புதன், 3 நவம்பர், 2021

91. (கூ > கேனம்) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

கூ, KOO

பூமி, EARTH

கீழ்

கீழ் (=அடி, நிலம்) >>> கீ >>> கூ = பூமி.

கூகம், KOOKAM

இரகசியம், SECRET

குங்கம்

குங்கு (=குன்று, மறை) + அம் (=சொல்) = குங்கம் >>> கூகம் = மறைக்கப்பட்ட சொல் = இரகசியம்

கூகம், KOOKAM

இரவு, NIGHT

குங்கம்

குங்கு (=குன்று, மறை) + அம் (=ஒளி, பொழுது) = குங்கம் >>> கூகம் = ஒளி மறைந்த பொழுது = இரவு

கூகனம், KOOKANAM

இரகசியம், SECRET, குறிப்பு, HINT

குங்கணம்

குங்கு (=குன்று, மறை) + அணை (=பொருந்து) + அம் (=சொல்) = குங்கணம் >>> கூகனம் = மறைவு பொருந்திய சொல்.

கூகாகம், KOOKAAKAM

கமுகு, ARECA NUT

கோகங்கம்

கோ (=சேர், திரள்) + கங்கு (=தீப்பொறி) + அம் (=நிறம், உணவு, காய்) = கோகங்கம் >>> கூகாகம் = தீப்பொறி நிறத்தில் சேர்ந்து திரண்டிருக்கும் காய் = கமுகு, பாக்கு. 

கூகம், KOOKAM, கூகை, KOOKAI

ஆந்தை, OWL

குங்கம்

குங்கு (=குன்று) + அம் (=ஒளி, பொழுது, ஒலி, செருக்கு, பறவை) = குங்கம் >>> கூகம் = ஒளி குன்றிய பொழுதில் ஒலிக்கும் செருக்குடைய பறவை = ஆந்தை.

கூச்சல், KOOCCAL, கூசல், KOOCAL

பேரொலி, TUMULT

கூசால்

கூ (=கூவு, ஒலி) + சால் (=நிறை, மிகு) = கூசால் >>> கூச்சல் = மிகுதியான ஒலி.

கூச்சல், KOOCCAL

வாந்திபேதி, CHOLERA

கூழ்செல்

கூழ் (=குழைவு, உணவு, கெடு) + செல் (=வெளிப்படு) = கூழ்செல் >>> கூச்சல் = உணவு கெட்டுக் குழைந்து வெளிப்படுதல் = வாந்திபேதி

கூச்சு, KOOCCU

கூர்முனை, SHARP EDGE

கோயு

கொய் (=அறு) + உ = கோயு >>> கூசு >>> கூச்சு = அறுப்பது = கூரிய முனை.

கூசா, KOOCAA

பாத்திரம், GOGLET

கோயா

கோய் (=பாத்திரம்) + ஆ = கோயா >>> கூசா

கூட்டம், KOOTTAM, கூடம், KOOTAM

உச்சி, SUMMIT, மேலிடம், TOP

கூட்டம்

கூடு (=குவி, முடி) + அம் = கூட்டம் = குவிந்த முடிவு = உச்சி, மேலிடம்

கூடகம், KOOTAKAM

வஞ்சகம், FRAUD

கூடகம்

குடை (=மூழ்கு, மறை) + அகம் (=மனம், எண்ணம்) = கூடகம் = மறைப்புடைய எண்ணம் = வஞ்சகம்.

கூடகாரம், KOOTAKAM

மேல்மாடிவீடு, TOP FLOOR ROOM

கூடகாரம்

கூடம் (=உச்சி) + அகம் (=வீடு) + ஆர் (=தங்கு, கட்டு) + அம் = கூடகாரம் = வீட்டின் உச்சியில் தங்குவதற்காகக் கட்டியது.

கூடம், KOOTAM

வீடு, ABODE

கூடு

கூடு (=தங்குமிடம்) + அம் = கூடம்

கூடம், KOOTAM

தாழ்வாரம், VERANDAH

கூறம்

குறை (=தாழ், மறை) + அம் (=நீளம்) = கூறம் >>> கூடம் = தாழ்ந்து நீண்ட மறைப்பு = தாழ்வாரம்

கூடம், KOOTAM

யானைக்கூடம், ELEPHANT STALL

கீடம்

கிடை (=விலங்குகள் தங்குமிடம்) + அம் (=செருக்கு) = கீடம் >>> கூடம் = செருக்குடைய விலங்குகள் தங்குமிடம்

கூடம், KOOTAM

கோபுரம், KOAPURAM

கூடம்

கூடு (=குவி, அமை) + அம் (=நீளம், உயரம்) = கூடம் = உயரமாகக் குவித்து அமைக்கப்பட்டது = கோபுரம்.

கூடம், KOOTAM

சம்மட்டி, HAMMER

கிட்டம்

கிட்டு (=அடித்து இறுக்கு, இரும்பு) + அம் = கிட்டம் >>> கீடம் >>> கூடம் = அடித்து இறுக்கும் இரும்பு = சுத்தியல்.

