சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
மருசாதி |
மரியாதை |
மரியாதை |
மரியாதை >>> மருசாதி |
ஆசீர்வாதம் |
நீடூழிவாழ வாழ்த்துதல் |
அசிருவாதம் |
அசை (=தங்கு, நிலை) + இரு + வாதம் (=சொல்) = அசிருவாதம் >>> ஆசீர்வாதம் = நிலைத்திரு என்று கூறுதல். |
மருத்து, மாருதி, மாருதம் |
காற்று |
மாறுந்தம் |
மாறு (=நிலையறு) + உந்து (=வீசியெறி, பெருக்கு) + அம் = மாறுந்தம் >>> மாருதம், மாருதி, மருத்து = நிலையற்றதும் வீசியெறிவதும் உப்பச் / பெருக்கச் செய்வதும் ஆனது. |
மருத்து, மருந்து |
நோய் நீக்குவது |
பருத்து |
பரு (=நோய்) + உத்து (=நீக்கு, கழி) = பருத்து >>> மருத்து >>> மருந்து = நோயை நீக்குவது. |
மர்மம், மருமம் |
மார்பு, உடல் |
மார்பம் |
மார்பு + அம் = மார்பம் >>> மர்மம் >>> மருமம் = மார்பு, உடல். |
மருமரம் |
வில் |
மாறுமரம் |
மாறு (=கொல், அழி) + மரம் = மாறுமரம் >>> மருமரம் = அழிவை உண்டாக்கும் மரக்கிளை போன்றது. |
மருவாதி |
அறவழி ஒழுக்கம் |
மருவாறி |
மருவு (=பழகு, பின்பற்று) + ஆறு (=அறம், வழி) + இ = மருவாறி >>> மருவாதி = அறவழியைப் பின்பற்றுதல். |
மருவாளி |
கற்பூரம் |
பாறுவாளி |
பாறு (=துண்டு) + வாள் (=ஒளி, வெண்மை) + இ = பாறுவாளி >>> மருவாளி = ஒளிதருகின்ற வெண்ணிறத் துண்டு. |
மல், மல்லம் |
வலிமை |
வல் |
வல் (=வலிமை) >>> மல். |
மல் |
பருமை |
பல் |
பல் (=மிகு, பெருகு) >>> மல் |
மல்லசம் |
மிளகு |
பாலாயம் |
பாலை (=வெப்பம், எரிச்சல்) + ஆய் (=சிறுமை) + அம் (=உணவு) = பாலாயம் >>> மல்லசம் = எரிகின்ற சிறிய உணவுப் பொருள். |
மல்லம் |
கிண்ணம் |
வள்ளம் |
வள்ளம் (=கிண்ணம்) >>> மல்லம் |
மல்லம் |
தட்டு |
பள்ளயம் |
பள்ளயம் (=தட்டு) >>> மல்லம் |
மல்லம் |
கன்னம் |
பல்லம் |
பல் + அம் = பல்லம் >>> மல்லம் = பற்களை அடுத்திருப்பது. |
மல்லம் |
படுக்கை அறை |
பள்ளம் |
பள்ளி (=படுக்கை) + அம் = பள்ளம் >>> மல்லம் = படுக்கை இருக்கும் அறை. |
மல்லிகை, மல்லிகம் |
நறுமண மலர் |
மல்லிகை |
மல் (=நறுமணம்) + இக (=வரம்புகட) + ஐ = மல்லிகை = வரம்பு கடந்து வீசும் நறுமணம் கொண்டது. |
மலர் |
பூ |
மலார் |
மல் (=நறுமணம்) + ஆர் (=பொருந்து) = மலார் >>> மலர் = நறுமணம் பொருந்தியது = பூ. |
மன்று, மன்றல் |
வாசனை |
மற்று |
