சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
அண்டம் |
முட்டை, உருண்டை |
அட்டம் |
அடை (=அடைகா) + அம் = அட்டம் >>> அண்டம் = அடைக்காக்கப் படுவது = முட்டை > உருண்டை. |
அண்டம் |
பூமி |
அட்டம் |
அடை (=கனம், பெருமை, தங்கு, இடம்) + அம் = அட்டம் >>> அண்டம் = பெரிய தங்குமிடம் = பூமி |
அண்டம் |
வானம் |
அற்றம் |
அற்றம் (=இன்மை, வெளி) >>> அட்டம் >>> அண்டம் = பெருவெளி |
அண்டம் |
விதை |
ஏற்றம் |
ஏறு (=உயிர், தோன்று) + அம் = ஏற்றம் >>> அட்டம் >>> அண்டம் = உயிர் தோன்றுவது = விதை. |
அண்டர் |
தேவர் |
அண்டர் |
அண்டம் (=வானம்) >>> அண்டர் = வானுலகத்தவர் |
அண்டா |
வட்டமான கொள்கலம் |
அண்டை |
அண்டு (=அடை, கொள், வளையம், வட்டம்) + ஐ = அண்டை >>> அண்டா = வட்டமான கொள்கலம். |
அகிஞ்சை, அகிம்சை |
வருத்துதல் இல்லாமை |
அகுழை |
(2) அகை (=அறு, இல்லாகு) + உழை (=வருத்து) = அகுழை >>> அகிசை >>> அகிஞ்சை >>> அகிம்சை = வருத்துதல் இல்லாமை. |
அண்ணை |
முட்டாள் |
எண்ணை |
எண் (=கருது, சிந்தி) + நை (=அழி, இல்லாகு) = எண்ணை >>> அண்ணை = சிந்தனை இல்லாதவன்.. |
அணிமா |
அணுவாகும் ஆற்றல் |
அணீமா |
அணு (=நுண்மை) + ஈ (=படை, ஆக்கு) + மா (=ஆற்றல்) = அணீமா >>> அணிமா = நுண்ணிதாக ஆகும் ஆற்றல். |
அணு |
நுட்பமானது |
எண்ணு |
எண்மை (=நுட்பம்) + உ = எண்ணு >>> அணு = நுட்பமானது. |
அணு |
உயிர் |
எண்ணு |
எண் (=தோன்று, அனுபவி) + உ = எண்ணு >>> அணு = தோன்றி அனுபவிப்பது = உயிர். |
அத்தம் |
கண்ணாடி |
அழற்றம் |
அழல் (=ஒளிர்) >>> அழற்று (=எதிரொளி, பிரதிபலி) + அம் = அழற்றம் >>> அயத்தம் >>> ஐத்தம் >>> அத்தம் = பிரதிபலிப்பது. |
அத்தம் |
வழி |
ஆறு |
ஆறு (=வழி) + அம் = அற்றம் >>> அத்தம் |
அத்தம் |
காடு |
அத்தம் |
அத்து (=செறி, இடம்) + அம் = அத்தம் = செறிவுடைய இடம். |
அத்தம் |
பொருள், செல்வம் |
ஆற்றம் |
ஆற்று (=வாழ், தேடு, திரட்டு) + அம் = ஆற்றம் >>> அத்தம் = வாழ்வதற்காக தேடித் திரட்டப்படுவது. |
அத்தம் |
சொற்பொருள் |
அற்றம் |
அறி + அம் (=சொல்) = அற்றம் >>> அத்தம் = சொல்லில் இருந்து அறியப்படுவது. |
அத்தம் |
பாதி |
அற்றம் |
அறு + அம் = அற்றம் >>> அத்தம் = அறுக்கப்பட்டது. |
அத்தம் |
கை |
ஆற்றம் |
ஆற்று (=செய், உதவு) + அம் = ஆற்றம் >>> அத்தம் = செய்ய உதவுவது |
அத்தம் |
ஆடை |
ஏந்தம் |
ஏந்து (=தரி) + அம் = ஏந்தம் >>> அத்தம் = தரிக்கப்படுவது |
அத்தாய் |
ஆடை |
ஏந்தை |
ஏந்து (=தரி) + ஐ = ஏந்தை >>> அத்தை >>> அத்தாய் = தரிக்கப்படுவது |
அத்தமனம், அச்`தமனம் |
ஒளி மறைவு |
அற்றவானம் |
அற்றம் (=ஒழிவு) + வான் (=ஆகாயம், ஒளி) + அம் = அற்றவானம் >>> அத்தமனம் >>> அச்`தமனம் = ஆகாயத்தில் ஒளியின் ஒழிவு. |
அத்தமனம், அச்`தமனம் |
அழிவு |
அற்றவணம் |
அற்றம் (=அழிவு) + அணம் = அற்றவணம் >>> அத்தமனம் >>> அச்`தமனம் = அழிவு. |
அத்தமம், அச்`தமம் |
ஒளி மறைவு |
அற்றமம் |
அற்றம் (=ஒழிவு) + அம் (=அழகு, ஒளி) + அம் = அற்றமம் >>> அத்தமம் >>> அச்`தமம் = ஒளியின் ஒழிவு. |
அத்தமயம், அச்`தமயம் |
ஒளி மறைவு |
அற்றவாயம் |
அற்றம் (=ஒழிவு) + ஆய் (=அழகு, ஒளி) + அம் = அற்றவாயம் >>> அத்தமயம் >>> அச்`தமயம் = ஒளியின் ஒழிவு. |
அத்தமி |
ஒளி மறை |
அற்றமி |
அற்றமம் (=ஒளி மறைவு) >>> அற்றமி >>> அத்தமி. |
அத்தவாளம் |
மேலாடை |
ஏற்றபாளம் |
ஏற்றம் (=மேன்மை, மேல்) + பாளம் (=ஆடை) = ஏற்றபாளம் >>> அத்தவாளம் = மேலாடை. |
