பிறசொல்
|
பொருள்
|
தமிழ்ச்
சொல்
|
மூலச்சொல்லும்
தோன்றும் முறையும்
|
அக்கதம், அட்சதம், அக்கதை, அட்சதை
|
அரிசி முதலான தானியம்
|
அக்கம்
|
அக்கம் (=தானியம்) >>> அக்கதம்
>>> அக்ச~தம் >>> அட்சதம், அட்சதை = அரிசி முதலான தானியம்.
|
அக்கம்
|
கண்
|
ஆகம்
|
அகம் (=அன்பு, காதல்) >>> அக்கம், ஆகம்
= காதலை உண்டாக்கிப் பெருக்கும் உறுப்பு. = கண். ஒ.நோ: நே (=அன்பு, காதல்) +
திறம் (=மிகுதி) = நேத்திறம் >>> நேத்திரம் = காதலுக்கு வழிவகுத்துப்
பெருக்குவது = கண்.
|
அகமம், அகம்
|
மரம்
|
அகைமம்
|
அகை (=கிளை) >>> அகைமம் >>>
அகமம், அகம் = கிளைக்கும் இயல்புடையது = மரம்.
|
அருணம்
|
ஒளி
|
அறுணம்
|
அறு >>> அறுணம் >>> அருணம் =
அறுக்கும் இயல்புடையது = ஒளி. ஒ.நோ: (1) பகு (=அறு) >>> பகர், பக்கம் =
அறுக்கும் இயல்புடையது = ஒளி. (2) பகு (=அறு) >>> பகல் = ஒளி.
|
அருணன்
|
சூரியன்
|
அறுணன்
|
அறுணம் (=ஒளி) >>> அறுணன் = ஒளி தருபவன்.
|
அனுகூலம்
|
நட்பு, உதவி
|
அணுகூளம்
|
அணுகு (=நெருங்கு, பொருந்து) + உள்ளம் (=எண்ணம்)
= அணுகூளம் >>> அனுகூலம் = நெருங்கிய / பொருந்திய எண்ணம் உடைமை =
நட்பு, உதவி.
|
ஆரூடம்
|
சோதிட முறை
|
ஆருடம்
|
ஆர் (=பொருந்து) + உடு (=விண்மீன்) + அம் =
ஆருடம் >>> ஆரூடம் = கேள்வி கேட்கும் நேரத்துடன் பொருந்தி விண்மீன்கள்
அமைந்திருக்கும் நிலையைக் கணக்கிட்டுப் பதில் சொல்லும் சோதிட முறை.
|
ஆலம்பனம், ஆலம்பம்
|
பூமி, பற்றுக்கோடு
|
ஆலம்பனம்
|
ஆல் (=நீர்) + அம்பு (=வளையல்) + அனம் =
ஆலம்பனம் >>> ஆலம்பம் = நீரை வளையல் போலச் சூடியது = பூமி >>>
உயிர்களின் பற்றுக்கோடு
|
உபாசகர்
|
வழிபடுவோர்
|
உவாசகர்
|
உவாசி (=வழிப்படு) >>> உவாசகர்
>>> உபாசகர் = வழிப்படுவோர் = பின்பற்றுவோர்.
|
உபாசனை, உபாசனம்
|
வழிபாடு
|
உவாசனை, உவாசனம்
|
உவாசி (=வழிப்படு) >>> உவாசனை, உவாசனம்
>>> உபாசனை, உபாசனம் = வழிபாடு
|
உபாசி
|
வழிப்படு
|
உவாசி
|
உவாயம் (= வழிமுறை) >>> உவாசி
>>> உபாசி = வழிப்படு
|
உபாயம்
|
வழிமுறை
|
உய்வாயம்
|
உய் (=வாழ், செல்) + வாய் (=வழி) + அம் =
உய்வாயம் >>> உவாயம் >>> உபாயம் = வாழும் / செல்லும் வழி.
|
உவணம்
|
கழுகு
|
உவணம்
|
உவண் (=மேலிடம், உயரம்) >>> உவணம் =
உயரமான இடத்தில் பறக்கும் பறவை.
|
கமலம்
|
தாமரை
|
கமலம்
|
கப்பு (=மூடு) >>> கம்மு >>>
கம்மல் >>> கமலம் = இரவில் மூடிக் கொள்ளும் மலர்.
