சொல்
|
பொருள்
|
தமிழ்ச்
சொல்
|
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
|
அங்கம்
|
பொருள், செல்வம்
|
அங்கம்
|
அங்கு (=திரள், சேர்)
>>> அங்கம் = திரட்டப்படுவது = பொருள், செல்வம்
|
அங்காடி
|
கடை
|
அங்கடை, அங்காடி
|
அங்கம் (=பொருள்) + அடை
(=பெறு) = அங்கடை >>> அங்காடி = பொருட்களைப் பெறும் இடம்.
|
இங்கம்
|
பொருள், செல்வம்
|
இகம்
|
இக ( = நீங்கு, செல்)
>>> இகம் >>> இங்கம் = நீங்கக்கூடியது. ஒ.நோ: செல்
>>> செல்வம்.
|
கிருகம்
|
வீடு
|
கீற்றுகம்
|
கீற்று (= கிடுகு)
>>> கீற்றுகம் >>> கிருகம் = கிடுகுகளால் வேயப்பட்டது = வீடு.
|
பக்கதி
|
சிறகின் அடி
|
பக்கடி
|
பக்கம் (=சிறகு) + அடி
= பக்கடி >>> பக்கதி
|
பக்கவாரி
|
சுடுநீர்
|
பக்கவாரி
|
பக்கம் (=ஒளி, வெயில்)
+ வாரி (=நீர்) = பக்கவாரி = வெயிலில் வைத்து சூடேற்றிய நீர்.
|
பக்கறை
|
குழப்பம்
|
பாங்கறை
|
பாங்கு (=ஒளி, அழகு,
தெளிவு) + அறை (=இன்மை) = பாங்கறை >>> பக்கறை = தெளிவின்மை
|
படக்கிருகம்
|
கூடாரம்
|
படக்கிருகம்
|
படம் (=துணி) + கிருகம்
(=வீடு) = படக்கிருகம் = துணியால் வேயப்பட்ட வீடு = கூடாரம்.
|
படகம்
|
திரைச்சீலை
|
பாடாக்கம்
|
பாடு (=மறைவு) + ஆக்கம்
(=துணி) = பாடாக்கம் >>> படகம் = மறைப்புத் துணி.
|
படகம்
|
பறை
|
பாடகம்
|
பாடு (= ஒலி) + அகம் =
பாடகம் >>> படகம் = ஒலிப்பினை உடையது.
|
படகுடி
|
கூடாரம்
|
படக்குடி
|
படம் (=துணி) + குடி
(=வீடு) = படக்குடி = துணியால் வேயப்பட்ட வீடு = கூடாரம்.
|
படங்கம், படங்கு
|
கூடாரம்
|
படங்கம்
|
படம் (=துணி) + அகம்
(=வீடு) = படகம் >>> படங்கம் = துணியால் வேயப்பட்ட வீடு = கூடாரம்.
|
படங்கு
|
ஆடை
|
பற்றங்கம்
|
பற்று + அங்கம் (=உடல்)
= பற்றங்கம் >>> பட்டங்கம் >>> படங்கு = உடலைப் பற்றிருப்பது.
|
பட்டணம்
|
ஊர், நகரம்
|
பற்றணம்
|
(1). பற்று (=வீடு) +
அணை (=சேர், தொகு) >>> பற்றணை >>> பற்றணம் >>>
பட்டணம் = வீடுகளின் தொகுப்பு = ஊர் (2) பட்டினம் (=ஊர்) >>> பட்டணம்.
|
பட்டம்
|
சிறப்புப் பெயர்,
சிறப்பு அணி
|
பட்டம்
|
பாடு (=பெருமை,
சிறப்பு) >>> பட்டம் = சிறப்புக்காக கொடுக்கப்படும் பெயர், பொருள்.
|
பட்டயம், பட்டா
|
வாள்
|
பாட்டயம்
|
பாடு (=அழிவு, சாவு) +
அயம் (=இரும்பு) = பாட்டயம் >>> பட்டயம் = அழிவைத் தரும் இரும்புக்
கருவி.