அத்தவாளம் |
முந்தானை |
அத்தவாலம் |
அத்தம் (=ஆடை) + வால் (=நுனி) + அம் = அத்தவாலம் >>> அத்தபாளம் = ஆடையின் நுனி. |
அத்தவாளம் |
காடு |
அத்தவளம் |
அத்தம் (=இடம்) + அள் (=செறிவு) + அம் = அத்தவளம் >>> அத்தவாளம் = செறிவுடைய இடம். |
அத்தன் |
தந்தை |
ஏற்றன் |
ஏறு (=உயிர், தோற்றுவி) + அன் = ஏற்றன் >>> அத்தன் = உயிரைத் தோன்றச் செய்தவன் = தந்தை. |
அத்தன் |
குரு, முதியவன் |
ஏற்றன் |
ஏறு (=உயர், முதிர்) + அன் = ஏற்றன் >>> அத்தன் = உயர்வுடையவன், முதிர்ந்தவன் = குரு, முதியவன் |
அத்தாச்சி, அத்தாட்சி |
கையெழுத்து |
அத்தாச்சி |
அத்தம் (=கை) + ஆசு (=எழுது) + இ = அத்தாச்சி >>> அத்தாட்சி = கையெழுத்து. |
அத்தாச்சி, அத்தாட்சி |
கண்ட சாட்சி |
அற்றாயி |
அறி + ஆயம் (= இரகசியம், ஆள்) + இ = அற்றாயி >>> அத்தாசி >>> அத்தாச்சி >>> அத்தாட்சி = இரகசியத்தை அறிந்த ஆள். |
அத்தாச்சி, அத்தாட்சி |
சான்று |
அத்தாயி |
அத்தம் (=பொருள்) + ஆயம் (=கூட்டம், வலிமை, உறுதி) + இ = அத்தாயி >>> அத்தாசி >>> அத்தாச்சி >>> அத்தாட்சி = உறுதி கூட்டும் பொருள். |
அத்தாணி |
பெரிய அறை |
அற்றாணி |
அறை + ஆணி (=பெருமை) = அற்றாணி >>> அத்தாணி = பெரிய அறை |
அத்தாயம் |
மிதிக்கப்படும் சக்கரம் |
எற்றாழம் |
எற்று (=மிதி) + ஆழி (=சக்கரம்) + அம் = எற்றாழம் >>> அத்தாயம் = மிதிக்கக்கூடிய சக்கரம். |
அத்தாயம் |
மேலே தூக்கிச் சுழற்றுதல் |
ஏற்றாழம் |
ஏற்று (=தூக்கு) + ஆழி (=வட்டம், சுழற்று) + அம் = ஏற்றாழம் >>> அத்தாயம் = தூக்கிச் சுழற்றுதல். |
அத்தாழம் |
மாலைநேரம் |
எற்றாழம் |
எல் (=ஒளி, வெயில்) + தாழ் (=குறை) + அம் (=நேரம்) = எற்றாழம் >>> அத்தாழம் = வெயில் குறையும் நேரம். |
அத்தாளம் |
இரவுச் சாப்பாடு |
ஆற்றலம் |
ஆற்று (=உண்ணு) + அல் (=இரவு) + அம் = ஆற்றலம் >>> அத்தாளம் = இரவு உணவு. |
அத்தி |
அக்கா |
ஏற்றி |
ஏறு (=உயரம், முதல், தோன்று) + இ = ஏற்றி >>> அத்தி = முதலில் தோன்றியவள். |
அத்தி |
கடல் |
அந்தை |
அம் (=நீர்) + தை (=அடை, நிறை) = அந்தை >>> அத்தி = நீர் நிறைந்தது |
அத்தி |
பிச்சைக்காரன் |
ஆற்றீ |
ஆற்று (=பசிதணி, உண்ணு, உதவு) + ஈ (=கொடு) = ஆற்றீ >>> அத்தி = உதவியாகக் கொடுத்ததை உண்பவன். |
அத்தி |
எலும்பு |
அற்றீ |
(2) அல் (=தங்கு, எதிர்மறை) + தீ (=எரி) = அற்றீ >>> அத்தி = எரியாமல் தங்கிவிடுவது. |
அத்தி |
கொலை |
அற்றி |
அறு (=கொல்) + இ = அற்றி >>> அத்தி = கொலை. |
அத்தி |
யானை |
ஏற்றி |
ஏறு (=உயர், பெரு, உயிர்) + இ = ஏற்றி >>> அத்தி = உயரமான பெரிய உயிரி = யானை. |
அத்திகாயம் |
ஐந்து சேர்ந்த தொகுதி |
ஐந்திகாயம் |
ஐந்து + இகு (=திரள், சேர்) + ஆயம் (=தொகுதி) = ஐந்திகாயம் >>> அத்திகாயம் = ஐந்து சேர்ந்த தொகுதி. |
அத்தியக்கம் |
கண்ணால் அறிவது |
அற்றியாகம் |
அறி + ஆகம் (=கண்) = அற்றியாகம் >>> அத்தியக்கம் = கண்ணால் அறிவது |
அத்தியக்கன், அத்தியட்சன் |
தலைவன் |
ஆதியக்கன் |
ஆதி (=முதல், முன்) + இயக்கு + அன் = ஆதியக்கன் >>> அத்தியக்கன் = முன்னிருந்து இயக்குபவன். |
அத்தியக்கினி |
தீயின் முன் கொடுப்பது |
ஆதியக்கீனி |
ஆதி (=முதல், முன்) + அகை (=எரி) + ஈனு (=கொடு) + இ = ஆதியக்கீனி >>> அத்தியக்கினி = தீயின் முன்னால் கொடுக்கப்படுவது. |
அத்தியயனம், அத்தியாபனம், அத்தியானம் |
கல்வி, ஆராய்ச்சி |
அற்றிழயணம் |