|
கமனம்
|
செல்லுகை, பயணம்
|
கமனம்
|
கமழ் <<< கம (=பரவு, செல்)
>>> கமனம் = பரவுகை, செல்லுகை.
|
கமனி
|
செல், பயணி
|
கமனி
|
கமனம் (=பயணம்) >>> கமனி = செல், பயணி
|
குக்கன்
|
நாய்
|
குங்கன்
|
குங்கு (=குன்று, இழி) >>> குங்கன்
>>> குக்கன் = இழிவானவன் >>> நாய்.
|
குகரம்
|
குகை
|
கொக்கரம்
|
கொக்கு (= குத்து, துளை ) >>> கொக்கரம்
>>> குகரம் = துளையுடையது
|
குகை
|
குகை
|
கொக்கை
|
கொக்கு (= குத்து, துளை) >>> கொக்கை
>>> குக்கை >>> குகை = துளையுடையது.
|
குங்குமம், குக்கில், குங்கிலியம்
|
பொடி
|
கொங்கு
|
கொங்கு (= பொடி) >>> குங்கு
>>> குங்குமம், குங்கிலியம் >>> குக்கில்.
|
சக்கரை
|
கரும்பில் இருந்து எடுக்கப்படும் இனிப்பு
|
சக்கறை
|
சக்கை (=நார்) + அறல் (=நீர்) = சக்கறல்
>>> சக்கறை >>> சக்கரை = நாருக்குள் நீரைப் பொதித்து
வைத்திருப்பது = கரும்பு >>> கரும்பில் இருந்து எடுக்கப்படும் இனிப்பு.
|
சதுரம்
|
நான்கு சமமான இணையான பக்கமுடையது
|
செந்தூரம்
|
செம்மை (=நேர்மை, ஒற்றுமை) + தூரம் (=அளவு) =
செந்தூரம் >>> செத்தூரம் >>> செதுரம் >>> சதுரம்
= செங்குத்தான ஒத்த அளவுள்ள பக்கங்களைக்
கொண்டது.
|
சமாதி
|
இறைவனுடன் கலத்தல்
|
செமாதி
|
செம்மை (=ஒற்றுமை) + ஆதி (=பரம்பொருள்) = செமாதி
>>> சமாதி = பரம்பொருளுடன் ஒன்றாதல்.
|
சா^ச்`தி
|
அதிகம்
|
சாத்தி
|
சாற்று (= விவரி, பெருக்கு) >>> சாற்றி
>>> சாத்தி >>> சா^ச்`தி = பெருக்கம், மிகுதி, அதிகம்.
|
தர்க்கம், தருக்கம்
|
பேச்சு
|
தருக்கம்
|
தருக்கு (=பேசு) >>> தருக்கம்
>>> தர்க்கம் = பேச்சு
|
தருக்கு
|
பேசு
|
தலுக்கு
|
தாலு (=ஒலி) >>> தலுக்கு >>>
தருக்கு = பேசு
|
தைலம்
|
எண்ணெய்
|
நைலம்
|
(2). நை (=நசுக்கு, பிழி) >>> நைலம்
>>> தைலம் = நசுக்கிப் பிழிந்து எடுக்கப்பட்டது. ( நகர தகரப் போலி)
ஒ.நோ: நிமிர் >>> திமிர், கொந்து >>> கொத்து.
|
நீகம்
|
மேகம், தவளை
|
நிழக்கம்
|
நிழ (= ஒலி ) >>> நிழக்கம்
>>> நியக்கம் >>> நீகம் = ஒலி செய்வது = மேகம், தவளை.
|
நீகாசம்
|
ஒப்புமை
|
நிகழம்
|
நிகர் (=ஒப்பு) >>> நிகழ் >>>
நிகழம் >>> நிகசம் >>> நீகாசம் = ஒப்புமை.
|
நீகாசம்
|
உண்மை
|
நீகாழம்
|
நீ (=இன்மை) + காழம் (=கருப்பு, குற்றம், பொய்)
= நீகாழம் >>> நீகாசம் = பொய் இன்மை.
|
நீகாமன்
|
கப்பல் மாலுமி
|
நீக்காமன்
|
நீங்கு (=கட) >>> நீக்கு
(=கடக்கச்செய்) + ஆம் (=நீர்) + அன் = நீக்காமன் >>> நீகாமன் = நீரைக்
கடக்கச் செய்பவன்.
