சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
மூலச்சொல்லும் தோன்றிய முறையும் |
வரதம் |
விரும்பியதைக் கொடுத்தல் |
வராற்றம் |
வரம் (=விருப்பம்) + ஆற்று (=கொடு) + அம் = வராற்றம் >>> வரத்தம் >>> வரதம் = விரும்பியதைக் கொடுத்தல். |
வரதம் |
நுட்பமான ஆடை |
பாரற்றம் |
பாரி (=ஆடை) + அற்றம் (=நுட்பம்) = பாரற்றம் >>> பரத்தம் >>> வரதம் = நுட்பமான ஆடை. |
வரதை |
கன்னிப் பெண் |
வராறை |
வரை (=மணம் செய்) + அறு (=இல்லாகு) + ஐ = வராறை >>> வரதை = மணம் செய்யப் படாதவள். |
வரபலம் |
தென்னை மரம் |
வாரபலம் |
வாரம் (=நீளம், கொத்து) + பலம் (=இலை, காய்) = வாரபலம் >>> வரபலம் = நீண்ட இலைகளைக் கொண்டதும் கொத்தாகக் காய்ப்பதுமான மரம். |
வரம் |
கடவுள் |
பரம் |
பரம் (=தெய்வம்) >>> வரம் |
வரம் |
அன்பு, உதவி |
பரம் |
பரி (=இரங்கு) + அம் = பரம் >>> வரம் = இரக்கம், அன்பு, உதவி |
வரம் |
விருப்பம் |
பாரம் |
பாரி (=விரும்பு) + அம் = பாரம் >>> வரம் = விருப்பம் |
வரம் |
மேன்மை |
பரம் |
பரம் (=மேலானது) >>> வரம் = மேன்மை |
வரம் |
செல்வம் |
பாரம் |
பாரம் (=பொருள்) >>> வரம் = பொருட்செல்வம் |
வரம் |
சூழப்பட்டது |
பரம் |
பரி (=சூழ்) + அம் = பரம் = சூழப்பட்டது. |
வரம் |
சிட்டுக் குருவி |
பறம் |
பறை (=பறவை, தேய், சிறிதாகு) + அம் = பறம் >>> வரம் = சிறிய பறவை இனம். |
வரம் |
எறும்பு |
வரம் |
வரி (=வரிசை, செல், மொய்) + அம் = வரம் = வரிசையாகச் செல்வதும் மொய்க்கும் இயல்புடையதும் ஆனது. |
வரம் |
மஞ்சள் |
வரம் |
வரி (=ஒளி, அழகு) + அம் = வரம் = ஒளி / அழகு சேர்ப்பது |
வரர் |
மேன்மக்கள் |
வரர் |
வரம் (=மேன்மை) + அர் = வரர் = மேன்மை உடையோர் |
வரன் |
சிறந்தவன் |
வரன் |
வரம் (=மேன்மை) + அன் = வரன் = மேலானவன், சிறந்தவன் |
வரன் |
மணமகன், கணவன் |
வரன் |
வரை (=மணம் செய்) + அன் = வரன் = மணம் செய இருப்பவன், மணம் செய்து கொண்டவன் |
வரன் |
அண்ணன் |
பரன் |
பரம் (=மேலானது) + அன் = பரன் = மேலானவன் = அண்ணன் |
வராக்கு |
தண்ணீர்ப் பழம் |
பராக்கு |
பரு (=பெரிய) + ஆக்கம் (=நீர், உணவு) + உ = பராக்கு >>> வராக்கு = நீரினைக் கொண்ட பெரிய உணவுப் பொருள். |
வராகம் |
பன்றி |
பறகம், பாரகம் |
(1). பறி (=தோண்டு) + அகம் (=இடம், நிலம்) = பறகம் >>> வராகம் = நிலத்தைத் தோண்டுவது. (2) பார் (=நிலம்) + அகை (=கிளை, கிளறு) + அம் = பாரகம் >>> வராகம் = நிலத்தைக் கிளறுவது. |
வராகம் |
போர் |
மறாகம் |
மறம் (=பகை) + அகை (=முறி) + அம் = மறாகம் >>> வராகம் = பகையை முறித்தல். |
