வெள்ளி, 23 ஏப்ரல், 2021

73 - (ஆலம் -> இரட்சை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

ஆலம்

ஆகாயம்

ஆலம்

அல் (=இன்மை, வெளி) + அம் = ஆலம் = வெட்டவெளி, ஆகாயம்

ஆலம்

கலப்பை

ஆலம்

அலை (=திரி, மோது, தாக்கு) + அம் = ஆலம் = தாக்கிக் கொண்டே திரிவது.

ஆலம்

கருமை

ஆலம்

அல் (=இரவு, இருள்) + அம் = ஆலம் = கருமை

ஆலம்பனம், ஆலம்பம்

நிலையானது, பற்றுக்கோடு

ஆலவ்வணம்

அலை (=அசை) + அவி (=அழி, இல்லாகு) + அணம் = ஆலவ்வணம் >>> ஆலம்பனம் >>> ஆலம்பம் = அசைவற்றது = நிலையானது, பற்றுக்கோடு

ஆலயம்

தங்குமிடம், வீடு

ஆலயம்

ஆலு (=தங்கு) + அயம் (=இடம்) = ஆலயம் = தங்குமிடம், வீடு

ஆலவட்டம்

கைவிசிறி

ஆலவட்டம்

அலை (=ஆட்டு) + வட்டம் (=விசிறி) = ஆலவட்டம் = ஆட்டும் விசிறி

ஆலவாய்

பாம்பு

ஆலவாய்

ஆலம் (=நஞ்சு) + வாய் (=துளை) = ஆலவாய் = துளையில் நஞ்சுடையது.

ஆலவாலம்

வயல், விளைநிலம்

ஆலவலம்

ஆலம் (=கலப்பை) + அவை (=இடம்) + அலை + அம் = ஆலவலம் >>> ஆலவாலம் = கலப்பை அலைந்த இடம் = விளைநிலம்.

ஆலாபனம், ஆளாபம்

நீட்டி ஒலித்தல்

ஆலாவணம்

ஆல் (=ஒலி) + ஆவி (=நெட்டுயிர்) + அணம் = ஆலாவணம் >>> ஆலாபனம் = நெட்டுயிர்த்து ஒலித்தல்

ஆலாபி

நீட்டி ஒலி

ஆலாபி

ஆலாபனம் (=நீட்டி ஒலித்தல்) >>> ஆலாபி = நீட்டி ஒலி

ஆலாலம்

கடல் நஞ்சு

ஆலாலம்

ஆலம் (=கடல்) + ஆலம் (=நஞ்சு) = ஆலாலம் = கடலில் தோன்றிய நஞ்சு

ஆலி, ஆலை

கள்

ஆலி

அலை (=கலங்கு, மயங்கு, நீர்) + இ = ஆலி = மயக்கம் தரும் நீர்

ஆலிங்கனம்

உடலைத் தழுவுதல்

ஆளிங்கணம்

அளை (=கல, தழுவு) + இங்கம் (=உடல்) + அணம் = ஆளிங்கணம் >>> ஆலிங்கனம் = உடலைத் தழுவுதல்

ஆலோகம்

ஒளி

ஆலோக்கம்

அல் (=இரவு, இருள்) + ஓக்கு (=எறி, நீக்கு) + அம் = ஆலோக்கம் >>> ஆலோகம் = இருளை நீக்குவது = ஒளி

ஆலோகம், ஆலோகனம்

பார்வை

ஆலோக்கம்

அல் (=ஒளி) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = ஆலோக்கம் >>> ஆலோகம் = ஒளியால் உண்டாக்கப்படுவது = பார்வை.

ஆலோசனம், ஆலோசனை

அறிவு, கல்வி

ஆலோச்சணம்

(2) அல் (=இருள், அறியாமை, மயக்கம்) + ஓச்சு (=ஓட்டு, நீக்கு) + அணம் = ஆலோச்சணம் >>> ஆலோசனம், ஆலோசனை = மயக்கத்தை / அறியாமையை நீக்குவது = அறிவு, கல்வி.

ஆலோசி

அறி, சிந்தி

ஆலோசி

ஆலோசனை (=அறிவு) >>> ஆலோசி = அறி, சிந்தி

ஆவசியகம்

தேவையானது

ஆவசியகம்

அவசியம் (=தேவை) + அகம் = ஆவசியகம் = தேவையானது

ஆவடி, சாவடி

கூடுமிடம்

ஆவடி

அவை (=கூட்டம்) + அடி (=இடம்) = ஆவடி >>> சாவடி = கூடுமிடம்

ஆவணம்

உரிமைப் பத்திரம்

ஆமாணம்

அம் (=சொல்) + ஆணம் (=நேயம், பற்று, ஆதாரம்) = ஆமாணம் >>> ஆவணம் = பற்றினைச் சொல்லும் ஆதாரம் = உரிமைப்பத்திரம்

ஆவணம்

அடிமைத்தனம்

ஆமணம்

அமை (=அடங்கு, கீழ்ப்படி) + அணம் = ஆமணம் >>> ஆவணம் = கீழ்ப்படிந்த / அடங்கிய நிலை.

