சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
போக்கியம் |
அனுபவிக்கப் படுவது |
மொக்கியம் |
மொக்கு (=உண், அனுபவி) + இயம் = மொக்கியம் >>> பொக்கியம் >>> போக்கியம் = அனுபவிக்கப்படுவது, அனுபவம். |
போக்தா |
நுகர்வோன் |
மொக்கன் |
மொக்கு (=உண், நுகர்) + அன் = மொக்கன் >>> போக்கன் >>> போக்கா >>> போக்தா = நுகர்பவன். |
போக்யதை |
அனுபவப் பொருளை ஈட்டுகை |
மொக்கியற்றை |
மொக்கு (=உண், அனுபவி) + இயற்று (=சம்பாதி, ஈட்டு) + ஐ = மொக்கியற்றை >>> போகியத்தை >>> போக்யதை = அனுபவிக்க வேண்டியதை ஈட்டுதல். |
போகண்டன் |
விடலை |
போகண்டன் |
போகம் (=புணர்ச்சி) + அண்டு (=நெருங்கு, அடை) + அன் = போகண்டன் = புணர்ச்சிக்குரிய பருவத்தை அடைந்தவன். |
போகம் |
நுகர்ச்சி |
மொக்கம் |
மொக்கு (=நுகர்) + அம் = மொக்கம் >>> போகம் = நுகர்ச்சி |
போகம், போகி |
நல்ல பாம்பு |
பொங்கம் |
பொங்கு (=விரி, சீறு) + அம் = பொங்கம் >>> பொக்கம் >>> போகம் = படம் விரித்துச் சீறுவது. |
போகி |
அனுபவி |
மொக்கி |
மொக்கு (=நுகர்) + இ = மொக்கி >>> போகி = நுகர், அனுபவி |
முகம் |
முன்னுறுப்பு |
முகம் |
முகை (=தோன்று, எழு) + அம் = முகம் = தோன்றுவது. |
போகணி, போகிணி |
கொள்கலம் |
முகாணி |
முக (=கொள்) + ஆணம் (=கலம்) + இ = முகாணி >>> புகணி >>> போகணி >>> போகிணி = கொள்கலம். |
போசகம் |
நுகர் பொருட்கள் |
பூசாக்கம் |
பூசு (=உண்ணு, நுகர்) + ஆக்கம் (=பொருள்) = பூசக்கம் >>> போசகம் = நுகரத்தக்க பொருட்கள். |
போசனம் |
உணவு |
பூசணம் |
பூசு (=உண்ணு, நுகர்) + அணம் = பூசணம் >>> போசனம் = உண்ணப்படுபவை / நுகரப்படுபவை. |
போசனை |
உண்ணுதல் |
பூசணை |
பூசு (=உண்ணு) + அணை = பூசணை >>> போசனை = உண்ணல் |
போசாக்கு |
ஊட்டம் |
பூசாக்கு |
பூசு (=உண்ணு) + ஆக்கு (=செய்) = பூசாக்கு >>> போசாக்கு = உணவினை உண்ணச் செய்தல். |
போசி |
வளர் |
பூசி |
பூசி (=ஊட்டு) >>> போசி = ஊட்டி வளர் |
போடகம் |
கொப்புளம் |
புடகம் |
புடை (=வீங்கு) + அகம் = புடகம் >>> போடகம் = வீங்கி இருப்பது |
போடம் |
அடிக்கை |
புடம் |
புடை (=அடி) + அம் = புடம் >>> போடம் = அடிக்கை |
போணம் |
உணவு |
பேணம் |
பேணு (=உண்ணு) + அம் = பேணம் >>> போணம் = உணவு |
போத்தரி |
பன்றி |
பூத்தறி |
பூ (=பூமி, நிலம்) + தறி (=வெட்டு, பிள) = பூத்தறி >>> போத்தரி = நிலத்தைப் பிளப்பதைப் போலத் தோண்டுவது |
போதகம், போதம் |
குட்டி, பிள்ளை |
போத்தகம் |
போத்து (=குட்டி) + அகம் = போத்தகம் >>> போதகம் = இளமை, குட்டி, பிள்ளை. |
போதகம் |
யானை |
பூதாக்கம் |