மல் (=நறுமணம்) + து = மற்று >>> மன்று = நறுமணம், நறுமணப் பொருட்கள். |
மல்லி |
கொத்த மல்லியிலை |
மல்லி |
மல் (=நறுமணம், பசுமை) + இ = மல்லி = நறுமணம் மிக்க பசுமைப் பொருள். |
மல்லிகை, மல்லை |
பிச்சைப் பாத்திரம் |
வள்ளீகை |
வள்ளம் (=கிண்ணம்) + ஈகை (=கொடை, பிச்சை) = வள்ளீகை >>> மல்லிகை = பிச்சை இடப்படும் கிண்ணம். |
மல்லூகம் |
புழு |
மல்லுகம் |
மலம் (=கழிவு) + உகை (=தோன்று) + அம் = மல்லுகம் >>> மல்லூகம் = கழிவுப்பொருளில் பிறப்பது. |
மல்லை |
வட்டம் |
வல்லை |
வலம் (=சுற்று) + ஐ = வல்லை >>> மல்லை = சுற்றுடையது. |
மலசம் |
கறையான் |
மலாயம் |
மலை (=குன்று, புற்று) + ஆய் (=வெண்மை, சிறுமை) + அம் = மலாயம் >>> மலசம் = புற்றில் இருக்கும் வெண்ணிற சிற்றுயிரி |
மலடு |
பயனற்றது |
வளறு |
வளம் (=பயன், விளைச்சல்) + அறு = வளறு >>> மலடு = பயன் / விளைச்சல் அற்றது. |
மலம் |
கழிவு |
மாளம் |
(2). மாள் (=கெடு, கழி) + அம் = மாளம் >>> மலம் = கழிக்கப்பட வேண்டிய கெட்ட பொருள். |
மலம் |
கற்பூரம் |
வாளம் |
வாள் (=ஒளி, வெண்மை) + அம் = வாளம் >>> மலம் = ஒளி தருகின்ற வெண்ணிறப் பொருள். |
மலயசம், மலையசம் |
சந்தனம் |
மலாயயம் |
மல் (=நறுமணம்) + ஆய் (=அழகு) + அயம் (=சேறு, சாந்து) = மலாயயம் >>> மலயசம் = நறுமணமும் அழகும் தரும் சாந்து. |
மலயம் |
சந்தனம் |
மலயம் |
மல் (=நறுமணம்) + அயம் (=சேறு, சாந்து) = மலயம் = நறுமணம் மிக்க சாந்து. |
பரம்பரை |
தலைமுறை |
பரம்பரை |
பரம்பு (=பரவு) + அரி (=படை, பிறப்பி) + ஐ = பரம்பரை = படைப்பின் / பிறப்பின் பரவல் நிலை. |
மலாகை |
யானை |
மலாகை |
மல் (=வலிமை, பெருமை) + ஆகம் (=உடல்) + ஐ = மலாகை = வலிமை மிக்க பெரிய உடலைக் கொண்டது. |
மலாரம் |
வளையல் கோவை |
மல்லாரம் |
மல்லை (=வட்டம்) + ஆர் (=மிகுதி, பொருந்து, சேர்) + அம் = மல்லாரம் >>> மலாரம் = வட்டமாகப் பல சேர்ந்திருப்பது. |
மலாவகம் |
பிண்ணாக்கு |
வலவாக்கம் |
வல் (=வலிமை) + அவி (=நெய், நீக்கு) + ஆக்கம் (=பொருள்) = வலவாக்கம் >>> மலாவகம் = நெய் நீக்கப்பட்ட வலிய பொருள். |
மலாகை |
தூதுரைக்கும் பெண் |
மலாக்கை |
மலி (=சேர், கூறு) + ஆக்கம் (=நன்மை) + ஐ = மலாக்கை >>> மலாகை = பிரிந்தவர்களைச் சேர்க்க ஆக்கம் கூறுபவள். |
மலிசம் |
அரச மரம் |
பலியம் |
பலம் (=இலை) + இயம் (=ஒலி) = பலியம் >>> மலிசம் = ஒலிக்கும் இலைகளைக் கொண்டது. |
