சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
உய்யானம் |
சோலை |
ஊழணம் |
ஊழ் (=மலர், மண) + அணை (=செறி, இடம்) + அம் = ஊழணம் >>> உயானம் >>> உய்யானம் = மலர்கள் செறிந்து மணக்கும் இடம். |
உயில் |
மரண சாசனம் |
உயில் |
உய் (=இற, வெளிப்படுத்து, சொல்) + இல் = உயில் = இறக்கும்போது சொல்லப்படுவது = மரண சாசனம் |
உயுத்தம் |
போர் |
உயுந்தம் |
உய் (=அழி, கொல்லு) + உந்து (=பொருந்து, கூடு) + அம் = உயுந்தம் >>> உயுத்தம் = கூடிக் கொல்லுதல். |
உரகதம் |
பாம்பு |
உரகத்தம் |
ஊர் + அகம் (=வயிறு) + அத்தம் (=இடம், நிலம்) = உரகத்தம் >>> உரகதம் = வயிற்றால் நிலத்தில் ஊர்வது. |
உரகம், உரகன், உரங்கம் |
பாம்பு |
உரகம் |
ஊர் + அகம் (=வயிறு, பூமி) = உரகம் = வயிற்றால் நிலத்தில் ஊர்வது. |
உரப்பிரம் |
வெள்ளாடு |
உரப்பரம் |
உரு (=வெண்மை) + அப்பர் (=ஆடு) + அம் = உரப்பரம் >>> உரப்பிரம் = வெண்ணிறமுடைய ஆடு |
உரம் |
மார்பகம் |
உரம், இறை |
(1) உரு (=முளை, பெரு, சுர, உடல், தன்மை) + அம் = உரம் = உடலில் முளைத்துப் பெருத்துச் சுரக்கும் இயல்பினது = மார்பகம். (2) இறை (=நெஞ்சு, மார்பு) + அம் = இறம் >>> உரம். |
உரம் |
அறிவு |
உரம் |
உரு (=தோன்று) + அம் = உரம் = தோன்றுவது = எண்ணம், அறிவு |
உரம் |
முன்னிற்பது |
உரம் |
உரு (=தோன்று, முன்வா) + அம் = உரம் = முன்வருவது |
உரிசை, உருசி, உருசை |
சுவை |
ஒரிசை |
ஓரை (=உணவு) + இசை (=கிடை, இனிமை) = ஒரிசை >>> உரிசை >>> உருசி = உணவில் கிடைக்கும் இனிமை = சுவை |
உரித்திரம் |
மஞ்சள் |
உரைத்திரம் |
உரை (=தேய், பூசு, பொன்) + திரு (=அழகு, பொருள்) + அம் = உரைத்திரம் >>> உரித்திரம் = பொன்னின் அழகுக்காகத் தேய்த்துப் பூசப்படும் பொருள். |
உரு |
மான் |
உரு |
உரு (=அழகு, உடல், ஓவியம், ஒப்பு, அச்சம்) >>> உரு = அழகிய ஓவியம் போன்ற உடலும் அச்சமும் கொண்டது. |
உருக்குமம் |
தங்கம் |
உருக்குமம் |
உருக்கு (=உலோகம்) + மா (=அழகு, செல்வம்) + அம் = உருக்குமம் = அழகிய உலோகச் செல்வம் |
உருசு, ருசு |
ஆதாரம், சாட்சி |
உருயு |
உரம் (=அறிவு, கருத்து, வலிமை) + உய் (=கொடு) + உ = உருயு >>> உருசு = கருத்துக்கு வலிமை தருவது. |
உருத்திரம் |
கடுங்கோபம் |
உருத்திறம் |
உரு (=சின) + திறம் (=மிகுதி) = உருத்திறம் >>> உருத்திரம் = மிகுசினம் |
உருத்திராக்கம், உருத்திராட்சம் |
தெய்வாம்சம் பொருந்திய செங்கொட்டை |
உருத்திரக்கம் |
உரு (=எரி, சிவ, திரள்) + திரு (=தெய்வத்தன்மை) + அக்கம் (=தானியம், விதை, கொட்டை) = உருத்திரக்கம் >>> உருத்திராக்கம் = தெய்வத்தன்மை உடைய திரட்சியான செந்நிறக் கொட்டை. |
