சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
இரணம், ரணம் |
புண் |
இராணம் |
(2) ஈர் (=அறு, பிள) + ஆணம் (=உடல், சிறுமை) = இராணம் >>> இரணம் >>> ரணம் = உடலின் சிறிய அறுப்பு / பிளவு = புண். |
இரணம், ரணம் |
போர் |
இறணம் |
இறு (=அழி) + அணை (=பொருந்து, கூடு) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = கூடி அழித்தல். |
இரணம், ரணம் |
கடன் |
இறணம் |
(1) இறு (=விடைசொல், திருப்பிக் கொடு) + அணி (=பொருள்) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = திருப்பிக் கொடுக்கும் பொருள். (2) இறை (=கடமை, கடன்) + அணம் = இறணம் >>> இரணம் >>> ரணம். |
இரணம் |
தங்கம் |
இறணம் |
இறை (=தலைமை) + அணி (=அலங்காரம், அணிகலம்) + அம் = இறணம் >>> இரணம் >>> ரணம் = அலங்கார அணிகளுள் தலையாயது. |
இரணம் |
மாணிக்கம் |
எராணம் |
எரி (=நெருப்பு, சிவப்பு, ஒளிர்) + ஆணம் (=சிறுமை, கல்) = எராணம் >>> இரணம் >>> ரணம் = சிவப்புநிறத்தில் ஒளிரும் சிறிய கல் = மாணிக்கம். |
இரணியம் |
தங்கம் |
இறணியம் |
இறை (=தலைமை) + அணி (=அலங்காரம், அணிகலம்) + அம் = இறணியம் >>> இரணியம் = அலங்கார அணிகளுள் தலையாயது. |
இரணியம் |
பணம் |
இறணியம் |
இறு (=திருப்பிக்கொடு) + அணி (=பொருள்) + அம் = இறணியம் >>> இரணியம் = பொருளுக்காகத் திருப்பிக் கொடுப்பது = பணம். |
இரத்தம் |
குருதி |
இரத்தம் |
(3) ஈர் (=அறு, ஒழுகு) + அத்து (=சிவப்பு) + அம் (=நீர்) = இரத்தம் = அறுத்தால் ஒழுகும் செந்நீர். |
இரத்தம் |
சிவப்பு, சிவப்புப் பொருட்கள் |
எரத்தம் |
எரி (=நெருப்பு, சிவப்பு) + அத்தம் (=பொருள்) = எரத்தம் >>> இரத்தம் = சிவப்புநிறப் பொருட்கள் = குங்குமம், செம்பவளம், கொம்பரக்கு... |
இரத்தம் |
ஈரல் |
இரற்றம் |
ஈர் (=இரண்டாகு) + அறை (=உறுப்பு) + அம் = இரற்றம் >>> இரத்தம் = இரண்டாகிய உறுப்பு = ஈரல். ஒ.நோ: ஈர் (=இரண்டாகு) + அல் = ஈரல் = இரண்டாகியது. |
இரத்தினம் |
அறுக்கப்பட்டு பளபளக்கும் சிறிய கற்கள் |
இரத்தினம் |
ஈர் (=அறு, நுண்மை, சிறுமை, நெய்ப்பு, பளபளப்பு) + அத்தம் (=பொருள்) + இனம் (=வகை) = இரத்தினம் = சிறியதாக அறுக்கப்பட்டு பளபளக்கும் பொருள் வகை = வைரம், வைடூரியம், மாணிக்கம் முதலிய கற்கள். |
இரதபதம் |
புறா |
இரத்தபாதம் |
இரத்தம் (=சிவப்பு) + பாதம் (=கால்) = இரத்தபாதம் >>> இரதபதம் = சிவந்த கால்களைக் கொண்டது = புறா. |
இரதம், ரதம் |
புணர்ச்சி |
இறத்தம் |
இறை (=உடல், கை) + அத்து (=பொருத்து, தழுவு) + அம் = இறத்தம் >>> இரதம் = கைகளால் உடலைத் தழுவுதல். |
இரதம், ரதம் |
தேர், வண்டி. |
இரறம் |
இரி (=ஓடு) + அறம் (=சக்கரம்) = இரறம் >>> இரதம் = சக்கரங்களால் ஓடுவது = வண்டி, தேர் |
இரதம் |
பல் |
இறத்தம் |
ஈறு + அத்து (=பொருந்து) + அம் = இறத்தம் >>> இரதம் = ஈற்றில் பொருந்தியது = பல். |
இரதம் |
சாறு |
இறத்தம் |
இறு (=வடிகட்டு) + அத்தம் (=பொருள்) = இறத்தம் >>> இரதம் = வடிகட்டிய பொருள் = சாறு. |
இரதம் |
சுவை |
இரறம் |