மலினம் |
மாதவிடாய் |
மலீனம் |
மலம் (=கழிவு) + ஈனம் (=இழிவு) = மலீனம் >>> மலினம் = இழிவான கழிவுப் பொருட்கள். |
மலினம் |
கருப்பு |
மாலினம் |
மால் (=கருப்பு) + இனம் = மாலினம் >>> மலினம் |
மலினம் |
அழுக்கு, பாவம் |
மலினம் |
மலம் (=அழுக்கு, பாவம்) + இனம் = மலினம். |
மலினி |
மாதவிடாய் ஆனவள் |
மலினி |
மலினம் (=மாதவிடாய்) + இ = மலினி = மாதவிடாய் உற்ற பெண். |
மலினம் |
கெடுதி, கெட்டகுணம் |
மாளினம் |
மாள் (=கெடு) + இனம் = மாளினம் >>> மலினம் = கெடுதி, கெட்ட குணம். |
மலினம் |
குறைவு |
மலினம் |
மலி (=குறை) + இனம் = மலினம் = குறைவு. |
மலினம் |
மோர் |
மலிநம் |
மலி (=மிகு, சேர்) + நம் (=நீர்) = மலிநம் >>> மலினம் = நீர் மிகுதியாகச் சேர்க்கப்பட்டது. |
மலினமுகன் |
பேய், கருங்குரங்கு, கருவண்டு |
மலினமுகன் |
மலினம் (=கருப்பு) + முகம் (=தோற்றம்) + அன் = மலினமுகன் = கருப்புத் தோற்றம் கொண்டவை = பேய், கருங்குரங்கு, கருவண்டு. |
மலினமுகன் |
கொடியவன் |
மலினமுகன் |
மலினம் (=கெடுதி) + முகம் (=இயல்பு) + அன் = மலினமுகன் = கெட்ட இயல்புடையவன். |
மலினமுகன் |
பெருந்தீ |
மலினமுகன் |
மலி (=மிகு) + இனம் (=தீ) + உகை (=எழு) + அன் = மலினமுகன் = மிக்குத் தோன்றும் தீ. |
இனம், இனன் |
தீ |
இனம் |
இனை (=எரி) + அம் = இனம் = எரிவது = தீ |
இனன் |
சூரியன் |
இனன் |
இனம் (=தீ) >>> இனன் = தீ, சூரியன் |
மலினீகரணம் |
கேடு விளைத்தல் |
மலினீகரணம் |
மலினம் (=கெடுதி) + ஈ (=கொடு) + கரணம் (=செயல்) = மலினீகரணம் = பிறர்க்குக் கேட்டினைக் கொடுக்கும் செயல். |
மலீமசம் |
அழுக்கு |
மலீமயம் |
மலம் (=கறை) + ஈ (=உண்டாக்கு) + மயம் (=பொருள்) = மலீமயம் >>> மலீமசம் = கறையை உண்டாக்கும் பொருள். |
மலீமசம் |
இரும்பு |
மலீமயம் |
மலம் (=துரு) + ஈ (=உண்டாக்கு) + மயம் (=பொருள்) = மலீமயம் >>> மலீமசம் = துருவை உண்டாக்கும் பொருள். |
மலூகம் |
குருவி |
மலுகம் |
மலி (=குறை, சிறு) + உகு (=பற) + அம் = மலுகம் >>> மலூகம் = குறுகிய / சிறிய பறவை. |
மலையாளி |
மிளகு |
மாலழலி |
மால் (=கருமை) + அழல் (=தீ) + இ = மாலழலி >>> மலயாளி >>> மலையாளி = தீப்போல எரியும் கருநிறப் பொருள். |
மவ்வம் |
அழகு |
மாவம் |
மா (=அழகு) + அம் = மாவம் >>> மவ்வம் |
மௌட்டியம், மவுட்டியம் |