வராகன் |
தங்க நாணயம் |
பறக்கன் |
பறி (=பொன், தங்கம்) + அக்கம் (=நாணயம்) + அன் = பறக்கன் >>> வராகன் = தங்க நாணயம். |
வராகி |
மருந்துகளைப் புகைத்தல் |
பாரகீ |
பாரு (=மருந்து) + அகை (=தீ) + ஈ (=கொடு, இடு) = பாரகீ >>> வராகி = மருந்துகளைத் தீயிலிட்டுப் புகைத்தல். |
வராங்கம் |
தலை |
பராங்கம் |
பரம் (=மேலானது) + அங்கம் (=உறுப்பு) = பராங்கம் >>> வராங்கம் = மேலான உறுப்பு = தலை |
வராங்கம் |
அழகிய தோற்றம் |
வராக்கம் |
வரி (=அழகு) + ஆக்கம் (=உருவம்) = வராக்கம் >>> வராங்கம் = அழகிய உருவம் |
வராங்கம் |
உடல் |
பாராக்கம் |
பாரி (=தோன்று, பிற) + ஆக்கம் (=உருவம்) = பாராக்கம் >>> வராங்கம் = தோன்றிய உருவம் = உடல். |
வராங்கம் |
யானை |
பரங்கம் |
பருமை + அங்கம் (=உடல்) = பரங்கம் >>> வராங்கம் = பெருத்த உடலைக் கொண்டது. |
வராங்கம் |
இலவங்கம் |
வரக்கம் |
வரி (=பூ) + அஃகு (=வற்று, சுருங்கு) + அம் (=உணவு) = வரக்கம் >>> வராங்கம் = வற்றிச் சுருங்கிய பூ உணவு. |
வராங்கனை |
பெருமை மிக்க பெண் |
பரங்கனை |
பருமை (=பெருமை) + அங்கனை (=பெண்) = பரங்கனை >>> வராங்கனை = பெருமை மிக்க பெண். |
வராங்கி |
அழகி |
வரங்கி |
வரி (=அழகு) + அங்கம் (=உடல்) + இ = வரங்கி >>> வராங்கி = அழகிய உடலைக் கொண்டவள். |
வராங்கி |
மஞ்சள் |
வராக்கி |
வரி (=அழகு, ஒளி) + ஆக்கு (=உருவாக்கு) + இ = வராக்கி >>> வராக்கி = அழகும் ஒளியும் உருவாக்குவது. |
வராசனம் |
நீர் ஊற்றும் பாத்திரம் |
வாராழாணம் |
வார் (=நீர், ஊற்று) + ஆழ் + ஆணம் (=பாத்திரம்) = வாராழாணம் >>> வராசனம் = நீர் ஊற்றும் ஆழமான பாத்திரம். |
வராசனம் |
நுழைவாயில் |
வரயனம் |
வரு (=நுழை) + அயனம் (=வழி) = வரயனம் >>> வராசனம் = நுழைவாயில். |
வராசான் |
கற்பூரம் |
வராயம் |
வரி (=ஒளி, தீ) + ஆய் (=நுண்மை, வெண்மை) + அம் = வராயம் >>> வராசான் = எரிந்து ஒளிதரும் சிறிய வெண்மையான பொருள். |
வராடகம் |
தாமரைத் தண்டுணவு |
மராடாக்கம் |
மரை (=தாமரை) + அடை (=பெறு) + ஆக்கம் (=உணவு) = மராடாக்கம் >>> வராடகம் = தாமரையில் இருந்து பெறும் உணவு |
வராடகம் |
கயிறு |
வாரடக்கம் |
வார் (=நீளு) + அடக்கு (=கட்டு) + அம் = வாரடக்கம் >>> வராடகம் = கட்ட உதவும் நீளமான பொருள். |
எலுமிச்சை |
எலுமிச்சம் பழம் |
எல்லுபிழியை |
எல்லு (=ஒளி, மஞ்சள் நிறம்) + பிழி (=சாறு) + ஐ = எல்லுபிழியை >>> எல்லுமிசிசை >>> எலுமிச்சை = மஞ்சள் ஒளியும் சாறும் உடையது. |
வராடகம், வராடி, வராடம், வராடிகை |
சிப்பி |
பாரடகம் |
