புதன், 7 ஏப்ரல், 2021

71 - (அனுகமனம் -> ஆடம்பரம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

அனுகமனம்

உடன்கட்டை எரித்தல்

அணுகவணம்

அணுகு (=நெருங்கு, சேர்) + அவி (=எரி) + அணம் = அணுகவணம் >>> அனுகமனம் = சேர்த்து எரித்தல்.

அனுகரணம், அனுகாரம்

போலச் செய்தல்

அண்ணுகரணம்

அண்ணு (=ஒப்பு) + கரணம் (=செயல்) = அண்ணுகரணம் >>> அனுகரணம் = ஒப்பச் செய்தல்

அனுகுணம்

ஒத்த பண்பு

அண்ணுகுணம்

அண்ணு (=ஒப்பு) + குணம் (=தன்மை) = அண்ணுகுணம் >>> அனுகுணம் = ஒத்த பண்பு.

அனுகூலம்

உடனிருந்து உதவுதல்

அண்ணுகுலம்

(2) அண்ணு (=சேர்ந்திரு) + குலம் (=நன்மை) = அண்ணுகுலம் >>> அனுகூலம் = சேர்ந்திருந்து செய்யும் நன்மை.

அனுகூலி

உதவு

அனுகூலி

அனுகூலம் (=உதவி) >>> அனுகூலி = உதவு

அனுச்சை

அனுமதி

அனுஞ்ஞை

அனுஞ்ஞை (=கட்டளை, அனுமதி) >>> அனுச்சை

அனுசந்தானம்

தொடர்ந்து பூசித்தல்

அண்ணு சாற்றணம்

அண்ணு (=தொடர்) + சாற்று (=ஓசை, பூசி) + அணம் = அண்ணுசாற்றணம் >>> அனுசத்தனம் >>> அனுசந்தானம் = தொடர்ந்து பூசித்து ஓதுதல்.

அனுசந்தி

தொடர்ந்து ஓது

அனுசந்தி

அனுசந்தானம் (=தொடர்ந்து ஓதுகை) >>> அனுசந்தி = தொடர்ந்து ஓது

அனுசயம்

பச்சாதாபம்

அண்ணுழயம்

அண்ணு (=ஒப்பு) + உழை (=பக்கம், வருந்து) + அம் = அண்ணுழயம் >>> அனுசயம் = பக்கத்திருந்து ஒப்ப வருந்துதல்.

அனுசரணம், அனுசரணை, அனுசாரம்

பின்பற்றுதல், சார்ந்தொழுகல்

அண்ணுசாரணம்

அண்ணு (=தொடர்) + சார் (=செல்) + அணம் = அண்ணுசாரணம் >>> அனுசரணம் = தொடர்ந்து செல்லுதல்.

அனுசரி

பின்பற்று

அனுசரி

அனுசரணம் (=பின்பற்றுதல்) >>> அனுசரி = பின்பற்று

அனுசன்

தம்பி

அணுயன்

அணை (=சார், அடு) + உய் (=பிற) + அன் = அணுயன் >>> அனுசன் = அடுத்துப் பிறந்தவன்

அனுசாகை

உட்கிளை

அணுழகை

அணை (=தோன்று) + உழை (=பக்கம்) + அகை (=கிளை) = அணுழகை >>> அனுசாகை = பக்கத்தில் தோன்றும் கிளை.

அனுசிதம்

பொருத்தமற்றது

அண்ணுசிதம்

அண்ணு (=ஒப்பு, பொருந்து) + சிதை (=அழி, இல்லாகு) + அம் = அண்ணுசிதம் >>> அனுசிதம் = பொருத்தமற்றது

அனுசிதம்

பொய்

அணுயிதம்

ஆணை (=உண்மை) + உய் (=நீங்கு) + இதம் = அணுயிதம் >>> அனுசிதம் = உண்மை நீங்கியது

அனுசிதம்

வாந்தி

அன்னுயிறம்

அன்னம் (=உணவு) + உய் (=உண்ணு, செலுத்து, உமிழ்) + இறு (=முடி) + அம் = அன்னுயிறம் >>> அனுசிதம் = உண்டுமுடித்த உணவை உமிழ்தல்.

அனுசை

தங்கை

அணுயை

அணை (=சார், அடு) + உய் (=பிற) + ஐ = அணுயை >>> அனுசை = அடுத்துப் பிறந்தவள்

அனுட்டானம், அனுச்~டானம்

பின்பற்றப்படுவது, வழக்கம்

அண்ணிற்றணம்

அண்ணு (=தொடர்) + இறு (=செய்) + அணம் = அண்ணிற்றணம் >>> அணுட்டணம் >>> அனுட்டானம் >>> தொடர்ந்து செய்யப்படுவது.

அனுட்டி

பின்பற்று

 

அனுட்டானம் (=பின்பற்றுதல்) >>> அனுட்டி = பின்பற்று

அனுத்தமம்

மிகவும் உயர்வானது

அணுந்தவம்

அண் (=மேல்) + உந்து (=எழு) + அவம் (=இன்மை) = அணுந்தவம் >>> அனுத்தமம் = மேலே எழுச்சி இல்லாதது

அனுதாத்தம்

படுத்தலோசை

அண்ணூதற்றம்

அண்ணு (=தொடர்) + ஊது (=ஒலி) + அறை (=குறைவு) + அம் = அண்ணூதற்றம் >>> அனுதாத்தம் = தொடர்ந்து குறைந்து ஒலித்தல்.

