சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
கற்கசம், KARHKACAM |
கடினம், HARDSHIP |
கர்க்கசம், கற்காழம் |
(1) கர்க்கசம் (=கடினம்) >>> கற்கசம். (2) கல் + காழ் (=வலிமை) + அம் = கற்காழம் >>> கற்கசம் = கல்போல வலிமையானது = கடினம். |
கற்கசம், KARHKACAM |
கஞ்சத்தனம், MISERLINESS |
கற்கயம் |
கால் (=வெளிப்படுத்து, கொடு) + கை (=சிறுமை) + அம் = கற்கயம் >>> கற்கசம் = கையால் சிறிதே கொடுத்தல். |
கற்கம், KARHKAM |
நீர்கூட்டிய மருந்து, WATER ADDEDMEDICINE |
கல்கம் |
கல்கம் (=நீர் கூட்டிய மருந்து) >>> கற்கம் |
கற்கி, KARHKI, கல்கி, KALKI |
குதிரை, HORSE |
கலிகி |
கலி (=விரைவு) + இகு (=ஓட்டு) + இ = கலிகி >>> கல்கி >>> கற்கி = விரைவாக ஓட்டப்படுவது = குதிரை |
கற்பகம், KARHPAKAM, கல்பகம், KALPAKAM |
பனை, PALMYRA, தென்னை, COCONUT TREE |
கலமகம், கலமாக்கம் |
(1) கலி (=செருக்கு, மகிழ், உயர், வளர்) + அம் (=வெண்மை, நீர்) + அகம் (=மரம்) = கலமகம் >>> கலபகம் >>> கல்பகம் >>> கற்பகம் = செருக்கி மகிழும் வெண்ணீரைக் கொண்ட உயரமாக வளர்ந்த மரம் = பனை, தென்னை. (2) கலம் (=பாத்திரம்) + ஆக்கம் (=ஒப்புமை, திரட்சி, படைப்பு, உணவு, நீர், மிகுதி) = கலமாக்கம் >>> கல்பகம் >>> கற்பகம் = நீர்மிக்க பாத்திரம் போன்ற திரண்ட உணவைப் படைப்பது. |
கற்பணம், KARHPANHAM |
கைவேல், JAVELINE |
கலூவாணம் |
கால் (=தண்டு) + ஊ (=உயரம், மேல்) + ஆணி (=கூரிரும்பு) + அம் = கலூவாணம் >>> கல்பணம் >>> கற்பணம் = மேலே கூரிரும்பு கொண்ட தண்டு = கைவேல். |
கற்பம், கல்பம், KARHPAM, KALPAM |
நீண்ட காலம், LONGEVITY |
கல்பம் |
கால் (=காலம்) + பா (=பரவு, நீளு) + அம் = கல்பம் >>> கற்பம் = நீண்ட காலம். |
கற்பம், கல்பம், KARHPAM, KALPAM |
தங்குமிடம், ABODE |
கலமம் |
கால் (=இடம்) + அமை (=தங்கு, உண்டாக்கு) + அம் = கலமம் >>> கலபம் >>> கல்பம் >>> கற்பம் = தங்குவதற்காக உண்டாக்கப்பட்ட இடம். |
கற்பனை, கல்பனை, KARHPANAI, KALPANAI |
சபதம், VOW, தீர்மானம், DETERMINATION |
கற்பணை, கற்பாணை |
(1) கன் (=உறுதி) + பணி (=சொல்) + ஐ = கற்பணை >>> கற்பனை = உறுதிச்சொல் (2) கற்பு (=கருத்து) + ஆணம் (=உறுதி) + ஐ = கற்பாணை >>> கற்பனை = உறுதிகருத்து. |
கற்பனை, கல்பனை, KARHPANAI, KALPANAI |
கட்டளை, COMMAND |
கலிபணை, கற்பணை |
(1) கலி (=செலுத்து) + பணி + ஐ = கலிபணை >>> கல்பனை >>> கற்பனை = பணியுமாறு செலுத்தப்படுவது. (2) கற்பு (=ஒழுக்கம், கட்டுப்பாடு) + அணி (=சொல்) + ஐ = கற்பணை >>> கற்பனை = கட்டுப்படுத்தும் சொல் |
கற்பனை, கல்பனை, KARHPANAI, KALPANAI |