பூதம் (=பெரியது) + ஆக்கம் (=உடல்) = பூதாக்கம் >>> போதகம் = பெரிய உடலைக் கொண்டது. |
போதி |
அறிவூட்டு |
புத்தி |
புத்தி (=அறிவு) >>> புத்தி >>> போதி = அறிவி, அறிவூட்டு |
போதகம், போதனம், போதனை |
அறிவூட்டல் |
போதகம், போதணம், போதணை |
போதி (=அறிவூட்டு) + அகம் / அணம் = போதகம் / போதணம் >>> போதனம், போதனை = அறிவூட்டுதல் |
போதகன் |
ஆசிரியன் |
போதகன் |
போதகம் (=அறிவூட்டல்) >>> போதகன் = அறிவூட்டுபவன் |
போதகன் |
ஒற்றன் |
போற்றகன் |
போற்று (=பாதுகா, மறை) + அகம் (=அறிவு) + அன் = போற்றகன் >>>போத்தகன் >>>போதகன் = மறைவாக அறிபவன் |
போதம், போதி, போதை |
அறிவு |
புத்தம் |
புத்தி (=அறிவு) + அம் = புத்தம் >>> போதம் |
போதம் |
மரக்கலம் |
போற்றம் |
போற்று (=காப்பாற்று) + அம் (=நீர்) = போற்றம் >>> போத்தம் >>> போதம் = நீரில் விழுந்தாரைக் காப்பாற்றுவது. |
போதம் |
வீடு |
பொத்தம் |
பொத்து (=மூடு, மறை, பாதுகா) + அம் = பொத்தம் >>> போதம் = மறைப்பை / பாதுகாப்பைத் தருவது = வீடு. |
போதன் |
ஞானி |
போதன் |
போதம் (=அறிவு) + அன் = போதன் = அறிவாளி |
போதனம் |
வழிபாடு |
போற்றணம் |
போற்று (=வணங்கு) + அணம் = போற்றணம் >>> போத்தனம் >>> போதனம் = வணங்குதல், வழிபாடு. |
போதனை |
அறிவு |
போதனை |
போதனம் (=அறிவூட்டல்) + ஐ >>> போதனை = ஊட்டப்படுவது |
போதி |
மலை |
பூதி |
பூதம் (=பெரியது) + இ = பூதி >>> போதி = பெரியது. |
போரிகை, போதிகை |
தூணுக்கு மேலுள்ள தாங்கும் பொருள் |
போறிகை |
பொறு (=சும, தாங்கு) + இக (=வலிமையாகு, நெருங்கு) + ஐ = போறிகை >>> போரிகை, போதிகை = சுமையினைத் தாங்குவதற்காக தூணுக்கு மேல் நெருக்கமாக வைக்கப்படும் வலிமையான பொருள். |
போதை |
அறிவின் மயக்கம் |
பொத்தை |
பொத்து (=மூடு, மறை) + ஐ = பொத்தை >>> போதை = அறிவை மறைப்பது = மயக்குவது. |
போந்தி |
வீக்கம் |
பூத்தி |
பூதம் (=பெரியது) + இ = பூத்தி >>> போந்தி = பெரிதானது |
போபடி |
துப்பு |
பூவடி |
பூ (=பொறி) + அடி (=வழி, உபாயம்) = பூவடி >>> போபடி = உபாயத்தை உணர்த்தக்கூடிய சிறு பொறி. |
போளி |
முட்டாள் |
போலி |
போல் (=உள்ளீடு அற்றது) + இ = போலி >>> போளி = உள்ளீடு அற்றவ்ன = முட்டாள். |
போனகம், போனம் |
உணவு |
புன்கம் |
புன்கம் (=சோறு) >>> புனகம் >>> போனகம் >>> போனம் |
பௌதிகம் |
உலகம் |
பூதிங்கம் |
பூதம் + இங்கு (=தங்கு) + அம் = பூதிங்கம் >>> பௌதிகம் = பூதங்கள் தங்கியிருக்கும் இடம். |
பௌர்ணிமை, பௌர்ணிமி, பௌர்ணமி |
முழுநிலா |
பூர்நீமம் |
பூர் (=நிறை) + நீமம் (=ஒளி) = பூர்நீமம் >>> பௌர்ணிமம் >>> பௌர்ணிமை, பௌர்ணிமி, பௌர்ணமி = ஒளி நிறைந்த நிலை. |