அனுதாபம்

ஒன்றி வருந்துதல்

அண்ணுதவம்

அண்ணு (=ஒப்பு) + தவி (=வருந்து) + அம் = அண்ணுதவம் >>> அனுதாபம் = ஒப்ப வருந்துதல்.

அனுதபி

ஒப்ப வருந்து

அனுதபி

அனுதாபம் (=ஒத்த வருத்தம்) >>> அனுதபி = ஒப்ப வருந்து

அனுதினம்

தொடரும் நாள்

அண்ணுதினம்

அண்ணு (=தொடர்) + தினம் (=நாள்) = அண்ணுதினம் >>> அனுதினம் = தொடரும் நாள்

அனுபமை

ஒப்பற்றது

அனுவமை

அன்மை (=இன்மை) + உவமை (=ஒப்பு) = அனுவமை >>> அனுபமை = ஒப்பில்லாதது.

அனுபல்லவி

பல்லவியைத் தொடர்வது

அண்ணுபல்லவி

அண்ணு (=தொடர்) + பல்லவி = அண்ணுபல்லவி >>> அனுபல்லவி = பல்லவியைத் தொடர்வது.

அனுபவம்

நுகர்ச்சி அறிவு

அணுப்பமம்

(2) ஆணம் (=அறிவு) + உப்பு (=நுகர்ச்சி) + அமை + அம் = அணுப்பமம் >>> அனுபவம் = நுகர்ச்சியால் அமைந்த அறிவு.

அனுபவி

நுகர்ந்தறி

அனுபவி

அனுபவம் (=நுகர்ச்சி அறிவு) >>> அனுபவி = நுகர்ந்தறி

அனுபூதி

நுகர்ச்சி அறிவு

அணுப்புறி

ஆணம் (=அறிவு) + உப்பு (=நுகர்ச்சி) + உறு (=அடை) + இ = அணுப்புறி >>> அனுபூதி = நுகர்ச்சியால் அடைந்த அறிவு.

அனுபோகம்

நுகர்ச்சி அறிவு

அணுப்போக்கம்

ஆணம் (=அறிவு) + உப்பு (=நுகர்ச்சி) + ஓக்கு (=கொடு) + அம் = அணுப்போக்கம் >>> அனுபோகம் = நுகர்ச்சி தரும் அறிவு.

அனுமதி

சம்மதம்

அண்ணுமதி

(2) அண்ணு (=ஒப்பு) + மதி (=கருத்து) = அண்ணுமதி >>> அனுமதி = ஒப்புதல் கருத்து = சம்மதம்.

அனுமதி

பௌர்ணமி

அனுமதி

ஆனு (=நிறை) + மதி (=நிலா) = அனுமதி = நிறைந்த நிலவு

அனுமரணம்

உடன் இறப்பு

அண்ணுமரணம்

அண்ணு (=சேர்) + மரணம் (=இறப்பு) = அண்ணுமரணம் >>> அனுமரணம் = சேர்ந்து இறத்தல்.

அனுமானம்

நெருக்கமான கணிப்பு

அண்ணுமாணம்

அண்ணு (=நெருங்கு) + மாண் (=எண்ணு, கணி) + அம் = அண்ணுமாணம் >>> அனுமானம் = நெருக்கமாகக் கணித்தல்.

அனுமானம்

சந்தேகம்

எண்ணுமானம்

எண்ணு + மான் (=சந்தேகி) + அம் = எண்ணுமானம் >>> அனுமானம் = சந்தேக எண்ணம்.

அனுமானி

நெருக்கமாகக் கணி, சந்தேகி

அனுமானி

அனுமானம் (=நெருக்கக் கணிப்பு, சந்தேகம்) >>> அனுமானி = நெருக்கமாகக் கணி, சந்தேகி

அனுமேயம்

பொருத்தத்தால் அறியப்படுவது

எண்ணுவேயம்

எண்ணு (=அறி) + ஏய் (=பொருந்து) + அம் = எண்ணுவேயம் >>> அனுமேயம் = பொருத்தத்தால் அறியப்படுவது.

அனுராகம்

இரக்கம்

அணுறகம்

அணு (=உயிர்) + உறு + அகம் (=காதல், அன்பு) = அணுறகம் >>> அனுராகம் = உயிர்மேல் உறும் அன்பு.

அனுரூபம்

ஏற்கத் தக்கது

அண்ணுறுவம்

அண்ணு (=பொருந்து, தகு) + உறு (=அடை) + அம் = அண்ணுறுவம் >>> அனுரூபம் = அடையத் தக்கது..