ஆவம்

அம்புடையது

ஆம்பம், ஏவம்

(1) அம்பு + அம் = ஆம்பம் >>> ஆவம் = அம்பினைக் கொண்டது. (2) ஏ (=அம்பு) + அம் = ஏவம் >>> ஆவம் = அம்பினைக் கொண்டது

ஆவம்

கயிறு, நார்

ஆவம்

ஆ (=கட்டு, நீளு) + அம் = ஆவம் = கட்ட உதவும் நீண்ட பொருள்.

ஆவர்த்தம், ஆவர்த்தி, ஆவர்த்தனம்

தடவை

ஆவாரறம்

ஆ (=நிகழ்) + வாரம் (=வரிசை) + அறி (=எண்ணு) + அம் = ஆவாரறம் >>> ஆவரதம் >>> ஆவர்த்தம் = நிகழும் வரிசையின் எண்ணிக்கை

ஆவர்த்தம்

மழைமேகம்

ஆமாராற்றம்

ஆ (=தரு) + மாரி (=மழை) + ஆற்று (=மிகு) + அம் = ஆமாராற்றம் >>> ஆவரதம் >>> ஆவர்த்தம் = மிக்க மழையைத் தருவது.

ஆவர்த்தனம்

மறுமணம்

ஆமறுத்தனம்

ஆ (=கட்டு) + மறுமை + தனம் (=தங்கம், தாலி) = ஆமறுத்தனம் >>> ஆவர்த்தனம் = மறுபடியும் தாலி கட்டுதல்

ஆவர்சா^

தினசரிக் கணக்கு

ஆவறியம்

ஆ (=நிகழ், நட) + அறி (=கணக்கிடு) + அம் = ஆவறியம் >>> ஆவரிசம் >>> ஆவர்சா^ = நடப்புக் கணக்கு

ஆவரணம்

சுவர், கோட்டை, ஆடை, மறைப்பு,

ஆவாரணம்

ஆ (=கட்டு) + ஆர் (=மறை) + அணம் = ஆவாரணம் >>> ஆவரணம் = மறைப்பதற்காகக் கட்டப்படுவது = சுவர், கோட்டை, ஆடை, மறைப்பு

ஆவரணீயம்

மறைப்பது

ஆவரணீயம்

ஆவரணம் (=மறைப்பு) + ஈ (=தா) + அம் = ஆவரணீயம் = மறைப்பைத் தருவது

ஆவரி

மறை

ஆவரி

ஆவரணம் (=மறைப்பு) >>> ஆவரி = மறை

ஆவலி, ஆவளி

தடவை

ஆமாலி

ஆ (=நிகழ்) + மாலை (=வரிசை) + இ = ஆமாலி >>> ஆவலி >>> ஆவளி = நிகழும் வரிசை.

ஆவளி, ஆவலி

பரம்பரை

ஆவளி

ஆ (=தோன்று) + வளம் (=வழி) + இ = ஆவளி >>> ஆவலி = வழித்தோன்றல்

ஆவாகனம்

முன் தோன்ற அழைத்தல்

ஆமாகணம்

ஆ (=தோன்று) + மா (=அழைப்பு) + கண் (=முன்பு, இடம்) + அம் = ஆமாகணம் >>> ஆவாகனம் = முன்னிடத்தில் தோன்றுமாறு அழைத்தல்.

ஆவாகி

அழை

ஆவாகி

ஆவாகனம் (=அழைப்பு) >>> ஆவாகி = அழை

ஆவாசம்

நகரம்

ஆவசம்

அவை (=கூட்டம், இடம்) + அசை (=தங்கு) + அம் = ஆவசம் >>> ஆவாசம் = கூட்டமாகத் தங்கும் இடம் = நகரம்.

ஆவாசம்

வயல்

ஆபசம்

ஆ (=தோன்று) + பசுமை + அம் = ஆபசம் >>> ஆவாசம் = பசுமை தோன்றுவது

ஆவாரகம், ஆவாரம்

மறைப்பு,

ஆவாரகம்

ஆ (=கட்டு) + ஆர் (=மறை) + அகம் (=உள்ளிடம்) = ஆவாரகம் = உள்ளிடத்தை மறைப்பதற்காகக் கட்டப்படுவது = சுவர், மறைப்பு

ஆவி

நீர்நிலை

ஆமி

ஆம் (=நீர்) + இ = ஆமி >>> ஆவி = நீருடையது

ஆவிகை

ஆதாரம், பற்றுக்கோடு

ஆவிகை

ஆவி (=வலிமை) + கை (=ஊட்டு) = ஆவிகை = வலிமை ஊட்டுவது = ஆதாரம், பற்றுக்கோடு

ஆவிதம்

மான்

ஆவீறம்

ஆ (=நீளு, தொடர்) + வீறு (=விரை, விலங்கு) + அம் = ஆவீறம் >>> ஆவிதம் = தொடர்ந்து விரையக்கூடிய விலங்கு

ஆவிர்ப்பாவம்

கண்முன்னே தோன்றுதல்

ஆவிறைப்பாவம்

ஆவி (=வெளிப்படு) + இறை (=பார்) + பாவு (=ஊன்று, நில்) + அம் = ஆவிறைப்பாவம் >>> ஆவிர்ப்பாவம் = வெளிப்பட்டுப் பார்வைக்கு நிற்றல்

ஆவிருத்தி

தடவை

ஆமுறுதி

ஆ (=நிகழ்) + முறை + உதி (=அறி, கணி) = ஆமுறுதி >>> ஆவிருத்தி = நிகழும் முறையின் கணக்கு.

