சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
ஆணத்தி |
கட்டளை |
ஆணற்றி |
ஆண்மை (=ஆளுமை) + அறை (=சொல்) + இ = ஆணற்றி >>> ஆணத்தி = ஆளுகின்ற சொல். |
ஆணம் |
சிறுமை |
ஆனம் |
ஆன் (=குறை, சிறு) + அம் = ஆனம் >>> ஆணம் = சிறுமை |
ஆணவம், ஆணுவம் |
இறுமாப்பு |
ஆணவம், ஆணமம் |
(1) ஆண்மை (=வலிமை, திமிர்) + அம் (=பேச்சு) + அம் = ஆணமம் >>> ஆணவம் = திமிர்ப் பேச்சு. (2) அணை (=அடங்கு, கீழ்ப்படி) + அவி (=அழி, இல்லாகு) + அம் = ஆணவம் = அடக்கம் இன்மை / கீழ்ப்படியாமை. |
ஆணை |
கட்டளை, அதிகாரம் |
ஆணை |
ஆண்மை (=ஆளுமை) + ஐ = ஆணை = ஆளுமை செய்வது.= கட்டளை, அதிகாரம். |
ஆணை |
உண்மை |
ஆணை |
ஆண்மை (=உண்மை) + ஐ = ஆணை |
ஆணை |
உறுதிமொழி |
ஆணை |
ஆண்மை (=வலிமை, உறுதி) + ஐ = ஆணை = உறுதி உடையது. |
ஆணை |
தடை |
அணை |
அணை (=தடை) >>> ஆணை |
ஆணை |
முத்திரை |
ஆணை |
அணை (=தோற்றுவி, பொருத்து) >>> ஆணை = பொருத்தப்படும் தோற்றம். |
ஆணை |
வெற்றி |
ஆணை |
ஆண்மை (=வெற்றி) + ஐ = ஆணை |
ஆத்தம் |
நெருக்கம், நட்பு |
ஆத்தம் |
அத்து (=கூடு, நெருங்கு) + அம் = ஆத்தம் = நெருக்கம், நட்பு |
ஆத்தன், ஆப்தன் |
நண்பன் |
ஆத்தன் |
ஆத்தம் (=நெருக்கம், நட்பு) + அன் = ஆத்தன் >>> ஆப்தன் = நண்பன் |
ஆத்தான் |
தலைவன் |
ஆத்தாந் |
ஆதி (=தலைமை) + ஆன் = ஆத்தான் = தலைவன், பெரியோன் |
ஆத்தானம், ஆச்`தானம் |
தலைமை இடம் |
ஆத்தாணம் |
ஆதி (=தலைமை) + ஆணம் (=இடம்) = ஆத்தாணம் >>> ஆத்தானம் >>> ஆச்`தானம் = தலைமை இடம் |
ஆத்தானம், ஆச்`தானம் |
தலைவாசல், கோபுரவாசல் |
ஆற்றாணம் |
ஆறு (=வழி, வாசல்) + ஆணி (=மேன்மை, தலைமை) + அம் = ஆற்றாணம் >>> ஆத்தானம் >>> ஆச்`தானம் = தலைவாசல், கோபுரவாசல் |
ஆத்திகம், ஆச்`திகம் |
கடவுள் இருப்புக் கொள்கை |
ஆத்திங்கம் |
ஆதி (=கடவுள்) + இங்கம் (=இருப்பு, அறிவு, கொள்கை) = ஆத்திங்கம் >>> ஆத்திகம் >>> ஆச்`திகம் = கடவுள் இருப்புக் கொள்கை |
ஆத்திரம் |
அவசரம், சிடுசிடுப்பு |
ஆற்றிறம் |
அல் (=இன்மை) + திறம் (=நிலைபேறு, அமைதி, தன்மை, பேச்சு) = ஆற்றிறம் >>> ஆத்திரம் = (1) அமைதியற்ற தன்மை = அவசரம் 92) அமைதியற்ற பேச்சு = சிடுசிடுப்பு, எரிந்து விழுதல். |
ஆத்திரகம், ஆர்த்திரகம் |
இஞ்சி |
ஆன்றீரகம் |
அன்று (=சின, எரி) + ஈரம் (=பசுமை) + அகை (=கிளை) + அம் (=உணவு) = ஆன்றீரகம் >>> ஆத்திரகம் = எரிச்சல் தரும் பசுமையான கிளைத்த உணவு |
ஆத்திரை, யாத்திரை |
பயணம் |
ஆற்றிரை, ஆத்திரை |
(1) ஆறு (=வழி) + இரி (=செல், ஓட்டு) + ஐ = ஆற்றிரை >>> ஆத்திரை >>> யாத்திரை = வழியில் செல்லுதல் / ஓட்டுதல். (2) ஆ (=விதம், வழி) + திரி (=அலை, இயங்கு) + ஐ = ஆத்திரை >>> யாத்திரை = வழியில் இயங்குதல். |
ஆத்துமம், ஆத்துமா, ஆத்மா |
உயிர் |
ஆத்துவ்வம் |
ஆ (=தோன்று) + துவ்வு (=அனுபவி, நீங்கு) + அம் = ஆத்துவ்வம் >>> ஆத்துமம் = தோன்றி அனுபவித்து நீங்குவது = உயிர். |
ஆத்துமீயம் |
தனக்குரியது |
ஆத்துமியம் |
ஆத்துமம் (=உயிர்) + இயை (=பொருந்து) + அம் = ஆத்துமியம் >>> ஆத்துமீயம் = உயிருக்குப் பொருந்தியது = தனக்குரியது |
ஆதங்கம் |
நோய், துன்பம் |
ஆதக்கம் |
