சனி, 18 ஜூலை, 2020

சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச் சொற்களின் தோற்றம் - பகுதி 37


சொல்

பொருள்

தமிழ்ச்

சொல்

மூலச்சொல்லும்

தோன்றும் முறையும்

மதிதம்

தயிர், மோர்

மத்திறம்

மத்து (=கடை) + இறு (=முடி) + அம் = மத்திறம் >>> மத்திதம் >>> மதிதம் = கடைந்து முடிந்தது.

மதியம்

நடு

பாதியம்

பாதி (=நடு) + அம் = பாதியம் >>> மதியம்

மதியம்

நடுப்பகல்

பாதியம்

பாதி (=நடு) + அம் (=அழகு, ஒளி) = பாதியம் >>> மதியம் = ஒளிக்காலத்தின் நடு.

மதிரம், மதிரை, மதுரை

கள்

மதீரம்

மதம் (=போதை) + ஈரம் (=நீர்) = மதீரம் >>> மதிரம் >>> மதிரை = போதை உண்டாக்கும் நீர்

மதில்

இஞ்சி

மதில்

மதம் (=போதை) + இல் = மதில் = போதையை இல்லாமல் செய்வது

மதுக்கிரமம்

தேன் கூடு

மதுக்கூரப்பம்

மது (=தேன்) + கூர் (=மிகு, குவி) + அமை (=இரு) + அம் = மதுக்கூரமம் >>> மதுக்கிரமம் =தேன் மிகுதியாக இருப்பது.

மதுக்கோடம்

தேன் கூடு

மதுக்கோடம்

மது (=தேன்) + கோடு (=குவியல், திரட்டு) + அம் = மதுக்கோடம் = தேனின் குவியல் / திரட்டு

மதுகம்

கள்

மதூக்கம்

மதம் (=போதை) + ஊக்கம் (=மிகுதி) = மதூக்கம் >>> மதுகம் = மிக்க போதை தருவது.

மதுகரம்

கள்

மதூக்காரம்

மதம் (=போதை) + ஊக்கு (=மிகுவி) + ஆர் (=உண்ணு) + அம் (=நீர்) = மதூக்காரம் >>> மதுகரம் = மிக்க போதை தரும் நீருணவு

மதுகேசடம்

தேனீ

மதுகெழாடம்

மது (=தேன்) + கெழு (=விரும்பு) + ஆடு (=திரி) + அம் = மதுகெழாடம் >>> மதுகேசடம் = தேனை விரும்பித் திரிவது.

சாராயம்

போதைதரும் சாறுணவு

சாறாயம்

சாறு + ஆய் (=அசை, தள்ளாடு) + அம் (=உணவு) = சாறாயம் >>> சாராயம் = தள்ளாட்டத்தைத் தரும் சாறு உணவு.

மதுத்திருணம்

கரும்பு

மதுத்திரணம்

மது (=இனிய சாறு) + திரணம் (=புல்) = மதுத்திரணம் >>> மதுத்திருணம் = இனிய சாறுடைய புல்வகை.

மதுதூதம்

மாமரம்

மதுதூறம்

மது (=பூந்தாது) + தூறு (=தூவு) + அம் = மதுதூறம் >>> மதுதூதம் = பூந்தாதுக்களை மழைச்சாரல் போலத் தூவுவது

மதுநோலேகம்

தேனீ

மதுநோலேகம்

மது (=தேன்) + நோல் (=பொறு, சும) + ஏகு (=செல்) + அம் = மதுநோலேகம் = தேனைச் சுமந்து செல்வது.

மதுபலம்

தென்னை

மதுபழம்

மது (=இனிய சாறு) + பழம் (=கனி) = மதுபழம் >>> மதுபலம் = இனிய சாறுடைய கனியைத் தருவது.

மாதுளம், மாதுளை

இனிய பழவகை

மதூழம்

மது (=இனிய சாறு) + ஊழ் (=மிகு, முதிர்) + அம் = மதூழம் >>> மாதுளம் = இனியசாறு மிக்க முதிர்ந்த விதைகள் உடையது

மதுரபாகம்

மூக்கு

மதூர்பாகம்

மது (=நீர்) + ஊர் (=ஒழுகு, வழி) + பாகம் (=உறுப்பு) = மதூர்பாகம் >>> மதுரபாகம் = நீர் வழியும் உறுப்பு.