கூடம், KOOTAM

திரள், CROWD

கூட்டம்

கூட்டம் (=திரள்) >>> கூடம்

கூடம், KOOTAM

மறைப்பு, SECRECY, வஞ்சனை, FRAUD

கூடம்

குடை (=மூழ்கு, மறை) + அம் = கூடம் = மறைப்பு, வஞ்சனை

கூடம், KOOTAM

நஞ்சு, POISON

கூறம்

குறை (=அழி) + அம் (=உணவு) = கூறம் >>> கூடம் = அழிக்கும் உணவு = நஞ்சு

கூடத்தன், KOOTATHTHAN, கூடச்`தன், KOOTASTHAN

குலமுதல், FOUNDER OF FAMILY

குடாத்தன்

குடி (=குலம்) + ஆதி (=முதல்) + அன் = குடாத்தன் >>> கூடத்தன் >>> கூடச்`தன் = குலமுதல்.

கூடத்தன், KOOTATHTHAN, கூடச்`தன், KOOTASTHAN

கடவுள், GOD

குடாத்தன்

குடி (=வீடு, உலகம்) + ஆதி (=முதல்) + அன் = குடாத்தன் >>> கூடத்தன் >>> கூடச்`தன் = உலகின் முதலானவன்.

கூடாக்கு, KOOTAAKKU, குடாக்கு, KUTAAKKU

புகையிலையுண்டை, TOBACCO BALL

குடாக்கு

குடி (=புகைபிடி) + ஆக்கம் (=இலை, திரட்சி, உருண்டை) + உ = குடாக்கு >>> கூடாக்கு = புகைபிடிக்கும் இலை உருண்டை

கூடாரம், KOOTAARAM

படவீடு, TENT

கூடாரம்

கூடு (=வீடு, குவி) + ஆர் (=தண்டு, பொருத்து, தங்கு, கட்டு) + அம் (=நீளம், உயரம்) = கூடாரம் = உயரமான தண்டுகளைப் பொருத்தித் தங்குவதற்காகக் கட்டிய குவிந்த வீடு.

கூடாரம், KOOTAARAM

வண்டிவில், HOOD OF CART

கூடாரம்

கூடம் (=மேலிடம், மறைப்பு) + ஆரம் (=வட்டம்) = கூடாரம் = மேலிடத்தை மறைக்கும் வட்டம்

கூடாரம், KOOTAARAM

மேல்மாடிவீடு, TOP FLOOR ROOM

கூடாரம்

கூடம் (=மேலிடம்) + ஆர் (=தங்கு, கட்டு) + அம் = கூடாரம் = தங்குவதற்காக மேலிடத்தில் கட்டியது.

கூடிலி, KOOTILI

பச்சைமாமிசம் உண்போன், RAW FLESH EATER

கூறிளி

குறை (=மாமிசம், உண்ணு) + இளமை (=பசுமை) + இ = கூறிளி >>> கூடிலி = பச்சை மாமிசத்தை உண்பவன்

கூத்து, KOOTHTHU

நடனம், DANCE

கூத்து

குதி (=துள்ளு, ஆடு) + உ = கூத்து = துள்ளி ஆடுதல்

கூதறை, KOOTHARHAI

இழிவு, MEANNESS

கூதறை

குதி (=உயர்) + அறு (=இல்லாகு) + ஐ = கூதறை = உயர்வு இல்லாதது = இழிவு.

கூதறை, KOOTHARHAI

உறுப்பறை, MUTILATION

கூறறை

கூறு (=உறுப்பு) + அறு (=வெட்டு) + ஐ = கூறறை >>> கூதறை = உறுப்பை வெட்டுதல்

கூதனம், KOOTHANAM

திட்டு, SLANDER

கூதணம்

குதி (=உயர்) + அணை (=அழி) + அம் (=சொல்) = கூதணம் >>> கூதனம் = உயர்வை அழிக்கும் சொல் = இழிசொல்.

கூதி, KOOTHI

பெண்குறி, FEMALE GENITAL ORGAN

கூறீ

குறை (=ஓட்டை) + ஈ (=பிறப்பி) = கூறீ >>> கூதி = பிறப்புக்கான ஓட்டை = பெண் குறி.

கூந்தல், KOONTHAL

கண், EYE

கூற்றல்

குறி (=இலக்கு, பார்) + அல் (=வெயில், ஒளி) = கூற்றல் >>> கூத்தல் >>> கூந்தல் = ஒளியால் இலக்கைப் பார்ப்பது = கண்

கூந்தல், KOONTHAL

மயில் தோகை, PEACOCK’S TAIL

கூற்றள்

குறி (=கண்) + அள் (=செறிவு, கூட்டம்) = கூற்றள் >>> கூத்தல் >>> கூந்தல் = கண்களின் கூட்டம் = மயில் தோகை

கூந்தல், KOONTHAL

குதிரை, HORSE

குந்தம்

குந்தம் (=குதிரை) + அல் = கூந்தல்

கூந்தல், KOONTHAL

ஓலை, HANGING LONG LEAVES

கூத்தள்

குதி (=உயர், கூத்தாடு) + அள் (=தண்டு, மரம், செறி) = கூத்தள் >>> கூந்தல் = மரத்தின் உயரத்தில் செறிந்து கூத்தாடுவது.

