சனி, 7 மார்ச், 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 10சொல்
பொருள்
தமிழ்ச் சொல்
மூலச் சொல்லும்
தோன்றும் முறையும்
~நிரத்தகம்
பயனின்மை, பொருளின்மை
நிரத்தகம்
நிர் (=இன்மை) + அத்தகம் (=பொருள், பயன்) = நிரத்தகம் = பொருளின்மை, பயனின்மை
~நிர்த்தனன்
ஏழை
நிர்த்தனன்
நிர் (=இன்மை) + தனம் (=பொருள்) = நிர்த்தனம் >>> நிர்த்தனன் = பொருள் அற்றவன் = ஏழை.
~நிர்த்தூளி
சர்வநாசம்
நிறைத்தூளி
நிறை + தூளி (=புழுதி) = நிறைத்தூளி >>> நிர்த்தூளி = எங்கும் புழுதி பரந்து நிறையுமாறு நாசமாக்குதல்.
~நிர்த்தேசம்
கட்டளை, குறித்துக் காட்டல்
நிறுத்தேயம்
நிறுத்து (=நியமி, ஒப்படை) + ஏய் (=ஏவு) + அம் = நிறுத்தேயம் >>> நிர்த்தேசம் = நியமித்து ஏவுகை = கட்டளை, குறித்துக் காட்டுகை.
~நிர்த்தேசி
கட்டளையிடு, குறித்துக்காட்டு
நிறுத்தேய்
நிர்த்தேசம் (=கட்டளை, குறித்துக் காட்டுகை) >>> நிர்த்தேசி = கட்டளையிடு, குறித்துக் காட்டு.
~நிர்த்தொந்தம்
பற்றின்மை
நிர்த்தொந்தம்
நிர் (=இன்மை) + தொந்தம் (=பற்று) = நிர்த்தொந்தம் = பற்றின்மை.
~நிர்த்தோசம்
குறையின்மை
நிர்த்தோசம்
நிர் (=இன்மை) + தோசம் (=குறைபாடு) = நிர்த்தோசம்
~நிரதி
பற்று, ஆசை
நிரதி
இரதி (=விருப்பம்) >>> ஞிரதி >>> நிரதி
~நிரந்தரம்
முடிவு, அழிவு
நிறைத்தரம்
நிறை (=முற்று, முடி) + தரம் (=நிலை) = நிறைத்தரம் >>> நிறத்தரம் >>> நிரந்தரம் = முற்றிய / முடிந்த நிலை = முடிவு, அழிவு.
~நிரந்தரம், ~நிரந்தம்
முடிவின்மை, தொடர்ச்சி
நிரந்தம்
நிர் (=இன்மை) + அந்தம் (=முடிவு) = நிரந்தம் >>> நிரந்தரம் = முடிவின்மை, தொடர்ச்சி.
~நிர்ப்பந்தம்
வலுக்கட்டாயம்
நிறுப்பந்தம்
நிறு (=நிலையான) + பந்தம் (=கட்டு) = நிறுப்பந்தம் >>> நிர்ப்பந்தம் = நிலையான கட்டு = வலுவான கட்டுநிலை.
~நிர்ப்பந்தி
கட்டாயப்படுத்து
நிறுப்பந்தி
நிறுப்பந்தம் (=வலுக்கட்டாயம்) >>> நிர்ப்பந்தி = கட்டாயப்படுத்து
~நிரபி
மஞ்சள்
நிறமி
நிறம் (=ஒளி) >>> நிறமி >>> நிரபி = ஒளிமிக்கது
~நிரம்பரம்
ஆடையற்ற நிலை
நிரம்பரம்
நிர் (=இன்மை) + அம்பரம் (=ஆடை) = நிரம்பரம் = ஆடையின்மை
~நிர்மலம்
தூய்மை
நிர்மளம்
நிர் (=இன்மை)+மளம் (=கழிவு) =நிர்மளம் >>>நிர்மலம் =கழிவின்மை
~நிர்மாணம்
நிலையான ஆக்கம்
நிறுவாணம்
நிறுவு + ஆணம் (=உறுதி) = நிறுவாணம் >>> நிர்மாணம் = உறுதியாக நிறுவப்படுவது = நிலையான ஆக்கம்.
