=சொல்) + இயை (=சேர்) + அம் = வாக்கியம் = பல சொற்கள் சேர்ந்தது = சொல் தொடர்.

வாக்கு

திருத்தம்

வாக்கு

வயக்கு (=திருத்து) >>> வாக்கு = திருத்தம்

வாக்கு

வளைவு

வாக்கு

வாங்கு (=வளை) >>> வாக்கு = வளைவு, ஒழுங்கின்மை

வாக்கு

வாய்

வாக்கு

வகு (=சொல், பேசு, பிள, திற) >>> வாக்கு = பேச உதவும் திறப்பு = வாய்.

வாக்கு

பக்கம்

பக்கம்

பக்கம் + உ = பக்கு >>> வாக்கு

வாகு

கை, தோள்

பக்கு

பக்கம் + உ = பக்கு >>> வாகு = பக்கங்களில் உள்ளவை = கை, தோள்

வாககன்

தோளில் தாங்குபவன்

வாங்காகன்

வாங்கு (=தாங்கு) + ஆகம் (=தோள்) + அன் = வாங்காகன் >>> வாககன் = தோளில் தாங்குபவன்.

வாககன்

குதிரையை ஓட்டுபவன்

வாககன்

வகம் (=குதிரை) + அகை (=செலுத்து) + அன் = வாககன் = குதிரையைச் செலுத்துபவன்.

பாகன்

ஓட்டுநன்

வாங்கன்

வாங்கு (=செலுத்து) + அன் = வாங்கன் >>> பாகன் = செலுத்துவோன்

வாகம்

வண்டி

வாங்கம்

வாங்கு (=செலுத்து) + அம் = வாங்கம் >>> வாகம் = செலுத்தப்படுவது

வாகம்

குதிரை

வாங்கம்

வாங்கு (=பூட்டு, செலுத்து) + அம் = வாங்கம் >>> வாகம் = பூட்டிச் செலுத்தப்படுவது.

வாகம்

எருமைக்கடா

மாக்கம்

மை (=எருமை) + ஆக்கம் (=வலிமை) = மாக்கம் >>> வாகம் = வலிமையான எருமை = எருமைக் கடா.

வாகம்

எருது

வாங்கம்

வாங்கு (=பூட்டு, இழு) + அம் = வாங்கம் >>> வாகம் = பூட்டி இழுத்துச் செல்வது = காளை.

வாகம்

காற்று

வாங்கம்

வாங்கு (=உட்கொள், அடி, அலை) + அம் = வாங்கம் >>> வாகம் = உட்கொள்ளப்படுவதும் அலைவதும் அடிக்கும் இயல்பும் உடையது

வாகனம்

சீலை

வாங்கணம்

வாங்கு (=தழுவு, வளை) + அணி + அம் = வாங்கணம் >>> வாகனம் = தழுவி வளைத்து அணியப் படுவது.

வாகனம்

விடாமுயற்சி

வாங்கணம்

வாங்கு (=இழு, முயல், மீட்கு) + அணம் = வாங்கணம் >>> வாகனம் = மீண்டும் மீண்டும் முயலுதல்.

வாகன்

அழகன்

பாங்கன்

பாங்கு (=அழகு) + அன் = பாங்கன் >>> வாகன் = அழகானவன்

வாகி

அழகி

பாங்கி

பாங்கு (=அழகு) + இ = பாங்கி >>> வாகி = அழகானவள்

வாகியம்

வெளி, புறம்

மாகம்

மாகம் (=ஆகாயம், வெளி) + இயம் = மாகியம் >>> வாகியம்

வாகியம்

வண்டி

வாங்கியம்

வாங்கு (=பூட்டு, இழு, செலுத்து) + இயம் = வாங்கியம் >>> வாகியம் = பூட்டி இழுத்துச் செல்லப்படுவது

வாகிருவன்

அறிஞன்

வாக்கிருவன்

வாக்கு (=சொல், மொழி) + இருமை (=சிறப்பு) + அன் = வாக்கிருவன் >>> வாகிருவன் = மொழியில் சிறப்பு உடையவன்

வாகிருவன்

திறமைசாலி

வக்கிருவன்

வகை (=திறமை) + இருமை (=பெருமை) + அன் = வக்கிருவன் >>> வாகிருவன் = பெரும் திறமை உடையவன்

வாகினி

போர்ப்படை

பாகினி

பகை + இனை (=வருத்து, கொல்) + இ = பாகினி >>> வாகினி = பகையைக் கொல்வது.