கூந்தாலம், KOONTHAALAM, கூந்தாலி, KOONTHAALI

கடப்பாரை, CROW BAR

கூத்தளம்

குத்து (=தோண்டு) + அள் (=கூர்மை) + அம் (=நீளம்) = கூத்தளம் >>> கூந்தாலம் = தோண்டுகின்ற கூர்மையுடைய நீளமான பொருள் = கடப்பாரை.

கூந்து,

ஆண்மயிர், MEN’S HAIR, குதிரைப் பிடரி மயிர், HORSE MANE

கூற்று

குறை (=வெட்டு, மயிர்) + உ = கூற்று >>> கூத்து >>> கூந்து = வெட்டப்படும் மயிர் = ஆண்மயிர், குதிரைப் பிடரிமயிர்

கூபகம், KOOPAKAM

இடுப்பெலும்புக் குழி, PELVIS

குழும்பகம்

குழும்பு (=குழி, திரள், கூடு) + அகம் (=நடு, இடுப்பு) = குழும்பகம் >>> குயுப்பகம் >>> கூபகம் = இடுப்புக்கூட்டின் குழி

கூபம், KOOPAM, கூவம், KOOVAM

கிணறு, WELL

குழும்பம்

குழும்பு (=குழி) + அம் (=நீர்) = குழும்பம் >>> குயுப்பம் >>> கூபம் = நீர்க்குழி = கிணறு.

கூபரம், KOOPARAM

முழங்கை, ELBOW

கூபரம்

கூப்பு (=கும்பிடு) + அரை (=நடு) + அம் (=பொழுது, வளைவு) = கூபரம் + கும்பிடும்போது வளையும் நடுப்பகுதி.

கூர்ச்சம், KOORCCAM

தருப்பைப் புல், DHARBA GRASS

கூறிழம்

குறை (=புல்) + இழை (=பின்னு) + அம் (=உட்கார்) = கூறிழம் >>> கூரிசம் >>> கூர்ச்சம் = உட்கார்வதற்காகப் பின்னும் புல்

கூர்ச்சேகரம், KOORCCAEKARAM

தென்னை, COCONUT TREE

கூர்ச்சிகாரம்

கூர் (=குடுமி) + சிகை (=உச்சி) + ஆர் (=மரம், நிறை) + அம் (=நீர், காய், ஒப்பு) = கூர்ச்சிகாரம் >>> கூர்ச்சேகரம் = நீர் நிறைந்த குடுமி போன்ற காய்களை உச்சியில் கொண்ட மரம்.

கூர்ப்பரம், KOORPPARAM

முழங்கை, ELBOW

கூர்ப்பரம்

கூர் (=வளை) + பை (=கை) + அரை (=நடு) + அம் (=கும்பிடு, பொழுது) = கூர்ப்பரம் = கும்பிடும்போது வளையும் கையின் நடுப்பகுதி = முழங்கை.

கூர்மம், KOORMAM

ஆமை, TORTOISE

கூறுமம்

குறை (=ஒடுக்கு, உடல், உறுப்பு, துன்பம்) + உமி (=தோல், ஓடு) + அம் (=பொழுது) = கூறுமம் >>> கூருமம் >>> கூர்மம் = துன்பத்தின்போது உடலுறுப்புக்களை ஓட்டுக்குள் ஒடுக்குவது

கூரம், KOORAM

கொடுமை, CRUELTY

கூரம்

கூர் (=குத்து, தாக்கு) + அம் (=செருக்கு) = கூரம் = செருக்கித் தாக்குதல் = கொடுமை.

கூரம், KOORAM

பொறாமை, ENVY

கூரம்

கூர் (=உவர், வெறு) + அம் = கூரம் = வெறுப்பு, பொறாமை

கூரம், KOORAM

யாழ், LUTE

கூரம்

கூர் (=நரம்பு) + அம் (=நீளம், இனிமை, ஒலி) = கூரம் = இனிமையாக ஒலிக்கும் நீண்ட நரம்புகளைக் கொண்டது

கூரல், KOORAL

கூந்தல், WOMEN’S HAIR LOCK

குரல்

குரல் (=பெண் தலைமயிர்) >>> கூரல்

கூரன், KOORAN

நாய், DOG

கூரன்

குரை + அன் = கூரன் = குரைப்பவன் = நாய்

கூலம், KOOLAM

தானியம், FOOD GRAIN

கீளம்

கீள் (=துண்டு) + அம் (=உணவு) = கீளம் >>> கூலம் = உணவுத் துண்டு = தானியம்.

கூலம், KOOLAM

கடைத்தெரு, BAZAAR

கோளம்

கொள் (=வாங்கு) + அம் (=உணவு, பொருள், அமை) = கோளம் >>> கூலம் = உணவு / பொருள் வாங்க அமைக்கப்பட்டது

கூலம், KOOLAM

இனிப்புணவு, CONFECTIONERY

கூளம்

குளுமை (=இனிமை) + அம் (=உணவு) = கூளம் >>> கூலம் = இனிப்பான உணவு

கூலம், KOOLAM

நீர்க்கரை, BANK

கோலம்

கோல் (=வளை, சூழ்) + அம் (=நீர்) = கோலம் >>> கூலம் = நீரை வளைத்துச் சூழ்ந்திருப்பது = நீர்க்கரை

கூலம், KOOLAM

எல்லை, RIDGE

கோலம்

கோல் (=பிரி) + அம் = கோலம் >>> கூலம் = பிரிப்பது

கூலம், KOOLAM

வரையறை, RULES

கோலம்

கோல் (=வகு, வரையறு) + அம் = கோலம் >>> கூலம் = வரையறை.

