| 
   சொல்  | 
  
   பொருள்  | 
  
   தமிழ்ச் சொல்  | 
  
   மூலச்சொல்லும் தோன்றும் முறையும்  | 
 
| 
   சித்திரை  | 
  
   முதல் மாதம்  | 
  
   சீத்தெறை  | 
  
   சீ (=ஒளி) + தெறு (=மிகு, சுடு) + ஐ = சீத்தெறை >>> சித்திரை = மிக்க ஒளியுடன் கூடிய வெப்பம் சுடும் காலம்.  | 
 
| 
   வைகாசி  | 
  
   இரண்டாம் மாதம்  | 
  
   வைகாயி  | 
  
   வை (=கூர்மை) + காய் (=சின, எரி) + இ = வைகாயி >>> வைகாசி = சூரியன் கூரிய கதிர்களால் சினந்தெரிக்கும் காலம்  | 
 
| 
   ஆனி  | 
  
   மூன்றாம் மாதம்  | 
  
   ஆனி  | 
  
   ஆன் (=குறை, அடங்கு) + இ = ஆனி = வெப்பம் குறைந்து அடங்கும் காலம்.  | 
 
| 
   ஆடி  | 
  
   நான்காவது மாதம்  | 
  
   ஆடி  | 
  
   அடி (=வீசு, தாக்கு) >>> ஆடி = காற்று வேகமாக வீசித் தாக்கும் காலம்.  | 
 
| 
   ஆவணி  | 
  
   ஐந்தாவது மாதம்  | 
  
   ஆபணி  | 
  
   ஆ (=காளை) + பணி (=வேலை) = ஆபணி >>> ஆவணி = காளைகளைக் கொண்டு வேளாண் பணியைத் தொடங்கும் காலம்.  | 
 
| 
   புரட்டாசி  | 
  
   ஆறாவது மாதம்  | 
  
   பூரணாயி  | 
  
   பூரணம் (=நிறைவு) + அயம் (=நீர், நீர்நிலை) + இ = பூரணாயி >>> புரடாசி >>> புரட்டாசி = நீர்நிலைகள் நீரால் நிறையும் காலம்.  | 
 
| 
   ஐப்பசி  | 
  
   ஏழாவது மாதம்  | 
  
   அழிமழை  | 
  
   அழி (=பெருகு, சிதை) + மழை = அழிமழை >>> அயிமயை >>> ஐபயி >>> ஐப்பசி = மழையின் பெருக்கத்தால் வெள்ளம் ஏற்பட்டு சிதைவு உண்டாகும் காலம். .  | 
 
| 
   கார்த்திகை  | 
  
   எட்டாவது மாதம்  | 
  
   கார்த்திகை  | 
  
   கார் (=மேகம், மழை) + திகை (=அடங்கு, முடிவுறு) = கார்த்திகை = மேகங்கள் மழையைக் குறைத்து முடிவுறும் காலம்.  | 
 
| 
   மார்கழி  | 
  
   ஒன்பதாவது மாதம்  | 
  
   மருக்களி  | 
  
   மருக்கம் (=காற்று) + அளி (=குளிர்ச்சி) = மருக்களி >>> மார்கழி = குளிர்ந்த காற்று வீசும் காலம்.  | 
 
| 
   தை  | 
  
   பத்தாவது மாதம்  | 
  
   தை  | 
  
   தை (=உடு, சூடு, அலங்கரி, சூழ், மரக்கன்று, நடு, புகு) = புத்தாடை உடுத்தி மாலைசூடி அலங்கரித்த பலர் சூழ்ந்து மரக்கன்றினை நட்டுப் புத்தாண்டில் புகுகின்ற காலம்.  | 
 
| 
   மாசி  | 
  
   பதினொன்றாம் மாதம்  | 
  
   வாசி  | 
  
   வாசி (=கல், பாடு, இசை) >>> மாசி = புதிதாகக் கற்றலும் பாடுதலும் இசைத்தலும் ஆகிய வினைகள் செய்யும் காலம்.  | 
 
| 
   பங்குனி, பாற்குணம்  | 
  
   பன்னிரெண்டாம் மாதம்  | 
  
   வறக்குளம்  | 
  
   வறம் (=வற்றுகை, நீரில்லாமை) + குளம் (=நீர்நிலை) = வறக்குளம் >>> பாற்குணம் + இ >>> பக்குணி >>> பங்குனி = நீர்நிலைகள் நீரின்றி வற்றும் காலம்.  | 
 
| 
   மாச்சரியம்  | 
  
   பொறாமை, பகைமை.  | 
  
   மாச்சலியம்  | 
  
   மா (=தன்மை) + சலம் (=போட்டி) + இயம் = மாச்சலியம் >>> மாச்சரியம் = போட்டியாகக் கருதும் தன்மை.  | 
 
