வெள்ளி, 29 அக்டோபர், 2021

90. (குரவன் > குசிலி) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

குரவன், KURAVAN

பெரியோன், DIGNIFIABLE ELDER PERSON

குரமன்

கூர் (=மிகு, வளை, வணங்கு) + அமை (=பொருந்து, பெருமை) + அன் = குரமன் >>> குரவன் = பொருந்தி வணங்கும் பெருமை மிக்கவன்.

குரவன், KURAVAN

அமைச்சன், MINISTER

குறாய்மன்

கூறு (=சொல்) + ஆய் (=கருது, ஆலோசி) + மன் (=அரசன்) = குறாய்மன் >>> குரவன் = மன்னனுக்குக் கருத்து / ஆலோசனை கூறுபவன் = அமைச்சன்.

குரவன், KURAVAN

ஆசிரியன், TEACHER

குறைமன்

குறை (=சந்தேகம், நீக்கு) + மன் = குறைமன் >>> குரவன் = சந்தேகங்களை நீக்குபவன் = ஆசிரியன்

குரவை, KURAVAI

கூடியாடும் கூத்து, GROUP DANCE

குரவை

கூர் (=வளை, கூத்தாடு) + அவை (=கூட்டம்) = குரவை = கூடி ஆடும் கூத்து.

குரவை, KURAVAI

கடல், OCEAN

குரமை

கூர் (=மிகுதி) + அம் (=ஒலி, நீர்) + ஐ = குரமை >>> குரவை = ஒலிக்கின்ற நீர் மிக்கது = கடல்.

குருசி, KURUCI, குரிச்சி, KURICCI, குர்சி, KURSI

நாற்காலி, CHAIR

குறிழி

குறுகு / குறு (=குள்ளமாகு, அமர்) + இழை (=செதுக்கு, சேர், செய்) + இ = குறிழி >>> குருசி = அமர்வதற்காகச் செதுக்கிச் சேர்த்து செய்தது.

குரு, KURU

ஒளி, LIGHT

குரு

கூர்மை (=கூரிய தன்மை, நுண்மை) + உ = குரு = கூரிய தன்மை கொண்ட நுட்பப் பொருள் = ஒளி.

குரு, KURU

குற்றம், FAULT

குறை

குறை (=குற்றம்) + உ = குறு >>> குரு

குரு, KURU

பெருமை, EMINENCE, பெரியோன், NOBLE

குரு

குரை (=பெருமை) + உ = குரு = பெருமை, பெருமை உடையவன்.

குரு, KURU

ஆசிரியன், TEACHER

குறு

குறை (=சந்தேகம், நீக்கு) + உ = குறு >>> குரு = சந்தேகங்களை நீக்குபவன் = ஆசிரியன்

குரு, KURU

பருமன், LARGENESS, கனம், HEAVINESS

குரு

கூர் (=மிகு) + உ = குரு = மிகுதி, பருமன், கனம்

குரு, KURU

நெடில், LONG VOWEL

குரு

குரை (=ஒலி, பரப்பு, நீளம்) + உ = குரு = நீண்டு ஒலிப்பது = நெடில்.

குருது, KURUTHU

நெய், GHEE, வெண்ணெய், BUTTER

குறுறு

குறை (=மெலிவி, உருக்கு) + உறை (=கெட்டியாகு, உணவு) + உ = குறுறு >>> குருது = உருக்கப்படும் கெட்டியான உணவு = நெய், வெண்ணெய்

குருந்தம், KURUNTHAM, குருந்து, KURUNTHU

செவ்வொளிக் கல், CORUNDUM

குருத்தம்

குருதி (=செந்நிறம்) + அம் (=ஒளி, கல்) = குருத்தம் >>> குருந்தம் = செந்நிறத்தில் ஒளிரும் கல்.

குருமை, KURUMAI

நிறம், COLOUR

குருமை

குரு (=ஒளி) + மை = குருமை = நிறம்.

குருவிந்தம், KURUVINTHAM

செவ்வொளிக் கல், CORUNDUM

குருவீற்றம்

குரு (=செந்நிறம்) + வீறு (=கல்) + அம் (=ஒளி) = குருவீற்றம் >>> குருவித்தம் >>> குருவிந்தம் = செந்நிறத்தில் ஒளிரும் கல்.

