சொல்
|
பொருள்
|
தமிழ்ச் சொல்
|
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
|
~நிசனம்
|
தனிமை
|
நீயணம்
|
நீ (=நீங்கு, தனி) >>> நீயணம் >>> நிசனம் = நீங்கிய நிலைமை.
|
~நிசாடம்
|
ஆந்தை
|
நிசலாடம்
|
நிழல் (=இரவு) >>> நிசல்
+ ஆடு (=திரி) = நிசலாடு >>> நிசாடு
>>> நிசாடம் = இரவில் திரிவது.
|
~நிசாதன்
|
வஞ்சகன்
|
நிழற்றன்
|
நிழல் (=மறைப்பு) >>> நிழற்று
(=மறை, ஏமாற்று) >>> நிழத்து >>> நிழத்தன்
>>> நிசத்தன் >>> நிசாதன் = ஏமாற்றுபவன்
|
~நிசாதனம்
|
வீடு
|
நிழற்றனம்
|
நிழற்று (=பாதுகாவல் செய்) >>> நிழற்றனம்
>>> நிழத்தனம் >>> நிசத்தனம் >>> நிசாதனம் = பாதுகாவல் தருவது = வீடு
|
~நிசாதி
|
மங்கலான மாலை வெளிச்சம்
|
நிழத்தி
|
நிழத்து (=நுணுகு, மழுங்கு, குறை) >>> நிழத்தி >>> நிசத்தி
>>> நிசாதி = மழுங்கலான / குறைவான ஒளி.
|
~நிசாந்தம்
|
விடியற்காலம்
|
நிசாந்தம்
|
நிசா (=இரவு) + அந்தம் (=முடிவு) = நிசாந்தம் = இரவின் முடிவு.
|
~நிசாபதி
|
சந்திரன்
|
நிசாபதி
|
நிசா (=இரவு) + பதி (=தலைவன்) = நிசாபதி = இரவின் தலைவன்
|
~நிசாமணி
|
சந்திரன், மின்மினி
|
நிசாமணி
|
நிசா (=இரவு) + மணி (=ஒளிர்வது) =நிசாமணி = இரவில் ஒளிர்வது
|
~நிசாரணன்
|
கொலையாளி
|
நெச்சறுநன்
|
நெஞ்சு (=தொண்டை) + அறுநன் = நெஞ்சறுநன் >>> நெச்சறுநன் >>> நிசாரணன் = கழுத்தை அறுத்துக் கொல்பவன்.
|
~நிசி, ~நிசை, ~நிசா
|
இரவு, இருள்
|
நிழல்
|
நிழல் (=இருள்) >>> நிசல்
>>> நிசா, நிசி, நிசை = இரவு
|
~நிசி~த்தம், ~நிசே~தம்
|
விலக்கப்பட்டது
|
நீச்சிதம்
|
நீச்சு (=இழிவுசெய்) >>> நீச்சிதம் >>> நிசி~த்தம், நிசே~தம் = இழிவு செய்யப்பட்டது = விலக்கப்பட்டது.
|
~நிசிதம், ~நிசீதம்
|
இகழ்ச்சி
|
நைச்சிதம்
|
நை (=நசுக்கு,கெடு) >>> நைச்சு (=இழிவுசெய்) >>> நைச்சிதம் >>> நிசிதம், நிசீதம் = இழிவுசெய்கை, இழிவானது.
|
~நிசிதம், ~நிசீதம்
|
கூர்மை
|
நிசிதம், நிசீதம்
|
நொசி (=நுண்மை) >>> நொசிதம்
>>> நிசிதம், நிசீதம் = நுட்பமானது = கூர்மை.
|
~நிசிதன்
|
கொல்பவன், அரக்கன்
|
நைச்சிதன்
|
நை >>> நைச்சு (=கொல்) >>> நைச்சிதம் (=கொலை) >>> நைச்சிதன்
>>> நிசிதன் = கொல்பவன் = அரக்கன்
|
~நிசும்பம்
|
கொலை
|
நைச்சுமம்
|
நை >>> நைச்சு (=கொல்) >>> நைச்சுமம் >>> நிசும்பம் = கொலை.
