சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
வாயுபலம் |
வானவில் |
பயூவளம் |
பை (=ஒளி, நிறம்) + ஊ (=வானம்) + வளை + அம் = பயூவளம் >>> வாயுபலம் = ஒளியினால் வானத்தில் தோன்றும் வண்ண வளைவு |
வாயுபலம் |
மழை |
பாயூவாலம் |
பாய் (=குதி) + ஊ (=வானம்) + ஆலம் (=நீர்) = பாயூவாலம் >>> வாயுபலம் = வானத்தில் இருந்து குதிக்கும் நீர். |
வார் |
நீர் |
வார் |
வார் (=ஒழுகு) >>> வார் = ஒழுகும் இயல்புடையது |
வார் |
மேகம் |
வார் |
வார் (=உயர், வெளிவிடு, ஒழுகு) >>> வார் = உயரத்தில் இருந்து வெளிப்படுத்தி ஒழுகச் செய்வது |
வார்த்தகம், வார்த்தக்கியம் |
மூத்தோர் |
வார்த்தங்கம், வார்த்தங்கியம் |
வார் (=நீளு) + தங்கு (=வாழ்) + அம் / இயம் = வார்த்தங்கம் / வார்த்தங்கியம் >>> வார்த்தகம் = நீண்டு வாழ்ந்தோர் |
வார்த்தவம் |
பருவம் |
வார்த்தாப்பம் |
வார் (=கோது, நீட்டு, பிரி) + தாப்பு (=காலம்) + அம் = வார்த்தாப்பம் >>> வார்த்தவம் = நீண்ட காலப் பிரிவு. |
வார்த்திகம் |
வியாபாரம் |
வர்த்தகம் |
வர்த்தகம் (=வியாபாரம்) >>> வார்த்திகம் |
வார்த்தை |
சொல் |
வாருத்தை |
(2). வரி (=ஒலி) + உத்தி (=சேர்க்கை) + ஐ = வாருத்தை >>> வார்த்தை >>> ஒலிகளின் சேர்க்கை.. |
வாரகம் |
குதிரை |
வாரகம் |
வார் (=கடிவாளம்) + அகை (=செலுத்து) + அம் = வாரகம் = கடிவாளத்தால் செலுத்தப்படுவது. |
வாரகம் |
கடல் |
பாராக்கம் |
பாரம் (=மிகுதி) + ஆக்கம் (=நீர்) = பாராக்கம் >>> வாரகம் = மிகுதியான நீரைக் கொண்டது |
வாரகீரன் |
சுமைகாரன் |
பாராகுறன் |
பாரம் (=சுமை) + ஆகம் (=தோள்) + உறு (=கொள்) + அன் = பாராகுறன் >>> வாரகீரன் = சுமையைத் தோளில் கொள்பவன் |
வாரங்கம் |
கைப்பிடி |
வாரங்கம் |
வாரு (=கொள், பிடி) + அங்கம் (=உறுப்பு) = வாரங்கம் = பிடிக்கும் உறுப்பு. |
வாரங்கம் |
பறவை |
பாறங்கம் |
பற + அங்கம் (=உடல்) = பாறங்கம் >>> வாரங்கம் = பறக்கும் உடலைக் கொண்டது. |
வாரடம் |
வயல் |
பாறறம் |
பாறு (=கிழி, வகு) + அறை (=இடம், நிலம்) + அம் = பாறறம் >>> வாரடம் = பகுக்கப்பட்ட நிலத்தைக் கொண்டது |
வாரடி, வராடி |
நத்தை, சிப்பி |
வாரடி |
வரி (=சித்திரம் எழுது, அழகு) + அடை (=கூடு, பொருந்து) + இ = வாரடி = சித்திரம் எழுதிய அழகிய கூடு பொருந்தியது. |
வாரடை |
சமமற்ற நிலை |
வாரறை |
வார் (=நேர்மை, சமம்) + அறு (=இல்லாகு) + ஐ = வாரறை >>> வாரடை = சமமற்ற நிலை. |
வாரணம் |
சங்கு |
வாராணம் |
