வெள்ளி, 20 மார்ச், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 12



பிறசொல்
பொருள்
தமிழ்ச்
சொல்
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
பங்கம்
சேறு
வாங்கம்
வாங்கு ( = உள்ளே இழு) >>> வாங்கம் >>> பாங்கம் >>> பங்கம் = காலை உள்ளே இழுப்பது.
பங்கம், பங்கு, பங்குரம்
முடம், வளைவு, முடக்கு
வாங்கம்
வாங்கு (=வளை) >>> பாங்கு >>> பங்கு >>> பங்கம், பங்குரம் = வளைவு, முடக்கு
பங்களம்
பதர்
பாங்கலம்
பாங்கு (=பயன்) + அலம் (=அற்றது) = பாங்கலம் >>> பங்களம் = பயனற்றது = பதர்.
பங்கறை, பங்குதை
அழகற்றவன்
பாங்கறை
பாங்கு (=அழகு) + அறை (=அற்றவன்) = பாங்கறை >>> பங்கறை >>> பங்குதை = அழகற்றவன்.
பங்கன்
கருமி
பக்கன்
பகு (=வெட்டு, குறை) >>> பக்கன் >>> பங்கன் = குறைத்துக் கொடுப்பவன் = கருமி.
பங்காரம்
எல்லை, வரம்பு
பக்காரம்
பகு (=பிரி) + ஆரம் (=கோடு, வரி) = பக்காரம் >>> பங்காரம் = பிரிக்கின்ற கோடு / வரி = எல்லை, வரம்பு.
பங்காரம், பங்காரு
தங்கம்
பங்காரம்
பகரம் (=ஒளி) >>> பக்கரம் >>> பங்காரம் = ஒளி வீசுவது = தங்கம். ஒ.நோ: ஒண்மை (=ஒளி) >>> ஒண்ணம் >>> சொண்ணம் >>> சொர்ணம் = ஒளிர்வது = தங்கம்.
பங்காலி
வௌவால்
மங்குலி
மங்குல் (=இரவு) >>> மங்குலி >>> பங்குலி >>> பங்காலி = இரவில் திரியும் பறவை.
பங்கி
மயிர்
பங்கி
பகு (=வெட்டு, குறை) >>> பக்கி >>> பங்கி = அடிக்கடி குறைக்கப்படுவது = மயிர்.
பங்கி
வெட்டு
பக்கு
பகு (=வெட்டு) >>> பக்கு >>> பங்கு >>> பங்கி = வெட்டு
பங்கி
வகை
பங்கி
வகு >>> வங்கு >>> வங்கி >>> பங்கி = வகை
பங்கிலம்
படகு, தெப்பம்
வங்கிலம்
வங்கம் (=படகு) >>> வங்கிலம் >>> பங்கிலம்
பங்குசம்
தலை அலங்காரம்
பாங்குச்சம்
பாங்கு (=அழகு, அலங்காரம்) + உச்சம் (=தலை) = பாங்குச்சம் >>> பங்குசம் = தலை அலங்காரம்.
பங்குனி
இறுதி மாதம்
பங்குனி
பகு (=வரையறு, முடிவுசெய்) >>> பக்கு >>> பக்குனி >>> பங்குனி = ஆண்டின் முடிவு.
பசகன்
சமையல்காரன்
பசகன்
(1). பய (=விளை, உண்டாகு) >>> பயக்கு (=உண்டாக்கு, படை) >>> பசக்கு >>> பசகன் = உணவைப் படைப்பவன். (2) பச (=ஒழுகு, வடி) >>> பசக்கு (=வடியச்செய்) >>> பசகன் = சோறு வடிப்பவன் = சமையல்காரன்.
பச்சக்கம்
கண்முன்னே நிகழ்வது
வாசக்கம்
வாய் (= நிகழ், நடைபெறு) + அக்கம் (=கண்) = வாயக்கம் >>> வாசக்கம் >>> பாசக்கம் >>> பச்சக்கம் = கண் முன்னால் நடைபெறுவது / நிகழ்வது.
பச்சாதாபம்
கழிவிரக்கம், கவலை.