|
பட்டயம், பட்டா
|
உரிமைப் பத்திரம்
|
பற்றாயம்
|
பற்று (=உரிமை) + ஆய்
(=வரையறு) + அம் >>> பற்றாயம் >>> பட்டாயம் >>>
பட்டயம் = உரிமையை வரையறுத்துக் கூறும் பொருள்.
|
பட்டவர்த்தனம்
|
வெளிப்படையான பேச்சு
|
பட்டவார்த்தனம்
|
பட்டம் (=பறை) +
வார்த்தை (=பேச்சு) + அனம் = பட்டவார்த்தனம் >>> பட்டவர்த்தனம் =
பறையொலி போல வெளிப்படையாகப் பேசுதல்.
|
பட்டவர்த்தனம்
|
அரசனது சிறப்புக்குரிய
யானை
|
பட்டவார்த்தானை
|
பட்டம் (= சிறப்பு அணி)
+ ஆர்த்து (=கட்டு) + ஆனை = பட்டவார்த்தானை >>> பட்டவர்த்தனம் =
சிறப்பு அணி கட்டப்பட்ட யானை.
|
பட்டறை, பட்டரை
|
தொழிற்சாலை
|
பாட்டறை
|
பாடு (=தொழில்) + அறை
(=இடம்) = பாட்டறை >>> பட்டறை = தொழில் செய்யும் இடம்.
|
பட்டன்
|
புலவன்
|
பாட்டன்
|
பாட்டு >>>
பாட்டன் >>> பட்டன் = பாடுபவன்
|
பட்டன்
|
அருச்சகன்
|
பாட்டன்
|
பாடு (=போற்று, துதி)
>>> பாட்டன் >>> பட்டன் = இறைவனைப் போற்றுபவன்.
|
பட்டன்
|
இறைவன்
|
பாட்டன்
|
பாடு (=பெருமை)
>>> பாட்டன் >>> பட்டன் = பெருமை உடையவன் = பெரியோன்
|
பட்டாரகன்
|
கடவுள்
|
பாட்டாரகன்
|
பாடு (=பெருமை) + ஆர்
(=நிறை) + அகன் = பாட்டாரகன் >>>பட்டாரகன் =பெருமை நிறைந்தவன்.
|
பட்டாளம்
|
படைச்செறிவு
|
பட்டளம்
|
படை + அளம் (=செறிவு,
மிகுதி) = பட்டளம் >>> பட்டாளம் = படைச்செறிவு.
|
பட்டி
|
சீலை, ஆடை
|
பட்டி
|
படாம் (=சீலை)
>>> பட்டம் >>> பட்டி
|
பட்டி
|
பாக்கு வெற்றிலைச்
சுருள்
|
பற்றி
|
பற்று (=கட்டு, சுருள்)
>>> பற்றி >>> பட்டி = பாக்கும் வெற்றிலையும் வைத்த கட்டு /
சுருள்.
|
பட்டிகன்
|
திருடன்
|
பட்டிகன்
|
பட்டி (=சிறுதுணி) +
கண் >>> பட்டிகண் >>> பட்டிகன் = சிறுதுணியால் கண்ணை
மறைத்துக் கொள்பவன்.
|
பட்டிகை
|
ஏட்டுக் கட்டு
|
பற்றிகை
|
பற்று (= கட்டு)
>>> பற்றிகை >>> பட்டிகை = கட்டப்பட்டது.
|
பட்டிகை
|
மேகலை, கச்சை
|
பற்றிகை
|
பற்று (= கட்டு, அணி)
>>> பற்றிகை >>> பட்டிகை = கட்டப்படுவது / அணியப்படுவது.
|
பட்டிசம்
|
ஆயுதம்
|
பட்டியம்
|
படு (=அழி) + இயம்
(=கருவி) = பட்டியம் >>> பட்டிசம் = அழிவைத் தரும் கருவி.
|
பட்டிமம்
|
பள்ளிக்கூடம்
|
பட்டிமம்
|
பாட்டு (=கல்வி)
>>> பட்டிமம் = கல்விச்சாலை
|
பட்டிமை
|
களவு, வஞ்சனை
|
பட்டிமை
|
பட்டி (=சிறுதுணி) +
இமை >>> பட்டிமை = சிறுதுணியைக் கண்ணில் கட்டிக்கொண்டு திருடுதல்,
ஏய்த்தல்.