பௌரகம் |
மலர்ச் சோலை |
புல்லகம் |
புல்லம் (=மலர்) + அகம் = புல்லகம் >>> பூரகம் >>> பௌரகம் = பலவித மலர்களை அகத்தே கொண்டது |
பௌரணை |
மரக்கன்று |
பூரன்னை |
புரி (=தோன்று, பிற) + அன்னம் (=பூமி) + ஐ = பூரன்னை >>> பௌரணை = நிலத்தில் பிறந்தது. |
பௌரணை |
கடல் |
பூரன்னை |
பூர் (=நிறை) + அன்னம் (=நீர்) + ஐ = பூரன்னை >>> பௌரணை = நீர் நிறைந்த இடம். |
பௌரம் |
நகரம் சார்ந்தது |
பூரம் |
புரி (=நகரம்) + அம் = பூரம் >>> பௌரம் = நகரத் தொடர்புடையது |
பௌரன் |
நகரவாசி |
பூரன் |
புரி (=நகரம்) + அன் = பூரன் >>> பௌரன் = நகரவாசி |
பௌரிகன் |
குபேரன் |
பூரிங்கன் |
பூர் (=நிறை) + இங்கம் (=பொருள், செல்வம்) + அன் = பூரிங்கன் >>> பௌரிகன் = நிறைந்த செல்வம் கொண்டவன் |
பௌருசம் |
ஆண் தன்மை |
பூருயம் |
புரி (=படை) + உய் (=உயிர்) + அம் = பூருயம் >>> பௌருசம் = உயிர்களைப் படைக்கும் தன்மை |
பவுன், பௌன் |
தங்கம் |
பொன் |
பொன் (=தங்கம்) >>> பௌன் >>> பவுன் = தங்கம் |
சவரன் |
தங்கம் |
அபரஞ்சி |
அபரஞ்சி (=தங்கம்) >>> சவரஞ்சி >>> சவரம், சவரன் |
ம |
சந்திரன் |
மா |
மா (=அழகு, ஒளி) >>> ம = அழகிய ஒளி வீசுபவன் |
ம |
நஞ்சு |
மா |
மா (=கருமை, நீலம்) >>> ம = உடலில் நீலம் பாயச்செய்வது |
மக்கர் |
முடக்கம் |
பங்கர் |
பங்கு (=முடம்) >>> பங்கர் >>> பக்கர் >>> மக்கர் = முடக்கம் |
மக்கனம் |
மூழ்குகை |
மாழ்கணம் |
மாழ்கு (=மூழ்கு) + அணம் = மாழ்கணம் >>> மக்கனம் |
மக்கனம் |
அவமானம் |
பங்கணம் |
பங்கம் (=இழிவு) + அணம் = பங்கணம் >>> மக்கனம் = அவமானம் |
மகக்கமா |
நியாய சபை |
வகுக்கமம் |
வகு (=வரையறு, விதி) + கமம் (=கூட்டம்) = வகுக்கமம் >>> மகக்கமா = வரையறுக்கும் கூட்டம். |
மகசூல் |
உணவு விளைச்சல் |
மகசூல் |
மகம் (=பலி, உணவு) + சூல் (=கருப்பம், விளைச்சல்) = மகசூல் = உணவு விளைச்சல். |
மகசர் |
எழுதப்பட்ட பக்கம் |
பக்காசர் |
பக்கம் + ஆசு (=எழுது) + அர் = பக்காசர் >>> மகசர் = பலர் எழுதிக் கையொப்பமிடும் பக்கம். |
மகடி |
வீடு |
மாழ்கடி |
மாழ்கு (=மூடு, மறை) + அடி (=இடம்) = மாழ்கடி >>> மகடி = மறைந்து கொள்ளும் இடம். |
மகத்து |
பெரியது |
மாகத்து |
மாகம் (=ஆகாயம்) + அத்து (=போல) = மாகத்து >>> மகத்து = ஆகாயத்தைப் போல பெரியது. |
மகந்து |
குரு |
மகந்து |
மகத்து (=பெரியது) >>> மகந்து = பெரியோர், குரு |
மகத்துவம் |
பெருமை |
மகத்துமம் |
மகத்து (=பெரியது) + மம் = மகத்துமம் >>> மகத்துவம் = பெருமை |
மகந்தரம் |