மதுரம்

பேரினிமை

மதுரம்

மது (=இனிமை) + உரம் (=மிகுதி) = மதுரம் = மிக்க இனிமை 

மதுரம்

கொடி முந்திரி

மதூரம்

மது (=இனிய சாறு) + ஊர் (=அடர், திரள்) + அம் (=உணவு) = மதூரம் >>> மதுரம் = இனிய சாறுடைய திரண்ட உணவுப் பொருள்.

மதுரம்

முளை

பய்துரம்

பைது (=பசுமை) + உரு (=தோன்று) + அம் = பய்துரம் >>> மதுரம் = பசுமையாகத் தோன்றுவது.

மதுரம்

நஞ்சு

பதூறம்

பதம் (=உணவு) + ஊறு (=கொலை) + அம் = பதூறம் >>> மதுரம் = கொல்லும் உணவுப் பொருள்.

மதுரை

இனியது

மதுறை

மது (=இனிமை) + உறை (=பொருந்து) = மதுறை >>> மதுரை = இனிமை பொருந்தியது

மதுரோதகம்

நன்னீர்க் கடல்

மதுரோதகம்

மதுரம் (=இனிமை) + உதகம் (=நீர், கடல்) = மதுரோதகம் = இனியநீர் கொண்ட கடல்.

மதுபீசம், மதுவீசம்

மாதுளை

மதுபீசம்

மது (=இனிய சாறு) + பீசம் (=விதை) = மதுபீசம் >>> மதுவீசம் = இனிய சாறுடைய விதைகளைக் கொண்டது.

மதூலி

மாமரம்

மாதூளி

மா (=மிகுதி) + தூள் (=பூந்தாது) + இ = மாதூளி >>> மதூலி = மிகுதியான பூந்தாதுக்களைக் கொண்டது.

மதோற்கடம்

மதயானை

மதோறுகடாம்

மதம் (=வெறி) + உறு (=மிக்க) + கடாம் (=மதநீர்) = மதோறுகடாம் >>> மதோற்கடம் = மதநீரால் மிக்க வெறி உறுவது.

காசினி

பூமி

காழீனி

காழ் (=விதை) + ஈன் (=பெற்றெடு, உண்டாக்கு) + இ = காழீனி >>> காசினி = விதையில் இருந்து உயிர்களைப் பெற்றெடுப்பவள்.

மந்தசானம்

தீ

பைதாயணம்

பைது (=பசுமை) + ஆய் (=உண்ணு) + அணம் = பய்தாயணம் >>> மத்தாசணம் >>> மந்தசனம் = பசுமையை உண்டு அழிப்பது.

மந்தணம், மந்தனம்

இரகசியம்

மற்றணம்

மறை + அணம் = மற்றணம் >>> மத்தணம் >>> மந்தணம் = மறைவானது, வெளிப்படை அற்றது.

மந்ததரம்

வெண்ணெய்

மத்ததாரம்

மத்தம் (=மத்து) + தாரம் (=உணவு) = மத்ததாரம் >>> மந்ததரம் = மத்தினால் கடைந்து பெறப்பட்ட உணவுப் பொருள்.

மந்ததரம்

பழம்

பததாரம்

பதம் (=பக்குவம்) + தாரம் (= உணவு) = பததாரம் >>> மந்ததரம் = பக்குவமடைந்த உணவு.  

மந்தம்

காலநீட்டம், சோம்பல்

மந்தம்

மத்தம் (=மிகுதி, கொழுப்பு) >>> மந்தம் = மிகுந்த கொழுப்பினால் உண்டாகும் சோம்பல்.

மத்து, மச்`து

கொழுப்பு

மத்தம்

மத்தம் (=கொழுப்பு) + உ = மத்து >>> மச்`து

மந்தரம்

சொர்க்கம்

பத்தாரம், மாத்தரம்

(1). பதம் (=ஒளி, இன்பம், இடம்) + ஆர் (=நிறைவு) + அம் = பத்தாரம் >>> மந்தரம் = இன்பமும் ஒளியும் நிறைந்த இடம். (2). மா (=உயர்வு) + தரம் (=நிலை) = மாத்தரம்>>>மந்தரம் = உயர்நிலை

மந்தரன்

ஒற்றன்

மற்றறன்

மறை (=மறைவு, இரகசியம்) + அறி + அன் = மற்றறன் >>> மத்தரன் >>> மந்தரன் = இரகசியங்களை அறிபவன்.