வரி (=நீளம், ஒலி, சித்திரமெழுது, மூடு) + ஆணம் (=கொள்கலம்) = வாராணம் >>> வாரணம் = சித்திரம் எழுதி மூடிய கொள்கலமும் நீண்டு ஒலிப்பதும் ஆகியது. |
வாரணம் |
யானை |
பாராணம் |
பருமை + ஆணம் (=உடல்) = பாராணம் >>> வாரணம் = பருத்த உடலைக் கொண்டது. |
வாரணம் |
பன்றி |
பாறாணம் |
பாறு (=கீறு, தோண்டு) + ஆணம் (=இடம், நிலம்) = பாறாணம் >>> வாரணம் = நிலத்தைத் தோண்டுவது. |
வாரணம், வாரணை |
தடை, காப்பு, கேடகம் |
மாறணம் |
மறை (=தடு) + அணம் = மாறணம் >>> வாரணம் = தடுப்பது = தடை, காப்பு, கேடகம். |
வாரணம் |
மறைப்பு, மயக்கம் |
மாறணம் |
மறை + அணம் = மாறணம் >>> வாரணம் = மறைப்பு, அறியாமை, மயக்கம். |
வாரணம் |
சட்டை, கவசம் |
மாறாணம் |
மறை + ஆணம் (=உடல்) = மாறாணம் >>> வாரணம் = உடலை மறைக்க உதவுவது. |
வாரணம் |
ஓட்டம் |
பாரணம் |
பரி (=ஓடு) + அணம் = பாரணம் >>> வாரணம் = ஓட்டம் |
வாரணம் |
சேவற்கோழி |
வாராணம் |
வரி (=நீளம், ஒலி, ஒளி) + ஆணம் (=தோற்றம்) = வாராணம் >>> வாரணம் = ஒளி தோன்றியதும் நீண்டு ஒலிப்பது. |
வாரணம் |
கடல் |
வாரணம் |
வார் (=நீர்) + அணை (=அடை, சேர்) + அம் = வாரணம் = நீர் சேரும் இடம். |
வாரம் |
நியமித்த வரிசை |
வாரம் |
வரி (=ஒழுங்கு, வரிசை, நியமி) + அம் = வாரம் = நியமிக்கப்பட்ட ஒழுங்கு / வரிசை முறை. |
வாரம் |
உரிமை |
வாரம் |
வரி (=நியமி, கட்டு, பிணை + அம் = வாரம் = நியமித்த பிணை |
வாரம் |
வரிப்பணம் |
வரி |
வரி + அம் = வாரம் |
வாரம், வாரி |
பங்கு, பாதி |
பாறம் |
பாறு (=பிரி, பங்கிடு) + அம் = பாறம் >>> வாரம் = பங்கு, பாதி |
வாரம் |
அன்பு |
பரி |
பரி (=அன்பு) + அம் = பாரம் >>> வாரம். |
வாரம் |
பக்கபாதம் |
வாரம் |
வாரம் (=பக்கம்) >>> வாரம் = ஒருபக்கமாகச் சாய்தல். |
வாரம், வாரி |
தடை, சுவர் |
மாறம் |
மறை (=தடு) + அம் = மாறம் >>> வாரம் = தடை, சுவர் |
வாரம் |
திரை |
மாறம் |
மறை + அம் = மாறம் >>> வாரம் = மறைப்பது. |
வாரம் |
வாசல் |
வாரி |
வாரி (=வழி, வாசல்) + அம் = வாரம் |
வாரம் |
கூட்டம் |
வாரம் |
வரி (=மொய், திரள்) + அம் = வாரம் = திரள், கூட்டம் |
வாரம் |
கடல் |
வரி |
வரி (=கடல்) + அம் = வாரம். |
வாரம் |
பாத்திரம் |
வாரம் |
வார் (=நீர், ஊற்று) + அம் = வாரம் = நீரை ஊற்ற உதவுவது. |
வாரம் |
தடவை |
பார் |
பார் (=தடவை) + அம் = பாரம் >>> வாரம் |
வாரம் |
பாட்டு |
வரி |
வரி (=பாட்டு) + அம் = வாரம் |
வாரம் |
எல்லை |
வரை |
வரை (=எல்லை) + அம் = வாரம் |
வாரம் |
நீர்க்கரை |
வாரம் |
வரி (=நீளம், கட்டு, ஓடு) + அம் (=நீர்) = வாரம் = நீரைக் கட்டுப்படுத்தி நீளமாக ஓடுவது. |