கள், பதநீர் |
மகந்தாரம் |
மகம் (=பனை) + தாரம் (=நீர், உணவு) = மகந்தாரம் >>> மகந்தரம் = பனையில் இருந்து பெறப்படும் நீர் உணவுகள். |
மகம் |
உணவு |
பாகம் |
பாகு (=உணவு) + அம் = பாகம் >>> மகம் |
மகம் |
ஒளி |
பக்கம் |
பக்கம் (=ஒளி) >>> மகம் |
மகம் |
யாகம் |
வாக்கம் |
வாக்கு (=ஒலி, இடு) + அம் (=உணவு) = வாக்கம் >>> மகம் = உணவுப் பொருட்களை மந்திரம் ஒலித்தவாறே தீயில் இடுதல். |
மகம் |
மகிழ்ச்சி |
மகம் |
பக்கம் (=ஒளி, பொலிவு) >>> மகம் = பொலிவு, மகிழ்ச்சி. |
மகமை |
நிலவரி |
பாங்கமை |
பாங்கு (=இடம்) + அமை (=பெறு, நிர்ணயி) = பாங்கமை >>> மாக்கமை >>>> மகமை = இடத்திற்காக நிர்ணயித்துப் பெறும் வரி. |
மகரந்தம் |
பூந்தாது, பூந்தேன் |
பகரற்றம் |
பகர் (=இடம்பெயர், ஒளி) + அற்றம் (=பொடி) = பகரற்றம் >>> மகரத்தம் >>> மகரந்தம் = இடம்பெயரும் ஒளிமிக்க பொடி. |
மகரந்தம் |
கள் |
மகருந்தம் |
மகம் (=பனை) + அருந்து (=பருகு) + அம் (=உணவு) = மகருந்தம் >>> மகரந்தம் = பனையில் இருந்து பெறப்படும் நீர் உணவு. |
மகரம் |
முதலை, சுறாமீன் |
வாக்கரம் |
வாக்கு (=வாய்) + அரம் = வாக்கரம் >>> மகரம் = அரம்போன்ற வாயினைக் கொண்டது. |
மகரம் |
காதல் |
பக்காரம் |
பக்கம் (=அன்பு) + ஆர் (=ஒப்பு, பிணி + அம் = பக்காரம் >>> மகரம் = உள்ளங்களைப் பிணிக்கும் ஒத்த அன்பு. |
மகரம் |
சொர்க்கம் |
பாங்காரம் |
பாங்கு (=நன்மை, அழகு, இடம்) + ஆர் (=நிறை) + அம் = பாங்காரம் >>> மாக்காரம் >>> மகரம் = நன்மையே தருவதான அழகு நிறைந்த இடம். |
சாகரம் |
கடல் |
ஆக்காரம் |
(2). ஆக்கம் (=நீர்) + ஆர் (=நிறை, பூமி) + அம் = ஆக்காரம் >>>> ஆகரம் >>> சாகரம் = பூமியில் நிறைந்திருக்கும் நீர். |
மகராகரம் |
கடல் |
மகராக்காரம் |
மகரம் (=சுறா) + ஆக்கம் (=நீர்) + ஆர் (=நிறை) + அம் = மகராக்காரம் >>> மகராகரம் = சுறாக்கள் வாழும் நீர்த் தொகுதி. |
மகராங்கம் |
கடல் |
மகராக்கம் |
மகரம் (=சுறா) + ஆக்கம் (=நீர்) = மகராக்கம் >>> மகராங்கம் = சுறாக்கள் வாழும் நீர். |
மகா |
பெரியது |
மாகா |
மாகம் (=ஆகாயம்) + ஆ (=ஒப்பு) = மாகா >>> மகா = ஆகாயம் போல் பெரியது. |
மகராசி |
பேரரசி |
மகாரசி |
மகா (=பெரிய) + அரசி = மகாரசி >>> மகராசி = பெரிய அரசி |
மகராலயம் |
கடல் |
மகராலாயம் |
மகரம் (=சுறா) + ஆல் (=நீர்) + ஆயம் (=தொகுதி) = மகராலாயம் >>> மகராலயம் = சுறாக்கள் வாழும் நீர்த் தொகுதி. |
மகரி |
கடல் |
மகரி |
மகரம் (-=சுறா) + இ = மகரி = சுறாக்களைக் கொண்டது |
மகாகச்சம் |
கடல் |
மகாகயம் |