|
~நிசும்பன்
|
கொலையாளி
|
நைச்சுபவன்
|
நை >>> நைச்சு (=கொல்) >>> நைச்சுபவன் >>> நிசும்பன் = கொலையாளி.
|
~நிசுலகம்
|
மார்புக்கவசம்
|
நெச்சூழகம்
|
நெஞ்சு (=மார்பு) + சூழகம் = நெஞ்சூழகம் >>> நெச்சூழகம் >>> நிசுலகம் = மார்பைச் சூழ்ந்து காப்பது.
|
~நிசூதனம்
|
கொலை
|
நைச்சுதனம்
|
நைச்சு (=கொல்) >>> நைச்சுதனம்
>>> நிசூதனம் = கொலை
|
~நிசே~கம்
|
மாத விலக்கு
|
நீச்சிகம்
|
நீச்சு (=இழிவுசெய்) >>> நீச்சிகம் >>> நிசே~கம் = இழிவுடையது, விலக்குவதற்கானது = மாத விலக்கு
|
~நிசே~தி
|
விலக்கு
|
நீச்சுதி
|
நிசே~தம் (=விலக்கம்) >>> நிசே~தி = விலக்கு
|
~நிசே~பம்
|
மீட்கப்பட்ட செல்வம்
|
நீசேமம்
|
நீ (=வெளியேற்று) + சேமம் (=புதைபொருள்) = நீசேமம் >>> நிசே~பம் = வெளியேற்றப்பட்ட புதைபொருள்.
|
~நிட்கம்
|
பறை
|
நொடிகம்
|
நொடி (=ஒலி) >>> நொடிகம்
>>> நிட்கம் = ஒலிக்கப்படுவது.
|
~நிட்சணம்
|
முத்தம்
|
நெச்சணம்
|
நெஞ்சு (=அன்பு) + அண்ணு (=சேர்ப்பி) + அம் = நெஞ்சணம் >>> நெச்சணம் >>> நிட்சணம் = அன்பைச் சேர்ப்பிப்பது.
|
~நிடலம்
|
நெற்றி
|
நுதலம்
|
நுதல் (=நெற்றி) >>> நுதலம்
>>> நிதலம் >>> நிடலம்
|
~நித்தம், ~நிதம்
|
நிலைத்தன்மை
|
நிற்றம்
|
நில் >>> நிற்று >>> நிற்றம்
>>> நித்தம், நிதம் = நிலைத்தன்மை
|
~நித்தல்
|
நிலைத்தன்மை
|
நிற்றல்
|
நில் >>> நிற்றல் >>> நித்தல்
= நிலைத்தன்மை
|
~நித்தாரம்
|
நிலைத்தன்மை
|
நிற்றாரம்
|
நில் >>> நிற்று >>> நிற்றாரம்
>>> நித்தாரம் = நிலைத்தன்மை
|
~நித்தியம்
|
நிலைத்தன்மை
|
நிற்றியம்
|
நில் >>> நிற்று >>> நிற்றியம்
>>> நித்தியம் = நிலைத்தன்மை
|
~நித்தில், ~நிலத்தி
|
மின்மினி
|
நிழற்றி
|
நிழற்று (=ஒளிர்) >>> நிழற்றி
>>> நிழத்தி >>> நிலத்தி, நிழத்தில் >>> நித்தில் = ஒளிரக் கூடிய பூச்சி இனம்.
|
~நித்திலம்
|
முத்து
|
நத்துளம், நெத்திலம்
|
(1). நத்து (=சிப்பி) + உளம் = நத்துளம் >>> நித்திலம் = சிப்பிக்குள் இருப்பது. (2) நெற்று >>> நெத்து
>>> நெத்திலம் >>> நித்திலம் = மூடிய உறைக்குள் இருக்கும் மணி.