அனுவதி, அனுவாதி

திரும்பச் சொல்லு

அணிமறி

அணி (=சொல்லு) + மறி (=திரும்பு) = அணிமறி >>> அனுவதி = திரும்பச் சொல்லு

அனுவர்த்தனம்

அனுசரிக்கும் குணம்

அண்ணுவறுத்தனம்

அண்ணு (=தொடர்) + அறு (=செல்) + தன்மை + அம் = அண்ணுவறுத்தனம் = அனுவர்த்தனம் = தொடர்ந்து செல்லும் தன்மை

அனுவர்த்தி

அனுசரி

அனுவர்த்தி

அனுவர்த்தனம் (=அனுசரிப்பு) >>> அனுவர்த்தி = அனுசரி

அனுவுரு

ஒத்த உருவம்

அண்ணுவுரு

அண்ணு (=ஒப்பு) + உரு = அண்ணுவுரு >>> அனுவுரு = ஒத்த உருவம்

அனேகம்

பன்மை, பெரும்பான்மை

எண்ணெக்கம்

எண்ணு + எக்கு (=குவி, மிகு) + அம் = எண்ணெக்கம் >>> அனேகம் = எண்ணிக்கை மிக்கத =பெரும்பான்மை, பன்மை

அசா^டி, அசாடி

பயனற்றவன்

அயறி

ஆயம் (=நன்மை, பயன்) + அறு (=இல்லாகு) + இ = அயறி >>> அசாடி = பயன் அற்றவன்

ஆக்கிரகம்

விடாப்பிடி, பிடிவாதம்

ஆக்குறகம்

ஆக்கம் (=உறுதி) + உறு (=கொள்) + அகம் (=எண்ணம்) = ஆக்குறகம் >>> ஆக்கிரகம் = எண்ணத்தில் உறுதி கொள்ளுதல்

ஆக்கிரகம்

கடுங்கோபம்

ஆக்குரகம்

ஆக்கம் (=மிகுதி) + உரு (=சினம்) + அகம் (=எண்ணம்) = ஆக்குரகம் >>> ஆக்கிரகம் = சினம் மிகுந்த எண்ணம்

ஆக்கிரமணம்

வலிமையால் கொள்ளுதல்

ஆக்குறுவணம்

ஆக்கம் (=உறுதி, வலிமை) + உறு (=கொள்) + அணம் = ஆக்குறுவணம் >>> ஆக்கிரமணம் = வலிமையால் கொள்ளுதல்.

ஆக்கிரமி

வலிமையால் கொள்

ஆக்கிரமி

ஆக்கிரமணம் (=வலிமையால் கொள்ளுதல்) >>> ஆக்கிரமி = வலிமையால் கொள்.

ஆக்கிராணம்

மோந்து பார்த்தல்

ஆய்க்கூரணம்

ஆய் (=மணம்) + கூர் (=அறி) + அணம் = ஆய்க்கூரணம் >>> ஆக்கிராணம் = மணம் அறிதல்

ஆக்கிராணம்

மூக்கு

ஆய்க்கூரணம்

ஆய் (=மணம்) + கூர் (=அறி) + அணம் = ஆய்க்கூரணம் >>> ஆக்கிராணம் = மணம் அறிவது

ஆக்கிராணி

மோந்துபார்

ஆக்கிராணி

ஆக்கிராணம் (=மோந்து பார்த்தல்) >>> ஆக்கிராணி = மோந்து பார்

ஆக்கிராந்தம்

வலிந்துகொண்ட பொருள்

ஆக்குறத்தம்

ஆக்கம் (=உறுதி, வலிமை) + உறு (=கொள்) + அத்தம் (=பொருள்) = ஆக்குறத்தம் >>> ஆக்கிராந்தம் = வலிந்து கொண்ட பொருள்.

ஆக்ஞை

கட்டளை

ஆக்கணை

அகை (=செலுத்து, ஏவு) + அணி (=சொல்) + ஐ = ஆக்கணை >>> ஆக்ஞை = செலுத்துகின்ற / ஏவுகின்ற சொல்.

ஆக்கினை

தண்டனை

ஆக்கினை

ஆக்கம் (=செயல்) + இனை (=வருத்து) = ஆக்கினை = வருத்தும் செயல்

ஆக்குரோசம்

கடுங்கோபம்

ஆக்குரோச்சம்

அகம் (=எண்ணம்) + உரு (=சினம்) + ஓச்சு (=உயர், மிகு) + அம் = ஆக்குரோச்சம் >>> ஆக்குரோசம் = சினம் மிகுந்த எண்ணம்

ஆக்குவயம்

பெயர்

ஆக்குவழம்

ஆக்கு (=அமை) + அழை + அம் (=சொல்) = ஆக்குவழம் >>> ஆக்குவயம் = அழைப்பதற்காக அமைக்கப்பட்ட சொல்.

ஆக்கேபம்

செயலுக்கான தடை

ஆக்கேமம்

(2) ஆக்கம் (=செயல்) + ஏமம் (=காவல், தடை) = ஆக்கேமம் >>> ஆக்கேபம் = செயலுக்கான தடை

ஆகடியம்

கிண்டல், நையாண்டி

ஆகடியம்

அகை (=மலர், சிரி) + அடி (=தாழ்வு) + இயம் (=சொல்) = ஆகடியம் = சிரித்துத் தாழ்த்திப் பேசுதல்.