மந்தரன்

சோம்பேறி

மந்தாரன்

மந்தம் (=சோம்பல்) + ஆர் (=பொருந்து) + அன் = மந்தாரன் >>> மந்தரன் = சோம்பல் பொருந்தியவன்.

மந்தன்

எமன்

பாற்றன்

பாற்று (=கொல், அழி) + அன் = பாற்றன் >>> மாத்தன் >>> மந்தன் = கொல்பவன்

மந்தனம்

யானையின் முகபடாம்

மற்றானம்

மறை (=மறைப்பு) + ஆனை + அம் = மற்றானம் >>> மத்தானம் >>> மந்தனம் = யானையின் முகபடாம்

மந்தசம்

வெண்ணெய்

மத்தாயம்

மத்து (=கடை) + ஆய் (=ஒளி, வெண்மை) + அம் (=உணவு) = மத்தாயம் >>> மந்தசம் = கடைந்துபெற்ற வெண்ணிற உணவு.

மந்தாகினி

பால்வீதி மண்டலம்

பற்றகினி

பறை (=வட்டம்) + அகை (=எரி, ஒளிர்) + இனம் (=கூட்டம்) + இ = பற்றகினி >>> மத்தகினி >>> மந்தாகினி = வட்டமாய் ஒளிரும் கூட்டம்.

மந்தாரம்

மேகமூட்டம்

மற்றாரம்

மறை + ஆர் (=கூடு) + அம் = மற்றாரம் >>> மத்தாரம் >>> மந்தாரம் = மேகங்கள் கூடி மறைத்தல்.

மந்தானம்

மத்து

பற்றணம்

பறை (=வட்டம்) + அணை (=கல) + அம் = பற்றணம் >>> மத்தனம் >>> மந்தானம் = வட்டமாகக் கலக்க உதவுவது.

அனிலம்

காற்று

அனிலம்

அல் + நிலை + அம் = அனிலம் = நிலை அற்றது.

மந்தி

சூரியன்

மத்தீ, மாத்தீ

(1). மதம் (=ஒளி) + ஈ (=கொடு) = மத்தீ >>> மந்தி = ஒளி கொடுப்பவன். (2) மா (=பெருமை) + தீ = மாத்தீ >>> மந்தி = பெருந்தீ = சூரியன்

மந்திரம்

மறைபொருள் கொண்டது

மற்றீரம்

மறை + ஈர் (=எழுது) + அம் = மற்றீரம் >>> மத்தீரம் >>> மந்திரம் = மறைபொருளால் எழுதப்பட்டது.

மந்திரம்

ஆலோசனை

மன்றிறம்

மன் (=நெருங்கு, பொருந்து, கூடு) + திறம் (=செய்தி) = மன்றிறம் >>> மற்றிறம் >>> மத்திரம் >>> மந்திரம் = நெருக்கமாகப் பொருந்தி / கூடிப் பரிமாறும் செய்தி.

மந்திரம்

வீடு, குகை

மற்றிரம்

மறை + இரு (=தங்கு) + அம் = மற்றிரம் >>> மத்திரம் >>> மந்திரம் = மறைவாகத் தங்கும் இடம்.

மந்திரம்

அரண்மனை, கோவில்

மன்றிரம்

மன் (=இறைவன், மன்னன்) + திரம் (=நிலைபேறு) = மன்றிரம் >>> மற்றிரம் >>> மத்திரம் >>> மந்திரம் = இறைவன் / மன்னன் நிலைபெற்று இருக்குமிடம்.

மந்திரம்

பொது மண்டபம்

மன்றிரம்

மன்று (=அவை) + இரு + அம் = மன்றிரம் >>> மற்றிரம் >>> மத்திரம் >>> மந்திரம் = அவையின் இருப்பிடம்.

மந்திரம்

குதிரைச் சாலை

மாத்திரம்

மா (=குதிரை) + திரம் (=நிலைபேறு) = மாத்திரம் >>> மந்திரம் = குதிரைகள் நிலைபெறும் இடம்.

மந்திரம்

குதிரைக் கூட்டம்

மாத்திறம்

மா (=குதிரை) + திறம் (=கூட்டம்) = மாத்திறம் >>> மந்திரம் = குதிரைகளின் கூட்டம்

மந்திரம்

கள்

மத்தீரம்

மதம் (=போதை) + ஈரம் (=நீர்) = மத்தீரம் >>> மந்திரம் = போதையைத் தருகின்ற நீர்.