ஆவிருத்தி

தொடர்ந்து ஓதுதல்

ஆவீறுந்தி

ஆ (=நீளு, தொடர்) + வீறு (=அறிவு, கல்வி) + உந்து (=வெளிப்படுத்து, சொல்) + இ = ஆவீறுந்தி >>> ஆவிருத்தி = தொடர்ந்து பாடத்தைச் சொல்லுதல்

ஆவிருதி

இறுமாப்பு

ஆவீருத்தி

ஆவி (=வலிமை) + இறை (=பதில்) + உத்தி (=பேச்சு) = ஆவிறுத்தி >>> ஆவிருதி = வன்மையாகப் பதில் கூறுதல்

ஆவிலம்

கலங்கல் நீர்

ஆவிலம்

அவி (=உணவு) + இல் + அம் (=நீர்) = ஆவிலம் = உணவு ஆகாத நீர்

ஆவுதி

யாகம்

ஆவிதீ

அவி (=உணவு, எரி) + தீ = ஆவிதீ >>> ஆவுதி = தீயில் உணவை எரித்தல்

ஆவேசம்

கடுஞ்சொல், சினப்பேச்சு

ஆவேயம்

அவி (=வெப்பம்) + ஏய் (=பொருந்து) + அம் (=சொல்) = ஆவேயம் >>> ஆவேசம் = வெப்பம் பொருந்திய சொல்.

ஆவேசம்

தெய்வம் / பேய் ஏறுகை

ஆவேயம்

ஆவி (=பேய், தெய்வம், மனம்) + ஏய் (=பொருந்து) + அம் = ஆவேயம் >>> ஆவேசம் = பேய் / தெய்வம் மனதுடன் பொருந்துதல்.

ஆவேசி

தெய்வம் / பேய் ஏறு

ஆவேசி

ஆவேசம் (=தெய்வம் / பேய் ஏறுகை) >>> ஆவேசி = தெய்வம் / பேய் ஏறு

ஆவேசனம்

உலோக வேலை செய்யும் இடம்

அயவேயணம்

அயம் (=உலோகம், இடம்) + வே (=எரி, உருக்கு) + அணம் = அயவேயணம் >>> ஆவேசனம் = உலோகங்களை உருக்கும் இடம்.

ஆவேதனம்

அறிக்கை

ஆவேற்றணம்

ஆ (=நிகழ்) + ஏற்று (=பதி, சமர்ப்பி) + அணம் = ஆவேற்றணம் >>> ஆவேதனம் = நிகழ்ந்ததைப் பதிந்து சமர்ப்பித்தல்.

ஆளத்தி

நீட்டி ஒலித்தல்

ஆலாற்றி

ஆல் (=ஒலி) + ஆற்று (=கூட்டு, நீட்டு) + இ = ஆலாற்றி >>> ஆலத்தி >>> ஆளத்தி = கூட்டி / நீட்டி ஒலித்தல்

ஆளானம்

யானை கட்டும் தறி, தூண்

ஆளானம்

ஆள் (=அடக்கு, கட்டுப்படுத்து + ஆனை + அம் = ஆளானம் = யானையைக்  கட்டுப்படுத்துவது.

ஆற்பதம்

பற்றுக்கோடு

ஆறுபதம்

ஆறு (=பொறு, தாங்கு) + பதம் (=பொருள்) = ஆறுபதம் >>> ஆற்பதம் = தாங்கும் பொருள் = ஆதாரம், பற்றுக்கோடு

ஆன்மா

உயிர்

ஆணமா

ஆணம் (=உடல்) + மா (=வலிமை) = ஆணமா >>> ஆன்மா = உடலுக்கு வலிமை ஆவது = உயிர்.

ஆன்னிகம்

நாட்கடன்

ஆன்றுகம்

அன்று (=அன்றைய நாள்) + கம் (=வேலை, செயல்) = ஆன்றுகம் >> ஆன்னிகம் = அன்றைய நாள் வேலை = நாட்கடன்

ஆனகம்

பசுத்தோலால் ஆனது

ஆனக்கம்

ஆன் (=பசு) + அக்கு (=தோல்) + அம் = ஆனக்கம் >>> ஆனகம் = பசுத் தோலால் ஆனது.

ஆனந்தம்

பெருமகிழ்ச்சி

ஆனந்தம்

ஆல் (=மகிழ்) + நந்து (=பெருகு) + அம் = ஆனந்தம் = மகிழ்ச்சிப் பெருக்கு

ஆனந்தம்

அழிவு, மரணம்

ஆனந்தம்

அல் (=எதிர்மறை) + நந்தம் (=ஆக்கம்) = ஆனந்தம் = ஆக்கத்தின் எதிர்மறை

ஆனந்தி

மகிழ்

ஆனந்தி

ஆனந்தம் (=மகிழ்ச்சி) >>> ஆனந்தி = மகிழ்

ஆனம்

கள்

ஆனம்

ஆன் (=பெருமை, அழி) + அம் (=நீர், உணவு) = ஆனம் = பெருமையை அழிக்கும் நீருணவு.