கூலம், KOOLAM

வால், TAIL

கூலம்

குலை (=அசை, கயிறு) + அம் (=வளைவு, ஒப்பு) = கூலம் =  அசைகின்ற வளைவான கயிறு போன்றது = வால்.

கூலம், KOOLAM

குரங்கு

கீளம்

கிளை (=மரக்கிளை, கூட்டம்) + அம் (=அமர்) = கீளம் >>> கூலம் = மரக்கிளைகளில் கூட்டமாக அமர்ந்திருப்பது.

கூலம், KOOLAM

பசு, COW

கீளம்

கிளை (=பெருக்கு, கூட்டம்) + அம் (=பால்) = கீளம் >>> கூலம் = பாலைப் பெருக்கும் கூட்டம் = பசு

கூலம், KOOLAM

மான், ELK

கீளம்

கிளை (=மரக்கிளை, கவடு, கொம்பு) + அம் (=ஒப்பு) = கீளம் >>> கூலம் = மரக்கிளை போன்ற கவடுபட்ட கொம்புடையது.

கூலி, KOOLI

ஊதியம், WAGES

கோலீ

கோல் (=வேலை) + ஈ (=நேராகு, சமமாகு, கொடு) = கோலீ >>> கூலி = வேலைக்குச் சமமாகக் கொடுக்கப்படுவது.

கூவல், KOOVAL

கிணறு, WELL

குழும்பால்

குழும்பு (=குழி) + ஆல் (=நீர்) = குழும்பால் >>> குயுப்பால் >>> கூவல் = நீர்க்குழி = கிணறு.

கூவிரம், KOOVIRAM

தேர்ப்பொகுட்டு, LOTUS OF CHARIOT

கூம்புறம்

கூம்பு + உறு (=கொள், பற்று) + அம் = கூம்புறம் >>> கூவுரம் >>> கூவிரம் = பற்றுவதற்கான கூம்பு

கூவிரம், KOOVIRAM, கூவிரி, KOOVIRI

தேர், CHARIOT

கோவூரம்

கோ (=அரசன், பூட்டு) + ஊர் (=பயணி) + அம் = கோவூரம் >>> கூவிரம் = அரசன் பூட்டிப் பயணிப்பது = தேர்.

கூவிரம், KOOVIRAM

கொடி, FLAG

கொம்பிரம்

கொம்பு (=தண்டு, உச்சி) + இரி (=பரவு, பற) + அம் = கொம்பிரம் >>> கூவிரம் = தண்டின் உச்சியில் பறப்பது

கூவிரம், KOOVIRAM

தலையலங்காரம், HEAD DECORATION

கோவிறம்

கோ (=புனை, அலங்கரி) + இறை (=தலை) + அம் = கோவிறம் >>> கூவிரம் = தலை அலங்காரம்

கூழ், KOOZ

கஞ்சி,`GRUEL, பழச்சதை, SAP

கூழ்

ஊழ் (=பதனழி, குழை, உணவு) >>> கூழ் = குழைந்த உணவு = கஞ்சி, பழச்சதை

கூழ், KOOZ

பயிர், CROP, உணவு, FOOD

கூழ்

ஊழ் (=பயன், விளைச்சல்) >>> கூழ் = பயிர், உணவு.

கூழ், KOOZ

பொன், GOLD

கூழ்

ஊழ் (=மிகு, வெயில், ஒளி, சிந்து, முற்று) >>> கூழ் = மிகுதியான ஒளியைச் சிந்தும் முற்றிய பொருள்.

கூள், KOOLH

திரள், ASSEMBLE

கோல்

கோல் (=திரள்) >>> கூள்

கூளி, KOOLHI

சிறுமை, DWARFNESS

கிள்ளி

கிள்ளு (=குறை, சிறிதாக்கு) + இ = கிள்ளி >>> கூளி = சிறுமை

கூளி, KOOLHI

குற்றம், CRIME

கோலீ, கோளீ

(1) கோல் (=நேர்மை, அறம்) + ஈ (=அழிவு) = கோலீ >>> கூளி = அறம் அல்லாதது = குற்றம். (2) கோள் (=தீமை) + ஈ (=தா) = கோளீ >>> கூளி = தீமை தருதல் = குற்றம்.

கூளி, KOOLHI

விலைமகள், PROSTITUTE

கோளீ

கோள் (=பொருள்பெறுகை, இன்பம்) + ஈ (=தா) = கோளீ >>> கூளி = பொருளைப் பெற்றுக்கொண்டு இன்பம் தருபவள்

கூனி, KOONI

கொலை, MURDER

கொயூனி

கொய் (=அறு) + ஊன் (=உடல்) + ஈ (=அழிவு) = கொயூனி >>> கோனி >>> கூனி = உடலை அறுத்து அழித்தல் = கொலை.