அறி + இழை (=ஆராய்) + அணம் = அற்றிழயணம் >>> அத்தியயனம் >>> அத்தியானம் = ஆராய்ந்து அறிதல். |
அத்தியயனம், அத்தியாபனம் |
வேதம் ஓதுதல் |
அற்றிழயணம் |
அறம் (=வேதம்) + இழை (=கூறு, ஓது) + அணம் = அற்றிழயணம் >>> அத்தியயனம் = வேதம் ஓதுதல். |
அத்தியாயம் |
நூல் பிரிவு |
அற்றிழையம் |
(2) அறு (=பிரி) + இழை (=நூல், புத்தகம்) + அம் = அற்றிழையம் >>> அத்தியாயம் = நூல் பிரிவு. |
அத்தியாசம் |
இல்லாத தன்மையை ஏற்றிக் கூறல் |
ஏற்றியசம் |
ஏற்று + இயம் (=தன்மை, சொல்) + அசை (=நீங்கு, இல்லாகு, தங்கு, பொருந்து) + அம் = ஏற்றியசம் >>> அத்தியாசம் = இல்லாத தன்மையை பொருந்துமாறு ஏற்றிக் கூறுதல். |
அத்தியாரோபம் |
இல்லாத தன்மையை ஏற்றிக் கூறல் |
ஏற்றியறொப்பம் |
ஏற்று + இயம் (=தன்மை, சொல்) + அறு (=இல்லாகு) + ஒப்பு (=பொருந்து) + அம் = ஏற்றியறொப்பம் >>> அத்தியாரோபம் = இல்லாத தன்மையை பொருந்துமாறு ஏற்றிக் கூறுதல். |
அத்திரம் |
குதிரை |
ஏத்திறம் |
ஏ (=அம்பு) + திறம் (=தன்மை, உடல்) = ஏத்திறம் >>> அத்திரம் = அம்பின் தன்மையைக் (=விரைதலைக்) கொண்ட உடலினது. |
அத்திரம், அத்திரி |
கழுதை, கோவேறு |
ஆற்றிரம் |
ஆற்று (=சும) + இரி (=செல், ஓடு) + அம் = ஆற்றிரம் >>> அத்திரம் = சுமந்து செல்வது / ஓடுவது. |
அத்திரம் |
எறிபடை |
எய்த்திறம் |
எய் (=செலுத்து, எறி) + திறம் (=வகை) = எய்த்திறம் >>> ஏத்திரம் >>> அத்திரம் = செலுத்தப்படுவது / எறியப்படுவது. |
அத்திரம் |
நிலையற்றது |
அற்றிறம் |
அல் (=எதிர்மறை) + திறம் (=நிலை) = அற்றிறம் >>> அத்திரம் = நிலை அற்றது. |
அத்திரம், அத்திரி |
மலை |
ஏற்றிறம் |
ஏறு (=உயர், பெரு) + இறை (=இடம்) + அம் = ஏற்றிறம் >>> அத்திரம் = உயரமான பெரிய இடம். |
அத்திரம் |
இலந்தை |
அத்தீரம் |
அத்து (=சிவப்பு) + ஈர் (=இனிமை, சிறுமை) + அம் (=உணவு) = அத்தீரம் >>> அத்திரம் = இனிமையான சிறிய செந்நிற உணவு. |
அத்திரி |
ஒட்டகம் |
அத்திரி |
அத்தம் (=பாலைநிலம்) + இரு (=தங்கு, வாழ்) + இ = அத்திரி = பாலைவனத்தில் வாழக் கூடியது. |
அத்திரி |
உலைத் துருத்தி |
எத்தீரி |
எத்து (=காலால் மிதி) + ஈர் (=இழு) + இ = எத்தீரி >>> அத்திரி = காலால் மிதித்து இழுக்கப்படுவது. |
அத்திரி |
அம்பு |
ஆய்த்திறி |
ஆய் (=நுண்மை, கூர்மை, குத்து) + திறம் (=நிலைபேறு, உடல்) + இ = ஆய்த்திறி >>> அத்திரி = உடலில் குத்தி நிலைபெறும் கூர்மையது. |
அத்திவாரம், அச்`திவாரம் |
கட்டுமானம் தாங்குவது |
ஆற்றுவாரம் |
(2) ஆற்று (=சும, தாங்கு) + ஆர் (=கட்டு) + அம் = ஆற்றுவாரம் >>> அத்திவாரம் >>> அச்`திவாரம் = கட்டுமானத்தைத் தாங்குவது. |
அத்திநி |
பெண் யானை |
அத்தினி |
அத்தி (=யானை) + இனி = அத்தினி = பெண் யானை. |
அத்து |
எல்லை |
அற்று |
அறு (=வகு, வரையறு) + உ = அற்று >>> அத்து = வரையறுக்கப் பட்டது. |
அத்துவம், அத்துவா |
வழி |
ஆறு |
ஆறு (=வழி) + அம் = ஆறுவம் >>> அத்துவம் >>> அத்துவா |
அத்துவானம் |
தங்குதல் இல்லா இடம் |
அத்துவணம் |
அத்து (=பொருந்து, தங்கு, இடம்) + அணை (=அவி, ஒழி) + அம் = அத்துவணம் >>> அத்துவானம் = தங்குதல் ஒழிந்த இடம். |
அத்துவிதம், அத்துவைதம் |
இரண்டாக இல்லாதது |
அற்றுமிதம் |
அல் (=எதிர்மறை) + துமி (=வெட்டு, இரண்டாக்கு) + இதம் = அற்றுமிதம் >>> அத்துவிதம் = இரண்டாக இல்லாதது. |
அத்தூரம் |
மரமஞ்சள் |
ஆய்த்துரம் |
ஆய் (=அழகு, ஒளி, மஞ்சள்) + துரு (=மரம்) + அம் = ஆய்த்துரம் >>> அத்தூரம் = மர மஞ்சள். |