ஆனம்

மரக்கலம்

ஆனம்

ஆன் (=பரவு, நீங்கு, கட) + அம் (=நீர்) = ஆனம் = நீரில் பரவிக் கடக்க உதவுவது

ஆனனம்

வாய், முகம்

ஆனன்னம்

ஆன் (=விரி, திற) + அன்னம் (=உணவு) = ஆனன்னம் >>> ஆனனம் = உண்பதற்காக திறக்கப்படுவது = வாய் >>> வாய் அமைந்த முகம்.

ஆனி

கேடு

ஆனி

ஆன் (=கெடு) + இ = ஆனி = கேடு, துன்பம்

ஆனியம்

நாள், நாட்கூலி, நட்சத்திரம்

ஆன்றியம்

அன்று + இயை (=பொருந்து) + அம் = ஆன்றியம் >>> ஆன்னியம் >>> ஆனியம் = அன்றைக்குப் பொருந்தியது = நாள், நட்சத்திரம், நாட்கூலி

ஆனுபூர்வி

தொடர்ச்சி

அண்ணுவூர்வி

அண்ணு (=நெருங்கு, ஒட்டு) + ஊர்வு (=நகர்வு) + இ = அண்ணுவூர்வி >>> ஆனுபூர்வி = நெருக்கமாக / ஒட்டியவாறு நகர்தல்.

ஆச்`தி, ஆத்தி

செல்வம்

ஆத்தி

அத்தம் (=பொருள், செல்வம்) + இ = ஆத்தி >>> ஆச்`தி

ஆச்`தை

ஈடுபாடு

ஆத்தை

ஆத்தம் (=விருப்பம், ஈடுபாடு) + ஐ = ஆத்தை >>> ஆச்`தை

ஆச்`பத்திரி, ஆசுபத்திரி

மருத்துவமனை

ஆசுமாற்றிரி

ஆசு (=துன்பம், நோய், இடம்) + மாற்று (=மருந்து) + இரி (=ஓட்டு, நீக்கு) = ஆசுமாற்றிரி >>> ஆசுபத்திரி = நோயை மருந்தினால் நீக்கும் இடம்.

ஆச்`பதம்

ஆதாரம், பற்றுக்கோடு

அசைவறம்

அசைவு + அறு + அம் = அசைவறம் >>> ஆச்`பதம் = அசைவற்றது = நிலையானது = பற்றுக்கோடு, ஆதாரம்

ஆச்`பதம்

மூலம்

ஆய்பதம்

ஆய் (=தோன்று) + பதம் (=இடம்) = ஆய்பதம் >>> ஆச்`பதம் = தோன்றுமிடம்

ஆச`ரா

வீடு

ஆசறை

அசை (=தங்கு, கட்டு) + அறை (=இடம்) = ஆசறை >>> ஆச`ரா = தங்குவதற்காக கட்டப்பட்ட இடம் = வீடு

ஆசாமி

மனிதன்

ஆயாவி

(2) ஆய் (=சிந்தி) + ஆவி (=உயிரி) = ஆயாவி >>> ஆசாமி = சிந்திக்கத் தெரிந்த உயிரினம்.

இக்கவம்

கரும்பு

ஈகாவம்

ஈ (=தரு) + கா (=தண்டு) + அம் (=நீர், உணவு, இனிமை) = ஈகாவம் >>> இக்கவம் = இனிய நீருணவைத் தரும் தண்டு.

இக்கு

கரும்புச்சாறு, தேன்.

இக்கு

இக்கு (=அழுத்து, நசுக்கு, பிழி) = இக்கு = நசுக்கிப் பிழியப்படுவது = கரும்புச்சாறு, தேன்.

இக்குவிகாரம்

சர்க்கரை

இக்குவிகாரம்

இக்கு (=கரும்பு) + இகு (=வீழ்த்து, இறக்கு) + ஆர் (=தீ, எரி, பெறு) + அம் (=உணவு) = இக்குவிகாரம் = கரும்பில் இருந்து இறக்கி எரித்துப் பெற்ற உணவு = சர்க்கரை.

இகம்

உலகம், பூமி

இங்கு

இங்கு (=இவ்விடம்) + அம் = இங்கம் = இவ்விடம் = பூமி, உலகம்

இங்கிதம்

குறிப்பு

இங்கம்

இங்கம் (=குறிப்பு) + இதம் = இங்கிதம்

இங்கிதம்

கருத்து

இங்கம்

இங்கம் (=அறிவு) + இதம் = இங்கிதம் = அறிவு, கருத்து

இங்கிதம்

இன்பம், நற்செயல்

இக்கிறம்

இக்கு (=துன்பம்) + இறு (=அழி, இல்லாகு) + அம் = இக்கிறம் >>> இங்கிதம் = துன்பம் இல்லாதது = இன்பம், நன்மை, நற்செயல்.