|
நீகாரம்
|
வெண்பனி
|
நீகாரம்
|
நீ (=இன்மை) + காரம் (=கருமை) = நீகாரம் = கருமை
அற்றது = வெண்மை >>> வெண்பனி
|
நீகாரம்
|
அவமதிப்பு
|
நீகாரம்
|
நீ (=இழிவுசெய்) + காரம் (=செயல்) = நீகாரம் =
இழிவு செய்தல்.
|
நீகான், நீயான்
|
கப்பல் மாலுமி
|
நீக்காமன்
|
நீக்காமன் >>> நீகான் >>>
நீயான்.
|
நீச்சம், நீசம்
|
இழிவு, தாழ்வு, பள்ளம்
|
நீச்சம், நீசம்
|
(3). நீ (=இழி) >>> நீச்சு
(=இழிவுசெய்) >>> நீச்சம், நீசம் = இழிவு, தாழ்வு >>>
தாழ்வானது = பள்ளம்
|
நீசம்
|
மஞ்சள்
|
நிழல்
|
நிழல் (=ஒளி) >>> நிசல் >>>
நீசம் = ஒளியுடையது
|
நீடம், நீளம்
|
பறவைக் கூடு
|
நீடம், நீளம்
|
நீடு / நீளு (=இரு, தங்கு) >>> நீடம் /
நீளம் = தங்குமிடம்
|
நீதம்
|
தானியம்
|
நிழத்தம்
|
நிழத்து (= வற்று, உலர்) >>> நிழத்தம்
>>> நியத்தம் >>> நீதம் = வற்றியது = தானியம். ஒ.நோ: அக்கு
(=சுருங்கு, வற்று) >>> அக்கம் = வற்றியது = தானியம்.
|
நீபம்
|
தோற்றுவாய், காரணம்
|
நீவம்
|
நிவ (=தோன்று) >>> நீவம் >>>
நீபம் = தோற்றுவாய் = காரணம்
|
நீர்
|
நீர்
|
நீர்
|
(1). ஈர் (=ஈரம்) >>> ஞீர்
>>> நீர் = ஈரமுடையது. (2). ஈர் (=நீளு, ஒழுகு) >>> ஞீர்
>>> நீர் = ஒழுகுவது
|
நீரசம்
|
தாமரை
|
நீரழல்
|
நீர் + அழல் (=தீ) = நீரழல் >>> நீரசல்
>>> நீரசம் = நீரில் தோன்றும் தீ போன்ற மலர்.
|
நீரதம்
|
மேகம்
|
நீரறம்
|
நீர் + அறம் (=கொடை) = நீரறம் >>>
நீரதம் = நீர்க்கொடை செய்வது
|
நீரதம்
|
நீரற்றது
|
நீரற்றம்
|
நீர் + அற்றம் (=இன்மை) = நீரற்றம் >>>
நீரத்தம் >>> நீரதம் = நீரற்றது
|
நீரதி
|
கடல்
|
நீரதி
|
நீர் + அதி (=மிகுதி) = நீரதி = மிகுதியான
நீரைக் கொண்டது
|
நீராஞ்சனம், நீராஞ்சனை, நீராசனம், நீராசனை
|
ஆரத்தி
|
நீரஞ்சனம்
|
நீர் + அஞ்சனம் (=கருமை) = நீரஞ்சனம்
>>> நீராஞ்சனம் >>> நீராசனம் = நீரும் கருப்பு மையும் கொண்டு
கழிப்பு செய்தல்.
|
நீரூபம்
|
காற்று, ஆகாயம்
|
நையுருவம்
|
நை (=இன்மை) + உருவம் = நையுருவம் >>>
நீருவம் >>> நீரூபம் = உருவம் அற்றவை = காற்று, ஆகாயம்
|
நீல்
|
காற்று
|
நீள்
|
நீள் (=கட, பரவு) >>> நீல் = பரவும்
இயல்பினது.
|
நீலம்
|
பனை மரம்
|
நீளம்
|
நீளம் (=உயரம்) >>> நீலம் = உயரமான
மரம். .
|
நீலாஞ்சனம்
|
மின்னல்
|
நீலாஞ்சனம்
|
நீல் (=இருள்) + ஆஞ்சு (=பிரி, கிழி) + அனம் =
நீலாஞ்சனம் = இருளைக் கிழிப்பது = மின்னல்.