உருதம் |
உச்சரிப்பு |
உருந்தம் |
உரு (=எழுத்து) + உந்து (=நீக்கு, தனியாக்கு, ஒலி) + அம் = உருந்தம் >>> உருதம் = எழுத்துக்களைத் தனியாக்கி ஒலித்தல் |
உருது |
போர்ப்படை, படைவீடு |
உறுந்து |
ஊறு (=கொலை) + உந்து (=பொருந்து, பெருகு, கூடு, தாக்கு) = உறுந்து >>> உருது = பொருந்தித் தாக்கிக் கொல்லும் கூட்டம் = போர்ப்படை >>> படைவீடு = பாசறை |
உருநாட்டு |
சிலை |
உருநாட்டு |
உரு (=வடிவம்) + நாட்டு (=ஊன்று) = உருநாட்டு = ஊன்றப்படும் வடிவம் |
உருப்படி |
விளைச்சல், பயன் |
உருப்படி |
உரு (=தோன்று) + படி (=பொருள்) = உருப்படி = தோன்றிய பொருள் = விளைச்சல், பயன் |
உரும்பரம் |
செம்பு |
உருப்பறம் |
உரு (=எரி, சிவ, நிறம்) + பறை (=பாத்திரம்) + அம் = உருப்பறம் >>> உரும்பரம் = சிவப்புநிறப் பாத்திரம் |
உரும்பரம் |
பெருங்காயம் |
உரைம்மரம் |
உரை (=தேய்) + மரு (=வாசனை, கல) + அம் (=உணவு) = உரைம்மரம் >>> உரிம்பரம் >>> உரும்பரம் = வாசனைக்காக உணவில் தேய்த்துக் கலக்கப்படுவது. |
உரும்பரம் |
பாம்பு |
உருப்பாறம் |
உரு (=சின) + பாறு (=அழி, கொல், பருந்து) + அம் = உருப்பாறம் >>> உரும்பரம் = பருந்தினால் சினங்கொண்டு கொல்லப்படுவது. |
உருமால், உருமாலை |
தலைப்பாகை |
உறைமேல் |
உறை (=பெருமை, செறி, கவசம்) + மேல் (=தலை) = உறைமேல் >>> உறிமால் >>> உருமால் = பெருமைக்காகத் தலையில் செறிக்கப்படும் கவசம் = தலைப்பாகை. |
உருமால், உருமாலை |
மேலாடை |
உறைமேல் |
உறை (=ஆடை) + மேல் = உறைமேல் >>> உறிமால் >>> உருமால் = மேலாடை |
உருரசம் |
பாதரசம் |
உருரயம் |
ஊர் (=பரவு, ஒழுகு) + உரு (=வெண்மை) + அயம் (=உலோகம்) = உருரயம் >>> உருரசம் = ஒழுகக்கூடிய வெண்ணிற உலோகம் |
உருவம், உரூபம், ரூபம் |
வடிவம், அழகு, உடல், நிறம் |
உரு |
உரு (=வடிவம், அழகு, உடல், நிறம்) + அம் = உருவம் >>> உரூபம் >>> ரூபம் |
உருவாரம் |
வெள்ளரி |
உருவரம் |
உரு (=வெண்மை) + அரி (=பச்சை, வரி) + அம் (=உணவு) = உருவரம் >>> உருவாரம் = வெண்ணிற வரிகளைக் கொண்ட பசுமை உணவு. ஒ.நோ: வெள் + அரி = வெள்ளரி = வெண்ணிற வரிகளைக் கொண்டது. |
உருவாரம் |
சிலை |
உருவாரம் |
உரு (=வடிவம்) + ஆர் (=பொருத்து) + அம் = உருவாரம் = பொருத்தப்படும் வடிவம் = சிலை. |
உருவி |
மலை, பூமி |
உருப்பி |
ஊர் (=இடம்) + உப்பு (=உயர், பெரு) + இ = உருப்பி >>> உருவி = உயர்ந்த பெரிய இடம் = மலை, பூமி |
உரூடி |
இடுகுறிச் சொல் |
உரிடி |