| 
   மாச்சல்  | 
  
   மரணம்  | 
  
   மாயல்  | 
  
   மாய் (=இற) + அல் = மாயல் >>> மாசல் >>> மாச்சல் = மரணம்  | 
 
| 
   மாச்சல்  | 
  
   சோம்பல்  | 
  
   மயல்  | 
  
   மயல் (=சோம்பல்) >>> மசல் >>> மாச்சல்.  | 
 
| 
   மாச்சல்  | 
  
   வருத்தம்  | 
  
   பய்யல்  | 
  
   பையா (=வருந்து) + அல் = பய்யல் >>> மாச்சல் = வருத்தம்  | 
 
| 
   மாச்சி, மாச்சு, மாய்ச்சி  | 
  
   கைவிலங்கு  | 
  
   மய்யசை  | 
  
   மை (=குற்றம்) + அசை (=கட்டு, பிணி) = மய்யசை >>> மாயசி >>> மாய்ச்சி >>> மாச்சி = குற்றத்திற்காகக் கைகளைப் பிணிப்பது.  | 
 
| 
   மாசங்கம்  | 
  
   மாதவிடாய்  | 
  
   மய்யகம்  | 
  
   மை (=உடல், கருமை, களங்கம்) + அகை (=வெளிப்படு) + அம் = மய்யகம் >>> மாசங்கம் = உடலில் இருந்து கருநிறத்தில் களங்கமாய் வெளிப்படுவது.  | 
 
| 
   மாதம், மாசம்  | 
  
   காலப்பிரிவு  | 
  
   மதம்  | 
  
   மதி (=சந்திரன்) + அம் = மதம் >>> மாதம் >>> மாசம் = சந்திரனை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காலப்பிரிவு.  | 
 
| 
   மாசலம்  | 
  
   நோய்  | 
  
   மாயலம்  | 
  
   மாய் (=அழி, கொல்) + அலம் (=துன்பம்) = மாயலம் >>> மாசலம் = கொல்லும் / அழிக்கும் துன்பம் = நோய்.  | 
 
| 
   மாசலம்  | 
  
   முதலை  | 
  
   மாயாலம்  | 
  
   மாய் (=மறை, கொல்லு) + ஆலம் (=நீர்) = மாயாலம் >>> மாசலம் = நீரில் மறைந்திருந்து தாக்கிக் கொல்வது.  | 
 
| 
   மாசலன்  | 
  
   கள்வன்  | 
  
   மாயலன்  | 
  
   மாய் (=மறை) + அலை (=திரி, இயங்கு) + அன் = மாயலன் >>> மாசலன் = மறைந்து மறைந்து இயங்குபவன்.  | 
 
| 
   மாசனம்  | 
  
   சமுதாயம்  | 
  
   மாசனம்  | 
  
   மா (=மிகுதி) + சனம் (=மக்கள்) = மாசனம் = மக்கள் கூட்டம்.  | 
 
| 
   மாசாந்தம்  | 
  
   அமாவாசை  | 
  
   பயற்றம்  | 
  
   பை (=ஒளி) + அற்றம் (=இன்மை, முடிவு) = பயற்றம் >>> மசத்தம் >>> மாசாந்தம் = ஒளியின் முடிவு = இருள் நிலை.  | 
 
| 
   மாசி  | 
  
   மேகம்  | 
  
   மாழீ  | 
  
   மழை + ஈ (=தா) = மாழீ >>> மாசி = மழையைத் தருவது.  | 
 
| 
   மாசிகம்  | 
  
   பிதிர்க்கடன்  | 
  
   மாயிகம்  | 
  
   மாய் (=இற) + இகு (=சொரி, கொடு) + அம் (=நீர், உணவு) = மாயிகம் >>> மாசிகம் = இறந்தோர்க்காக நீர்சொரிந்து உணவு படைக்கும் சடங்கு.  | 
 
| 
   மாசிகை  | 
  
   பறவை  | 
  
   பாழிகை  | 
  
   பாழ் (=ஆகாயம்) + இக (=கட) + ஐ = பாழிகை >>> மாசிகை = ஆகாயத்தைக் கடப்பது.  | 
 
| 
   மாசியம்  | 
  
   பிதிர்க்கடன்  | 
  
   மாயீயம்  | 
  
   மாய் (=இற) + ஈ (=கொடு) + அம் (=நீர், உணவு) = மாயீயம் >>> மாசியம் = இறந்தோர்க்காக நீரும் உணவும் படைப்பது.  | 
 
| 
   விபரீதம்  | 
  
   துன்பம், கேடு  | 
  
   வீவாறிதம்  | 
  
   வீவு (=அழிவு, கேடு) + ஆறு (=பயன்) + இதம் = வீவாறிதம் >>> விபரீதம் = அழிவைப் / கேட்டைப் பயனாகத் தருவது.  | 
 
| 
   மாசூல்  | 
  
   பயிரின் விளைச்சல்  | 
  
   பைசூல்  | 
  
   பை (=பசுமை, பயிர்) + சூல் (=கருப்பம், விளைச்சல்) = பைசூல் >>> பாசூல் >>> மாசூல் = பயிரின் விளைச்சல்.  | 
 
| 
   மாசை  | 
  
   தங்கம்  | 
  
   பாசை  | 
  
   பசுமை (=அழகு, ஒளி, செல்வம்) + ஐ = பாசை >>> மாசை = அழகும் ஒளியும் மிக்க செல்வம்.  | 
 
| 
   மாஞ்சம்  | 
  
   மாமிசம்  | 
  
   மாயம்  | 
  
   மா (=விலங்கு) + ஆய் (=அறு) + அம் (=உணவு) = மாயம் >>> மாஞ்சம் = விலங்கை அறுத்துப் பெற்ற உணவு.  | 
 