மகா (=பெரிய) + கயம் (=நீர்நிலை) = மகாகயம் >>> மகாகசம் >>> மகாகச்சம் = பெரிய நீர்நிலை |
மகாகதம் |
காய்ச்சல் |
மகாகதம் |
மகா (=பெரிய) + கதம் (=வெப்பம்) = மகாகதம் = பெருவெப்பம் |
மகாகாயம் |
யானை |
மகாகாயம் |
மகா (=பெரிய) + காயம் (=உடல்) = மகாகாயம் = பெரு உடலினது |
சயம் |
நீர்நிலை |
அயம் |
அயம் (=நீர்நிலை) >>> சயம் |
மகாசயம் |
கடல் |
மகாசயம் |
மகா (=பெரிய) + சயம் (=நீர்நிலை) = மகாசயம் = பெரிய நீர்நிலை |
மகாவீரம் |
யாகத்தீ |
மகாவிரம் |
மகம் (=யாகம்) + அவிர் (=எரி) + அம் = மகாவிரம் >>> மகாவீரம் = யாகத்தில் எரிவது. |
மகான் |
பெரியவர் |
மகான் |
மகா (=பெரியது) + அன் = மகான் = பெரியவர் |
மகி |
பூமி |
பாங்கி |
பாங்கு (=இடம், நிலம்) + இ = பாங்கி >>> மகி = பூமி |
மகிடம், மகிசம் |
எருமை |
மகிடம் |
மகம் (=யாகம், பலி) + இட (=வெட்டு) + அம் = மகிடம் = யாகத்தில் பலியாக வெட்டப்படுவது. |
மகிகை |
மூடுபனி |
மாழ்கிகை |
மாழ்கு (=மூடு, மறை) + இக (=கட, பரவு) + ஐ = மாழ்கிகை >>> மகிகை = பரவி மூடி மறைத்திருப்பது. |
மகிடி |
மூடி மறைத்தல் |
மாழ்கிடி |
மாழ்கு (=மூடு, மறை) + இடு + இ = மாழ்கிடி >>> மகிடி = மூடி மறைத்து வைத்தல். |
மகிந்தகம் |
எலி |
வங்கிந்தாகம் |
வங்கு (=பொந்து) + இந்து (=கருமை) + ஆகம் (=உடல்) = வங்கிந்தாகம் >>> மகிந்தகம் = பொந்துக்குள் இருக்கும் கருவுடலி |
மகிந்தகம் |
கீரி |
பகைந்நாகம் |
பகை + நாகம் = பகைந்நாகம் >>> மகிந்தகம் = நாகத்தின் பகை |
மகிபதி |
அரசன் |
மகிபதி |
மகி (=பூமி, நிலம்) + பதி (=தலைவன்) = மகிபதி = நிலத்தலைவன் |
மகிபன், மகீபன் |
அரசன் |
மகிமான் |
மகி (=பூமி, நிலம்) + மான் (=தலைவன்) = மகிமான் >>> மகிபன் = நிலத் தலைவன். |
மகிபாலன் |
அரசன் |
மகிபாலன் |
மகி (=பூமி, மக்கள்) + பாலி (=கா) + அன் = மகிபாலன் = மக்களைக் காப்பவன். |
மகிமை |
பெருமை |
மகிமை |
மகி (=பூமி) + மை = மகிமை = பூமியைப் போன்ற பெருமை |
மகிமா |
பெரிதாகும் வல்லமை |
மகிமா |
மகி (=பூமி) + மா (=ஆற்றல்) = மகிமா = பூமியைப் போலப் பெரிதாகும் ஆற்றல். |
மகிரன் |
சூரியன் |
மாகிரன் |
மாகம் (=ஆகாயம்) + இரி (=ஓடு) + அன் = மாகிரன் >>> மகிரன் = ஆகாயத்தில் ஓடிக் கொண்டே இருப்பவன். |
மகிலம் |
மயில், மயில் இறகு |
மாகில்லம் |
மா (=கருமை, நீலம்) + கில்லம் (கழுத்து) = மாகில்லம் >>> மகிலம் = நீலநிறக் கழுத்து உடையது = மயில் >>> மயிலிறகு |
மகிலை |
பெண் |
மாகிலை |
மா (=அழகு) + கிலி (=அச்சம்) + ஐ = மாகிலை >>> மகிலை = அழகும் அச்சமும் பொருந்தியவள். |
மகிளம் |
பூவிதழ் |
பக்கிளம் |