உரை (=சொல்) + இடை (=நீங்கு, இல்லாகு, காரணம், இடப்படுவது) + இ = உரிடி >>> உரூடி = காரணம் இன்றி இடப்படும் சொல் |
உரூடி |
நிகழ்வுக்கான காரணம் |
உரிடி |
உரு (=தோன்று, நிகழ்) + இடை (=தொடர்பு, காரணம்) + இ = உரிடி >>> உரூடி = நிகழ்வுக்குத் தொடர்பாகத் தோன்றும் காரணம் |
உரூப்பியம் |
வெள்ளி நாணயம் |
உருப்பையம் |
உரு (=வெண்மை) + பை (=பணம்) + அம் = உருப்பையம் >>> உரூப்பியம் = வெண்ணிறப் பணம். |
உரூப்பியம் |
அழகானது |
உருவியம் |
உருவம் (=அழகு) + இயம் = உருவியம் >>> உரூப்பியம் = அழகானது |
உரூபி |
நிரூபி |
உரீவு |
உரம் (=அறிவு, கருத்து, வலிமை) + ஈவு (=கொடு, சேர்) = உரீவு >>> உரூபி = கருத்துக்கு வலிமை சேர் = நிறுவு |
உரொக்கம், ரொக்கம் |
பணம் |
உருவக்கம் |
(2) உரு + அக்கம் (=நாணயம்) = உருவக்கம் >>> உரோக்கம் >>> ரொக்கம் = உருவம் உடைய நாணயம் = பணம் |
உரோகம், ரோகம் |
நோய் |
உறோக்கம் |
(2) ஊறு (=துன்பம்) + ஓக்கு (=உண்டாக்கு) + அம் = உறோக்கம் >>> உரோகம் >>> ரோகம் = துன்பத்தை உண்டாக்குவது = நோய் |
உரோங்கல் |
உலக்கை |
உரோங்கள் |
உரு (=குத்து) + ஓங்கு (=உயர்த்து) + அள் (=தண்டு) = உரோங்கள் >>> உரோங்கல் = உயர்த்திக் குத்தும் தண்டு = உலக்கை. |
உரோசம், ரோசம் |
தாக்குகின்ற சினம் |
உரோச்சம் |
(2) உரு (=சின) + ஓச்சு (=எறி, தாக்கு) + அம் = உரோச்சம் >>> உரோசம் >>> ரோசம் = தாக்குகின்ற சினம் |
உரோசனி |
தாமரை |
உறோசணி |
உறை (=மூடி, மலர்) + ஓசம் (=வெளிச்சம்) + அணை + இ = உறோசணி >>> உரோசனி = வெளிச்சம் அணைந்ததும் மூடிக்கொள்ளும் மலர். |
உரோசனை |
வெண்கடுகு |
உரோச்சாணை |
உரு (=வெண்மை, மிகு) + ஓச்சு (=எறி, தூவு) + ஆணம் (=சிறுமை, உணவு) + ஐ = உரோச்சாணை >>> உரோசனை = உணவில் தூவப்படும் மிகச்சிறிய வெண்ணிற உணவுப் பொருள் = வெண்கடுகு |
உரோசி |
சின |
உரோசி |
உரோசம் (=சினம்) >>> உரோசி = சினங்கொள் |
உரோடம் |
தாக்கும் சினம் |
உரோறம் |
(2) உரு (=சின) + ஒறு (=தண்டி, தாக்கு) + அம் = உரோறம் >>> உரோடம் = தாக்குகின்ற சினம் |
உரோதனம்,ரோதனை, உரோதனை |
அழுகை |
உரோதணம் |
(2) ஊர் (=ஒழுகு) + ஓதி (=இமை, கண்) + அணம் = உரோதணம் >>> உரோதனம் >>> உரோதனை >>> ரோதனை = கண்களில் ஒழுகுதல். |
உரோதனம், ரோதனம் |
தடை |
உரோறணம் |
(2) ஊர் (=இயங்கு, செல்) + ஒறு (=ஒடுக்கு) + அணம் = உரோறணம் >>> உரோதனம் = இயக்கத்தை ஒடுக்குதல் = தடை |
உரோதனம்,ரோதனை,உரோதனை |
தொந்தரவு |
உரோறணம் |
(2) ஊர் (=அடர், நெருங்கு) + ஒறு (=வருத்து) + அணம் = உரோறணம் >>> உரோதனம் >>> உரோதனை >>> ரோதனை = நெருங்கி வருத்துதல் |
உரோதி |
அழு |
உரோதி |
