சொல் |
பொருள் |
தமிழ்ச்சொல் |
மூலச்சொல்லும் தோன்றிய முறையும் |
வப்பிரம் |
மதில், கோட்டை |
பம்மீரம் |
பம்மு (=மூடு, மறை, வளை) + ஈர் (=நீளு) + அம் = பம்மீரம் >>> வப்பிரம் = நீளவாக்கில் வளைத்து மூடியிருப்பது = மதில். |
வப்பிரம் |
மலைச் சரிவு |
மாமிறம் |
மா (=மலை, இடம்) + மிறை (=வளைவு, சரிவு) + அம் = மாமிறம் >>> வப்பிரம் = மலையின் சரிவான இடம். |
வப்பிரம் |
அத்திவாரம் |
பப்பிறம் |
பப்பு (= ஒப்பு, சமம்) + இறை (=பாரம், தங்கல், இடம்) + அம் = பப்பிறம் >>> வப்பிரம் = பாரம் தங்கும் சமமான இடம். |
வப்பிரம் |
அகழி |
வவ்வீரம் |
வவ்வு (=தோண்டு) + ஈர் (=நீளு) + அம் (=நீர்) = வவ்வீரம் >>> வப்பிரம் = நீளமாகத் தோண்டப்பட்ட நீருடைய பள்ளம். |
வப்பிரம் |
வயல் |
வைப்பீரம் |
வைப்பு (=இடம்) + ஈரம் (=பசுமை) = வைப்பீரம் >>> வப்பிரம் = பசுமையும் ஈரமும் கொண்ட இடம். |
வப்பிரம் |
புழுதி |
வைப்பீரம் |
வைப்பு (=இடம், மண்) + ஈர் (=நுண்மை) + அம் = வைப்பீரம் >>> வப்பிரம் = நுண்ணிய மண் துகள்கள். |
வப்பிரம் |
ஈயம் |
மாழைப்பீரம் |
மாழை (=உலோகம்) + பீர் (=வெண்மை) + அம் = மாழைப்பீரம் >>> மய்ப்பீரம் >>> வப்பிரம் = வெண்ணிற உலோகம் |
வபனம் |
மயிர் நீக்குகை |
மயவணம் |
மை (=மயிர்) + அவி (=நீக்கு) + அணம் = மயவணம் >>> மாபனம் >>> வபனம் = மயிர் நீக்குகை. |
வபனம் |
விதைக்கை, விதை, விந்து |
பம்மணம் |
பம்மு (=மூடு, புதை) + மணி (=விதை) + அம் = பம்மணம் >>> வபனம் = விதைகளைப் புதைத்தல், விதைக்கப்படுவது = விதை, விந்து முதலியன. |
வபிலன் |
தந்தை |
மாமூலன் |
மா (=உயிர்) + மூலம் + அன் = மாமூலன் >>> வபுலன் >>> வபிலன் = உயிர்க்கு மூலமானவன். |
வபு |
உடல் |
மாபூ |
மா (=உயிர், இடம்) + பூ (=தோன்று) = மாபூ >>> வபு = உயிர் தோன்றும் இடம் = உடல். |
வபை |
கொழுப்பு |
மப்பு |
மப்பு (=கொழுப்பு) + ஐ = மப்பை >>> வபை |
வபை |
சாரம் |
மயப்பு |
மயப்பு (=சாரம்) + ஐ = மயப்பை >>> மாப்பை >>> வபை |
வமனம் |
வாந்தி |
வாவன்னம் |
வா (=ஒலி, வெளிப்படுத்து) + அன்னம் (=உணவு) = வாவன்னம் >>> வமனம் = வா வா என்ற ஒலியுடன் உணவைக் கக்குதல். |
வமனி |
அட்டைப் பூச்சி |
வம்பணி |
வம்பு (=தோல், தீங்கு) + அணை (=பொருந்து, ஒட்டு) + இ = வம்பணி >>> வமனி = தோலுடன் ஒட்டிக்கொண்டு தீங்கிழைப்பது |
வமனி |
பருத்தி |
மைவானி |
மை (=மென்மை) + வான் (=வெண்மை) + இ = மைவானி >>> மவனி >>> வமனி = மென்மையும் வெண்மையும் கொண்டது |
வமிசம் |
புல்லாங் குழல் |