|
பட்டியல்
|
படுக்கைக் கல்
|
பட்டியல்
|
படு + இயல் = பட்டியல்
= படுக்கை நிலைக் கல்.
|
பட்டியல், பட்டி
|
அட்டவணை
|
பாட்டியல்
|
பாடு (=கூறு, வகை) +
இயல் = பாட்டியல் >>> பட்டியல் = வகைப்படுத்திச் செய்யப்பட்டது.
|
பட்டோலை
|
குறிப்போலை
|
பற்றோலை
|
பற்று (=குறிப்பு) +
ஓலை = பற்றோலை >>> பட்டோலை = குறிப்புக்கள் அடங்கிய ஓலை
|
படர்
|
வீரர்
|
படையர்
|
படை >>>
படையர் >>> படார் >>> படர் = வீரர்
|
படர், படன்
|
இழிமக்கள், ஏவலர்
|
படர், படன்
|
படு (=தாழ், வணங்கு)
>>> படர் = பிறரைப் பணிந்து வாழும் தாழ்நிலை மக்கள்.
|
படலம்
|
வகை, பிரிவு
|
பாறலம்
|
பாறு >>>
பாறல் (= வகுத்தல்) >>> பாறலம் >>> பாடலம் >>> படலம்
= வகை, பிரிவு.
|
படலம்
|
மேற்கூரை
|
படலம்
|
படு >>> படல்
(=மறைத்தல்) >>> படலம் = மறைப்பு
|
படலம்
|
ஏடு, அடுக்கு
|
படலம்
|
படு (=பொருந்து, படி)
>>> படலம் = மேலே படிவது.
|
படலம்
|
நிலம், உலகம்
|
படலம்
|
படு (=கிட)
>>> படலம் = கிடப்பது = நிலம்.
|
படலம்
|
தலை அணி
|
படலம்
|
பாடு (=பெருமை)
>>> படலம் = சிறப்பு அணி
|
படலம், படலை
|
கூட்டம்
|
படளம்
|
படு (=பொருந்து, கூடு)
+ அளம் (=செறிவு) = படளம் >>> படலம் = செறிந்த கூட்டம்.
|
படாகை
|
பெருங்கூட்டம்
|
படாகை
|
படு (=மிகுதி) + ஆக்கம்
(=கூட்டம்) >>> படாக்கம் >>> படாகை = மிகுதியான கூட்டம்.
|
படாகை, படாகம்
|
ஓவியம் தாங்கிய துணி
|
படாக்கம்
|
படம் (=உருவம்) +
ஆக்கம் (=துணி) = படாக்கம் >>> படாகம், படாகை = உருவம் வரைந்த துணி.
|
படாடோபம்
|
பெருமை பீற்றும்
செயல்கள்
|
பாட்டோப்பம்
|
பாடு (=பெருமை) + ஓப்பு
(=உயர்த்து) + அம் = பாட்டோப்பம் >>> படாடோபம் = பெருமையை உயர்த்திக்
காட்டச் செய்யப்படுவன.
|
படாந்தரம்
|
முழுப்பொய்
|
படாந்தரம்
|
படு + அந்தரம்
(=வெற்றிடம், பொய்) = படாந்தரம் = முழுப்பொய். ஒ.நோ: படுமோசம் = முழுமோசம்.
|
படி
|
பகை
|
பாறி
|
பாறு (= பிரி) >>>
பாறி >>> பாடி >>> படி = பிரிவை உண்டாக்குவது = பகை.
|
படி
|
உவமை, நகல்
|
படி
|
படு (=ஒப்பு)
>>> படி = ஒப்புமை, ஒப்புடையது.
|
படி
|
பூமி
|
படி
|
படு (=கிட)
>>> படி = கிடப்பது = நிலம், பூமி
|
படிகம்
|
பிச்சை
|
படிகம்
|
படி (= பொருள்) + இகு
(=தாழ்) + அம் = படிகம் = தாழ்ந்து பெறப்படும் பொருள்.