இச்சகம்

முகத்துதி

இச்சாக்கம்

இசை (=புகழ்) + ஆக்கம் (=சொல்) = இச்சாக்கம் >>> இச்சகம் = புகழும் சொல்

இச்சம், இச்~டம், இச்சை

விருப்பம்

இச்சம்

இசை (=விரும்பு) + அம் = இச்சம் >>> இச்~டம் = விருப்பம்

இச்சி

விரும்பு

இச்சி

இச்சம் (=விருப்பம்) >>> இச்சி = விரும்பு

இச்சை

வினா

உச்சை

உசவு / உச (=கேள், வினவு) + ஐ = உச்சை >>> இச்சை = வினா

இசிகம்

அம்பு

இசுகம்

இசி (=இழு) + உகை (=செலுத்து) + அம் = இசுகம் >>> இசிகம் = இழுத்துச் செலுத்தப்படுவது = அம்பு

இஞ்சை

துன்பம்

இச்சை

இசி (=துன்புறு) + ஐ = இச்சை >>> இஞ்சை = துன்பம்

இட்டம், இச்~டம்

விருப்பம்

இட்டம்

ஈடு (=அன்பு, விருப்பம்) + அம் = இட்டம் >>> இச்~டம் = அன்பு, விருப்பம்

இட்டலி, இட்லி

அவித்த மாவு உணவு வகை

இட்டளீ

இடி (=மாவு, சிற்றுண்டி) + அளை (=பொந்து, குழி) + ஈ (=இடு, உண்டாக்கு) = இட்டளீ >>> இட்டலி = மாவைக் குழியில் இட்டு உண்டாக்கிய சிற்றுண்டி

இட்டி, ஈட்டி

குத்தும் கருவி

இட்டி

இடி (=குத்து) >>> இட்டி >>> ஈட்டி = குத்துவது. ஒ.நோ: குத்து + அம் = குத்தம் >>> குந்தம் = குத்துவது = ஈட்டி.

இட்டி

யாகம்

இட்டீ

இடி (=தீ) + ஈ (=கொடு) = இட்டீ >>> இட்டி = தீக்குக் கொடுத்தல்.

இட்டிகை

செங்கல்

இட்டிகை

இடு (=நிரப்பு, உண்டாக்கு, கட்டு) + இகம் (=பூமி, மண், பொருள்) + ஐ = இட்டிகை = மண்ணை நிரப்பி உண்டாக்கிய கட்டுமான பொருள்.

இடங்கம்

உளி

இடெஃகம்

இட (=பிள, உரி) + எஃகு (=கூர்மை, இரும்பு) + அம் = இடெஃகம் >>> இடங்கம் = பிளந்து உரிக்க உதவும் கூரிய இரும்பு.

இடபம்

காளைமாடு

இடாவம்

(2) இடி (=குத்து, தாக்கு) + ஆ (=மாடு) + அம் = இடாவம் >>> இடபம் = குத்துகின்ற / தாக்குகின்ற மாடு.

இடம்பம், டம்பம்

பெருமை

இடவம்

இடம் (=பெருமை) + அம் = இடவம் >>> இடபம் >>> இடம்பம் >>> டம்பம்

இடாகினி

பிணத்தை உண்ணும் பேய்

இறாகுணி

இற + ஆகம் (=உடல்) + உண் + இ = இறாகுணி >>> இடாகினி = இறந்த உடலை உண்ணும் இறந்தது.

இடாகு

புள்ளி

இடஃகு

இடம் (=அளவு) + அஃகு (=சிறு) = இடஃகு >>> இடாகு = சிறிய அளவினது

இடாபு

அட்டவணை

இடாமு

இட (=பிள, வகு) + அம் (=சொல்) + உ = இடாமு >>> இடாபு = வகுத்துச் சொல்வது.

இடாம்பிகம்

வரம்பு கடந்த பெருமை

இடம்பிகம்

இடம்பம் (=பெருமை) + இக (=வரம்பு கட, மீறு) + அம் = இடம்பிகம் >>> இடாம்பிகம் >>> டாம்பிகம் = மீறிய / வரம்புகடந்த பெருமை

இத்யாதி

இது முதலான

இதியாதி

இதி (=இது) + ஆதி (=முதல்) = இதியாதி >>> இத்யாதி = இது முதலான

இதம்

நன்மை, இனிமை

இறம்

இறு (=கெடு, இல்லாகு) + அம் = இறம் >>> இதம் = கேடு இல்லாதது = நன்மை, இனிமை.

இதம்

இருதயம்

இறை

இறை (=நெஞ்சு) + அம் = இறம் >>> இதம்

இதம்

பற்று, அன்பு

இறம்

இறு (=தங்கு, பொருந்து, பற்று) + அம் = இறம் >>> இதம் = பற்று, அன்பு

இதயம்

இருதயம்

இறை

இறை (=நெஞ்சு) + அம் = இறயம் >>> இதயம்

இதரம்

பகை, வேறு

இதறம்

இதம் (=அன்பு) + அறு (=இல்லாகு) + அம் = இதறம் >>> இதரம் = அன்பு இல்லாமை = பகை, வேறு

இதரன்

அன்னியன், பகைவன்

இதறன்

இதரம் (=பகை, வேறு) + அன் = இதரன் = பகைவன், வேறானவன்

இதாகிதம்

நன்மை தீமை

இதகிதம்

இதம் (=நன்மை) + அகை (=நீங்கு, இல்லாகு) + இதம் (=நன்மை) = இதகிதம் >>> இதாகிதம் = நன்மையும் நன்மை இல்லாததும்

இதிகாசம்

வரலாறு

இறிகசம்

இறு (=முடி) + இக (=செல், நட) + அசை (=சொல்) + அம் = இறிகசம் >>> இதிகாசம் = நடந்து முடிந்ததைச் சொல்வது.