பார் (=முத்து) + அடை (=அடக்கு) + அகம் (=வயிறு) = பாரடகம் >>> வராடகம் = முத்துக்களை வயிற்றில் அடக்கியது = சிப்பிகள். |
வராடி |
முரட்டு ஆடை |
பராடி |
பருமை + ஆடை + இ = பராடி >>> வராடி = பருத்த ஆடை வகை |
வராண்டம் |
தாமரை விதை உணவு |
மராண்டம் |
மரை (=தாமரை) + அண்டம் (=விதை) = மராண்டம் >>> வராண்டம் = தாமரை விதை உணவு. |
வராத்தம் |
கட்டளை |
வாரற்றம் |
வார் (=கட்டு) + அறை (=சொல்) + அம் = வாரற்றம் >>> வராத்தம் = கட்டுப்படுத்தும் சொல் = கட்டளை |
வராத்தம் |
வரி திரட்டுதல் |
வராற்றம் |
வரி + ஆற்று (=திரட்டு) + அம் = வராற்றம் >>> வராத்தம் = வரி திரட்டுதல். |
வராத்தம் |
கொடுக்கல் வாங்கல் |
வாராற்றம் |
வாரு (=கொள், வாங்கு) + ஆற்று (=கொடு) + அம் = வாராற்றம் >>> வராத்தம் = கொடுக்கல் வாங்கல். |
வராரோகன் |
யானைப்பாகன் |
வாராரோகன் |
வாரி (=யானை) + ஆரோக்கன் (=ஓட்டுபவன்) = வாராரோக்கன் = வராரோகன் = யானையை ஓட்டுபவன் |
ஆரோக்கன் |
பாகன் |
ஆரோக்கன் |
ஆர் (=அமர், பொருந்து) + ஓக்கு (=செலுத்து) + அன் = ஆரோக்கன் = அமர்ந்து செலுத்துபவன். |
வராலகம், வராலம் |
இலவங்கம் |
மராலாக்கம் |
மரு (=நறுமணம்) + ஆலம் (=பூ) + அஃகு (=வற்று, சுருங்கு) + அம் (=உணவு) = மராலாக்கம் >>> வராலகம் = வற்றிச் சுருங்கிய நறுமணப் பூ உணவு. |
வராளம், மராளம் |
பாம்பு |
மராளம், வராளம் |
மாறு (=கொல்) + ஆல் (=நஞ்சு) + அம் = மாறாலம் >>> மராளம் >>> வராளம் = கொல்லும் நஞ்சினைக் கொண்டது. |
வராளி |
சந்திரன் |
வரளி |
வரி (=ஒளி) + அளி (=குளிர்ச்சி, கொடு) = வரளி >>> வராளி = குளிர்ச்சியான ஒளியைத் தருவது. |
வராளி |
மண்ணீரல் |
பரளி |
பரி (=நீக்கு, இரண்டாகு, பாதுகா) + அள் (=சேறு, மண்) + இ = பரளி >>> வராளி = மண்ணை நீக்கிப் பாதுகாக்கும் இருபாக உறுப்பு. |
வரிட்டம் |
சிறப்பானது |
வாரிடம் |
வரி (=உயர்வு, சிறப்பு) + இடம் = வாரிடம் >>> வரிட்டம் = சிறப்பான இடத்தைக் கொண்டது |
வருகம் |
மயில் தோகை |
வருகம் |
வரி (=நீளம், அழகு, கட்டு) + உகு (=உதிர்) + அம் = வருகம் = கட்டில் இருந்து உதிரக் கூடிய நீளமான அழகான பொருள். |
வருகம் |
இலை |
மருகம் |
மரம் + உகு + அம் = மருகம் >>> வருகம் = மரம் உதிர்ப்பது. |
வருகம் |
அடிமை, பணியாள் |
மாறூக்கம் |
மாறு (=பணி) + ஊக்கு (=முயல், செய்) + அம் = மாறூக்கம் >>> வருகம் = பணிந்து செயல்படுவோர். |
வருட்டம் |
வேம்பு |
மருற்றம் |
மரம் + உறை (=மழை, மருந்து) + அம் = மருற்றம் >>> வருட்டம் = மழை தருவிப்பதும் மருந்தாவதும் ஆன மரம். |