வாரவாணம் |
சட்டை, கவசம் |
மறைப்பாணம் |
மறைப்பு + ஆணம் (=உடல்) = மறைப்பாணம் >>> வாரவாணம் = உடலுக்கான மறைப்பு. |
வாரவாணி |
விலைமாது |
வாரவாணி |
வாரம் (=பணம்) + ஆணம் (=அன்பு, பற்றுக்கோடு) + இ = வாரவாணி = பணத்தையே பற்றுக்கோடாகக் கொண்டு அன்பு காட்டுபவள். |
வாரவாரம் |
மார்புக் கவசம் |
மறைமாரம் |
மறை + மார் (=மார்பு) + அம் = மறைமாரம் >>> வாரவாரம் = மார்பினை மறைப்பது. |
வாராகரம் |
கடல் |
பாராக்கரம் |
பரி (=மிகுதி) + ஆக்கம் (=நீர்) + அரம் (=பள்ளம்) = பாராக்கரம் >>> வாராகரம் = மிக்க நீருடைய பள்ளம். |
வாராகி |
பூமி |
பாராக்கி |
பரி (=சூழ்) + ஆக்கம் (=நீர்) + இ = பாராக்கி >>> வாராகி = நீரால் சூழப்பட்டது = பூமி |
வாராசனம் |
நீர்க்குடம் |
வாரயணம் |
வாரம் (=பாத்திரம்) + அயம் (=நீர்) + அணம் = வாரயணம் >>> வாராசனம் = நீர்ப் பாத்திரம் |
வாராவதி |
பாலம் |
வாரப்பத்தி |
வரி (=ஓடு, கட) + அப்பு (=நீர்) + அத்தம் (=வழி) + இ = வாரப்பத்தி >>> வாராவதி = நீரைக் கடக்கும் வழி. |
வாரி |
தடு |
வாரி |
வாரம் (=தடை) >>> வாரி = தடு |
வாரி |
நீர் |
வாரி |
வார் (=ஒழுகு) + இ = வாரி = ஒழுகும் இயல்பினது = நீர். |
வாரி |
வெள்ளம் |
வாரி |
வார் (=ஒழுகு, உயர்) + இ = வாரி = உயரமாக எழுந்து ஒழுகக் கூடியது = வெள்ளம். |
வாரி |
கடல் |
வரி |
வரி (=கடல்) >>> வாரி |
வாரி |
நீர்நிலை |
வாரி |
வார் (=நீர்) + இ = வாரி = நீரை உடையது = நீர்நிலை. |
வாரி |
நூல் |
வாரி |
வரி (=எழுத்து) >>> வாரி = எழுத்துக்களைக் கொண்டது |
வாரி |
வீணை |
வாரி |
வார் (=மீட்டு, நீளு, கம்பி) + இ = வாரி = மீட்டப்படும் நீளமான கம்பிகளைக் கொண்டது. |
வாரி |
புல்லாங்குழல் |
வாரி |
வரி (=இசை, மூங்கில், நீளம்) >>> வாரி = நீளமான மூங்கில் இசைக்கருவி. |
வாரி |
யானைக் கோட்டம் |
வாரி |
வாரி (=பெருவெளி அரங்கு) >>> வாரி = யானைகளை அகப்படுத்தும் இடம் / கட்டிவைக்கும் இடம்.. |
வாரி |
கயிறு |
வாரி |
வார் (=கட்டு) + இ = வாரி = கட்ட உதவுவது |
வாரி |
வழி, வாசல் |
மாறு, வாரி |
(1). மாறு (=வழி) + இ = மாறி >>> வாரி. (2). பரி (=ஓடு, செல்) >>> வாரி = ஓடுவதற்கு / செல்வதற்கு ஆனது. |
வாரி |
கதவு |
மாறி |
மறை (=மூடு) + இ = மாறி >>> வாரி = மூட உதவுவது |
வாரிசம் |
தாமரை |
வாரியம் |
வரி (=நீர், தீ, மலர்) + இயை (=ஒப்பு) + அம் = வாரியம் >>> வாரிசம் = நீரில் எரியும் தீயை ஒத்த மலர். |
வாரிசாதம் |
தாமரை |
வரிசாத்தம் |