வம்பியம் |
வம்பு (=மூங்கில்) + இயம் (=இசைக்கருவி) = வம்பியம் >>> வமிசம் = மூங்கிலில் செய்த இசைக்கருவி |
வமிசம் |
மூங்கில் |
வம்பியம் |
வம்பு (=வளைவு) + இயை + அம் = வம்பியம் >>> வமிசம் = வளைப்பதற்கு இசைவாக இருப்பது. |
வயம் |
வலிமை |
பை |
பை (=வலிமை) + அம் = பயம் >>> வயம். |
வயம் |
மிகுதி |
பையம் |
பை (=பெருகு) + அம் = பயம் >>> வயம் = பெருக்கம், மிகுதி |
வயம் |
வெற்றி |
பழம் |
பழு (=அனுகூலமாகு, வெல்) + அம் = பழம் >>> வயம் = வெற்றி |
வயம் |
பறவை |
பாயம் |
பாய் (=விரை, பற) + அம் = பாயம் >>> வயம் = பறப்பது. |
வயம் |
இடம், பக்கம் |
வாயம் |
வாய் (=இடம், பக்கம்) + அம் = வாயம் >>> வயம் |
வயம் |
மூலம் |
வாய் |
வாய் (=மூலம்) + அம் = வாயம் >>> வயம் |
வயம் |
நீர் |
பயம் |
பயம் (=நீர்) >>> வயம் |
வயம் |
இரும்பு |
மயம் |
மை (=கருநிறம், வலிமை) + அம் = மயம் >>> வயம் = வலிமை மிக்க கருநிறப் பொருள். |
வயம் |
குதிரை |
பாயம் |
பாய் (=விரைந்தோடு) + அம் = பாயம் >>> வயம் = விரைந்து ஓடுவது = குதிரை. |
வயம் |
ஆடு |
மையம் |
மை (=ஆடு) + அம் = மயம் >>> வயம் |
வயம் |
முயல் |
பாயம் |
பாய் (=வெண்மை, தாவி ஓடு) + அம் = பாயம் >>> வயம் = தாவி ஓடும் வெண்ணிற விலங்கு. |
வயமம் |
அத்திப் பழம் |
பயமம் |
பை (=எரி, நிறம், மிகு, செறி) + அம் (=உணவு) + அம் = பயமம் >>> வயமம் = தீயின் நிறத்தில் செறிந்திருக்கும் உணவு. |
வயசு |
வாழ்நாள் |
வாழயு |
வாழ் + ஐயம் (=காலம்) + உ = வாழயு >>> வயசு = வாழ்நாள் |
வயணம் |
வழிமுறை |
வாயணம் |
வாய் (=வழி) + அணம் = வாயணம் >>> வயணம் = வழிமுறை |
வயணம் |
நிலைமை |
வாயணம் |
வாய் (=அமை, நிலை) + அணம் = வாயணம் >>> வயணம் = நிலைமை. |
வயணம் |
விரிவு, பெருக்கம் |
பையணம் |
பை (=விரி, நீளு) + அணம் = பயணம் >>> வயணம் = விரிவு, பெருக்கம். |
வயணம், வயம் |
ஏற்றது |
வாயணம் |
வாய் (=ஏற்றதாகு) + அணம் = வாயணம் >>> வயணம் = ஏற்றது, பொருத்தமானது. |
வயணம் |
நேர்த்தி |
வாயணம் |
வாய் (=நேர்) + அணம் = வாயணம் >>> வயணம் = நேர்த்தி |
வயணம் |
காரணம் |
வாயணம் |
வாய் (=நிகழ், மூலம்) + அணம் = வாயணம் >>> வயணம் = நிகழ்வதற்கான மூலம் = காரணம் |
வயந்தம் |
வசந்தம் |
பையாத்தம் |
பை (=பசுமை, அழகு) + ஆதி (=தொடக்கம்) + அம் = பயாத்தம் >>> வயந்தம் >>> வசந்தம் = பசுமை அழகின் தொடக்கம். |
வயறு |
கொக்கி |
வாயாரு |
வாய் (=வளைவு) + ஆர் (=பொருந்து, கூர்மை) + உ = வாயாரு >>> வயறு = வளைவும் கூர்மையும் கொண்டு பொருந்தக் கூடியது. |