| 
   மாஞ்சா  | 
  
   பசை  | 
  
   பாசாய்  | 
  
   பசை + ஆய் (=நுண்மை, குத்து) = பாசாய் >>> பாஞ்சா >>> மாஞ்சா = குத்தக்கூடிய நுண்ணிய பொருட்களைக் கொண்ட பசை.  | 
 
| 
   மாஞ்சாதம்  | 
  
   நரகம்  | 
  
   மாய்ச்சாத்தம்  | 
  
   மாய் (=இற) + சாத்து (=அடி, தண்டி) + அம் = மாய்ச்சாத்தம் >>> மாஞ்சாதம் = இறந்தவர்களைத் தண்டிக்கும் இடம்.  | 
 
| 
   மாஞ்சிட்டம்  | 
  
   இரத்தம், சிவப்பு  | 
  
   மாயிற்றம்  | 
  
   மா (=விலங்கு) + இறு (=கொல், வடி) + அம் = மாயிற்றம் >>> மாசிட்டம் >>> மாஞ்சிட்டம் = விலங்கினைக் கொல்லும்போது வடிவது = குருதி >>> குருதியின் நிறம்.  | 
 
| 
   மாடம்  | 
  
   உழுந்து  | 
  
   மண்டம்  | 
  
   மண்டு (=பொங்கு, பெருகு) + அம் (=உணவு) = மண்டம் >>> மட்டம் >>> மாடம் = பொங்கிப் பெருகும் உணவுப் பொருள்.  | 
 
| 
   மாடி  | 
  
   துன்பம்  | 
  
   பாடு  | 
  
   பாடு (=துன்பம்) + இ = பாடி >>> மாடி  | 
 
| 
   மாடி  | 
  
   சினம்  | 
  
   மறம்  | 
  
   மறம் (=சினம்) + இ = மாறி >>> மாடி  | 
 
| 
   மாடி  | 
  
   விளிம்பு  | 
  
   மட்டம்  | 
  
   மட்டம் (=எல்லை) + இ = மட்டி >>> மாடி = விளிம்பு  | 
 
| 
   மாடிகை  | 
  
   கவசம்  | 
  
   மாறிகை  | 
  
   மறை + இகம் (=உடல்) + ஐ = மாறிகை >>> மாடிகை = உடலை மறைப்பது = கவசம்.  | 
 
| 
   மாடியம்  | 
  
   கவசம்  | 
  
   மாறியம்  | 
  
   மறை + இயம் = மாறியம் >>> மாடியம் = மறைப்பது.  | 
 
| 
   மாணவகம்  | 
  
   கல்வி  | 
  
   மாணவாக்கம்  | 
  
   மாணம் (=நன்மை) + ஆக்கம் (=நூல்) = மாணவாக்கம் >>> மாணவகம் = நூலால் அடையும் நன்மை.  | 
 
| 
   மாணவகன்  | 
  
   கற்பவன்  | 
  
   மாணவகன்  | 
  
   மாணவகம் (=கல்வி) >>> மாணவகன் = கல்வியைப் பயில்பவன்  | 
 
| 
   மாணவகன்  | 
  
   முட்டாள்  | 
  
   மாணாவகன்  | 
  
   மாணா (=நன்மையற்ற) + அகம் (=அறிவு) + அன் = மாணாவகன் >>> மாணவகன் = நன்மையற்ற அற்வுடையன்  | 
 
| 
   மாணவம்  | 
  
   மணிமாலை  | 
  
   மாணாப்பம்  | 
  
   மணி + ஆப்பு (=கட்டு) + அம் = மாணாப்பம் >>> மாணவம் = மணிகளால் கட்டிய மாலை.  | 
 
| 
   மாணவன், மாணவி  | 
  
   கல்வியைக் கற்பவன் / ள்  | 
  
   பாணாவன், பாணாவி  | 
  
   பாண் (=பாட்டு, கல்வி) + ஆவு (=விரும்பு) + இ /அன் = பாணாவி / பாணாவன் >>> மாணவன் = பாட்டு / கல்வியை விரும்புபவன்  | 
 
| 
   மாணாக்கன்  | 
  
   கற்பவன்  | 
  
   பாணாக்கன்  | 
  
   பாண் (=பாட்டு, கல்வி) + ஆக்கம் (=ஈட்டம்) + அன் = பாணாக்கன் >>> மாணாக்கன் = கல்வியை ஈட்டுபவன்.  | 
 
| 
   மாணி  | 
  
   குள்ளன்  | 
  
   பள்ளி  | 
  
   பள்ளை (=குட்டை) + இ = பள்ளி >>> மண்ணி >>> மாணி = குட்டையானவன்.  | 
 
| 
   பாணி, மாணி  | 
  
   அழகு  | 
  
   வாணி  | 
  
   வண்மை (=அழகு) + இ = வாணி >>> பாணி >>> மாணி  | 
 
| 
   மாணிக்கம்  | 
  
   நவமணியுள் ஒன்று  | 
  
   வானிங்கம்  | 
  
   வான் (=ஒளி, அழகு) + இங்கம் (=பொருள்) = வானிங்கம் >>> மாணிக்கம் = ஒளிரும் அழகிய பொருள்.  | 
 