வரி (=வண்டு, நீர், மலர்) + சாத்து (=மூடு) + அம் = வரிசாத்தம் >>> பாரிசாதம் = வண்டுகளை மூடிக்கொள்ளும் நீர்மலர். |
வாரிசம் |
சங்கு |
வாரிசம் |
வரி (=நீளம், ஒலி, கடல்) + இசை + அம் (=அழகு, வெண்மை) = நீண்ட ஒலியை இசைக்கும் வெண்ணிற கடற்பொருள். |
வாரிசம் |
உப்பு |
வாரீயம் |
வாரி (=கடல்) + ஈ (=கொடு) + அம் (=வெண்மை, உணவு) = வாரீயம் >>> வாரிசம் = கடல் கொடுக்கும் வெண்ணிற உணவு. |
வாரிசரம் |
மீன் |
வாரிசரம் |
வாரி (=கடல்) + சரம் (=இயக்கம், அம்பு) = வாரிசரம் = கடலில் இயங்கும் / பாயும் அம்பு போன்றது. |
வாரிசு |
குழந்தை |
மறி |
மறி (=குட்டி) + உ = மறியு >>> வாரிசு = குழந்தை, குட்டி |
வாரிசு |
உரிமை உடையவர் |
வாரியு |
வாரம் (=உரிமை) + இயை (=பொருந்து) + உ = வாரியு >>> வாரிசு = உரிமை பொருந்தியவர். |
வாரிதம் |
மேகம் |
மாரிறம் |
மாரி (=மழை) + இறு (=கொடு) + அம் = மாரிறம் >>> வாரிதம் = மழையைக் கொடுப்பது. |
வாரிதம் |
தடை |
மாறிறம் |
மறை (=தடு) + இறு (=நிறுத்து) + அம் = மாறிறம் >>> வாரிதம் = தடுத்து நிறுத்துவது. |
வாரிதி |
கடல் |
வாரிறி |
வாரி (=நீர்) + இறை (=மிகுதி, தங்கல்) + இ = வாரிறி >>> வாரிதி = நீர் மிகுதியாகத் தங்கும் இடம். |
வாரிநிதி |
கடல் |
வாரிநிதி |
வாரி (=நீர்) + நிதி (=செல்வம்) = வாரிநிதி = நீர்ச் செல்வ மிக்கது |
வாரியம் |
நிருவாகப் பிரிவு |
பாரியம் |
பரி (=அறு, பிரி, நிருவாகி) + அம் = பாரியம் >>> வாரியம் = நிருவாகப் பிரிவு. |
வாரியம் |
விசாரணை |
பாரியம் |
பரி (=வாங்கு, கேள், அறி) + அம் = பாரியம் >>> வாரியம் = கேட்டு வாங்கி அறிதல். |
வாரியன் |
குதிரைப் பாகன் |
பாரியன் |
பரி (=குதிரை, ஓட்டு) + அன் = பாரியன் >>> வாரியன் = குதிரையை ஓட்டுபவன். |
வாரியுற்பவம் |
தாமரை |
வாரியுருப்பவம் |
வரி (=நீர், தீ, மலர்) + உரு (=எரி) + பவ (=தோன்று) + அம் = வாரியுருப்பவம் >>> வாரியுற்பவம் = நீரில் எரியும் தீயைப் போலத் தோன்றும் மலர். |
வாரிரூகம் |
தாமரை |
வாருரூக்கம் |
வரி (=நீர், மலர்) + உரு (=எரி, தோன்று) + உக்கம் (=தீ) = வாருரூக்கம் >>> வாரிரூகம் = நீரில் எரியும் தீ போலத் தோன்றும் மலர். |
வாரிவாகம் |
மேகம் |
வாரிவாங்கம் |
வாரி (=கடல்) + வாங்கு (=உட்கொள், ஒலி, அலை) + அம் = வாரிவாங்கம் >>> வாரிவாகம் = கடல்நீரை உட்கொண்டு ஒலித்தவாறு அலைவது = மேகம். |
வாரீசம் |
கடல் |
மாரீயம் |
மாரி (=மேகம்) + ஈ (=கொடு) + அம் (=நீர்) = மாரீயம் >>> வாரீசம் = மேகங்களுக்கு நீரைக் கொடுப்பது. |