வயறு |
கயிறு |
வாயாரு |
வாய் (=ஏற்றதாகு) + ஆர் (=கட்டு) + உ = வாயாரு >>> வயறு = கட்டுவதற்கு ஏற்றது. |
வயனம் |
பேச்சு |
வாயணம் |
வாய் (=உறுப்பு, மொழி) + அணை (=பொருந்து) + அம் = வாயணம் >>> வயனம் = வாயில் பொருந்திய மொழி |
வயனர் |
பறவை உடலினர் |
வயாணர் |
வயம் (=பறவை) + ஆணம் (=உடல்) + அர் = வயாணர் >>> வயனர் = பறவை போன்ற உடலமைப்பு உடையவர். |
வயானம் |
பறவை |
வயம் |
வயம் (=பறவை) + அணம் = வயணம் >>> வயானம் |
வயிடூரியம் |
பூனைக் கண்போன்ற அரத்தினம் |
வயிறுறியம் |
வயம் (=கோடு) + இறை (=கண்) + உறை (=தங்கு, பொருந்து) + இயம் (=ஒளி, தன்மை) = வயிறுறியம் >>> வயிடூரியம் = கண்ணில் பொருந்திய ஒளிக்கோடு போன்ற தன்மை கொண்டது. |
கிருட்டினன் |
திருமால் |
குருட்டினன் |
குருடு (=இருள், கருமை) + இனம் (=குலம்) + அன் = குருட்டினன் >>> கிருட்டினன் = கருநிறங் கொண்ட குலத்தினன். |
விச்~ணு |
திருமால் |
மையினு |
மை (=கருமை) + இனம் (=குலம்) + உ = மையினு >>> வைசிணு >>> விச்~ணு = கருநிறங் கொண்ட குலத்தினன். |
வயிணவம் |
திருமாலியம் |
மயினவம் |
மையினு (=திருமால்) + ஆவு (=விரும்பு) + அம் = மயினவம் >>> வயிணவம் = திருமாலை வழிபடும் முறை. |
வயித்தியம், வைத்தியம் |
நோயை அழித்தல் |
வயிற்றியம் |
வயா (=நோய்) + இறு (=அழி) + இயம் = வயிற்றியம் >>> வயித்தியம் >>> வைத்தியம் = நோயை அழிக்கும் முறை. |
வயிதா, வாய்தா |
வாய்ப்பு கொடுத்தல் |
வாய்தா |
வாய் (=வாய்ப்பு) + தா (=கொடு) = வாய்தா >>> வயிதா = வாய்ப்பு கொடுத்தல். |
வயிந்தவம் |
மாயை |
மைத்தவம் |
மை (=மயக்கம்) + தவம் (=நிலை) = மயித்தவம் >>> வயிந்தவம் = மயக்கம் உண்டாக்கும் நிலை. |
வயிந்தவம் |
குதிரை |
பாய்த்தாவம் |
பாய் (=விரை) + தா (=தாவு, வலிமை) + அம் = பாய்த்தாவம் >>> வயிந்தவம் = தாவி விரையும் வலிய விலங்கு. |
வயிரம் |
மின்னல் |
மயீரம் |
மை (=வானம்) + ஈர் (=அறு, பிள) + அம் (=ஒளி) = மயீரம் >>> வயிரம் = வானத்தைப் பிளக்கும் ஒளி. |
வயிரம், வைரம் |
அரத்தினப் பொருள் |
பயீரம் |
பை (=வலிமை, மிகு, அழகு) + ஈர் (=அறு, பிள) + அம் (=ஒளி) = பயீரம் >>> வயிரம் >>> வைரம் = அறுக்கும் வலிமை மிக்க அழகிய ஒளிரும் பொருள். |
வயிரம் |
வலிமை, வலிமையானது |
பயிரம் |
பை (=வலிமை) + இரு (=பொருந்து) + அம் = பயிரம் >>> வயிரம் = வலிமை பொருந்தியது. |
வயிரம் |
கூர்மை, கூர்மையானது |
வயிரம் |
வை (=கூர்மை) + இரு (=பொருந்து) + அம் = வயிரம் = கூர்மை பொருந்தியது |