பாழாற்றாமை
பாழ் (=வீண்) + ஆற்றாமை (= தாங்காமை, கவலை) = பாழாற்றாமை >>> பாசாத்தாமை >>> பச்சாத்தாமம் >>> பச்சாதாபம் = வீணானதற்காகக் கவலைப்படுதல்.
பச்சாது
பின்பு
பச்சாது
பச்சை (=இளமை) >>> பச்சாது = இளையது, பிற்பட்டது >>> பின்பு.
பச்சிமம்
பின்புறம், பிற்பட்டது
பச்சிமம்
பச்சை (=இளமை) >>> பச்சிமம் = இளையது, பிற்பட்டது >>> பின்பு, பின்புறம்.
பச்சிமம்
மேற்கு
பச்சிமம், மாய்ச்சிமம்
(1). பச்சை (=இளமை) >>> பச்சிமம் = இளையது, பிற்பட்டது >>> சூரியன் பிற்படும் / மறையும் திசை. (2) மாய்ச்சல் (=மறைவு) >>> மாய்ச்சிமம் >>> பச்சிமம் = மறையும் திசை.
பச்சுதி
பின்வாங்கு, நழுவு
பச்சுதி
பச்சை (=இளமை) >>> பச்சாது (= இளையது, பிற்பட்டது) >>> பச்சுதி = பிற்படு, பின்வாங்கு, நழுவு.
பசதன்
சூரியன், அக்கினி
பையறன்
பை (=பசுமை, ஈரம்) + அறு + அன் = பையறன் >>> பசறன் >>> பசதன் = ஈரத்தைப் போக்குபவன்.
பசந்தம்
நேரம்
பசந்தம்
பச (=ஒழுகு, கட) + தம் = பசத்தம் >>> பசந்தம் = ஒழுகும் / கடக்கும் இயல்பினது = நேரம்.
பசலை
கவலை
பசலை
பச (=அழு, கலங்கு) >>> பசலை = கலக்கம், கவலை.
பசவம்
நந்தி, மாடு
பாசம்மம்
பசுமை + அம்மு (=உண்) + அம் = பாசம்மம் >>> பசவம் = பசுமையான உணவினை உண்பது.
பசவ்வியம்
புல்
பாசம்மியம்
பசுமை + அம்மு (=உண்) + இயம் = பாசம்மியம் >>> பசவ்வியம் = பசுமையான உணவு.
பசள்
பலாப்பழம்
பைஞ்சுளை, பஞ்சளை
(1). பை (=இளமை, ஒளி) + சுளை = பைஞ்சுளை >>> பஞ்சளை >>> பசள் = மஞ்சள் நிறத்தில் பளபளக்கும் சுளை. (2) பஞ்சு (=நார்) + அளை (=கல) = பஞ்சளை >>> பசள் = நார் கலந்திருக்கும் பழம்.  
பசறு
சாறு
பசறு
பச (= ஒழுகு, வடி) >> பசறு = வடிக்கப்பட்டது.
பசனம்
சமையல்
பசான்னம்
பச (= ஒழுகு, வடி) + அன்னம் (=சோறு) >>> பசான்னம் >>> பசனம் = சோறு வடித்தல் = சமையல்.
பசனை, பசனம்
இசைப்பாடல்
பாயனை, பாயனம்
பாயம் (=இசைப்பாடல்) >>> பாயன் + ஐ >>> பாயனை = பாசனை >>> பசனை = இசையுடன் பாடுதல்.
பசாசம்
வல்லிரும்பு
பையயம்
பை (=வலிமை) + அயம் (=இரும்பு) = பையயம் >>> பசாசம் = வலிமையான இரும்பு வகை.
பசாசம், பிசாசம், பிசாசு, பைசாசம்
பேய்களே அஞ்சி நடுங்கும் உருவுடையது
பேயச்சம்
பேய் + அச்சம் = பேயச்சம் >>> பைசாசம் >>> பிசாசம், பசாசம், பிசாசு = பேய்களுக்கே அச்சம் தருவது.
பசாடை, பசாடு
ஒட்டியிருக்கும் மேலடுக்கு
பசாடை, பசாடு
பசை (=ஒட்டு) + ஆடை (=மேலடுக்கு) = பசாடை >>> பசாடு = ஒட்டியிருக்கும் மேலடுக்கு.