|
~நித்தை
|
தூக்கம்
|
நித்தை
|
நிது (=மூடு) >>> நித்து
(=மூடச்செய்) >>> நித்தை = இமைகளை மூடச் செய்வது = உறக்கம்.
|
~நிதர்சனம், ~நிதரிசனம்
|
ஒளிவு மறைவு இன்மை
|
நிதற்றனம்
|
நிது (=மூடு, மறை) + அல் + தனம் = நிதற்றனம் >>> நிதர்சனம் >>> நிதரிசனம் = மறைவு அற்ற தன்மை
|
~நிதனம்
|
அழிவு, சாவு, வறுமை
|
நைத்தனம்
|
நை (=அழி, இல்லையாகு) >>> நைத்தனம் >>> நிதனம் = அழிவு, சாவு, வறுமை.
|
~நிதானம்
|
விதை, மூலம், காரணம்
|
நித்தணம்
|
நிது (=மூடு, புதை) >>> நித்து (=விதை) >>> நித்தணம்
>>> நிதானம் = விதைக்கப்படுவது = விதை >>> மூலம்,
காரணம்.
|
~நிதானம்
|
அரத்தினம், பொன்
|
நிழற்றனம்
|
நிழற்று (=ஒளிர்) >>> நிழற்றனம்
>>> நியத்தனம் >>> நிதானம் = ஒளி வீசுவன = அரத்தினம், பொன்.
|
~நிதானம்
|
யோசனை
|
நித்தணம்
|
நிது (=மூடு) >>> நித்து
(= இமைமூடு) >>> நித்தணம் >>> நிதானம் = இமைமூடி யோசித்தல்.
|
~நிதானன்
|
கடவுள்
|
நித்தணன்
|
நிதானம் (=மூலம்) >>> நிதானன்
= மூலமாய் இருப்பவன்
|
~நிதி
|
செல்வம்
|
நிதி
|
நிது (=மூடு, மறை) >>> நிதி = மூடி மறைக்கப்படுவது
|
~நிதேசம்
|
கட்டளை, வார்த்தை
|
நுதேயம்
|
நுது (=சொல்) + ஏய் (=ஏவு) + அம் = நுதேயம் = நிதேசம் = ஏவுகின்ற சொல், கட்டளை, வார்த்தை.
|
~நிந்தம்
|
உரிமை
|
நிறுதம்
|
நிறு (=தீர்மானி) >>> நிறுதம் >>> நித்தம்
>>> நிந்தம் = தீர்மானிக்கப்பட்டது = உரிமை
|
~நிந்தி
|
தாழ்த்து, இழிச்சு
|
நொத்தி
|
நொத்து (=இழிவுசெய்) >>> நொத்தி >>> நொந்தி
>>> நிந்தி
|
~நிந்திதம்
|
இகழப்பட்டது, தடை
|
நொத்திதம்
|
நொத்து (=இகழ்) >>> நொத்திதம்
>>> நொந்திதம் >>> நிந்திதம் = இகழப்பட்டது = விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது.
|
~நிந்தை, ~நிந்தனை, ~நிந்தனம்
|
தாழ்வு, இழிவு
|
நொத்தை, நொந்தை
|
நொது (=கெடு, தாழ்) >>> நொத்து (=தாழ்த்து) >>> நொத்தை >>> நொந்தை
>>> நிந்தை, நிந்தனை, நிந்தனம் = இழிவான பேச்சு.
|
~நிபத்தி
|
உண்மை
|
நீவற்றி
|
நீவு (=அழிவு) + அற்றி = நீவற்றி >>> நிபத்தி = அழிவற்றது
|
~நிபத்தியை
|
போர்க்களம்
|
நீவாற்றுழி
|
நீவு (=அழிவு) + ஆற்று (=செய்) + உழி (=இடம்) = நீவாற்றுழி >>> நிவத்துழி >>> நிபத்துயி >>> நிபத்தியை = அழிவைச் செய்யுமிடம்.