வயிரம் |
ஊதுகொம்பு |
வயிர் |
வயிர் (=ஊதுகொம்பு) + அம் = வயிரம் |
வயிரம் |
சினம் |
வயிரம் |
வயிர் (=சின) + அம் = வயிரம் = சினம் |
வயிரம், வயிரியம் |
கம்பளித் துணி |
மயிரம், மயிரியம் |
மயிர் + இயம் / அம் = மயிரியம் / மயிரம் >>> வயிரியம் / வயிரம் = மயிரால் ஆன துணி. |
வயிரம் |
தண்டாயுதம் |
பயிறம் |
பை (=வலிமை) + இறு (=தாக்கு, அழி) + அம் = பயிறம் >>> வயிரம் = தாக்கி அழிக்கும் வலிமையான பொருள். |
வயிருவம், வயிரவம் |
அச்சம் தரும் வடிவம் |
பயுருவம் |
பை (=அஞ்சு) + உருவம் = பயுருவம் >>> வயிருவம் >>> வயிரவம் = அஞ்சத்தக்க உருவம் கொண்டது. |
வயிராக்கியம், வைராக்கியம் |
வலிமையான எண்ணம் |
வயிராக்கியம் |
வயிரம் (=வலிமை) + ஆக்கம் (=அறிவு, எண்ணம்) + இயம் = வயிராக்கியம் >>> வைராக்கியம் = வலிமையான எண்ணம். |
வயிராகம், வைராகம் |
பற்றின்மை |
வயிறகம் |
வயா (=ஆசை, விருப்பம்) + இறு (=அழி, நீக்கு) + அகம் (=உள்ளம்) = வயிறகம் >>> வயிராகம் = உள்ளத்தில் ஆசைகளை அழித்த நிலை. |
வயிராகம், வைராகம் |
பிடிவாதம், ஊக்கம் |
வயிராகம் |
வயிரம் (=வலிமை) + அகம் (=அறிவு, எண்ணம்) = வயிராகம் = வலிமையான எண்ணம் = ஊக்கம், பிடிவாதம் |
வயிரி, வைரி |
எதிரி, பகை |
வாழிறி |
வாழ் + இறு (=அழி, கெடு) + இ = வாழிறி >>> வயிரி >>> வைரி = வாழ்வைக் கெடுப்பது / அழிப்பது. |
வயிலத்தி |
பாதத்தின் அடி |
வாயிலத்தி |
வாயில் (=வழி) + அத்து (=பொருந்து) + இ = வாயிலத்தி >>> வயிலத்தி = வழியில் பொருந்துவது = பாதத்தின் அடிப்பகுதி |
வயினம் |
பறவை |
பாயினம் |
பாய் (=விரை) + இனம் = பாயினம் >>> வயினம் = விரைந்து செல்லும் இனம். |
வயினன் |
கருடன் |
பயினன் |
பை (=சினம், வலிமை) + இனை (=வருத்து, கொல்) + அன் = பயினன் >>> வயினன் = வருத்திக் கொல்லும் சினமும் வலிமையும் மிக்க பறவை. |
வயோதிகம் |
வாழ்ந்து கழித்துக் கடந்தநிலை |
வாழுந்திகம் |
வாழ் + உந்து (=தள்ளு, கழி) + இக (=கட) + அம் = வாழுந்திகம் >>> வயுத்திகம் >>> வயோதிகம் = வாழ்ந்து கழித்துக் கடந்த நிலை. |
வருக்கம்,. வர்க்கம் |
பெருக்கம், கூட்டம், இனம் |
பருக்கம் |
பருக்கு (=பெருக்கு) + அம் = பருக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = பெருக்கம், கூட்டம், இனம். |
வருக்கம், வர்க்கம் |
பேய், பிசாசு |
மரிக்கம் |
மரி (=சாவு, இற) + இகம் (=உடல்) = மரிக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = இறந்த உடலைக் கொண்டது |