வாகினிபதி

கடல்

மாகீனுபதி

மாகம் (=மேகம்) + ஈனு (=பிற) + பதி (=இடம்) = மாகீனுபதி >>> வாகினிபதி = மேகங்கள் பிறக்கும் இடம்.

வாகீகம்

வண்டி

வாங்கிகம்

வாங்கு (=பூட்டு, இழு) + இக (=கட, செல்) + அம் = வாங்கிகம் >>> வாகீகம் = பூட்டி இழுத்துச் செல்வது.

வாகீகம்

பறை

வாங்கிகம்

வாங்கு (=அடி, ஒலி) + இகம் (=பொருள்) = வாங்கிகம் >>> வாகீகம் = அடித்து ஒலிக்கப்படும் பொருள்.

வாகு

அழகு

பாங்கு

பாங்கு (=அழகு) >>> வாகு

வாகு

ஒளி

வயங்கு

வயங்கு (=ஒளிர்) >>> வாங்கு >>> வாகு = ஒளிர்வது.

வாகு

ஒழுங்கு

பாங்கு

பாங்கு (=ஒழுங்கு) >>> வாகு

வாகு

திறமை

வகை

வகை (=திறமை) + உ = வாகு

வாகு

அடிப்பகுதி

வாகு

வாங்கு (=தாங்கு) >>> வாகு = தாங்குவது = அடிப்பகுதி

வாகுரம், வாகுரை

வலை

வாங்குறம்

வாங்கு (=திற, விரி) + உறு (=கொள், பிடி) + அம் = வாங்குறம் >>> வாகுரம் = விரித்து வைத்துப் பிடிக்க உதவுவது.

வாகுரம்

வவ்வால்

மங்குலி

மங்குலி (=வவ்வால்) + அம் = மங்குலம் >>> வாகுரம்

வாகுரிகன்

வேட்டைக் காரன்

வாகுரிகன்

வாகுரம் (=வலை) + இகு (=வீழ்த்து, கொல்) + அன் = வாகுரிகன் = வலையினால் வீழ்த்திக் கொல்பவன்.

வாகுலிகன்

வெற்றிலைப் பையுடையவன்

பக்குளிகனி

பக்கு (=பை) + உள் + இகனி (=வெற்றிலை) = பக்குளிகனி >>> வாகுலிகனி >>> வாகுலிகன் = பையில் வெற்றிலையைக் கொண்டவன்

வாங்கம்

கடல்

வாங்கம்

வாங்கு (=வளை, சூழ், ஒலி, அலை) + அம் (=நீர்) = வாங்கம் = ஒலித்தவாறு அலைவதும் சூழ்ந்திருப்பதுமான நீர்

வாங்கி

குழம்பு

வாக்கீ

வாக்கு (=ஊற்று) + ஈ (=கொடு) = வாக்கீ >>> வாங்கி = ஊற்றிக் கொடுக்கப் படுவது = குழம்பு.

வாங்கு

கைக்கத்தி

வாங்கு

வாங்கு (=வளை, குத்து, கொல்) >>> வாங்கு = குத்திக் கொல்ல உதவும் சற்று வளைவுடைய ஆயுதம்.

வாச்சியம்

சொற்பொருள்

வாயியம்

வாய் (=பெறு) + இயம் (=சொல்) = வாயியம் >>> வாசியம் >>> வாச்சியம் = சொல்லில் இருந்து பெறப்படுவது

வாச்சியம்

வெளிப்படைத் தன்மை

பாழியம்

பாழ் (=வெளி) + இயம் (=தன்மை) = பாழியம் >>> வாசியம் >>> வாச்சியம் = வெளித் தன்மை உடையது

வாச்சியம்

சொல்லக் கூடியது

வாச்சியம்

வாசி (=சொல்) + இயை (=கூடு) + அம் = வாச்சியம் = சொல்லக் கூடியது.

