சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
மசகரி |
திரைச்சீலை |
மாயாக்காரி |
மாய் (=மறை) + ஆக்கம் (=துணி) + ஆர் (=கட்டு) + இ = மாயாக்காரி >>> மசகரி = மறைப்புக்காகக் கட்டும் துணி. |
மசகாரி |
கொசுவலை |
மசகரி |
மசகம் (=கொசு) + அரி (=வலை) = மசகரி >>> மசகாரி. |
மசரதம் |
கானல்நீர் |
மாயலத்தம் |
மாயம் (=பொய்) + அலை (=நீர்) + அத்தம் (=பாலை) = மாயலத்தம் >>> மசரதம் = பாலைவனத்தில் தோன்றும் பொய்யான நீரலை |
மசனம் |
வருத்தம் |
மாயணம் |
மாய் (=வருந்து) + அணம் = மாயணம் >>> மசனம் = வருத்தம் |
மசாகம் |
குருவி |
பாயஃகம் |
பாய் (=பற) + அஃகு (=நுணுகு, சிறு) + அம் = பாயஃகம் >>> பாயாகம் >>> மசாகம் = சிறிய பறவை. |
மசால் |
தீவட்டி |
பய்யாள் |
பை (=எரி) + ஆள் (=கைக்கொள்) = பய்யாள் >>> மச்சால் >>> மசால் = கையில் கொள்ளும் தீ. |
மசால்சி |
தீவட்டிப் பிடிப்பவன் |
பய்யாள்சி |
மசால் (=தீவட்டி) + சி = மசால்சி = தீவட்டியைப் பிடிப்பவன். |
மசாலா,மசால், மசாலை |
கெட்டியான கார உணவு |
பய்யள் |
பை (=எரி) + அள் (=செறி, உண்) = பய்யள் >>> மச்சல் >>> மசால், மசாலா, மசாலை = செறிவான எரியூட்டும் உணவுப் பொருள். |
மயானம், மசானம் |
சுடுகாடு |
பய்யானம் |
பை (=எரி) + ஆன் (=இடம்) + அம் = பய்யானம் >>> மயானம் >>> மசானம் = எரிக்கக்கூடிய இடம். |
மசி |
வழவழப்பு, மைபோல அரை |
மசி |
மை >>> மயி >>> மசி = மைபோன்ற வழவழப்பு, மைபோல வழவழப்பாக அரைத்தல். |
மசிகம் |
கரையான் புற்று |
மாயிகம் |
மாய் (=மறை) + இகு (=கரைந்து விழு) + அம் = மாயிகம் >>> மசிகம் = கரைந்து விழக்கூடிய மறைவிடம். |
மசிகூபி |
மைக்கூடு |
மசிக்குப்பி |
மசி (=மை) + குப்பி (=கூடு) = மசிக்குப்பி >>> மசிகூபி = மைக்கூடு |
மசிபதம் |
மைதொட்டு எழுதுமிறகு |
மசிபறம் |
மசி (=மை) + பறை (=இறகு) + அம் = மசிபறம் >>> மசிபதம் = மையைத் தொட்டு எழுதும் இறகு. |
மசிர் |
புல் |
பயிர் |
பயிர் (=புல்) >>> மசிர் |
மசீது, மசூதி |
இறந்தோரின் மறைவிடம் |
மாயிறு |
மாய் (=இற, மறை) + இறு (=கட்டு) = மாயிறு >>> மாசிது >>> மசீது >>> மசூதி = இறந்தவருக்காக கட்டப்பட்ட மறைவிடம். |
மசுக்கரம் |
மூங்கில் |
பய்யுகாரம் |
பை (=பரவு) + உகை (=தோற்றுவி) + ஆர் (=தீ) + அம் = பய்யுகாரம் >>> மச்சுகாரம் >>> மசுக்கரம் = தீயைத் தோற்றுவித்துப் பரப்புவது |
மசுரம், மசூரம், மஞ்சூரம் |
கடலைப் பருப்பு |
பய்யுரம் |
பை (=ஒளி) + உரு (=முதிர்) + அம் (=உணவு) = பய்யுரம் >>> மச்சுரம் >>> மசுரம் = மஞ்சள்நிற முதிர்ந்த உணவு. |