|
~நிபதனம்
|
விழுகை
|
நீவுதனம்
|
நீவு (=கைவிடு, விழச்செய்) >>> நீவுதனம் = நிபதனம் = விழுகை
|
~நிபந்தம்
|
தாவரம், அசையாச் சொத்துகள்
|
நிற்பந்தம்
|
நில் (=நிலையான) + பந்தம் = நிற்பந்தம் >>> நிப்பந்தம் >>> நிபந்தம் = நிலையான பந்தம் உடையவை..
|
~நிபந்தம்
|
அணைக்கட்டு
|
நீர்பந்தம்
|
நீர் + பந்தம் (=கட்டு) = நீர்பந்தம் >>> நிப்பந்தம் >>> நிபந்தம் = நீரினைக் கட்டி வைத்திருக்கும் அணைக்கட்டு.
|
~நிபந்தம், ~நிவந்தம்
|
பாட்டு, நூல்
|
நுவற்றம்
|
நுவறு (=சொல்) >>> நுவற்றம்
>>> நுவத்தம் >>> நுவந்தம் >>> நிவந்தம் >>> நிபந்தம் = சொற்களை உள்ளடக்கியது.
|
~நிபந்தனம்
|
நூல்
|
நுவற்றணம்
|
நிபந்தம் (=நூல்) >>> நிபந்தனம்
|
~நிபந்தனை, ~நிவந்தம்
|
கூற்று, விதி
|
நுவற்றணை நுவற்றம்
|
நுவறு (=சொல்) >>> நுவற்றம்
>>> நுவத்தம் >>> நுவந்தம் >>> நிவந்தம் >>> நிபந்தம், நிபந்தணை = கூறப்பட்டவை.
|
~நிப்பரம்
|
அசைவின்மை
|
நிற்பரம்
|
நில் >>> நிற்பு >>> நிற்பரம்
>>> நிப்பரம் = நிலையானது
|
~நிப்பரம்
|
இளேசு
|
நைப்பாரம்
|
நை (=இன்மை) + பாரம் = நைப்பாரம் = நிப்பரம் = பாரமின்மை
|
~நிபம்
|
இழிவு, வசை
|
நீவம்
|
நீவு (=கைவிடு, இகழ்) >>> நீவம் >>> நிபம் = இகழ்ச்சி, இழிவு
|
~நிபம்
|
உவமை, போலி
|
நிவம்
|
நிவ (=நிமிர், சமமாகு) >>> நிவம் >>> நிபம் = சமம், உவமை, போலி
|
~நிபம்
|
நீர்ச்சாடி
|
நபம்
|
நம் (=நீர்) >>> நமம் >>> நபம் >>> நிபம் = நீரை உடையது
|
~நிபாகம்
|
சமையல்
|
நெய்ப்பாக்கம்
|
நெய்ப்பு (=குழைவு) + ஆக்கம் = நெய்ப்பாக்கம் >>> நெப்பாக்கம் = நிபாக்கம் >>> நிபாகம் = குழையச் செய்தல்.
|
~நிபாதம்
|
கைவிடுகை
|
நீபதம்
|
நீ (=கைவிடு) + பதம் (=நிலை) = நீபதம் >>> நிபாதம்
= கைவிடுகை
|
~நிபாதம்
|
மரணம்
|
நைபதம்
|
நை (=அழி) + பதம் = நைபதம் >>> நிபாதம் = அழிவு, மரணம்
|
~நிபாதனம்
|
கொலை
|
நைபதனம்
|
நைபதம் (=மரணம்) >>> நைபதனம்
>>> நிபாதனம் = கொலை
|
~நிபானம்
|
நீர்த்தொட்டி, கிணறு
|
நீர்பானம்
|
நீர் + பானம் (=பாத்திரம்) = நீர்பானம் >>> நிப்பானம் >>> நிபானம் = நீர் உடைய பாத்திரம் = நீர்த்தொட்டி, கிணறு.