ஆதம் (=உயிர்) + அகை (=வருத்து) + அம் = ஆதக்கம் >>> ஆதங்கம் = உயிரை வருத்துவது = நோய், துன்பம் |
ஆதங்கம் |
அச்சம் |
ஆறாக்கம் |
அறு (=அழி) + ஆக்கம் (=காப்பு) = ஆறாக்கம் >>> ஆதங்கம் = காப்பினை அழிப்பது. |
ஆதங்கம் |
மனக்குறை, கவலை |
ஆறக்கம் |
அறு (=அழி, குறை) + அகம் (=மனம்) + அம் = ஆறக்கம் >>> ஆதங்கம் = மனதை அழிப்பது = கவலை, மனக்குறை. |
ஆததாயி |
உயிரைக் கொல்பவர் |
ஆதறயி |
ஆதம் (=உயிர்) + அறை (=கொலை) + இ = ஆதறயி >>> ஆததாயி = உயிர்க்கொலை செய்பவர் |
ஆதபத்திரம் |
குடை |
ஆதபத்திரம் |
ஆதம் (=வெயில்) + பத்திரம் (=பாதுகாப்பு) = ஆதபத்திரம் = வெயில் இருந்து பாதுகாப்பது = குடை. |
ஆதவம், ஆதபம் |
ஒளி, வெயில், வெப்பம் |
ஆதவம் |
அற்றம் (=இருள்) + அவி (=அழி) + அம் = ஆற்றவம் >>> ஆத்தவம் >>> ஆதவம் >>> ஆதபம் = இருளை அழிப்பது = ஒளி, வெயில், வெப்பம் |
ஆதவன், ஆதபன் |
சூரியன் |
ஆதவன் |
ஆதவம் (=வெப்பம்) + அன் = ஆதவன் >>> ஆதபன் = வெப்பமுடையவன் |
ஆதம் |
அன்பு |
ஆத்தம் |
அத்து (=சேர், பற்று) + அம் = ஆத்தம் >>> ஆதம் = பற்று, அன்பு |
ஆதம், ஆத்தம் |
உயிர் |
ஆற்றம் |
ஆற்று (=உய், வாழ்) + அம் = ஆற்றம் >>> ஆத்தம் >>> ஆதம் = வாழ்வது |
ஆதம், ஆத்தம் |
உதவி |
ஆற்றம் |
ஆற்று (=உதவு) + அம் = ஆற்றம் >>> ஆத்தம் >>> ஆதம் = உதவி |
ஆதரம் |
அன்பு, ஆசை |
ஆதாரம் |
ஆதம் (=உயிர்) + ஆர் (=கட்டு, பிணி) + அம் = ஆதாரம் >>> ஆதரம் = உயிர்களைப் பிணிப்பது = அன்பு |
ஆதரம் |
விருந்தோம்பல் |
ஆற்றாரம் |
ஆற்று (=பசிதணி) + ஆர் (=ஒலி, அழை) + அம் = ஆற்றாரம் >>> ஆத்தாரம் >>> ஆதரம் = அழைத்துப் பசிதணித்தல். |
ஆதரம் |
ஊர் |
ஆத்தாரம் |
அத்து (=இரு, தங்கு) + ஆர் (=சேர், மிகு, இடம்) + அம் = ஆத்தாரம் >>> ஆதரம் = மிகுதியாகச் சேர்ந்து தங்கும் இடம் |
ஆதரவு |
உதவி, தாங்குதல் |
ஆற்றரவு |
ஆற்று (=உதவு, தாங்கு) + அரவு = ஆற்றரவு >>> ஆத்தரவு >>> ஆதரவு = உதவி, தாங்குதல் |
ஆதரி |
விரும்பு, உதவு, தாங்கு |
ஆதரி |
ஆதரவு (=அன்பு, உதவி, தாங்குதல்) >>> ஆதரி = விரும்பு, உதவு, தாங்கு |
ஆதரிசம், ஆதரிசனம் |
கண்ணாடி |
ஆத்தாரிசம் |
அத்தம் (=பொருள்) + ஆர் (=அழகு, தோற்றம், ஒளிர்) + இசை (=ஒப்பு, உண்டுபண்ணு) + அம் = ஆத்தாரிசம் >>> ஆதரிசம் = பொருளின் ஒப்பான தோற்றத்தை உண்டுபண்ணும் ஒளிரக்கூடிய பொருள் = கண்ணாடி |
ஆதன் |
முட்டாள் |
ஆற்றன் |
அற்றம் (=அறியாமை) + அன் = ஆற்றன் >>> ஆத்தன் >>> ஆதன் = அறியாமை உடையவன் = முட்டாள் |
ஆதன் |
குருடன் |
ஆற்றன் |
அற்றம் (=இருள், ஒளியின்மை) + அன் = ஆற்றன் >>> ஆத்தன் >>> ஆதன் = ஒளியில்லாதவன் = குருடன். |
ஆதன் |
உயிர் |
ஆதம் |
ஆதம் (=உயிர்) >>> ஆதன் |
ஆதனம் |
இருக்கை |
ஆத்தாணம் |
அத்து (=இரு, அமர்) + ஆணம் (=பொருள்) = ஆத்தாணம் >>> ஆதனம் = அமரும் பொருள் = இருக்கை |
ஆதனம் |
சொத்து |
ஆற்றாணம் |
ஆற்று (=தேடு, கூட்டு, திரட்டு) + ஆணம் (=பொருள்) = ஆற்றாணம் >>> ஆத்தாணம் >>> ஆதனம் = தேடித் திரட்டிய பொருள் = சொத்து. |
ஆதாயம் |
இலாபம் |
ஆதாயம் |
அதி (=மிகுதி) + ஆயம் (=வருமானம்) = ஆதாயம் = மிகுதியான வருமானம் |
ஆதாரம் |
பற்றுக்கோடு, அடிப்படை |
ஆற்றாரம் |