உரோதனம் (=அழுகை) >>> உரோதி = அழு |
உரோமம், ரோமம் |
மயிர் |
உரோம்பம் |
(2) உரி (=தோல்) + ஓம்பு (=பாதுகா, தோன்று, வளர்) + அம் = உரோம்பம் >>> உரோமம் = தோலைப் பாதுகாக்கத் தோன்றி வளர்வது = மயிர் |
உல்கு |
அரசனுக்கான வரி |
உள்கூழ் |
உள் (=ஆராய், கணக்கிடு, மதி, செலுத்து) + கூழ் (=பயிர்) = உள்கூழ் >>> உல்கு = மதிப்புடையோர்க்குச் செலுத்தப்படும் பயிர்க் கணக்கு. |
உலுப்பை, உல்பா, உல்பே |
பெரியோர்க்கு அனுப்புமுணவு |
உளுப்பை |
உள் (=மதி, செலுத்து) + உப்பு (=உணவு) + ஐ = உளுப்பை >>> உலுப்பை >>> உல்பே, உல்பா = மதிப்புடையோர்க்குச் செலுத்தும் உணவு. |
உல்லங்கனம் |
மதிக்காமை |
உள்ளக்கணம் |
உள் (=மதி) + அகை (=நீங்கு, இல்லாகு) + அணம் = உள்ளக்கணம் >>> உல்லங்கனம் = மதியாமை. |
உல்லரி |
தளிர் |
உள்ளரி |
உள் (=நினை, தோன்று) + அரி (=இலை) = உள்ளரி >>> உல்லரி = தோன்றும் இலை = தளிர். |
உல்லாசம் |
உள்ளக் களிப்பு, மகிழ்ச்சி |
உள்ளாயம் |
உள் (=மனம்) + ஆய் (=கொண்டாடு) + அம் = உள்ளாயம் >>> உல்லாசம் = மனதுக்குள் கொண்டாடுதல். |
உல்லாசம் |
மெல்லிய சிறு மேலாடை |
உள்ளாயம் |
உள் (=மனம், மார்பு) + ஆய் (=அசை, மென்மை, அறு) + அம் = உள்ளாயம் >>> உல்லாசம் = மார்பின்மேல் அசையும் அறுக்கப்பட்ட மென்மையான பொருள் = சிறு மேலாடை |
உல்லாபம் |
பிதற்றல் |
உல்லமம் |
உலை (=தடுமாறு) + அம் (=சொல்) + அம் = உல்லமம் >>> உல்லாபம் = தடுமாறும் சொல் .= பிதற்றல். |
உல்லாபன் |
நோய் தீர்ந்தவன் |
உள்ளேமன் |
உளை (=வலி, நோய், கெடு) + ஏம் (=இன்பம், சுகம் + அன் = உள்ளேமன் >>> உல்லாபன் = நோய் / வலி கெட்டு சுகப்பட்டவன். |
உல்லியம் |
கிணறு |
உள்ளீயம் |
உள் (=இடம்) + ஈ (=அறு, வெட்டு) + அம் (=நீர்) = உள்ளீயம் >>> உல்லியம் = நீருக்காக வெட்டப்படும் இடம் = கிணறு. |
உல்லேகம் |
புனைந்துரை |
உள்ளெக்கம் |
உள் (=கருது) + எக்கு (=மிகு) + அம் (=சொல்) = உள்ளெக்கம் >>> உல்லேகம் = கருத்தை மிகுதியாகச் சொல்லுதல் |
உல்லோலம் |
நீரலை |
உல்லோலம் |
உலை (=அலை) + ஓல் (=ஒலி) + அம் (=நீர்) = உல்லோலம் = அலைந்து ஒலிக்கும் நீர் = நீரலை |
உலகம், உலகு |
ஆகாயம் |
உளகம் |
உள் (=இடம்) + அகை (=உயர், மலர், விரி) + அம் = உளகம் >>> உலகம் = உயரத்தில் விரிந்த இடம் = ஆகாயம். |
உலகம், உலகு |
பூமி |
உளகம் |
உள் (=இடம்) + அகை (=ஈர், மலர், விரி) + அம் = உளகம் >>> உலகம் = ஈர்ப்புடைய விரிந்த இடம் = பூமி. |
உலகிகம் |
உலக நடை |
உலகிகம் |
உலகம் + இகு (=ஓடு, நட) + அம் = உலகிகம் = உலக நடை |
உலவம் |