|
நீவரகம்
|
வறட்சி, பஞ்சம்
|
நீர்வறக்கம்
|
நீர் + வறக்கம் = நீர்வறக்கம் >>>
நீவரகம் = நீரின்றி வறண்ட நிலை = வறட்சி, பஞ்சம்.
|
நீவரம்
|
சேறு
|
நீர்வறம்
|
நீர் + வறம் = நீர்வறம் >>> நீவரம் =
நீர் வறள்வதால் உண்டாவது = சேறு
|
நீவரம்
|
தண்ணீர்
|
நீள்வாரம்
|
நீள் + வார் (=ஒழுகு) + அம் = நீள்வாரம்
>>> நீவரம் = நீளமாக ஒழுகும் தன்மை கொண்டது = நீர்
|
நீவரம்
|
வியாபாரம்
|
நீபாரம்
|
நீ (=கழி) + பாரம் (=சரக்கு, பொருள்) = நீபாரம்
= நீவரம் = சரக்கினை விற்றுக் கழித்தல். ஒ.நோ: விழு (=கழி) + பாரம் = விழுபாரம்
>>> வியுபாரம் >>> வியாபாரம்.
|
நீவி
|
ஆடை
|
நீவி
|
நீவு (=அறு) >>> நீவி = அறுக்கப்பட்டது
= அறுவை = ஆடை.
|
நீழல்
|
காற்று
|
நீழல்
|
(1). நிழ (=இல்லையாகு, நுணுகு) >>>
நீழல் = இல்லை என்பதாக நுட்பமாக இருப்பது = காற்று. (2) நீள் (= கட, பரவு)
>>> நீளல் >>> நீழல் = பரவும் இயல்பினது.
|
நீளை
|
காற்று
|
நீளை
|
நீள் (=பரவு, பாய்) >>> நீளை = பரவும்
/ பாயும் இயல்புடையது
|
நூதனம்
|
புதுமை
|
நொதுமம்
|
நொதுமம் (=புதுமை) >>> நொதுனம்
>>> நூதனம்.
|
நூதனன், நூதனி
|
புதியவன், அயலான்
|
நொதுமன்
|
நொதுமம் (=புதுமை) >>> நொதுமன்
>>> நொதுனன் >>> நூதனன் >>> நூதனி = புதியவன்.
|
நூபம்
|
காளை மாடு
|
நுவ்வம்
|
நுவ்வு (=இடி, குத்து) >>> நுவ்வம்
>>> நுப்பம் >>> நூபம் = கொம்புகளால் குத்துவது.
|
நூபரம், நூபுரம்
|
சிலம்பு, கிண்கிணி
|
நுவறம்
|
நுவறு (=சொல், ஒலி) >>> நுவறம்
>>> நூபரம் >>> நூபுரம் = ஒலி செய்வது = சிலம்பு. ஒ.நோ:
சிலம்பு (=ஒலி) >>> சிலம்பு = ஒலி செய்வது = கிண்கிணி
|
நூனம்
|
குறைபாடு
|
நூணம்
|
நுணு (=சிறுகு, குறை) >>> நூணம்
>>> நூனம் = குறைபாடு.
|
நூனம்
|
உறுதி
|
நோனம்
|
நோன் (=வலிமை, உறுதி) >>> நோனம்
>>> நூனம் = உறுதி.
|
நூனாயம்
|
தந்திரம்
|
நுவனயம்
|
நுவல் (=பேச்சு) + நயம் (=நுண்மை) = நுவனயம்
>>> நூனாயம் = நுட்பமான பேச்சு >>> தந்திரம்
|
நெட்டம்
|
மிளகு
|
நெட்டம்
|
நெடி (=காரம்) >>> நெட்டம் = காரமானது
|
நெதி
|
தியானம்
|
நெதி
|
நிது (=இமைமூடு) >>> நிதி >>>
நெதி = இமைமூடிய நிலை.
|
நேத்திரம்
|
கண்
|
நேத்திறம்
|
நே (=அன்பு, காதல்) + திறம் (=வழி, மிகுதி) =
நேத்திறம் >>> நேத்திரம் = காதலுக்கு வழிவகுத்துப் பெருக்குவது = கண்.