~நிர்மாணி
நிலையாக ஆக்கு
நிர்மாணி
நிர்மாணம் (=நிலையான ஆக்கம்) >>> நிர்மாணி
~நிர்மாலியம்
பெருமை அற்ற பொருட்கள்
நிர்மாலியம்
நிர் (=இன்மை) + மால் (=பெருமை) + இயம் = நிர்மாலியம் = பெருமை அற்ற பொருட்கள்.
~நிர்மி
படை, இயற்று
நிறுமி
நிறு (=படை) >>> நிறுவு >>> நிறுமி >>> நிர்மி = படை, இயற்று
~நிர்மிதம், ~நிர்மிதி
படைப்பு
நிறுமிதம்
நிறுமி (=படை) >>> நிறுமிதம் >>> நிர்மிதம் = படைக்கப்பட்டது
~நிர்மூடன்
முழுமுட்டாள்
நிறைமூடன்
நிறை + மூடன் = நிறைமூடன் >>> நிர்மூடன் = முழுமுட்டாள்
~நிர்மூலம்
சர்வநாசம்
நீறுமூலம்
நீறு (=அழி) + மூலம் (=வேர்) = நீறுமூலம் >>> நிர்மூலம் = வேரோடு அழித்தல் = சர்வ நாசம்.
~நிரயம்
நரகம்
நீறயம்
நீறு (=அழி) + அயம் (=பள்ளம்) >>> நீறயம் >>> நிரயம் = பாவிகள் அழிக்கப்படுகின்ற பள்ளமான உலகம்.
~நிரயனம், ~நிராயனம்
செங்குத்துத் தூரம்
நிறாயனம், நிறயனம்
நிறு (=நிற்கின்ற, செங்குத்தான) + அயனம் (=தூரம்) = நிறயனம், நிறாயனம் >>> நிரயனம், நிராயனம் = செங்குத்தான தொலைவு.
~நிர்வகி
முழுமையாக்கு, முடிவுசெய்
நிறைவாக்கு
நிர்வாகம் (= முழுமையாக்கம்) >>> நிர்வகி.
~நிரவதி
எல்லையற்றது
நிரவதி
நிர் (=இன்மை) + அவதி (=எல்லை) = நிரவதி = எல்லையற்றது
~நிரவ்வியயம்
அழிவற்றது
நிரவியம்
நிர் (=இன்மை) + அவியம் (=அழிவு) = நிரவியம் = அழிவற்றது
~நிர்வாகம்
முழுமையாக்கம், முடிவு
நிறைவாக்கம்
நிறைவு + ஆக்கம் = நிறைவாக்கம் >>> நிர்வாகம் = குறையின்றி முழுமையாகச் செய்து முடித்தல்.
~நிர்வாகி
முழுமையாக்குவோன்
நிறைவாக்கி
நிர்வாகம் (= முழுமையாக்கம்) >>> நிர்வாகி
~நிர்வாசம்
பாழிடம்
நிர்வாசம்
நிர் (=இன்மை) +வாசம் (=வாழ்விடம்) = நிர்வாசம் = வாழாத இடம்
~நிர்வாணம்
ஆடையற்ற நிலை
நிர்மானம்
நிர் (=இன்மை) + மானம் = நிர்மானம் >>> நிர்வாணம் = மானமின்மை = ஆடை துறந்த நிலை.