கூச்சம், கஞ்சத்தனம் |
உலமம் |
உல (=குறை, தளர்) + அமை (=செய், கொடு) + அம் = உலமம் >>> உலவம் = செய்வதற்குத் தளர்தல், குறைவாகக் கொடுத்தல். |
உலுத்தம் |
கஞ்சத்தனம் |
உலுந்தம் |
உல (=குறை) + உந்து (=கொடு) + அம் = உலுந்தம் >>> உலுத்தம் = குறைவாகக் கொடுத்தல். |
உலுவம், உலுவா |
வெந்தயம் |
உலுப்பம் |
உல (=குறை, சிறு, அழி, இல்லாகு) + உப்பு (=இனிமை, உணவு) + அம் = உலுப்பம் >>> உலுவம் = இனிமையற்ற / கசப்பான சிறிய உணவு. |
உலூகம் |
ஆந்தை |
உலூகம் |
(2) உல (=ஒலி, திரி) + ஊகம் (=கருமை, இருள்) = உலூகம் = இருளில் ஒலித்தவாறு திரிவது = ஆந்தை. |
உலூகலம் |
உலக்கை |
உலோக்களம் |
உலை (=சிதை) + ஓக்கு (=உயர்த்து, எறி) + அள் (=தண்டு) + அம் = உலோக்களம் >>> உலூகலம் = உயர்த்தி எறிந்து சிதைக்கும் தண்டு |
உலூதை, உலூதம் |
சிலந்தி |
உளுய்த்தை |
உளை (=மயிர், இழை) + உய் (=உண், வாழ்) + தை (=சூழ், அகப்படுத்து, பின்னு) = உளுய்த்தை >>> உளூதை >>> உலூதை = சுற்றிலும் இழையைப் பின்னி அகப்படுத்தி உண்டு வாழ்வது. |
உலோகம், லோகம் |
மலை, பூமி |
உளோங்கம் |
உள் (=இடம்) + ஓங்கு (=உயர், பெரு) + அம் = உளோங்கம் >>> உலோகம் >>> லோகம் = உயரமான பெரிய இடம் = மலை, பூமி |
உலோகம் |
மாழை |
உலுகம் |
உலை + உகு (=கரை, உருக்கு, ஊற்று) + அம் = உலுகம் >>> உலோகம் = உலையில் உருக்கி ஊற்றப்படுவது. |
உலோகிதம் |
சிவப்பு |
ஒளுக்கிதம் |
ஒளி (=நிறம்) + உக்கம் (=நெருப்பு) + இதம் = ஒளுக்கிதம் >>> உலோகிதம் = நெருப்பின் நிறம் = சிவப்பு |
உலோகிதம் |
சந்தனம் |
ஒளோக்கிறம் |
ஒளி (=அழகு, பொலிவு) + ஓக்கு (=உண்டாக்கு) + இறை (=பொருந்து, தலை, மார்பு) + அம் = ஒளோக்கிறம் >>> உலோகிதம் = தலையிலும் மார்பிலும் பொருந்திப் பொலிவை உண்டாக்குவது |
உலோச்சு |
மயிரைப் பறி |
உளுச்சு |
உளை (=மயிர்) + உச்சு (=பறி) = உளுச்சு >>> உலோச்சு = மயிரைப் பறி |
உலோசனம் |
கண் |
ஒளோச்சணம் |
ஒளி + ஓச்சு (=தூண்டு) + அணி (=உறுப்பு) + அம் = ஒளோச்சணம் >>> உலோசனம் = ஒளியால் தூண்டப்படும் உறுப்பு. |
உலோட்டம் |
மண் கட்டி |
உளோற்றம் |
உள் (=இடம், மண்) + ஒற்று (=கட்டு) + அம் = உளோற்றம் >>> உலோட்டம் = மண் கட்டி |
உலோபம் |
கஞ்சத்தனம் |
உளோம்பம் |
உள் (=உள்ளம், எண்ணம்) + ஓம்பு (=இவறு) + அம் = உளோம்பம் >>> உலோபம் = இவறும் எண்ணம் |
உலோபம் |
குறைவு |
உலோவம் |
உலம் (=உருண்டை, முழுமை) + ஓவு (=ஒழிவு, இன்மை) + அம் = உலோவம் >>> உலோபம் = முழுமை இன்மை = குறைவு |
உலோபன், உலோபி |
கஞ்சன் |
உலோபன் |
உலோபம் (=கஞ்சத்தனம்) + அன் = உலோபன் = கஞ்சன் |