குருள், KURULH

பெண் தலைமயிர், WOMEN’S HAIR LOCK

குறுள்

குறை (=மயிர்) + உள் (=எழுச்சி, உயரம்) = குறுள் >>> குருள் = எழுச்சியும் உயரமும் உடைய மயிர்.

குருள், KURULH

சுருள், CURL

குருள்

கூர் (=வளை, சுருங்கு) + உள் (=உட்புறம்) = குருள் = உட்புறமாக வளைந்து சுருங்கியது = சுருள்.

குரை, KURAI

பெருமை, GREATNESS, EXPANSE

குரை

கூர் (=மிகு, பெரு) + ஐ = குரை = மிகுதி, பெருமை, பரப்பு

குரை, KURAI

குதிரை, HORSE

கிறை

கிறு (=சுற்று, வட்டமடி, விரை) + ஐ = கிறை >>> குரை = விரைவாக வட்டமடிப்பது = குதிரை.

குரோசம், KUROACAM

வெகுதூரம், LONG DISTANCE

குரொயம்

கூர் (=மிகு) + ஒய் (=செல், பயணி) + அம் (=நீளம்) = குரொயம் >>> குரோசம் = மிக்க பயண நீளம்

குரோட்டம், KUROATTAM, குரோட்டா, KUROATTAA

நரி, JACKAL

குரொற்றம்

கூர் (=கூரறிவு, தந்திரம்) + ஒற்று (=தாக்கு, வீழ்த்து) + அம் (=உணவு, இரை) = குரொற்றம் >>> குரோட்டம் = தந்திரத்தால் இரையைத் தாக்கி வீழ்த்துவது = நரி

குரோடம், KUROATAM

பன்றி, HOG

குறுறம்

குறை (=தோண்டு) + உறை (=நிலம், உணவு) + அம் (=செருக்கு) = குறுறம் >>> குரோடம் = நிலத்தைத் தோண்டி உண்ணும் செருக்குடையது = பன்றி

குல், KUL

மொத்தம், SUM

கோல்

கோல் (=திரட்சி, மொத்தம்) >>> குல் = மொத்தம்

குல்மம், KULMAM, குலுமம், KULUMAM

போர்ப்படை, ARMY

கொலீவம்

கோல் (=திரட்சி, கூட்டம்) + ஈவு (=அழிவு) + அம் = கொலீவம் >>> குலுமம் >>> குல்மம் = அழிக்கும் கூட்டம் = போர்ப்படை.

குல்லகம், KULLAKAM

வறுமை, POVERTY

குல்லகம்

குலை (=அழி, இல்லாகு) + அகம் (=பொருள்) = குல்லகம் = பொருள் இல்லாமை = வறுமை.

குல்லம், KULLAM

முறம், FANNER

குல்லம்

குலை (=அசை, கலை, பிரி) + அம் (=உணவு) = குல்லம் = அசைத்துக் கலைத்து உணவைப் பிரிப்பது

குல்லரி, KULLARI

இலந்தை, JUJUBE

கொல்லாரி

கோல் (=திரட்சி, உருண்டை) + ஆர் (=உண்ணு, சிவப்பு) + இ = கொல்லாரி >>> குல்லரி = உருண்டையான சிவப்புநிற உணவு = இலந்தை.

குல்லா, KULLAA

வெளிப்படையான, OPEN

குல்லா

குலை (=அவிழ், வெளிப்படு) + ஆ = குல்லா = வெளிப்படையான

குல்லா, KULLAA

கயிறு, ROPE

கொல்லா

கோல் (=வளை, கட்டு) + ஆ = கொல்லா >>> குல்லா = வளைத்துக் கட்ட உதவுவது = கயிறு.

குல்வலி, KULVALI

இலந்தை, JUJUBE

கொல்பலி

கோல் (=திரட்சி, உருண்டை) + பலி (=எரி, உணவு) = கொல்பலி >>> குல்வலி = உருண்டையான எரிநிற உணவு = இலந்தை

குலடை, KULATAI

வேசி, UNCHASTE WOMAN

குலடை

குலவு / குல (=உறவாடு) + அடி (=பொருள்) + ஐ = குலடை = பொருளுக்காக உறவாடுபவள். 