இரை (=உணவு) + அறி + அம் = இரறம் >>> இரதம் = உண்டு அறியப்படுவது = சுவை |
இரதம், இரதி |
இன்பம், இனிமை |
இரறம் |
இரி (=கெடு, துன்புறு) + அறு (=இல்லாகு) + அம் = இரறம் >>> இரதம் = கேடு / துன்பம் இல்லாதது = இன்பம், இனிமை |
இரதம் |
வாயில் ஊறும் நீர், எச்சில் |
இறதம் |
ஈறு + அதை (=ஊறு, பெருகு) + அம் (=நீர்) = இறதம் >>> இரதம் = ஈறுகளில் ஊறும் / பெருகும் நீர் = எச்சில் |
இரதம் |
தேன், தேனீ, வண்டு |
இரத்தம் |
ஈர் (=இனிமை, பளபளப்பு, பசுமை) + அத்து (=சிவப்பு) + அம் (=உணவு) = இரத்தம் >>> இரதம் = இனிப்பான பளபளப்புடைய சிவப்பான உணவு = தேன் >>> தேனை உண்பது = தேனீ |
இரதம் |
பாதரசம் |
இரறம் |
ஈர் (=பளபளப்பு) + அறு (=ஒழுகு) + அம் (=ஒளி, வெண்மை) = இரறம் >>> இரதம் = பளபளத்து வெண்மையாக ஒழுகுவது. |
இரதம் |
கற்பனை |
இரறம் |
இரி (=அழி, இல்லாகு) + அறி (=நினை) + அம் = இரறம் >>> இரதம் = இல்லாததை நினைப்பது = கற்பனை |
இரதம் |
இடைவார், அரைஞாண் |
இறத்தம் |
இறை (=நடு, இடை) + அத்து (=பொருத்து) + அம் = இறத்தம் >>> இரதம் = இடையில் பொருத்தப்படுவது = இடைவார், அரைஞாண் |
இரதம் |
சிவப்பு மாம்பழ மரம் |
இறத்தம் |
இறை (=மாமரம்) + அத்து (=சிவப்பு) + அம் = இறத்தம் >>> இரதம் = சிவப்பு மாம்பழ மரம் |
இரதனம் |
அரை ஞாண் |
இறத்தணம் |
இறை (=நடு, இடை) + அத்து (=பொருத்து) + அண் (=கயிறு) + அம் = இறத்தணம் >>> இரதனம் = இடையில் பொருத்தும் கயிறு |
இரதி |
விருப்பம் |
இறத்தி |
இறை (=அறிவு, மனம்) + அத்து (=பொருந்து) + இ = இறத்தி >>> இரதி = மனதுக்குப் பொருந்தியது = விருப்பம். |
இரதி |
புணர்ச்சி |
இறத்தி |
இறை (=உடல்) + அத்து (=பொருந்து, தழுவு) + இ = இறத்தி >>> இரதி = உடலைத் தழுவுதல் = புணர்ச்சி. |
இரதி |
பெண் யானை |
இரத்தி |
இரி (=அஞ்சி ஓடு) + அத்தி (=யானை) = இரத்தி >>> இரதி = அஞ்சி ஓடும் யானை = பெண் யானை |
இரதிகன் |
தேரோட்டி, பாகன் |
இரதுகன் |
இரதம் (=தேர்) + உகை (=செலுத்து) + அன் = இரதுகன் >>> இரதிகன் = தேரைச் செலுத்துபவன் = பாகன் |
இரந்திரம் |
இரகசியம் |
இறைத்திறம் |
இறை (=மனம், காப்பு) + திறம் (=செய்தி) = இறைத்திறம் >>> இரந்திரம் = மனதிற்குள் காக்கப்பட்ட செய்தி = இரகசியம் |
இரந்திரம் |
ஓட்டை, வெளி |
இறற்றிறம் |
இறை (=நிறை) + அல் + திறம் (=வழி, இடம்) = இறற்றிறம் >>> இரத்திரம் >>> இரந்திரம் = நிறையாத இடம் = ஓட்டை, வெளி |
இரம்பம் |
மரத்தை அறுப்பது |
இரம்மம் |
ஈர் (=அறு) + அமை (=தண்டு, மரம்) + அம் = இரம்மம் >>> இரம்பம் = தண்டினை / மரத்தினை அறுப்பது |
இரம்பிலம் |
மிளகு |
எரம்மிலம் |
எரி + அம் (=உணவு) + இலம் (=சிறுமை) = எரம்மிலம் >>> இரம்பிலம் = எரியக்கூடிய சிறிய உணவு |
இரம்மியம் |
இனிமை தருவது |
இரம்மியம் |
ஈர் (=இனிமை) + அமை (=உண்டாக்கு) + இயம் = இரம்மியம் = இனிமை உண்டாக்குவது. |
இரமணீயம் |
இன்பமானது |
இரமணியம் |
ஈரம் (=கொடை) + அணி (=இனிமை) + அம் = இரமணியம் >>> இரமணீயம் = இனிமை தருவது. |