உலோமம் |
மயிர் |
ஒலோம்பம் |
ஒலி (=தோல்) + ஓம்பு (=பாதுகா, தோன்று, வளர்) + அம் = ஒலோம்பம் >>> உலோமம் = தோலைப் பாதுகாக்கத் தோன்றி வளர்வது = மயிர் |
உலோலிதம் |
தலையைத் தோளில் தாங்கி யோசித்தல் |
உளோல்லிறம் |
உள் (=கருது, யோசி) + ஒல்லு (=பொறு, தாங்கு) + இறை (=சாய், தலை, தோள்) + அம் = உளோல்லிறம் >>> உலோலிதம் = யோசித்தவாறு தலையைத் தோளில் சாய்த்துத் தாங்குதல் |
உவணம், உவணன் |
பருந்து, கழுகு |
ஊழ்பணம் |
ஊழ் (=பகை) + பணி (=பற, பாம்பு) + அம் = ஊழ்பணம் >>> உவணம் = பாம்புக்குப் பகையான பறவை. |
உவணி |
வாள் |
உவணி |
உவி (=அழி) + அணி (=கருவி, உடை, தரி, பெருமை) = உவணி = உடையில் தரிக்கும் பெரிய அழிவுக் கருவி. |
உவதை |
உயரமான அருவி |
உபதை |
ஊ (=உயரம்) + பதம் (=இடம், வழி, நீர்) + ஐ = உபதை >>> உவதை = உயரமான இடத்தில் இருந்து வழியும் நீர் |
உவராகம் |
கிரகணம் |
உபராகம் |
உபராகம் >>> உவராகம் |
உவரோதம் |
இடையூறு |
உய்மறுந்தம் |
உய் (=நடத்து, இயக்கு) + மறி (=தடு) + உந்தி (=நடு, இடை) + அம் = உய்மறுந்தம் >>> உவரோதம் = இயக்கத்தை இடையில் தடுப்பது |
உவவனம் |
சோலை |
உபவனம் |
உபவனம் (=சோலை) >>> உவவனம் |
உவனாயம் |
மறைத்துக் கட்டும் மருந்து |
ஒம்பணயம் |
ஓம்பு (=பாதுகா, மறை) + அணை (=கட்டு) + அம் (=மருந்து) = ஒம்பணயம் >>> உவனாயம் = மறைத்துக் கட்டும் மருந்து. |
உவனி |
சுத்தமாக்கு |
ஒம்பணி, உய்வானி |
(1) ஓம்பு (=பேணு) + அணி (=அழகு) = ஒம்பணி >>> உவனி = அழகைப் பேணு = சுத்தஞ்செய். (2) உய் (=நடத்து, செய்) + வான் (=தூய்மை) + இ = உய்வானி >>> உவனி = தூய்மை செய் |
உவனி |
எய்யத் தொடங்கு |
உய்பண்ணி, உய்பணி |
(1) உய் (=செலுத்து, ஏவு) + பண்ணு (=செய்) + இ = உய்பண்ணி >>> உவனி = ஏவுதலைச் செய். (2) உய் (=நடத்து, செய்) + பணி (=ஏவு) = உய்பணி >>> உவனி = ஏவுதலைச் செய். |
உவனி |
ஈரமாகு |
உவனி |
உவனிப்பு (=ஈரம்) >>> உவனி = ஈரமாகு |
உவனிப்பு |
ஈரம் |
உய்பனிப்பு |
உய் (=நீங்கு, அனுபவி) + பனி (=நீர்) + பு = உய்பனிப்பு >>> உவனிப்பு = நீர் நீங்கியும் அனுபவமாவது = ஈரம். |
உவனியம் |
பூணூலணியும் சடங்கு |
ஒம்பணியம் |
ஓம்பு (=பொறு, தாங்கு, தரி) + அண் (=கயிறு) + இயம் (=ஒலி, ஓது) = ஒம்பணியம் >>> உவனியம் = கயிற்றை ஓதித் தரித்தல். |
உவா, யுவா, உவன், யுவன் |
இளைஞன், இளமை |
உப்பா |
உப்பு (=எழு, உயர், தோன்று) + ஆ (=உயிர்) = உப்பா >>> உவா >>> யுவா = தோன்றிய உயிர் = குழந்தை, இளையோன் >>> இளமை. ஒ.நோ: உப்பு (=எழு, தோன்று) + அல் = உப்பல் >>> உம்பல் = வாரிசு, எழுச்சி.. |