~நிராகம்
உடலின்மை
நிராகம்
நிர் (=இன்மை) + ஆகம் (=உடல்) = நிராகம்
~நிராகரணம்
கொள்ளாமை, மறுப்பு, தள்ளுகை
நிராகரணம்
நிர் (=இன்மை) + ஆகரணம் (=கொள்ளுகை) = நிராகரணம் = கொள்ளுதல் இன்மை = மறுப்பு
~நிராகரி
மறு
நிராகரி
நிராகரணம் (=மறுப்பு) >>> நிராகரி = மறு
~நிராகாரம்
பட்டினி
நிராகாரம்
நிர் (=இன்மை) + ஆகாரம் (=உணவு) = நிராகாரம் = உணவின்மை
~நிராகாரம்
உருவமின்மை
நிராகாரம்
நிர் (=இன்மை) + ஆகாரம் (=உருவம்) = நிராகாரம்
~நிராகிருதம்
தள்ளப்பட்டது
நிராகரிதம்
நிர் (=இன்மை) + ஆகரிதம் (=கொள்ளப்பட்டது) = நிராகரிதம் >>> நிராகிருதம் = கொள்ளப்படாதவை.
~நிராகுலம்
கலக்கமின்மை
நிராகுலம்
நிர் (=இன்மை) + ஆகுலம் (=வருத்தம்) = நிராகுலம்
~நிராட்சேபம்
தடையின்மை
நிராட்சேமம்
நிர் (=இன்மை) + ஆட்சேமம் (=தடை) = நிராட்சேமம்
~நிராதபகை
இரவு, இருள்
நீறதபகை
நீறதம் (=ஒளி) + பகை = நீறதபகை = ஒளியின் எதிரி.
~நிராதம்
வெளிச்சம், ஒளி
நீறதம்
நீறு (=வெளு) >>> நீறதம் >>> நிராதம் = வெளிச்சம், ஒளி
~நிராதாரம்
ஆதாரமற்றது
நிராதாரம்
நிர் (=இன்மை) + ஆதாரம் = நிராதாரம் = ஆதாரமற்றது
~நிராமயம்
நோயின்மை
நிராமயம்
நிர் (=இன்மை) + ஆமயம் (=நோய்) = நிராமயம்
~நிரியாணம்
மரணம்
நிறையயனம்
நிறை (=முடி) + அயனம் (=பயணம்) = நிறையயனம் >>> நிறியானம் >>> நிரியாணம் = இறுதிப் பயணம் = மரணம்.
~நிரீக்ச~ணம், ~நிரீட்சணம்
எதிர்நோக்குகை, பார்த்தல்
நிரிகழ்ச்சனம்
நிர் (=இன்மை) + இகழ்ச்சனம் (=எதிர்பாராமை) = நிரிகழ்ச்சனம் >>> நிரீக்ச~ணம் >>> நிரீட்சணம் = எதிர்பார்த்தல், பார்வை.
~நிரீட்சி, ~நிரீக்சி~
பார், எதிர்பார்
நிரிகழ்ச்சி
நிர் (=இன்மை) + இகழ்ச்சி (=எதிர்பாராமை) = நிரிகழ்ச்சி >>> நிரீக்சி~ >>> நிரீட்சி = எதிர்பார், பார்.
~நிரீட்சிதம்
பார்க்கப்பட்டது
நிரிகழ்ச்சிதம்
நிரிகழ்ச்சி (=எதிர்பார்) >>> நிரிகழ்ச்சிதம் = எதிர்பார்/பார்க்கப்பட்டது
~நிருசத்தன்
அரக்கன்
நீறுசத்தன்
நீறு (=அழி) + சத்து (=வலிமை) + அன் = நீறுசத்தன் = நிருசத்தன் = அழிக்கும் வலிமை கொண்டவன் = அரக்கன்
~நிருத்தம்
பற்றின்மை
நிரத்தம்
நிர் (=இன்மை) + அத்து (=பற்று) + அம் = நிரத்தம் >>> நிருத்தம் = பற்றின்மை.
~நிருத்தாசனம்
தெளிவு
நிர்த்தாசனம்
நிர் (=இன்மை) + தாசனம் (=கலக்கம்) = நிர்த்தாசனம் >>> நிருத்தாசனம் = கலக்கமின்மை = தெளிவு
~நிருத்தி
சொல்லுக்குப் பொருள் கூறுகை
நிரத்தி
நிரத்து (=நேராக்கு) >>> நிரத்தி >>> நிருத்தி = சொல்லுக்குப் பொருளை நேராக்கிக் கூறும் முறை.