வைசூரி |
சின்னம்மை நோய் |
பைசுரி |
பை (=பொங்கு, கொப்பளி) + சுரம் (=காய்ச்சல்) + இ = பைசுரி >>> வைசூரி = காய்ச்சலையும் கொப்பளங்களையும் உண்டாக்குவது |
மசூரிகம், மசூரிகை, மசூரி |
சின்னம்மை நோய் |
பய்யுரிகம் |
பை (=பொங்கு, கொப்பளி) + உரு (=வெப்பம்) + இகம் (=உடல்) = பய்யுரிகம் >>> மச்சுரிகம் >>> மசூரிகம், மசூரிகை = உடலில் காய்ச்சலையும் கொப்பளங்களையும் உண்டாக்குவது |
மசூரம் |
மூட்டைப் பூச்சி |
பாய்ச்சுறம் |
பாய்ச்சு (=குத்து, கடி) + உறி (=உறிஞ்சு) + அம் (=உண்) = பாய்ச்சுறம் >>> மசூரம் = உடலைக் கடித்து உறிஞ்சி உண்பது |
மசோதா |
நிறைவேற வேண்டியது |
வாயொற்றா |
வாய் (=நிறைவேறு) + ஒற்று (=தீர்மானி) + ஆ = வாயொற்றா >>> மாசொத்தா >>> மசோதா = நிறைவேற வேண்டிய தீர்மானம். |
மஞ்சகம் |
கட்டில், மெத்தை |
பாயகம், பஞ்சகம் |
(1). பாய் (=படுக்கை) + அகம் (=இடம்) = பாயகம் >>> மாசகம் >>> மஞ்சகம் = படுக்கை உள்ள இடம். (2). பஞ்சு + அகம் = பஞ்சகம் >>> மஞ்சகம் = உள்ளே பஞ்சுடையது = மெத்தை, கட்டில் |
மஞ்சணம் |
பற்பொடி |
மாசானம் |
மாசு (=கறை, பொடி) + ஆன் (=நீக்கு) + அம் = மாசானம் >>> மஞ்சணம் = கறையை நீக்கும் பொடி. |
மஞ்சம், மஞ்சு |
கட்டில், மெத்தை |
பாயம், பஞ்சம் |
(1). பாய் (=படுக்கை) + அம் = பாயம் >>> மாசம் >>> மஞ்சம். (2) பஞ்சு + அம் = பஞ்சம் >>> மஞ்சம் = பஞ்சுடையது = மெத்தை. |
மஞ்சம் |
பீடம் |
பய்யம் |
பை (=எழு, உயர்) + அம் = பய்யம் >>> பச்சம் >>> மஞ்சம் = உயரமானது = பீடம் |
மஞ்சரம், மஞ்சரி |
முத்து |
பய்யாரம் |
பை (=ஒளி, வெண்மை, வலிமை) + ஆரம் (=வட்டம்) = பய்யாரம் >>> மச்சாரம் >>> மஞ்சரம் = வெண்மை ஒளி வீசுகின்ற வலிமை மிக்க வட்டமான பொருள். |
மஞ்சரி |
பூங்கொத்து, பூமாலை |
பய்யாரி |
பை (=மிகுதி) + ஆர் (=மலர், பொருந்து) + இ = பய்யாரி >>> மச்சாரி >>> மஞ்சரி = மலர்கள் மிகுதியாகப் பொருந்தி இருப்பது. |
மஞ்சரி |
முளை, தளிர் |
பய்யாரி |
பை (=பசுமை) + ஆர் (=பொருந்து, கூர்மை) + இ = பய்யாரி >>> மச்சாரி >>> மஞ்சரி = பசுமையும் கூர்மையும் பொருந்தியது |
மஞ்சரி |
மலர்க்காம்பு |
பய்யாரி |
பை (=பசுமை) + ஆர் (=மலர், தண்டு, பொருந்து) + இ = பய்யாரி >>> மச்சாரி >>> மஞ்சரி = மலர் பொருந்தியிருக்கும் பசுந்தண்டு |
மஞ்சரி |
ஒழுக்கம் |
பய்யாறி |
பய (=ஒழுகு, செல்) + ஆறு (=வழி, நெறி) + இ = பய்யாறி >>> மச்சாரி >>> மஞ்சரி = நெறியில் செல்லுதல். |
மஞ்சலன் |
வில்லாளி |
வச்சாளன் |