கூச்~மாண்டம், KOOSHMAANTAM

பூசணி, PUMPKIN

கோழ்மண்டம்

கோழ் (=பெருமை, பசுமை) + மண்டை (=தலை) + அம் (=ஒப்பு, காய்) = கோழ்மண்டம் >>> கூச்~மாண்டம் = தலையைப் போலப் பெருத்த பசுமையான காய்.

கெச்சம், KECCAM

கழற்சிக்காய், MOLUCCA BEANS

காசு

காசு (=சூதாடுகருவி) + அம் (=காய்) = கச்சம் >>> கெச்சம் = சூதாடு கருவியான காய் = கழற்சிக்காய்

கெச்சிதம், KECCITAM

பேரொலி, TUMULT

கய்யூதம்

கயம் (=பெருமை) + ஊது (=ஒலி) + அம் = கய்யூதம் >>> கெச்சிதம் = பேரொலி

கெச்சிதம், KECCITAM

கம்பீரம், MAJESTIC AIR

கய்யுதம்

காயம் (=உடல், வலிமை) + உதி (=தோன்று) + அம் = கய்யுதம் >>> கெச்சிதம் = உடலின் வலுவான தோற்றம் = கம்பீரம்

கெச்சிதம், KECCITAM

உடல்நலம், HEALTH

கய்யிதம்

காயம் (=உடல்) + இதம் (=நன்மை, நலம்) = கய்யிதம் >>> கெச்சிதம் = உடல் நலம்.

கெட்டணை, KETTANHAI

இறுக்குதல், RAMMING

கட்டணம்

கட்டு (=இறுக்கு) + அணம் = கட்டணம் >>> கெட்டணம் >>> கெட்டணை = இறுக்குதல்.

கெட்டம், KETTAM, கட்டம், KATTAM

தாடை, CHIN

கட்டம்

கடி (=பற்களை அழுத்தி வடுப்படுத்து) + அம் = கட்டம் >>> கெட்டம் = பற்களை அழுத்தி வடுப்படுத்தச் செய்வது = தாடை

கெட்டம், KETTAM

தாடி, BEARD

கட்டை

கட்டை (=தாடி) + அம் = கட்டம் >>> கெட்டம்

கெடி, KETI, கடி, KATI

பயண விலங்குகளை மாற்றும் இடம், TRAVEL RELAY STAGES

கெடி

கெடு (=சோர், மாற்று, எல்லை) + இ = கெடி >>> கடி = சோர்வினை மாற்றும் எல்லை.

கெடிலம், KETILAM

சந்து, LANE

கடிளம்

கடம் (=வழி, பாதை) + இளை (=மெலி, சுருங்கு) + அம் = கடிளம் >>> கெடிலம் = சுருக்கமான பாதை

கெடிலம், KETILAM

குகை, DEN

கடிலம்

கடை (=குடை) + இல் (=வீடு) + அம் = கடிலம் >>> கெடிலம் = குடையப்பட்ட வீடு = குகை

கெடிலம், KETILAM

பெரும்பள்ளம், DEEP PLACE

கடிலம்

கடை (=குடை, தோண்டு) + இல் (=இடம்) + அம் (=நீளம், ஆழம்) = கடிலம் >>> கெடிலம் = ஆழமாகத் தோண்டிய இடம்.

கெண்டிகை, KENTIKAI, கெண்டி, KENTI

கமண்டலம், ASCETIC’S PITCHER

கட்டிகை

கடி (=பூசை, கலம்) + இகு (=தாழ்த்து, தொங்கவிடு) + ஐ = கட்டிகை >>> கெண்டிகை = தாழ்த்தித் தொங்கவிடப்படும் பூசிக்கப்பட்ட கலம் = துறவிகளின் கமண்டலம்.

கெண்டிகை, KENTIKAI, கெண்டி, KENTI

ஊற்றுகலம், POT WITH SPOUT

கட்டிகை

கடி (=கலம்) + இகு (=ஊற்று) + ஐ = கட்டிகை >>> கெண்டிகை = ஊற்றுவதற்கான கலம்.

கெண்டை, KENTAI

மீன், FISH

கண்டை

கண் (=உறுப்பு, உடல்) + தை (=அலங்கரி, பொருந்து, ஒப்பு) = கண்டை >>> கெண்டை = அலங்கரித்த கண்களைப் போன்ற உடலைக் கொண்டது = மீன்.

கெண்டை, KENTAI

பரிகாசம், MOCKERY

கெட்டாய்

கெடு (=தாழ்த்து) + ஆய் (=கொண்டாடு, சிரி) = கெட்டாய் >>> கெண்டை = தாழ்த்திச் சிரித்தல்.