ஆற்று (=பொறு, தாங்கு) + ஆர் (=பொருந்து) + அம் = ஆற்றாரம் >>> ஆத்தாரம் >>> ஆதாரம் = பொருந்தித் தாங்குவது. |
ஆதாரம் |
சான்று |
ஆற்றாரம் |
ஆற்று (=வலுசேர்) + ஆர் (=பொருந்து, ஒப்பு) + அம் = ஆற்றாரம் >>> ஆத்தாரம் >>> ஆதாரம் = வலுசேர்க்கும் ஒப்புடையது. |
ஆதாரம் |
உடல் |
ஆதாரம் |
ஆதம் (=உயிர்) + ஆர் (=தங்கு, இடம்) + அம் = ஆதாரம் = உயிர் தங்கும் இடம் |
ஆதாரம் |
மழை |
ஆதாரம் |
ஆ (=தோன்று) + தாரம் (=நீர்) = ஆதாரம் = தோன்றும் நீர் |
ஆதானம் |
பற்றுகை |
ஆத்தணம் |
அத்து (=பொருந்து, பற்று) + அணம் = ஆத்தணம் >>> ஆதானம் = பற்றுதல் |
ஆதி |
அடிப்படை, முதல் |
ஆற்றி |
ஆற்று (=சும, தாங்கு) + இ = ஆற்றி >>> ஆத்தி >>> ஆதி = தாங்குவது = அடிப்படை, முதல், தொடக்கம். |
ஆதி |
மேலானது, பரம்பொருள் |
ஏறி |
ஏறு (=உயரம், மேன்மை) + இ = ஏறி >>> ஆதி = மேலானது, பரம்பொருள் |
ஆதி |
சூரியன் |
ஆதீ |
ஆ (=உண்டாக்கு) + தீ (=எரி, ஒளி, வெப்பம்) = ஆதீ >>> ஆதி = தீயை ஒளியை வெப்பத்தை உண்டாக்குபவன் |
ஆதி |
நோய், துன்பம் |
ஆறி |
அறு (=வருத்து) + இ = ஆறி >>> ஆதி = வருத்துவது = நோய், துன்பம் |
ஆதிக்கம் |
தலைமை |
ஆதிக்கம் |
ஆதி (=முதல்) + இகம் (=இடம்) = ஆதிக்கம் = முதலிடம், தலைமை |
ஆதிக்கம் |
உரிமை |
ஆத்திங்கம் |
அத்து (=இடம், பொருந்து, பற்று) + இங்கம் (=பொருள்) = ஆத்திங்கம் >>> ஆதிக்கம் = இடத்தின் / பொருளின் மீதான பற்று. |
ஆதித்தன் |
சூரியன் |
ஆதித்தன் |
ஆ (=உண்டாக்கு) + தீ (=எரி, ஒளி, வெப்பம்) + தா (=வழங்கு) + அன் = ஆதித்தன் = தீயை ஒளியை வெப்பத்தை உண்டாக்கி வழங்குபவன். |
ஆதித்தியன் |
சூரியன் |
ஆதித்தியன் |
ஆதி (=மேலானது) + தீ + அன் = ஆதித்தியன் = மேலான தீ |
ஆதித்தியம் |
விருந்தோம்பல் |
ஆறிறீயம், ஆதிதீயம் |
(1) அறி (=பழகு) + இறு (=இல்லாகு, தங்கு) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = ஆறிறீயம் >>> ஆதித்தியம் = பழக்கம் இல்லாதவரைத் தங்கவைத்து உணவு கொடுத்தல் = விருந்தோம்பல். (2) அதிதி (=விருந்தினர்) + ஈ (=கொடு) + அம் (=உணவு) = ஆதிதீயம் >>> ஆதித்தியம் = விருந்தினர்க்கு உணவு கொடுத்தல். |
ஆதிபத்தியம் |
தலைமை |
ஆதிபத்தியம் |
ஆதி (=முதல்) + பதி (=இடம்) + இயம் = ஆதிபத்தியம் = முதலிடம், தலைமை |
ஆதிபன் |
கடவுள் |
ஆதிமன் |
ஆதி (=முதல்) + மன் (=தலைவன்) = ஆதிமன் >>> ஆதிபன் = முதல் தலைவன் |
ஆதிரம் |
பசுநெய் |
ஆதீரம் |
ஆ (=பசு) + தா (=உண்டாக்கு) + ஈர் (=நெய்ப்பு, இனிமை) + அம் (=உணவு) = ஆதீரம் >>> ஆதிரம் = பசுவிலிருந்து உண்டாக்கிய நெய்ய்புடைய இனிய உணவு |
ஆதீனம் |
உரிமை |
ஆத்தினம் |
அத்து (=இடம், பொருந்து, பற்று) + இனம் (=பொருள்) = ஆத்தினம் >>> ஆதீனம் = இடத்தின் / பொருளின் மீதான பற்று |
ஆதீனம் |
இறையடியார் கூட்டம் |
ஆதீனம் |
ஆதி (=இறை) + இனம் (=ஒப்பு, மனிதர், கூட்டம்) = ஆதீனம் = இறையை ஒப்புக்கொள்ளும் மனிதர் கூட்டம் |
ஆதுரம் |
பரபரப்பு |
ஆறுரம் |
ஆறு (=அமை, பொறு) + உரி (=நீங்கு, இல்லாகு) + அம் = ஆறுரம் >>> ஆதுரம் = அமைதி / பொறுமை இல்லாமை. |
ஆதுலம் |
வறுமை |
ஆத்துலம் |
அத்தம் (=பொருள்) + உல (=குறை, இல்லாகு) + அம் = ஆத்துலம் >>> ஆதுலம் = பொருள் குறைபாடு / இல்லாமை.. |