~நிருதம்
அழிவு
நீறுதம்
நீறு (=அழி) >>> நீறுதம் >>> நிருதம் = அழிவு
~நிருதன், ~நிருதி
அரக்கன், அரக்கி
நீறுதன், நீறுதி
நீறுதம் (=அழிவு) >>> நீறுதன், நீறுதி = அழிவைச் செய்பவன் / ள்
~நிருபதி
அரசன்
நிரைபதி
நிரை (=கூட்டம்) + பதி (=தலைவன்) = நிரைபதி >>> நிருபதி = கூட்டத் தலைவன் = அரசன்.
~நிருபம்
கடிதம், எழுத்து
நிரப்பம்
நிரப்பு (=எழுது) >>> நிரப்பம் >>> நிருபம் = எழுதப்படுவது.
~நிருபமம்
ஒப்பின்மை
நிருவமம்
நிர் (=இன்மை) + உவமம் (=ஒப்பு) = நிருவமம் >>> நிருபமம்
~நிருபர்
எழுதுவோர்
நிரப்பர்
நிரப்பம் (=எழுத்து) >>> நிரப்பர் >>> நிருபர் = எழுத்தாளர்.
~நிருபாதி
துன்பமின்மை
நிருபாதி
நிர் (=இன்மை) + உபாதி (=துன்பம்) = நிருபாதி = துன்பமின்மை
~நிருபி, ~நிரூபி
நிறுவி, நிறுவு
நிறுவி
நிறுவி >>> நிருபி >>> நிரூபி
~நிரூகம்
நிச்சயம், தருக்கம்
நிறுவுகம்
நிறுவு >>> நிறுவுகம் >>> நிறூகம் >>> நிரூகம் = நிறுவத்தக்கது = நிச்சயம், தருக்கம்.
~நிரூடி
தெளிவு
நிருடை
நிர் (=இன்மை) + உடை (=உடைவு, கலக்கம்) = நிருடை >>> நிரூடி = கலக்கம் இன்மை = தெளிவு.
~நிரூபணம்
உறுதியாக்கம்
நிறுவணம்
நிறுவு (=உறுதிசெய்) >>> நிறுவணம் >>> நிரூபணம் =உறுதிசெயல்.
~நிரூபிதம்
நிறுவப்பட்டது
நிறுவிதம்
நிறுவி >>> நிறுவிதம் >>> நிரூபிதம் = நிறுவப்பட்டது
~நிரேதுகம்
தொடர்பற்றது, காரணமற்றது
நிரேதுகம்
நிர் (=இன்மை) + ஏது (=தொடர்பு, காரணம்) + கம் = நிரேதுகம் = தொடர்பற்றது, காரணமற்றது.
~நிரொட்டம், ~நிரொட்டகம், ~நிரொட்டியம்
உதடுகள் ஒட்டாமல் பாடப்படுவது
நிரொட்டம், நிரொட்டகம், நிரொட்டியம்
நிர் (=இன்மை) + ஒட்டு = நிரொட்டு >>> நிரொட்டம், நிரொட்டகம், நிரொட்டியம் = உதடுகள் ஒட்டாமல் பிறக்கும் எழுத்துக்களைக் கொண்டு படைக்கப்படும் செய்யுள் வகை.
~நிரோதம்
தடை, அடக்கம்
நிறுத்தம்
நிறுத்து (=தடு, அடக்கு) >>> நிறுத்தம் >>> நிறோதம் >>> நிரோதம் = தடை, அடக்கம்.
~நிரோதனை
புலனடக்கம்
நிறுத்தனை
நிறுத்து (=அடக்கு) >>> நிறுத்தனை >>> நிறோதனை >>> நிரோதனை = அடக்கம், புலனடக்கம்.