கெணனை, KENHANAI

கணக்கீடு, COMPUTATION

கணனை

கணனை (=கணக்கீடு) >>> கெணனை

கெத்து, KETHTHU

வஞ்சனை, FRAUD

கந்து

கந்து (=மறைப்பு) >>> கத்து >>> கெத்து = மறைப்பு, வஞ்சனை

கெத்து, KETHTHU

கம்பீரம், MAJESTIC AIR

கழுத்து

காழ் (=வலிமை) + உதி (=தோன்று) + உ = கழுத்து >>> கயுந்து >>> கத்து >>> கெத்து = வலுவான தோற்றம், கம்பீரம்

கெதாயு, KETHAAYU

ஆயுள் முடிந்தவன், LIFE EXTINCT PERSON

கதயு

கதம் (=முடிவு) + ஐயம் (=காலம்) + உ = கதயு >>> கெதாயு = காலம் முடிந்தவன்

கெபி, KEPI, கெவி, KEVI

பள்ளம், PIT

கவை

கவை (=குழி, பள்ளம்) + இ = கவி >>> கெவி >>> கெபி

கெபி, KEPI, கெவி, KEVI

குகை, DEN

கப்பு

கப்பு (=பிளவு, ஓட்டை) + இ = கப்பி >>> கெபி >>> கெவி = பிளவு, ஓட்டை, குகை

கெமி, KEMI

புணர், COPULATE

கவை

கவை (=அணை, புணர்) + இ = கவி >>> கெமி

கெவுனி, KEVUNI, கவுனி, KAVUNI

கோட்டைத் தலைவாசல், FORT’S MAIN GATE

கவிணி

கவை (=கோட்டை, வழி) + இணை (=எல்லை, கட்டு) + இ = கவிணி >>> கவுனி >>> கெவுனி = கோட்டையின் எல்லையில் கட்டப்பட்ட வழி = கோட்டையின் தலைவாசல்.

கெழு, KEZU

ஒளி, LIGHT, நிறம், COLOUR

கேழ்

கேழ் (=நிறம், ஒளி) + உ = கெழு = நிறம், ஒளி

கெளிதம், KELHITHAM, கேளிதம், KAELHITHAM

பெருங்கல், LARGE STONE

கலிறம்

கல் + இறை (=உயரம், பெருமை) + அம் = கலிறம் >>> கெளிதம் = உயர்ந்த பெரிய கல்.

கேகம், KAEKAM

வீடு, ABODE

காகம்

கா (=பாதுகா) + கம் (=மூடு, மறை) = காகம் >>> கேகம் = பாதுகாக்கின்ற மறைப்புடையது = வீடு.

கேகலன், KAEKALAN

கழைக்கூத்தாடி, POLE DANCER

காழ்காலன்

காழ் (=கயிறு, கட்டு) + கால் (=தண்டு, நுனி, நடை) + அன் = காழ்காலன் >>> காகலன் >>> கேகலன் = தண்டின் நுனியில் கட்டிய கயிற்றில் நடப்பவன்

கேசரம், KAECARAM

பூந்தாது, POLLEN

கேழெரம்

கெழுமு / கெழு (=பொருந்து) + எரு (=பொடி) + அம் (=தேன்) = கேழெரம் >>> கேசெரம் >>> கேசரம் = தேன் பொருந்திய பொடி

கேசரம், KAECARAM

தேனீ, BEE

கேழாரம்

கெழுமு / கெழு (=பொருந்து) + ஆர் (=மலர், ஒலி, உண்) + அம் (=தேன், பறவை) = கேழாரம் >>> கேசரம் = மலரில் பொருந்தி ஒலித்தவாறே தேனுண்ணும் பறவை = தேனீ, வண்டு.

கேசரர், KAECARAR

பறக்கும் மனிதர், FLYING HUMAN

காசாரர்

காசம் (=ஆகாயம்) + ஆர் (=பரவு, பற) + அர் = காசாரர் >>> கேசரர் = ஆகாயத்தில் பறப்பவர்

கேசரி, KAECARI

ஆண் சிங்கம், LION

கேசேறி

கேசம் (=தலைமயிர்) + ஏறு (=கொலை, மிகுதி, இடி, குரல், விலங்கு) + இ = கேசேறி >>> கேசரி = இடிக் குரலும் மிக்க தலைமயிரும் கொண்ட கொல்லும் விலங்கு = ஆண் சிங்கம்.

கேசவம், KAECAVAM

பெண் தேனீ, FEMALE BEE

கேழவம்

கெழுமு / கெழு (=அடை, திரட்டு) + அவ்வை (=பெண்) + அம் (=தேன், பறவை) = கேழவம் >>> கேசவம் = தேனை அடைந்து திரட்டும் பெண் பறவை = பெண் தேனீ.

கேசாரி, KAECAARI

குதிரை மயிர், HORSE MANE

கேசரி

கேசம் (=மயிர்) + அரி (=குதிரை) = கேசரி >>> கேசாரி = குதிரை மயிர்.

கேடகம், KAETAKAM

கிடுகு, SHIELD

கேடெஃகம்

(2) கெடு (=தடு) + எஃகு (=இரும்பு, ஆயுதம்) + அம் (=போர், வளைவு) = கேடெஃகம் >>> கேடகம் = போரில் ஆயுதங்களைத் தடுக்கும் வளைவான இரும்பு. 