உவா |
ஆண் யானை, யானை |
உப்பா |
உப்பு (=எழு, உயர், பெரு) + ஆ (=உயிரி) = உப்பா >>> உவா = உயரமான பெரிய உயிரி = ஆண் யானை, யானை. |
உவாத்தியாயன், உவாத்தி |
ஆசிரியர் |
உபாத்தியாயன், உபாத்தி |
உபாத்தியாயன் / உபாத்தி >>> உவாத்தியாயன் / உவாத்தி |
உவாதி |
எல்லை |
ஒம்பத்தி |
ஓம்பு (=விலக்கு, பிரி) + அத்தம் (=நிலம்) + இ = ஒம்பத்தி >>> உபாதி >>> உவாதி = நிலத்தைப் பிரிப்பது = எல்லை. |
உவாதி |
துன்பம் |
உபாதி |
உபாதி (=துன்பம்) >>> உவாதி |
உவாந்தம் |
அமாவாசை, பௌர்ணமி |
உவந்தம் |
உவா (=சந்திரன்) + அந்தம் (=முடிவு, முழுமை) = உவந்தம் >>> உவாந்தம் = முடிந்த சந்திரன், முழுமையான சந்திரன் |
உவையம் |
இரண்டு |
உபயம் |
உபயம் (=இரண்டு) >>> உவயம் >>> உவையம் |
உழை, உசை |
வைகறை |
உழாய் |
ஊழ் (=சூரியன்) + ஆய் (=நீங்கு, வெளிப்படு) + உழாய் >>> உழை >>> உசை = சூரியன் வெளிப்படுதல். |
உல்கு, உற்கு |
எரி |
உல், உல்கு |
உல் / உல்கு (=எரி) >>> உற்கு. ஒ.நோ: உல் (=எரி) + ஐ = உலை |
உற்கம், உற்கை |
தீ, கொள்ளி |
உல்கம், உக்கம் |
(1) உல்கு (=எரி) + அம் = உல்கம் >>> உற்கம் = எரிவது. (2) உக்கம் (=தீ) >>> உற்கம் |
உற்காரம், உத்காரம் |
நெல் தூற்றுதல் |
உறக்கரம் |
உறக்கு (=தங்கச்செய், படியச்செய்) + அரி (=நெல், காற்று, பிரித்தெடு) + அம் = உறக்கரம் >>> உற்காரம் >>> உத்காரம் = காற்றில் நெல்லைப் பிரித்தெடுத்துப் படியச்செய்தல். |
உற்காரம் |
வாந்தி |
உக்காரம் |
உக்காரம் (=வாந்தி) >>> உற்காரம் |
உற்கீதை |
பிரணவ ஒலி |
உரேங்கூதை |
ஊர் (=பரவு) + ஏங்கு (=ஒலி, மெலி) + ஊதை (=காற்று) = உரேங்கூதை >>> உறங்கீதை >>> உற்கீதை = காற்றில் பரவியுள்ள மெல்லிய ஒலி. |
உற்பத்தி |
உருவாக்கம், பிறப்பு |
உறுபத்தி |
ஊறு (=பெருகு) + பதம் (=பொருள், செயல்) + இ = உறுபத்தி >>> உற்பத்தி = பொருளைப் பெருக்கும் செயல் = உருவாக்கம், பிறப்பு |
உற்பவம் |
உருவாக்கம், பிறப்பு |
உறுமாவம் |
ஊறு (=பெருகு) + மா (=செல்வம், பொருள்) + அம் = உறுமாவம் >>> உற்பவம் = பொருளைப் பெருக்குதல் = உருவாக்கம், பிறப்பு |
உற்பவி |
பிற, பிறப்பி |
உற்பவி |
உற்பவம் (=பிறப்பு) >>> உற்பவி = பிற, பிறப்பி |
உற்பன்னம், உற்பனம் |
விரைந்து அறிதல் |
உறுவணம் |
உறு (=விரை, அறி) + அணம் = உறுவணம் >>> உற்பனம் = விரைந்து அறிதல். |
உற்பனம் |
மேலானது |
உறுவானம் |
உறு (=மிகு) + வான் (=பெருமை) + அம் = உறுவானம் >>> உற்பனம் = பெருமை மிக்கது = மேலானது |
உற்பனம் |
தோன்றியது |
உறுவணம் |