வருட்டம் |
முட்டை |
மறுண்டம் |
மறி (=குட்டி, தோன்று) + உண்டை (=உருண்டை) + அம் = மறுண்டம் >>> வருட்டம் = குட்டி தோன்றும் உருண்டைப் பொருள் |
வருடவரன் |
அலி |
மாறுடைவரன் |
மாறு (=இயல்பு, திரி) + உடை (=கெடு) + வரன் (=ஆண்) = மாறுடைவரன் >>> வருடவரன் = ஆண் இயல்பு கெட்டுத் திரிபு அடைந்தவன் = அலி. |
வருடை |
பொறாமை |
வருறை |
வரி (=தீ, எரி, எண்ணம்) + உறு (=ஒப்பு) + ஐ = வருறை >>> வருடை = தீயைப் போன்று எரியும் எண்ணம் = பொறாமை. |
வருணகம் |
எழுத்துருவம் |
வண்ணாக்கம் |
வண்ணம் (=எழுத்து) + ஆக்கம் (=உருவம்) = வண்ணாக்கம் >>> வர்ணகம் >>> வருணகம் = எழுத்துருவம். |
வருணம் |
ஒளி, மஞ்சள், தங்கம் |
வண்ணம் |
வண்ணம் (=ஒளி, அழகு) >>> வர்ணம் >>> வருணம் = ஒளி, அழகு, அழகு தருவது, ஒளி உடையது. |
வருணம் |
பெருமை, புகழ், துதி |
மாணம் |
மாண் (=பெருமை) + அம் = மாணம் >>> மண்ணம் >>> வர்ணம் >>> வருணம் = பெருமை, புகழ், துதி. |
வருணம் |
வாசனை |
மணம் |
மணம் (=வாசனை) + அம் = மண்ணம் >>> வர்ணம் >>> வருணம் |
வருணம் |
வேசம் |
வரூனம் |
வரி (=பூசு, மூடு, அணி) + ஊன் (=உடல்) + அம் = வரூனம் >>> வருணம் = உடலில் பூசியும் அணிந்தும் மூடுதல். |
வருணம் |
மாதிரி |
வண்ணம் |
வண்ணம் (=உருவம்) >>> வர்ணம் >>> வருணம் = மாதிரி. |
வருணம் |
யானை |
பரூனம் |
பருமை + ஊன் (=உடல்) + அம் = பரூனம் >>> வருணம் = பருத்த உடலைக் கொண்டது. |
வருணம் |
மழைநீர், நீர் |
மாருணம் |
மாரி (=மழை) + உண் (=பொருந்து) + அம் (=நீர்) = மாருணம் >>> வருணம் = மழைநீர், நீர். |
வருணாலயம் |
கடல் |
வருணாலயம் |
வருணம் (=நீர்) + ஆல் (=ஒலி) + அயம் (=பள்ளம்) = வருணாலயம் = நீர் ஒலிக்கின்ற பள்ளம். |
வருணி |
பிரம்மச்சாரி |
வரினி |
வரை (=மணம் செய்) + இன்மை + இ = வரினி >>> வருணி = திருமணம் செய்யாதவன். |
வருணி |
தங்கம் |
வண்ணி |
வண்ணம் (=ஒளி, அழகு) + இ = வண்ணி >>> வர்ணி >>> வருணி = ஒளியும் அழகும் உடையது = தங்கம். ஒ.நோ: ஒண்மை (=ஒளி, அழகு) + அம் = ஒண்ணம் >>> சொண்ணம் >>> சொர்ணம். |
வருத்தகம் |
பொருளைப் பெருக்குதல் |
பாருந்தாக்கம் |
பாரம் (=பொருள்) + உந்து (=பெருக்கு) + ஆக்கம் (=இலாபம்) = பாருந்தாக்கம் >>> வருத்தகம் = பொருளை இலாபகரமாகப் பெருக்குதல். |
வருத்தனம் |
உருண்டை |
பருத்தணம் |
பருதி (=பந்து) + அணம் = பருத்தணம் >>> வருத்தனம். |
வருத்தனம் |
கூட்டிப் பெருக்குதல் |
மாறுத்தணம் |
மாறு (=சுத்தம்செய்) + உத்து (=நீக்கு, கழி) + அணம் = மாறுத்தணம் >>> வருத்தனம் = சுத்தம் செய்து நீக்குதல் |