| 
   மாத்திரம்  | 
  
   தனிமை  | 
  
   பாற்றிறம்  | 
  
   பால் (=பிரிவு) + திறம் (=நிலை) = பாற்றிறம் >>> மாத்திரம் = பிரிந்திருக்கும் நிலை = தனிமை  | 
 
| 
   மாத்திரம், மாத்திரை  | 
  
   ஒலி / இசை அளவு  | 
  
   மாற்றிறம்  | 
  
   மால் (=எல்லை, அளவு) + திறம் (=இசை, ஒலி) = மாற்றிறம் >>> மாத்திரம் >>> மாத்திரை = ஒலியின் / இசையின் அளவு  | 
 
| 
   மாத்திறம்  | 
  
   தும்பி  | 
  
   மாத்திறம்  | 
  
   மா (=கருமை, பெருமை, வண்டு) + திறம் (=இசை) = மாத்திறம் >>> மாத்திரம் = இசையெழுப்பும் பெரிய கருப்பு வண்டு.  | 
 
| 
   மாத்திரை  | 
  
   கெட்டியான மருந்து  | 
  
   மாற்றிறை  | 
  
   மாற்று (=மருந்து) + இறு (=செறி, கெட்டியாகு) + ஐ = மாற்றிறை >>> மாத்திரை = கெட்டியான மருந்து.  | 
 
| 
   மாத்திரை  | 
  
   பெரும்பேறு  | 
  
   மாத்திறை  | 
  
   மா (=பெரிய) + திறம் (=பேறு) + ஐ = மாத்திறை >>> மாத்திரை = பெரிய பேறு.  | 
 
| 
   மாத்து  | 
  
   செருக்கு  | 
  
   மதம்  | 
  
   மதம் (=செருக்கு) + உ = மாத்து  | 
 
| 
   மாத்து  | 
  
   பெருமை  | 
  
   மதம்  | 
  
   மதம் (=பெருமை) + உ = மாத்து  | 
 
| 
   மாத்துவம்  | 
  
   பெருமை  | 
  
   மாத்துமம்  | 
  
   மாத்து (=பெருமை) + மம் = மாத்துமம் >>> மாத்துவம்  | 
 
| 
   மாதங்கம்  | 
  
   யானை  | 
  
   மதங்கம்  | 
  
   மதங்கம் (=யானை) >>> மாதங்கம்  | 
 
| 
   மாதங்கம்  | 
  
   அரச மரம்  | 
  
   பய்தஃகம்  | 
  
   பைது (=பசுமை, இலை) + அஃகம் (=கூர்மை) = பய்தஃகம் >>> பாதக்கம் >>> மாதங்கம் = கூரிய பச்சிலைகளைக் கொண்டது  | 
 
| 
   மாதங்கம்  | 
  
   இளமை  | 
  
   மந்தகம்  | 
  
   மந்தம் (=இளமை) + அகம் = மந்தகம் >>> மாதங்கம்  | 
 
| 
   மாதங்கம்  | 
  
   உருவம்  | 
  
   பதங்கம்  | 
  
   பதம் (=பொருள்) + அங்கம் (=அடையாளம்) = பதங்கம் >>> மாதங்கம் = பொருளின் அடையாளம்  | 
 
| 
   மாதங்கம்  | 
  
   கடல்  | 
  
   மதாக்கம்  | 
  
   மதம் (=மிகுதி) + ஆக்கம் (=நீர்) = மதாக்கம் >>> மாதங்கம் = மிக்க நீரினைக் கொண்டது.  | 
 
| 
   மாதங்கன்  | 
  
   வேடன்  | 
  
   மாதக்கன்  | 
  
   மா (=விலங்கு) + தகை (=பிடி) + அன் = மாதக்கன் >>> மாதங்கன் = விலங்குகளைப் பிடிப்பவன்  | 
 
| 
   மாதண்டம்  | 
  
   அரசவீதி  | 
  
   மாதடம்  | 
  
   மா (=யானை, குதிரை, பெருமை) + தடம் (=வழி, தெரு) = மாதடம் >>> மாதண்டம் = யானையும் குதிரையும் செல்லும் பெரிய தெரு  | 
 
| 
   மாதவம்  | 
  
   இளவேனில்  | 
  
   பதம்மம்  | 
  
   பதம் (=இளம்புல், பருவம்) + அம்மை (=அழகு) + அம் = பதம்மம் >>> மதவ்வம் >>> மாதவம் = இளம்புற்கள் தோன்றும் அழகிய பருவகாலம்.  | 
 
| 
   மாதவம்  | 
  
   இனிமை  | 
  
   பதமம்  | 
  
   பதம் (=இனிமை) + அம் = பதமம் >>> மாதவம்  | 
 
| 
   மாதவம்  | 
  
   மது  | 
  
   மதமம்  | 
  
   மதம் (=போதை) + அம் (=நீர்) = மதமம் >>> மாதவம் = போதை தரும் நீர்.  | 
 
| 
   மாதவி  | 
  
   வெல்லம், சீனி  | 
  
   பதமி, மதமி  | 
  
   (1). பதம் (=இனிமை, உணவு) + இ = பதமி >>> மதவி >>> மாதவி = இனிமை மிக்க உணவுகள் (2). மது (=இனிமை) + அம் (=உணவு) + இ = மதமி >>> மாதவி = இனிமை மிக்க உணவுகள்.  | 
 