அத்தேயம் |
திருடாமை, ஏமாற்றாமை |
அற்றேயம் |
அறு (=இல்லாகு) + ஏய் (=ஏமாற்று, திருடு) + அம் = அற்றேயம் >>> அத்தேயம் = ஏமாற்றாமை, திருடாமை. |
அத்விதீயம் |
ஒப்பின்மை |
அற்றுவீறியம் |
அறு (=இல்லாகு) + வீறு (=ஒப்பு) + இயம் = அற்றுவீறியம் >>> அத்துவீதியம் >>> அத்விதீயம் = ஒப்பில்லாமை. |
அதகம் |
மருந்து |
அற்றகம் |
அற்றம் (=வருத்தம், துன்பம், நோய்) + அகை (=முறி) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = நோயை முறிக்கும் உணவு. |
அதகம் |
உயிரைமீட்கும் உணவு |
அற்றகம் |
அற்றம் (=மரணம்) + அகை (=முறி, தளிர்) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = மரணத்தை முறித்து தளிர்ப்பிக்கும் உணவு. |
அதகம் |
சுக்கு |
அற்றகம் |
அற்றம் (=வறுமை, வறட்சி) + அகை (=கிளை, எரி) + அம் (=உணவு) = அற்றகம் >>> அத்தகம் >>> அதகம் = எரிச்சலூட்டும் வறண்டு கிளைத்த உணவு. |
அதகம் |
வலிமையான உடல் |
ஆற்றாகம் |
ஆற்று (=வலியடை) + ஆகம் (=உடல்) = ஆற்றாகம் >>> ஆத்தாகம் >>> அதகம் = வலுவான உடல். |
அதகன் |
பலசாலி |
ஆற்றாகன் |
அதகம் (=வலுவான உடல்) >>> அதகன் = வலுவான உடலுடையவன் |
அதட்டம் |
வாயின் கீழ்ப் பற்கள் |
அறெயிற்றம் |
அறை (=பிளவு, வாய், பள்ளம், கீழ்) + எயிறு (=பல்) + அம் = அறெயிற்றம் >>>> அதேட்டம் >>> அதட்டம் = வாயின் கீழ்ப் பற்கள். |
அதப்பாதாளம் |
மிக ஆழத்தில் இருப்பது |
அறமாதாளம் |
அற (=மிகவும்) + மா (=இடம்) + தாள் (=அடி) + அம் = அறமாதாளம் >>> அதப்பாதாளம் = மிகவும் அடியில் இருக்கும் இடம். |
பாதாளம், பாதலம் |
மிக அடியில் இருக்குமிடம் |
மாதாளம் |
(2) மா (=மிகுதி, இடம்) + தாள் (=அடி) + அம் = மாதாளம் >>> பாதாளம் >>> பாதலம் = மிகவும் அடியில் இருக்கும் இடம். |
அதப்பு |
அடக்கம், மரியாதை |
ஆறாப்பு |
ஆறு (=தணி, அடங்கு) + ஆப்பு = ஆறாப்பு >>> அதப்பு = அடக்கம், மரியாதை. ஒ.நோ: வீறு + ஆப்பு = வீறாப்பு = துணிச்சல். |
அதம் |
தாழ்வு, கீழ் |
அறம் |
அறை (=பள்ளம், தாழ்வு, கீழ்) + அம் = அறம் >>> அதம் |
அதம் |
அழிவு |
அறம் |
அறு (=அழி) + அம் = அறம் >>> அதம் = அழிவு |
அதமம் |
கீழானது |
அதமம் |
அதம் (=கீழ்) + அம் = அதமம் = கீழானது |
அதர்மம் |
அறமற்றது |
அறாறுவம் |
அறு (=இல்லாகு) + ஆறு (=அறம்) + அம் = அறாறுவம் >>> அதருமம் >>> அதர்மம் = அறம் அல்லாதது. |
அதரம் |
உதடு |
அறாரம் |
அறை (=வாய்) + ஆரி (=கதவு) + அம் = அறாரம் >>> அதாரம் >>> அதரம் = வாயின் கதவுகள். |
அதலம் |
பள்ளமான இடம் |
அறளம் |
அறை (=பள்ளம்) + அளம் (=இடம்) = அறளம் >>> அதலம் = பள்ளமான இடம். |
அதவை, அதமன் |
கீழானவன் |
அதவை, அதமன் |
அதம் (=கீழ்) + ஐ / அன் = அதவை / அதமன் = கீழானவன். |
அதளை |
காவல் வீடு |
அறளை |
அறை (=வீடு) + அளி (=பாதுகா) + ஐ = அறளை >>> அதளை = காவல் வீடு. |
அதளை |
புளியுருண்டை |
எதளை |
எதளா (=புளி) + ஐ = எதளை >>> அதளை = புளி உருண்டை. |
அதன்மம் |
அறமற்றது |
அறணைமம் |
அறம் + அணை (=அழி) + மம் = அறணைமம் >>> அதன்மம் = அறம் அழிந்தது. |
அதன்மன் |
இழிந்தவன் |
அறணைமன் |
அதன்மம் (=அறமற்றது) + அன் = அதன்மன் = அறமற்றதைச் செய்பவன் |
அதனம் |
மிகுதி |
அதணம் |
அதை (=வீங்கு, மிகு) + அணம் = அதணம் >>> அதனம் = மிகுதி |
அதனா |
பெருமையற்றது, இழிந்தது |
அற்றனை |
அல் (=எதிர்மறை) + தன்மை (=பெருமை) + ஐ = அற்றனை >>> அத்தனய் >>> அதனா = பெருமையற்றது, இழிவானது. |
அதாலத்து |