வசி (=கூர்ங்கோல், அம்பு) + ஆள் + அன் = வச்சாளன் >>> மஞ்சலன் = அம்பினை ஆள்பவன் |
மஞ்சள், மஞ்சி |
ஒளி செறிந்த அழகு நிறம் |
பய்யள் |
பை (=அழகு, ஒளி, நிறம்) + அள் (=செறிவு) = பய்யள் >>> மச்சள் >>> மஞ்சள் = ஒளி செறிந்த அழகிய நிறம், ஒளிநிறப் பொருள். |
மஞ்சன் |
மகன் |
பையன் |
பை (=இளமை) + அன் = பையன் >>> பய்யன் >>> மச்சன் >>> மஞ்சன் = இளமையானவன் = மகன். |
மஞ்சன் |
ஆண் மகன் |
பய்யன் |
பை (=உடல் வலிமை) + அன் = பய்யன் >>> மச்சன் >>> மஞ்சன் = உடல் வலிமை மிக்கவன். |
மஞ்சனம் |
மஞ்சள் நீர் |
மஞ்சன்னம் |
மஞ்சள் + அன்னம் (=நீர்) = மஞ்சன்னம் >>> மஞ்சனம் = மஞ்சள் கலந்த நீர். |
மஞ்சன் |
அழகன் |
பய்யன் |
பை (=அழகு) + அன் = பய்யன் >>> மச்சன் >>> மஞ்சன் = அழகன் |
மஞ்சனி |
பெண் |
பய்யணி |
பை (=அழகு) + அணி (=அன்பு, இனிமை) = பய்யணி >>> மச்சனி >>> மஞ்சனி = அழகும் அன்பும் இனிமையும் கொண்டவள். |
மஞ்சி |
சணல் நார் |
பஞ்சி |
பஞ்சி (=நார்) >>> மஞ்சி |
மஞ்சிக்கம் |
தரிசுநிலம் |
மய்யிகம் |
மை (=மலடு) + இக (=கட, பரவு) + அம் = மய்யிகம் >>> மச்சிகம் >>> மஞ்சிக்கம் = மலட்டுத் தன்மை கொண்ட பரப்பு |
மஞ்சிகன் |
நாவிதன் |
பாசிகன் |
பசுமை (=மயிர்) + இக (=பிரி, நீக்கு) + அன் = பாசிகன் >>> மஞ்சிகன் = மயிரை நீக்குபவன். |
மஞ்சிகை |
பெட்டி, வைப்பறை |
பய்யிகை |
பயம் (=பொருள்) + இகு (=இடு) + ஐ = பய்யிகை >>> மச்சிகை >>> மஞ்சிகை = பொருட்களை இட்டு வைப்பது. |
மஞ்சிபலை |
வாழைப் பழம் |
மஞ்சிபலை |
மஞ்சி (=மஞ்சள் நிறம்) + பலம் (=பழம்) + ஐ = மஞ்சிபலை = மஞ்சள் நிறப் பழங்களைத் தருவது. |
மஞ்சிமம் |
அழகு |
மஞ்சிமம் |
மஞ்சி (=மஞ்சள்) + மம் = மஞ்சிமம் = மஞ்சள் தரும் அழகு. |
மஞ்சிரம், மஞ்சீரம் |
கால் ஆழி, காற்சிலம்பு |
பெய்யிறம் |
பெயர் (=பாதம்) + இறு (=செறி) + அம் = பெய்யிறம் >>> மெச்சிரம் >>> மஞ்சிரம் = பாதத்தில் செறிக்கப்படுவது. |
மஞ்சில் |
வயலுக்குள் நடைபாதை |
பாசில் |
பசுமை (=பயிர்) + இல் (=பிரிவு, இடம்) = பாசில் >>> மஞ்சில் = வயலில் பயிர்களைப் பிரிக்கும் இடம். |
மஞ்சில் |
சத்திரம், வீடு |
வழில் |
வழி (=பாதை) + இல் (=தங்குமிடம்) = வழில் >>> மசில் >>> மஞ்சில் = பாதையில் தங்கிச் செல்லும் இடம். |
மஞ்சிலை |
செங்கல் |
மண்சிலை |
மண் + சிலை (=கல்) = மஞ்சிலை = மண்ணால் செய்த கல். |
மஞ்சு |
அழகு, அணிகலன் |
பய்யு |
பை (=அழகு) + உ = பய்யு >>> மச்சு >>> மஞ்சு = அழகு, அழகுப் பொருள் = அணிகலன். |
மஞ்சு |
யானையின் முதுகு |
பய்யு |