|
படிகம்
|
பளிங்கு
|
பாடிகம்
|
பாடு (=பட்டை, பக்கம்)
+ இங்கம் (=பொருள்) >>> பாடிங்கம் >>> படிக்கம் >>>
படிகம் = பட்டையான பல பக்கங்களைக் கொண்ட பொருள்..
|
படிகம், படிதம், படுதம்
|
கூத்து
|
படிகம், படிதம், படுதம்
|
படு (=வளை, வருந்து)
>>> படுதம், படிதம், படிகம் = உடலை வளைத்து வருந்திச் செய்யப்படுவது.
|
படிகர்
|
வாயிற்காவலர்
|
படிகர்
|
படி (=வாசல்)
>>> படிகர் = வாயிற்காவலர்
|
படிசம்
|
தூண்டில்
|
படிச்சம்
|
படி (=இணங்கு, அகப்படு)
>>> படிச்சு (=அகப்படுத்து, சிக்கவை) >>> படிச்சம்
>>> படிசம் = சிக்கவைப்பது.
|
படிதம்
|
துதி, பாட்டு
|
படிதம்
|
படி (=பாடு)
>>> படிதம் = பாடப்படுவது = பாட்டு
|
படிமம்
|
வடிவம்
|
வடிவம்
|
படிமம் >>>
வடிவம்
|
படிமம், படிமை, படிவம்
|
விரதம், கட்டுப்பாடு
|
படிமம், படிமை, படிவம்
|
படி (= இணங்கு,
கட்டுப்படு) >>> படிமம் = கட்டுப்பாடு, விரதம்.
|
படிமம், படிவம்
|
பொம்மை, மாதிரி
|
படிமம், படிவம்
|
படி (=உவமை, ஒப்பு)
>>> படிமம் = ஒப்பானது, போலியானது, பொம்மை
|
படிலன்
|
வேலையாள்
|
படிலன்
|
படி (=அடங்கு)
>>> படிலன் = அடங்கி நடப்பவன்.
|
படீரம்
|
சந்தனம்
|
படீரம்
|
பாடு (=பூச்சு) + ஈரம்
(=குளிர்ச்சி) = பாடீரம் >>> படீரம் = குளிர்ச்சி தரும் பூச்சு.
|
படீரம்
|
வயல்
|
படீரம்
|
படு (=மிகுதி) + ஈரம் =
படீரம் = ஈரம் மிகுந்த இடம்.
|
படீரம்
|
உயரம்
|
பாடிலம்
|
பாடு (= தாழ்வு) + இலம்
>>> பாடிலம் >>> படீரம் = தாழ்வு இல்லாதது = உயரம்.
|
படீரம்
|
வயிறு
|
பற்றிறம்
|
பற்று (=உணவு) + இறு
(=தங்கு) + அம் = பற்றிறம் >>> பட்டிரம் >>> படீரம் = உணவு
தங்குமிடம்.
|
படுதா
|
திரைச்சீலை
|
படுதை
|
படு (=மறை)
>>> படுதை >>> படுதா = மறைக்க / மூட உதவும் துணி.
|
படோல்
|
புடலங்காய்
|
புடல்
|
புடல் >>>
படோல்
|
படோலகம்
|
சிப்பி, நத்தை
|
பற்றொல்லகம்
|
பற்று (=வீடு, கூடு) +
ஒல்லு (=தாங்கு, சும) + அகம் (=தான்) = பற்றொல்லகம் >>> பட்டொல்லகம்
>>> படோலகம் = தன் வீட்டைத் தானே சுமப்பது.
|
பண்டம்
|
பாத்திரம்
|
பற்றம்
|
பற்று (=கொள்)
>>> பற்றம் >>> பட்டம் >>> பண்டம் = கொள்ளும் கலம்.