வருத்தனி |
விளக்குமாறு |
வருத்தனி |
வருத்தனம் (=கூட்டிப் பெருக்குதல்) >>> வருத்தனி = கூட்டிப் பெருக்க உதவுவது. |
வருத்தனி |
நீர்க்குடம் |
வாரூற்றாணி |
வார் (=நீர்) + ஊற்று + ஆணம் (=பாத்திரம்) + இ = வாரூற்றாணி >>> வருத்தனி = நீர் ஊற்றும் பாத்திரம் |
வருத்தனை |
வாழ்க்கை |
வாருந்தணை |
வார் (=நீளு) + உந்து (=கழி) + அணு (=உயிர்) + ஐ = வாருந்தணை >>> வருத்தனை = உயிர் நீண்டு கழிதல். |
வருத்தனம், வருத்தனை |
தொழில், முயற்சி |
வருத்தணம் |
வருத்தம் (=முயற்சி) + அணம் = வருத்தணம் >>> வருத்தனம் >>> வருத்தனை = முயற்சி, தொழில். |
வருத்தனை |
சம்பளம் |
மாறுத்தனை |
மாறு (=வேலைசெய், பதில்) + தனம் (=பொருள்) + ஐ = மாறுத்தனை >>> வருத்தனை = வேலைசெய்ததற்குப் பதிலாகக் கொடுக்கப்படும் பொருள். |
வருத்தனை |
கூத்தாட்டம் |
மாறுத்தனம் |
மாறு (=கூத்தாடு) + தனம் = மாறுத்தனம் >>> மாறுத்தனை |
வருத்தனை |
வழி |
வார்த்தானை |
வார் (=ஒழுகு, செல்) + தானம் (=இடம்) + ஐ = வார்த்தானை >>> வருத்தனை = செல்லும் இடம். |
வருத்தி |
படம் வரை |
வருத்தி |
வரை + உத்தி (=படம்) = வருத்தி = படம் வரை |
வருத்து |
மனப்பாடம் செய் |
வாரூற்று |
வார் (=அறி) + ஊற்று (=நிலைப்படுத்து) = வாரூற்று >>> வருத்து = அறிந்து நிலைப்படுத்து. |
வருசம் |
ஆண்டு |
வரூழம் |
(2). வரை (=காலம்) + ஊழ் (=முதிர், முடி) + அம் = வரூழம் >>> வருசம் = காலத்தின் முடிவு.. |
வரூதம் |
தங்குமிடம் |
மரூறம் |
மரு (=இடம்) + உறை (=தங்கு) + அம் = மரூறம் >>> வரூதம் = தங்கும் இடம். |
வரூதம் |
தேரைச் சுற்றிய மறைப்பு |
மறுந்தம் |
மறை (=தடு, மூடு) + உந்து (=வண்டி, தேர், தாக்கு) + அம் = மறுந்தம் = வரூதம் = தேரினைத் தாக்குவதில் இருந்து தடுக்கின்ற மறைப்பு. |
வரூதம் |
கவசம், கேடயம் |
மறூறம் |
மறை (=தடு) + ஊறு (=துன்பம், தாக்குதல்) + அம் = மறூறம் >>> வரூதம் = தாக்குதலில் இருந்து தடுக்க உதவுவது. |
வரூதினி |
போர்ப்படை |
மறூறினி |
மறம் (=பகை) + ஊறு (=கொலை) + இனம் (=கூட்டம்) + இ = மறூறினி >>> வரூதினி = பகையைக் கொல்லும் கூட்டம் |
வரேணியம் |
குங்குமம் |
வரேணியம் |
வரி (=பூசு, தீ, நிறம்) + ஐ (=அழகு) + அணு (=பொடி) + இயம் = வரேணியம் = அழகுக்காக பூசப்படும் தீவண்ணப் பொடி. |
வரோதயன் |
கடவுளருளால் பிறந்தவன் |
வரோதயன் |
வரம் (=கடவுள், அருள்) + உதயம் (=தோற்றம்) + அன் = வரோதயன் = இறைவன் அருளால் தோன்றியவன். |
வல்கம் |
மரப்பட்டை |
பாளகம் |