பக்கு (=ஏடு) + இளம் (=மென்மை) = பக்கிளம் >>> மகிளம் = மென்மையான ஏடு. |
மகிளி |
சேறு |
மட்களி |
மண் + களி = மட்களி >>> மக்களி >>> மகிளி = களிநிலை மண் |
மகினம் |
நிலப்பிரிவு |
மகினம் |
மகி (=பூமி) + இனம் (=பிரிவு, பகுப்பு) = மகினம் = பூமியின் பிரிவு |
மகிசம் |
எருமை |
மகீயம் |
மகம் (=யாகம், பலி) + ஈ (=கொடு, கொல்) + அம் = மகீயம் >>> மகிசம் = யாகத்தில் கொன்று பலியாகக் கொடுக்கப்படுவது |
மகீத்திரம் |
மலை |
மகித்திறம் |
மகி (=பூமி, நிலம்) + திறம் (=கூட்டம், குவியல்) = மகித்திறம் >>> மகீத்திரம் = குவியலான நிலப் பரப்பு. |
மகீதரம் |
மலை |
மகிதரம் |
மகி (=பூமி, நிலம்) + தரம் (=கூட்டம், குவியல்) = மகிதரம் >>> மகீதரம் = குவியலான நிலப் பரப்பு. |
மகீருகம் |
தாவரம் |
மகீறுகம் |
மகி (=பூமி) + இறுகு (=நிலைபெறு, செழி) + அம் = மகீறுகம் >>> மகீருகம் = மண்ணில் செழித்து நிலையாக இருப்பன. |
மகீலதை |
மண்புழு |
மகீலத்தை |
மகி (=நிலம்) + இல் (=துளை) + அத்து (=தங்கு) + ஐ = மகீலத்தை >>> மகீலதை = நிலத்தைத் துளைத்துத் தங்குவது. |
மகுடம் |
மங்கொளி |
மங்குடம் |
மங்கு (=குன்று, குறை) + உடு (=ஒளி) + அம் = மங்குடம் >>> மகுடம் = ஒளி குன்றிய / மழுங்கிய நிலை. |
மகுடி, மகிடி |
பாம்புக்கான ஊதுகொம்பு |
பாகோடி |
பா (=பாம்பு) + கோடு (=வளை, கட்டுப்படுத்து, ஊதுகொம்பு) + இ = பாகோடி >>> மகுடி >>> மகிடி = பாம்பினைக் கட்டுப்படுத்துகின்ற ஊதுகொம்பு. |
மங்குரம், மகுரம் |
கண்ணாடி, பளிங்கு |
பாங்குறம் |
பாங்கு (=ஒளி, பக்கம்) + உறு (=பொருந்து) + அம் = பாங்குறம் >>> மங்குரம் >>> மகுரம் = ஒளிரும் பக்கங்கள் பொருந்தியது. |
மகுரம் |
பூமொட்டு |
மாகூரம் |
மா (=வண்டு, அழகு, நிறம்) + கூர் (=விரும்பு, கூராகு) + அம் = மாகூரம் >>> மகுரம் = வண்டுகள் விரும்பும் அழகிய நிறத்துடன் கூர்மையாக விளங்குவது. |
மகுரம் |
குயவன் சக்கரம் |
மாகூரம் |
மா (=நிலம், மண், பொடி) + கூர் (=வளை) + அம் = மாகூரம் >>> மகுரம் = மண்பொடியை / களிமண்ணை வளைக்க உதவுவது. |
மகூலம் |
மலர்ந்த பூ |
பக்குலம் |
பக்கு (=ஏடு, இதழ்) + உலை (=குலை, அவிழ்) + அம் = பக்குலம் >>> மகூலம் = இதழ் அவிழ்ந்தது. |
மகேலிகை, மகேலை |
பெண், தாய் |
மகேலை, மகேலிகை |
மகா (=குழந்தை) + ஏல் (=சும) + ஐ = மகேலை >>> மகேலிகை = குழந்தையைச் சுமக்கும் பேறுடையவள். |
மகோததி |
பெருங்கடல் |
மகோததி |
மகா (=பெரிய) + உததி (=கடல்) = மகோததி = பெருங்கடல். |
மகோதரம் |
பூதம் |
மகோதரம் |
மகா (=பெரிய) + உதரம் (=வயிறு) = மகோதரம் = பெரிய வயிற்றைக் கொண்டது = பூதம் |