வருக்கம், வர்க்கம் |
கொல்லும் வடிநீர் |
வரிக்கம் |
வரி (=வடி) + இகு (=கொல்) + அம் (=நீர்) = வரிக்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = கொல்கின்ற வடிநீர் = எருக்கஞ்சாறு |
வர்க்கம் |
தீ |
பருங்கம் |
பருங்கு (=அழி, இல்லாதுசெய்) + அம் (=நீர்) = பருங்கம் >>> வருக்கம் >>> வர்க்கம் = நீரை இல்லாது செய்வது. |
வர்க்கு |
பேரேடு |
வரிங்கு |
வரி (=எழுது) + இங்கு (=தங்கு, பொருந்து) = வரிங்கு >>> வர்க்கு = எழுத்துக்கள் பொருந்தியது = பேரேடு. |
வர்க்கு |
கஞ்சி |
பருக்கு |
பருகு (=குடி) >>> பருக்கு >>> வர்க்கு = குடிக்கும் உணவு. |
வர்ச்சம், வர்ச்சனம், வர்ச்சனீயம் |
அனுபவித்தலைக் கைவிடுதல் |
மறுய்யம் |
மற (=கைவிடு) + உய் (=அனுபவி) + அம் = மறுய்யம் >>> வருச்சம் >>> வர்ச்சம் = அனுபவித்தலைக் கைவிடுதல். |
வர்ச்சி |
கைவிடு |
வர்ச்சி |
வர்ச்சம் (=கைவிடல்) >>> வர்ச்சி = கைவிடு |
வர்ச்சியம் |
விலக்கத்தக்கது |
வர்ச்சியம் |
வர்ச்சி (=கைவிடு) + இயம் = வர்ச்சியம் = கைவிடத்தக்கது |
வர்ணகம் |
சந்தனம் |
மண்ணாகம் |
மண் (=பூசு, சேறு, குழைவு) + ஆகம் (=மார்பு) = மண்ணாகம் >>> வர்ணகம் = மார்பில் பூசப்படும் குழைபொருள். |
வர்ணம் |
நிறம் |
வண்ணம் |
வண்ணம் (=நிறம்) >>> வர்ணம் |
வர்ணம் |
கூட்டம், இனம் |
மண்ணம் |
மண (=கூடு) + அம் = மண்ணம் >>> வர்ணம் = கூட்டம் |
வர்ணம் |
ஒலி |
பாணம் |
பாணி (=ஒலி) + அம் = பாணம் >>> வண்ணம் >>> வர்ணம் |
வர்ணம் |
எழுத்து |
வண்ணம் |
வண்ணம் (=எழுத்து) >>> வர்ணம் |
வர்ணம் |
குணம் |
மாணம் |
மாண் (=பண்பு) + அம் = மாணம் >>> வண்ணம் >>> வர்ணம் |
வர்ணனை, வருணனை |
விரிவான பேச்சு |
பண்ணானை |
பணி (=பேச்சு) + ஆன் (=விரி) + ஐ = பண்ணானை >>> வண்ணனை >>> வர்ணனை = விரிவான பேச்சு |
வர்ணி, வருணி |
விரிவாகப் பேசு |
வண்ணி |
வர்ணனை (=விரிவான பேச்சு) >>> வர்ணி >>> வருணி = விரிவாகப் பேசு |
வர்ணியம், வருணியம் |
உவமேயம் |
மானியம் |
மான் (=ஒப்பு) + இயை (=பொருந்து) + அம் = மானியம் >>> வண்ணியம் >>> வர்ணியம் = ஒப்பாகப் பொருந்துவது. |
வர்த்தகம் |
பொருட்களை விற்பனைக்கு அனுப்புதல் |
மாறுந்தகம் |
மாறு (=விற்பனை) + உந்து (=அனுப்பு, மிகு) + அகம் (=பொருள்) = மாறுந்தகம் >>> வருத்தகம் >>> வர்த்தகம் = மிகுதியான பொருட்களை விற்பனைக்கு அனுப்புதல். |
வர்த்தமானம் |
நிகழ்காலம் |
பரித்தவணம் |
பரி (=ஓடு, நட) + தவணை (=காலம்) + அம் = பரித்தவணம் >>> வருத்தமானம் >>> வர்த்தமானம் = நடப்புக் காலம் |