குலத்தம், KULATHTHAM

கொள்ளு, HORSE GRAM

கிளத்தம்

கிள்ளை (=குதிரை) + அத்து (=விரும்பு, சிவப்பு) + அம் (=உணவு) = கிளத்தம் >>> குலத்தம் = குதிரை விரும்பும் சிவப்புநிற உணவு = கொள்ளு.

குலப்பன், KULAPPAN

குயவன், POTTER

கொலாம்பன்

கோல் (=திரட்டு, வளை, உண்டாக்கு) + ஆம்பி (=பானை) + அன் = கொலாம்பன் >>> குலப்பன் = திரட்டியும் வளைத்தும் பானையை உருவாக்குபவன்.

குலம், KULAM

இனம், DIVISION, கூட்டம், HERD

கோலம்

கோல் (=வகு) + அம் = கோலம் >>> குலம் = வகுத்தது = வகுப்பு, இனம், கூட்டம், பிரிவு

குலம், KULAM

மகன், SON

கோலம்

கோல் (=உண்டாக்கு, படை) + அம் = கோலம் >>> குலம் = படைக்கப்பட்டவன் = குழந்தை, மகன்

குலம், KULAM

வீடு, HOUSE

கோலம்

கோல் (=வளை, உண்டாக்கு) + அம் (=பொருந்து, தங்கு) = கோலம் >>> குலம் = தங்குவதற்காக வளைத்து உருவாக்கப்பட்டது = வீடு

குலம், KULAM

அரண்மனை, ROYAL PALACE

கோலம்

கோல் (=அரசாட்சி, வளை, உண்டாக்கு) + அம் = கோலம் >>> குலம் = அரசாட்சிக்காக வளைத்து உருவாக்கப்பட்டது = அரண்மனை.

குலம், KULAM

நன்மை, GOODNESS

கோலம்

கோல் (=உண்டாக்கு) + அம் (=இன்பம்) = கோலம் >>> குலம் = இன்பம் உண்டாக்குவது = நன்மை.

குலம், KULAM

அழகு,

கோலம்

கோல் (=உண்டாக்கு) + அம் (=ஒளி) = கோலம் >>> குலம் = ஒளி உண்டாக்குவது = அழகு.

குலம், KULAM

மலை, MOUNTAIN

கோலம்

கோல் (=வளை, திரள்) + அம் (=கல், நீளம், உயரம்) = கோலம் >>> குலம் = திரண்டு உயர்ந்த கல் = மலை.

குலம், KULAM

மூங்கில், BAMBOO

கோலம்

கோல் (=தண்டு) + அம் (=நீளம், உயரம்) = கோலம் >>> குலம் = நீண்டு உயர்ந்த தண்டினைக் கொண்டது.

குலாசா, KULAACA

விரிவான, WIDE

குலயா

குலை (=அவிழ், விரி) + ஆ = குலயா >>> குலாசா = விரிவான.

குலாம், KULAAM

அடிமை, SLAVE

குலம்

குலவு / குல (=வளை, பணி) + அம் (=கட்டளை) = குலம் >>> குலாம் = கட்டளைக்குப் பணிபவன்

குலாயம், KULAAYAM, குலாயனம், KULAAYANAM

கூண்டு, CAGE

கொலேயம்

கோல் (=கட்டு) + ஏய் (=பொருந்து, தங்கு) + அம் (=பறவை) = கொலேயம் >>> குலாயம் = பறவைகள் தங்குவதற்காகக் கட்டுவது = கூண்டு

குலாரி, KULAARI

வில்வண்டி, INDIAN COACH

கொலரி

கோல் (=வளைவு, வில்) + அரி (=வண்டி) = கொலரி >>> குலாரி = வில் வண்டி

குலால், KULAAL

நேர்த்தியான, FINE, NICE

குலால்

குலவு / குல (=வளை) + அல் (=இன்மை) = குலால் = வளைவற்ற = நேரான, நேர்த்தியான.