இரமணீயம் |
சிறந்த அழகுடையது |
இறைமணியம் |
இறை (=உயர்வு, சிறப்பு) + மணி (=அழகு) + அம் = இறைமணியம் >>> இரமணீயம் = சிறந்த அழகுடையது. |
இரவணம் |
ஒட்டகம் |
இரவெனம் |
ஈரம் (=நீர், அறிவு) + வென் (=முதுகு) + அம் = இரவெனம் >>> இரவணம் = முதுகில் நீரை உடையதாக அறியப்படுவது. |
இரவி |
வணிகம், வியாபாரம் |
இறமி |
இறு (=கொடு) + அமை (=கொள், வாங்கு) + இ = இறமி >>> இரவி = கொடுக்கல் வாங்கல் = வியாபாரம், வணிகம் |
இரவி |
சூரியன் |
இரவி |
இருமை (=இருள்) + அவி (=அழி) = இரவி = இருளை அழிப்பவன் |
இரவி |
மலை |
இரவி |
இருமை (=பெருமை, உயரம்) + அவை (=இடம்) + இ = இரவி = உயரமான பெரிய இடம் = மலை. |
இரவிக்கை, ரவிக்கை |
மார்புத் துணி |
இறாப்பிகை |
இறு (=கட்டு) + ஆப்பு (=உடல், மார்பு) + இகம் (=பொருள்) + ஐ = இறாப்பிகை >>> இரவிக்கை = மார்பில் கட்டும் பொருள். |
இரவு |
மஞ்சள் |
இறமு |
இறு (=கொடு) + அம் (=அழகு, ஒளி) + உ = இறமு >>> இரவு = அழகும் ஒளியும் தருவது = மஞ்சள். |
இரவை |
நுண்பொருள் |
இரமை |
ஈர் (=நுட்பம்) + அமை = இரமை >>> இரவை = நுட்பமாக அமைந்தது |
இரவை |
துப்பாக்கிக் குண்டு |
இரேவை |
ஈர் (=நுண்மை, அறு) + ஏவு + ஐ = இரேவை >>> இரவை = ஏவி அறுக்கும் நுண்பொருள் = துப்பாக்கிக் குண்டு. |
இரவை |
வயிரம் |
இரம்பை |
ஈரம் (=அறுவை) + பை (=ஒளி, வலிமை, பொருள்) = இரம்பை >>> இரவை = வலுவான பொருளையும் அறுக்க வல்ல ஒளிரும் பொருள். |
இராக்கதன் |
அரக்கன் |
இராக்கதன் |
இருமை (=பெருமை) + ஆக்கம் (=உடல், வலிமை, செயல்) + அதம் (=அழிவு, நாசம்) + அன் = இராக்கதன் = பெரிய வலிய உடலால் நாசம் செய்பவன் = அரக்கன் |
இராகம் |
இனிமையாக நீட்டி ஒலித்தல் |
இராக்கம் |
ஈர் (=இனிமை, இழு, நீட்டு) + ஆக்கம் (=சொல்) = இராக்கம் >>> இராகம் >>> ராகம் = இனிமையாக நீட்டிச் சொல்லுதல் |
இராகம் |
ஆசை |
இராகம் |
ஈர் + ஆகம் (=மனம்) = இராகம் = மனதை ஈர்ப்பது |
இராகம் |
நிறம், அழகு, சிவப்பு |
இராகம் |
ஈர் + ஆகம் (=கண்) = இராகம் = கண்களை ஈர்ப்பது = அழகிய நிறம், சிவப்பு |
இராகி, ராகி |
கேழ்வரகு |
எராகி |
எரி (=சிவப்பு) + அஃகம் (=தானியம்) + இ = எராகி >>> இராகி >>> ராகி = சிவப்புநிறத் தானியம். |
இராகு, ராகு |
பாம்பு |
இராகு |
இரி (=ஓடு) + ஆகம் (=உடல், வயிறு) + உ = இராகு >>> ராகு = வயிற்றால் ஓடுவது = பாம்பு. |
இராச்சியம், ராச்சியம் |
அரசன் ஆளுமிடம் |
இறாட்சியம் |
இறை (=அரசன், இடம்) + ஆட்சி + அம் = இறாட்சியம் >>> இராச்சியம் >>> ராச்^யம் = அரசனின் ஆட்சிக்குரிய இடம் |
இராசன், ராசன், இராயன், ராசா |
அரசன் |
இறாயன் |
இறை (=காவல்) + ஆயம் (=மக்கள் கூட்டம்) + அன் = இறாயன் >>> இராசன் = மக்கள் கூட்டத்தைக் காப்பவன். |
இராசன் |
சந்திரன் |
இராயன் |
இரா (=இரவு) + ஆய் (=ஒளி) + அன் = இராயன் >>> இராசன் = இரவில் ஒளி தருபவன் = சந்திரன். |
இராசனம், இராசனை |
வெள்ளைப் பூண்டு |
எராயன்னம் |