அறிவின்மை |
மூட்டியம் |
மூடம் (=அறிவின்மை) + இயம் = மூட்டியம் >>> மௌட்டியம் >>> மவுட்டியம் = முட்டாள்தனம் |
மவுடி |
மகுடம் |
முடி |
முடி (=தலை, சூட்டு) >>> மௌடி >>> மவுடி = தலையில் சூட்டப்படுவது = மகுடம். |
மவுத்தி |
பிணம் |
முற்றி |
முற்று (=இற) + இ = முற்றி >>> முத்தி >>> மௌத்தி >>> மவுத்தி = இறந்து பட்டது. |
மௌலி, மவுலி |
தலை |
மூளை |
முளை (=தோன்று) >>> மூளை >>> மௌலி >>> மவுலி = எண்ணங்கள் தோன்றும் இடம். |
மவுலி |
தலைமுடி, மகுடம் |
மவுலி |
மவுலி (=தலை) >>> மவுலி = தலையில் இருப்பது, தலையில் அணிவது. |
மௌனம், மவுனம், மோனம் |
வாய் பேசா நிலை |
முன்னம் |
முன்னம் (=அமைதி) >>> மௌனம் >>> மவுனம், மோனம் |
மவுனி |
ஆமை |
பூணி |
பூண் (=கவசம், சூழ்) + இ = பூணி >>> மூனி >>> மௌனி >>> மவுனி = கவசத்தால் சூழப்பட்டது. |
மழு |
கடல் |
பாழி, மழு |
(1). பாழி (=கடல்) + உ = பாழு >>> மழு. (2). மழை (=மிகுதி, நீர்) + உ = மழு = மிகுதியான நீரை உடையது. |
மள்ளம், மள்ளல் |
வலிமை |
வலம் |
வலம் (=வலிமை) >>> வல்லம் >>> மள்ளம் >>> மள்ளல் |
மளிகை |
பல்பொருள் அங்காடி |
மலிங்கை |
மலி (=மிகு) + இங்கம் (=பொருள்) + ஐ = மலிங்கை >>> மளிகை = பொருள் மிகுந்திருக்கும் இடம். |
மற்கரை |
குகை |
மாற்கரை |
மால் (=மலை) + கர (=ஒளி, மறை) + ஐ = மாற்கரை >>> மற்கரை = மலையில் ஒளிந்துகொள்ள உதவுவது. |
மற்கரை |
மலடி |
மற்கறை |
மல்கு (=பெருகு, செழி) + அறு + ஐ = மற்கறை >>> மற்கரை = பெருக்கம் / செழிப்பு அற்றவள். |
மற்கு |
கோபம் |
மறம் |
மறம் (=சினம்) >>> மற்கு |
மற்குணம் |
மூட்டைப் பூச்சி |
மறக்கூனம் |
மறம் (=சினம், சிவப்பு, தீமை) + கூன் (=வளைவு, சிறுமை) + அம் = மறக்கூனம் >>> மற்குணம் = தீமைசெய்யும் சிறிய செம்பூச்சி. |
மற்சரம் |
போட்டி, சண்டை |
மற்சாரம் |
மல் (=வலிமை) + சார் (=பொருந்து) + அம் = மற்சாரம் >>> மற்சரம் = வலிமையுடன் பொருந்துதல். |
மற்சரி |
போட்டியிடு |
மற்சரி |
மற்சரம் (=போட்டி) >>> மற்சரி = போட்டியிடு |
மச்சம் |
கரும்புள்ளி |
மய்யம் |
மை (=உடல், கருப்பு, புள்ளி) + அம் = மய்யம் >>> மச்சம் = உடலில் காணப்படும் கரும்புள்ளி. |
மறுமாடி |
மலைப் பிளவு |
பருவறி |
பரு (=மலை) + அறை (=பிளவு) + இ = பருவறி >>> மறுமாடி = மலையில் உள்ள பிளவு |