ஒ.நோ: பற்று (=கொள்) >>> பற்றல் >>> பத்தல், பத்தர் =
கொள்கலம்.
|
பண்டம்
|
இயற்கைப் பொருள்
|
மண்ணம்
|
மண் (=நிலம்)
>>> மண்ணம் >>> மண்டம் >>> பண்டம் = மண்ணில்
இயல்பாகத் தோன்றியவை.
|
பண்டம்
|
செய்யப்பட்ட பொருள்
|
பண்ணம்
|
பண்ணு (=செய்)
>>> பண்ணம் >>> பண்டம் = செய்யப்பட்ட பொருள்.
|
பண்டம், பண்டி
|
வயிறு, உடல்
|
பற்றம்
|
பற்று (=உணவு,
பாத்திரம்) >>> பற்றம் >>> பட்டம் >>> பண்டம் =
உணவுப் பாத்திரம் = வயிறு, உடல்.
|
பண்டவாளம்
|
கைம்முதல்
|
பண்டவளம்
|
பண்டம் (=பொருள்) +
வளம் = பண்டவளம் >>> பண்டவாளம் = பொருள்வளம்.
|
பண்டனம்
|
போர்
|
பாற்றணை
|
பாற்று (=அழி) + அணை
(=நெருங்கு) = பாற்றணை >>> பாட்டணை >>> பண்டனம் = நெருங்கி
அழிக்கை
|
பண்டனம்
|
கவசம்
|
பண்டணம்
|
பண்டம் (=உடல், மார்பு)
+ அணம் = பண்டணம் >>> பண்டனம் = மார்புடன் அணைந்து இருப்பது.
|
பண்டாரம்
|
செல்வம்
|
பண்டாரம்
|
பண்டம் (=பொருள்) + ஆர்
(=நிறை) + அம் = பண்டாரம் = பொருள் நிறைவு.
|
பண்டாரம்
|
பூ கட்டுபவர்
|
பண்டாரம்
|
பண்டம் (=பூ) + ஆர்
(=கட்டு) + அம் = பண்டாரம் = பூக்களைக் கட்டுபவர்.
|
பண்டாரம்
|
பரதேசி
|
பற்றற்றம்
|
பற்று + அற்றம் =
பற்றற்றம் >>> பட்டறம் >>> பண்டாரம் = பற்று இல்லாதவர்.
|
பண்டாரம்
|
ஏழை
|
பண்டற்றம்
|
பண்டம் (=பொருள்) +
அற்றம் = பண்டற்றம் >>> பண்டாரம் = பொருள் அற்றவர்.
|
பண்டி
|
வண்டி
|
வண்டி
|
வட்டம் >>>
வட்டை (=சக்கரம்) >>> வட்டி >>> வண்டி >>> பண்டி =
சக்கரங்களைக் கொண்டது.
|
பண்டி
|
யானை
|
மண்டி
|
மண்டு (= நிறைய உண் )
>>> மண்டி >>> பண்டி = நிறைய உண்பது.
|
பண்டிகை
|
திருவிழா
|
பற்றீகை
|
பற்று (=அன்பு, பொருள்)
+ ஈகை (=கொடை) = பற்றீகை >>> பட்டீகை >>> பண்டிகை =
ஒருவருக்கொருவர் அன்பையும் பொருளையும் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு.
|
பண்டிதம்
|
கல்வி
|
பண்டிறம்
|
பண் (=இசை, பாட்டு) +
திறம் = பண்டிறம் >>> பண்டிதம் = இசை பாடும் திறமை.
|
பண்டிதம்
|
வைத்தியம்
|
பற்றிதம்
|
பற்று (=மருந்து) +
இதம் (=நன்மை) = பற்றிதம் >>> பட்டிதம் >>> பண்டிதம் =
மருந்தினால் நன்மை உண்டாக்குதல்.
|
பண்டிதன்
|
புலவன்
|
பண்டிதன்
|
பண்டிதம் (=கல்வி)
>>> பண்டிதன் = கற்றவன்.
|
பண்டிதன், பண்டுவன்
|
வைத்தியன்
|
பண்டிதன், பண்டுவன்
|
பண்டிதம் / பண்டுவம்
(=வைத்தியம்) >>> பண்டிதன் / பண்டுவன் = வைத்தியன்
|
பண்டுவம்
|
வைத்தியம்
|
பற்றுவம்
|
பற்று (=மருந்து) +
உவம் (=மகிழ்ச்சி) = பற்றுவம் >>> பட்டுவம் >>> பண்டுவம் =
மருந்தினால் மகிழ்ச்சியை உண்டாக்குதல்.
|
பண்டை
|
கல்வி
|
பற்றை, பண்ணை
|
(1). பற்று (=உணர்,
அறி) >>> பற்றை >>> பட்டை >>> பண்டை = அறியப்படுவது.