ஒ.நோ: நயன் (=அன்பு, காதல்) >>> நயனம் = காதலை உண்டாக்கிப் பெருக்கும்
உறுப்பு = கண்.
|
நேத்திரம்
|
பட்டு ஆடை
|
நெய்த்திறம்
|
நெய் (=பளபள) + திறம் (=ஆடை) = நெய்த்திறம்
>>> நேத்திரம் = பளபளக்கும் ஆடை.
|
நேதா
|
தலைவன்
|
நெத்தன்
|
நெற்றி (=முன்பகுதி) >>> நெத்தி
>>> நெத்தன் >>> நேதா = முன்னால் இருப்பவன், வழிநடத்துவோன் =
தலைவன்.
|
நேபத்தியம், நைபத்தியம்
|
வேசம், அலங்காரம்
|
நெய்ப்பத்தியம்
|
நெய்ப்பு (=பளபளப்பு) + அத்து (=பூசு) + இயம் =
நெய்ப்பத்தியம் >>> நைபத்தியம், நேபத்தியம் = பளபளப்பு ஏறப் பூசுதல் =
அலங்காரம்.
|
நேமகம்
|
முறை, ஒழுங்கு, விதி
|
நிழவகம்
|
நிழ (=காப்பாற்று, முறைசெய்) + அகம் = நிழவகம்
>>> நியமகம் >>> நேமகம் = காக்கும் முறை, ஒழுங்கு, விதி
|
நேமகம்
|
வீடு
|
நிழவகம்
|
நிழ (=காப்பாற்று, முறைசெய்) + அகம் = நிழவகம்
>>> நியமகம் >>> நேமகம் = பாதுகாப்பு தருவது = வீடு.
|
நேமம்
|
முடிவு, விதி, தீர்மானம்
|
நிழவம்
|
நிழ (=காப்பாற்று, முறைசெய்) >>>
நிழவம் >>> நியமம் >>> நேமம் = காக்கும் முறை, விதி,
தீர்மானம், முடிவு
|
நேமம்
|
நேரம், பங்கு, பிளப்பு
|
நீவம்
|
நீவு (=பிரி, பகு) >>> நீவம்
>>> நீமம் >>> நேமம் = பகுக்கப்பட்டது = நேரம், பங்கு,
பிளப்பு
|
நேமம்
|
சாயங்காலம், வேலி, வேர், வஞ்சனை
|
நிழவம்
|
நிழ (=மறை) >>> நிழவம் >>>
நியமம் >>> நேமம் = ஒளி மறையும் காலம், மறைப்பு செய்யும் வேலி,
பூமிக்குள் மறைந்திருப்பது, மறைக்கும் செயல்.
|
நேமி
|
சூரியன்
|
நீமி
|
நீமம் (=ஒளி) >>> நீமி >>>
நேமி = ஒளி தருபவன்.
|
நேமி
|
வட்டம், சக்கரம், மோதிரம், பூமி, கடல்
|
நேமி
|
நீமி (=சூரியன்) >>> நேமி = சூரியனின்
பாதை = வட்டம் >>> வட்டவடிவப் பொருட்கள்.
|
நேயவை
|
இடுதிரை
|
நிழவை
|
நிழ (=மறை) >>> நிழவை >>>
நியவை >>> நேயவை = மறைக்கும் திரை.
|
நேளி
|
தாமரை
|
நேளி
|
நெளி (=சுருளு, மூடு) >>> நேளி =
இரவில் இதழ்களைச் சுருட்டி மூடிக்கொள்ளும் மலர்.
|
நைச்சி, நைசியம்
|
காகம்
|
நயச்சி
|
நய (=இணங்கு, கூடு) >>> நயச்சு
(=ஒன்றாக்கு, கூட்டு) >>> நயச்சி >>> நைச்சி = பிறவற்றை
அழைத்து ஒன்றாக்குவது.
|
நைச்சியம்
|
வசமாக்கல்
|
நயச்சியம்
|
நய (=இணங்கு) >>> நயச்சு (=இணக்கு)
>>> நயச்சியம் >>> நைச்சியம் = இணங்கச்செய்தல், தன்
வசமாக்குதல்.
|
நைட்டிகம்
|
எப்போதும்
|
நெட்டிகம்
|
நெட்டு (=நீளம்) >>> நெட்டிகம்
>>> நைட்டிகம் = நெடுமையாக, தொடர்ச்சியாக, எப்போதும்
|
நைட்டூரியம்
|
கொடுமை, துன்பம்
|
நெட்டூரியம்
|
நெட்டு (=தாக்கு) >>> நெட்டுரம்
>>> நெட்டூரியம் >>> நைட்டூரியம் = தாக்கி வருத்துதல், கொடுமை
செய்தல்.