பை (=எழு, உயர், குவி) + உ = பய்யு >>> மச்சு >>> மஞ்சு = உயரமான குவிந்த இடம் = யானையின் முதுகு |
மஞ்சு |
களஞ்சியம் |
பய்யு, வய்யு |
(1). பயம் (=பொருள்) + உ = பய்யு >>> மச்சு >>> மஞ்சு = பொருட்களின் இருப்பிடம். (2). வை (=இடு, சேமி) + உ = வய்யு >>> மச்சு >>> மஞ்சு = சேமிக்கும் இடம். |
மஞ்சு |
கூரை |
மாயு |
மாய் (=மறை) + உ = மாயு >>> மாசு >>> மஞ்சு = மறைப்பு |
மஞ்சு |
இளமை |
பய்யு |
பை (=இளமை) + உ = பய்யு >>> மச்சு >>> மஞ்சு |
மஞ்சு |
வலிமை |
பய்யு |
பை (=வலிமை) + உ = பய்யு >>> மச்சு >>> மஞ்சு |
மஞ்சுகம் |
கொக்கு |
பய்யுகம் |
பை (=ஒளி, வெண்மை) + உகு (=பற) + அம் = பய்யுகம் >>> மச்சுகம் >>> மஞ்சுகம் = வெண்ணிறப் பறவை |
மஞ்சுளம் |
அழகு, அழகானது |
பய்யுளம் |
பை (=அழகு) + உள் + அம் = பய்யுளம் >>> மச்சுளம் >>> மஞ்சுளம் = அழகுடையது. |
மஞ்சுளம் |
மென்மை |
பஞ்சுளம் |
பஞ்சு + உள் + அம் = பஞ்சுளம் >>> மஞ்சுளம் = பஞ்சின் தன்மை |
மஞ்சூடை |
பெருங்கூடை |
பய்யூறை |
பை (=கொள்கலம்) + உறு (=பெரிய) + ஐ = பய்யூறை >>> மச்சூடை >>> மஞ்சூடை = பெரிய கொள்கலம். |
மட்டனம் |
பூசுகை |
மண்ணணம் |
மண்ணு (=பூசு) + அணம் = மண்ணணம் >>> மட்டனம் = பூசுகை |
மடம் |
வீடு |
மடம் |
மடி (=துயில்) + அம் = மடம் = துயிலிடம் |
மடம் |
கோயில் |
படம் |
பணி / படி (=வணங்கு) + அம் = படம் >>> மடம் = வணங்குமிடம் |
மண்டகம் |
திரண்ட உணவு |
மண்டாக்கம் |
மண்டு (=செறி, திரள்) + ஆக்கம் (=உணவு) = மண்டாக்கம் >>> மண்டகம் = செறிவான / திரட்டிய உணவுப் பொருள். |
மண்டகம், மண்டபம் |
தங்கிச் செல்லுமிடம் |
மட்டகம் |
மடம் (=தங்குமிடம், கோயில்) + அகம் = மட்டகம் >>> மண்டகம் >>> மண்டபம் = இறைவன் தங்கிச் செல்லும் இடம். |
மண்டம் |
திரட்டு ஏடு |
மண்டம் |
மண்டு (=திரள்) + அம் = மண்டம் = காய்ச்சும்போது திரளும் ஏடு |
மண்டிலம், மண்டலம் |
வட்டம்,சுற்று, வட்டமானது |
பாண்டிலம் |
பாண்டில் (=வட்டம்) + அம் = பாண்டிலம் >>> மண்டிலம் >>> மண்டலம் = வட்டம், வட்டமானது, சுற்று. |
மண்டலம், மண்டலி |
பெருங் கூட்டம் |
மண்டலம் |
மண்டு (=திரள், கூடு) + அலை (=மிகுதி) + அம் = மண்டலம் = மிகுதியான கூட்டம் |
மண்டலி |
சுற்று, வளை |
மண்டலி |
மண்டலம் (=வட்டம்) >>> மண்டலி = சுற்று, வளை |
மண்டலி |
மண், நிலம் |
மண்டலை |
மண் + தலை = மண்டலை >>> மண்டலி |
மண்டலி |
பூனை, நாய் |
மண்டளி |
மண்டி + அள் (=செறி, பொருந்து) + இ = மண்டளி >>> மண்டலி = மண்டியிட்டுப் பொருந்தக் கூடியது. |
மண்டலி |
பாம்பு |
மண்டலி |