ஆகடியம்

தீங்கு

ஆக்கடியம்

ஆக்கம் (=நன்மை) + அடு (=கொல், அழி) + இயம் = ஆக்கடியம் >>> ஆகடியம் = நன்மை அழிந்தது.

ஆகந்துகம்

நடுவில் வந்து சேர்ந்தது

ஆகத்துக்கம்

ஆகு (=வரு) + அத்து (=பொருந்து, சேர்) + உக்கம் (=இடை, நடு) = ஆகத்துக்கம் >>> ஆகந்துகம் = இடையில் வந்து சேர்ந்தது

ஆகமம்

நூல்

ஆக்கமம்

ஆக்கம் (=படைப்பு) + அம் (=சொல்) = ஆக்கமம் >>> ஆகமம் = சொற்களின் படைப்பு = நூல்.

ஆகமனம்

வருகை புரிதல்

ஆகமணம்

ஆகு (=வரு) + அமை (=செய், புரி) + அணம் = ஆகமணம் >>> ஆகமனம் = வருகை புரிதல்.

ஆகிர், ஆகயர்

முடிவு

ஆகீறு

ஆகு (=நிகழ்) + ஈறு (=முடிவு) = ஆகீறு >>> ஆகிர் = முடிவாக நிகழ்வது

ஆகர்ச~ணம், ஆகருடணம்

கவர்ந்திழுக்கும் ஆற்றல்

ஆக்கரிசணம்

ஆக்கு (=கட்டு) + அரி (=ஆற்றல்) + இசி (=இழு) + அணம் = ஆக்கரிசணம் >>> ஆகர்ச~ணம் >>> ஆகருடணம் = கட்டி இழுக்கும் ஆற்றல்.

ஆகர்சி

கவர்ந்திழு

ஆக்கரிசி

ஆக்கரிசணம் (=கவர்ந்திழுக்கை) >>> ஆக்கரிசி = வலுவாகக் கவர்ந்திழு

ஆகர்சகம்

கவர்ந்திழுக்கும் பொருள்

ஆக்கரிசகம்

ஆக்கு (=கட்டு) + அரி (=ஆற்றல்) + இசி (=இழு) + அகம் (=பொருள்) = ஆக்கரிசகம் >>> ஆகர்ச~கம் = கட்டி இழுக்கும் ஆற்றலுடைய பொருள்.

ஆகரம்

வீடு, வைப்பறை

அகாரம்

அகம் (=இடம், பொருள்) + ஆர் (=மிகு, தங்கு) + அம் = அகாரம் >>> ஆகரம் = தங்கும் இடம், பொருள் மிக்க இடம்.

ஆகரம்

மணிகளை உண்டாக்குமிடம்

ஆக்கரம்

ஆக்கு (=உண்டாக்கு) + அரி (=இரத்தினம், மணி) + அம் = ஆக்கரம் >>> ஆகரம் = மணிகளை உண்டாக்கும் இடம்.

ஆகவம்

போர்

ஆகவம்

அகை (=எய், வெட்டு, அடி) + அவி (=அழி) + அம் = ஆகவம் = எய்தும் வெட்டியும் அடித்தும் அழித்தல்.

ஆகச்`மிகம்

எதிர்பாராமல் நிகழ்வது

ஆகாய்புகம்

அகை (=நீங்கு, இல்லாகு) + ஆய் (=கணி, எதிர்பார்) + புகு (=நிகழ்) + அம் = ஆகாய்புகம் >>> ஆகச்`மிகம் = எதிர்பாராமல் நிகழ்வது

ஆகாயம், ஆகாசம்

பெருவெளி

ஆகயம்

(2) அகை (=உயர், மலர், விரி, வெளி) + அம் = ஆகயம் >>> ஆகாயம் >>> ஆகாசம் = உயரமான விரிவுடைய வெளி.

ஆகாத்தியம்

நடிப்பு, பாசாங்கு

ஆக்கற்றியம்

ஆக்கம் (=உண்மை) + அறு (=இல்லாகு) + இயம் (=தன்மை) = ஆக்கற்றியம் >>> ஆகத்தியம் = உண்மை இல்லாத தன்மை.

ஆகாரம்

உருவம், உடல்

ஆக்காரம்

ஆக்கம் (=படைப்பு) + ஆர் (=தோன்று) + அம் = ஆக்காரம் >>> ஆகாரம் = படைப்பின் தோற்றம், தோன்றிய படைப்பு.

ஆகாரம்

உணவு

ஆக்காரம்

ஆக்கு (=சமை) + ஆர் (=உண்ணு) + அம் = ஆக்காரம் >>> ஆகாரம் = சமைக்கப்பட்ட உணவு.

ஆகாரம்

நெய்

ஆகாரம்

அகை (=எரி, ஒளிர்) + ஆர் (=உண்ணு, பரவு) + அம் = ஆகாரம் = எரித்தால் பரவக்கூடிய ஒளிமிக்க உணவு.

ஆகிருதி

உறுதியான தோற்றம்

ஆகுறுதி

ஆகு (=தோன்று) + உறுதி = ஆகுறுதி >>> ஆகிருதி = உறுதியான தோற்றம்.

ஆகிருதி

வலிமையான உடல்

ஆக்குறுதி

ஆக்கம் (=உடல்) + உறுதி (=வலிமை) = ஆக்குறுதி >>> ஆகிருதி = வலிமையான உடல்.