உறு (=நினை, தோன்று) + அணை (=முடி) + அம் = உறுவணம் >>> உற்பனம் = தோன்றி முடிந்தது. |
உற்பனம் |
அறிகுறி, சகுனம் |
உறுவணம் |
உறு (=நிகழ், இரு, அறி) + அணை (=உதவி) + அம் = உறுவணம் >>> உற்பனம் = நிகழ இருப்பதை அறிய உதவுவது |
உற்பாதம் |
கெட்ட சகுனம் |
உறுபாறம் |
உறு (=நிகழ், இரு, அறி) + பாறு (=கேடு) + அம் = உறுபாறம் >>> உற்பாதம் = நிகழ இருக்கும் கேட்டை அறிவிப்பது. |
உற்பாதி |
உருவாக்கு |
உற்பாதி |
உற்பத்தி (=உருவாக்கம்) >>> உற்பாதி = உருவாக்கு |
உற்பிச்சம், உற்பீசம் |
விதையிலிருந்து தோன்றுவன |
உறுவீசம் |
உறு (=நினை, தோன்று) + வீசம் (=விதை) = உறுவீசம் >>> உற்பீசம் >>> உற்பிச்சம் = விதையில் இருந்து தோன்றுவன |
உன்மத்தம், உன்மாதம் |
மயக்கம், பைத்தியம் |
உண்மற்றம் |
உள் (=மனம், அறிவு) + மறை + அம் = உண்மற்றம் >>> உன்மத்தம் = அறிவை மறைப்பது = மயக்கம். |
உன்மனி, உன்மனை |
உள் ஒளி |
உண்மணி |
உள் + மணி (=ஒளி) = உண்மணி >>> உன்மனி = உள்ளிருக்கும் ஒளி |
உன்மானம் |
எடை நிறுத்தல் |
உன்னுவாணம் |
உன்னு (=உயர், தூக்கு, அறி) + ஆணம் (=பொருள்) = உன்னுவாணம் >>> உன்மானம் = பொருளைத் தூக்கி அறியப்படுவது. |
உன்முகம் |
முகத்தை உயர்த்துதல் |
உன்னுமுகம் |
உன்னு (=உயர்த்து) + முகம் = உன்னுமுகம் >>> உன்முகம் = முகத்தை உயர்த்துதல். |
உன்னியம் |
சேர்க்கை, சொந்தம் |
ஒன்னியம் |
ஒன்னு (=பொருந்து, சேர் + இயம் = ஒன்னியம் >>> உன்னியம் = பொருந்துகை, சேர்க்கை = உறவு, சொந்தம் |
உன்னியர் |
சுற்றத்தார் |
ஒன்னியர் |
உன்னியம் (=சொந்தம்) + அர் = உன்னியர் = சொந்தக்காரர்கள் |
உனகன் |
இழிந்தவன் |
உன்னகன் |
உன்னு (=உயர், பெரு) + அகை (=நீங்கு, இல்லாகு) + அன் = உன்னகன் >>> உனகன் = உயர்வு / பெருமை இல்லாதவன் = இழிந்தவன் |
உச்~ணம் |
வெப்பம் |
உச்~ணம் |
(2) ஊழ் (=பகை) + நம் (=ஈரம்) = உச்~ணம் = ஈரத்தின் பகை = வெப்பம் |
உசா~ |
வைகறை |
உழா |
ஊழ் (=சூரியன், மலர், காலம்) + ஆ = உழா >>> உசா~ = சூரியன் மலரும் காலம் = வைகறை. |
உத்பவம் |
பிறப்பு |
உந்துவாவம் |
உந்து (=எழு, தோன்று) + ஆவி (=உயிர்) + அம் = உந்துவாவம் >>> உத்துபாவம் >>> உத்பவம் = உயிர் தோன்றுதல் |
உத்பத்தி |
பிறப்பு |
உந்துவாத்தி |
உந்து (=எழு, தோன்று) + ஆத்தம் (=உயிர்) + இ = உந்துவாத்தி >>> உத்துபாத்தி >>> உத்பத்தி = உயிர் தோன்றுதல் |
பாதரசம் |
திரவ நச்சு உலோகம் |
பாறரயம் |
(2) பாறு (=அழி, ஓடு) + அரி (=அழகு, நிறம்) + அயம் (=உலோகம்) = பாறரயம் >>> பாதரசம் = ஓடக்கூடிய அழகிய நிறமுடைய அழிவைத் தரும் உலோகம். |