பாளம் (=தோல்) + அகம் (=மரம்) = பாளகம் >>> வலகம் >>> வல்கம் = மரத்தின் தோல். |
வல்கலம் |
உள்ளுறுப்புச் சவ்வு |
பாளங்கலம் |
பாளம் (=தோல்) + அங்கம் (=உறுப்பு) + அலம் (=மெலிவு) = பாளங்கலம் >>> வலக்கலம் >>> வல்கலம் = உறுப்புக்களை மூடியிருக்கும் மெலிவான தோல். |
வல்கிதம், வற்கிதம் |
விரைவாகக் குதித்தோடுதல் |
வல்குதம் |
வல் (=விரைவு) + குதி + அம் = வல்குதம் >>> வல்கிதம் >>> வற்கிதம் = விரைவாகக் குதித்து ஓடுதல். |
வல்லகி, வல்கி |
யாழ் |
வள்ளங்கி |
வள்ளி (=கொடி, நரம்பு, தண்டு) + அங்கம் (=இசை) + இ = வள்ளங்கி >>> வல்லகி >>> வல்கி = தண்டில் நரம்புகளைக் கொண்ட இசைக் கருவி. |
வல்லதம் |
வன்கொலை |
வல்லதம் |
வல் (=வன்மை) + அதம் (=கொலை) = வல்லதம் = வன்கொலை |
வல்லதம் |
உறையால் மூடுதல் |
பாளத்தம் |
பாளை (=உறை) + அத்து (=பொருத்து) + அம் = பாளத்தம் >>> வல்லதம் = உறையைப் பொருத்துதல். |
வல்லபம் |
உறுதியான விருப்பம் |
வல்லவம் |
வல் (=உறுதி) + அவா (=விருப்பம்) + அம் = வல்லவம் >>> வல்லபம் = உறுதியான விருப்பம், நிலையான அன்பு |
வல்லபம் |
வலிமை |
மள்ளம் |
மள்ளம் (=வலிமை) + அம் = மள்ளவம் >>> வல்லபம் |
வல்லபம் |
கொடுஞ்செயல் |
வல்லமம் |
வல் (=வன்மை) + அமை (=செய்) + அம் = வல்லமம் >>> வல்லபம் = வன்மையான செயல். |
வல்லபம் |
திறமை |
வல்லமம் |
வலம் (=வெற்றி, வலிமை) + அமை (=செய்) + அம் = வல்லமம் >>> வல்லவம் = வெற்றியைச் செய்யும் வலிமை. |
வல்லபம் |
உயர்ந்த சாதிக் குதிரை |
வலமம் |
வலம் (=உயர்வு) + மா (=குதிரை) + அம் = வலமம் >>> வல்லபம் = உயர்ந்த சாதிக் குதிரை. |
வல்லபன் |
கணவன் |
வல்லாவன் |
வல (=பிணி, கல) + ஆவி (=உயிர்) + அன் = வல்லாவன் >>> வல்லபன் = உயிருடன் கலந்தவன். |
வல்லபன் |
குதிரைக்காரன் |
வல்லபன் |
வல்லபம் (=குதிரை) >>> வல்லபன் = குதிரைக்காரன் |
வல்லபன் |
திறமைசாலி |
வல்லபன் |
வல்லபம் (=திறமை) >>> வல்லபன் = திறமைசாலி |
வல்லபன் |
பலசாலி |
வல்லபன் |
வல்லபம் (=வலிமை) >>> வல்லபன் = பலசாலி |
வல்லபன் |
தலைவன் |
வல்லமன் |
வலம் (=ஆணை) + அம் (=அழைப்பு) + அன் = வல்லமன் >>> வல்லபன் = ஆணையிட்டு அழைப்பவன். |
வல்லபன் |
இடையன் |
வல்லாவன் |
வல (=செலுத்து, ஓட்டு) + ஆ (=மாடு) + அன் = வல்லாவன் >>> வல்லபன் = மாடுகளை ஓட்டிச் செல்பவன் |
வல்லபன் |
சமைப்பவன் |
பல்லமன் |
பலி (=உணவு) + அமை (=சமை) + அன் = பல்லமன் >>> வல்லபன் = உணவு சமைப்பவன். |
வல்லம் |
வாழை |
வள்ளம் |
வளம் (=செழிப்பு, அழகு, மிகுதி) + அம் (=உணவு) = வள்ளம் >>> வல்லம் = செழிப்பும் அழகும் மிக்க உணவைத் தருவது |