நீதிமன்றம் |
அறளாற்று |
அறம் (=நீதி) + அளம் (=இடம்) + ஆற்று (=செய், நடாத்து) = அறளாற்று >>> அதாலத்து = நீதி நடாத்தும் இடம். |
அதி |
மிகுதி, பெருமை |
அதி, ஆற்றி |
(1) அதை (=வீங்கு, மிகு) + இ = அதி = மிகுதி. (2) ஆற்று (=கூட்டு, பெருக்கு) + இ = ஆற்றி >>> ஆத்தி >>> அதி = பெருமை, மிகுதி. |
அதிக்கிரமம் |
அநீதி, வரம்பு மீறிய செயல் |
அறிக்கீறுவம் |
அறம் (=நீதி, செயல்) + இக (=கட, மீறு) + ஈறு (=வரம்பு) + அம் = அறிக்கீறுவம் >>> அதிக்கீருமம் >>> அதிக்கிரமம் = வரம்பு மீறிய நீதி ./ செயல். |
அதிக்கிரமி |
வரம்பு மீறு |
அதிக்கிரமி |
அதிக்கிரமம் (=வரம்பு மீறல்) >>> அதிக்கிரமி = வரம்பு மீறு |
அதிகம் |
இலாபம், மிகுபொருள் |
அதிகம் |
அதை (=வீங்கு, மிகு) + இக (=திரள், சேர்) + அம் = அதிகம் = மிகுதியாகச் சேர்ந்தது = மிகுபொருள், இலாபம் |
அதிகம் |
அழகு |
ஏறிகம் |
ஏறு (=ஒளி) + இகம் (=உடல், பொருள்) = ஏறிகம் >>> அதிகம் = உடலின் / பொருளின் ஒளி. |
அதிகன் |
ஆசிரியன், குரு |
அறிகன் |
அறம் (=அறிவு) + இகு (=கொடு) + அன் = அறிகன் >>> அதிகன் = அறிவைக் கொடுப்பவன். |
அதிகரணம் |
ஆதாரம், முட்டு |
ஆதிகரணம் |
ஆதி (=அடிப்படை) + கரம் (=கை) + அணை (=தாங்கு) + அம் = ஆதிகரணம் >>> அதிகரணம் = கைபோலத் தாங்கும் அடிப்படை. |
அதிகரணம் |
பெருக்கம் |
அதைகரணம் |
அதை (=வீங்கு, பெருகு) + கரணம் (=செயல்) = அதைகரணம் >>> அதிகரணம் = பெருகும் செயல் = பெருக்கம். |
அதிகரணம் |
கல்வி |
அறிகரணம் |
அறி + கரணம் (=செயல்) = அறிகரணம் >>>அதிகரணம் = அறியுஞ்செயல் |
அதிகரணம் |
கல்விப் பிரிவு |
அறைகரணம் |
அறை (=பிரிவு) + கரணம் (=அறிவு, கல்வி) = அறைகரணம் >>> அதைகரணம் >>> அதிகரணம் = கல்விப் பிரிவு |
அதிகரி |
பெருகு |
அதிகரி |
அதிகரணம் (=பெருக்கம்) >>> அதிகரி = பெருகு |
அதிகரி |
கல், பயில் |
அதிகரி |
அதிகரணம் (=கல்வி) >>> அதிகரி = கல், பயில் |
அதிகன் |
கடவுள் |
அதிகன் |
அதிகம் (=மிகுதி, மேம்பாடு) + அன் = அதிகன் = மேம்பட்டவன் |
அதிகாரம் |
கட்டுப்படுத்துதல், ஆட்சி, விதிமுறை, உரிமை, தகுதி |
அதுக்காரம் |
(2) அதுக்கு (=அடக்கு) + ஆர் (=கட்டு) + அம் = அதுக்காரம் >>> அதிகாரம் = (1) கட்டி அடக்குதல் = கட்டுப்படுத்துதல், ஆளுகை. (2) கட்டுப்படுத்துவது = விதிமுறை. (3) கட்டுப்பட்டது = உரிமை, தகுதி. |
அதிகாரம் |
செருக்கு, இறுமாப்பு |
அதைகாரம் |
அதை (=செருக்கு) + காரம் (=செயல்) = அதைகாரம் >>> அதிகாரம் = செருக்கிய செயல். |
அதிகாரம் |
நூல், நூல் பிரிவு |
அறிகாரம் |
அறம் (=அறிவு) + இகு (=கொடு) + ஆர் (=ஒலி, சொல்) + அம் = அறிகாரம் >>> அதிகாரம் = அறிவை சொல்லிக் கொடுப்பது = நூல், நூல் பிரிவு |
அதிகாரம் |
நிலம், இடம் |
ஆற்றுகாரம் |
ஆற்று (=சும, தாங்கு) + காரம் (=வலிமை, பொருள்) = ஆற்றுகாரம் >>> அத்துகாரம் >>> அதிகாரம் = தாங்குகின்ற வலிமையான பொருள். |
அதிசயம் |
புதுமையாகத் தோன்றுவது |
அறிசேயம் |
அறி + சேய் (=இளமை, புதுமை) + அம் = அறிசேயம் >>> அதிசயம் = புதிதாக அறியப்படுவது. |
அதிசயம் |
சிறப்புக் குணம் |
அறிசையம் |
அறம் (=தன்மை, குணம்) + இசை (=பெருமை, சிறப்பு) + அம் = அறிசையம் >>> அதிசயம் = சிறப்புக் குணம். |
அதிட்டம் |
காண/கணிக்கப் படாதது |
அறிற்றம் |
அறி (=காண், கணி) + இறு (=அழி, இல்லாகு) + அம் = அறிற்றம் >>> அதிட்டம் = காணப் / கணிக்கப் படாதது. |
அதிட்டம் |
மிளகு |
அதுற்றம் |