|
~நிபிடம், ~நிபுடம்
|
நெருக்கம்
|
நிமிட்டம்
|
ஞெமிடு >>> நிமிட்டு (=கசக்கு, நெருக்கு) >>> நிமிட்டம் >>> நிபிடம் = நெருக்கம்
|
~நிபிடாயம்
|
நெருக்கம்
|
நிமிட்டாயம்
|
ஞெமிடு >>> நிமிட்டு (=நெருக்கு) + ஆயம் >>> நிமிட்டாயம் >>> நிபிடாயம்
= நெருக்கம்.
|
~நிபிடீகரம்
|
நெருக்கம், அழுத்தம்
|
நிமிட்டுகரம்
|
ஞெமிடு >>>> நிமிட்டு (=நெருக்கு, அழுத்து) + கரம் >>> நிமிட்டுகரம் = நிபிடீகரம் = நெருக்கம், அழுத்தம்
|
~நிபீடனம்
|
குத்துச்சண்டை
|
நிமிட்டனம்
|
ஞெமிடு >>> நிமிட்டு (=நெருக்கு, தாக்கு) >>> நிமிட்டனம்
>>> நிபீடனம் = ஒருவரை ஒருவர் நெருக்கியும் தாக்கியும் ஆடுவது.
|
~நிபுணம்
|
நுட்பம், திறமை
|
நொய்ப்புணம்
|
நொய்ப்பு (=நுட்பம், திறமை) >>> நொய்ப்புணம் >>> நொப்புணம் >>> நிபுணம் = நுட்பம், திறமை
|
~நிபுணன்
|
திறமைசாலி
|
நொய்ப்புணன்
|
நொய்ப்பு (=நுட்பம், திறமை) >>> நொய்ப்புணன் >>> நொப்புணன் >>> நிபுணன் = திறமை மிக்கவன்.
|
~நிம்பம், ~நிபம்
|
வேம்பு
|
நீப்பம்
|
நீவு (=தணி) >>> நீப்பு
(=தணிக்கை) >>> நீப்பம் >>> நிப்பம் >>> நிபம்,
நிம்பம் = வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது.
|
~நிம்பம், ~நிம்பு
|
எலுமிச்சை, வேம்பு
|
நீபம்
|
நீமம் (=ஒளி) >>> நீபம்
>> நிம்பம் = மஞ்சள்நிறப் பழவகை.
|
~நிம்மதி
|
அமைதி, தணிவு
|
நீவுமதி
|
நீவு (=தணி, அமைதிசெய்) + மதி (=எண்ணம்) >>> நீவுமதி
>>> நிம்மதி = அமைதியான எண்ணம் / எண்ணங்களின் அமைதி.
|
~நிம்மந்தம்
|
ஒற்றுமையின்மை
|
நைப்பந்தம்
|
நை (=இன்மை) + பந்தம் (=இணக்கம்) = நைப்பந்தம் >>> நிப்பந்தம் >>> நிம்மந்தம் = இணக்கமின்மை.
|
~நிம்மளம்
|
களங்கமின்மை
|
நைம்மளம்
|
நை (=இன்மை) + மளம் (=கழிவு, கறை) = நைம்மளம் >>> நிம்மளம் = கறையின்மை.
|
~நிமலம்
|
தூய்மை
|
நைம்மளம்
|
நை (=இன்மை) + மளம் (=கழிவு, கறை) = நைம்மளம் >>> நிமளம் >>> நிமலம் = கறையின்மை.
|
~நிமலன்
|
கடவுள்
|
நைம்மளன்
|
நை (=இன்மை) + மளம் (=கழிவு, கறை) = நைம்மளம் >>> நிமளம் >>> நிமளன் >>> நிமலன்
= கறையற்றவன்.
|
~நிமிசம்
|
இமைப்பொழுது
|
நிமிசம்
|
நிமை (=இமை) >>> நிமையம்
>>> நிமிசம் = இமைக்கும் பொழுது.