மண்டலி (=சுற்று, சுருட்டு) >>> மண்டலி = உடலைச் சுருட்டிக் கொள்ளும் இயல்புடையது. |
மண்டலி |
எலி |
மண்டளி |
மண்டு (=அதிகம் உண்ணு, கவர்) + அள் (=செறி) + இ = மண்டளி >>> மண்டலி = அதிகமாக உண்பதும் உணவைக் கவர்ந்து சென்று அளையில் செறித்து வைப்பதும் ஆன உயிரி. |
மண்டலிகன், மண்டலீகன் |
அரசன் |
மண்டாளிகன் |
மண் (=நிலம்) + தாள் (=முயற்சி) + இக (=கட, பரவு) + அன் = மண்டாளிகன் >>> மண்டலிகன் >>> மண்டலீகன் = முயற்சியால் தனது நிலத்தினைப் பரவச் செய்பவன். |
மண்டலிசிதம் |
கடுகு |
மண்டாளிசிறம் |
மண் (=துகள்) + தாளி + சிறு + அம் (=உணவு) = மண்டாளிசிறம் >>> மண்டலிசிதம் = உணவில் தாளிக்கப்படும் சிறு துகள். |
மண்டலிசிதம் |
வியர்வை |
பாட்டளிசீதம் |
பாடு (=உடல், உழைப்பு) + அளி (=சுர) + சீதம் (=குளிர்ச்சி, நீர்) = பாட்டளிசீதம் >>> மண்டலிசிதம் = உடல் உழைப்பினால் உடலில் சுரக்கும் குளிர்ந்த நீர். |
மண்டலிசிதம் |
தேன் |
வண்டளிசிறம் |
வண்டு (=தேனீ) + அளி (=கொடை) + சிறு + அம் (=உணவு) = வண்டளிசிறம் >>> மண்டலிசிதம் = தேனீக்களின் கொடையாகிய சிறு உணவு. |
மண்டவம் |
சுங்கச்சாவடி |
பாட்டாவம் |
பாட்டம் (=வரி) + ஆவு (=விரும்பு, வேண்டு) + அம் = பாட்டாவம் >>> மண்டவம் = வரி வேண்டப்படும் இடம். |
மண்டா |
குத்தீட்டி |
மட்டா |
மடு (=குத்து) + ஆ = மட்டா >>> மண்டா = குத்தும் ஆயுதம். |
மண்டி |
பொருள் விற்குமிடம் |
பண்டி |
பண்டம் (=பல் பொருள்) + இ = பண்டி >>> மண்டி = பல பொருட்களைக் கொண்ட இடம். |
மண்டலம், மண்டிலம் |
குதிரை |
மண்டலம் |
மண்டு (=விரை) + அலை (=திரி, இயங்கு) + அம் = மண்டலம் >>> மண்டிலம் = விரைந்து பாயக் கூடியது. |
மண்டலம், மண்டிலம் |
பூமி |
மண்டலம் |
மண் + தலம் = மண்டலம் >>> மண்டிலம் = மண்ணாகிய இடம். |
மண்டிலம் |
கண்ணாடி |
பாண்டிலம் |
பாண்டில் (=கண்ணாடி) + அம் = பாண்டிலம் >>> மண்டிலம் |
மண்டலம், மண்டிலம் |
சூரியன், சந்திரன் |
மண்டலம் |
மண்டு (=ஒளிர்) + அலை (=திரி) + அம் = மண்டலம் >>> மண்டிலம் = ஒளி வீசியவாறு திரிவது. |
மணிகம் |
மண்குடம் |
மணிங்கம் |
மண் + இங்கம் (=பொருள்) = மணிங்கம் >>> மணிக்கம் >>> மணிகம் = மண்ணால் செய்த பொருள். |
மணிதம் |
மணியோசை |
மணிறம் |
மணி + இறு (=எறி, அடி) + அம் = மணிறம் >>> மணிதம் = மணியை அடித்து எழுப்பும் ஓசை |
மணிதனு |
வானவில் |
மணிதனு |
மணி (=ஒளி) + தனு (=வில்) = மணிதனு = ஒளியாலான வில் |
மணிந்தம் |
மணிக்கட்டு |
மணிற்றம் |