அதி (=மிகுதி) + உறை (=காரம்) + அம் (=உணவு) = அதுற்றம் >>> அதிட்டம் = காரம் மிக்க உணவு. |
அதிதி |
விருந்தினர் |
ஏதிறி |
(2) ஏது (=தொடர்பு, பழக்கம்) + இறு (=அழி, இல்லாகு) + இ = ஏதிறி >>> அதிதி = பழக்கம் இல்லாதவர். |
அதிபதி |
பெருந்தலைவன் |
அதிபதி |
அதி (=மிகுதி, பெருமை) + பதி (=தலைவன்) = அதிபதி = பெருந்தலைவன் |
அதிபன் |
பெரிய மனிதர் |
அதிமன் |
அதி (=மிகுதி, பெருமை) + மன் (=மனிதன்) = அதிமன் >>> அதிபன் = பெரிய மனிதன். |
அதியன் |
கடவுள் |
ஆதியன் |
ஆதி (=முதல்) + அன் = ஆதியன் >>> அதியன் = முதலானவன். |
அதியால் |
பெரியோர் காணிக்கை |
அதியளி |
அதி (=பெருமை, சிறப்பு) + அளி (=கொடு) = அதியளி >>> அதியால் = பெரியோருக்குச் சிறப்பித்துக் கொடுக்கப்படுவது. |
அதிரசம் |
வட்டமான இனிப்பு உணவு |
அறீரசம் |
அறை (=பள்ளம், ஓட்டை) + ஈர் (=இனிமை) + அசை (=வளை, வட்டமாகு, உண்ணு) + அம் = அறீரசம் >>> அதிரசம் = ஓட்டையுடைய வட்டமான இனிய உணவுப் பொருள். |
அதிராயம் |
வியக்கத் தக்கது |
அதிரேயம் |
அதிர் (=விய) + ஏய் (=பொருந்து) + அம் = அதிரேயம் >>> அதிராயம் = வியப்பு பொருந்தியது. |
அதிரித்தம் |
பிரம்மாண்டம் |
அதிருற்றம் |
அதிர் (=விய) + உறு (=அடை, மிகுதி, பெருமை) + அம் = அதிருற்றம் >>> அதிரித்தம் = வியப்பு உறும் மிகுதி / பெருமை = பிரம்மாண்டம். |
அதிருசியம் |
பார்க்க இயலாதது |
அறிறுயியம் |
அறு (=இல்லாகு) + இறை (=பார்) + உய் (=அனுபவி) + இயை (=இயலு) + அம் = அறிறுயியம் >>> அதிருசியம் = பார்த்து அனுபவிக்க இயலாதது. |
அதிருச்~டம், அதிருட்டம் |
பார்க்க இயலாதது |
அறிறுற்றம் |
அறு (=இல்லாகு) + இறை (=பார்) + உறு (=அனுபவி) + அம் = அறிறுற்றம் >>> அதிருட்டம் >>> அதிருச்~டம் = பார்த்து அனுபவிக்க இயலாதது. |
அதிருச்~டம், அதிருட்டம் |
முன்னரே அறியக்கூடாத நன்மை |
அறிறுற்றம் |
அறம் (=அறிவு, நன்மை) + இறு (=அழி, இல்லாகு) + உறு (=நிகழ், கூடு) + அம் = அறிறுற்றம் >>> அதிருட்டம் >>> அதிருச்~டம் = அறியக் கூடாத நல் நிகழ்வு. |
அதிரேகம் |
பிரம்மாண்டம் |
அதிரெக்கம் |
அதிர் (=விய) + எக்கு (=குவி, மிகு) + அம் = அதிரெக்கம் >>> அதிரேகம் = வியப்ப்பூட்டும் மிகுதி = பிரம்மாண்டம். |
விருட்டி, விருச்~டி |
மழை |
வேரூட்டி |
(2) வேரம் (=மேகக்கூட்டம்) + ஊட்டு + இ = வேரூட்டி >>> விருட்டி >>> விருச்~டி = மேகங்கள் ஊட்டுவது = மழை. |
அதிட்டானம் |
நிலைக்களம் |
அறூற்றணம் |
அறை (=இடம்) + ஊற்று (=பற்றுக்கோடு) + அணம் = அறூற்றணம் >>> அதிட்டானம் >>> அதிச்~டானம் = பற்றுக்கோடான இடம் |
அதீதம் |
எல்லை கடந்தது |
அறீறம் |
அறு (=நீங்கு, கட) + ஈறு (=முடிவு, எல்லை) + அம் = அறீறம் >>> அதீதம் = எல்லை கடந்தது. |
அதீதம் |
இறையறிவு |
அறீறம் |
அறி + இறை + அம் = அறீறம் >>> அதீதம் = இறை பற்றிய அறிவு. |
அதீதர் |
ஞானியர் |
அறீறர் |
அறி + இறை + அர் = அறீறர் >>> அதீதர் = இறை பற்றிய அறிவினர் |
அதீபனம் |
அதிகமாக உண்ண நினைப்பது |
ஆற்றுமனம் |
ஆற்று (=மிகு, பசிதணி, உண்) + மனம் (=எண்ணம்) = ஆற்றுமனம் >>> அத்துபனம் >>> அதீபனம் = அதிகமாக உண்பதற்கான எண்ணம். |
அதீனம் |
வசம், கட்டுப்பாடு |
ஆறீனம் |
ஆறு (=அடங்கு) + ஈனு (=கொடு, ஒப்படை) + அம் = ஆறீனம் >>> அதீனம் = ஒப்படைத்து அடங்குதல் = வசப்படுதல், கட்டுப்படுதல். |
அதுலம் |
ஒப்பற்றது |
ஆறிலம் |
ஆறு (=அடங்கு, ஒப்பு) + இல் + அம் = ஆறிலம் >>> அதிலம் >>> அதுலம் = ஒப்பில்லாதது. |