|
~நிமித்தகம்
|
முத்தம்
|
ஞெமிற்றகம்
|
ஞெமு (=அழுத்து) + இறு (=கொடு) + அகம் = ஞெமிற்றகம் >>> நெமித்தகம் >>> நிமித்தகம் = அழுத்தமாகக் கொடுக்கப்படுவது.
|
~நிமித்தம், ~நிமித்து, ~நிமித்தியம்
|
ஒலி, சகுனம்
|
ஞிமிற்றம்
|
ஞிமிறு (=ஒலி) >>> ஞிமிற்றம்
>>> நிமித்தம் = ஒலி, ஒலியைக் கொண்டு கூறப்படும் சகுனம்.
|
~நிமித்தன், ~நிமித்தி, ~நிமித்திகன்
|
குறிகூறுவோன், சோதிடன்
|
நிமித்தன், நிமித்தி, நிமித்திகன்
|
நிமித்தம் (=சகுனம்) >>> நிமித்தன்,
நிமித்தி, நிமித்திகன் = சகுனத்தைக் கொண்டு கணித்துக் கூறுவோன்.
|
~நிமிரி
|
மஞ்சள் நிறம்
|
நிமிரி
|
நிமிர் (=ஒளிர்) >>> நிமிரி
= வெயிலின் மஞ்சள் நிறம்
|
~நிமை
|
இமை
|
ஞிமை
|
இமை >>> ஞிமை >>> நிமை
|
~நியக்கரணம்
|
அவமதிப்பு
|
நொய்க்கரணம்
|
நொய் (=அற்பம், இழிவு) + கரணம் (=செயல்) = நொய்க்கரணம்
>>> நியக்கரணம் = இழிவான செயல்.
|
~நியக்குரோதம்
|
ஆலமரம்
|
நிழற்குருத்துவம்
|
நிழல் + குருத்துவம் (=பெருமை) = நிழற்குருத்துவம்
>>> நியக்குரோதம்
= பெரிய அளவில் நிழல் தருவது.
|
~நியசி
|
செருகு, பதி
|
நுழைச்சு
|
நுழை >>> நுழைச்சு >>> நுயச்சு>>> நியசி
= புகுத்து, செருகு, பதி
|
~நியதம்
|
புலனடக்கம்
|
நீயதம்
|
நீ (=கைவிடு) >>> நீயதம்
>>> நியதம் = கைவிட்ட நிலை
|
~நியதி
|
விதிமுறை, கடமை
|
நிழத்தி
|
நிழல் (=காப்பு, நீதி) >>> நிழற்று (=காப்பாற்று, நீதிசெய்) >>> நிழத்து >>> நியத்து
>>> நியதி = நீதி, விதிமுறை, வரையறை, கடமை.
|
~நியது
|
கைவிடல், நீக்கம்
|
நீயது
|
நீ (=கைவிடு) >>> நீயது
= கைவிடப்பட்டது,
கைவிடுகை
|
~நியந்தா
|
அரசன், கடவுள்
|
நியந்தன்
|
நியதி (=நீதி, விதிமுறை) >>> நியத்தன் >>> நியந்தன் >>> நியந்தா = விதிமுறை செய்பவன், நீதி செலுத்துவோன்
= அரசன், கடவுள்
|
~நியமம்
|
விதி, ஒழுங்கு,, கட்டளை, கடமை, தெரு, வீதி
|
நிழவம்
|
நிழ (=காப்பாற்று, முறைசெய்) >>> நிழவம் >>> நியமம்
= காப்பாற்றும் முறை = விதி, ஒழுங்கு, கட்டளை, கடமை >>> ஒழுங்கான அமைப்புடையது = தெரு, வீதி
|
~நியமம்
|
வீடு, அரண்மனை
|
நிழவம்
|
நிழ (= பாதுகா) >>> நிழவம்
>>> நியமம் = பாதுகாப்பைத் தருவது = வீடு, அரண்மனை.
|
~நியமனம்
|
கட்டளை, உத்தரவு, அமலாக்கம்
|
நியமனம்
|
நியமம் (=விதிமுறை) >>> நியமனம் = விதிப்படி ஒழுகச்செய்தல், விதிகளை அமல் படுத்துதல்.