ஆகு

எலி, பன்றி

ஆழ்கூ

ஆழ் (=ஆழமாகு, தோண்டு, மறை) + கூ (=நிலம்) = ஆழ்கூ >>> ஆகு = நிலத்தை ஆழமாகத் தோண்டி மறைந்துகொள்வது.

ஆகுஞ்சனம்

சிறிதாகச் சுருங்குதல்

அஃகுசன்னம்

அஃகு (=சுருங்கு) + சன்னம் (=சிறுமை) = அஃகுசன்னம் >>> ஆகுஞ்சனம் = சிறிதாகச் சுருங்குதல்.

ஆகுதி

ஓமத்தீ

ஆகுத்தி, ஆக்குதீ

(1) அகை (=எரி, தீ) + உத்து (=பெருக்கு, வளர்) + இ = ஆகுத்தி >>> ஆகுதி = எரிப்பதற்காக வளர்க்கப்படும் தீ. (2) ஆக்கு (=பெருக்கு, வளர்) + தீ = ஆக்குதீ >>> ஆகுதி = வளர்க்கப்படும் தீ.

ஆகுலம்

மனக்கலக்கம்

ஆகுலம்

அகம் (=மனம்) + உலை (=கலங்கு) + அம் = ஆகுலம் = மனக்கலக்கம்

ஆகுலி

மனங்கலங்கு

ஆகுலி

ஆகுலம் (=மனக்கலக்கம்) >>> ஆகுலி = மனம் கலங்கு

ஆகுலம்

பேரொலி

ஆகுளம்

ஆகுளி (=பறை) + அம் = ஆகுளம் >>> ஆகுலம் = பறையொலி.

ஆங்காரம்

பெருங்கோபம்

ஆக்காரம்

அகை (=எரி, சின) + ஆர் (=மிகு) + அம் = ஆக்காரம் >>> ஆங்காரம் = மிகுந்த கோபம்.

ஆங்காரம்

எதிர்ப்பு, செருக்கு

ஆக்காரம்

அகம் (=கருத்து) + ஆர் (=எதிர், ஒலி) + அம் = ஆக்காரம் >>> ஆங்காரம் = கருத்தை எதிர்த்துப் பேசுதல்.

ஆங்காரம்

மனம் நிறைந்த அன்பு

ஆக்காரம்

அகம் (=அன்பு, மனம்) + ஆர் (=நிறை) + அம் = ஆக்காரம் >>> ஆங்காரம் = மனம் நிறைந்த அன்பு

ஆங்காரி

சின, செருக்கு

ஆங்காரி

ஆங்காரம் (=கோபம், செருக்கு) >>> ஆங்காரி = கோபப்படு, செருக்கு

ஆச்சரியம்

மருட்சி, வியப்பு

ஆச்சரியம்

அசர் (=மயக்கு, மருட்டு) + இயம் (=தன்மை) = ஆச்சரியம் = மயக்கும் / மருட்டும் தன்மை.

ஆச்சல்

விரைவு

ஆயல்

ஆய் (=விரை) + அல் = ஆயல் >>> ஆச்சல் = விரைவு, வேகம்

ஆச்சாதனம்

ஆடை

ஆச்சதணம்

அச்சு (=உடல்) + அதி (=மிகுதி, நிறைவு) + அணி + அம் = ஆச்சதணம் >>> ஆச்சாதனம் = உடலில் நிறைவாக அணியப்படுவது.

ஆச்சாதனம்

மறைப்பு

ஆச்சத்தணம்

ஆசு (=கவசம்) + அத்து (=பொருந்து) + அணம் = ஆச்சத்தணம் >>> ஆச்சாதனம் = கவசமாகப் பொருந்தியது

ஆச்சியம்

நெய்

ஆச்சியம்

அசை (=உண்ணு, நெகிழ்) + இயம் (=ஒளி) = ஆச்சியம் = ஒளிர்கின்ற நெகிழக்கூடிய உணவு.

ஆச்சியம்

சிரிப்பூட்டும் சொல்

ஆயீயம்

ஆய் (=மகிழ், சிரி) + ஈ (=கொடு) + அம் (=சொல்) = ஆயீயம் >>> ஆசியம் >>> ஆச்சியம் = சிரிப்பைத் தரும் சொல்.

ஆசிரமம், ஆச்சிரமம்

குருவின் வீடு

ஆசிரமம்

(2) ஆசான் (=குரு) + இரு (=தங்கு) + அமை (=வீடு) + அம் = ஆசிரமம் = குரு தங்கும் வீடு.

ஆச்சிரயம்

புகலிடம், அடைக்கலம்

ஆச்சிரயம்

அச்சம் (=பயம்) + இரி (=போக்கு) + அயம் (=இடம்) = ஆச்சிரயம் = பயத்தைப் போக்கும் இடம் = அடைக்கலம், புகலிடம்

ஆசங்கை

சந்தேகம், மயக்கம்

ஆசக்கை

(1) அசை (=கலங்கு, மயங்கு) + அகம் (=எண்ணம்) + இ = ஆசக்கை >>> ஆசங்கை = கலக்க / மயக்க எண்ணம் = சந்தேகம். (2) ஆசு (=சந்தேகம்) + அகம் (=எண்ணம்) + ஐ = ஆசக்கை >>> ஆசங்கை = சந்தேக எண்ணம்.