அதைரியம் |
அச்சம் |
அதிரியம் |
அதிர் (=அஞ்சு) + இயம் = அதிரியம் >>> அதைரியம் = அச்சம் |
அதோங்கம் |
இடுப்பின் கீழ்ப் பகுதி |
அறோக்கம் |
அறை (=கீழ், பகுதி) + உக்கம் (=இடுப்பு) = அறோக்கம் >>> அதோங்கம் = இடுப்பின் கீழுள்ள பகுதி |
அந்தக்காரி |
ஒளிரும்அழகு உடையவள் |
ஏற்றக்காரி |
ஏறு (=ஒளி) + அம் (=அழகு) + காரி = ஏற்றக்காரி >>> அத்தக்காரி >>> அந்தகாரி = ஒளிரும் அழகுடையவள் |
அந்தக்கரணம் |
அறிவுக் கருவிகள் |
அற்றக்கரணம் |
அறம் (=அறிவு) + கரணம் (=கருவி) = அற்றக்கரணம் >>> அத்தக்கரணம் >>> அந்தக்கரணம் = அறிவுக் கருவிகள். |
அந்தகன் |
எமன் |
அற்றகன் |
அற்றம் (=அழிவு) + அகம் (=உயிர்) + அன் = அற்றகன் >>> அத்தகன் >>> அந்தகன் = உயிரை அழிப்பவன். |
அந்தகன் |
குருடன் |
அற்றாகன் |
அற்றம் (=இன்மை) + ஆகம் (=கண்) + அன் = அற்றாகன் >>> அத்தகன் >>> அந்தகன் = கண்கள் அற்றவன். |
அந்தகாரம் |
இருள், அறியாமை |
அற்றகரம் |
அற்றம் (=இன்மை) + கரம் (=ஒளி) = அற்றகரம் >>> அத்தகரம் >>> அந்தகாரம் = ஒளியின்மை = இருள், அறியாமை. |
அந்தகோலம், அந்தகோரம் |
நெல்லிக்கனி |
ஏற்றகோளம் |
ஏறு (=ஒளி, மிகு) + அம் (=அழகு, நீர், உணவு) + கோளம் (=உருண்டை) = ஏற்றகோளம் >>> அத்தகோலம் >>> அந்தகோலம் >>> அந்தகோரம் = அழகிய ஒளியுடன் சாறுமிக்க உருண்டையான உணவுப் பொருள். |
அந்தப்புரம் |
மகளிர் வசிப்பிடம் |
ஏறாப்புறம் |
ஏறு (=ஆண், நுழை) + ஆ (=எதிர்மறை) + புறம் (=பகுதி) = ஏறாப்புறம் >>> அத்தப்புரம் >> அந்தப்புரம் = ஆண்கள் நுழைய இயலாத பகுதி. |
அந்தம் |
முடிவு, மரணம் |
அற்றம் |
அற்றம் (=முடிவு, அழிவு) >>> அத்தம் >>> அந்தம் = முடிவு, அழிவு, மரணம். |
அந்தம் |
அழகு, ஒளி, பேரழகு |
ஏற்றம் |
ஏறு (=ஒளி) + அம் (=அழகு) = ஏற்றம் >>> அத்தம் >>> அந்தம் = ஒளிரும் அழகு. |
அந்தம் |
இருள், குருடு, அறியாமை |
அற்றம் |
(2) அறு (=இல்லாகு) + அம் (=அழகு, ஒளி) = அற்றம் >>> அத்தம் >>> அந்தம் = ஒளி இல்லாமை = இருள், குருடு, அறியாமை. |
அந்தர் |
சுமக்கத்தக்க கட்டு பாரம், கம்பிகளின் எடை |
ஆற்றார், அந்தார் |
(1) ஆற்று (=சும, போதியதாகு) + ஆர் (=தண்டு, கம்பி, கட்டு) = ஆற்றார் >>> ஆத்தார் >>> அந்தர் = சுமக்கப் போதியதாய்க் கட்டப்பட்ட கம்பிகள். (2) அந்தை (=எடை) + ஆர் (=தண்டு, கம்பி, கட்டு) = அந்தார் >>> அந்தர் கட்டிய கம்பிகளின் எடை. |
அந்தரங்கம் |
இரகசியம் |
அற்றாரகம் |
அற்றம் (=இன்மை, மறைப்பு) + ஆர் (=ஒலி, சொல்) + அகம் (=மனம்) = அற்றாரகம் >>> அத்தரகம் >>> அந்தரங்கம் = சொல்லாமல் மனதில் மறைக்கப்பட்டது = இரகசியம். |
அந்தரங்கம் |
நெருங்கிய நட்பு / உறவு |
அத்தாரகம் |
அதி (=மிகவும்) + ஆர் (=பொருந்து) + அகம் (=மனம்) = அத்தாரகம் >>> அந்தரங்கம் = மிகுதியான மனப் பொருத்தம். |
அந்தரம் |
ஆகாயம், பெருவெளி |
அற்றாரம் |
அற்றம் (=இன்மை, வெளி) + ஆர் (=நிறை, பரவு) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பரந்து நிறைந்த வெளி. |
அந்தரம் |
இருள் |
அற்றாரம் |
அற்றம் (=மறைப்பு) + ஆர் (=நிறை, பரவு) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பரந்து நிறைந்த மறைப்பு. |
அந்தரம் |
நடுப்பகுதி, இடை, உள், இடைவெளி |
அற்றரம் |
அறை (=பிரிவு, பகுதி, வெளி) + அரை (=பாதி, நடு, இடை) + அம் = அற்றரம் >>> அத்தரம் >>> அந்தரம் = நடுப்பகுதி, இடைப்பகுதி, இடைவெளி >>> உள்வெளி. |