செயல்முறை, ACTION PLAN |
கல்பணை, கற்பணை |
(1) கால் (=வழி) + பணி (=செயல்) + ஐ = கல்பணை >>> கல்பனை >>> கற்பனை = செயலுக்கான வழி. (2) கற்பு (=வேலை) + அணை (=முடி, உண்டாக்கு) = கற்பணை >>> கற்பனை = வேலையை முடிக்க உண்டாக்கியது. |
கற்பனை, கல்பனை, KARHPANAI, KALPANAI |
பொய், FABRICATION |
கல்பணை, கற்பணை |
(1) கால் (=வழி, ஓட்டை) + பணி (=சொல்) + ஐ = கல்பணை >>> கல்பனை >>> கற்பனை = ஓட்டைச்சொல், பொய். (2) கற்பு (=கல்வி) + அணை (=அழி, இல்லாகு) = கற்பணை >>> கற்பனை = இல்லாத கல்வி = பொய். |
கற்பிதம், KARHPITHAM |
பொய், FABRICATION |
கற்பிழுதம் |
கற்பு (=கல்வி) + இழுதை (=பொய்) + அம் = கற்பிழுதம் = கற்பியுதம் >>> கற்பிதம் = பொய்க்கல்வி. |
கற்பூரம், KARHPOORAM |
கற்பூரம், CAMPHOR |
கற்புரம் |
கால் (=காற்று) + புரை (=குறை, அழிவு, இலேசு) + அம் (=வெண்மை) = கற்புரம் >>> கற்பூரம் = காற்றில் குறைந்து அழியும் இலேசான வெண்பொருள். |
கறண்டிகை, KARHANDIKAI |
சுண்ணாம்பு, LIME |
கரட்டிகை |
காரம் + அடை (=வெற்றிலை, சேர்) + இகம் (=பொருள்) + ஐ = கரட்டிகை >>> கறண்டிகை = வெற்றிலையுடன் சேர்க்கப்படும் காரமான பொருள் = சுண்ணாம்பு. |
கறம், KARHAM |
கொடுமை, SEVERITY |
கரம் |
கருமை (=கொடுமை) + அம் = கரம் >>> கறம் |
கறல், KARHAL |
விறகு, FIREWOOD |
கறள் |
கற (=உலர், வற்று) + அள் (=தண்டு) = கறள் >>> கறல் = உலர்ந்து வற்றிய தண்டு = விறகு |
கறவு, KARHAVU, கறை, KARHAI |
கப்பம், TRIBUTE |
கறமு, கரம் |
(1) கற (=கவர்) + மா (=மக்கள், செல்வம், பெருமை, மனிதன்) + உ = கறமு >>> கறவு = பெரிய மனிதன் மக்களிடம் கவரும் செல்வம் = கப்பம். (2) கரம் (=கப்பம்) + உ = கரமு >>> கறவு |
கறாமத்து, KARHAAMATHTHU |
தாராளம், GENEROSITY |
கரமாற்று |
கரம் (=மிகுதி) + ஆற்று (=உதவு, கொடு) = கரமாற்று >>> கறாமத்து = மிகுதியாகக் கொடுத்தல். |
கறாளி, KARHAALHI |
அடங்காமை, STUBBORNESS |
கரலி |
கர (=ஒடுங்கு, அடங்கு) + அல் (=இன்மை) + இ = கரலி >>> கறாளி = அடக்கமின்மை, பிடிவாதம். |
கறி, KARHI |
காலம், TIME |
காறு |
காறு (=காலம்) + இ = கறி |
கன்மம், KANMAM |
வேலை, WORK |
கன் |
கன் (=வேலை) + மம் = கன்மம் |
கன்மி, KANMI |
தொழிலாளி, WORKER |
கன்மி |
கன்மம் (=வேலை) + இ = கன்மி = வேலைக்காரன் |
கன்மிட்டன், KANMITTAN |
நிபுணன், EXPERT |
கன்வீற்றன் |
கன் (=வேலை) + வீறு (=வலிமை) + அன் = கன்வீற்றன் >>> கன்மிட்டன் = வேலையில் வல்லவன் |
கன்னம், KANNAM |
காது, EAR |
கன்னம் |
கனை (=ஒலி, பொருந்து) + அம் = கன்னம் = ஒலி பொருந்துவது = காது. |
கன்னம், KANNAM |