பசிதம்
சாம்பல்
பசிதம்
பசி (=எரி) >>> பசிதம் = எரிந்தது = சாம்பல்.
பசியம்
கயிறு
வசியம்
வசி (= வளை, அடக்கு, கட்டு) >>> வசியம் >>> பசியம் = கட்ட உதவுவது = கயிறு.
பசு
வளர்ப்பு விலங்குகள்
பழு, பசு
பழு (=பக்குவமாகு) >>> பசு = பக்குவம் அடைந்தது = வளர்ப்பு விலங்குகள்.
பசுக்கு
சேர், இணை
பசக்கு
பழக்கு (=கட்டுப்படுத்து) >>> பசக்கு >>> பசுக்கு = கட்டு, சேர்.
பசுகை
சிறிய வளர்ப்பு விலங்கு
பசுகை
பசு (=வளர்ப்பு விலங்கு) + கை (=சிறுமை) = பசுகை = சிறிய வளர்ப்பு விலங்கு.
பசுதை
விலங்குக் குணம்
பசுதை
பசு (=விலங்கு) >>> பசுதை = விலங்கின் குணம்.
பசுமம்
சாம்பல்
பசிமம்
பசி (=எரி) >>> பசிமம் >>> பசுமம் = எரிந்தது = சாம்பல்
பசூசகன்
சோதிடன்
பாசூழ்கன்
பசுமை (=நல்ல நேரம்) + ஊழ்கன் (= கணிப்பவன்) = பாசூழ்கன் >>> பசூசகன் = நல்ல நேரத்தைக் கணிப்பவன்.
பசேலிமன்
சூரியன்
பசேலிமன்
பசி (=தீ) + ஏலு (= ஏற்படுத்து, உண்டாக்கு) + மன் = பசேலுமன் >>> பசேலிமன் = தீயை உண்டாக்குபவன்.
பசேலுகன்
சமையற்காரன்
பசேலுகன்
பசி (=தீ) + ஏலு (=மேற்கொள்) + கன் = பசேலுகன் = தீயை மேற்கொண்டு வினையாற்றுபவன்.
பஞ்சசியம், பஞ்சாசியம்
சிங்கம்
பஞ்சுசிகையம்
பஞ்சு + சிகை (=தலைமுடி) + அம் = பஞ்சுசிகையம் >>> பஞ்சசியம் = பஞ்சு போன்ற தலைமுடியைக் கொண்டது.
பஞ்சதம், பஞ்சதை
மரணம்
பஞ்சற்றம்
பஞ்சம் (=ஐந்து) + அற்றம் (=அழிவு) = பஞ்சற்றம் >>> பஞ்சத்தம் >>> பஞ்சதம் = ஐந்து பூதங்களின் அழிவினால் விளைவது = மரணம்.
பஞ்சதாரை
சக்கரை.
பஞ்சதாரை
பஞ்சு (=நார்) + தாரை (=நீர்) = பஞ்சுதாரை >>> பஞ்சதாரை = நாருக்குள் நீரைப் பொதித்து வைத்திருப்பது = கரும்பு >>> கரும்பில் இருந்து எடுக்கப்படும் இனிப்பு.
பஞ்சது
நேரம்
பசது
பச (=ஒழுகு, கட) >>> பசது >>> பஞ்சது = கடப்பது.
பஞ்சது
குயில்
பாயது
பாயம் (=இசை) >>> பாயது >>> பாசது >>> பஞ்சது = இசை போன்ற ஒலியில் கூவுவது = குயில்.
பஞ்சம்
வறுமை
பாழியம்
பாழ் (=வெறுமை, இன்மை) >>> பாழியம் >>> பாஞ்சம் >>> பஞ்சம் = வெறுமை, வறுமை.
பஞ்சமம்
அழகு
பஞ்சமம்
பசுமை (=இளமை, அழகு) >>> பசுமம் >>> பஞ்சமம்
பஞ்சமம்
நுட்பத் திறமை
பஞ்சுமம்
பஞ்சு (= நுண் இழை) >>> பஞ்சுமம் >>> பஞ்சமம் = பஞ்சு போன்ற நுட்பம் >>> நுட்பத் திறமை.