மணி (=கடிகாரம்) + இறு (=கட்டு) + அம் = மணிற்றம் >>> மணித்தம் >>> மணிந்தம் = கடிகாரம் கட்டும் இடம். |
மணியம் |
ஊர் வழக்கம் |
மண்ணியம் |
மண் (=ஊர்) + இயம் = மண்ணியம் >>> மணியம் = ஊர் வழக்கு |
மத்தகம் |
தலை, உச்சி |
மத்தகம் |
மதி (=அறிவு) + அகம் = மத்தகம் = அறிவை அகத்தே கொண்டது = தலை >>> உச்சி. |
மத்தகம் |
நெற்றி |
பற்றகம் |
பற்று (=பூச்சு) + அகம் (=இடம்) = பற்றகம் >>> மத்தகம் = சின்னங்கள் பூசப்படும் இடம். |
மத்தகம் |
தரிசுநிலம் |
வற்றகம் |
வறுமை (=வறட்சி) + அகம் (=இடம்) = வற்றகம் >>> மத்தகம் = வறட்சியைக் கொண்ட இடம். |
மத்தகன் |
மதி மயங்கியவன் |
மந்தகன் |
மந்தம் (=மயக்கம்) + அகம் (=அறிவு) + அன் = மந்தகன் >>> மத்தகன் = அறிவு மயக்கம் உடையவன் |
மத்தகீசம் |
யானை |
மத்தகீழம் |
மத்தம் (=மதம்) + கீழ் (=சிதை, அழி) + அம் = மத்தகீழம் >>> மத்தகீசம் = மதங்கொண்டு அழிக்கும் இயல்புடையது. |
மத்தம், மதம் |
மயக்கம், போதை |
மதம் |
மது + அம் = மதம் >>> மத்தம் = மது அருந்துவதால் உண்டாவது = மயக்கம், போதை. |
மத்தம் |
எருமை |
மத்தம் |
மந்தம் >>> மத்தம் = மந்தமான இயல்புடையது. |
மத்தவாரணம் |
நந்தவனம் |
பதவாரணம் |
பதம் (=இனிமை, இடம்) + ஆர் (=மலர், மிகு) + அணம் = பதவாரணம் >>> மத்தவாரணம் = மலர்கள் மிக்க இனிய இடம் |
மத்தளம், மத்தளி |
பறை வகை |
பதலை |
(1). பதலை (=பறை) + அம் = பதலம் >>> மத்தளம். (2) பதலை (=பறை) >>> மத்தளி. |
மத்தனம், மதனம் |
கடைதல் |
மத்தணம் |
மத்து (=சுற்று) + அணம் = மத்தணம் >>> மத்தனம் >>> மதனம் = கடைதல். |
மத்தாப்பு |
வாண வகை |
பதம்பூ |
பதம் (=ஒளி) + பூ (=பொறி) = பதம்பூ >>> மதப்பூ >>> மத்தாப்பு = பொறிப்பொறியாய் ஒளிரும் வாணம். |
மத்தி |
கடை, கல |
மத்து |
மத்து (=சுற்று) >>> மத்தி = கடை, கல |
மத்தி |
நடு |
பாதி |
பாதி (=நடு) >>> மாதி >>> மத்தி |
மத்திமம், மத்தியம் |
நடு |
பாதிமம் |
பாதி (=நடு) + மம் = பாதிமம் >>> மாதிமம் >>> மத்திமம் |
மத்தியம் |
மது |
மத்தியம் |
மது (=போதை) + இயம் = மத்தியம் = போதை தருவது. |
மத்தியம் |
மேற்கு |
மற்றியம் |
மறை + இயம் (=ஒளி) = மற்றியம் >>> மத்தியம் = ஒளி மறையும் திசை = மேற்கு. |
சூரியன் |
கதிரவன் |
சூரியன் |
சூர் (=சுற்று) + இயம் (=ஒளி) + அன் = சூரியன் =சுற்றி வரும் ஒளி. |
மத்தியானம் |
நடுப்பகல் |
பாதியாணம் |
பாதி (=நடு) + இயம் (=ஒளி) + அணம் = பாதியாணம் >>> மத்தியானம் = ஒளிவீசும் காலத்தின் நடு. |
மத்தியை |
இடுப்பு |
பாதியை |
பாதி (=நடு) + இயை (=பொருந்து) = பாதியை >>> மத்தியை = உடலின் நடுவில் இருக்கும் பொருத்து. |