கதுப்பு, CHEEK |
கன்னம் |
கன்னை / கனை (=ஒலி, பொருந்து, பக்கம்) + அம் = கன்னம் = ஒலி பொருந்துவதன் பக்கமாவது = கதுப்பு. |
கன்னம், KANNAM |
ஓட்டை, HOLE |
கான் |
கான் (=வாய்க்கால், ஓட்டை) + அம் = கன்னம் = ஓட்டை |
கன்னம், KANNAM |
பெருமை, GREATNESS |
கனை |
கனை (=மிகுதி, பெருமை) + அம் = கன்னம் = பெருமை |
கன்னல், KANNAL |
இனிப்புப் பாகு, MOLASSES |
கன்னள் |
கனி (=இனிமை) + அள் (=செறிவு) = கன்னள் >>> கன்னல் = செறிவுடைய இனிப்பு = இனிப்புப் பாகு |
கன்னா, KANNAA |
இசைகருவி, MUSICAL INSTRUMENT |
கன்னா |
கனை (=ஒலி, இசை) + ஆ = கன்னா = இசைப்பது. |
கன்னி, KANNI, கன்னிகை, KANNIKAI |
இளம்பெண், MAIDEN |
கன்றி |
கன்று (=இளையது) + இ = கன்றி >>> கன்னி = இளைய பெண். ஒ.நோ: (1) பன்றி >>> பன்னி. (2) கன்று >>> கன்னு. (3) ஒன்று >>> ஒன்னு. |
கன்னி, KANNI |
இளமை, JUVENILITY, புதுமை, FRESHNESS |
கன்றி |
கன்று (=இளமை) + இ = கன்றி >>> கன்னி = இளமை, புதுமை.. ஒ.நோ: (1) பன்றி >>> பன்னி. (2) கன்று >>> கன்னு. (3) ஒன்று >>> ஒன்னு. |
கன்னி, KANNI |
கற்றாழை, ALOE VERA |
கன்றீ |
கன்று (=இளமை) + ஈ (=தா) = கன்றீ >>> கன்னி = இளமை தருவது = கற்றாழை. ஒ.நோ: (1) பன்றி >>> பன்னி. (2) கன்று >>> கன்னு. (3) ஒன்று >>> ஒன்னு. |
கன்னிகை, KANNIKAI |
பூமொட்டு, பொகுட்டு, BUD, PERICARP |
கண்ணிகை |
கண்ணி (=மலர்) + இகு (=திரள், குவி) + ஐ = கண்ணிகை >>> கன்னிகை = குவிந்த மலர் = பூமொட்டு, பொகுட்டு |
கனகதம், KANAKATHAM |
ஒட்டகம், CAMEL |
கனகத்தம் |
கானம் (=ஊர்தி) + அகை (=செலுத்து) + அத்தம் (=பாலைவனம்) = கனகத்தம் >>> கனகதம் = பாலைவனத்தில் செலுத்தப்படும் ஊர்தி = ஒட்டகம் |
கனகம், KANAKAM |
தங்கம், GOLD |
கணகம் |
கண் (=உணர்த்துவது, உடல், பொருள்) + அகை (=எரி, ஒளிர், ஈர், செழி) + அம் = கணகம் >>> கனகம் = கண்களை ஈர்க்கும் ஒளியுடையதும் செழிப்பை உணர்த்துவதுமான பொருள் = தங்கம். |
கனகம், KANAKAM |
மீன்கொத்தி, KING FISHER |
கணாக்கம் |
கண் (=துளை) + ஆக்கம் (=படைப்பு, உயிரி, நீர், உணவு) = கணாக்கம் >>> கனகம் = நீரில் உள்ள உயிரியைத் துளைத்து உண்பது = மீன்கொத்தி |
கனகம், KANAKAM |
மிளகு, PEPPER |
கணகம் |
கண் (=விதை) + அகை (=எரி) + அம் (=உணவு) = கணகம் >>> கனகம் = எரிச்சல்தரும் விதை உணவு = மிளகு |
கனகம், KANAKAM |
நெல்லிக்காய், GOOSE BERRY |
கணகம் |
கண் (=உறுப்பு, பொருந்து, ஒப்பு) + அகை (=எரி, ஒளிர்) + அம் (=இனிமை, நீர், உணவு) = கணகம் >>> கனகம் = கண் ஒப்ப ஒளிரும் இனிய நீர்பொருந்திய உணவு = நெல்லி. |
கனகம், KANAKAM |
சந்தனம், SANDAL |
கணகம் |