பஞ்சமம்
இசை, பாட்டு
பாயம்
பாயம் (=இசைப்பாட்டு) >>> பாசம் >>> பாச்சம் >>> பாஞ்சம் >>> பஞ்சமம் = இசையும் பாட்டும்.
பஞ்சமன்
பாண்டியன்
பஞ்சமன்
பஞ்சமம் (=இசைப் பாட்டு) >>> பஞ்சமன் = மூவேந்தருள் இசையும் பாட்டும் கல்வியும் மிக்கிருந்த மதுரைக் கோன்.
பஞ்சர்
தரிசு நிலம்
பாழயல்
பாழ் (=வெறுமை, இன்மை) + அயல் (=இடம்) = பாழயல் >>> பாஞ்சல் >>> பஞ்சர் = வெற்று இடம், தரிசு நிலம்.
பஞ்சரம்
கூடு, கூண்டு, உடல்
வாழ்சாரம்
வாழ் (=வசி, தங்கு) + சார் (=இடம்) + அம் = வாழ்சாரம் >>> வாச்சாரம் >>> பாஞ்சாரம் >>> பஞ்சரம் = உயிர்கள் வாழும் / தங்கும் இடம் = கூடு, கூண்டு, உடல்.
பஞ்சரி
கொஞ்சிப் பேசு
பாசரி
பசுமை (=இனிமை) + அரி (=ஒலி, பேசு) = பாசரி >>> பச்சரி >>> பஞ்சரி = இனிமையாகப் பேசு = கொஞ்சு.
பஞ்சவடம், பஞ்சவடி
பூணூல்
பஞ்சுவடம்
பஞ்சு (=நூல்) + வடம் (=மாலை) = பஞ்சுவடம் >>> பஞ்சவடம் = நூலினால் ஆன மாலை.
பஞ்சனம்
அழிவு
பாழணம்
பாழ் (=அழிவு) + அணம் = பாழணம் >>> பாசனம் >>> பஞ்சனம் = அழிவு.
பஞ்சனி
சூதாடு பலகை
பாழணை
பாழ் (=அழிவு, நாசம்) + அணை (=பலகை) = பாழணை >>> பாசனை >>> பஞ்சனி = நாசம் விளைவிக்கும் பலகை.
பஞ்சாங்கம்
நாட்காட்டி
பஞ்சாங்கம்
பஞ்சம் (=ஐந்து) + அங்கம் (=பிரிவு) = பஞ்சாங்கம் = ஐந்து பிரிவுகளைக் கொண்டது.
பஞ்சாங்கம்
குதிரைப்படை
பாயாக்கம்
பாய் (=விரை) + ஆக்கம் (=படை) = பாயாக்கம் = பாசாக்கம் >>>பஞ்சாக்கம் >>> பஞ்சாங்கம் =விரைந்து செல்லும் படை.
பஞ்சாட்சரம்
ஐந்தெழுத்து
பஞ்சாச்சரம்
பஞ்சம் (=ஐந்து) + அச்சரம் (=எழுத்து) = பஞ்சாச்சரம் >>> பஞ்சாட்சரம் = ஐந்தெழுத்து
பஞ்சாயத்து
ஐவர் குழு விசாரிக்கும் இடம்
பஞ்சாயத்துறை
பஞ்சம் (=ஐந்து) + ஆய் (=ஆலோசி, விசாரி) + துறை (=இடம்) = பஞ்சாயத்துறை = ஐவர் குழுவாகக் கூடி விசாரிக்கும் இடம்.
பஞ்சாயம்
ஐவர் குழு
பஞ்சாயம்
பஞ்சம் (=ஐந்து) + ஆயம் (=குழு) = பஞ்சாயம் = ஐவர் குழு
பஞ்சாயம்
விசாரணை
பஞ்சாயம்
பஞ்சம் (=ஐந்து) + ஆய் (=விசாரி) + அம் = பஞ்சாயம் = ஐவர் கூடி விசாரித்தல்.
பஞ்சாவத்தம்
பிணம்
பஞ்சாவற்றம்
பஞ்சம் (=ஐந்து) + அவற்றம் (=கேடு) = பஞ்சாவற்றம் >>> பஞ்சாவத்தம் = ஐம்பூதங்களும் கெட்டது = பிணம்.