எரி + ஆய் (=சிறுமை, அழகு, வெண்மை + அன்னம் (=உணவு) = எராயன்னம் >>> இராசனம் / இராசனை = எரிகின்ற சிறு வெள்ளுணவு |
இராசாங்கம், ராசாங்கம் |
அரசின் உறுப்புக்கள் |
இறையங்கம் |
இறை (=அரசு) + அங்கம் = இறையங்கம் >>> இராசாங்கம் = அரசின் அங்கங்கள் |
இராசாங்கம், ராசாங்கம் |
அரசாட்சி |
இறையாக்கம் |
இறை (=அரசு, காவல்) + ஆக்கம் (=நன்மை, செயல்) = இறையாக்கம் >>> இராசாங்கம் = அரசு காத்து நன்மை செய்தல். |
இராசாத்தி, ராசாத்தி |
அரசி |
இறையத்தி |
இறை (=அரசன்) + அத்து (=சேர், கூடு) + இ = இறையத்தி >>> இராசாத்தி >>> ராசாத்தி = அரசனுடன் கூடுபவள். |
இராசாளி, ராசாளி |
வலிய பறவை |
இராசாளி |
இரி (=பற, அழி, கொல்) + ஆசு (=விரைவு) + ஆள் + இ = இராசாளி >>> ராசாளி = விரைந்து கொல்லும் ஆளுமை உடைய பறவை. |
இராசி |
வரிசை |
இராசி |
ஈர் (=அறு, வகு) + ஆசு (=ஒழுங்கு) + இ = இராசி = வகுக்கப்பட்ட ஒழுங்கு = வரிசை |
இராசி, ராசி |
சாதகத்தில் நட்சத்திரங்களின் வீடு, வீடு |
இறாயி, இராசி |
(1) இறை (=தங்கல், உயரம், ஆசனம்) + ஆயம் (=ஒளி, கூட்டம்) + இ = இறாயி >>> இராசி = ஒளிக்கூட்டம் தங்கும் உயரமான ஆசனம். (2) இரு (=தங்கு) + ஆசு (=பற்றுக்கோடு) + இ = இராசி = தங்கும் பற்றுக்கோடு. |
இராசி, ராசி |
கூட்டம்,குவியல், மொத்தம், இனம், பொருத்தம் |
இராயி |
இரு + ஆயம் (=கூட்டம்) + இ = இராயி >>> இராசி = கூடி இருப்பது = கூட்டம், இனம், குவியல், மொத்தம், பொருத்தம், சமாதானம். |
இராசி, ராசி |
அதிட்டம் |
இறாயி |
இறு (=அழி, இல்லாகு) + ஆய் (=அறி, கணி, நன்மை) + இ = இறாயி >>> இராசி = கணிக்கப்படாத நன்மை = அதிட்டம். |
இராசிநாமா |
தொடர்பை விலக்கிக் கொள்ளுதல் |
இராசினமா |
(2) இரி (=நீக்கு, விலக்கு) + ஆசு (=பற்று, தொடர்பு) + இனம் (=கூட்டம்) + ஆ = இராசினமா >>> இராசினாமா, இராசிநாமா = கூட்டத்தில் இருந்து தொடர்பினை விலக்கிக் கொள்ளுதல். |
இராசியம் |
மறைவான இடம் |
இறாசியம் |
இறை (=காவல், மறைப்பு) + ஆசு (=இடம்) + இயம் = இறாசியம் >>> இராசியம் = மறைவான இடம் |
இராசியம் |
தாமரை |
இறசியம் |
இறு (=அழி) + அசை (=வாடு, கூம்பு) + இயம் (=ஒளி) = இறசியம் >>> இராசியம் = ஒளி அழிந்ததும் வாடிக் கூம்புவது. |
இராசீவம் |
தாமரை |
இறசிமம் |
இறு (=அழி) + அசை (=வாடு, கூம்பு) + இமை (=ஒளிர்) + அம் = இறசிமம் >>> இராசீவம் = ஒளி அழிந்ததும் வாடிக் கூம்புவது. |
இராட்சதன் |
அரக்கன் |
இராச்சதன் |
இருமை (=பெருமை) + ஆசு (=ஆணவம், செருக்கு) + அதம் (=அழிவு) + அன் = இராச்சதன் >>> இராட்சதன் = செருக்கி அழிக்கும் பெரியவன். |
இராட்டினம், இராட்டு |
தொடர்ந்து சுற்றப்படுவது |
இராட்டினம் |
(2) ஈர் (=இழு, நீளு, தொடர்) + ஆட்டு (=சுற்று) + இனம் (=வகை) = இராட்டினம் = தொடர்ந்து சுற்றப்படும் வகை. |
இராடம் |
கழுதை |
இறாறம் |
இறு (=கட்டு) + ஆறு (=பொறு, சும) + அம் = இறாறம் >>> இராடம் = கட்டியதைப் பொறுமையாகச் சுமப்பது = கழுதை. |
இராணி |
அரசி |
இறாணி |
இறை (=அரசன்) + ஆணம் (=அன்பு) + இ = இறாணி >>> இராணி = அரசனின் அன்புக்குரியவள். |