குலால், KULAAL

சிவப்பு, RED COLOUR

கோலம்

கோலம் (=சிவப்பு) + அல் = கொலல் >>> குலால்

குலாலன், KULAALAN

குயவன், POTTER

கொலாலன்

கோல் (=திரட்டு, வளை, உண்டாக்கு) + ஆல் (=சட்டி) + அன் = கொலாலன் >>> குலாலன் = திரட்டியும் வளைத்தும் சட்டிகளை உருவாக்குபவன்

குலிகம், KULIKAM

குங்குமம், VERMILLION

கொலுகம்

கோலம் (=சிவப்பு) + உகு (=உதிர், பொடியாக்கு) + அம் = கொலுகம் >>> குலிகம் = சிவப்புநிறப் பொடி

குலிகம், KULIKAM

இலுப்பை, MADHUCA LONGIFOLIA

குலிகம்

குலவு / குல (=மகிழ், இனி, வசப்படுத்து, குவி) + இகம் (=பூ) = குலிகம் = வசப்படுத்துகின்ற இனிப்புடைய குவிந்த மலர்.

குலிங்கம், KULINKAM

ஊர்க்குருவி, SPARROW

குளூங்கம்

குள்ளம் (=சிறுமை) + ஊங்கு (=மேல், உயரம்) + அம் (=பறவை) = குளூங்கம் >>> குலிங்கம் = உயரத்தில் பறக்கின்ற சிறிய பறவை = ஊர்க்குருவி.

குலிசம், KULICAM

வச்சிராயுதம், THUNDERBOLT WEAPON

கொலிஞ்சம்

கோல் (=திரட்சி, தண்டு) + இஞ்சை (=கொலை) + அம் = கொலிஞ்சம் >>> குலிசம் = திரட்சியுடைய கொல்வதற்கான தண்டு = வச்சிராயுதம்.

குலிசம், KULICAM

வயிரம், DIAMOND

கொலிழம்

கோலம் (=அழகு) + இழை (=செதுக்கு, அணிகலன், பதி) + அம் (=கல்) = கொலிழம் >>> குலிசம் = அணிகலன்களில் அழகுக்காக பதிக்கப்படும் செதுக்கப்பட்ட கல்.

குலிசம், KULICAM

இலுப்பை, MADHUCA LONGIFOLIA

குலுழம்

குலவு / குல (=மகிழ், இனி, வசப்படுத்து, குவி) + உழை (=மலர்) + அம் = குலுழம் >>> குலிசம் = வசப்படுத்துகின்ற இனிப்புடைய குவிந்த மலர்.

குலீனன், KULEENAN

உயர்குலத்தோன், NOBLE MAN

குலேணன்

குலம் + ஏண் (=உயர்வு) + அன் = குலேணன் >>> குலீனன் = உயர்குலத்தோன்

குலிஞ்சன், KULINCAN, குலிஞன், KULIGNAN

உயர்குலத்தோன், NOBLE MAN

குலிச்சன்

குலம் + இசை (=புகழ், பெருமை) + அன் = குலிச்சன் >>> குலிஞ்சன் = பெருமை மிக்க குலத்தினன்

குலுத்தம், KULUTHTHAM

கொள்ளு, HORSE GRAM

கிளுற்றம்

கிள்ளை (=குதிரை) + உறை (=எரி, உணவு) + அம் (=நிறம்) = கிளுற்றம் >>> குலுத்தம் = குதிரைக்கான எரிநிற உணவு = கொள்ளு.

குவம், KUVAM

அல்லி, WATER LILLY

குவம்

குவி (=இதழ்மூடு) + அம் (=ஒளி, பகல், நீர்) = குவம் = பகலில் இதழ்மூடும் நீர்மலர்.