கேடகம், KAETAKAM

மலைசூழ் ஊர், HILL SURROUNDED VILLAGE

கேடகம்

கெடு (=தடு, மறை) + அகம் (=மலை, நடு, ஊர்) = கேடகம் = மலைகளால் மறைக்கப்பட்டு நடுவிலுள்ள ஊர்.

கேடகம், KAETAKAM

பாசறை, CAMP

கேடகம்

கெடு (=தடு, மறை, பிரி) + அகம் (=வீடு) = கேடகம் = தடுத்து மறைத்துப் பிரிக்கப்படும் வீடு = பாசறை.

கேடம், KAETAM

மலைசூழ் ஊர், HILL SURROUNDED VILLAGE

காடம்

காடு (=மலை, ஊர்) + அம் (=வளைவு) = காடம் >>> கேடம் = மலைகளால் வளைக்கப்பட்ட ஊர்.

கேடயம், KAETAYAM

கிடுகு, SHIELD

கேடயம்

கெடு (=அழி, தாக்கு, தடு) + அயம் (=இரும்பு) = கேடயம் = தாக்குவதைத் தடுக்கும் இரும்பு

கேடா, KAETAA

பிரிந்த, DIVIDED

கேடா

கெடு (=நீக்கு, பிரி) + ஆ = கேடா = பிரிந்துள்ள

கேணி, KAENHI

கிணறு, WELL, அகழி, TRENCH

கெண்டி

கெண்டு (=தோண்டு) + இ = கெண்டி >>> கெண்ணி >> கேணி = தோண்டப்பட்டது = குழி, கிணறு, அகழி, குளம்.

கேத்திரம், KAETHTHIRAM

உடல், BODY

காத்திரம்

காத்திரம் (=உடல்) >>> கேத்திரம்

கேத்திரம், KAETHTHIRAM

கோவில், TEMPLE

காத்திறம்

கதி (=புகலிடம், வீடு) + இறை (=கடவுள்) + அம் = காத்திறம் >>> கேத்திரம் = கடவுளின் வீடு = கோவில்.

கேத்திரம், KAETHTHIRAM

வயல், FIELD

கதிரம்

கதிர் (=பயிர், தோன்று) + அம் = கதிரம் >>> கேதிரம் >>> கேத்திரம் = பயிர்களைத் தோற்றுவிப்பது = வயல்.

கேத்தி, KAETHTHI, கேத்து, KAETHTHU, கேது, KAETHU

வயல், FIELD

காற்றை

கால் (=நாற்று) + தை (=பதி, நடு) = காற்றை >>> கேத்தை >>> கேத்தி >>> கேத்து = நாற்று நடப்படுவது = வயல்.

கேதகை, KAETHAKAI, கேதகி, KAETHAKI

சிறுதாழை, SHORT PANDANUS

கைதைகை

கைதை (=தாழை) + கை (=சிறுமை) = கைதைகை >> கேதகை >>> கேதகி = சிறுதாழை

கேதம், KAETHAM

துக்கம், SORROW

கன்றம்

கன்று (=வருந்து, வாடு) + அம் = கன்றம் >>> கற்றம் >>> கத்தம் >>> கேதம் = வருத்தம், துக்கம்.

கேதம், KAETHAM

சோர்வு, WEARINESS

கன்றம்

கன்று (=வாடு, சோர்) + அம் = கன்றம் >>> கற்றம் >>> கத்தம் >>> கேதம் = சோர்வு.

கேதனம், KAETHANAM

பதாகை, FLAG

கந்தணம்

கந்தை (=சிறுதுணி) + அணி (=சொல், அறிவி) + அம் = கந்தணம் >>> கேதனம் = அறிவிக்கும் சிறுதுணி = கொடி.

கேதாரம், KAETHAARAM

வயல், FIELD

காற்றரம்

கால் (=நாற்று) + தரி (=ஊன்று, நடு) + அம் = காற்றரம் >>> கேத்தரம் >>> கேதாரம் = நாற்று நடப்படுவது = வயல்.

கேதாரி,  KAETHAARI

குதிரைமயிர், HORSE MANE

கேத்தரி

கெத்தை (=மயிர்) + அரி (=குதிரை) = கேத்தரி >>> கேதாரி = குதிரை மயிர்.

கேது, KAETHU

கதறு, CRY ALOUD

கத்து

கத்து (=கதறு) >>> கேது

கேது, KAETHU

அடையாளம், MARK

கீறு

கீறு (=எழுது, குறி) >>> கேது = குறியீடு, அடையாளம்

கேது, KAETHU

பதாகை, FLAG

கந்துய்

கந்தை (=சிறுதுணி) + உய் (=அறிவி) = கந்துய் >>> காது >>> கேது = அறிவிக்கின்ற சிறுதுணி = கொடி.

கேது, KAETHU

தீ, FIRE, ஒளி, LIGHT

காந்து

காந்து (=எரி, ஒளிர்) >>> கேது = தீ, ஒளி.

கேது, KAETHU

எல்லை, BOUNDARY

கந்து

கந்து (=வரம்பு) >>> கேது = எல்லை

கேந்திரம், KAENTHIRAM

மையம், CENTRE

கீற்றிறம்

கிறு (=சுற்று, வட்டமடி) + இறை (=நடு) + அம் = கீற்றிறம் >>> கேத்திரம் >>> கேந்திரம் = வட்டத்தின் நடு.