~நிலவரம்
தொடரும் நிலைப்பாடு
நிலைவாரம்
நிலை + வாரம் (=நீட்சி, தொடர்ச்சி) = நிலைவாரம் >>> நிலவரம் = தொடர்ச்சியான நிலைப்பாடு
~நிவகம்
கூட்டம்
நிவக்கம்
நிவ (=பெருகு) >>> நிவக்கம் >>> நிவகம் = பெருக்கம், கூட்டம்
~நிவசதி
வீடு
நிவசதி, நீமசதி
(1). நிவ (=மேலே) + சதி (=மறைப்பு, மூடல்) = நிவசதி = மேலே மறைப்பினை உடையது = வீடு. (2) நீமம் (=ஒளி, வெயில்) + சதி (=மறைப்பு) = நீமசதி >>> நிவசதி = வெயிலுக்கான மறைப்பினைக் கொண்டது = வீடு.
~நிவசனம்
ஆடை
நெப்பசனம்
நெய் + பசை + இனம் = நெய்ப்பசையினம் >>> நெப்பசனம் >>> நிவசனம் = நெய்யப்பட்டுப் பசையிடப் படுவன = ஆடை.
~நிவர்த்தி, ~நிவிர்த்தி
விடுதளை, துறவு, மருந்து
நீவார்த்தி
நீவு (=நீங்கு) + ஆர்த்தி (=நோய், பந்தம்) = நீவார்த்தி >>> நிவர்த்தி >>> நிவிர்த்தி = நோய். / பந்தத்தில் இருந்து விடுபடுதல்.
~நிவரை
கன்னிப்பெண்
நைவரை
நை (=இன்மை) + வரை (=திருமணம்) = நைவரை >>> நிவரை = திருமணம் ஆகாத பெண் = கன்னி.
~நிவாசம்
மேலான வாழ்விடம்
நிவவாசம், நிவ்வாசம்
நிவ (=மேல்) + வாசம் (=வாழிடம்) = நிவ்வாசம் >>> நிவாசம் = மேலிருக்கும் வாழ்விடம்.
~நிவாபம்
பிதிர்களுக்கு நீர்வார்த்தல்
நிவாப்பம்
நிவ (=மேல், மேலோர்) + அப்பு (=நீர்) + அம் = நிவாப்பம் >>> நிவாபம் = மேலோர்க்கு நீர்வார்க்கும் சடங்கு
~நிவாரணம்
விடுதளை, துறவு, மருந்து
நீவாரணம்
நீவு (=நீங்கு) + ஆர் (=கட்டு, பிணி) + அணம் = நீவாரணம் = நிவாரணம் = கட்டு / பிணியினின்று விடுபடல்.
~நிவாரம்
விடுதளை, துறவு, மருந்து
நீவாரம்
நீவு (=நீங்கு) + ஆர் (=கட்டு, பிணி) + அம் = நீவாரம் = நிவாரம் = கட்டு / பிணியினின்று விடுபடல்.
~நிவி
மாமரம்
நீமி
நீமம் (=ஒளி) >>> நீமி >>> நிவி = மஞ்சள் நிறப்பழம் தருவது
~நிவிர்த்தி
மருந்து
நிமிர்த்தி
நிமிர்த்து (=சரிசெய்) >>> நிமிர்த்தி >>> நிவிர்த்தி = சரிசெய்வது.
~நிவேசனம்
வீடு
நிவ்வேயணம்
நிவ (=மேலே) + வேய் (=மூடு) + அணம் = நிவ்வேயணம் >>> நிவேசனம் = மேலே மூடப்பட்டது = வீடு.
~நிவேத்தியம்
மேலோர்க்கான படையல்
நிவேற்றியம்
நிவ (=மேல், மேலோர்) + ஏற்று (=படை, ஒப்படை) + இயம் = நிவேற்றியம் >>> நிவேத்தியம் = மேலோர்க்குப் படைத்தல்.
~நிவேதனம்
மேலோர்க்கான படையல்
நிவேற்றணம்
நிவ (=மேல், மேலோர்) + ஏற்று (=படை, ஒப்படை) + அணம் = நிவேற்றணம் >>> நிவேத்தணம் >>> நிவேதனம் = மேலோர்க்குப் படைத்தல் / ஒப்படைத்தல்.