| 
   மாதனம்  | 
  
   கிராம்பு  | 
  
   மன்றாணம்  | 
  
   மன்று (=நறுமணம்) + ஆணு (=வலிமை) + அம் (=உணவு) = மன்றாணம் >>> மாதனம் = வலிமையான நறுமண உணவுப் பொருள்  | 
 
| 
   மாதா  | 
  
   தாய்  | 
  
   மாதா  | 
  
   மா (=உயிர், சுமத்தல்) + தா (=படை) = மாதா = உயிரைச் சுமந்து படைத்தவள் = தாய்.  | 
 
| 
   மாதாகம்  | 
  
   நரகம்  | 
  
   மாறகம்  | 
  
   மாறு (=மரணம், தவறு) + அகை (=அடி, வருத்து) + அம் = மாறகம் >>> மாதாகம் = இறந்தோரைத் தவறுக்காக வருத்தும் இடம்.  | 
 
| 
   மாதானுபங்கி  | 
  
   திருவள்ளுவர்  | 
  
   மாதண்ணுபக்கி  | 
  
   மதி (=அறிவு) + அண்ணு (=செறி) + பக்கம் (=நூல்) + இ = மாதண்ணுபக்கி >>> மாதானுபங்கி = நூலறிவு செறிந்தவர்.  | 
 
| 
   மாதி  | 
  
   சுழற்சி  | 
  
   மத்தி  | 
  
   மத்து (=சுழல்) + இ = மத்தி >>> மாதி = சுழற்சி  | 
 
| 
   மாதி, மாந்தி  | 
  
   மாமரம்  | 
  
   மதி  | 
  
   மது (=பூந்தாது) + இ = மதி >>> மாதி = பூந்தாது மிக்கது.  | 
 
| 
   மாதிகம்  | 
  
   குதிரையின் சுற்றுப்பாதை  | 
  
   மத்திகம்  | 
  
   மத்து (=சுற்று) + இக (=கட) + அம் = மத்திகம் >>> மாதிகம் = சுற்றிக் கடக்கும் பாதை.  | 
 
| 
   மாதிமை  | 
  
   பொருத்தம், தகுதி  | 
  
   பதிமை  | 
  
   பதி (=பொருந்து, தகு) + மை = பதிமை >>> மாதிமை = பொருத்தம், தகுதி  | 
 
| 
   மாதிமை  | 
  
   காதல்  | 
  
   பத்திமை  | 
  
   பத்தி (=அன்பு, காதல்) + மை = பத்திமை >>> மாதிமை  | 
 
| 
   மாதிரம்  | 
  
   யானை  | 
  
   மாதிறம்  | 
  
   மா (=கருமை, பெருமை, விலங்கு) + திறம் (=உடல்) = மாதிறம் >>> மாதிரம் = கருத்த பெரிய உடலுடைய விலங்கு.  | 
 
| 
   மாதிரம்  | 
  
   மலை  | 
  
   மாதிறம்  | 
  
   மா (=பெருமை, வலிமை, நிலம்) + திறம் (=கூறு) = மாதிறம் >>> மாதிரம் = வலிமையான பெரிய நிலக் கூறு.  | 
 
| 
   மாதிரம்  | 
  
   நிலம், பூமி  | 
  
   மாதிரம்  | 
  
   மா (=பெருமை, இடம்) + திரம் (=நிலைபேறு) = மாதிரம் = நிலைபேறுடைய பெரிய இடம்.  | 
 
| 
   மாதிரம்  | 
  
   மண்டிலம், பெருவட்டம்  | 
  
   மத்திரம்  | 
  
   மத்து (=சுற்று) + இருமை (=பெருமை) + அம் = மத்திரம் >>> மாதிரம் = பெரிய சுற்று.  | 
 
| 
   மாதிரி  | 
  
   அடையாளப் பொருள்  | 
  
   பாதிரி  | 
  
   பதம் (=தரம், அடையாளம், பொருள்) + இரு + இ = பாதிரி >>> மாதிரி = தரத்திற்கு அடையாளமாய் இருக்கும் பொருள்.  | 
 
| 
   மாதிரு, மாதுரு  | 
  
   அன்னை  | 
  
   மாதிரு  | 
  
   மா (=உயிர், சுமை) + திரு (=பாக்கியம்) = மாதிரு = உயிர்களைச் சுமக்கும் பாக்கியம் பெற்றவள்.  | 
 
| 
   மாதிரு  | 
  
   பூமி  | 
  
   மாதிரு  | 
  
   மா (=பெருமை, நிலம், சுமை) + திரு (=செல்வம், வளம்) = மாதிரு = வளங்களைச் சுமக்கும் பெருநிலம்.  | 
 
| 
   மாதிரு  | 
  
   பசு  | 
  
   மாதிரு  | 
  
   மா (=ஒலியன், விலங்கு) + திரு (=தெய்வத்தன்மை) = மாதிரு = மா என்று அழைக்கின்ற தெய்வத்தன்மை வாய்ந்த விலங்கு  | 
 
| 
   மாது  | 
  
   மனைவி, பெண்  | 
  
   மத்து  | 
  
   பற்று (=இல்வாழ்க்கை, பற்றுக்கோடு) >>> மத்து >>> மாது = இல்வாழ்க்கையின் பற்றுக்கோடாய் இருப்பவள்.  | 
 