மந்திரம்

யானை

மாத்திரம்

மா (=பெருமை, கருமை, விலங்கு) + திரம் (=வலிமை) = மாத்திரம் >>> மந்திரம் = வலிமை மிக்க பெரிய கரிய விலங்கு

மந்திரப்பசு

பூனை

மாத்திறப்பயு

மா (=விலங்கு) + திறம் (=மறைப்பு) + பை (=அச்சம்) + உ = மாத்திறப்பயு >>> மந்திரப்பசு = மறைவாக இயங்கும் அச்சமுடைய விலங்கு = பூனை.

மந்திரி, மந்திரர்

அமைச்சர்

மன்றிறி

மன் (=மன்னன்) + திறம் (=உபாயம்) + இ = மன்றிறி >>> மற்றிறி >>> மத்திரி >>> மந்திரி = மன்னருக்கு உபாயம் கூறுபவர்.

மந்தினி

தயிர்ப்பானை

மத்தினி

மத்து (=கடை) >>> மத்தினி >>> மந்தினி = தயிர் கடையும் பானை

மந்து

அரசன்

மற்று

மன்று (=தண்டி) >>> மற்று >>> மத்து >>> மந்து = தண்டிப்பவன்

மந்து

குற்றம்

மறு

மறு (=குற்றம்) >>> மற்று >>> மத்து >>> மந்து

மந்து

மனிதன்

மாந்தன்

மாந்தன் (=மனிதன்) >>> மாந்து >>> மந்து

மந்துரை

தொழுவம்

மந்துறை

மந்தை (=கூட்டம்) + உறை (=தங்குமிடம்) = மந்துறை >>> மந்துரை = கூட்டமாகத் தங்குமிடம்.

மந்துரை, மந்துரம்

குதிரைத் தொழுவம்

மாத்தொறை

மா (=குதிரை) + தொறு (=தொழுவம்) + ஐ = மாத்தொறை >>> மந்துரை = குதிரைத் தொழுவம்

மந்துரை

படுக்கை

மந்துறை

மந்தம் (=தூக்கம்) + உறை (=இடம்) = மந்துறை >>> மந்துரை = தூங்கும் இடம் = படுக்கை

மந்தை

பொதுவெளி

மன்றை

மன்று (=பொதுவிடம்) + ஐ = மன்றை >>> மற்றை >>> மத்தை >>> மந்தை = பொதுவான வெளியிடம்.

மந்தோததி

பாற்கடல்

மத்தோததி

மது (=பால்) + உததி (=கடல்) = மத்தோததி >>> மந்தோததி

மமதை

இறுமாப்பு

மப்பாற்றை

மப்பு (=செருக்கு) + ஆறு (=இயல்பு) + ஐ = மப்பாறை >>> மம்மாதை >>> மமதை = செருக்கான இயல்பு..

மயடம்

புல் வேய்ந்த குடிசை

பயடம்

பை (=பசுமை, புல்) + அடை (=மறை, வீடு)) + அம் = பயடம் >>> மயடம் = புல்லால் மறைக்கப்பட்ட வீடு.

மயண்டை

மாலைநேரம்

பயாறை

பை (=ஒளி) + ஆறு (=தணி, குறை) + ஐ = பயாறை >>> மயாடை >>> மயண்டை = ஒளி தணியும் பொழுது.

மயம்

அழகு

பயம்

பை (=அழகு) + அம் = பயம் >>> மயம்

மயம்

மகிழ்ச்சி

பயம்

பயம் (=இன்பம்) >>> மயம் = மகிழ்ச்சி

மயம்

மூத்திரம்

பயம்

பய (=ஒழுகு) + அம் (=நீர்) = பயம் >>> மயம் = ஒழுகும் நீர்

மயரி

செருக்கு உடையவன்

மயலி

மயல் (=செருக்கு) + இ = மயலி >>> மயரி = செருக்குடையவன்

மயானம்,, மசானம்

சுடுகாடு

பயழனம்

(2) பை (=எரி) + அழன் (=பிணம்) + அம் = பயழனம் >>> மயயனம் >>> மயானம் >>> மசானம் = பிணங்களை எரிக்கும் இடம்.

மயிடம், மயிடி

எருமை

மாயிடம்

மா (=கருமை, விலங்கு) + இட (=வெட்டு, கொல்) + அம் = மாயிடம் >>> மயிடம் = பலியாகக் கொல்லப்படும் கருநிற விலங்கு.