(2) பண்ணை (= பாட்டு) >>> பண்டை = கல்வி.
|
பண்ணியம்
|
இயற்கைப் பொருள்
|
மண்ணியம்
|
மண் (=நிலம்)
>>> மண்ணியம் >>> பண்ணியம் = நிலத்தில் இயல்பாகத் தோன்றியவை.
|
பண்ணியம்
|
செய்யப்பட்ட பொருள்
|
பண்ணியம்
|
பண்ணு (=செய்)
>>> பண்ணியம் = செய்யப்பட்ட பொருட்கள்.
|
பணதரம்
|
நல்லபாம்பு
|
பணதரம்
|
பணம் (=படம்) + தரம்
(=தலை) = பணதரம் = படம் உடைய தலையைக் கொண்டது = நல்ல பாம்பு.
|
பணம்
|
உருவக் காசு
|
பண்ணம்
|
பண்ணு (=அலங்கரி, வரை)
>>> பண்ணம் >>> பணம் = வரையப்பட்ட உருவத்தைத் தாங்கியது.
|
பணம்
|
பாம்பின் பொறி, பாம்பு
|
பண்ணம்
|
பண்ணு (= அலங்கரி, வரை)
>>> பண்ணம் >>> பணம் = (1) வரையப்பட்ட உருவம். (2) வரையப்பட்ட
உருவத்தைத் தாங்கியது.
|
பணவம்
|
பறை
|
பண்ணவம்
|
பண்ணு (=ஒலி, இசை)
>>> பண்ணவம் >>> பணவம் = இசைக்கப்படுவது = பறை.
|
பணவன்
|
வேலைக்காரன்
|
பண்ணவன்
|
பண்ணு (= பணி, செய்)
>>> பண்ணவன் >>> பணவன் = பணிந்து செய்பவன்.
|
பணாகரம்
|
நல்ல பாம்பு
|
பணாகரம்
|
பணம் (=படம்) + அகரம்
(=தலை) = பணாகரம் = படம் உடைய தலையைக் கொண்டது.
|
பணி, பணினம்
|
நல்ல பாம்பு
|
பணி, பணினம்
|
பணம் (=படம்)
>>> பணி, பணினம் = படமுடையது
|
பணிக்கம், படிக்கம்,
படிக்கன்
|
எச்சில் பாத்திரம்
|
பணிக்கம், படிக்கம்,
படிக்கன்
|
பணி (= வளை, குனி) +
இகு (= சொரி, உமிழ்) + அம் >>> பணிகம் >>> பணிக்கம்
>>> படிக்கம் = குனிந்து உமிழும் எச்சிலுக்கான பாத்திரம்.
|
பணிக்கம், பணிக்கை
|
திருத்தம்
|
பண்ணிகம்
|
பண்ணு (=அலங்கரி,
திருத்து) >>> பண்ணி >>> பண்ணிகம் >>> பணிக்கம் =
திருத்தம்.
|
பணிக்கன்
|
ஆசிரியன்
|
பணிக்கன்
|
பணிக்கம் (=திருத்தம்)
>>> பணிக்கன் = திருத்தம் செய்பவன்.
|
பணிக்கன்
|
தலைவன், யானைப் பாகன்
|
பணிக்கன்
|
பணி (=கட்டளையிடு)
>>> பணிக்கன் = கட்டளை இடுபவன்.
|
பணிதம்
|
பந்தயப் பொருள்
|
பணைதம்
|
பணை (=கட்டு, பிணி)
>>> பணைதம் >>> பணிதம் = ஈடாகக் கட்டப்பட்ட பொருள்.
|
பணிதி
|
சொல்
|
பன்னிதி
|
பன்னு (=சொல்)
>>> பன்னிதி >>> பணிதி = சொல்லப்பட்டது = சொல்.
|
பணையம், பணயம்
|
ஈட்டுப் பொருள்
|
பணையம், பணயம்
|
பணை (=கட்டு, பிணி)
>>> பணையம் >>> பணயம் = ஈடாகக் கட்டப்பட்டது.