வர்த்தனம் |
ஊன்றுகை, நிலைநிறுத்துகை |
மருத்தனம் |
மருவு / மரு (=பதி, ஊன்று) + தன்மை + அம் = மருத்தனம் >>> வர்த்தனம் = ஊன்றுகை, நிலைநாட்டுகை. |
வர்த்தனம், வர்த்தனை |
பெருக்கம், வளர்ச்சி |
பருத்தனம் |
பரு (=பெருகு, வளர்) + தன்மை + அம் = பருத்தனம் >>> வர்த்தனம் = பெருக்கம், வளர்ச்சி. |
வர்த்தனை |
ஏற்ற இறக்கமாகப் பாடுதல் |
வார்த்தணை |
வார் (=நீட்டு, உயர்த்து) + தணி (=குறை) + ஐ = வார்த்தணை >>> வர்த்தனை = குரலை உயர்த்தி நீட்டியும் குறைத்தும் பாடுதல். |
வர்த்தனை |
தானமாகக் கொடுக்கப்பட்டது |
வார்த்தானை |
வார் + தானம் + ஐ = வார்த்தானை >>> வர்த்தனை = தானம் வார்க்கப் பட்டது. |
வர்த்தனை |
செல்வப் பெருக்கு |
பருத்தனை |
பரு (=பெருகு) + தனம் (=செல்வம்) + ஐ = பருத்தனை >>> வர்த்தனை = செல்வப் பெருக்கு. |
வர்த்தி |
பெருகு |
வர்த்தி |
வர்த்தனம் (=பெருக்கம்) >>> வர்த்தி = பெருக்கு |
வர்த்தி |
நிலைப்படு, தங்கு |
வர்த்தி |
வர்த்தனம் (=நிலைநிற்கை) >>> வர்த்தி = நிலையாகு, தங்கு |
வர்த்தி |
ஆலாபி |
வர்த்தி |
வர்த்தனை (=ஆலாபனை) >>> வர்த்தி = ஆலாபி |
வர்த்தி |
தானம் செய் |
வர்த்தி |
வர்த்தனை (=தானக்கொடை) >>> வர்த்தி = தானம் கொடு |
வர்த்துலம், வர்த்துளம் |
வட்டம், வட்டமானது, உருண்டையானது |
பருத்துளம் |
பருதி (=வட்டம், உருண்டை) + உள் + அம் = பருத்துளம் >>> வர்த்துளம் >>> வர்த்துலம் = வட்டமாக / உருண்டையாக இருப்பது = வட்டம், வட்டமானது, உருண்டையானது |
வர்மம் |
மறைவான பகை, உட்பகை |
மாறுமம் |
மாறு (=மறை, பகை) + மம் = மாறுமம் >>> மர்மம் >>> வர்மம் = மறைவான பகை, உட்பகை |
வர்மன், வர்மி |
உட்பகையாளன் |
வர்மன், வர்மி |
வர்மம் (=உட்பகை) >>> வர்மன், வர்மி = உட்பகையாளன் |
வர்மி |
பகை, எதிர் |
வர்மி |
வர்மம் (=உட்பகை) >>> வர்மி = பகை, எதிர் |
வர்சம், வருசம் |
மழைநீர் |
மாரீயம் |
மாரி (=மேகம்) + ஈ (=கொடு) + அம் (=நீர்) = மாரீயம் >>> வரிசம் >>> வருசம் >>> வர்சம் = மேகம் கொடுக்கும் நீர் |
வர்சம், வருசம் |
ஆண்டு |
மரூழம் |
மரை (=சுற்று) + ஊழி (=காலம்) + அம் = மரூழம் >>> வருசம் >>> வர்சம் = காலச்சுற்று. |
வர்சி |
பொழி, பெய் |
வர்சி |
வருசம் (=மழை) >>> வர்சி = மழையைப் போல பொழி |
வரகதி |
மோட்டம் |
பரகதி |
பரம் (=மேல்) + கதி (=நிலை) = பரகதி >>> வரகதி = மேலான நிலை = மோட்டம். |
வரகாத்திரம் |
யானைத்தலை, பெரும்புள்ளி |
பரகாத்திரம் |