மயிடம்

பிசின்

பயினம்

பயின் (=பிசின்) >>> பயினம் >>> பயிணம் >>> மயிடம்

மயித்திரன், மைத்திரன்

நண்பன்

பாயத்திறன்

பாயம் (=விளையாட்டு) + திறம் (=கூட்டம்) + அன் = பாயத்திறன் >>> பைத்திறன் >>> மைத்திரன் >>> மயித்திரன் = கூடி விளையாடுபவன்.

மயிலை

மீன்

மயிலை

மை (=நீர், பிறவி) + இலை = மயிலை = இலைபோன்ற வடிவம் கொண்ட நீர்வாழ் பிறவி.

மயூகம், மயுகம்

ஒளிக்கதிர்

பயுகம்

பை (=ஒளி) + உகை (=எழு) + அம் = பயுகம் >>> மயுகம் >>> மயூகம் = ஒளியில் இருந்து எழுவது.

மயூகம், மயுகம்

தீப்பிழம்பு

பயுகம்

பை (=எரி, தீ) + உகை (=எழு) + அம் = பயுகம் >>> மயுகம் >>> மயூகம் = தீயில் இருந்து எழுவது.

மயூகம், மயுகம்

அழகிய தோற்றம்

பயுகம்

பை (=அழகு) + உகை (=எழு, தோன்று) + அம் = பயுகம் >>> மயுகம் >>> மயூகம் = அழகிய தோற்றம்.

மயூராரி

பல்லி

மயுறாரி

மை (=நஞ்சு, பிறவி) + உறு (=நிகழ், பொருந்து) + ஆர் (=ஒலி) + இ = மயுறாரி >>> மயூராரி = நிகழ்வுக்குப் பொருந்துவதாக ஒலிக்கின்ற நஞ்சுடைய பிறவி. 

மயேனம்

மிளகு

மயேணம்

மை (=கருமை) + ஏண் (=வலிமை) + அம் (=உணவு) = மயேணம் >>> மயேனம் = வலிமையான கருப்பான உணவுப் பொருள்.

மர்க்கடம், மற்கடம்

குரங்கு

மரக்கடம்

மரம் + கடு (=விரைந்து பாய்) + அம் = மரக்கடம் >>> மர்க்கடம் = மரங்களில் விரைந்து பாயக் கூடியது.

மர்க்கடாசியம்

செந்தாமரை மலர்

பருங்கடாயியம்

பருங்கி (=வண்டு) + அடை (=மூடு) + ஆய் (=அழகு, மென்மை) + இயம் = பருங்கடாயியம் >>> மர்க்கடாசியம் = வண்டுகளை மூடிக் கொள்ளும் அழகிய மென்மையான பொருள். 

மர்க்கடாசியம்

செம்பு

மர்க்கடாசியம்

மர்க்கடாசியம் (=செந்தாமரை) >>> மர்க்கடாசியம் = செம்பு.

மர்த்தி

கடை, கலக்கு

பரிதி

பரிதி (=வட்டம்) >>> மர்த்தி = சுற்று, சுழற்று, கடை, கலக்கு.

மர்த்தனம்

கடைதல், கலக்குதல்

மர்த்தணம்

மர்த்தி (=கடை, கலக்கு) + அணம் = மர்த்தணம் >>> மர்த்தனம் = கடைதல், கலக்குதல்.

மர்த்தியம்

நிலம், பூமி

மருந்தியம்

மரம் + உந்து (=தோன்று, வளர்) + இயம் = மருந்தியம் >>> மர்த்தியம் = மரங்கள் தோன்றி வளரும் இடம்.

மருமம், மர்மம்

இரகசியம், உயிர்நிலை

பரிமம்

(2). பரி (=சூழ், பாதுகா, மறை) + மம் = பரிமம் >>> மருமம் >>> மர்மம் = மறைக்கப்பட்டது, பாதுகாக்கப்பட்டது.

மரகதம்

பச்சைக்கல்

பரற்கறம்

பரல் (=கல்) + கறி (=இலை) + அம் (=அழகு, நிறம்) = பரற்கறம் >>> மரக்கதம் >>> மரகதம் = இலையின் நிறங்கொண்ட கல்.

கீரை

இலை

குறை

குறு (=பறி) + ஐ = குறை >>> கிரை >>> கீரை = பறிக்கப்படுவது.