இராணுவம் |
போர்ப்படை |
இறண்ணுவம் |
ஈறு (=எல்லை, அழிவு) + அண்ணு (=நெருங்கு, கூடு) + அம் = இறண்ணுவம் >>> இராணுவம் = எல்லையில் கூடி அழிக்கும் கூட்டம். |
இராத்திரி |
இரவு |
இறாத்திரி |
இறை (=பொழுது) + ஆதி (=சூரியன்) + இரி (=நீங்கு) = இறாத்திரி >>> இராத்திரி = சூரியன் நீங்கிய பொழுது. |
இராத்திரி |
மஞ்சள் |
இரைத்திரி |
ஈர் (=எழுது, பூசு) + ஐ (=அழகு) + திரு (=ஒளி, பெண்) + இ = இரைத்திரி >>> இராத்திரி = ஒளிரும் அழகுக்காகப் பெண்கள் பூசுவது. |
இராதம் |
கடைக்கொள்ளி |
எராறம் |
எரி (=தீ) + ஆறு (=தணி, உலர்) + அம் = எராறம் >>> இராதம் = தீ எரிந்து தணிந்த உலர்பொருள். |
இராதா |
எண்ணம் |
இறைதா |
இறை (=மனம்) + தா (=உண்டாகு, தோன்று) = இறைதா >>> இராதா = மனதில் தோன்றுவது = எண்ணம் |
இராமம் |
கண்கவர் அழகு |
இராவம் |
ஈர் (=கவர்) + ஆ (=உண்டாக்கு) + அம் (=அழகு) = இராவம் >>> இராமம் = கவர்ச்சியை உண்டாக்கும் அழகு = கண்ணைக் கவரும் அழகு. |
இராமம் |
மனம் விரும்பத் தக்கது |
இறாவம் |
இறை (=மனம்) + ஆவு (=விரும்பு) + அம் = இறாவம் >>> இராமம் = மனம் விரும்பத் தக்கது. |
இராமன் |
சந்திரன் |
இராவான் |
இரா (=இரவு) + வான் (=வானம், ஒளி) = இராவான் >>> இராமன் = இரவில் வானத்தில் ஒளிர்பவன் = சந்திரன். |
இராயசம் |
எழுத்து வேலை |
இறையாசம் |
இறை (=கடமை, வேலை) + ஆசு (=எழுத்து) + அம் = இறையாசம் >>> இராயசம் = எழுத்து வேலை. |
இராவடி |
ஏலக்காய் |
இராவடி |
ஈர் (=பசுமை, பிள) + ஆவி (=புகை, நறுமணம்) + அடு (=சமை) + இ = இராவடி = சமையலில் நறுமணத்திற்காக பிளந்து இடும் பசும்பொருள் |
இராவணம் |
விளக்கு |
இராவணம் |
இரா (=இரவு) + அணை (=பொருத்து, அவி) + அம் = இராவணம் = இரவில் பொருத்தி அணைக்கப்படுவது. |
இராவணம் |
அழுகை |
இறைபனம் |
இறை (=கண்) + பனி + அம் = இறைபனம் >>> இராவணம் = கண்கள் பனித்தல் = அழுகை. |
இராவணன் |
கடவுள் |
இராவணன் |
இரு (=நிலைபெறு) + ஆவணம் (=ஆளுமை) + அன் = இராவணன் = நிலையாக ஆள்பவன் = கடவுள். |
இராவணன் |
சீதையைக் கடத்தியவன் |
இரவ்வணன் |
ஈர் (=இழு) + அவ்வை (=பெண்) + அணை (=சிறை) + அன் = இரவ்வணன் >>> இராவணன் = பெண்ணை இழுத்துச்சென்று சிறைவைத்தவன். |
இராவுத்தன், இரௌத்தன் |
குதிரைத் தலைவன் |
இறைவீதன் |
இறை (=தலைவன்) + வீதி (=குதிரை) + அன் = இறைவீதன் >>> இராவுத்தன் >>> இரௌத்தன் = குதிரைத் தலைவன் |
இரிணம் |
உவர்நிலம் |
இறிணம் |
இறை (=சிதறு, நிலம், பொடி) + இணை (=சேர், கல) + அம் (=அழகு, வெண்மை) = இறிணம் >>> இரிணம் >>> இருணம் = வெண்பொடி சிதறிக் கலந்திருக்கும் நிலம். |
இரித்தை |
பொழுது |
இறுது |
இறுது (=பொழுது0 + ஐ = இறுதை >>> இரித்தை |
இருசு |
நேர்மை |
இறிசு |
இறு (=அழி, இல்லாகு) + இசை (=பணி, வளை) + உ = இறிசு >>> இருசு = வளைவு இல்லாமை = நேர்மை. |
இருசு |
அச்சுமரம் |
இறுழு |
இறை (=நடு, இருத்தல், மரம்) + உழ (=சுற்று) + உ = இறுழு >>> இருசு = நடுவில் இருந்து சுற்றச்செய்யும் மரம் = அச்சு மரம் |