குவலயம், KUVALAYAM

பூமி, EARTH

குவலயம்

குவி (=சூழ்) + அலை (=கடல்) + அம் = குவலயம் = கடலால் சூழப்பட்டது = பூமி

குவலயம், KUVALAYAM

குவளை, NELUMBO

குவளை

குவளை + அம் = குவளயம் >>> குவலயம்

குவளச்சி, KUVALACCI

புற்றாஞ்சோறு, WHITE ANTS COMB

குவளயி, குவெலாயி

(1) குவி (=மிகு) + அளை (=புற்று, கூடியிரு) + இ = குவளயி >>> குவளச்சி = புற்றில் மிகுதியாகக் கூடியிருப்பது = ஈசல், புற்றாஞ்சோறு. (2) குவை (=மேடு, புற்று, திரட்சி) + எலு (=கரடி) + ஆய் (=பிரித்தெடு, குத்து, மென்மை, உண்) + இ = குவெலாயி >>> குவளச்சி = கரடியானது புற்றைக் குத்திப் பிரித்தெடுக்கும் மென்மையான திரண்ட உணவு = புற்றாஞ்சோறு.

குவளை, KUVALHAI

குவளை மலர், NELUMBO

குவலை

குவி (=இதழ்மூடு) + அல் (=இரவு) + ஐ = குவலை >>> குவளை = இரவில் இதழ்களை மூடிக்கொள்வது

குவளை, KUVALHAI

பேரெண், LARGE NUMBER

குவளை

குவி (=கூடு, மிகு) + அள (=எண்ணு) + ஐ = குவளை = மிகுதியான எண்ணிக்கை

குவளை, KUVALHAI

சிறுகுழி, SMALL PIT

குவளை

குவி (=சுருங்கு, நிறை) + அளை (=ஓட்டை) = குவளை = நிறைந்து சுருங்கிய ஓட்டை = சிறுகுழி

குவளை, KUVALHAI

சிறியநீர்ப் பாத்திரம், CUP

குவாலை

குவி (=சுருங்கு, சிறிதாகு) + ஆல் (=பாத்திரம், நீர்) + ஐ = குவாலை >>> குவளை = சிறிய நீர்ப் பாத்திரம்

குவாகம், KUVAAKAM

கமுகு, ARECANUT

குவகம்

குவை (=செறிவு, திரட்சி, உருண்டை) + அகை (=எரி) + அம் (=காய், நிறம்) = குவகம் >>> குவாகம் = உருண்டையான எரிநிறக் காய்கள் செறிந்தது. 

குவாதம், KUVAATHAM

கசாயம், DECOCTION

குமாற்றம்

குமை (=கொதிக்கச்செய்) + ஆற்று (=தணி, நீக்கு, வடிகட்டு) + அம் (=நீர்) = குமாற்றம் >>> குவாதம் = கொதிக்கச்செய்து ஆற்றி வடிகட்டிய நீர்.

குவாதம், KUVAATHAM, குவாது, KUVAATHU

விதண்டாவாதம், PERVERSE TALK

கூழ்மாற்றம்

கூழ் (=கெடு, அழி) + மாற்று (=பேச்சு) + அம் (=சொல்) = கூழ்மாற்றம் >>> குவாத்தம் >>> குவாதம் = சொல்லியதை அழித்துப் பேசுதல்.

குவை, KUVAI

புடமிடும் கலம், CRUCIBLE

குமை

குமை (=உருக்கு, கலம்) >>> குவை = உருக்கும் கலம்

குழியம், KUZIYAM

கோளம், BALL

குழியம்

குழை (=வளை, திரள்) + இயம் = குழியம் = வளைந்து திரண்டது = உருண்டை

குழியம், KUZIYAM

வளைதடி, CURVED BLUDGEON

குழெழம்

குழை (=வளை, திரள்) + எழு (=தண்டு, தடி) + அம் = குழெழம் >>> குழியம் = வளைந்து திரண்ட தடி

குழு, KUZU

வஞ்சனை, FRAUD

குழை

குழை (=ஓட்டை, பொய்) + உ = குழு = பொய்யானது

குழை, KUZAI

மரம், TREE

குழை

குழை (=இலை, செறி) >>> குழை = இலைகள் செறிந்தது = மரம்.

குழை, KUZAI

காடு, JUNGLE

குழை

குழை (=மரம், செறி) >>> குழை = மரங்கள் செறிந்தது = காடு.

குள்ளம், KULHLHAM, குள்ளல், KULHLHAL

சிறுமை, SMALLNESS

கிள்ளம்

கிள்ளு (=குறை, சிறிதாக்கு) + அம் = கிள்ளம் >>> குள்ளம் = குறைவு, சிறுமை.