| 
   மாது  | 
  
   காதல்  | 
  
   பற்று  | 
  
   பற்று (=அன்பு, காதல்) >>> மத்து >>> மாது  | 
 
| 
   மாது  | 
  
   பெருமை  | 
  
   மதம்  | 
  
   மதம் (=பெருமை) + உ = மாது  | 
 
| 
   மாது  | 
  
   குற்றம்  | 
  
   மறு  | 
  
   மறு (=குற்றம்) >>> மாது  | 
 
| 
   மல்லிகை  | 
  
   மாதுரம்  | 
  
   மன்றுரம்  | 
  
   மன்று (=நறுமணம்) + உரம் (=மிகுதி) = மன்றுரம் >>> மத்துரம் >>> மாதுரம் = மிக்க நறுமணம் கொண்டது.  | 
 
| 
   மாதுரி  | 
  
   சாராயம்  | 
  
   மாதுரீ  | 
  
   மதம் (=போதை) + உரம் (=மிகுதி) + ஈ (=கொடு) = மாதுரீ >>> மாதுரி = மிக்க போதையைத் தருவது.  | 
 
| 
   மாதுரியம்  | 
  
   இனிமை  | 
  
   மாதுரியம்  | 
  
   மதுரம் (=இனிமை) + இயம் = மாதுரியம்  | 
 
| 
   மாதுரியர்  | 
  
   அறிவு மிக்கோர்  | 
  
   மாதுறியர்  | 
  
   மதி (=அறிவு) + உறு (=மிகுதி) + இயர் = மாதுறியர் >>> மாதுரியர் = அறிவு மிக்கவர்கள்.  | 
 
| 
   மாதுவம்  | 
  
   கள்  | 
  
   மதுவம்  | 
  
   மது (=போதை) + அம் (=நீர்) = மதுவம் >>> மாதுவம் = போதை தருகின்ற நீர்.  | 
 
| 
   மாதுவான்  | 
  
   பெண் குதிரை  | 
  
   மாதுமான்  | 
  
   மாது (=பெண்) + மான் (=குதிரை) = மாதுமான் >>> மாதுவான்  | 
 
| 
   மாதோயம்  | 
  
   கடல்  | 
  
   மாதோயம்  | 
  
   மா (=மிகுதி) + தோயம் (=நீர்) = மாதோயம் = நீர் மிக்கது  | 
 
| 
   மாந்தம்  | 
  
   குழந்தைகள் நோய்  | 
  
   மாந்தம்  | 
  
   மந்தம் (=இளமை) >>> மாந்தம் = குழந்தைகளுக்கு வரும் நோய்.  | 
 
| 
   மாந்தியம்  | 
  
   மந்தகுணம்  | 
  
   மாந்தியம்  | 
  
   மந்தம் + இயம் = மாந்தியம்  | 
 
| 
   மாந்தி  | 
  
   குளிகன்  | 
  
   மாறி  | 
  
   மறை + இ = மாறி >>> மாதி >>> மாந்தி = மறைகோள்.  | 
 
| 
   மாந்திரிகம், மாந்திரியம்  | 
  
   மந்திர அறிவு  | 
  
   மாந்திரிங்கம்  | 
  
   மந்திரம் + இங்கம் (=அறிவு) = மாந்திரிங்கம் >>> மாந்திரிகம் = மந்திரங்களைப் பற்றிய அறிவு.  | 
 
| 
   மாப்பு  | 
  
   மிகுதி  | 
  
   பம்பு  | 
  
   பம்பு (=நிறை, மிகு) >>> மப்பு >>> மாப்பு = நிறைவு, மிகுதி  | 
 
| 
   மாபலன்  | 
  
   காற்று  | 
  
   பாவலன்  | 
  
   பாவு (=பரவு) + அலை (=திரி) + அன் = பாவலன் >>> மாபலன் = பரவித் திரியும் இயல்புடையது.  | 
 
| 
   மாபனம்  | 
  
   எடைபோடல், தராசு  | 
  
   மாபாணம்  | 
  
   மா (=எடை) + பாணி (=அள) + அம் = மாபாணம் >>> மாபனம் = எடை அளத்தல், எடை அளப்பது.  | 
 
| 
   மாபாடியம்  | 
  
   பேருரை  | 
  
   மாபாட்டியம்  | 
  
   மா (=மிகுதி) + பாட்டு (=செய்யுள்) + இயம் (=சொல்) = மாபாட்டியம் >>> மாபாடியம் = செய்யுளை விரித்துக் கூறல்.  | 
 
| 
   மாபூதி  | 
  
   நரகம்  | 
  
   மாய்பொத்தி  | 
  
   மாய் (=இற, வருத்து) + பொத்து (=தவறு) + இ = மாய்பொத்தி >>> மாபூதி = இறந்தோரைத் தவறுக்காக வருத்தும் இடம்.  | 
 
| 
   மாமாத்திரன்  | 
  
   வைத்தியன்  | 
  
   பைமாத்திரன்  | 
  
   மாய் (=துன்புறு) + மாத்திரை (=மருந்து) + அன் = மாய்மாத்திரன் >>> மாமாத்திரன் = துன்பம் / நோய்க்கு மருந்து அளிப்பவன்.  | 
 