|
~நியமி
|
கட்டளையிடு, அமலாக்கு, விதி
|
நியமி
|
நியமம் (=விதிமுறை) >>> நியமி = விதிக்கு உட்படுத்து, அமலாக்கு, கட்டளையிடு.
|
~நியமிதம்
|
நியமிக்கப்பட்டது
|
நியமிதம்
|
நியமி (=விதி) >>> நியமிதம்
= விதிக்கப்பட்டது.
|
~நியர்
|
ஒளி
|
நிழல்
|
நிழல் (=ஒளி) >>> நியல்
>>> நியர்
|
~நியர்ப்புதம்
|
பத்தாயிரம் கோடி
|
நியர்ப்பதம்
|
நியர் (=ஒளி) + பதம் (=கால்) = நியர்ப்பதம் >>> நியர்ப்புதம் = ஒளிக் கீற்றின் நீளம் = பத்தாயிரம் கோடி. பி.கு: பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் = 1.4 நியர்ப்பத மீட்டர்.
|
~நியாசம்
|
தஞ்சம், சரணாகதி
|
நுழையம்
|
நுழை (=புகு) >>> நுழையம்
>>> நுயாசம் >>> நியாசம் = புகல், தஞ்சம், சரணாகதி.
|
~நியாதம், ~நியாசம்
|
வேப்பமரம்
|
நிழத்தம்
|
நிழல் (=குளிர்ச்சி) >>> நிழற்று >>> நிழற்றம்
>>> நிழத்தம் >>> நியத்தம் >>> நியாதம் = குளிர்ச்சியும் நிழலும் தரும் மரம்.
|
~நியாயம்
|
நீதி வழங்கும் கூட்டம், இடம், நீதிமுறை.
|
நையாயம்
|
நை (=தண்டி) + ஆயம் (=குழு) = நையாயம் >>> நியாயம்
= தண்டிக்கும் கூட்டம் >>> தண்டிக்கும் இடம், தண்டிக்கும் முறை.
|
~நியுத்தம்
|
மல்யுத்தம்
|
நையுந்து
|
நை (=நெருக்கு) + உந்து (=தள்ளு) = நையுந்து >>> நியுத்தம் = உடல் வலிமையால் ஒருவரை ஒருவர் நெருக்கித் தள்ளும் ஆட்டம்.
|
~நியுதம்
|
ஒரு இலக்கம்
|
நுழுந்தம்
|
நுழுந்தம் (=தலைமயிர்) >>> நுழுத்தம் >>> நுயுத்தம் >>> நியுதம் = தலைமயிரின் தோராய எண்ணிக்கை = ஒரு இலக்கம் = 1,00,000
|
~நியூனம்
|
குறைபாடு
|
நையுணம்
|
நை (=குறை) + உணம் = நையுணம் = நியூனம் = குறையுடையது
|
~நியோகம்
|
பிரம்மச்சரியம்
|
நையோகம்
|
நை (=இன்மை) + ஓகம் (=புணர்ச்சி) = நையோகம் >>> நியோகம்
= புணர்ச்சியின்மை
= பிரம்மச்சரியம்
|
~நியோகம்
|
கட்டளை
|
நையோக்கம்
|
நை (=வருத்து) + ஓக்கு (=தூண்டு) = நையோக்கு >>> நியோக்கம் >>> நியோகம் = பிறரை வருத்தித் தூண்டுவது = கட்டளை.
|
~நியோகி
|
பிரம்மச்சாரி
|
நையோகி
|
நியோகம் (=பிரம்மச்சரியம்) >>> நியோகி = பிரம்மச்சாரி.