இருசு |
மூங்கில் |
இறிசு |
இறை (=வணங்கு, வளை, மரம்) + இசி (=இழு, நீளு) + உ = இறிசு >>> இருசு = வளையக்கூடிய நீளமான மரம் |
இருணம் |
கடன் |
இறினம் |
இறு (=திருப்பிக்கொடு) + இனம் (=பொருள்) = இறினம் >>> இருணம் = திருப்பிக் கொடுக்கும் பொருள். |
இருத்தி |
கடவுள் தந்த ஆற்றல் |
இறீதூ |
இறை (=கடவுள்) + ஈ (=கொடு) + தூ (=ஆற்றல்) = இறீதூ >>> இருத்தி = கடவுள் கொடுத்த ஆற்றல். |
இருதம் |
விவசாயம், யாசகம் |
இருந்தம் |
இரை (=உணவு) + உந்து (=பெருக்கு) + அம் = இருந்தம் >>> இருதம் = உணவைப் பெருக்குதல். |
இருதயம் |
இரத்தத்தைப் பாய்ச்சுவது |
உருந்தயம் |
உரு (=சிவப்பு) + உந்து (=செலுத்து, பாய்ச்சு) + அயம் (=நீர்) = உருந்தயம் >>> இருதயம் = சிவப்புநீரைப் பாய்ச்சுவது. |
இருதயம் |
மனம் |
இறுதயம் |
இறை (=எண்ணம்) + உதி (=தோன்று) + அயம் (=இடம்) = இறுதயம் >>> இருதயம் = எண்ணம் தோன்றும் இடம் |
இருது, ருது |
காலம் |
இருது |
(2) இரி (=கெடு, அழி) + உதி (=தோன்று) + உ = இருது = தோன்றியதும் அழிந்து போவது = காலம். |
இருது, ருது |
மகளிர் பூப்பு |
இறுந்து |
(2) இறை (=பருவம், இடுப்பு, பாய்) + உந்து (=வெளிப்படு) = இறுந்து >>> இருது = பருவந்தோறும் இடுப்பில் இருந்து பாய்ந்து வெளிப்படுவது |
இருந்தை, இருந்து, இருந்தில் |
மரக்கரி |
இருந்தை |
இருமை (=கருமை) + தை (=மரம், உண்டாக்கு) = இருந்தை = மரத்தில் இருந்து உண்டாக்கிய கரும்பொருள். |
இரேகை, ரேகை |
கையில் செல்லும் வரி |
இறேகை |
(2) இறை (=கை, வரி) + ஏகு (=செல்) + ஐ = இறேகை >>> இரேகை >>> ரேகை = கையில் செல்லும் வரிகள். |
இரேக்கு |
பூவிதழ் |
இரேக்கு |
ஈர் (=மென்மை) + எஃகு (=அவிழ்) = இரேக்கு = அவிழும் மென்பொருள் |
இரேக்கு, ரேக்கு |
இரும்புத் தகடு |
இறேக்கு |
இறை (=சமம், பரப்பு) + எஃகு (=இரும்பு) = இறேக்கு >>> இரேக்கு >>> ரேக்கு = சமதளமாய்ப் பரப்பப்பட்ட இரும்பு. |
இரேகை |
அரசு வரி |
இறேக்கை |
இறை (=அரசன், வரி) + எக்கு (=குவி, திரட்டு) + ஐ = இறேக்கை >>> இரேகை = அரசனால் திரட்டப்படும் வரி. |
இரேகை |
இரும்பில் உள்ள அளவுக் கோடு |
இறேகை |
இறை (=அளவு, வரி) + எஃகு (=இரும்பு) + ஐ = இறேகை >>> இரேகை >>> ரேகை = இரும்பில் உள்ள அளவுக்கோடு |
இரேகை |
எழுத்து |
இரேகை |
ஈர் (=எழுது) + எஃகு (=இரும்பு) + ஐ = இரேகை = இரும்பால் எழுதியது |
இரேசகம் |
மூச்சை இழுத்து வெளிவிடுதல் |
இறேழகம் |
இறை (=பாய்ச்சு) + எழு + அகம் (=உயிர், மூச்சு) =இறேழகம் >>> இரேசகம் = மூச்சை எழுப்பிப் பாய்ச்சுதல். |
இரேசகம் |
பேதி, பேதிமருந்து |
இரேச்சகம் |
இரி (=கலங்கு, விரை) + எச்சம் (=மலம்) + அகம் (=வயிறு) = இரேச்சகம் >>> இரேசகம் = வயிறு கலங்கி மலம் விரைதல். |
இரேசகி, இரேசி |
மூச்சை விடு |
இரேசகி |
இரேசகம் (=மூச்சை விடுதல்) >>> இரேசகி = மூச்சை வெளிவிடு |
இரேணு |
மண் துகள் |
இரேணு |
ஈர் (=நுண்மை) + ஏணி (=நிலம், மண்) + உ = இரேணு = நுண்ணிய மண் |
இரேணுகம் |