வல்லம் |
இலையாலான கூடை |
பல்லம் |
பலம் (=இலை, வட்டம்) + அம் = பல்லம் >>> வல்லம் = இலையால் வட்டமாகச் செய்யப்பட்டது. |
வல்லயம் |
ஈட்டி |
வல்லயம் |
வல (=செலுத்து, ஏவு) + அயம் (=இரும்பு) = வல்லயம் = ஏவப்படும் இரும்புப் பொருள். |
வல்லரி |
தளிர் |
வள்ளாரி |
வளம் (=பசுமை) + ஆர் (=தோன்று) + இ = வள்ளாரி >>> வல்லரி = பசுமையாகத் தோன்றுவது. |
வல்லரி |
காய்க் கொத்து |
பல்லாரி |
பலம் (=காய்) + ஆர் (=கட்டு, கொத்து) + இ = பல்லாரி >>> வல்லரி = காய்க் கொத்து |
வல்லரி |
பூங்கொத்து |
வல்லாரி |
வலம் (=கட்டு, கொத்து) + ஆர் (=மலர்) + இ = வல்லாரி >>> வல்லரி = மலர்க் கொத்து |
வல்லரி |
படர்கொடி |
வள்ளாரி |
வளை + ஆர் (=பரவு, படர்) + இ = வள்ளாரி >>> வல்லரி = வளைந்து படரக் கூடியது. |
வல்லவை |
மனைவி |
வல்லாவை |
வல (=பிணி, கல) + ஆவி (=உயிர்) + ஐ = வல்லாவை >>> வல்லவை = உயிருடன் கலந்தவள். |
வல்லி |
படர்கொடி |
வல்லி |
வல (=சுற்று, படர்) + இ = வல்லி = சுற்றிப் படர்வது |
வல்லி |
விலங்கு |
வல்லி |
வலம் (=வலிமை, கட்டு, பிணி) + இ = வல்லி = வலிமையாகப் பிணிப்பது. |
வல்லி |
திருமணம் |
வல்லீ |
வல (=பிணி, கட்டு, சேர்) + ஈ (=ஒப்பு) = வல்லீ >>> வல்லி = ஒப்புடையோர் தாலி கட்டிச் சேர்தல். |
வல்லி |
இளம்பெண் |
வாலி |
வால் (=இளமை) + இ = வாலி >>> வல்லி = இளம்பெண் |
வல்லி |
பிரிவு, அளவு |
மாலி |
மால் (=எல்லை, அளவு) + இ = மாலி >>> மல்லி >>> வல்லி = எல்லை / அளவைக் கொண்டது = பிரிவு, அளவு. |
வல்லிகம் |
படர்கொடி |
வல்லிகம் |
வல (=சுற்று, படர்) + இக (=எல்லையறு) + அம் = வல்லிகம் = எல்லையற்றுச் சுற்றிப் படர்வது. |
வல்லிகம் |
மிளகு |
பல்லுக்கம் |
பலி (=உணவு, பயன்விளை) + உக்கம் (=தீ) = பல்லுக்கம் >>> வல்லிகம் = தீயைப் போல பயன்விளைக்கும் உணவு. |
வல்லிசம் |
மிளகு |
பாலீயம் |
பாலை (=வெப்பம், எரிச்சல்) + ஈ (=தா) + அம் (=உணவு) = பாலீயம் >>> வல்லிசம் = எரிச்சல் தரும் உணவு. |
வல்லிகம் |
மஞ்சள் |
வாலுகம் |
வால் (=ஒளி, அழகு) + உகை (=பதி, பொருத்து) + அம் = வாலுகம் >>> வல்லிகம் = ஒளி / அழகைப் பொருந்தச் செய்வது. |
வல்லிகை |
யாழ் |
வள்ளீகை |
வள்ளி (=கொடி, நரம்பு, தண்டு) + இகு (=இசை) + ஐ = வள்ளீகை >>> வல்லிகை = தண்டில் நரம்புகளை உடைய இசைக்கருவி. |
வல்லிசை |
பாம்பு |
வள்ளியை |
வளை + இய (=இயங்கு) + ஐ = வள்ளியை >>> வல்லிசை = வளைந்து இயங்கக் கூடியது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.