ஆதுலம் |
ஊனம் |
ஆற்றுலம் |
அறை (=உறுப்பு) + உல (=குறை) + அம் = ஆற்றுலம் >>> ஆத்துலம் >>> ஆதுலம் = உறுப்புக் குறைபாடு. |
ஆதுலன் |
ஏழை |
ஆத்துலன் |
ஆதுலம் (=வறுமை) + அன் = ஆதுலன் = வறியவன் |
ஆதுலன் |
ஊனமுற்றவர் |
ஆதுலன் |
ஆதுலம் (=ஊனம்) + அன் = ஆதுலன் = ஊனமுற்றவர் |
ஆதேசம் |
கட்டளை |
ஆறெயம் |
அறை (=சொல்) + எய் (=செலுத்து, ஏவு) + அம் = ஆறெயம் >>> ஆதேசம் = ஏவுகின்ற சொல் = கட்டளை |
ஆதேயம், ஆதேசம் |
தாங்கப்படுவது, சுமக்கப்படுவது |
ஆற்றேயம் |
ஆற்று (=சும, தாங்கு) + ஏய் (=பொருந்து, படு) + அம் = ஆற்றேயம் >>> ஆத்தேயம் >>> ஆதேயம் >>> ஆதேசம் = தாங்கப்படுவது. |
ஆதோரணம் |
யானை |
ஆதோரணம் |
ஆது (=பாகன்மொழி) + ஓர் (=கேள்) + அணு (=உயிரி) + அம் = ஆதோரணம் = பாகன்மொழியைக் கேட்கும் உயிரி. |
ஆதோரணன் |
யானைப்பாகன் |
ஆதோரணன் |
ஆதோரணம் (=யானை) + அன் = ஆதோரணன் = யானைப் பாகன் |
ஆந்தராளிகன் |
இடைத்தரகன் |
ஆந்தராளிகன் |
அந்தரம் (=இடை, நடு) + ஆள் + இகம் (=பொருள்) + அன் = ஆந்தராளிகன் = நடுவில் இருந்து பொருளை ஆள்பவன். |
ஆந்திரம் |
குடல் |
ஆற்றீரம் |
அறை (=உறுப்பு, ஓட்டை) + ஈர் (=இழு, நீளு) + அம் = ஆற்றீரம் >>> ஆத்தீரம் >>> ஆந்திரம் = நீண்ட ஓட்டையுடைய உறுப்பு. |
ஆந்தோளி |
பல்லக்கு |
ஆத்தோளி |
ஆ (=நிகழ், செல், அமை, பொறு) + தோள் + இ = ஆத்தோளி >>> ஆந்தோளி = தோளில் பொறுத்துச் செல்லப்படுவது. |
ஆப்திகம் |
முதல் திவசம் |
ஆத்திகம் |
ஆதி (=முதல்) + இகு (=இற, அழை, சொரி, கொடு) + அம் (=உணவு, நீர்) = ஆத்திகம் >>> ஆப்திகம் = இறந்தவரை அழைத்து முதன்முதலாக நீர் சொரிந்து உணவு கொடுத்தல். |
ஆப்பியந்தரம் |
உள்ளானது |
ஆமையந்தரம் |
அமை + அந்தரம் (=உள்) = ஆமையந்தரம் >>> ஆமியந்தரம் >>> ஆப்பியந்தரம் = உள்ளே அமைந்தது. |
ஆபகை |
நதி |
ஆப்பகை |
அப்பு (=நீர்) + அகை (=செல்) = ஆப்பகை >>> ஆபகை = செல்லும் நீர் |
ஆபணம், ஆவணம் |
கடை, கடைத்தெரு |
ஆபண்ணம் |
ஆ (=அமை) + பண்ணு (=விற்பனைசெய்) + அம் = ஆபண்ணம் >>> ஆபணம் >>> ஆவணம் = விற்பனைசெய்ய அமைக்கப் பட்டது |
ஆபத்தனம் |
பாதுகாக்கப்பட்ட செல்வம் |
ஏமத்தனம் |
ஏமம் (=காவல், பத்திரம்) + தனம் (=செல்வம்) = ஏமத்தனம் >>> ஆபத்தனம் = பத்திரமாக வைக்கப்பட்ட செல்வம் |
ஆபத்து, ஆபதம் |
எதிர்பாராத கேடு |
ஆவற்று |
அவி (=கெடு, இல்லாகு) + அறி (=கணி) + உ = ஆவற்று >>> ஆபத்து = கணிக்கப்படாத கேடு. |
ஆபம் |
நீர் |
ஆம் |
ஆம் (=நீர்) + அம் = ஆமம் >>> ஆபம் |
ஆபரணம் |
அணிகலம் |
ஆப்பாராணம் |
ஆப்பு (=உடல்) + ஆர் (=அழகு, அணி) + ஆணம் (=பொருள்) = ஆப்பாராணம் >>> ஆபரணம் = அழகுக்காக உடலில் அணியப்படும் பொருள். |
ஆபனம் |
மிளகு |
ஆவாணம் |
அவி (=வெப்பமூட்டு, எரி) + ஆணம் (=சிறுமை, உணவு) = ஆவாணம் >>> ஆபனம் = எரிச்சல் தரும் சிறிய உணவு. |
ஆபாசம் |
சபைக்குற்றம் |
ஆவாசம் |
அவை (=சபை) + ஆசு (=குற்றம்) + அம் = ஆவாசம் >>> ஆபாசம் = சபையில் குற்றமாகக் கருதப்படுவது. |
ஆபாசம் |
போலி |
ஆவாயம் |
ஆ (=ஒப்பு) + வாய்மை (=உண்மை) + அம் = ஆவாயம் >>> ஆபாசம் = உண்மைக்கு ஒப்பானது |
ஆபாசம் |
எதிரொளி, பிரதிபிம்பம் |
ஆவச்சம் |