| 
   மாமிசம்  | 
  
   ஊன் உணவு  | 
  
   மாமிசம், மாபியம்  | 
  
   (1). மாய் (=கொல்) + மிசை (=உண்) + அம் = மாய்மிசம் >>> மாமிசம் = கொன்று உண்ணப்படுவது. (2). மா (=விலங்கு) + வீ (=கொல்) + அம் (=உணவு) = மாவீயம் >>> மாமிசம் = விலங்கைக் கொன்று பெறும் உணவு.  | 
 
| 
   மாமூல்  | 
  
   பரம்பரை வழக்கம்  | 
  
   மாவூழ்  | 
  
   மா (=இயற்கை) + ஊழ் (=விதி, மரபு) = மாவூழ் >>> மாமூல் = இயற்கை மரபு = பரம்பரை வழக்கம்  | 
 
| 
   மாய்  | 
  
   நரி  | 
  
   மாய்  | 
  
   மய (=மயங்கு) >>> மாய் (=மயக்கு, வஞ்சி, ஏமாற்று) >>> மாய் = வஞ்சிப்பது.  | 
 
| 
   மாயம், மாயை  | 
  
   வஞ்சனை, பொய்  | 
  
   மாயம், மாயை  | 
  
   மய (=மயங்கு) + அம் = மாயம் = மயக்கத்தைத் தருவது = பொய்யானது, ஏமாற்றுவது.  | 
 
| 
   மாயம்  | 
  
   தீங்கு  | 
  
   பாழம்  | 
  
   பாழ் (=தீங்கு) + அம் = பாழம் >>> மாயம்  | 
 
| 
   மாயம்  | 
  
   கருப்பு  | 
  
   மழையம்  | 
  
   மழை (=கருமை) + அம் = மழயம் >>> மய்யம் >>> மாயம்  | 
 
| 
   மாயம்  | 
  
   உயரம்  | 
  
   பய்யம்  | 
  
   பை (=பொங்கு, உயர்) + அம் = பய்யம் >>> மாயம் = உயரம்  | 
 
| 
   மாயாதம்  | 
  
   முதலை  | 
  
   மாயாறம்  | 
  
   மாய் (=மறை, தாக்கு, அழி) + ஆறு (=பொறு, காத்திரு) + அம் (=நீர்) = மாயாறம் >>> மாயாதம் = நீரில் மறைவாகக் காத்திருந்து தாக்கி அழிப்பது.  | 
 
| 
   மாயாவி  | 
  
   வஞ்சகன்  | 
  
   மாயமி  | 
  
   மாயம் (=வஞ்சனை) + இ = மாயமி >>> மாயாவி = வஞ்சகன்  | 
 
| 
   மாயாளம்  | 
  
   பாசாங்கு  | 
  
   மாயாளம்  | 
  
   மாய் (=மயக்கு, ஏமாற்று) + ஆள் + அம் = மாயாளம் = ஏமாற்றி ஆளுகை = பாசாங்கு, நடிப்பு.  | 
 
| 
   மாயிடம்  | 
  
   எருமை  | 
  
   மயிடம்  | 
  
   மயிடம் (=எருமை) >>> மாயிடம்  | 
 
| 
   மாயிரம்  | 
  
   புறம்பானது  | 
  
   பாழிரம்  | 
  
   பாழ் (=வெளி) + இரு + அம் = பாழிரம் >>> மாயிரம் = வெளியில் இருப்பது = புறம்பானது.  | 
 
| 
   மாயு  | 
  
   பித்தம்  | 
  
   மாயு  | 
  
   மாய் (=மயக்கு) + உ = மாயு = மயக்கம் உண்டாக்குவது.  | 
 
| 
   மாயை  | 
  
   வெட்டவெளி, ஏதுமின்மை  | 
  
   பாழை  | 
  
   பாழ் (=இன்மை, வெளி) + ஐ = பாழை >>> மாயை = வெட்டவெளி, எதுவும் இல்லாமை, பொய்த்தோற்றம்.  | 
 
| 
   மார்க்கணம்  | 
  
   அம்பு  | 
  
   மாறுகணம்  | 
  
   மாறு (=அழி) + கணை (=தண்டு) + அம் = மாறுகணம் >>> மார்க்கணம் = அழிவைத் தரும் தண்டு.  | 
 
| 
   மார்க்கணம்  | 
  
   பிச்சை  | 
  
   மறுகன்னம்  | 
  
   மறுகு (=அலை, வருந்து) + அன்னம் (=உணவு) = மறுகன்னம் >>> மார்க்கணம் = உணவுக்காக அலைந்து வருந்துதல்.  | 
 
| 
   மார்க்கணம்  | 
  
   தேடுதல்  | 
  
   மறிகாணம்  | 
  
   மறி (=திரும்பச்செய்) + காண் (=பார்) + அம் = மறிகாணம் >>> மார்க்கணம் = திரும்பத் திரும்பப் பார்த்தல்.  | 
 