மரணை

ஞாபகம்

பாரணை

பார் (=சிந்தி) + அணை (=கட்டு) = பாரணை >>> மரணை = சிந்தனைகளின் கட்டுமானம்.

மரணை

உணர்ச்சி

பாரணை

பார் (=அறி, உணர்) + அணை (=பொருந்து) = பாரணை >>> மரணை = பொருந்தி உணரப்படுவது.

மரதம்

இறப்பு

மாறந்தம்

மாறு (=அழி) + அந்தம் (=இறுதி) = மாறந்தம் >>> மரதம் = இறுதியான அழிவு.

மரந்தம்

பூந்தேன்

வரற்றம்

வரி (=பூ, ஒழுகு) + அற்றம் (=பொடி, தாது) = வரற்றம் >>> மரத்தம் >>> மரந்தம் = பூந்தாதில் இருந்து ஒழுகுவது.

மரயம்

பட்டை

மறயம்

மறை + அம் = மறயம் >>> மரயம் = மறைப்பது = தோல், பட்டை

மராட்டம்

மயிர்

வாரட்டம்

வார் (=தோல்) + அடு (=பொருந்து, பற்று) + அம் = வாரட்டம் >>> மராட்டம் = தோலைப் பற்றியிருப்பது.

மராமத்து

சீர்திருத்தம்

பரவாற்று

பரம் (=நிறைவு, முழுமை) + ஆற்று (=செய்) = பரவாற்று >>> மராமத்து = முழுமை ஆக்குதல், சீராக்குதல்.

மராரம்

பண்டக சாலை

பாராரம்

பாரம் (=பொருள்) + ஆர் (=நிறை, இடம்) + அம் =, பாராரம் >>> மராரம் = பொருட்கள் நிறைந்த இடம்.

மராளம்

பாம்பு

மாறாலம்

மாறு (=கொல், அழி) + ஆல் (=நஞ்சு) + அம் = மாறாலம் >>> மராளம் = நஞ்சைச் செலுத்திக் கொல்வது.

மராலம்

கண்மை

மாரளம்

மாரி (=கருமை) + அளி (=குழை) + அம் = மாரளம் >>> மராலம் = கருப்புநிறக் குழைவான பொருள்.

மராலம்

குதிரை

வாராளம்

வார் (=நெடுமை, கயிறு, தோல்) + ஆள் + அம் = வாராளம் >>> மராலம் = நீண்ட தோல் கயிற்றால் ஆளப்படுவது

மராலம்

மாதுளை

பரலம்

பரல் (=கொட்டை) + அம் (=இனிமை, நீர்) = பரலம் >>> மராலம் = இனிய நீருடைய கொட்டைகளைக் கொண்டது.

மராலம், மராளம்

வாத்து, பூநாரை, அன்னம்

பறாலம்

பறை (=பறவை) + ஆலம் (=வெண்மை, நீர்) = பறாலம் >>> மராலம், மராளம் = வெண்ணிற நீர்வாழ்ப் பறவைகள் = வாத்து, பூநாரை, அன்னம் போன்றன.

மராளாசனம்

தாமரை

வராலாயணம்

வரி (=தீ, மலர்) + ஆலம் (=நீர்) + ஆய் (=அழகு) + அணம் = வராலாயணம் >>> மராளாசனம் = நீரில் எரியும் தீயைப் போன்ற அழகிய மலர்.

மரி

இற, சாவு

மாறு

மாறு (=அழி, இற) >>> மாறி >>> மரி

மரி

நினை

பார்

பார் (=கருது, நினை) >>> பாரி >>> மரி

மரிச்சம், மரிச்சன்

மாமரம்

வரீயம்

வரி (=தீ, நிறம்) + ஈ (=படை) + அம் = வரீயம் >>> மரிச்சம், மரிச்சன் = தீப் போன்ற நிறத்தில் தளிர்களைப் படைப்பது.

மரிசம், மரீசம், மரீசி, மரீசினம்

மிளகு

வரியம்

வரி (=தீ) + அம் (=உணவு) = வரியம் >>> மரிசம் = தீயைப் போல எரிகின்ற உணவுப் பொருள்.

மரிசி

புதிய வழி

பாரியி

பாரி (=தோன்று) + இயம் (=வழி) + இ = பாரியி >>> மரிசி = புதிதாய்த் தோன்றிய வழி.