ரகசியம் |
வெளிப்படா சொல் |
அறய்கசியம் |
அறை (=இன்மை, சொல்) + கசி (=வெளிப்படு) + அம் = அறய்கசியம் >>> அரகசியம் >>> ரகசியம் = வெளிப்படாத சொல் |
மன்மதம் |
காம சுகம் |
மான்மதம் |
மால் (=காமம்) + மதம் (=இன்பம்) = மான்மதம் >>> மன்மதம் = காம சுகம். |
மன்மதம் |
விழா |
மன்மதம் |
மன் (=மக்கள்) + மதம் (=மகிழ்ச்சி) = மன்மதம் = மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது. |
மன்னிப்பு |
தண்டனை ஒழிகை |
மன்றீவு |
(2). மன்று (=தண்டி) + ஈவு (=ஒழிகை) = மன்றீவு >>> மன்னீமு >>> மன்னிப்பு = தண்டனை ஒழிகை. |
மன்னியர் |
பெரியோர் |
மன்னியர் |
மன் (=பெருமை) + இயம் + அர் = மன்னியர் = பெரியோர் |
மன்னியு |
சினம் கொள்ளல் |
மன்னீழு |
மன்னு (=உறுதியாய் இரு, பொறு) + இழ + உ = மன்னீழு >>> மன்னியு = உறுதி / பொறுமையை இழத்தல். |
மன்னியு |
துக்கம், துன்பம் |
பன்னிழு |
பான்மை (=இன்பம்) + இழ + உ = பன்னிழு >>> மன்னியு = இன்பத்தை இழக்கச் செய்வது. |
மன்னியு |
கருவம் |
மன்னிழு |
மன் (=பெருமை) + இழ + உ = மன்னிழு >>> மன்னியு = பெருமையை இழக்கச் செய்வது = கருவம். |
மன்னியு |
உயிர்ப்பலி |
மன்னிழு |
மன் (=மக்கள், உயிர்) + இழ + உ = மன்னிழு >>> மன்னியு = உயிரை இழக்கச் செய்தல் = பலி கொடுத்தல். |
மன்னியை |
முதன்மை நரம்பு |
மன்னிழை |
மன் (=முதன்மை, தலைமை) + இழை (=நரம்பு) = மன்னிழை >>> மன்னியை = முதன்மை / தலைமை நரம்பு. |
மன்னை |
தொண்டை |
பன்னை |
பன்னு (=ஒலி, பேசு) + ஐ = பன்னை >>> மன்னை = ஒலி / பேச்சு தோன்றும் இடம். |
மன்னை |
கன்னம் |
பன்னை |
பன் (=பல்) + ஐ = பன்னை >>> மன்னை = பற்களை அடுத்திருப்பது. |
மன்னை |
கோபம் |
மன்னை |
மன்னு (=உறுதியாய் இரு, பொறு) + நை (=அழி) = மன்னை = உறுதியை / பொறுமையை அழிப்பது. |
மனங்கு |
தோள், தோள்பட்டை |
மனங்கம் |
மன் (=உறுதியாய் இரு) + அங்கம் (=உறுப்பு) = மனங்கம் >>> மனங்கு = உறுதிமிக்க உறுப்பு. |
மனசு |
உள்ளம் |
மனாயு |
மன் (=பொருந்து, தங்கு) + ஆய் (=எண்ணு) + உ = மனாயு >>> மனசு = எண்ணங்கள் தங்கும் / பொருந்தும் இடம். |
மனசு, மனது |
விருப்பம், எண்ணம் |
மனாயு |
மன் (=பொருந்து, தங்கு) + ஆய் (=எண்ணு) + உ = மனாயு >>> மனசு = தங்கிய / பொருந்திய எண்ணம். |
மனம் |
கருத்து, உள்ளம் |
பாணம் |