வாருண்டம் |
பீளை, குரும்பி |
மாறிட்டம் |
மாறு (=கழி) + இட்டு (=சிறுமை) + அம் = மாறிட்டம் >>> வாருண்டம் = சிறிய கழிவுகள் = பீளை, குரும்பி போன்றன. |
வாருணம் |
கடல் |
மாருணம் |
மாரி (=மேகம்) + உண் + அம் (=நீர்) = மாருணம் >>> வாருணம் = மேகங்கள் உண்ணும் நீர் |
வாருணம் |
பெருங்குதிரை |
பாருன்னம் |
பருமை (=பெருமை) + உன்னி (=குதிரை) + அம் = பாருன்னம் >>> வாருணம் = பெருங்குதிரை. |
வாருணம், வாருணி |
கள் |
மயருணம் |
மயர் (=மயக்கம்) + உண் + அம் (=நீர்) = மயருணம் >>> மாருணம் >>> வாருணம் = மயக்கம் தரும் நீருணவு. |
வாலம், வால், வாலதி |
வால், தலைமயிர் |
வாளம் |
வளை (=தாழ், தொங்கு) + அம் = வாளம் >>> வாலம் >>> வால் = தாழ்ந்து தொங்குவது = தலைமயிர், |
வாலகம் |
வால் |
வாளங்கம் |
வளை (=தாழ், தொங்கு) + அங்கம் (=உறுப்பு) = வாளங்கம் >>> வாலகம் = தாழ்ந்து தொங்கும் உறுப்பு. |
வாலகன், வாலன் |
இளைஞன் |
வாலாகன் |
வால் (=இளமை) + ஆகம் (=உடல்) + அன் = வாலாகன் >>> வாலகன் = இளமையான உடலைக் கொண்டவன். |
கிருமி |
அழிக்கும் நுண்ணுயிரி |
குறுவீ |
(2) குறுமை (=சிறுமை, நுண்மை) + வீ (=அழிவு) = குறுவீ >>> கிருமி = அழிவைத் தரும் நுண்ணுயிரி. |
வாலகிருமி |
பேன் |
வாலகிருமி |
வாலம் (=தலைமயிர்) + கிருமி (=நுண்ணுயிரி) = வாலகிருமி = தலைமயிரில் இருக்கும் நுண்ணுயிரி |
வாலதி |
யானைவால் |
வாலத்தி |
வால் + அத்தி (=யானை) = வாலத்தி >>> வாலதி |
வாலம் |
துண்டு |
பாளம் |
பாளம் (=துண்டு) >>> வாலம் |
வாலம் |
கிழிந்ததுணி |
வாளம் |
வள் (=வெட்டு, கிழி) + அம் = வாளம் >>> வாலம் = கிழிந்தது |
வாலம் |
இளமை |
வால் |
வால் (=இளமை) + அம் = வாலம் |
வாலம் |
குறுவேல் |
வாலம் |
வலி (=செலுத்து, இரும்பு) + அம் = வாலம் = செலுத்தப்படும் இரும்பு |
வாலவாயம், வாலவாயசம் |
வைடூரியம் |
பாலவயம் |
பல் (=கண்) + அம் (=பொருந்து, ஒளி) + வயம் (=கோடு) = பாலவயம் >>> வாலவாயம் = கண்ணில் பொருந்திய ஒளிக்கோடு போன்றது. |
வாலாதி |
பந்தயக் குதிரை |
வாலாதி |
வல (=சுற்று) + ஆதி (=வட்டம்) = வாலாதி = வட்டமாகச் சுற்றி வரும் பந்தயக் குதிரை |
வாலாயம் |
வழக்கமான செயல் |
வாளாயம் |
வளமை (=வழக்கம்) + ஆயம் (=கடமை, செயல்) = வாளாயம் >>> வாலாயம் = வழக்கமான கடமை. |
வாலிகை, வாலுகம் |
மணல் |
வாலிகை |
வால் (=வெண்மை) + இகு (=உடை, பொடியாகு) + ஐ = வாலிகை = உடைந்து பொடியான வெண்பொருள். |
வாலிபம் |
இளமைப் பருவம் |
வாலீவம் |