பஞ்சான்
கைக் குழந்தை
பாசான்
பசுமை (=இளமை, புதுமை) + ஆன் = பாசான் >>> பச்சான் >>> பஞ்சான் = புதியதாகப் பிறந்த குழந்தை. 
பஞ்சிகை
நாட்காட்டி
பஞ்சாகை
பஞ்சம் (=ஐந்து) + அகை (= பிரிவு) = பஞ்சாகை >>> பஞ்சிகை = ஐந்து பிரிவுளைக் கொண்டது.
பஞ்சிதம்
விண்மீன்
பயிதம்
பை / பய் (=ஒளிர்) + தம் = பயிதம் >>> பசிதம் >>> பஞ்சிதம் = ஒளிர்வன = விண்மீன்
பஞ்சூகம்
புகழ், பெருமை
பையூக்கம்
பை (=ஒளிர், விளங்கு) + ஊக்கம் (=மிகுதி) = பையூக்கம் >>> பச்சூகம் >>> பஞ்சூகம் = மிக்க விளக்கம் = புகழ், பெருமை.
பட்சம்
பக்கம்
பக்கம்
பக்கம் >>> பக்ச~ம் >>> பட்சம்
பாகு
உணவு
பாகு
பக்கு (=உண்ணு) >>> பாகு = உண்ணப்படுவது
பாசாணம், பாசா~ணம், பாடாணம்
நச்சுக்கல்
மாசாணம்
மாசு (=நச்சு) + ஆண் (=வலிமை) + அம் = மாசாணம் >>> பாசாணம் >>> பாசா~ணம் >>> பாடாணம் = நச்சுடைய வலிமையான பொருள்.
பிம்பம்
நிழல்
வீழ்மம்
வீழ் (=படி, விழு) >>> வீழ்மம் >>> வீய்மம் >>> விம்மம் >>> பிம்பம் = பொருளின் கீழே படிவது / விழுவது.
பிரபை
திருவாசி, ஒளி
பிறபை
பிற (=தோன்று) + பை (=ஒளிர்) = பிறபை >>> பிரபை = தலையின் பின்னால் தோன்றி ஒளிர்வது = திருவாசி
பிரம்மசரியம்
பிறவிக்கான
மலங்களை
அறுப்பது
பிரம்மசரியம்
பிறப்பு + ஆசு (=ஆணவமலம்) + அரியம் (=அறுப்பது) = பிறப்பாசரியம் >>> பிரம்மாசரியம் >>> பிரம்மசரியம் = பிறப்புக்கான ஆணவமலங்களை அறுப்பது.
பிரயோசனம், பிரயோசகம்
ஆதாயம், நற்பயன்
புரயூழணம், புரயூழகம்
புரை (=பெருமை, நன்மை) + ஊழ் (=முடிவு, பயன்) + அணம் = புரயூழணம் >>> புரயூசனம் >>> பிரயோசனம் = பெருமை / நன்மை தரக்கூடிய முடிவு / பயன்..
பின்னம்
பிரிவு
மின்னம்
மின்னல் (=பிளவு) >>> மின்னு >>> பின்னு (= பிள, பிரி) >>> பின்னம் = பிளவு, பிரிவு
புராணம்
பழையது
புரயணம்
புரை (=பழமை) + அணம் = புரயணம் >>> புராணம் = பழமை வாய்ந்தது.
முகூர்த்தம்
நல்ல நேரம்
முகூழ்த்தம், முகூர்த்தம்
முகை (=அரும்பு) + ஊழ் / ஊர் (=அவிழ், மலர்) + தம் = முகூழ்த்தம் / முகூர்த்தம் = அரும்புகள் மலரும் பொழுது = நல்ல நேரம். பி.கு: நம்நாட்டில் பெரும்பாலான மலர்கள் அதிகாலையில் மலர்வதால் அதிகாலை நேரமே முகூர்த்த வேளையாகக் கொள்ளப்படுகிறது.