மத்திரம் |
பேருவகை |
மத்திரம் |
மதம் (=மகிழ்ச்சி) + இருமை (=மிகுதி) + அம் = மத்திரம் = மிக்க மகிழ்ச்சி. |
மத்திரி |
பெருஞ்சினம் கொள் |
மத்திரி |
மத்தம் (=சினம்) + இருமை (=மிகுதி) + இ >>> மத்திரி = பெருஞ்சினம் கொள்ளுதல் |
மத்திரி |
செருக்குறு,, போட்டியிடு |
மத்திரி |
மத்தம் (=செருக்கு, பகை) + இருமை (=மிகுதி) + இ >>> மத்திரி = செருக்குறுதல், பகைத்தல், போட்டியிடுதல். |
மத்திரிப்பு |
பெருஞ்சினம், போட்டி |
மத்திரிப்பு |
மத்திரி (=பெருஞ்சினம் கொள், போட்டியிடு) >>> மத்திரிப்பு = பெருஞ்சினம், போட்டி |
மத்துவாசவம் |
பன்னீர் |
மதுவாசவம் |
மது (=இனிமை) + வாசம் (=மணம்) + அம் (=நீர்) = மதுவாசவம் >>> மத்துவாசவம் = இனிய மணம் கொண்ட நீர். |
மதகம் |
சுக்கு |
வற்றகம் |
வற்று + அகை (=கிளை) + அம் (=உணவு) = வற்றகம் >>> மத்தகம் >>> மதகம் = வற்றிய கிளை போன்ற உணவுப் பொருள். |
மதகு |
தடுப்பு |
மறாக்கு |
மறு (=தடு) + ஆக்கம் (=நீர்) + உ = மறாக்கு >>> மதகு = நீரைத் தடுப்பது. |
மதங்கம் |
சிறு தோற்கருவி |
பறங்கம் |
பறை + அங்கம் (=பொருள்) = பறங்கம் >>> மதங்கம் = பறை போன்றதோர் பொருள். |
மதங்கம் |
யானை |
மதாகம் |
மதம் (=மிகுதி, பெருமை) + ஆகம் (=உடல்) = மதாகம் >>> மதங்கம் = பெரிய உடல் கொண்ட விலங்கு. |
மதங்கம் |
மேகம் |
பதாக்கம் |
பதம் (=நீர்) + ஆக்கு (=படை) + அம் = பதாக்கம் >>> மதங்கம் = நீரைப் படைப்பது. |
மதங்கம் |
மலை |
மாதங்கம் |
மா (=பெருமை, உயர்வு, நிலம்) + தங்கு (=நிலை) + அம் = மாதங்கம் >>> மதங்கம் = நிலையான பெரிய உயர்ந்த நிலம். |
மதங்கன் |
பாணன் |
மதங்கன் |
மதங்கம் (=சிறு பறை) >>> மதங்கன் = சிறுபறையை இசைப்பவன் |
மதங்கி |
பாணிச்சி |
மதங்கி |
மதங்கன் (=பாணன்) >>> மதங்கி = பாணிச்சி. |
மதம் |
கொள்கை, அறிவு |
மதம் |
மதி (=கருது) + அம் = மதம் = கருத்து, அறிவு, கொள்கை |
மதயந்திகை, மதயந்தி |
மல்லிகை மலர் |
மதாயதிகை |
மது (=இனிமை) + ஆய் (=மணம், வெண்மை) + அதிகம் + ஐ = மதாயதிகை >>> மதயந்திகை = இனிய மணம் மிக்க வெண்மலர். |
மதராகன் |
சேவல் கோழி |
பதறகன் |
பதம் (=பொழுது) + அறி + அகவு (=ஒலி) + அன் = பதறகன் >>> மதராகன் = பொழுது அறிந்து ஒலிப்பது. |
மதலை, பதலை |
படகு |
பற்றலை |
பற்று + அலை (=நீர்) = பற்றலை >>> பத்தலை >>> பதலை >>> மதலை = நீரில் பற்றிக் கொள்ள உதவுவது |
மதவிருந்தம் |
யானை |
மதவிருத்தம் |
மதம் (=வலிமை) + விருத்தம் (=மிகுதி) = மதவிருத்தம் >>> மதவிருந்தம் = மிக்க வலிமை கொண்ட விலங்கு. |