கண் (=உடல், மார்பு, பொருந்து) + அகை (=பரவு, எரி, ஒளிர்) + அம் (=அழகு) = கணகம் >>> கனகம் = மார்பில் பரவிப் பொருந்தி அழகாக ஒளிர்வது = சந்தனம். |
கனதி, KANATHI |
பருமை, THICKNESS |
கணத்தி |
கண் (=பெருமை) + அத்து (=பொருந்து) + இ = கணத்தி >>> கனதி = பெருமை பொருந்தியது = பருமன் |
கனதி, KANATHI |
பாரம், HEAVINESS |
கணாற்றி |
கண் (=பெருமை) + ஆற்று (=சும) + இ = கணாற்றி >>> கனதி = பெரிதாகச் சுமக்கப்படுவது = பாரம். |
கனதி, KANATHI |
செருக்கு, PRIDE |
கணதி |
கண் (=கருது, பெருமை) + அதி (=மிகுதி) = கணதி >>> கனதி = மிகவும் பெருமையாகக் கருதுதல். |
கனதை, KANATHAI |
கௌரவம், DIGNITY |
கணறி |
கண் (=பெருமை) + அறம் (=அறிவு, எண்ணம்) + இ = கணறி >>> கனதி = பெருமையாக எண்ணப்படுவது. |
கனப்பு, KANAPPU |
பருமை, THICKNESS |
கணமு |
கண் (=பெருமை) + அமை (=பொருந்து) + உ = கணமு >>> கனப்பு = பெருமை பொருந்தியது = பருமன் |
கனப்பு, KANAPPU |
பாரம், HEAVINESS |
கணமு |
கண் (=பெருமை) + அமை (=பொறு, சும) + உ = கணமு >>> கனப்பு = பெரிதாகச் சுமக்கப்படுவது = பாரம். |
கனப்பு, KANAPPU |
செருக்கு, PRIDE |
கணமு |
கண் (=கருது, பெருமை) + அமை (=நிறை, மிகு) + உ = கணமு >>> கனப்பு = மிகவும் பெருமையாகக் கருதுதல். |
கனப்பு, KANAPPU |
கொழுப்பு, FAT |
கணமூ |
கண் (=தோற்றம், பொருந்து, ஒப்பு, நூல்) + அம் (=வெண்மை) + ஊ (=தசை) = கணமூ >>> கனப்பு = தசையில் வெண்ணூல் ஒப்பத் தோன்றுவது = கொழுப்பு |
கனம், KANAM |
பருமை, THICKNESS |
கணம் |
கண் (=பெருமை) + அம் (=பொருந்து) = கணம் >>> கனம் = பெருமை பொருந்தியது = பருமன் |
கனம், KANAM |
பாரம், HEAVINESS |
கணம் |
கண் (=பெருமை) + அம் (=பொறு, சும) = கணம் >>> கனம் = பெரிதாகச் சுமக்கப்படுவது = பாரம். |
கனம், KANAM |
செருக்கு, PRIDE |
கணம் |
கண் (=கருது, பெருமை) + அம் (=நிறை, மிகு) = கணம் >>> கனம் = மிகவும் பெருமையாகக் கருதுதல். |
கனம், KANAM |
கூட்டம், CROWD, செறிவு, DENSITY |
கனம் |
கனை (=செறி, திரள், கூடு, மிகு) + அம் = கனம் = செறிவு, திரட்சி, கூட்டம், மிகுதி |
கனம், KANAM |
உருண்டை, SPHERE, பந்து, BALL |
கனம் |
கனை (=திரள், உருண்டையாகு) + அம் = கனம் = திரட்சி, உருண்டை |
கனம், KANAM |
மேகம், CLOUD |
கனம் |
கனை (=திரள், இருளு, ஒலி, நிறை) + அம் (=நீர்) = கனம் = திரண்டு இருள்செய்து ஒலிக்கும் நீர் நிறைந்தது. |
கனம், KANAM |
தங்கம், GOLD |
கணம் |
கண் (=பெருமை, உடல், பொருள், உணர்த்துவது) + அம் (=அழகு, ஒளி, பொருந்து) = கணம் >>> கனம் = அழகிய ஒளி பொருந்திய பெருமை உணர்த்தும் பொருள் = தங்கம். |