இந்தம், சிந்தம்

புளியம்பழம்

இற்றம்

(2) இறு (=வீழ்த்து, வடிகட்டு) + அம் (=இனிமை, நீர், பழம்) = இற்றம் >>> இத்தம் >>> இந்தம் >>> சிந்தம் = இனியநீரை வீழ்த்தி வடிகட்டப்படும் பழம்

இந்தளம்

தூபமூட்டி

உத்தலம்

ஊதல் (=புகைபோடுதல்) + அம் = உத்தலம் >>> இந்தளம் = புகை போடுவது

இந்தனம்

விறகு

இற்றணம்

இறு (=உலர், முறி, உடை) + அணை (=தண்டு) + அம் = இற்றணம் >>> இத்தனம் >>> இந்தனம் = முறிந்த / உடைந்த உலர் தண்டு

இந்தியம்

ஐம்பொறி

ஐந்தியம்

ஐந்து + இயம் (=கருவி, பொறி) = ஐந்தியம் >>> இந்தியம் = ஐம்பொறி

இந்தியம்

விந்துநீர்

ஈத்தூயம்

ஈ (=உண்டாக்கு, பிறப்பி) + தூய்மை (=வெண்மை) + அம் (=நீர்) = ஈத்தூயம் >>> இந்தியம் = பிறப்பிக்கும் வெண்ணிற நீர்.

இந்திரம்

மேன்மை

ஐந்திறம்

ஐ (=உயர்வு) + திறம் (=தன்மை) = ஐந்திறம் >>> இந்திரம் = உயர்ந்த தன்மை

இந்திரம், இந்திரி

கிழக்கு

இயத்திறம்

இயம் (=ஒளி) + திறம் (=தோற்றம், திசை) = இயத்திறம் >>> ஈந்திரம் >>> இந்திரம் = ஒளி தோன்றும் திசை = கிழக்கு

இந்திரம்

வானம்

ஐந்திறம்

ஐ (=உயர்வு) + திறம் (=திசை) = ஐந்திறம் >>> இந்திரம் = உயர் திசை

இந்திரம்

ஐம்பொறி

ஐந்திறம்

ஐ + திறம் (=அறிவு, வழி) = ஐந்திறம் >>> இந்திரம் = அறியும் ஐந்து வழிகள்

இந்திரன்

சூரியன்

இந்திரன்

இந்திரம் (=கிழக்கு) + அன் = இந்திரன் = கிழக்கில் உதிப்பவன்

இந்திரன்

தலைவன்

இந்திரன்

இந்திரம் (=மேன்மை) + அன் = இந்திரன் = மேலானவன்

இந்திரியம்

ஐம்பொறி

ஐந்திறியம்

ஐ + திறம் (=அறிவு) + இயம் (=வழி) = ஐந்திறியம் >>> இந்திரியம் = அறியும் வழிகள் ஐந்து

இந்திரியம்

விந்துநீர்

இத்திரியம்

ஈ (=உண்டாக்கு, பிறப்பி) + திரி (=பெண்) + அம் (=நீர்) = இத்திரியம் >>> இந்திரியம் = பெண்ணைப் பிறப்பிக்கச் செய்யும் நீர்.

இந்து

சந்திரன்

ஐந்தூ

ஐ (=அழகு, ஒளி) + தூ (=வெண்மை, தூவு) = ஐந்தூ >>> இந்து = அழகிய வெள்ளொளி தூவுபவன்

இந்து

உப்பு

இன்றூ

இனிமை + தூ (=வெண்மை, உணவு, தூவு) = இன்றூ >>> இற்று >>> இத்து >>> இந்து = உணவை இனிமையாக்கத் தூவப்படும் வெண்பொருள்.

இந்து

கருநிறத்தது, கரி, கரடி

இற்றூ

இல் (=இன்மை) + தூ (=வெண்மை) = இற்றூ >>> இத்து >>> இந்து = வெண்மை இல்லாதது = கருநிறத்தது = கரி, கரடி

இப்பந்தி

கலப்பினம், அலி

இவ்வத்தி

ஈவு (=கொடை, பிறப்பு) + அத்து (=சேர், கல) + இ = இவ்வத்தி >>> இப்பந்தி = கலப்பாகப் பிறந்தது = கலப்பினம், அலி

இப்பந்தி

துன்பம்

உப்பற்றி

உப்பு (=இன்பம்) + அறு (=இல்லாகு) + இ = உப்பற்றி >>> இப்பத்தி >>> இப்பந்தி = இன்பம் இல்லாதது = துன்பம்

இப்பந்தி

முட்டாள்

உவ்வற்றி

உவி (=அழி) + அறி + இ = உவ்வற்றி >>> இப்பத்தி >>> இப்பந்தி = அறிவு அழிந்தவன் = முட்டாள்.

இப்பா

கொடை

ஈவு

ஈவு (=கொடை) + ஆ = இவ்வா >>> இப்பா

இபம்

கிளை

ஈவம்

ஈவு (=பிரிவு, படைப்பு) + அம் = ஈவம் >>> இபம் = பிரிவாகப் படைக்கப்பட்டது

இபம்

யானை

உப்பம்

உப்பு (=பெரு, உயர், வலுவடை) + அம் = உப்பம் >>> இபம் = உயரமும் பெருமையும் வலுவும் உடையது. ஒ.நோ:  உப்பு (=பெரு, உயர், வலுவடை) + அல் = உப்பல் >>> உம்பல் = யானை.