குள்ளம், KULHLHAM

தந்திரம், TRICK

கிள்ளம்

கிளை (=கவடு) + அம் (=சொல்) = கிள்ளம் >>> குள்ளம் = கவடுபட்ட சொல் = தந்திரம்

குள்ளம், KULHLHAM

கொடுமை, CRUELTY

கொல்லம்

கொல் (=துன்புறுத்து) + அம் (=செருக்கு) = கொல்லம் >>> குள்ளம் = செருக்கித் துன்புறுத்தல் = கொடுமை.

குளகம், KULHAKAM

குறில் பாட்டு, SONG WITH SHORT SOUNDS

குள்ளாக்கம்

குள்ளம் (=குறுமை) + ஆக்கம் (=ஒலி, பாட்டு) = குள்ளாக்கம் >>> குளகம் = குற்றொலிகளால் ஆன பாட்டு வகை.

குளகம், KULHAKAM

சக்கரை, JAGGERY

குலாக்கம்

குல (=மகிழ், இனி) + ஆக்கம் (=உணவு) = குலாக்கம் >>> குளகம் = இனிப்பான உணவு = சர்க்கரை.

குளம், KULHAM

நீர்நிலை, WATER RESERVOIR

கோலம்

கோல் (=திரட்டிவை) + அம் (=நீர்) =கோலம் >>> கொளம் >>> குளம் = நீரைத் திரட்டி வைத்திருப்பது

குளம், KULHAM

நெற்றி, FOREHEAD

கோலம்

கோல் (=வளை, குனி) + அம் (=கடவுள், கும்பிடு, பொருத்து) = கோலம் >>> கொளம் >>> குளம் = கடவுளைக் கும்பிடும்போது வளைந்து குனிந்து பொருந்தச் செய்வது = நெற்றி.

குளம், KULHAM

சக்கரை, JAGGERY

குலம்

குல (=மகிழ், இனி) + அம் (=உணவு) = குலம் >>> குளம் = இனிப்பான உணவு = சர்க்கரை.

குளம்பு, KULHAMPU

காலடி, FOOT, HOOF

குலம்பூ

குலவு / குல (=உலவு, பொருந்து) + அம் (=பொழுது) + பூ (=பூமி) = குலம்பூ >>> குளம்பு = உலவும்பொழுது பூமியில் பொருந்துவது = காலடி.

குளிகன், KULHIKAN

பாம்பு, SERPENT

குளிகன்

குளி (=கொத்து) + இகு (=கொல்) + அன் = குளிகன் = கொத்திக் கொல்பவன் = பாம்பு

குளிகை, KULHIKAI

மருந்துண்டை, MEDICAL PILL

கொலிகம்

குலை (=நோய், திரள்) + இகு (=கொடு, அழி) + ஐ = குலிகை >>> குளிகை = நோயை அழிப்பதற்காகத் திரட்டிக் கொடுக்கப்படுவது = மருந்துண்டை.

குளிசம், KULHICAM

காப்பு, AMULET

குளிழம்

குளி (=மறை, கா) + இழை (=கட்டு, அணி) + அம் = குளிழம் >>> குளிசம் = காப்பதற்காகக் கட்டும் அணி

குளியம், KULHIYAM

மருந்துண்டை, MEDICAL PILL

குலீயம்

குலை (=நோய், திரள்) + ஈ (=கொடு, அழி) + அம் = குலீயம் >>> குளியம் = நோயை அழிப்பதற்காகத் திரட்டிக் கொடுக்கப்படுவது = மருந்துண்டை.

குளிர், KULHIR

மழு, சூலம், கத்தி, அரிவாள், WEAPON

குளீர்

குளி (=குத்து) + ஈர் (=இழு, அறு, கொல்) = குளீர் >>> குளிர் = குத்தி இழுத்து அறுத்துக் கொல்வது.