பாணி (=கருது, மதிப்பிடு) + அம் = பாணம் >>> மனம் = கருத்து, உள்ளம். |
மனனம் |
ஞாபகம் |
பாணணம் |
பாணி (=கருது) + அணை (=கட்டு) + அம் = பாணணம் >>> மனனம் = கருத்துக்களின் கட்டுமானம் = ஞாபகம் |
மனச்`தாபம் |
மனக்குறை, வருத்தம் |
மனசுதவம் |
மனசு + தவு (=குறை) + அம் = மனசுதவம் >>> மனச்`தாபம் = மனக்குறை, வருத்தம் |
மனுசன், மனிசன், மனிதன் |
சிந்தித்து வாழும் உயிரினம் |
பாணுயன் |
பாணி (=சிந்தி) + உய் (=வாழ், உயிர்) + அன் = பாணுயன் >>> மனுசன் >>> மனிசன், மனிதன் = சிந்தித்து வாழ்கின்ற உயிரினம். |
மனு, மன் |
மந்திரம் |
பன்னு |
பன்னு (=ஒலி) >>> மன்னு >>> மனு, மன் = ஒலிக்கப்படுவது. |
மனு |
விண்ணப்பம், வார்த்தை |
பாணு |
பாணி (=கருது, விரும்பு, கூறு) + உ = பாணு >>> மனு = விருப்பம், விண்ணப்பம், வார்த்தை. |
மனோக்கியம் |
விரும்பத் தக்கதன்மை |
மனோக்கியம் |
மனு (=விருப்பம்) + ஓக்கு (=உண்டாக்கு) + இயம் = மனோக்கியம் = விருப்பத்தை உண்டாக்கும் தன்மை >>> அழகுடைமை. |
மனோகரம் |
விரும்பத் தக்கதன்மை, அழகுடைமை |
மனோக்கறம் |
மனு (=விருப்பம்) + ஓக்கு (=உண்டாக்கு) + அறம் (=தன்மை) = மனோக்கறம் >>> மனோகரம் = விருப்பத்தை உண்டாக்கும் தன்மை >>> அழகுடைமை. |
மனோரஞ்சிதம் |
கருதியவாறு மகிழ்ச்சி தருவது |
மனோரச்சிதம் |
மனம் + ஓர் (=கருது, நினை) + அச்சு (=ஒப்பு) + இதம் (=மகிழ்ச்சி) = மனோரச்சிதம் >>> மனோரஞ்சிதம் = மனதில் கருதியதற்கு ஒப்ப மகிழ்ச்சியைத் தருவது. |
மனோலி |
சிரிப்பு, சிரிப்பு மூட்டுபவன் |
மனோளி |
மனம் + ஒளி (=பொலிவு) = மனோளி >>> மனோலி = மனப்பொலிவு = மகிழ்ச்சி, சிரிப்பு >>> சிரிப்பூட்டுபவன். |
மச்`தி |
எலும்பு |
பயத்தி |
பை (=வலிமை, வெண்மை) + அத்தம் (=பொருள்) + இ = பயத்தி >>> மச்`தி = வலிமை மிக்க வெண்மையான பொருள். |
மச்`து |
தயிர், கொழுப்பு |
பயத்து |
பை (=வெண்மை, திரள்) + அத்தம் (=பொருள்) + உ = பயத்து >>> மச்`து = வெண்மையான திரண்ட பொருள். |
மச்`து |
மயக்கந்தரும் பொருட்கள் |
மழத்து |
மழ (=மயக்கம்) + அத்தம் (=பொருள்) + உ = மழத்து >>> மயத்து >>> மச்`து = மயக்கம் தரும் பொருள். |
மாக்கிகம் |
தேன் |
மக்கிகம் |
மக்கி (=தேனீ) + இகு (=திரட்டு) + அம் = மக்கிகம் >>> மாக்கிகம் = தேனீக்களால் திரட்டப்பட்டது. |
மாகதி |
திப்பிலி |
மாகறி |