|
நைத்தியம், நைத்திகம்
|
நிலையானது
|
நிற்றியம், நிற்றிகம்
|
நித்தியம் (=நிலையானது) >>> நைத்தியம்,
நைத்திகம்
|
நைதிகை, நைந்திகை
|
ஊசிமல்லிகை, முல்லை
|
நாற்றிகை
|
நாற்றம் (=நறுமணம்) >>> நாற்றிகை
>>> நாத்திகை >>> நைத்திகை >>> நைந்திகை, நைதிகை =
நறுமண மலர்கள்.
|
நைமித்தியம், நைமித்திகம்
|
சிறப்பு நிகழ்வு
|
நியமித்தியம்
|
நியமிதம் (=குறிக்கப்பட்டது) + இயம்
>>> நியமித்தியம் >> நைமித்தியம் = குறித்த நாளில் நிகழ்வது.
|
நைர்மல்லியம்
|
மாசின்மை
|
நிர்மலம்
|
நிர்மலம் (=மாசின்மை) >>> நைர்மல்லியம்
|
நைராசியம்
|
நம்பிக்கை இன்மை
|
நிராசையம்
|
நிர் (=இன்மை) + ஆசை (=விருப்பம்,
எதிர்பார்ப்பு) = நிராசை >>> நிராசையம் >>> நைராசியம் =
எதிர்பார்ப்பு இன்மை
|
நைவனம்
|
வீரன்
|
நவையன்
|
நவை (=கொல், அழி) >>> நவையன்
>>> நைவனம் = கொல்பவன், அழிப்பவன்.
|
நைவேத்தியம், நைவேதனம்
|
கடவுட்கான படையல்
|
நிவேற்றியம்
|
நிவேத்தியம் (=மேலோர்ப் படையல்) >>>
நைவேத்தியம், நைவேதனம்
|
நைவேதி
|
கடவுட்குப் படை
|
நிவேற்று
|
நிவேத்தியம் (=மேலோர்ப் படையல்) >>>
நிவேதி >>> நைவேதி = மேலோர்க்குப் படை.
|
ப^ச்சா, ப^ச்சி
|
குழந்தை
|
பாசான்
|
பசுமை (=இளமை, புதுமை) + ஆன் = பாசான்
>>> பச்சான் >>> ப^ச்சா, ப^ச்சி = புதியதாகப் பிறந்த
குழந்தை.
|
பக்கணம்
|
இடம், ஊர்
|
பக்கணம்
|
பக்கம் (=இடம், ஊர்) >>> பக்கணம்
|
பக்கணம், பட்சணம்
|
உணவு
|
பக்குணம்
|
பகு + உண் + அம் = பக்குணம் >>>
பக்கணம் >>> பக்ச~ணம் >>> பட்சணம் = பகிர்ந்து உண்ணப்படுவது.
|
பக்கம்
|
உணவு
|
பக்கம்
|
பக்கு (=உண்ணு) >>> பக்கம் = உணவு
|
பக்கம், பகர்
|
ஒளி
|
பக்கம், பகர்
|
பகு (=அறு) >>> பகர், பக்கம் =
அறுக்கும் இயல்புடையது = ஒளி. ஒ.நோ: (1) பகு (=அறு) >>> பகல் = ஒளி.
(2) நள் (=அறு) >>> நாள் = ஒளி. (3) தின் (=பிரி, வகு) >>>
தினம் = ஒளி.
|
பக்கி
|
உண்ணு
|
பக்கு
|
பக்குணம் (=உணவு) >>> பக்கு
>>> பக்கி = உண்ணு
|
பக்கி, பட்சி
|
பறவை
|
பக்கி
|
பக்கம் (= சிறகு) >>> பக்கி
>>> பக்சி~ >>> பட்சி = சிறகுகளைக் கொண்டது = பறவை. ஒ.நோ:
சிறகு = பக்கம்.
|
பக்குவம்
|
தகுதி
|
பாங்குவம்
|
பாங்கு (= தகுதி) >>> பாங்குவம்
>>> பக்குவம்.
|
பகடி
|
இயற்கை
|
பாங்கடை
|
பாங்கு ( =இயல்பு) + அடை = பாங்கடை >>>
பக்கடை >>> பகடி = இயல்பாக அடைந்தவை = இயற்கை.