|
பதக்கணம், பிரதட்சணம்
|
வட்டமாய்ச் சுற்றி
வருதல்
|
வலக்கணம்
|
வல (= சுற்று) + கணம்
(=வட்டம்) = வலக்கணம் >>> பறக்கணம் >>> பதக்கணம் >>>
ப்ரதக்ச~ணம் >>> பிரதட்சணம் = வட்டமாய்ச் சுற்றி வருதல்.
|
பதக்கம்
|
அணிவிக்கப்படும் தங்கம்
|
பெய்தங்கம்
|
பெய் (=அணிவி) + தங்கம்
= பெய்தங்கம் >>> பெதக்கம் >>> பதக்கம் = அணிவிக்கப்படும்
தங்கம்
|
பதகம்
|
பறவை
|
பறகம்
|
பற >>> பறகம்
>>> பதகம் = பறப்பது
|
பதங்கம்
|
வெட்டுக்கிளி
|
பாறாக்கம்
|
பாறு (=அழிவு, கேடு) +
ஆக்கம் (=விளைச்சல்) = பாறாக்கம் >>> பதங்கம் = விளைந்த பயிர்களை
அரித்துக் கேட்டைத் தரும் பூச்சி.
|
பதங்கம்
|
பாதரசம்
|
பாறங்கம்
|
பாறு (=அழிவு, கேடு) +
அங்கம் (=பொருள்) = பாறங்கம் >>> பதங்கம் = அழிவைத் தரும் பொருள்.
|
பதங்கம்
|
அடியில் படியும் மசிப்
பொருள்
|
மைதங்கம்
|
மை + தங்கு + அம் =
மைதங்கம் >>> பைதங்கம் >>> பதங்கம் = மைபோலத் தங்கும் பொருள்.
|
பதங்கன்
|
சூரியன்
|
வறக்கன்
|
வறக்கு >>>
வதக்கு (=உலர்த்து) >>> வதக்கன் >>> பதங்கன் = உலர்த்துபவன் =
சூரியன்
|
பதங்கு
|
தரையில் உள்ள பதுங்கு
குழி
|
பதகம், பதுங்கு
|
(1). பது (=மறை, ஒளி) +
அகம் (=இடம்) = பதகம் >>> பதங்கம் >>> பதங்கு = ஒளியும் இடம்.
(2) பதுங்கு (=ஒளி, மறை) >>> பதங்கு = ஒளியும் இடம்.
|
பதங்கு
|
கூரை
|
பதகம்
|
பது (=மூடு, மறை) +
அகம் (=வீடு) = பதகம் >>> பதங்கம் >>> பதங்கு = வீட்டிற்கு
மறைப்பு தருவது
|
பதங்கு
|
அறுக்கப்பட்டது, பாதி
|
பாறங்கம்
|
பாறு (=அறு) + அங்கம்
(=பொருள்) = பாறங்கம் = பதங்கம் >>> பதங்கு = அறுக்கப்பட்ட பொருள்.
|
பதடி
|
வில்
|
மாறடி
|
மாறு (=வளை) + அடி
(=வடிவம்) = மாறடி >>> பதடி = வளைந்த வடிவம் கொண்டது.
|
பதணம், பதனம்
|
சுவர், மதில்
|
பதணம்
|
பது (=மறை) + அணம் =
பதணம் = மறைப்பை உண்டாக்குவது = சுவர்.
|
பத்தகாரன்
|
சமையல்காரன்
|
வத்தகாரன்
|
வத்தம் (=உணவு) + காரன்
(=செய்பவன்) = வத்தகாரன் >>> பத்தகாரன் = சமையற்காரன்
|
பத்தசை
|
அமுதம்
|
பத்தசை
|
பதம் (= இனிமை) + அசை
(=உணவு) = பத்தசை = இனிமை மிகுந்த உணவு.
|
பத்ததி
|
ஒழுங்கு, வழி, நெறி.
|
பாற்றது
|
பாற்று (= வகு, வரையறு)
>>> பாற்றது >>> பாற்றதி >>> பத்ததி = வகுக்கப் /
வரையறுக்கப் பட்டது.
|
ஞாயிறு, 29 மார்ச், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 13
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.