வால் (=இளமை) + ஈவு (=பேறு) + அம் = வாலீவம் >>> வாலிபம் = இளமைப் பேறு. |
வாலிபன் |
இளைஞன் |
வாலீவன் |
வாலிபம் (=இளமை) + அன் = வாலிபன் = இளைஞன் |
வாலியம் |
இளமை |
வாலியம் |
வால் (=இளமை) + இயம் = வாலியம் |
வாலீசன் |
அறிவிலான் |
மாலியன் |
மால் (=மயக்கம், அறிவின்மை) + இயன் = மாலியன் >>> வாலீசன் = அறிவின்மை கொண்டவன். |
வாலுவன் |
சமையல் காரன் |
பாலுவன் |
பலி (=உணவு) + உவி (=சமை) + அன் = பாலுவன் >>> வாலுவன் = உணவு சமைப்பவன் |
வாலுவம் |
சமையல் |
பாலுவம் |
பலி (=உணவு) + உவி (=சமை) + அம் = பாலுவம் >>> வாலுவம் = உணவு சமைத்தல். |
வாலுறை |
அடுப்பு |
பாலுறை |
பால் (=வெப்பம்) + உறை (=செறி, இடம்) = பாலுறை >>> வாலுறை = வெப்பம் செறிந்த இடம். |
வாலூகம் |
நஞ்சு |
பாலுகம் |
பலி (=உணவு) + உகு (=அழி, கொல்) + அம் = பாலுகம் >>> வாலூகம் = கொல்லும் உணவு. |
வாலேயம், வாலேபம் |
கழுதை |
மாலேயம் |
மால் (=மயக்கம், அறிவின்மை) + ஏய் (=பொருந்து) + அம் = மாலேயம் >>> வாலேயம் = அறிவின்மை பொருந்தியது. |
வாலை |
இளம்பெண் |
வாலை |
வால் (=இளமை) + ஐ = வாலை = இளம்பெண் |
வாலை |
பாத்திரம் |
வல்லம் |
வல்லம் (=பாத்திரம்) + ஐ = வல்லை >>> வாலை |
வாலை |
பாதரசம் |
வாலை |
வால் (=வெண்மை) + ஐ = வாலை = வெண்மையானது |
வாவயம் |
துளசி |
பாவயம், பைபாயம் |
(1). பா (=பரவு, மணம்வீசு) + வை (=புல், இலை) + அம் (=உணவு) = பாவயம் >>> வாவயம் = மணம்வீசும் இலை உணவு. (2). பை (=பசுமை) + பாய் (=பரவு, மணம்வீசு) + அம் (=உணவு) = பைபாயம் >>> வாவயம் = மணம்வீசும் பசுமை உணவு. |
வாளகம் |
வெட்டிவேர் |
மாலகம் |
மல் (=நறுமணம்) + அகம் (=பூமி, உள், பொருள்) = மாலகம் >>> வாளகம் = பூமிக்கு உள்ளிருக்கும் நறுமணப் பொருள். |
வாளம் |
வட்டம் |
வலம் |
வலம் (=வட்டம்) >>> வாளம் |
வாளி |
பாத்திரம் |
வள்ளம் |
வள்ளம் (=பாத்திரம்) + இ = வாளி |
வாளிகை, வாளி |
காதணி |
வாளிகை |
வள் (=காது) + இகம் (=பொருள்) + ஐ = வாளிகை = காதில் அணியும் பொருள். |
வாற்கம், வாற்கலம் |
மரப்பட்டை |
மரக்கம் |
மரம் + அக்கு (=தோல்) + அம் = மரக்கம் >>> வாற்கம் = மரத்தின் தோல். |
வாற்சகம் |
பசுக்கூட்டம் |
பாற்சங்கம் |
பால் + சங்கம் (=கூட்டம்) = பாற்சங்கம் >>> வாற்சகம் = பால் தரும் மாடுகளின் கூட்டம். |
வான்மீகம் |
புற்று |
வன்மீகம் |
வன்மீகம் (=கறையான் புற்று) >>> வான்மீகம் |
வானப்பிரத்தம், வானப்பிரச்`தம் |
மனைவியுடன் காட்டில் வசித்தல் |
வானவீரத்தம் |