ஆ (=தோன்று, எதிர்ப்படு) + அச்சு (=உருவம்) + அம் = ஆவச்சம் >>> ஆபாசம் = எதிர்ப்பட்டுத் தோன்றும் உருவம் |
ஆபாசம் |
கெட்ட கழிவு, அசிங்கம் |
ஆவாயம் |
அவி (=கெடு) + ஆய் (=மலம், கழிவு) + அம் = ஆவாயம் >>> ஆபாசம் = கெட்ட கழிவு, அசிங்கம் |
ஆபாசம் |
கெட்ட சொல் |
ஆவாசம் |
அவி (=கெடு) + ஆசு (=சொல்) + அம் = ஆவாசம் >>> ஆபாசம் = கெட்ட சொல் |
ஆபாசி |
பிரதிபலி |
ஆபாசி |
ஆபாசம் (=பிரதிபலிப்பு) >>> ஆபாசி = பிரதிபலி |
ஆபாதன் |
கொடியவன் |
ஆவாதன் |
அவி (=கெடு) + ஆதன் (=மனிதன்) = ஆவாதன் >>> ஆபாதன் = கெட்ட மனிதன் |
ஆபீரம் |
இடையர் தெரு |
ஆபீரம் |
ஆ (=பசு, அமை) + பீரம் (=பால்) = ஆபீரம் = பசும்பாலுக்காக அமைக்கப்பட்டது |
ஆபீனம் |
முலை, பசுமடி |
ஆமீனம் |
அம்மம் (=குழந்தை உணவு, பால்) + ஈனு (=கொடு) + அம் = ஆமீனம் >> ஆபீனம் = குழந்தைக்கு உணவு கொடுப்பது |
ஆம்தனி |
வருவாய் |
ஆந்தனி |
ஆ (=உண்டாகு) + தனம் (=செல்வம்) + இ = ஆந்தனி >>> ஆம்தனி = உண்டாகிய செல்வம் = வருமானம் |
ஆம்பியம் |
பாதரசம் |
ஆமியம் |
அம் (=ஒளி, வெண்மை, நீர்) + இயை (=ஒப்பு) + அம் = ஆமியம் >>> ஆம்பியம் = வெண்மையாய் ஒளிரும் நீர் போன்றது. |
ஆம்பிலம், ஆம்பிரம் |
மாம்பழம் |
ஆம்புளம் |
அம் (=ஒளி, மஞ்சள், இனிமை, உணவு) + புளி + அம் = ஆம்புளம் >>> ஆம்பிலம் = இனிப்பும் புளிப்பும் கொண்ட மஞ்சள்நிற உணவு |
ஆம்பிலம், ஆம்பிரம் |
கள் |
ஆம்புளம் |
அம் (=அழகு, வெண்மை, நீர், உணவு) + புளி + அம் = ஆம்புளம் >>> ஆம்பிலம் = புளிப்புச்சுவை கொண்ட வெண்ணிற நீர் உணவு. |
ஆம்பிலம், ஆமிலம் |
புளியம்பழம் |
ஆம்புளம் |
அம் (=பழம்) + புளி + அம் = ஆம்புளம் >>> ஆம்பிலம் >>> ஆமிலம் = புளிப்புச்சுவை கொண்ட பழம். |
ஆமம் |
பக்குவப்படாத உணவு |
ஆவம் |
அவி (=பக்குவம்செய், இல்லாகு, உணவு) + அம் = ஆவம் >>> ஆமம் = பக்குவம் செய்யப்படாத உணவு |
ஆமம் |
செரியாமை |
ஆவம் |
அவி (=எரி, செரி, இல்லாகு) + அம் = ஆவம் >>> ஆமம் = செரியாமை |
ஆமயம் |
பசுஞ்சாணம் |
ஆவாயம் |
ஆ (=பசு) + ஆய் (=மலம்) + அம் = ஆவாயம் >>> ஆமயம் = பசுவின் மலம் |
ஆமயம் |
நோய், துன்பம் |
ஆவாயம் |
ஆவி (=உயிர்) + ஆய் (=வருத்தம், மென்மை) + அம் = ஆவாயம் >>> ஆமயம் = உயிரை வருத்தி மெலியச்செய்வது = நோய், துன்பம் |
ஆமலகம், ஆமலகி |
நெல்லி |
ஆமலகம் |
அமலை (=உருண்டை) + அகை (=எரி, ஒளிர்) + அம் (=இனிமை, நீர், பழம்) = ஆமலகம் = உருண்டையான ஒளிமிக்க இனிய நீருடைய பழம். |
ஆமாசயம் |
இரைப்பை |
ஆமசயம் |
அம் (=உணவு) + அசை (=தங்கு, கலங்கு) + அயம் (=இடம்) = ஆமசயம் >>> ஆமாசயம் = உணவு தங்கிக் கலங்கும் இடம். |
ஆமிடம் |
உணவு |
அகவிடம் |
அகம் (=வயிறு, உள்) + இடு + அம் = அகவிடம் >>> ஆமிடம் = வயிற்றுக்குள் இடப்படுவது = உணவு |
ஆமிரம் |
மாமரம் |
ஆம்பிலம் |
ஆம்பிலம் (=மாமரம்) >>> ஆமிலம் >>> ஆமிரம் |
ஆமிரம் |
புளிப்பு, புளி |
ஆம்பிலம் |
ஆம்பிலம் (=புளியம்பழம்) >>> ஆமிலம் >>> ஆமிரம் = புளிப்பு, புளி |
ஆமிசம் |
உணவு உற்பத்தி |
ஆமிசம் |
ஆ (=உண்டாகு, விளை) + மிசை (=உணவு) + அம் = ஆமிசம் = உணவு விளைச்சல் |
ஆமோதம் |
பேரின்பம் |
ஏமோதம் |
ஏமம் (=இன்பம்) + ஓதம் (=பெருமை) = ஏமோதம் >>> ஆமோதம் = பேரின்பம் |