மூர்த்தி
உரு, வடிவம்
முருந்து
உரு (=தோன்று) >>> முரு >>> முருந்து (=தோன்றியது = முளை, தோற்றம்) >>> முருத்து >>> மூர்த்தி = தோற்றம், வடிவம், உரு
வச்`து
பொருள்
பற்று
பற்று (=பொருள்) >>> பத்து >>> வத்து >>> வச்`து
வாக்கியம்
பேச்சு
வாக்கியம்
வகு (=பேசு) + இயம் = வாக்கியம் = பேச்சு. ஒ.நோ: (1) கொடு (=வளை) + அம் = கோட்டம் (=வளாகம்), (2) படு (=வீழ்) + அம் = பாட்டம் = வீழ்வது = மழை.
வாக்கு
சொல்
வாக்கு
வகு (= சொல்லு) >>> வாக்கு = சொல். ஒ.நோ: (1) தடு >>> தாட்டு = மறு, (2) பொறு >>> போற்று.
வாச்`து
வாழிடம்
வாழ்த்து
வாழ் (=வசி) + து = வாழ்த்து >>> வாச்`து = வாழப்படுவது = வாழ்க்கை, வாழிடம். ஒ.நோ: (1). போழ் (=பிள) + து = போழ்து, பொழுது = பிளக்கப்படுவது. (2) உய் (=செலுத்து) + து = உய்த்து >>> உந்து = செலுத்தப்படுவது = வண்டி..
வாதம்
பேச்சு
மாத்தம்
மாற்று (=பேசு) >>> மாத்து >>> மாத்தம் >>> வாதம் = பேச்சு
வாதி
பேசு
வாதி
வாதம் (=பேச்சு) >>> வாதி = பேசு
வார்த்தை
பேச்சு
மாற்றை
மாற்று (=பேசு) >>> மாற்றை >>> மார்தை >>> வார்த்தை = பேச்சு
விபூதி
சாம்பல்
வீவுறி
வீவு (=முடிவு) >>> வீவுறு (=முடிவடை) >>> வீவுறி >>> வீபுதி >>> விபூதி = முடிவில் அடையப்படுவது = எரிந்தபின் எஞ்சும்பொடி
வியாபாரம்
விற்பனை
விழுபாரம்
(2). விழு (=கழி) + பாரம் (=சரக்கு, பொருள்) = விழுபாரம் >>> வியுபாரம் >>> வியாபாரம் = சரக்கினை விற்றுக் கழித்தல். ஒ.நோ: நீ (=கழி) + பாரம் (=சரக்கு, பொருள்) = நீபாரம் = நீவரம் = சரக்கினை விற்றுக் கழித்தல்.
விரக்தி
வெறுப்பு
விலத்தி
விலத்து (=விலக்கு) >>> விலத்தி >>> விரத்தி >>> விரக்தி = விலக்கத்தை உண்டாக்குவது.
விரதம்
நோன்பு
விலத்தம்
விலத்து (=விலக்கு) >>> விலத்தம் >>> விரத்தம் >>> விரதம் = விலக்கிய நிலை. 
விரோதம்
பகை
விலத்தம், வெறுத்தம்
(1). விலத்து (=விலக்கு, பிரி) >>> விலத்தம் >>> விரத்தம் >>> விரோதம் = பிரிவை உண்டாக்குவது. (2) வெறு >>> வெறுத்தம் = வெறோதம் >>> விரோதம் = வெறுப்பு.
விவாதம்
மாறுபட்ட பேச்சு
வீவாதம்
வீ (=மாறு) + வாதம் (=பேச்சு) = வீவாதம் >>> விவாதம் = மாறுபட்ட பேச்சு
விவாதி
மாறுபட்டு பேசு
வீவாதி
வீவாதம் (=மாறுபட்ட பேச்சு) >>> வீவாதி >>> விவாதி
வின்னம்
பிரிவு
மின்னம்
மின்னல் (=பிளவு) >>> மின்னு >>> வின்னு (= பிள, பிரி) >>> வின்னம் = பிளவு, பிரிவு
வினியோகம்
பிரித்துக் கொடுத்தல்
வின்னியோக்கம்
வின்னு >>> வின்னி (=பிரி) + ஓக்கு (=கொடு) + அம் = வின்னியோக்கம் >>> வினியோகம் = பிரித்துக் கொடுக்கை.
வினியோகி
பிரித்துக்கொடு
வினியோகி
வினியோகம் (=பிரித்துக் கொடுக்கை) >>> வினியோகி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.