குளிர், KULHIR, குளிரம், KULHIRAM

நண்டு, CRAB

கொளீர்

கொள் (=கைகளால் பற்று) + ஈர் (=அறு, வெட்டு) = கொளீர் >>> குளிர் = கைகளால் பற்றி வெட்டுவது

குளுந்தை, KULHUNTHAI

கத்தூரி, MUSK

குளுந்தாய்

குளி (=மறை) + உந்தி (=வயிறு) + ஆய் (=வாசனை) = குளுந்தாய் >>> குளுந்தை = வயிற்றில் மறைந்திருக்கும் வாசனைப் பொருள் = கத்தூரி

குற்குலு, KURHKULU

குங்கிலியம், SHOREA

குங்குலு

குங்குலு >>> குக்குலு >>> குற்குலு

குற்சிதம், KURHCITHAM, குற்சை, KURHCAI

இழிவு, MEANNESS

குச்சிதம்

குச்சிதம் >>> குற்சிதம், குற்சை

குற்பகம், KURHPAKAM

நாணல் புல், LARGE GRASS

குறைவாங்கம்

குறை (=புல்) + வாங்கு (=வளை) + அம் (=நீளம்) = குறைவாங்கம் >>> குறைபகம் >>> குற்பகம் = நீண்டு வளைந்திருக்கும் புல் வகை = நாணல்

குறட்டை, KURHATTAI

உறக்க ஒலி, SNORING

கொராட்டை

கொர் + ஆடு (=சொல், ஒலி) + ஐ = கொராட்டை >>> குறட்டை = கொர் கொர் என்று ஒலித்தல்

குறடா, KURHATAA

சவுக்கு, WHIP

குறட்டா

குறு (=விரை, அடி) + அட்டை (=தண்டு) + ஆ = குறட்டா >>> குறடா = விரைவதற்காக அடிக்கப்படும் தண்டு = சவுக்கு

குன்மம், KUNMAM

நாளவீக்கம், BULGING OF GLANDS

கொல்மம்

கோல் (=தண்டு, நாளம், திரள், வீங்கு) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = நாள வீக்கம்

குன்மம், KUNMAM

போர்ப்படை, ARMY

கொல்மம்

கோல் (=ஆயுதம், திரள், கூட்டம்) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = ஆயுதக் கூட்டம்.

குன்மம், KUNMAM

மூங்கில் புதர், BUSH

கொல்மம்

கோல் (=பிரம்பு, மூங்கில், திரள்) + மம் = கொல்மம் >>> குல்மம் >>> குன்மம் = மூங்கில் / பிரம்புத் திரள்

குன்னம், KUNNAM

இழிவு, MEANNESS

குன்றம்

குன்று (=தாழ், இழி) + அம் = குன்றம் >>> குன்னம் = தாழ்வு, இழிவு

குன்னம், KUNNAM

இழிசொல், SLANDER

குன்றம்

குன்று (=தாழ், இழி) + அம் (=சொல்) = குன்றம் >>> குன்னம் = இழிசொல்.

குனட்டை, KUNATTAI, குனச்~டை, KUNASHTAI

குறும்பு, MISCHIEF

குனட்டை

குனி (=ஆடு, விளையாடு) + அடு (=வருத்து) + ஐ = குனட்டை = விளையாட்டாக வருத்துதல்.

குனா, KUNAA

குற்றம், CRIME

குன்றா

குன்று (=குறை, குற்றம்) + ஆ = குன்றா >>> குன்னா >>> குனா = குற்றம்.

குசிலி, KUCILI, குசி^லி, KUJILI

அந்திநேரம், EVENING

குழெலி

குழை (=வாடு, குறை, வானம்) + எல் (=ஒளி) + இ = குழெலி >>> குசெலி >>> குசிலி >>> குசி^லி = ஒளி குறைந்த வானம் = அந்திநேரம்.

அல்லி, ALLI

அல்லி மலர், WATER LILLY

அல்லீ

அல் (=இரவு) + ஈ (=தேனீ, திற, வெளிப்படுத்து) = அல்லீ >>> அல்லி = தேனீக்களை இரவில் வெளிப்படுத்துவது. 

கொள்ளு, KOLHLHU

குதிரைத் தானியம், HORSE GRAM

கிள்ளுய்

கிள்ளை (=குதிரை) + உய் (=உண், கொடு) = கிள்ளுய் >>> குள்ளு >>> கொள்ளு = குதிரைக்குக் கொடுக்கும் உணவு.