ஆமோதம் |
மிக்க நறுமணம் |
ஆவோதம் |
ஆவி (=நறுமணம்) + ஓதம் (=பெருமை, மிகுதி) = ஆவோதம் >>> ஆமோதம் = மிக்க நறுமணம் |
ஆமோதணம் |
உடன்படுதல் |
ஆமோதணம் |
ஆம் + ஓது (=சொல்) + அணம் = ஆமோதணம் = ஆம் என்று சொல்லுதல் |
ஆமோதி |
உடன்படு |
ஆமோதி |
ஆமோதணம் (=உடன்பாடு) >>> ஆமோதி = உடன்படு |
ஆய்தம், ஆயுதம் |
அஃகேனம் |
ஆயுதம் |
ஆய் (=நுணுகு, மெலி, தனி) + உதி (=தோன்று) + அம் = ஆயுதம் >>> ஆய்தம் = தனியாகத் தோன்றி மெலியச்செய்வது. |
ஆயசூரி |
வெண்கடுகு |
ஆயசுறி |
ஆய் (=அழகு, வெண்மை, நுண்மை) + அசை (=உணவு) + உறை (=காரம்) + இ = ஆயசுறி >>> ஆயசூரி = நுண்ணிய வெண்ணிற காரமான உணவு |
ஆயதம் |
நீளம் |
ஆயறம் |
ஆய் (=விரி, நீட்டு) + அறி (=அள) + அம் = ஆயறம் >>> ஆயதம் = நீட்டி அளக்கப்பட்டது = நீளம் |
ஆயனம் |
வருசம் |
ஆயணம் |
ஆயு (=காலம்) + அணை (=தழுவு, சுற்று) + அம் = ஆயணம் >>> ஆயனம் = காலச் சுற்று. |
ஆயாசம் |
சோர்வு, வருத்தம் |
ஆயசம் |
ஆய் (=வருத்தம்) + அசை (=சோர்வு) + அம் = ஆயசம் >>> ஆயாசம் = சோர்வும் வருத்தமும் |
ஆயாசம் |
முயற்சி, செயல் |
ஆயசம் |
ஆய் (=வருந்து) + அசை (=இயக்கு, செய்) + அம் = ஆயசம் >>> ஆயாசம் = வருந்திச் செய்தல். |
ஆயாமம் |
மூச்சை அடக்குதல் |
ஆழாவம் |
ஆழ் (=அழுத்து, அடக்கு) + ஆவி (=மூச்சு) + அம் = ஆழாவம் >>> ஆயாமம் = மூச்சை அடக்குதல் |
ஆயிரம் |
பத்து நூறு |
ஆயிரம் |
ஆய் (=எண்ணு) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய எண்ணிக்கை |
ஆயு |
காலம் |
ஐயம் |
ஐயம் / அய்யம் (=காலம்) + உ = ஆயு |
ஆயுசு |
வாழ்நாள் |
ஆயுயு |
அய்யம் (=காலம்) + உய் (=வாழ்) + உ = ஆயுயு >>> ஆயுசு = வாழும் காலம் |
ஆயுகம் |
வாழ்நாள் |
ஆயுகம் |
அய்யம் (=காலம்) + உகு (=இற) + அம் = ஆயுகம் = இறக்கும் காலம் |
ஆயுதம் |
கூர்ம்பொருள், படைக்கலம் |
ஆயுதம் |
ஆய் (=குத்து, அறு, நுண்மை, கூர்மை) + உதவு / உத + அம் = ஆயுதம் = குத்தவும் அறுக்கவும் உதவும் கூர்ம்பொருள். |
ஆயோதனம் |
போர் |
ஆயொறணம் |
ஆய் (=குத்து, வெட்டு) + ஒறு (=பகை, அழி) + அணம் = ஆயொறணம் >>> ஆயோதனம் = குத்தியும் வெட்டியும் பகையை அழித்தல் |
ஆர்க்கம் |
இலாபம் |
ஆரிங்கம் |
ஆர் (=நிறை, மிகு, பெறு) + இங்கம் (=பொருள்) = ஆரிங்கம் >>> ஆர்க்கம் = மிகுதியாகப் பெற்ற பொருள். |
ஆர்ச்சவம் |
சமத்துவ நோக்கம் |
ஆரிச்சவம் |
ஆர் (=ஒப்பு, சமம்) + இச்சம் (=விருப்பம், நோக்கம்) + அம் = ஆரிச்சவம் >>> ஆர்ச்சவம் = சமத்துவ நோக்கம் |
ஆர்ச்சனம், ஆர்ச்சிதம் |
சம்பாத்தியம், கூலி |
ஆருழயணம் |
ஆர் (=பெறு, சமம்) + உழை + அணம் = ஆருழயணம் >>> ஆர்ச்சனம் = உழைப்புக்குச் சமமாகப் பெறுதல். |
ஆர்ச்சி |
சம்பாதி |
ஆர்ச்சி |
ஆர்ச்சனம் (=சம்பாத்தியம்) >>> ஆர்ச்சி = சம்பாதி |
ஆர்த்தம் |
துன்பம் அடைந்தது |
ஆருற்றம் |
அரி (=துன்பம்) + உறு (=அடை) + அம் = ஆருற்றம் >>> ஆருத்தம் >>> ஆர்த்தம் = துன்பம் அடைந்தது |
ஆர்த்தன் |
நோயாளி |
ஆர்த்தன் |
ஆர்த்தம் (=நோயுறுகை) + அன் >>> ஆர்த்தன் = நோயுற்றவன் |
ஆர்த்தவம் |
மகளிர் பூப்பு |
ஆரத்தாவம் |