~நிவேதி
மேலோர்க்குப் படையலிடு
நிவேற்று
நிவ (=மேல், மேலோர்) + ஏற்று (=படை, ஒப்படை) = நிவேற்று >>> நிவேத்து >>> நிவேதி = மேலோர்க்குப் படை.
~நிளுதனம்
அழிக்கை
நிழத்தனம்
நிழத்து (=அழி) >>> நிழத்தனம் >>> நிளுதனம் = அழிக்கை.
~நிற்காரம்
அவமதிப்பு
நிர்காரம்
நிர் (=இன்மை) + காரம் (=செயல்) = நிர்காரம் >>> நிற்காரம் = செயலல்லாச் செயல் = இழிசெயல்.
~நிற்பத்தி
நிலம், இடம்
நிற்பது
நில் (=அசையாதிரு) >>> நிற்பது >>> நிற்பத்தி = அசைவின்றி இருப்பது = நிலம், இடம்.
~நினாதம்
நிலையான ஒலி
நினாதம்
நில் (=நிலை) + நாதம் (=ஒலி) = நினாதம் = நிலையான ஒலி
~நீசம், நீச்சம்
தாழ்வு, இழிவு
நைச்சம்
(2) நை (=நசுங்கு, கெடு) >>> நைச்சு (=இழிவுசெய்) >>> நீச்சு >>> நீச்சம், நீசம் = இழிவு, தாழ்வு
~நீமம்
ஒளி
நீமம்
(2) நிமிர் (=ஒளிர்) >>> நீமம் = ஒளி.
~நுழுந்தம்
தலைமயிர்
நுழுந்து
நுழை (=நுண்மை) >>> நுழுந்து (=நுண்ணிழை) >>> நுழுந்தம் = மெல்லிய மயிர், தலைமுடி.
~நுழுந்து
மயிரினை முடி
நுழுந்து
நுழுந்தம் (=தலைமயிர்) >>> நுழுந்து = தலைமயிரை முடிச்சிடு
~நைச்சியம், ~நைச்சிகம்
தாழ்வு, இழிவு
நைச்சியம்
நை (=நசுக்கு, கெடு) >>> நைச்சு (=இழிவுசெய்) >>> நைச்சியம் = இழிவு, தாழ்வு
~பங்கசம்
தாமரை
பைங்கயம்
பை (=ஒளிர், எரி) + கயம் (=நீர்நிலை) = பைங்கயம் >>> பங்கயம் >>> பங்கசம் = நீர்நிலைகளில் எரிவதைப் போன்ற மலர்.
~பஞ்சம்
ஐந்து
பஞ்சம்
பஞ்சு (=பருத்தி) >>> பஞ்சம் = பெரும்பாலான பருத்திகளில் இருக்கும் அறைகளின் எண்ணிக்கை = ஐந்து.
~பந்தம்
நூல்
பந்தம்
(1).பற்று (=கட்டு) >>> பற்றம் >>> பத்தம் >>> பந்தம் = கட்டி வைக்கப்பட்டு இருப்பது (2) பதம் (=சொல், பக்குவம்) >>> பந்தம் = சொற்களின் அடக்கம், பக்குவம் அளிப்பது.
~பலம், ~பலன்
பயன்
வளம், வளன்
வளம் (=விளைச்சல்) >>> பலம் >>> பலன் = பயன்
~பாக்கி
மீதி, மிச்சம்
பகிர்
பகு >>> பகிர் >>> பாக்கி = பகிர்ந்தது போக மிஞ்சியது.
~பாக்கியம்
பேறு
வாங்கியம்
வாங்கு (=பெறு) + இயம் = வாங்கியம் >>> பாங்கியம் >>> பாக்கியம் = பெறப்படுவது = பேறு.