பரம் (=தலை) + காத்திரம் (=பெருமை) = பரகாத்திரம் >>> வரகாத்திரம் = பெரிய தலை = யானைத்தலை, பெரும்புள்ளி |
வரகுணம் |
உயர்ந்த குணம் |
பரகுணம் |
பரம் (=மேல்) + குணம் = பரகுணம் >>> வரகுணம் = மேலான குணம் |
வரடம் |
முல்லை முகை |
மரடம் |
மரு (=நறுமணம்) + அடை (=மொட்டு) + அம் (=அழகு, வெண்மை) = மரடம் >>> வரடம் = நறுமணம் கொண்ட வெண்ணிற மொட்டு = முல்லை மொக்கு |
வரடம் |
அன்னப் பறவை |
பறடம் |
பற + அடை (=அடைக்கலம்) + அம் (=நீர், வெண்மை) = பறடம் >>> வரடம் = நீரை அடைக்கலமாய்க் கொண்ட வெண்ணிறப் பறவை = அன்னம் |
வரடை |
தோல்வார் |
வாரறை |
வார் (=நீளு, தோல்) + அறு + ஐ = வாரறை >>> வரடை = நீளமாக அறுக்கப்பட்ட தோல். |
வரண்டகம் |
பெரிய உருண்டை |
பரண்டகம் |
பரு (=பெரிய) + அண்டம் (=முட்டை) + அகம் (=பொருள்) = பரண்டகம் >>> வரண்டகம் = பெரிய முட்டையான பொருள் |
வரண்டகம் |
சுவர் |
மறட்டகம் |
மறு (=தடு) + அடை + அகம் (=இடம்) = மறட்டகம் >>> வரண்டகம் = இடத்தைத் தடுத்து அடைப்பது = சுவர். |
வரண்டகம் |
முகப்பரு |
பரட்டாகம் |
பரு + அடை + ஆகம் (=முகம்) = பரட்டாகம் >>> வரண்டகம் = முகத்தில் அடைத்திருக்கும் பருக்கள். |
வரண்டகம் |
யானையின் மேல் இருக்கை |
பரண்ணாகம் |
பரம் (=மேல்) + அணை (=இருக்கை) + ஆகம் (=உடல்) = பரண்ணாகம் >>> வரண்டகம் = உடலின் மேலான இருக்கை |
வரண்டம் |
நீண்ட பாதை |
வாராற்றம் |
வார் (=நீளு) + ஆறு (=வழி) + அம் = வாராற்றம் >>> வரட்டம் >>> வரண்டம் = நீண்ட பாதை. |
வரண்டம் |
தூண்டில் கயிறு |
வாரட்டம் |
வார் (=நீளு, கயிறு) + அடை (=புகுத்து, உட்செலுத்து) + அம் (=நீர்) = வாரட்டம் >>> வரண்டம் = நீரினுள் செலுத்தப்படும் நீளமான கயிறு. |
வரண்டம் |
புற் குவியல் |
வரட்டம் |
வரி (=குவி) + அடை (=இலை, புல்) + அம் = வரட்டம் >>> வரண்டம் = புற் குவியல். |
வரணம் |
தெரிவுசெய்தல், நியமித்தல் |
வரணம் |
வரை (=வரையறு, தேர்ந்தெடு) + அணம் = வரணம் = தேர்ந்தெடுத்தல், நியமித்தல். |
வரணம் |
சூழ்தல், மறைப்பு, தடுப்புச்சுவர் |
மறணம் |
மறை (=சூழ், தடு) + அணம் = மறணம் >>> வரணம் = சூழ்தல், தடுப்புச்சுவர், மறைப்பு |
வரணம் |
சட்டை |
பரணம் |
பரி (=அணி) + அணம் = பரணம் >>> வரணம் = அணியப்படுவது = சட்டை. |
வரணம் |
ஒட்டகம் |
வாராணம் |
வார் (=நீளு) + ஆணம் (=உடல்) = வாராணம் >>> வரணம் = நீண்ட உடலைக் கொண்டது. |
வரணம் |
முலைப்பால் |
மாரன்னம் |
மார் (=முலை) + அன்னம் (=உணவு) = மாரன்னம் >>> வரணம் = முலையில் இருந்து பெறும் உணவு. |