அந்தரம் |
வேறுபாடு |
அத்தறம் |
அத்து (=பொருந்து) + அறு (=இல்லாகு) + அம் = அத்தறம் >>> அந்தரம் = பொருத்தம் இல்லாமை. |
அந்தரம் |
விபரீதம், விபத்து |
அற்றறம் |
அறி (=கணி) + அறு (=இல்லாகு, பாழாகு, கெடு) + அம் = அற்றறம் >>> அத்தரம் >>> அந்தரம் = கணிக்க இயலாத கேடு. |
அந்தரம் |
கோவில் |
அற்றாரம் |
அறம் (=தருமம், புண்ணியம்) + ஆர் (=நிறை, பூமி, இடம்) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = புண்ணியம் நிறைந்த இடம். |
அந்தரம் |
கூட்டம் |
அத்தாரம் |
அத்து (=பொருந்து, சேர்) + ஆர் (=மிகுதி) + அம் = அத்தாரம் >>> அந்தரம் = மிகுதியான சேர்க்கை. |
அந்தரம் |
முடிவு |
அற்றாரம் |
அற (=முழுவதும்) + ஆர் (=நிறை) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = முழுமையாக நிறைதல்.. |
அந்தரம் |
தனிமை |
அற்றாரம் |
அறு (=இல்லாகு) + ஆர் (=பொருந்து, சேர்) + அம் = அற்றாரம் >>> அத்தரம் >>> அந்தரம் = பொருந்தி / சேர்ந்து இல்லாமை. |
அந்தராயம் |
இடையூறு |
அந்தராயம் |
அந்தரம் (=இடை) + ஆய் (=வருந்து, துன்புறு) + அம் = அந்தராயம் = இடையில் உண்டாகும் துன்பம். |
அந்தராயம் |
உள்பகுதியின் வருமானம் |
அந்தராயம் |
அந்தரம் (=உள்பகுதி) + ஆயம் (=வருமானம்) = அந்தராயம் = உள்பகுதியால் வரும் வருமானம். |
அந்தராளம் |
உள்ளிடம் |
அந்தரளம் |
அந்தரம் (=உள்) + அளம் (=இடம்) = அந்தரளம் >>> அந்தராளம் = உள்ளிடம். |
அந்தரி |
பறை |
அற்றாரி |
அறை (=அடி) + ஆர் (=ஒலி, வட்டம்) + இ = அற்றாரி >>> அத்தரி >>> அந்தரி = அடித்து ஒலிக்கப்படும் வட்டப் பொருள். |
அந்தரி |
தனித்திரு, வேறுபடு |
அந்தரி |
அந்தரம் (=தனிமை, வேறுபாடு) >>> அந்தரி = தனித்திரு, வேறுபடு |
அந்தரிட்சம் |
ஆகாயம் |
அந்தருச்சம் |
அந்தரம் (=வெளி) + உச்சி + அம் = அந்தருச்சம் >>> அந்தரிட்சம் = உச்சியில் உள்ள வெளி = ஆகாயம். |
அந்தரிதம் |
கழித்துப் பெற்ற மீதி |
அந்தரிறம் |
அந்தரம் (=வேறுபாடு) + இறை (=விடை) + அம் = அந்தரிறம் >>> அந்தரிதம் = வேறுபாட்டு விடை. |
அந்தலை |
சந்திப்பு |
அற்றளை |
அறை (=பிரிவு, இடம்) + அள (=கல, சேர்) + ஐ = அற்றளை >>> அத்தலை >>> அந்தலை = பிரிவுகள் சேரும் இடம். |
அந்தலை |
எல்லை |
அற்றளை |
அறு (=பிரி) + அளம் (=இடம்) + ஐ = அற்றளை >>> அத்தலை >>> அந்தலை = இடங்களைப் பிரிப்பது. |
அந்தலை |
மேடு |
ஏற்றளை |
ஏறு (=உயர், குவி) + அளம் (=இடம்) + ஐ = ஏற்றளை >>> அத்தலை >>> அந்தலை = குவிந்த இடம். |
அந்தளகம் |
கவசம் |
அற்றளகம் |
அற்றம் (=மறைப்பு) + அள் (=இரும்பு) + அகம் (=மார்பு) = அற்றளகம் >>> அத்தளகம் >>> அந்தளகம் = மார்பை மறைக்கும் இரும்பு. |
அந்தளம் |
கவசம் |
அற்றளம் |
அற்றம் (=மறைப்பு) + அள் (=இரும்பு) + அம் = அற்றளம் >>> அத்தளம் >>> அந்தளம் = மறைக்கும் இரும்பு. |
அந்தன் |
எமன் |
அற்றன் |
அறு (=கொல்) + அன் = அற்றன் >>> அத்தன் >>> அந்தன். = கொல்பவன் |
அந்தன் |
அழகன், குருடன், முட்டாள் |
அந்தன் |
அந்தம் (=அழகு, குருடு, அறியாமை) + அன் = அந்தன் = அழகன், குருடன், அறியாதவன். |
அந்தச்`து |
வாழ்க்கைத் தரம் |
ஏறாற்று |
ஏறு (=உயர், வளர்) + ஆற்று (=வாழ்) = ஏறாற்று >>> அதாத்து >>> அந்தச்`து = வாழ்வில் வளர்ந்த உயரம். |
அந்தச்`து |
மாடிவீடு |
ஏறற்று |
ஏறு (=உயரம், குடிபுகு) + அறை (=வீடு) + உ = ஏறற்று >>> அதத்து >>> அந்தச்`து = உயரத்தில் குடிபுகும் வீடு. |