உற்பலம் |
செந்தாமரை, செங்குவளை |
உருப்பாலம் |
உருப்பு (=தீ) + ஆல் (=நீர்) + அம் = உருப்பாலம் >>> உர்ப்பலம் >>> உற்பலம் = நீரில் எரியும் தீ போன்ற மலர் |
மகோற்பலம் |
பெருந்தாமரை |
மகோற்பலம் |
மகா (=பெரிய) + உற்பலம் (=தாமரை) = மகோற்பலம் |
உன்னதம் |
உயர்வு, மேன்மை |
உன்னத்தம் |
உன்னு (=எழு, உயர்) + அத்து (=பொருந்து) + அம் = உன்னத்தம் >>> உன்னதம் = உயர்வு / எழுச்சி பொருந்தியது |
மகோன்னதம் |
பேரெழுச்சி |
மகோன்னதம் |
மகா (=பெரிய) + உன்னதம் (=எழுச்சி) = மகோன்னதம் |
மகோன்னதம் |
உயரமான பனைமரம் |
மகோன்னதம் |
மகம் (=பனை) + உன்னதம் (=உயர்வு) = மகோன்னதம் = உயரமான பனைமர வகை. |
மாங்கலியம், மாங்கல்யம் |
பொன் தாலி |
மங்கலியம் |
மங்கலம் (=பொன்) + இயம் = மங்கலியம் >>> மாங்கலியம் >>> மாங்கல்யம் = பொன்னால் ஆனது |
மங்கல்லியம் |
தயிர் |
பாகளியம் |
பாகு (=கெட்டியான உணவு) + அள் (=செறி) + இயம் = பாகளியம் >>> மங்கல்லியம் = செறிந்து கெட்டியான உணவுப் பொருள். |
மங்கல்லியம் |
சந்தனம் |
பாகளியம் |
பா (=பரப்பு, பூசு, நிழல், குளிர்ச்சி) + களி + அம் = பாகளியம் >>> மங்கல்லியம் = குளிர்ச்சிக்காகப் பூசப்படும் களிநிலைப் பொருள். |
மங்கலம் |
பொலிவு |
மங்கலம் |
மங்கலம் (=பொன்) >>> மங்கலம் = பொலிவு |
மங்கலம் |
திருமணம் |
மாண்களம் |
மாண் (=நிறை) + களம் (=கழுத்து, மனைவி) = மாண்களம் >>> மட்கலம் >>> மக்கலம் >>> மங்கலம் = கழுத்தை நிறைத்து மனைவியாக்கிக் கொள்ளுதல். |
மங்கலம் |
தாலி |
மாண்கலம் |
மாண் (=நிறை, மாட்சிமை) + கலம் (=அணி) = மாண்கலம் >>> மட்கலம் >>> மக்கலம் >>> மங்கலம் = மாட்சிமையும் நிறைவும் தருகின்ற அணி. |
மங்கலம் |
நன்மை, சுபம், நற்செயல் |
பாங்களம் |
பாங்கு (=நன்மை, நலம்) + அள் (=செறி, மிகு) + அம் = பாங்களம் >>> மங்கலம் = நன்மை / நலம் மிக்கது |
மங்களன், மங்கலன் |
செவ்வாய் |
பாங்காளன் |
பாங்கு (=இடம், நிலம்) + ஆள் + அன் = பாங்காளன் >>> மங்களன் >>> மங்கலன் = நிலத்தை ஆள்பவன். |
மங்கலி |
மணமானவள் |
மங்கலி |
மங்கலம் (=தாலி) + இ = மங்கலி = தாலி அணிந்தவள். |
மங்கிலம் |
காட்டுத்தீ |
பாங்கிலம் |
பாங்கு (=மரம்) + இல் + அம் = பாங்கிலம் >>> மங்கிலம் = மரங்களை இல்லாமல் செய்வது. |
மங்கு |
சாடி |
மங்கு |
வாங்கு (=கொள்) >>> மங்கு = கொள்ள உதவுவது = கொள்கலம். |
மங்கை |
பாதரசம் |
பாகை |
பாகு + ஐ = பாகை >>> மங்கை = பாகுபோன்ற உலோகம் |
மங்கை |
கற்றாழை |
பாகை |
பாகு + ஐ = பாகை >>> மங்கை = பாகுபோன்ற சாறுடையது. |