கனவிரதம், KANAVIRATHAM |
மழை, நீர், RAIN, WATER |
கனவிரதம் |
கனம் (=மேகம்) + இரத்தம் (=குருதி) = கனவிரத்தம் >>> கனவிரதம் = மேகத்தின் இரத்தம் = மழை, நீர். |
கனருசி, KANARUCI |
மின்னல், LIGHTNING |
கனாரூழி |
கனம் (=மேகம்) + ஆர் (=பொருந்து, கூடு, ஒலி, பெறு) + ஊழ் (=ஒளி) + இ = கனாரூழி >>> கனருசி = மேகங்கள் கூடி ஒலிக்கும்போது பெறப்படும் ஒளி = மின்னல். |
கனவட்டம், KANAVATTAM |
குதிரை, HORSE |
கனைவட்டம் |
கனை (=விரை, ஓடு) + வட்டம் = கனைவட்டம் >>> கனவட்டம் = வட்டமாக விரைந்து ஓடுவது = குதிரை |
கனி, KANI |
துளையிடு, DRILL |
கனி |
கான் (=வாய்க்கால், துளை) + இ = கனி = துளையிடு. |
கனி, KANI |
சுரங்கம், MINES |
கனி |
கான் (=வாய்க்கால், துளை) + இ = கனி = துளைத்தது. |
கனிட்டன், KANITTAN, கனிச்~டன், KANISHTAN |
தம்பி, கடைக்குட்டி, YOUNGER BROTHER, LAST SON |
கன்னுற்றன் |
கன்னி (=இளையது) + உறு (=தொடங்கு, தோன்று) + அன் = கன்னுற்றன் >>> கனிட்டன் = இளையதாகத் தோன்றியவன் = தம்பி, கடைக்குட்டி ஆண் |
கனிட்டை, KANISHTAI, கனிட்டிகை, KANITTAI, கனிச்~டை, KANITTIKAI |
தங்கை, கடைக்குட்டி, YOUNGER SISTER, LAST DAUGHTER |
கன்னுற்றை |
கன்னி (=இளையது) + உறு (=தொடங்கு, தோன்று) + ஐ = கன்னுற்றை >>> கனிட்டை = இளையதாகத் தோன்றியவள் = தங்கை, கடைக்குட்டிப் பெண். |
கனிட்டை, KANITTAI, கனிச்~டை, KANISHTAI |
சிறிய கைவிரல், LITTLE FINGER |
கனிற்றை |
கன் (=சிறுமை) + இறை (=கை, விரல்) + ஐ = கனிற்றை >>> கனிட்டை = கையின் சிறிய விரல். |
கனோபலம், KANOAPALAM |
ஆலங்கட்டி, HAILSTONE |
கனோம்பாலம் |
கன் (=கல்) + ஓம்பு (=உண்டாகு) + ஆலி (=மழை) + அம் (=நீர், வெண்மை) = கனோம்பாலம் >>> கனோபலம் = மழையின்போது உண்டாகும் வெண்ணிற நீர்க்கல். |
கச்சி^யா, QAZIYA |
சண்டை, QUARREL |
கழிழா |
காழ் (=பகை, வெறுப்பு) + இழை (=பொருந்து, சொல்) + ஆ = கழிழா >>> கசியா >>> கச்சி^யா = பகை / வெறுப்பு பொருந்திய சொல் = சண்டை. |
காகளம், KAAKALHAM |
எக்காளம், TRUMPET |
கக்காலம் |
கக்கு (=பெருகு) + ஆல் (=ஒலி) + அம் = கக்காலம் >>> காகளம் = பெருகிய ஒலி = எக்காளம். ஒ.நோ: எக்கு (=குவி, பெருகு) + ஆல் (=ஒலி) + அம் = எக்காலம் >>> எக்காளம் = பெருகிய ஒலி. |
காகிதம், KAAKITHAM |
கடிதம், LETTER, தாள், PAPER |
காழ்கீறம் |
காழ் (=தோல், ஏடு) + கீறு (=எழுது) + அம் = காழ்கீறம் >>> காகிதம் = (1) எழுதிய ஏடு = கடிதம் (2) எழுதுவதற்கான ஏடு = தாள். |
காகுளி, KAAKULHI |
பேயின் சினவொலி, DEMONIC UPROAR |
காய்கூளி |