மிளகு |
இரேணீகம் |
இருமை (=கருமை) + எண் (=மதி) + ஈகை (=தங்கம்) + அம் = இரேணீகம் >>> இரேணுகம் = கருப்புத் தங்கமாக மதிக்கப்படுவது |
இரேதசு |
விந்து |
இறைதழு |
(2) இறை (=உடல், நீர்பாய்ச்சு, பொழுது) + தழு (=புணர்) = இறைதழு >>> இரேதசு = உடல்கள் புணரும் போது பாயும் நீர்ப்பொருள். |
இரேயம் |
கள், சாராயம் |
இறேயம் |
இறு (=வடிகட்டு) + ஏய் (=வஞ்சி, மயக்கு) + அம் (=நீர், உணவு) = இறேயம் >>> இரேயம் = வடிகட்டப்படும் மயக்குகின்ற நீருணவு. |
இரேழி |
முன்வாசலுக்கும் வீட்டுக்கதவுக்கும் இடைப்பட்டது |
இறேழி |
இறை (=வீட்டிறப்பு, முன், இடம்) + எழு (=தொடங்கு, பரவு) + இ = இறேழி >>> இரேழி = வீட்டிறப்பில் இருந்து தொடங்கி முன்னால் பரவியுள்ள இடம் |
இரவுத்திரம், இரௌத்திரம் |
கடுங்கோபம் |
இறவித்துரம் |
இறை (=கண்) + அவி (=புழுங்கு, சின) + துரு (=சிவப்பு) + அம் = இறவித்துரம் >>> இரவுத்திரம் >>> இரௌத்திரம் = கண்களைச் சிவப்பாக்கும் சினம். |
இரௌரவம் |
நரகம் |
இறவூறவம் |
(2) இற + அவை (=இடம்) + ஊறு (=துன்பம்) + அவம் (=குற்றம்) = இறவூறவம் >>> இரௌரவம் = இறந்தவர்கள் செய்த குற்றத்திற்காகத் துன்புறுத்தப்படும் இடம் |
இலக்கணம், இலக்கணை |
மொழியின் எல்லை |
இலக்கணம் |
இலக்கு (=எழுத்து, மொழி) + அணை (=கரை, எல்லை) + அம் = இலக்கணம் = மொழிக்கு எல்லையாக விளங்குவது. |
இலக்கணம் |
அழகு |
இலக்கணம் |
இலக்கம் (=ஒளி) + அணம் = இலக்கணம் >>> லக்ச~ண = ஒளி, அழகு |
இலக்கணம், இலக்கு |
அடையாளம், குறியீடு |
இலக்கணம் |
இலக்கு (=விளக்கு, அறியச்செய்) + அணம் = இலக்கணம் = அறியச் செய்வது = குறியீடு, அடையாளம். |
இலக்கம், இலக்கு, இலக்கியம் |
குறி |
இலக்கம் |
இல் (=துளை) + அக்கு (=கண்) + அம் = இலக்கம் = கண்களால் துளைக்கப்படுவது = குறி. |
இலக்காரம், இலக்கர் |
ஆடை |
இலக்காரம் |
இல் (=இன்மை, நிர்வாணம்) + அகம் (=உடல்) + ஆர் (=அணி, மறை) + அம் = இலக்காரம் = உடலின் நிர்வாணத்தை மறைத்து அணிவது. |
இலக்கி, இலக்கு |
எழுது, வரை |
இலக்கி, இலக்கு |
இலக்கு (=எழுத்து) >>> இலக்கு, இலக்கி = எழுது, வரை, குறி |
இலக்கிதம் |
குறிக்கப்பட்டது |
இலக்கிதம் |
இலக்கி (=எழுது, குறி) + இதம் = இலக்கிதம் = குறிக்கப்பட்டது |
இலக்கியம் |
கல்வி நூல் |
இலக்கியம் |
இலக்கு (=எழுத்து) + இயை (=நிறை) + அம் = இலக்கியம் = எழுத்துக்களால் நிறைந்தது. |
இலக்கினம் |
சோதிடத்தில் பிறக்கும் பிரிவு |
இலங்கினம் |
இலங்கு (=விளங்கு, தோன்று, பிற) + இனம் (=மனிதன், பிரிவு) = இலங்கினம் >>> இலக்கினம் = மனிதஉயிர் பிறக்கும் பிரிவு. |
இலக்கு |
குறிக்கோள், தீர்மானம் |
எலக்கு |
எல்லை (=முடிவு) + அகம் (=எண்ணம்) + உ = எலக்கு >>> இலக்கு = முடிவான எண்ணம் = தீர்மானம், குறிக்கோள் |
இலக்கு |
அளவு |
எலக்கு |
எல்லை (=முடிவு) + அகம் (=எண்ணம்) + உ = எலக்கு >>> இலக்கு = எண்ணிய முடிவு = அளவு. |
இலக்கு |
பகை, எதிரி |
இலக்கு |
இல் (=அழிவு) + அகை (=தாக்கு) + உ = இலக்கு = தாக்கி அழிக்கப்பட வேண்டியது = பகை, எதிரி |