ஆசங்கை

தடை

ஆசக்கை

அசை (=இயங்கு) + அகை (=தடு) = ஆசக்கை >>> ஆசங்கை = இயங்குவதற்கான தடை.

ஆசத்தி

பெருவிருப்பம்

ஆசைத்தீ

ஆசை + தீ = ஆசைத்தீ >>> ஆசத்தி = பற்றி எரியும் விருப்பம்.

ஆசந்தி

பாடை

ஆசந்தி

அசை (=தங்கு, படு) + அந்தம் (=மரணம்) + இ = ஆசந்தி = மரணித்தவர் படுப்பது. ஒ.நோ: படு (=சாவு, சாய்) + ஐ = பாடை = செத்தவர் சாய்வது

ஆசம்

சிரிப்பு

ஆயம்

ஆய் (=மகிழ், சிரி) + அம் = ஆயம் >>> ஆசம் = சிரிப்பு.

ஆசமனம்

ஓதியவாறு நீர் உண்ணுதல்

ஆசமணம்

அசை (=ஒலி, ஓது, உண்ணு) + அம் (=நீர்) + அணம் = ஆசமணம் >>> ஆசமனம் = ஓதியவாறு நீர் உண்ணுதல்.

ஆசயம்

தங்குமிடம்

ஆசயம்

அசை (=தங்கு) + அயம் (=இடம்) = ஆசயம் = தங்குமிடம்

ஆசயம்

உடலின் உட்பை

அச்சாயம்

அச்சு (=உடல்) + ஆய் (=நுட்பம், மென்மை) + அம் = அச்சாயம் >>> ஆசயம் = நுட்பமான மெல்லிய உடல்.

ஆசயம்

உட்கருத்து

ஆழாயம்

ஆழம் + ஆய் (=கருது) + அம் = ஆழாயம் >>> ஆசயம் = ஆழமான கருத்து = உட்கருத்து.

ஆசர்

வருகைப்பாடு

ஆசார்

ஆ (=தோன்று) + சார் (=இடம், அடை) = ஆசார் >>> ஆசர் >>> ஆச^ர் = இடத்தை அடைந்து தோன்றுதல்.

ஆசரணம், ஆசரணை

பின்பற்றுதல்

ஆசாறணம்

அசை (=இயங்கு) + ஆறு (=முறை) + அணம் = ஆசாறணம் >>> ஆசரணம் = முறைப்படி இயங்குதல்.

ஆசரணம்

வழிபாடு

ஆயரணம்

அயர் (=வழிபடு) + அணம் = ஆயரணம் >>> ஆசரணம் = வழிபாடு

ஆசரி

பின்பற்று

ஆசரி

ஆசரணம் (=பின்பற்றுகை) >>> ஆசரி = பின்பற்று

ஆசரி

வழிபடு

ஆசரி

ஆசரணம் (=வழிபாடு) >>> ஆசரி = வழிபடு

ஆசவம்

கள்

ஆசமம்

அசை (=கலங்கு, மயங்கு) + அம் (=நீர், உணவு) + அம் = ஆசமம் >>> ஆசவம் = மயக்கம் தரும் நீருணவு.

ஆசவுசம்

மரணத் தீட்டு

ஆசவியம்

ஆசு (=குற்றம், குறை) + அவி (=அழி, சாவு) + அம் = ஆசவியம் >>> ஆசவுசம் = சாவினால் உண்டாகும் குற்றம் / குறை.

ஆசன்னம்

நெருக்கமானது

ஆசண்ணம்

அசை (=இரு) + அணை (=நெருங்கு) + அம் = ஆசண்ணம் >>> ஆசன்னம் = நெருக்கமாக இருப்பது

ஆசனம்

இருக்கை

ஆசாணம்

அசை (=இரு, உட்கார்) + ஆணம் (=இடம்) = ஆசாணம் >>> ஆசனம் = உட்காரும் இடம் = இருக்கை.

ஆசனம்

மலவாய்

ஆசாணம்

ஆ (=விதம், வழி) + சாணம் (=மலம்) = ஆசாணம் >>> ஆசனம் = மலத்திற்கான வழி.

ஆசாரம்

முறைப்படி செய்தல், நன்னடத்தை

ஆசாறம், ஆசறம்

(1) அசை (=இயங்கு) + ஆறு (=முறை) + அம் = ஆசாறம் >>> ஆசாரம் =முறைப்படி இயங்குதல். (2) ஆசு (=குற்றம்) + அறு (=இல்லாகு, செல், நட) + அம் = ஆசறம் >>> ஆசாரம் = குற்றம் இல்லாத நடத்தை.

ஆசாரம்

ஆடை

ஆச்சாரம்

அச்சு (=உடல்) + ஆர் (=நிறை, அணி) + அம் = ஆச்சாரம் >>> ஆசாரம் = உடலில் நிறைவாக அணியப்படுவது

ஆசாரம்

தூய்மை

ஆயறம்

ஆய் (=மலம், கழிவு) + அறு (=இல்லாகு) + அம் = ஆயறம் >>> ஆசாரம் = கழிவு இல்லாமை.