வாச்சியம்

திட்டு

வச்சியம்

வசை (=திட்டு) + இயம் (=சொல்) = வச்சியம் >>> வாச்சியம் = திட்டு.

வாச்சியம்

இசைக்கருவி

வாயியம்

வாய் (=ஒலி) + இயம் (=கருவி) = வாயியம் >>> வாசியம் >>> வாச்சியம் = ஒலிக்கும் கருவி

வாசகம்

சொல், செய்தி, பாட்டு

வாயாக்கம்

வாய் (=ஒலி, உறுப்பு, சேர்) + ஆக்கம் = வாயாக்கம் >>> வாசகம் = வாயின் ஒலிகளைச் சேர்த்து உருவாக்கப் படுவது = சொல்.

வாசதம்

கழுதை

வாயறம்

வாய் (=உண்மை, அறிவு) + அறு (=இல்லாகு) + அம் = வாயறம் >>> வாசதம் = அறிவு இல்லாதது.

வாசந்தம்

ஒட்டகம்

வாசத்தம்

வாசம் (=வாழ்க்கை) + அத்தம் (=பாலைவனம்) = வாசத்தம் >>> வாசந்தம் = பாலைவனத்தில் வாழ்வது.

வாசந்தம்

விலங்கின் குட்டி

மாசந்தம்

மா (=விலங்கு) + சந்தம் (=அழகு, இளமை, வடிவம்) = மாசந்தம் >>> வாசந்தம் = இளமை வடிவுடைய விலங்கு.

வாசம்

வாழ்க்கை

வாழம்

வாழ் + அம் = வாழம் >>> வாசம் = வாழ்க்கை

வாசம்

வாழுமிடம்

வாழம்

வாழ் (=தங்கு) + அம் = வாழம் >>> வாசம் = தங்குமிடம்

வாசம்

மணம்

பாயம்

பாய் (=பரவு, மண) + அம் = பாயம் >>> வாசம் = பரவுவது / மணப்பது

வாசம்

ஆடை

பஞ்சு

பஞ்சு (=ஆடை) + அம் = பஞ்சம் >>> வாசம்

வாசம்

இறகு, சிறகு

பாயம்

பாய் (=பரவு, பற) + அம் = பாயம் >>> வாசம் = பறக்க உதவுவது

வாசம்

அம்பு

வசம்

வசி (=கூர்மை, பிள, தங்கு) + அம் = வசம் >>> வாசம் = பிளந்து உள்ளே தங்கும் கூர்மையான பொருள்.

வாசம்

நெய்

பாயம்

பாய் (=ஒழுகு, மண) + அம் (=உணவு) = பாயம் >>> வாசம் = ஒழுகக் கூடிய மணம் மிக்க உணவு.

வாசம்

உணவு, அரிசி

பயம்

பயம் (=உணவு) >>> வாசம் = உணவு, அரிசி

வாசம்

நீர்

பாயம்

பாய் (=ஒழுகு) + அம் (=உணவு) = பாயம் >>> வாசம் = ஒழுகும் உணவு

வாசம்

வேகம்

பாயம்

பாய் (=விரை) + அம் = பாயம் >>> வாசம் = விரைவு

வாசம்

பேச்சு

வாய்

வாய் (=சொல், மொழி) + அம் = வாயம் >>> வாசம்

வாசரம்

நாள், பகல்

பய்யாரம்

பை (=ஒளி) + ஆர் (=நிறை) + அம் = பய்யாரம் >>> வாசரம் = ஒளி நிறைந்திருப்பது. = பகல், நாள்.

வாசரி

அறுவைப்பேச்சு

வாயரி

வாய் (=பேச்சு) + அரி (=அறு) = வாயரி >>> வாசரி = பேசி அறுத்தல்

 

2 கருத்துகள்:

  1. தொடர்ந்து வாசிக்கிறேன். பல அரியனவற்றை அறிகிறேன். இதற்கான மேற்கோள் நூல்/துணைநூற் பட்டியலையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிலுக்கு நன்றி ஐயா. இக் கட்டுரை தொடர்பான மேற்கோள்கள், துணைநூல்கள் அனைத்தையும் இதன் நூல் பதிவில் விரிவாக வெளியிடும் எண்ணம் இருக்கிறது.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.