| 
   மார்க்கணன்  | 
  
   பிச்சைக்காரன்  | 
  
   மார்க்கணன்  | 
  
   மார்க்கணம் (=பிச்சை) >>> மார்க்கணன் = பிச்சை எடுப்பவன்.  | 
 
| 
   மார்க்கம்  | 
  
   வழி, தெரு  | 
  
   மருங்கம்  | 
  
   மருங்கு (=வழி) + அம் = மருங்கம் >>> மருக்கம் >>> மார்க்கம்  | 
 
| 
   மார்ச்சனம்  | 
  
   கூட்டி நீக்குதல்  | 
  
   பறயணம்  | 
  
   பறை (=நீக்கு) + அணை (=கூட்டு) + அம் = பறயணம் >>> மரசனம் >>> மார்ச்சனம் = கூட்டி நீக்குதல்.  | 
 
| 
   மார்ச்சனி  | 
  
   துடைப்பம்  | 
  
   மார்ச்சனி  | 
  
   மார்ச்சனம் (=கூட்டி நீக்கல்) + இ = மார்ச்சனி = கூட்டி நீக்க உதவுவது = துடைப்பம்.  | 
 
| 
   மார்ச்சனை  | 
  
   முழவைக் கட்டும்நார்  | 
  
   பறயணை  | 
  
   பறை (=தோல்கருவி) + அணை (=கட்டு) = பறயணை = மரசனை >>> மார்ச்சனை = தோல்கருவியைக் கட்டுவது.  | 
 
| 
   மார்ச்சனை  | 
  
   முழவில் பூசும் சாந்து  | 
  
   பறயணை  | 
  
   பறை (=தோல்கருவி) + அணி (=பூசு) + ஐ = பறயணை = மரசனை >>> மார்ச்சனை = தோல்கருவியின் மேல் பூசுவது.  | 
 
| 
   மார்ச்சாரி  | 
  
   கத்தூரி எண்ணெய்  | 
  
   மாற்சாறி  | 
  
   மான் + சாறு (=தைலம்) + இ = மாற்சாறி >>> மார்ச்சாரி = மானில் இருந்து எடுக்கப்பட்ட தைலம்.  | 
 
| 
   மார்ச்சாலம்  | 
  
   பூனை  | 
  
   மறயலம்  | 
  
   மறை + அலை (=திரி) + அம் = மறயலம் >>> மரசலம் >>> மார்ச்சாலம் = மறைந்து திரியும் விலங்கு.  | 
 
| 
   மார்த்தவம்  | 
  
   மென்மைத் தன்மை  | 
  
   மாறுதவம்  | 
  
   மாறு (=தன்மை) + தவி (=மெலி) + அம் = மாறுதவம் >>> மார்த்தவம் = மென்மையான தன்மை.  | 
 
| 
   மார்த்தாண்டம்  | 
  
   பன்றி  | 
  
   பார்த்தாட்டம்  | 
  
   பார் (=பூமி, நிலம்) + தடி (=வெட்டு, பிள) + அம் = பார்த்தாட்டம் >>> மார்த்தாண்டம் = நிலத்தைப் பிளக்கும் விலங்கு.  | 
 
| 
   மார்த்தாண்டன்  | 
  
   சூரியன்  | 
  
   பார்த்தாண்டன்  | 
  
   பார் (=பூமி, தடவை, சுற்று) + தாண்டு (=கடந்துசெல்) + அன் = பார்த்தாண்டன் >>> மார்த்தாண்டன் = பூமியைச் சுற்றிக் கடந்து செல்பவன்.  | 
 
| 
   மாரகம்  | 
  
   மரணத்தைத் தருவது  | 
  
   மாறாக்கம்  | 
  
   மாறு (=மரணம்) + ஆக்கு + அம் = மாறாக்கம் >>> மாரகம் = இறப்பை உண்டாக்குவது.  | 
 
| 
   மாரகம்  | 
  
   மரணம்  | 
  
   மாறகம்  | 
  
   மாறு (=நீங்கு) + அகம் (=உயிர்) = மாறகம் >>> மாரகம் = உயிர் நீங்குகை = இறப்பு.  | 
 
| 
   மாரன்  | 
  
   மன்மதன்  | 
  
   மாறன்  | 
  
   மறம் (=மயக்கம்) + அன் = மாறன் >>> மாரன் = மயக்கத்தை உண்டாக்குபவன்  | 
 
| 
   மாரி  | 
  
   மரணம்  | 
  
   மாறி  | 
  
   மாறு (=இற) + இ = மாறி >>> மாரி = இறப்பு  | 
 
| 
   மாரிசி, மாருசி  | 
  
   மிளகு  | 
  
   மரீசி  | 
  
   மரீசி (=மிளகு) >>> மாரிசி >>> மாருசி  | 
 
| 
   மாரிபம்  | 
  
   வாயில், வழி  | 
  
   வாரிமம்  | 
  
   வாரி (=வழி) + மம் = வாரிமம் >>> மாரிபம்  | 
 
| 
   மாரீசம்  | 
  
   வஞ்சனை  | 
  
   மாறியம்  | 
  
   மறை (=வஞ்சனை) + இயம் = மாறியம் >>> மாரீசம்  | 
 
| 
   மாரீசம்  | 
  
   மயக்கம்  | 
  
   மாறியம்  | 
  
   மறம் (=மயக்கம்) + இயம் = மாறியம் >>> மாரீசம்  | 
 
செவ்வாய், 28 ஜூலை, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம் - பகுதி 39
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.