~பாணம்
அம்பு
பாணம்
பணி (=ஏவு) >>> பாணம் = ஏவப்படுவது = அம்பு, வெடிவகை
~பாணி
கை
பாணி
பணி (=வேலை) >>> பாணி = வேலை செய்ய உதவும் உறுப்பு
~பானகம்
குடிநீர்
பானகம்
பானை + அகம் >>> பானகம் = பானையில் இருப்பது
~பானம்
குடிநீர்
பானம்
பானை >>> பானையம் >>> பானம் = பானையில் இருப்பது
~பானை, ~பானம்
பாத்திரம்
வானை
வனை (=உருவாக்கு, வடிவமை) >>> வானை >>> பானை, பானம் = வடிவமைக்கப்பட்டது = பாத்திரம்
~பிரபஞ்சம்
ஐம்பூதம்
பிறபஞ்சம்
பிற (=தோன்று) + பஞ்சம் (=ஐந்து) = பிறபஞ்சம் >>> பிரபஞ்சம் = தோற்றத்திற்குக் காரணமாக உள்ள ஐந்து = ஐம்பூதத் தொகுதி.
~பிலம்
குகை, கீழறை, எலிவளை
பிளம்
பிள (=ஊடுருவு, துளையிடு) >>> பிளம் >>> பிலம் = ஊடுருவ / துளையிடப்பட்டது.
~பிலம்
பாதாலம்
பிளம்
பிள >>> பிளம் >>> பிலம் = பிளத்தலால் உண்டாகும் பெரும் பள்ளம்.
~புண்ணியம்
காக்கும் தருமம்
பூண்ணயம்
பூண் (=கவசம்) + நயம் (=பயன்) >>> பூண்ணயம் >>> புண்ணியம் = கவசம்போல் காக்கும் முன்வினைப் பயன்.
~முகுந்தம்
மேகம்
முகுந்தம்
முகு (=உண், கொள்) + உந்து (=உயர்) + அம் = முகுந்தம் = கடல்நீரை உண்டு உயர்வது = மேகம்.
~மூலம்
கரு
முளையம், மூளம்
முளை (=தோன்று) >>> முளையம் >>> மூளம் >>> மூலம் = தோன்றுவது = கரு.
~மோட்சம்
நிறைவு, முடிவு, வீடுபேறு
மோக்கம்
முக்கு (=நிரப்பு, நிறை) >>> மோக்கம் >>> மோக்ச~ம் >>> மோட்சம் = நிறைவு, முடிவு.
~யோகம்
புணர்ச்சி
ஓகம், யோகம்
ஒகு (=சேர், புணர்) >>> ஓகம் >>> யோகம் = புணர்ச்சி
~வாசி, ~வாசம்
மூச்சு, இருப்பிடம், வாழ்க்கை
வாசி, வாசம்
வாழ் >>> வாழி >>> வாசி >>> வாசம் = வாழ்க்கை, வாழ்வதற்குத் தேவையானது = உயிர் மூச்சு, உயிர் வாழுமிடம்
~விக்கினம்
தடை
விக்கினம்
விக்கு (=தடைப்படு) >>> விக்கினம் = தடை
~விகற்பம்
வேறுபாடு
மிகற்பம்
மிகல் (=பகை, வேறுபாடு) >>> மிகற்பம் >>> விகற்பம் = வேறுபாடு
~விகாரம்
திரிபு
மிகலம்
மிகல் (=வேறுபாடு, திரிபு) >>> மிகலம் >>> மிகரம் >>> விகாரம்
~விசாரணை, ~விசாரம்
கேள்வி, ஆராய்ச்சி, கவலை, சிந்தனை
உசாரணை, உசாரம்.
உசாரி (=கேள், ஆராய், சிந்தி) >>> உசாரம், உசாரணை >>> விசாரம், விசாரணை = கேள்வி, ஆராய்ச்சி, சிந்தனை, கவலை.
~விசாரி
கேள், ஆராய், சிந்தி, கவலைப்படு
உசாரி
உசாவு (=கேள், ஆராய், சிந்தி) >>> உசாரி >>> விசாரி


2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.