மா (=கருமை, பெருமை) + கறி (=மிளகு) = மாகறி >>> மாகதி = கரிய பெரிய மிளகு = திப்பிலி. |
மாகதி |
சர்க்கரைக் கிழங்கு |
மாகந்தி |
மா (=சிவப்பு, இனிமை) + கந்தம் (=கிழங்கு) + இ = மாகந்தி >>> மாகதி = இன்சுவை கொண்ட சிவப்புநிறக் கிழங்கு. |
மாகந்தம் |
மாமரம் |
மாகாந்தம் |
மா (=அழகு, மிகுதி, பூந்தாது) + காந்தி (=ஒளி) + அம் = மாகாந்தம் >>> மாகந்தம் = அழகிய ஒளிமிக்க மிகுதியான பூந்தாதுக்களைக் கொண்டது. |
காந்தி |
ஒளி |
காந்தி |
காந்து (=ஒளிர்) + இ = காந்தி = ஒளிர்வது = ஒளி |
மாகந்தி |
நெல்லிக்காய் |
மாகாந்தி |
மா (=அழகு, இனிமை) + காந்தி (=ஒளி) = மாகாந்தி >>> மாகந்தி = அழகிய ஒளியும் இன்சுவையும் கொண்டது. |
மேகம் |
முகில் |
வெஃகம் |
வெஃகு (=மிக விரும்பு, கவர்) + அம் (=நீர், உண்ணு) = வெஃகம் >>> வேகம் >>> மேகம் = நீரை மிகவிரும்பிக் கவர்ந்துண்பது. |
மாகாணம் |
பெருநிலப் பரப்பு |
மாகனம் |
மா (=நிலம்) + கனம் (=பெருமை) = மாகனம் >>> மாகாணம் = பெருநிலப் பரப்பு. |
மாகினம் |
அரசியம் |
பாங்கினம் |
பாங்கு (=இணக்கம், இடம்) + இனம் (=குலம்) = பாங்கினம் >>> மாகினம் = ஒருகுல மக்கள் இணக்கத்துடன் வாழும் இடப்பரப்பு. |
மாகு |
வலை |
மாகௌ |
மா (=விலங்கு) + கௌ (=பிடி, அகப்படுத்து) = மாகௌ >>> மாகு = விலங்குகளை அகப்படுத்துவது = வலை. |
மாகு |
மணி |
பக்கு |
பக்கம் (=ஒளி, துண்டு) + உ = பக்கு >>> மாகு = ஒளிரக் கூடிய சிறு துண்டு = மணி. |
மாகுலர், மாகுலவர் |
வேட்டைக் காரர்கள் |
மாகொள்ளர் |
மா (=விலங்கு) + கொள் (=பிடி) + அர் = மாகொள்ளர் >>> மாகுலர் = விலங்குகளைப் பிடிப்பவர்கள். |
மாகேயம் |
பவளம் |
பாகேழம் |
பா (=பரப்பு, அழகு) + கெழு (=வளமை, நிறம், முதிர்) + அம் (=நீர்) = பாகேழம் >>> மாகேயம் = நீரில் பரந்திருக்கும் அழகிய நிறங்கொண்ட முதிர்ந்த வளம். |
மாகேயி, மாகை |
பசு |
மாகேழி |
மா (=செல்வம், விலங்கு) + கேழ் (=ஒளி, வெண்மை) + இ = மாகேழி >>> மாகேயி >>> மாகை = செல்வமாகக் கருதப்படும் வெண்ணிற விலங்கு. |
மாங்கிசம் |
மாமிசம் |
மாங்கிழம் |
மா (=விலங்கு) + கிழி + அம் (=உணவு) = மாங்கிழம் >>> மாங்கிசம் = விலங்கைக் கிழித்துப்பெற்ற உணவு. |
சனி, 18 ஜூலை, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 38
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.