அரை (=நடு, இடை) + அத்து (=இரு, சிவப்பு) + ஆவி (=வெளிப்படு) + அம் (=பருவம், நீர்) = ஆரத்தாவம் >>> ஆர்த்தவம் = இடையில் இருந்து பருவத்தில் வெளிப்படும் செந்நீர். |
ஆர்த்தி |
நோய், துன்பம், வலி |
ஆரித்தி |
அரி (=அழி) + இதம் (=இன்பம்) + இ = ஆரித்தி >>> ஆர்த்தி = இன்பத்தை அழிப்பது = நோய், துன்பம், வலி |
ஆரக்கம் |
செஞ்சந்தனம் |
ஆரக்கம் |
ஆரம் (=சந்தனம்) + அகை (=எரி) + அம் (=நிறம்) = ஆரக்கம் = எரிநிற சந்தனம் |
ஆரகன் |
அழிப்பவன் |
ஆரகன் |
அரி (=அழி, கொல்) + அகம் (=உயிர்) + அன் = ஆரகன் = உயிரைக் கொல்பவன் |
ஆரணியம், ஆரண்யம் |
காடு |
ஆரணியம் |
ஆர் (=மரம், இடம், மிகு) + அணிமை (=நெருக்கம்) + அம் = ஆரணியம் >>> ஆரண்யம் = மரங்கள் மிகுதியாக நெருக்கமாக இருக்கும் இடம் |
ஆரத்தி, ஆரதி |
தீபாராதனை |
ஆலத்தி |
அலை (=சுற்று, சுழற்று) + தீ (=ஒளி, தீபம்) = ஆலய்த்தீ >>> ஆலத்தி >>> ஆரத்தி = சுழற்றப்படும் தீபம் |
ஆரதம் |
மரக்கறி உணவுகள் |
ஆரத்தம் |
ஆர் (=மரம், பெறு, உண்ணு) + அத்து (=இரு) + அம் = ஆரத்தம் >>> ஆரதம் = மரத்தில் இருந்து பெற்று உண்ணப்படுபவை. |
ஆரம் |
மாலை, அணிகலன் |
ஆரம் |
அரி (=நார், கட்டு) + அம் = ஆரம் = நாரால் கட்டப்படுவது = பூமாலை, அணிகலன். |
ஆரம் |
வட்டம் |
ஆரம் |
ஆர் (=நிறை) + அம் = ஆரம் = நிறைவு, முழுமை, வட்டம் |
ஆரம்பம் |
தொடக்கம் |
ஆரம்மம் |
ஆர் (=தோன்று) + அமை (=செய்) + அம் = ஆரம்மம் >>> ஆரம்பம் = செயலின் தோற்றம் |
ஆரம்பம் |
பேரொலி |
ஆரவம் |
ஆரவம் (=பேரொலி) >>> ஆரபம் >>> ஆரம்பம் |
ஆரவம், ஆராவம், அரவம் |
பேரொலி |
அரவம் |
ஆர் (=மிகு, ஒலி) + அவி (=வருத்து) + அம் = ஆரவம் >>> அரவம் = வருத்துகின்ற மிகுதியான ஒலி. |
ஆரம்பி |
தொடங்கு |
ஆரம்பி |
ஆரம்பம் (=தொடக்கம்) >>> ஆரம்பி = தொடங்கு |
ஆரம்பி |
ஒலி |
ஆரம்பி |
ஆரம்பம் (=ஒலி) >>> ஆரம்பி = ஒலி |
ஆரவாரம் |
பேரொலி |
ஆரவாரம் |
ஆர (=மிகுதியாக) + ஆர் (=ஒலி) + அம் = ஆரவாரம் = மிகுதியாக ஒலிப்பது |
ஆராதனம், ஆராதனை |
போற்றிப் பூசித்தல் |
ஆராதணம் |
அருமை (=பெருமை) + ஆதி (=இறைவன்) + அணி (=வர்ணி) + அம் = ஆராதணம் >>> ஆராதனம் >>> ஆராதனை = இறைவனின் பெருமைகளை வர்ணித்தல் = போற்றிப் பூசித்தல். |
ஆராதகர் |
பூசிப்பவர் |
ஆராதகர் |
ஆர் (=பெருமை, ஒலி, சொல்லு) + ஆதி (=இறைவன்) + அகம் (=அன்பு) + அர் = ஆராதகர் = இறைவனின் பெருமைகளைப் பத்தியுடன் சொல்பவர். |
ஆராதி |
பூசி, போற்று |
ஆராதி |
ஆராதனம் (=பூசை) >>> ஆராதி = பூசி |
ஆராதூரி |
ஊதாரி |
ஆரதூரி |
ஆர (=மிகுதியாக) + தூர் (=பொழி, செலவழி) + இ = ஆரதூரி >>> ஆராதூரி = மிகுதியாகச் செலவழிப்பவன் |
ஆராமம் |
தோட்டம் |
ஆரம் |
ஆரம் (=தோட்டம்) + அம் = ஆரமம் >>> ஆராமம் = தோட்டம், சோலை |
ஆரிடர் |
முனிவர் |
ஆரிறர் |
ஆர் (=பொருந்து) + இறை (=கடவுள்) + அர் = ஆரிறர் >>> ஆரிடர் = கடவுளைப் பொருந்தியவர். |
ஆரிசர் |
முனிவர் |
ஆரீசர் |
ஆர் (=பொருந்து) + ஈசன் (=கடவுள்) + அர் = ஆரீசர் >>> ஆரிசர் = கடவுளைப் பொருந்தியவர். |
ஆரியம் |
கேழ்வரகு |
ஆரியம் |
அரி (=நுட்பம்), தீ, நிறம்) + அம் (=உணவு) = ஆரியம் = நுண்ணிய தீநிற உணவு |
ஆரியன் |
பெரியோன் |
ஆரியன் |
ஆரி (=பெருமை) + அன் = ஆரியன் = பெருமை உடையவன் |
ஆரீதம் |