|
~நியோகி
|
கட்டளையிடு
|
நையோக்கு
|
நியோகம் (=கட்டளை) >>> நியோகி
= கட்டளையிடு
|
~நியோசனம்
|
கட்டளை
|
நையோச்சனம்
|
நை (=வருத்து) + ஓச்சு (=தூண்டு) = நையோச்சு >>> நையோச்சனம் >>> நியோசனம் = பிறரை வருத்தித் தூண்டுவது = கட்டளை
|
~நிர்
|
இன்மை, எதிர்மறை முன்னொட்டு
|
நீறு, நிரவு
|
நீறு, நிரவு (=அழி) >>> நிர் = அழிவு, இன்மை.
|
~நிர்க்கதி
|
கதியின்மை
|
நிர்க்கதி
|
நிர் (=இன்மை) + கதி = நிர்க்கதி = கதியின்மை
|
~நிரக்கம்
|
கூரறிவின்மை
|
நிராக்கம்
|
நிர் (=இன்மை) + ஆக்கம் (=கூரறிவு) = நிராக்கம் >>> நிரக்கம்
|
~நிர்க்குணம்
|
குணமின்மை
|
நிர்க்குணம்
|
நிர் (=இன்மை) + குணம் = நிர்க்குணம் = குணமின்மை
|
~நிர்ச்சலம்
|
நீரின்மை, அசைவின்மை
|
நிர்ச்சலம்
|
நிர் (=இன்மை) + சலம் (=நீர், அசைவு) = நிர்ச்சலம் = நீரின்மை, அசைவின்மை.
|
~நிரசம்
|
கனிமம்
|
நிரைச்சம்
|
நிரை >>> நிரைச்சு (=நிரப்பு) >>> நிரைச்சம்
>>> நிரசம் = நிரப்பப்பட்டது = பூமியை நிரப்பியுள்ள கனிமங்கள்.
|
~நிரசனம்
|
பட்டினி
|
நிரசனம்
|
நிர் (=இன்மை) + அசனம் (=உணவு) = நிரசனம் – உணவின்மை
|
~நிரஞ்சனம்
|
நிறைவு
|
நிறைச்சனம்
|
நிறை >>> நிறைச்சு >>> நிறைச்சனம் >>> நிறச்சனம் >>> நிரஞ்சனம் = நிறைவுற்ற நிலை
|
~நிரஞ்சனம்
|
அண்டவெளி
|
நிறைஞ்சனம்
|
நிறை + அஞ்சனம் (=கருமை) = நிறைஞ்சனம் >>> நிறஞ்சனம் >>> நிரஞ்சனம் = நிறைவான கருமை = அண்டவெளி.
|
~நிரஞ்சனம்
|
குற்றமற்றது
|
நிரஞ்சனம்
|
நிர் (=இன்மை) + அஞ்சனம் (=கருமை, குற்றம்) = நிரஞ்சனம்
|
~நிரட்சம்
|
புவிநடுக்கோடு
|
நிறையக்கம்
|
நிறை (=முழுமை) + அக்கம் (=குறுக்கம்) = நிறையக்கம் >>> நிறக்கம் >>> நிரக்~சம் >>> நிரட்சம் = முழுமையான குறுக்கக்கோடு
|
~நிரட்சரன்
|
படிக்காதவன்
|
நிரச்சரன்
|
நிர் (=இன்மை) + அச்சரம் (=எழுத்து) + அன் = நிரச்சரன் = எழுதப் படிக்கத் தெரியாதவன்.
|
~நிர்ணயம், ~நிருணயம்
|
முடிவு, உறுதி, ஆராய்ச்சி
|
நிறுநயம்
|
நிறு + நயம் (=தன்மை) = நிறுநயம் >>> நிருணயம் >>> நிர்ணயம் = நிறுவப்பட்ட தன்மை = முடிவு., உறுதி, ஆராய்ச்சி
|
~நிர்ணயி, ~நிருணயி, ~நிருணி
|
முடிவுசெய், ஆராய்
|
நிறுநயி
|
நிறுநயம் (=முடிவு, ஆராய்ச்சி) >>> நிறுநயி >>> நிருணயி >>> நிர்ணயி
= முடிவுசெய், ஆராய்
|
சனி, 7 மார்ச், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 9
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.