நரன்

மனிதன்

நரன்

நரை (=பெருமை, உயர்வு) + அன் = நரன் = உயர்வுடையவன்.

மரிசிதம்

பொறுமை

பரியிறம்

பரி (=சும, பொறு) + இறை (=தங்கல், இருப்பு) + அம் = பரியிறம் >>> மரிசிதம் = பொறுத்து இருத்தல்.

மரிசு, மரீசி

நீள் வரம்பு

வரிழு

வரை (=எல்லை) + இழு (=நீட்டு) = வரிழு >>> மரிசு = நீளமான எல்லைக் கோடு = நீள் வரம்பு

மரியாதை, மரியாதம்

நேர்மையான ஒழுக்கம்

வாரியாறை

வார் (=நேர்மை) + இய (=ஒழுகு, நட) + ஆறு (=வழி) + ஐ = வாரியாறை >>> மரியாதை = நேர்வழியில் ஒழுகுதல்.  

மரியாதை, மரியாதம்

நீதி

பரியாறை

பரி (=பாதுகா) + ஆறு (=வழி, முறை) + ஐ = பரியாறை >>> மரியாதை = பாதுகாக்கும் முறை.

மரியாதை

வரம்பு

பரியாறை

பரி (=பிரி) + ஆறு (=வழி) + ஐ = பரியாறை >>> மரியாதை = பிரிவினை உண்டாக்கும் வழி.

மரியாதை

சன்மானம்

பரியத்தை

பரி (=பெருமை, பெறு) + அத்தம் (=பொருள்) + ஐ = பரியத்தை >>> மரியாதை = பெருமையால் பெற்ற பொருள்.

மரியை

நிபந்தனை

வாரியை

வார் (=கட்டு) + இயை (=பொருந்து) = வாரியை >>> மரியை = கட்டுப்பாடு பொருந்தியது.

மரீசி

ஒளிக்கதிர்

பாரீழி

பாரி (=தோன்று) + இழு (=நீளு) + இ = பாரீழி >>> மரீசி = தோன்றி நீள்வது.

மரீசிகம், மரீசிகை

கானல் நீர்

வரீயிகம்

வரி (=தீ, அனல்) + இயம் (=வழி) + இகு (=ஓடு) + அம் (=நீர்) = வரீயிகம் >>> மரீசிகம் >>> மரீசிகை = செல்லும் வழியில் நீர் ஓடுவதைப் போலத் தோன்றுகின்ற அனல்.

மரு

மலை

பரு

பருமை + உ = பரு >>> மரு = பெரியது.

மருக்கம்

காற்று

மறுகம்

மறுகு (=சுழல், திரி) + அம் = மறுகம் >>> மருக்கம் = சுழன்று திரிந்து கொண்டே இருப்பது.

மருக்கம்

குரங்கு

மரூங்கம்

மரம் + ஊங்கு (=ஊஞ்சலாடு) + அம் = மரூங்கம் >>> மருக்கம் = மரத்தில் ஊஞ்சலாடுவது.

மருக்கம்

உடல்

மருங்கம்

மருங்கு (=உடல்) + அம் = மருங்கம் >>> மருக்கம்.

மருக்கம்

மிளகு

வருக்கம்

வரி (=தீ, எரிச்சல்) + உகு (=வெளியிடு) + அம் (=உணவு) = வருக்கம் >>> மருக்கம் = தீப்போன்ற எரிச்சலை வெளியிடும் உணவுப் பொருள்.

மருகம்

மான்

பருகம்

பரி (=ஓடு) + உகை (=உயர எழும்பு) + அம் = பருகம் >>> மருகம் = உயரமாக எழும்பி ஓடக் கூடியது.

மருகு

மல்லிகை

மருகு

மரு (=நறுமணம்) + உகு (=உதிர், வெளியிடு) + உ = மருகு = நறுமணத்தை வெளியிடும் உதிரக்கூடிய பொருள்.

மருகு

வாழை மரம்

பறுகு

பறை (=சிதை, அழி) + உகை (=எழு, தோன்று) + உ = பறுகு >>> மருகு = சிதைந்து அழிந்தும் அடியில் புதிதாக எழுவது.

மருகை

பஞ்சுமூட்டை

பரூங்கை

பரி (=பருத்திப் பஞ்சு) + ஊங்கு (=மிகுதி) + ஐ = பரூங்கை >>> மருகை = மிகுதியான பருத்திப் பஞ்சைக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.