வனம் (=காடு) + வீரை (=மனைவி) + அத்து (=தங்கு) + அம் = வானவீரத்தம் >>> வானப்பிரத்தம் >>> வானப்பிரச்`தம் = மனைவியுடன் காட்டில் தங்குதல். |
வானம் |
உலர்ந்தது, உலர்ச்சி |
வானம் |
வன்னி (=எரி, உலர்) + அம் (=நீர்) = வானம் = நீர் உலர்ந்தது., நீரின் உலர்ச்சி. |
வானம் |
கனி, பழம் |
பண்டம் |
பண்டம் (=பழம்) >>> வண்ணம் >>> வானம் |
வானம் |
வாழ்க்கை |
மானம் |
மன்னு (=தங்கு, வாழ்) + அம் = மானம் >>> வானம் = வாழ்வு |
வானம் |
நீங்குகை |
பாணம் |
பணி (=பரவு, நீங்கு) + அம் = பாணம் >>> வானம் |
வானம் |
வாசனை |
மணம் |
மணம் (=வாசனை) >>> வானம் |
வானம் |
நீரலை |
வாணம் |
வணை (=வளை) + அம் (=நீர்) = வாணம் >>> வானம் = வளைவுடைய நீர். |
வானம் |
புற்பாய் |
வயணம் |
வை (=புல்) + அணை (=படுக்கை, பாய்) + அம் = வயணம் >>> வாணம் >>> வானம் = புல்லால் ஆன பாய் |
வானம் |
பள்ளம், குழி |
பணை |
பணை (=பள்ளம்) + அம் = பாணம் >>> வானம் |
வானரம் |
குரங்கு |
வானரம் |
வால் + நரம் (=மனிதன்) = வானரம் = வால் உடைய மனிதன். |
வானலம் |
துளசி |
மாணலம் |
மணம் (=வாசனை) + நலம் (=நன்மை, இனிமை) = மாணலம் >>> வானலம் = நல்ல இனிய வாசம் கொண்டது. |
வானி |
கிளைகளின் கவிப்பு |
பாணி |
பணை (=மரக்கிளை, செறிவு) + இ = பாணி >>> வானி = செறிந்த மரக்கிளைகள். |
வானி |
துணிக்கொடி, துணிப்பட்டம் |
வானி |
பணி (=பர, பற, பட்டாடை) >>> வானி = பறக்கும் பட்டாடை = துணிக்கொடி, துணிப்பட்டம். |
வானி |
கூடாரம் |
மனை |
மனை (=வீடு) + இ = மானி >>> வானி = கூடாரம். |
வானி |
மின்னல் |
வானீ |
வான் (=வானம்) + ஈ (=பிள, உண்டாக்கு) = வானீ >>> வானி = வானத்தைப் பிளப்பதுபோல உண்டாக்கப்படுவது. |
வானி |
போர்ப்படை |
பாணி |
பணை (=பெரு, கூடு, சமம், எதிர்ப்பு) + இ = பாணி >>> வானி = எதிர்க்கும் கூட்டம். |
வானி |
ஓமம் |
மாணீ |
மணம் (=வாசனை) + ஈ (=கொடு, அளி) = மாணீ >>> வானி = வாசனை அளிப்பது. |
வானிதம் |
சர்க்கரைத் தூள் |
மாணிதம் |
மண் (=பொடி, துகள்) + இதம் (=இனிமை) = மாணிதம் >>> வானிதம் = இனிப்பான பொடி. |
வானியம் |
மரம் |
வானியம் |
வனம் (=காடு) + இயை (=நிரம்பு) + அம் = வானியம் = காட்டில் நிறைந்திருப்பது. |
வாச்`து |
வீட்டுடையது |
பாத்து |
பதி (=வீடு) + உ = பாத்து >>> வாச்`து = வீட்டினுடையது |
வாச்`தவம் |
உண்மை நிலை |
வாய்த்தவம் |
வாய் (=உண்மை) + தவம் (=நிலை) = வாய்த்தவம் >>> வாச்`தவம் = உண்மை நிலை. |
மகிழ்ச்சி, தொடர்ந்து வாசிக்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. :)
நீக்கு