பச்சைப்புறா |
ஆரீறம் |
அரி (=தீ, நிறம், கண், பச்சை) + இறை (=சிறகு) + அம் = ஆரீறம் >>> ஆரீதம் = தீநிறக் கண்களும் பச்சைநிறச் சிறகுகளும் உடையது. |
ஆருகதம் |
நாவல் மரம் |
ஆரூகத்தம் |
அரி (=வண்டு) + ஊகம் (=கருப்பு) + அத்து (=போல, செறி) + அம் (=பழம்) = ஆரூகத்தம் >>> ஆருகதம் = கருவண்டு போல செறிந்திருக்கும் பழம். |
ஆரூடம், ஆருடம் |
ஒருவகை சோதிடம் |
ஆரீறம் |
அரி (=நேரம், கேள்) + இறை (=தங்கு, பொருந்து, விடை) + அம் = ஆரீறம் >>> ஆரூடம் = கேட்கும் நேரத்தைப் பொருத்து விடை கூறுதல். |
ஆரூடம் |
மேல் ஏறியது |
ஏறூறம் |
ஏறு (=உயரம், மேல்) + உறு (=அடை, பொருந்து) + அம் = ஏறூறம் >>> ஆரூடம் = உயரத்தை அடைந்தது, மேலே பொருந்தியது. |
ஆரூடன் |
மேல் ஏறியவன் |
ஏறூறன் |
ஆரூடம் (=மேல் ஏறியது) + அன் = ஆரூடன் = மேல் ஏறியவன் |
ஆரை |
புல் பாய் |
ஆரை |
அரி (=புல், படுக்கை) + ஐ = ஆரை = புல்லால் ஆன படுக்கை |
ஆரோக்கியம் |
நோயின்மை |
ஆரோக்கியம் |
(2) அருமை (=நோய்) + ஓக்கு (=எறி, நீக்கு) + இயம் (=தன்மை, நிலை) = ஆரோக்கியம் = நோயினை எறிந்த / நீக்கிய நிலை. |
ஆரோகணம் |
ஏறி அமர்தல் |
ஆரோங்கணம் |
ஆர் (=பொருந்து, அமர்) + ஓங்கு (=உயர், ஏறு) + அணம் = ஆரோங்கணம் >>> ஆரோகணம் = ஏறி அமர்தல் |
ஆரோகணம் |
படிக்கட்டு |
ஆரோங்கணம் |
ஆர் (=இடம், கட்டு, பெறு, அடை) + ஓங்கு (=உயர்) + அணம் = ஆரோங்கணம் >>> ஆரோகணம் = உயரமான இடத்தை அடைய கட்டப்பட்டது. |
ஆரோகணம் |
தாழ்வாரம் |
ஆரூங்காணம் |
ஆர் (=இடம், மறை) + ஊங்கு (=முன்) + ஆணம் (=பற்றுக்கோடு, வீடு) = ஆரூங்காணம் >>> ஆரோகணம் = வீட்டின் முன் இடத்தை மறைப்பது. |
ஆரோசை |
ஏறும் ஓசை |
ஏறோசை |
ஏறு + ஓசை = ஏறோசை >>> ஆரோசை = ஏற்றிப்பாடும் ஓசை |
ஆரோபணம், ஆரோபம் |
மாறானதைக் கொள்ளுதல் |
ஏறோம்பணம் |
ஏறு (=மாறு, மேல்) + ஓம்பு (=கருது, கொள்) + அணம் = ஏறோம்பணம் >>> ஆரோபணம் = மாறானதைக் கருதி மேற்கொள்ளுதல். |
ஆரோபி |
மாறானதை மேற்கொள் |
ஆரோபி |
ஆரோபணம் (=மாறானதை மேற்கொள்ளுகை) >>> ஆரோபி = மாறானதை மேற்கொள். |
ஆரோபிதம் |
மாறாகக் கொள்ளப்பட்டது |
ஏறோம்பிதம் |
ஏறு (=மாறு, மேல்) + ஓம்பு (=கருது, கொள்) + இதம் = ஏறோம்பிதம் >>> ஆரோபிதம் = மாறாகக் கருதி மேற்கொள்ளப்பட்டது. |
ஆலம் |
நஞ்சு |
ஆலம் |
அலை (=வருத்து, கொல்) + அம் (=உணவு) = ஆலம் = கொல்லும் உணவு |
ஆல் |
நஞ்சு |
அழல் |
அழல் (=நஞ்சு) >>> அயல் >>> ஆல் |
ஆலகம் |
நெல்லி |
ஆலகம் |
ஆல் (=நீர், வட்டமிடு) + அகை (=ஒளிர்) + அம் (=இனிமை, உணவு) = ஆலகம் = இனிய நீருடைய வட்டமான ஒளிமிக்க உணவு. |
ஆலகாலம் |
பாற்கடலில் எழுந்த நஞ்சு |
ஆலகாலம் |
அலை (=கடல்) + அகை (=எழு) + ஆலம் (=நஞ்சு) = ஆலகாலம் = கடலில் எழுந்த நஞ்சு |
ஆலசியம் |
தாமதம், சோம்பல் |
ஆலாசியம் |
அல் (=எதிர்மறை) + ஆசு (=விரைவு) + இயம் = ஆலாசியம் >>> ஆலசியம் = விரைவின் எதிர்மறை = தாமதம், சோம்பல் |
சலம், ச^லம் |
நீர் |
ஆலம் |
ஆலம் (=நீர்) >>> சாலம் >>> சலம் >>> ச^லம் |
அதிதி |
விருந்தினர் |
அறிறி |
(3) அறி (=பழகு) + இறு (=இல்லாகு) + இ = அறிறி >>> அதிதி = பழக்கமற்றவர் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.