ஆசாரம்

பெருமழை

ஆயாரம்

ஆயம் (=மேகம், வருவாய்) + ஆர் (=நிறை, பெறு) + அம் = ஆயாரம் >>> ஆசாரம் = மேகத்தில் இருந்து பெறும் நிறைவான வருவாய்

ஆசாரம்

சங்க மண்டபம், தலைமை மண்டபம்

ஆயாரம், ஆசாரம்

(1) ஆய் (=ஆராய்) + ஆர் (=பொருந்து, கூடு, இடம்) + அம் = ஆயாரம் >>> ஆசாரம் = கூடி ஆராயும் இடம். (2) ஆசு (=தலைமை) + ஆர் (=பொருந்து, கூடு, ஒலி, பேசு, இடம்) = ஆசாரம் = கூடிப் பேசும் தலைமை இடம்.

ஆசாரம்

கோவில்

ஆசறம்

ஆசு (=ஆணவமலம், வீடு) + அறு (=போக்கு) + அம் = ஆசறம் >>> ஆசாரம் = ஆணவ மலத்தைப் போக்கும் வீடு

ஆசாரியன்

அறவழி நடப்பவன்

ஆசாரியன்

ஆசாரம் (=அறநெறி) + இய (=செல்) + அன் = ஆசாரியன் = அறநெறியில் செல்பவன்.

ஆசாரியன்

குரு

ஆசரியன்

ஆசு (=குற்றம், பிழை) + அரி (=நீக்கு, போக்கு) + அன் = ஆசரியன் >>> ஆசாரியன் = குற்றங்களைப் / பிழைகளைப் போக்குபவன்.

ஆசான்

தலைவன்

ஆசான்

ஆசு (=தலைமை) + ஆன் = ஆசான் = தலைவன்

ஆசான்

குரு

ஆசான்

ஆசு (=நுட்பம், அறிவு, கல்வி) + ஆன் = ஆசான் = நுட்ப அறிவுடையவன்

ஆசி

வாழ்த்து, ஆதரவுச்சொல்

ஆசீ

ஆசு (=பற்றுக்கோடு, ஆதரவு, சொல்) + ஈ (=கொடு) = ஆசீ >>> ஆசி = ஆதரவைத் தரும் சொல்.

ஆசி

விரும்பு

ஆயி

ஆய் (=தேர்ந்தெடு, விரும்பு) + இ = ஆயி >>> ஆசி.

ஆசிடை

வாழ்த்து

ஆசிடை

ஆசு (=பற்றுக்கோடு, ஆதரவு, சொல்) + இடு (=கொடு) + ஐ = ஆசிடை = ஆதரவைத் தரும் சொல்.

ஆசியம்

வாய், முகம்

ஆசியம்

அசை (=உண்ணு) + இயம் (=வழி) = ஆசியம் = உண்ணுகின்ற வழி = வாய் >>> வாய் அமைந்திருக்கும் முகம்.

ஆசியம்

நகைச்சுவை, சிரிப்பு

ஆயீயம்

ஆய் (=மகிழ், சிரி) + ஈ (=தா) + அம் (=சொல்) = ஆயீயம் >>> ஆசியம் = சிரிப்பைத் தரும் சொல்.

ஆசிரயணம், ஆசிரயம்

சார்ந்து இருததல்

ஆசிறயணம்

ஆசு (=பற்றுக்கோடு, சார்பு) + இறை (=தங்கல்) + அணம் = ஆசிறயணம் >>> ஆசிரயணம் = சார்ந்து இருத்தல்

ஆசிரயி

சார்ந்திரு

ஆசிரயி

ஆசிரயணம் (=சார்ந்து இருத்தல்) >>> ஆசிரயி = சார்ந்திரு

ஆசிரிதம்

சார்ந்து இருத்தல்

ஆசிரிதம்

ஆசு (=பற்றுக்கோடு, சார்பு) + இரு + இதம் = ஆசிரிதம் = சார்ந்து இருத்தல்

ஆசிரியன்

அறியாமையைப் போக்குபவன்

ஆசிரியன்

ஆசு (=ஐயம், அறியாமை) + இரி (=ஓட்டு, போக்கு) + அன் = ஆசிரியன் = ஐயம் / அறியாமையைப் போக்குபவன்.

ஆசீர்வாதம்

வாழ்த்துச் சொல்

ஆசீர்வாதம்

ஆ (=உண்டாகு) + சீர் (=சிறப்பு, நன்மை) + வாதம் (=சொல்) = ஆசீர்வாதம் = சிறப்பு / நன்மை உண்டாகுமாறு சொல்லப்படுவது.