இமம்

பனி

உப்பம்

உப்பு (=பெரு, வலுவடை) + அம் (=நீர்) = உப்பம் >>> இமம் = பெருத்து வலுவடைந்த நீர்.

இமயம்

பனிபூமி

இமயம்

இமம் (=பனி) + அயம் (=இடம், பூமி) = இமயம் = பனிபூமி.

இமயம்

தங்கம்

இமயம்

இமை (=ஒளிர்) + அயம் (=உலோகம்) = இமயம் = ஒளிரும் உலோகம்

இமவந்தம்

பனிபூமி

இமவத்தம்

இமம் (=பனி) + அத்தம் (=இடம், பூமி) = இமவத்தம் >>> இமவந்தம் = பனிபூமி

இமவான்

இமயமலை

இமமான்

இமம் (=பனி) + மான் (=மலை) = இமமான் >>> இமவான் = பனிமலை

இமிசை, இம்சை

துன்பம்

இவிசை

ஈவு (=ஒழிகை) + இசை (=இனிமை, இன்பம்) = இவிசை >>> இமிசை >>> இம்சை = இன்பம் ஒழிந்தது = துன்பம்.

இயந்திரம், யந்திரம், எந்திரம்

சக்கரம், தேர், செக்கு, திரிகை

இயந்திரம்

இய (=செல்) + திரி (=சுற்று) + அம் = இயந்திரம் >>> யந்திரம் = சுற்றிச் செல்வது = சக்கரம், தேர், செக்கு, திரிகை

இயமன், யமன்

எமன்

இழாவன்

இழை (=கட்டு, கயிறு, நீக்கு) + ஆவி (=உயிர்) + அன் = இழாவன் >>> இயமன் >>> யமன், எமன் = கயிற்றைக் கட்டி உயிரை நீக்குபவன்.

இயமானன்

உயிர்

இயவாணன்

இய (=இயக்கு) + ஆணம் (=உடல்) + அன் = இயவாணன் >>> இயமானன் = உடலை இயக்குவது = உயிர்

இயாதன், இயாதம்

யானைப் பாகன்

இயாத்தன்

இய (=செலுத்து) + அத்தி (=யானை) + அன் = இயாத்தன் >>> இயாதன் >>> இயாதம் = யானையைச் செலுத்துபவன்

இரக்கை

கைக்காப்பு, கடகம்

இறைக்கை

இறை (=பாதுகாப்பு, அணி) + கை = இறைக்கை >>> இரக்கை = பாதுகாப்பிற்காக கையில் அணிவது. = கைக்காப்பு, கடகம்

இரக்கை

சாம்பல்

இறக்கை

இறு (=அழி, எரி, தங்கு) + அகம் (=உடல்) + ஐ = இறக்கை >>> இரக்கை = உடலை எரித்தபின் தங்குவது.

இரகசியம்

கூறப்படாத சொல்

இறைகசியம்

இறை (=சொல், இன்மை, காப்பு) + கசி (=வெளிப்படு) + அம் = இறைகசியம் >>> இரகசியம் = சொல்லை வெளிப்படுத்தாமல் காத்தல்.

இரச்சு

கயிறு

இரச்சு

ஈர் (=இழு, நீளு) + அசை (=கட்டு) + உ = இரச்சு = நீளமாக இழுத்துக் கட்டுவது = கயிறு.

இரச்சுவம்

குறில், குற்றெழுத்து

இறச்சுமம்

இறு (=முறி, குறை) + அச்சு (=எழுத்து) + மம் = இறச்சுமம் >>> இரச்சுவம் = குற்றெழுத்து

இரசகன்

வண்ணான்

இராசாக்கன்

இரி (=ஓட்டு, நீக்கு) + ஆசு (=கறை) + ஆக்கம் (=ஆடை) + அன் = இராசாக்கன் >>> இரசகன் = ஆடையின் கறைகளை நீக்குபவன் = வண்ணான்

இரசதம்

வெள்ளி, பாதரசம்

இரயறம்

இருமை (=கருமை) + அயம் (=உலோகம்) + அறு (=இல்லாகு) + அம் = இரயறம் >>> இரசதம் = கருமை இல்லாத உலோகம் = வெள்ளி, பாதரசம்

இரசதம்

மிக்க இன்பம்

இரசதம்

இரசம் (=இன்பம்) + அதி (=மிகுதி) + அம் = இரசதம் = மிக்க இன்பம்

இரசதம்

இடைவார்

இறசத்தம்

இறை (=நடு, இடை) + அசை (=கட்டு) + அத்து (=பொருத்து) + அம் = இறசத்தம் >>> இரசதம் = இடையில் பொருத்திக் கட்டுவது.

இரசம்

சாறு

இறசம்

இறு (=வடிகட்டு) + அசை (=உண்ணு) + அம் (=நீர்) = இறசம் >>> இரசம் = வடிகட்டி உண்ணப்படும் நீர்

இரசம்

இன்சுவை, இன்பம்

இரசம்

ஈர் (=இனிமை) + அசை (=உண்ணு) + அம் = இரசம் = உணவின் இனிமை

இரசம்

பாதரசம்

இரயம்

இரி (=ஓடு) + அயம் (=உலோகம்) = இரயம் >>> இரசம் = ஓடவல்ல உலோகம்

இரசம்

வாழைப்பழம், மாம்பழம்

இரசம்

ஈர் (=இனிமை, நீளு) + அசை (=வளை) + அம் (=ஒளி, பழம்) = இரசம் = நீண்டு வளைந்த இனிய ஒளிமிக்க பழம் = வாழைப்பழம், மாம்பழம்.