|
பக்தன்
|
அன்பன்
|
பத்தன்
|
பத்தி (=அன்பு) >>> பத்தன்
>>> பக்தன் = அன்பன்
|
பக்தி
|
அன்பு
|
பத்தி
|
பற்று (=அன்பு) >>> பத்து >>>
பத்தி >>> பக்தி = அன்பு
|
பகம்
|
கொக்கு
|
பகம்
|
பக்கம் (=நரை, வெண்மை) >>> பகம் =
வெண்ணிறப் பறவை
|
பகவன், பகவான்
|
சூரியன், கடவுள்
|
பகவன், பகவான்
|
பக்கம் (=ஒளி) >>> பகம் >>>
பகவன், பகவான் = ஒளி தருபவன், ஒளியாக விளங்குபவன் = சூரியன், கடவுள்.
|
பகாலம்
|
மண்டையோடு
|
பகாலம்
|
பக்கம் >>> பகம் (=ஒளி, வெண்மை) + ஆலம்
(=சட்டி) = பகாலம் = வெண்ணிற சட்டி = மண்டையோடு.
|
பகிச்~கரி
|
புறந்தள்ளு
|
பகிர்கரி
|
பகிர்காரம் (=விலக்கு) >>> பகிர்கரி
>>> பகிச்~கரி
|
பகிச்~காரம்
|
புறந்தள்ளுகை, விலக்குகை
|
பகிர்காரம்
|
பகிர் (=வெளிப்படுத்து) + காரம் (=செயல்) =
பகிர்காரம் >>> பகிச்~காரம் = புறந்தள்ளுகை = விலக்கு.
|
பகிர்
|
வெளிப்புறம்
|
பகிர்
|
பகிர் (=சொல்லு, வெளிப்படுத்து) >>>
பகிர் = வெளிப்புறம்
|
பகிரங்கம்
|
வெளிப்படை
|
பகிராக்கம்
|
பகிர் (=வெளிப்புறம்) + ஆக்கம் (=செயல்பாடு) = பகிராக்கம்
>>> பகிரங்கம் = வெளிப்புறச் செயல்பாடு.
|
பகு
|
அதிகமான, கூடுதலான
|
பகு
|
பகுதி (=கூட்டம்) >>> பகு = கூடு,
குவி, திரள் >>> கூடுதலான. ஒ.நோ: பகுவாய் = குவிந்த வாய். பகுவாய்
என்பதற்குப் பிளந்த வாய் என்பது பொருந்தாது. காரணம், வாய் என்றாலே பிளவு உடையது
என்றே பொருள்.
|
பகுதம்
|
நிகழ்வது
|
பகிர்தம்
|
பகிர் (=வெளிப்படு, நிகழ்) >>>
பகிர்தம் >>> பகிதம் >>> பகுதம் = நிகழ்ந்து கொண்டிருப்பது
|
பகுதி
|
இயற்கை
|
பாங்குதி
|
பாங்கு (=இயல்பு) + உதி (=தோன்று) >>>
பாங்குதி >>> பக்குதி >>> பகுதி = இயல்பாகத் தோன்றியவை.
|
பகுதி
|
மந்திரி
|
பகுதி
|
பகு (=வகுத்துத் தெளிவாகக் கூறு) >>>
பகுதி = வகுத்துத் தெளிவாகக் கூறுபவன் = மந்திரி
|
பகுமூத்திரம்
|
நீரிழிவு
|
பகுமூத்திரம்
|
பகு (=அதிகம்) + மூத்திரம் (=சிறுநீர்) =
பகுமூத்திரம் = அதிகமாகச் சிறுநீர் கழிக்கச் செய்யும் நோய்.
|
பகுளம்
|
மிகுதி, அதிகம்
|
பகுளம்
|
பகு (=அதிகமான) >>> பகுளம் = அதிகம்,
மிகுதி
|
பங்கம்
|
இழிவு, கேடு, தோல்வி, அவமானம்
|
வாங்கம்
|
வாங்கு (=வளை, பணி, தாழ்) >>> வாங்கம்
>>> பாங்கம் >>> பங்கம் = தாழ்வு, பணிவு >>> இழிவு,
தோல்வி, அவமானம், கேடு, குற்றம், பாவம்.
|
பங்கம்
|
அலை
|
வாங்கம்
|
வாங்கு (=வளை) >>> வாங்கம்
>>> பாங்கம் >>> பங்கம் = வளைவுகளைக் கொண்டது = அலை.
|
வெள்ளி, 20 மார்ச், 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 11
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.