ஆசீல்

கணிக்கப்பட்ட மதிப்பு

ஆயுள்

ஆய் (=கணி) + உள் (=மதி) = ஆயுள் >>> ஆயில் >>> ஆசீல் = கணிக்கப்பட்ட மதிப்பு

ஆசு

விரைவு

ஆயு

ஆய் (=விரை) + உ = ஆயு >>> ஆசு = விரைவு

ஆசு

உடல்

அச்சு

அச்சு (=உடல்) >>> ஆசு

ஆசுகம், ஆசுகன்

காற்று

ஆசுகம்

அசை (=பொழுது) + உகு (=நிலைகுலை, பற, மெலி) + அம் = ஆசுகம் = பொழுதும் நிலைகுலைந்து பறக்கும் மென்பொருள்..

ஆசுகம்

அம்பு

ஆசுகம்

ஆசு (=விரைவு, உடல்) + உகை (=செல், பதி) + அம் = ஆசுகம் = விரைந்து சென்று உடலில் பதிவது.

ஆசுகி

பறவை

ஆசுகி

ஆசு (=விரைவு) + உகு (=பற) + இ = ஆசுகி = விரைந்து பறப்பது

ஆசுரம்

அசுரத்தன்மை

ஆச்சுரம்

அச்சு (=பயம், உடல், தோற்றம்) + உரம் (=வலிமை) = ஆச்சுரம் >>> ஆசுரம் = பயமுறுத்தும் தோற்றமும் வலிய உடலும் உடைமை.

ஆசுரம்

இஞ்சி

ஆழுறம்

ஆழ் (=தோண்டி எடு) + உறை (=காரம்) + அம் (=உணவு) = ஆழுறம் >>> ஆசுரம் = தோண்டி எடுக்கப்படும் காரமான உணவு.

ஆசுவாசம்

ஓய்வெடுக்கை, இளைப்பாறுகை

ஆசுவசம்

ஆசு (=விரைவு, அவசரம்) + அசை (=நீங்கு, இல்லாகு) + அம் = ஆசுவசம் >>> ஆசுவாசம் = அவசரம் இல்லாமை = ஓய்வு, இளைப்பாறுகை

ஆசூசம், ஆசௌசம்

தீட்டு

ஆசவுசம்

ஆசவுசம் (=தீட்டு) >>> ஆசௌசம் >>> ஆசூசம்

ஆசூரம்

வெள்ளைப் பூண்டு

ஆயுறம்

ஆய் (=அழகு, வெண்மை) + உறை (=காரம்) + அம் (=உணவு) = ஆயுறம் >>> ஆசூரம் = காரமான வெண்ணிற உணவுப் பொருள்

ஆசேகம்

நனைத்தல்

ஆழெக்கம்

ஆழ் (=அமிழ்த்து) + எக்கு (=உயர்த்து, தூக்கு) + அம் (=நீர்) = ஆழெக்கம் >>> ஆசேகம் = நீரில் அமிழ்த்தி தூக்குதல்

ஆசை

விருப்பம்

ஆயை

ஆய் (=தேர்ந்தெடு, விரும்பு) + ஐ = ஆயை >>> ஆசை

ஆசை

தங்கம்

ஆயம்

ஆயம் (=தங்கம்) + ஐ = ஆயை >>> ஆசை

ஆசை

திசை

ஆசெய்

ஆ (=விதம், வழி) + செய் (=அமை) = ஆசெய் >>> ஆசை = வழியை அமைப்பது = திசை.

ஆஞ்ஞை

கட்டளை

ஆச்சை, எய்யை

(1) ஆச்சு (=விரையச்செய், செலுத்து) + ஐ = ஆச்சை >>> ஆஞ்ஞை = செலுத்துவது = கட்டளை.. (2) எய் (=செலுத்து) + ஐ = எய்யை >>> ஆஞ்ஞை = செலுத்துவது = கட்டளை

ஆஞா, ஆஞான்

தந்தை

அய்யா, அய்யன்

அய்யா / அய்யன் (=தந்தை) >>> ஆஞா / ஆஞான்

ஆட்சேபம்

தடை, முரண்பாடு

ஆட்டேபம்

அட்டி (=தடு) + எவ்வம் (=வெறுப்பு, பகை, முரண்) = ஆட்டெவ்வம் >>> ஆட்டேபம் >>> ஆட்சேபம் = முரண்பட்டுத் தடுத்தல்.

ஆட்சேபி

தடு, முரண்படு

ஆட்டேபி

ஆட்டேபம் (=தடை, முரண்பாடு) >>> ஆட்டேபி >>> ஆட்சேபி

ஆட்சை

கிழமை

ஆட்சை

ஆட்சி (=நாள், உரிமை) + ஐ = ஆட்சை = நாளுக்கு உரியது

ஆடகம்

பசும்பொன்

ஆடக்கம்

அடை (=இலை, பசுமை) + ஆக்கம் (=பொன்) = ஆடக்கம் >>> ஆடகம் = பசுமைநிறத் தங்கம்

ஆடகம்

உலோகக் கட்டி

ஆடாக்கம்

அடு (=உருக்கு) + ஆக்கு (=செய்) + அம் = ஆடாக்கம் >>> ஆடகம் = உருக்கிச் செய்யப்பட்டது.

ஆடம்பரம்

பெருமைபடச் செய்தல்

ஆட்டம்பரம்

ஆட்டம் (=செயல்) + பருமை (=பெருமை) + அம் = ஆட்டம்பரம் >>> ஆடம்பரம் = பெருமைபடச் செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.