கேயம், KAEYAM

இசைப்பாட்டு, SONG

கேழம், கேயம்

(1) கெழுமு / கெழு (=படி, பாடு) + அம் (=நீளம், இனிமை) = கேழம் >>> கேயம் = இனிமையாக நீட்டிப் பாடுதல் (2) கே (=ஒலி) + அம் (=நீளம், இனிமை) = கேயம் = இனிமையாக நீட்டி ஒலித்தல் = இசைப்பாட்டு.

கேயிகம், KAEYIKAM

காவிக்கல், RED OCHRE

காயிகம்

காய் (=எரி) + இகு (=திரள்) + அம் (=நிறம், கல்) = காயிகம் >>> கேயிகம் = எரிநிறமுடைய திரண்ட கல்.

கேயூரம், KAEYOORAM

தோள்வளையம், UPPERARM BRACELET

கயூரம்

கை (=தோள்) + ஊர் (=வட்டம், வளையம்) + அம் = கயூரம் >>> கேயூரம் = தோள் வளையம்

கேலி, KAELI

மகிழ்சொல், JOKE

காலி

கலி (=மகிழ், உண்டாகு, ஒலி, பேசு) + இ = காலி >>> கேலி = மகிழ்ச்சி உண்டாகுமாறு பேசுதல் = மகிழ்சொல்.

கேலி, KAELI

கிண்டல், MOCKERY

காலி

கலி (=மகிழ், துன்பம், உண்டாகு, ஒலி, பேசு) + இ = காலி >>> கேலி = துன்பத்தை உண்டாக்கி மகிழும் பேச்சு.

கேவணம், KAEVANHAM

இரத்தினக் குழி, SOCKET FOR GEM

காழ்பண்ணம்

காழ் (=இரத்தினம்) + பண்ணை (=குழி) + அம் (=பொருத்து, பதி) = காழ்பண்ணம் >>> காவணம் >>> கேவணம் = இரத்தினம் பதிக்கும் குழி.

கேவலம், KAEVALAM

தனிமை, SINGLENESS

காவலம்

கவை (=அணை, சேர்) + அல் (=இன்மை) + அம் = காவலம் >>> கேவலம் = சேராமை = தனிமை.

கேவலம், KAEVALAM

இணையற்றது, UNIQUENESS

காவலம்

கவை (=சோடி, இணை) + அல் (=இன்மை) + அம் = காவலம் >>> கேவலம் = இணையற்றது.

கேவலம், KAEVALAM

சிறுமை, LITTLENESS, இழிவு, MEANNESS

காழ்ப்பலம்

காழ்ப்பு (=மிகுதி, பெருமை) + அல் (=இன்மை) + அம் = காழ்ப்பலம் >>> கேவலம் = பெருமையற்றது = சிறுமை

கேவலம், KAEVALAM

மோட்சம், FINAL BLISS

கமலம்

கம் (=உயிர்) + அல் (=இல்லாகு, இற) + அம் (=கடவுள், பொருந்து) = கமலம் >>> கேவலம் = இறந்த உயிர் கடவுளைப் பொருந்துதல் = மோட்சம்.

கேவேடன், KAEVAETAN

மீனவன், FISHERMAN

கயவேடன்

கயம் (=கடல்) + வேடன் = கயவேடன் >>> கய்வேடன் >>> கேவேடன் = கடல் வேட்டுவன் = மீனவன்

கேழ், KAEZ

ஒளி, LIGHT, நிறம், COLOUR

காழ்

காழ் (=ஒளி, நிறம்) >>> கேழ்

கேளி, KAELHI

பொய்தல் ஆட்டம், CLAY GAME

காளி

களி (=களிமண், குழைவு, மகிழ்) + இ = காளி >>> கேளி = களிமண்ணைக் குழைத்து மகிழ்தல்.

கேளிக்கை, KAELHIKKAI

விளையாட்டு, SPORTS

காளிக்கை

களி (=மகிழ்) + இக (=கூடு, தாண்டு, ஓடு) + ஐ = காளிக்கை >>> கேளிக்கை = கூடி ஓடி மகிழ்தல்.

கேனம், KAENAM, கேனை, KAENAI

அறியாமை, IGNORANCE

கன்னம்

கல் (=அறி) + நை (=அழி, இல்லாகு) + அம் = கன்னம் >>> கேனம் = அறிவின்மை = முட்டாள்தனம்.

சுண்ணம், CUNHNHAM

சுண்ணாம்பு, CALCINED LIME

சுட்டம்

சுடு (=நீற்று) + அம் (=ஒளி, வெண்மை, கல்) = சுட்டம் >>> சுண்டம் >>> சுண்ணம் = நீற்றப்பட்ட வெண்கல்.

கங்கை, KANKAI, கெங்கை, KENKAI

கபால ஊற்று, GANGES

கங்கை

கம் (=நீர், தலை) + கை (=ஊற்று) = கங்கை >>> கெங்கை = தலையில் இருந்து ஊற்றும் நீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.