மச்சம், மச்சை |
மறு, கறை |
மய்யம் |
மை (=கருமை) + அம் = மய்யம் >>> மச்சம் = கருநிறமானது |
மச்சம், மச்சியம் |
மீன் |
பய்யம் |
(2). பை (=பெருகு, அழகு) + அம் (=நீர்) = பய்யம் >>> பச்சம் >>> மச்சம் = நீரில் பெருகி வாழும் அழகான உயிரினம். |
மீனம், மீன் |
நீர்நிலையில் வாழ்வது |
மேனம் |
மேனி (=கண், வடிவம், அழகு) + அம் (=நீர்) = மேனம் >>> மீனம் >>> மீன் = கண்போன்ற வடிவுடைய அழகான நீர்வாழ் உயிரி. |
மச்சரம் |
பொறாமை, போட்டி |
மய்யாறம் |
மை (=அழுக்கு) + ஆறு + அம் = மய்யாறம் >>> மச்சரம் = அழுக்காறு = பொறாமை, போட்டி. |
மச்சனம் |
ஞானக் குளியல் |
மய்யாழ்நம் |
மை (=நீர்) + ஆழ் (=அமிழ்த்து) + நம் = மய்யாழ்நம் >>> மச்சனம் = நீரில் அமிழ்த்தும் சடங்கு. |
மச்சிகை |
மோர் |
பய்யிகை |
பயம் (=பால், நீர்) + இகு (=சொரி, ஊற்று) + ஐ = பய்யிகை >>> பச்சிகை >>> மச்சிகை = பால்போல ஊற்றி உண்ணும் நீருணவு |
மச்சிகை, மட்சிகை |
ஈ |
மாசிகை |
மாசு (=கழிவு, மலம்) + இகு (=திரள், மொய்) + ஐ = மாசிகை >>> மச்சிகை = கழிவுகளின் மேல் திரண்டு மொய்ப்பது |
மக்கி |
ஈ |
மக்கீ |
மக்கு (=கெட்டுப்போனது) + ஈ = மக்கீ >>> மக்கி = கெட்டுப்போனவற்றை மொய்க்கும் ஈ வகை. |
மச்சுவா |
படகு |
பய்யுவா |
பை (=பரவு, கலம்) + உவா (=கடல்) = பய்யுவா >>> பச்சுவா >>> மச்சுவா = கடலில் பரவும் கலம். |
மையம் |
நடு |
வையம் |
(2) வை (=கூர்மை, புள்ளி, பொட்டு, இடு) + அம் = வையம் >>> மையம் = பொட்டு வைக்கும் இடம் = நடு |
மச்சை |
அம்பெய்குறி |
மய்யை |
மையம் (=நடு) + ஐ = மய்யை >>> மச்சை = அம்பெய்யும் குறி |
மஞ்சை, மச்சை |
பஞ்சுபோன்ற எலும்புத்திசு |
பஞ்சை |
பஞ்சு + ஐ = பஞ்சை >>> மஞ்சை >>> மச்சை = சில எலும்புகளுக்குள் காணப்படும் பஞ்சு போன்ற திசு |
மச்சை |
உட்காய்ச்சல் |
பய்யை |
பை (=நடுங்கு) + ஐ = பய்யை >>> பச்சை >>> மச்சை = நடுக்கத்தை உண்டாக்கும் சுரம். |
மசகம், மசம் |
கொசு |
பாய்ச்சகம் |
பாய்ச்சு (=குத்து, கடி) + அஃகு (=கூர்மை) + அம் (=உண்) = பாய்ச்சகம் >>> பசகம் >>> மசகம் = கூர்வாயால் குத்தி உண்பது |
மசகம் |
நீர்பாய்ச்சும் கருவி |
பாய்ச்சாக்கம் |
பாய்ச்சு + ஆக்கம் (=நீர்) = பாய்ச்சாக்கம் >>> பசக்கம் >>> மசகம் = நீரினைப் பாயச்செய்வது. |
மசகம் |
மயிர் |
மய்யாகம் |
மை (=கருமை) + ஆகம் = மய்யாகம் >>> மசகம் = கருமைநிறத்தில் உடலில் இருப்பது. |
வெள்ளி, 10 ஜூலை, 2020
சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 35
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.