இரசனி

இரவு

இறாயணி

இறை (=பொழுது) + ஆய் (=அழகு, ஒளி) + அணை (=கெடு, அழி) + இ = இறாயணி >>> இரசனி = ஒளி கெட்ட / அழிந்த பொழுது.

இரசனி

மஞ்சள்

இராயணி

ஈர் (=எழுது, பூசு) + ஆய் (=அழகு, ஒளி) + அணி (=முகம்) = இராயணி >>> இரசனி = ஒளிரும் அழகுக்காக முகத்தில் பூசப்படுவது

இரசாயனம்

வாழ்நாளைப் பெருக்கும் சாறு

இரசாயணம்

இரசம் (சாறு) + ஆயு (=வாழ்நாள்) + அணி (=பெருமை) + அம் = இரசாயணம் >>> இரசாயனம் = வாழ்நாளைப் பெருக்கும் சாறு.

இரசாயனம்

நஞ்சு

இறசயணம்

இறு (=அழி, கொல்) + அசை (=உண்ணு) + அணு (=உயிர்) + அம் = இறசயணம் >>> இரசாயனம் = உயிரைக் கொல்லும் உணவு.

இரசாலம்

கரும்பு

இரசளம்

இரசம் (=இனிமை, சாறு) + அள் (=தண்டு) + அம் = இரசளம் >>> இரசாலம் = இனிய சாறுள்ள தண்டு = கரும்பு.

இரசாலம்

மாம்பழம், பலாப்பழம்

இராயளம்

இருமை (=பெருமை) + ஆய் (=அழகு, ஒளி) + அளி (=பழம், செறி) + அம் = இராயளம் >>> இரசாலம் = செறிந்து பெருத்த ஒளிமிக்க பழம்.

இரசாலம்

கோதுமை

இரசளம்

இரை (=உணவு) + அசை (=அசைபோடு) + அள் (=தானியம்) + அம் = இரசளம் >>> இரசாலம் = அசைபோட்டு உண்ணும் தானியம்.

இரசி

சுவை, இனி

இரசி

இரசம் (=சுவை, இனிமை) >>> இரசி = சுவை, இனி

இரசிகன்

சுவை அறிந்தவன்

இரசிங்கன்

இரசம் (=சுவை) + இங்கம் (=அறிவு) + அன் = இரசிங்கன் >>> இரசிகன் = சுவை அறிந்தவன்

இரசிதம்

வெள்ளி

இரயிறம்

இருமை (=கருமை) + அயம் (=உலோகம்) + இறு (=அழி, இல்லாகு) + அம் = இரயிறம் >>> இரசிதம் = கருமை இல்லாத உலோகம் = வெள்ளி.

இரஞ்சகம்

மகிழ்ச்சி தருவது

இரச்சாக்கம்

இரசம் (=இனிமை, மகிழ்ச்சி) + ஆக்கு (=உண்டாக்கு) + அம் = இரச்சாக்கம் >>> இரஞ்சகம் = மகிழ்ச்சி / இனிமை உண்டாக்குவது.

இரஞ்சனம்

மகிழ்ச்சி தருவது

இரச்சணம்

இரசம் (=இனிமை, மகிழ்ச்சி) + அணை (=உண்டாக்கு) + அம் = இரச்சணம் >>> இரஞ்சனம் = மகிழ்ச்சி / இனிமை உண்டாக்குவது.

இரஞ்சிதம்

மகிழ்ச்சி தருவது

இரச்சிறம்

இரசம் (=இனிமை, மகிழ்ச்சி) + இறு (=கொடு) + அம் = இரச்சிறம் >>> இரஞ்சிதம் = மகிழ்ச்சி / இனிமை தருவது.

இரட்சகம்

உயிர்களைக் காத்தல்

இறாச்சகம்

இறை (=காப்பு) + ஆசை (=நேசம்) + அகம் (=உயிர்) = இறாச்சகம் >>> இரட்சகம் = உயிர்களை நேசித்துக் காப்பாற்றுதல்..

இரட்சகன்

உயிர்களைக் காப்பவன்

இறாச்சகன்

இறை (=காப்பு) + ஆசை (=நேசம்) + அகம் (=உயிர்) + அன் = இறாச்சகன் >>> இரட்சகன் = உயிர்களை நேசித்துக் காப்பவன்.

இரட்சி

அன்பு செய்

இறாச்சி

இறு (=கொடு) + ஆசை (=அன்பு) + இ = இறாச்சி >>> இரட்சி = அன்பைக் கொடு

இரட்சை

கைக்காப்பு, கடகம்

இறச்சை

இறை (=காப்பு, கை) + அசை (=கட்டு) = இறச்சை >>> இரட்சை = காப்புக்காக கையில் கட்டுவது.

இரட்சை

சாம்பல்

இறச்சை

இறு (=அழி, எரி, தங்கு) + அச்சு (=உடல்) + ஐ = இறச்சை >>> இரட்சை = உடலை எரித்தபின் தங்குவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.