இலக்குமி |
திருமகள், செல்வம் |
இலக்குமி |
இல் (=வறுமை) + அகை (=செழி) + உமி (=அழி) = இலக்குமி = வறுமையை அழித்துச் செழிக்கச் செய்பவள் = திருமகள், செல்வம் |
இலக்குமி |
மஞ்சள் |
இலக்குபை |
இலக்கு (=வரை, பூசு, தோற்றுவி) + பை (=பொருள், பசுமை, அழகு, இளமை) = இலக்குபை >>> இலக்குபி >>> இலக்குமி = இளமை அழகு தோன்றச்செய்யும் பசுமையான பூசுபொருள். |
இலக்கை |
ஆடை |
இலக்கை |
இல் (=இன்மை, நிர்வாணம்) + அகை (=நீக்கு, இல்லாக்கு) + ஐ = இலக்கை = நிர்வாணத்தை இல்லாமல் செய்வது. |
இலகடம் |
அம்பாரி |
இலேகடம் |
இல் (=இடம்) + ஏ (=மேல், அம்பு, எய்தல்) + கடம் (=யானை) = இலேகடம் >>> இலகடம் = யானை மேலிருந்து அம்பு எய்யும் இடம் |
இலகு |
எளிது, இலேசு, சிறுமை |
எளகு |
எள் (=எள்விதை, ஒப்பு) + அகம் (=தன்மை) + உ = எளகு >>> இலகு = எள்விதையை ஒத்த தன்மை உடையது. |
இலகிமா |
இலேசாக்கும் ஆற்றல் |
எளகுமா |
எளகு (=இலேசு) + மா (=ஆற்றல்) = எளகுமா >>> இலகிமா = இலேசாக்கும் ஆற்றல். |
இலங்கம் |
கூடுதல், சேர்க்கை |
இலக்கம் |
இல் (=இன்மை) + அகை (=நீங்கு, பிரி) + அம் = இலக்கம் >>> இலங்கம் = பிரிவு இல்லாமை |
இலங்கனம் |
தடை |
இலக்கணம் |
இல் (=செல், இயங்கு) + அகை (=தடு) + அணம் = இலக்கணம் >>> இலங்கனம் = செல்ல / இயங்கத் தடை. |
இலங்கனம், லங்கணம் |
பட்டினி |
இலக்கணம் |
இல் (=இன்மை) + அகம் (=வயிறு, உணவு) + அணம் = இலக்கணம் >>> இலங்கனம் = வயிற்றுக்கு உணவு இன்மை. |
இலங்கை |
ஆற்றிடைக்குறை |
எலக்கை |
ஏல் (=நீர்) + அகம் (=எழுச்சி, உயர்வு, பூமி) + ஐ = எலக்கை >>> இலங்கை = நீரில் இருந்து எழுந்த / உயர்ந்த பூமி. |
இலச்சினை |
முத்திரை, அடையாளம் |
இலச்சீனை |
(2) இல் (=துளை, குத்து) + அச்சு (=வடிவம்) + ஈனு (=உண்டாக்கு) + ஐ = இலச்சீனை >>> இலச்சினை = குத்தி உண்டாக்கும் வடிவம் |
இலச்சை, லச்சை^ |
கூச்சம், வெட்கம் |
இளச்சை |
இளை (=சோர், பின்வாங்கு) + அசை (=நுடங்கு, வளை) + ஐ = இளச்சை >>> இலச்சை = பின்வாங்கி வளைதல் = கூசுதல், வெட்குதல். |
இலஞ்சம் |
மறைவாகப் பெறப்படும் குற்றப் பொருள் |
எலாச்சம் |
ஏல் (=கொள், பெறு) + ஆசு (=கவசம், மறைப்பு, குற்றம்) + அம் = எலாச்சம் >>> இலஞ்சம் = குற்றமாகக் கொள்ளப்படுவதால் மறைவாகப் பெறப்படுவது. |
இலக்கம், இலட்சம், லட்சம் |
நூறாயிரம் |
இலக்கம் |
(2) இல் (=ஆகாயம்) + அகை (=எரி, ஒளிர், மதி) + அம் = இலக்கம் >>> இலக்ச~ம் >>> இலட்சம் = ஆகாயத்தில் ஒளிர்பவற்றின் மதிப்பு. |
இலட்சியம், லட்சியம் |
குறிக்கோள் |
எலச்சியம் |
ஏல் (=எதிர்கொள்) + அச்சு (=உடல், பொருள்) + இயம் = எலச்சியம் >>> இலட்சியம் >>> லட்சியம் = எதிர்கொள்ளும் பொருள். |
இலட்டு, லட்டு, இலட்டுகம், இலட்டுவம் |
ஏலம் கலந்த உருண்டையான இனிப்பு உணவு |
எலாட்டு |
(2) ஏலம் + ஆடு (=கல, செய், சமை, பொடியாகு, வட்டமிடு) + உ = எலாட்டு >>> இலட்டு = சமைத்த மாவுடன் ஏலக்காய் கலந்து வட்டமாகச் செய்யப்படுவது. |