மதனம் |
அழிக்கை |
மாற்றணம் |
மாற்று (=கொல், அழி) + அணம் = மாற்றணம் >>> மாத்தணம் >>> மதனம் = அழிக்கை |
மரணம் |
இறப்பு |
மாறணம் |
(2). மாறு (=இற) + அணம் = மாறணம் >>> மரணம் = இறப்பு. |
மரணி |
இற, சாவு |
மரணி |
மரணம் (=இறப்பு) >>> மரணி = இற |
மதனம் |
மௌனம் |
மாற்றானம் |
மாற்று (=பேச்சு) + ஆன் (=நீங்கு, ஒழி) + அம் = மாற்றானம் >>> மாத்தானம் >>> மதனம் = பேச்சு ஒழிந்த நிலை. |
மதனாலயம் |
தாமரை |
மதனாலயம் |
மதன் (=ஒளி, அழகு) + ஆலம் (=மலர்) + அயம் (=குளம்) = மதனாலயம் = குளத்தில் பூக்கும் ஒளிமிக்க அழகிய மலர். |
மதாமத்து |
மிகுந்த மயக்கம் |
மதமத்து |
மதம் (=மிகுதி) + மத்தம் (=மயக்கம்) + உ = மதமத்து >>> மதாமத்து = மிகுந்த மயக்கம் |
மதாமத்தன் |
கொழுத்த உடலினன் |
மதமத்தன் |
மதம் (=மிகுதி) + மத்தம் (=செழிப்பு, கொழுப்பு) + அன் = மதமத்தன் >>> மதாமத்தன் = மிக்க கொழுப்புடையவன். |
மதாரம் |
கத்தூரி |
மன்றாரம் |
மன்று (=நறுமணம்) + ஆர் (=நிறை, அருமை) + அம் = மன்றாரம் >>> மத்தாரம் >>> மதாரம் = நறுமணம் நிறைந்த அரிய பொருள். |
மதாரம் |
யானை |
மதாரம் |
மதம் (=வலிமை) + ஆர் (=நிறைவு) + அம் = மதாரம் = வலிமை நிறைந்த விலங்கு. |
மதாரம் |
பன்றி |
மாதறம் |
மா (=நிலம், கருமை, விலங்கு) + தறி (=வெட்டு, பிள) + அம் = மாதறம் >>> மதாரம் = நிலத்தைப் பிளக்கும் கரிய விலங்கு. |
மதாவளம் |
யானை |
மதவலம் |
மதம் (=மிகுதி) + வலம் (=வலிமை) = மதவலம் >>> மதாவளம் = மிக்க வலிமை கொண்ட விலங்கு. |
கபாலம் |
தலை |
காவளம் |
காவு (=உயிர்ப்பலி) + அளி (=கொடு) + அம் = காவளம் >>> கபாலம் = கழுத்தை அறுத்து உயிர்ப்பலியாகக் கொடுக்கப்படுவது |
காவு |
உயிர்ப்பலிப் பூசை |
காவூ |
கா (=காப்பாற்று) + ஊ (=மாமிசம்) = காவூ >>> காவு = மாமிசம் படைத்துக் காப்பாற்றுமாறு வேண்டுதல். |
பலவீனம் |
வலுக்குறை |
வலவீனம், வலபின்னம் |
(1). வலம் (=வலிமை) + ஈனம் (=இழிவு, குறைவு) = வலவீனம் >>> பலவீனம். (2). வலம் (=வலிமை) + பின்னம் (=இழிவு, குறைவு) = வலபின்னம் >>> பலவீனம். |
பின்னம் |
குறைவு, இழிவு |
புன்னம் |
புன்மை (=இழிவு, குறைவு) + அம் = புன்னம் >>> பின்னம் = இழிவு, குறைவு. |
ஈனம் |
இழிவு, குறைவு |
இழணம் |
இழி (=தாழ், குறை) + அணம் = இழணம் >>> இயனம் >>> ஈனம் = தாழ்வு, இழிவு, குறைவு. |
வெள்ளி, 10 ஜூலை, 2020
சம்ககிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 36
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.