காய் (=சின, ஒலி) + கூளி (=பேய்) = காய்கூளி >>> காகுளி = பேய்கள் சினந்து ஒலிப்பதைப் போன்றது. |
காகுளி, KAAKULHI |
காக ஒலி, CROW LIKE SOUND |
காகொலி |
காகம் + ஒலி = காகொலி >>> காகுளி = காகத்தின் ஒலி போன்றது. |
காகுளி, KAAKULHI |
இன்னோசை, MELODY |
கக்கொலி |
கக்கு (=கற்கண்டு) + ஒலி = கக்கொலி >>> காகுளி = கற்கண்டு போன்ற ஒலி = இன்னோசை. |
காகோதரம், KAAKOATHARAM |
பாம்பு, SNAKE |
கங்கொன்றாரம் |
கங்கு (=கழுகு, பருந்து) + ஒன்றார் (=பகைவர்) + அம் (=போர்) = கங்கொன்றாரம் >>> காகோதரம் = கழுகுடனும் பருந்துடனும் பகையாகப் போர்செய்வது = பாம்பு. |
காகோதம், KAAKOATHAM |
பாம்பு, SNAKE |
கங்கொறம் |
கங்கு (=கழுகு, பருந்து) + ஒறு (=வெறு, கொல்) + அம் (=போர்) = கங்கொறம் >>> காகோதம் = கழுகும் பருந்தும் வெறுத்துப் போரிட்டுக் கொல்வது = பாம்பு. |
காகோலம், KAAKOALAM |
அண்டங்காக்கை, RAVEN |
காகொளம் |
காகம் + ஒளி (=பெருமை) + அம் = காகொளம் >>> காகோலம் = பெரிய காகம். |
காங்கிசை, KAANKICAI |
விருப்பம், DESIRE |
காக்குசை |
கக்கு (=பெருக்கெடு) + உசா (=எண்ணம்) + ஐ = காக்குசை >>> காங்கிசை = பெருக்கெடுக்கும் எண்ணம் = விருப்பம் |
காங்கு, KAANKU |
பெரும்பானை, LARGE POT |
காழ்க்கோய் |
காழ் (=மிகு, பெரு) + கோய் (=பானை) = காழ்க்கோய் >>> காங்கு = பெரிய பானை. |
காங்கெயம், காங்கேயம், KAANKEYAM |
தங்கம், GOLD |
காழ்கெழம் |
காழ் (=மிகு, தண்டு, இழை) + கெழு (=பொருந்து, ஒளி) + அம் = காழ்கெழம் >>> காங்கெயம் = தண்டாகவும் இழையாகவும் பொருந்தக்கூடிய ஒளிமிக்க பொருள். |
காசண்டி, KAACANDI, காசாண்டி, KAACAANDI |
பெரிய பாத்திரம், LARGE POT |
காழ்சட்டி |
காழ் (=மிகு, பெரு) + சட்டி (=பாத்திரம்) = காழ்சட்டி >>> காசண்டி = பெரிய பாத்திரம் |
காசம், KAACAM, காசு, KAACU |
தங்கம், GOLD |
காழம் |
காழ் (=மிகு, தண்டு, இழை, ஒளி) + அம் (=பொருந்து) = காழம் >>> காசம் = தண்டாகவும் இழையாகவும் பொருந்தக்கூடிய ஒளிமிக்க பொருள். |
காசம், KAACAM, காசு, KAACU, காசை, KAACAI |
கோழை, சளி, PHLEGM |
காயம் |
காய் (=உடல், உலர், நீக்கு) + அம் (=நீர், வெண்மை) = காயம் >>> காசம் = உடலில் இருந்து நீக்கப்படும் நீர் உலர்ந்த வெண்பொருள் = சளி, கோழை. |
காசம், KAACAM, காசா, KAACAA, காசை, KAACAI |
புல், GRASS |
கழு |
கழு (=புல்) + அம் = காழம் >>> காசம் >>> காசா. |
காசம், KAACAM |
ஆகாயம், SKY |
காழம் |
(2)காழ் (=கருமை, இருள், ஒளி, நிறை) + அம் = காழம் >>> காயம் >>> காசம் = இருளும் ஒளியும் நிறைந்திருப்பது. |
காசம், KAACAM |
பளிங்கு, CRYSTAL |
காழ் |
காழ் (=பளிங்கு) + அம் = காழம் >>> காசம் |
காசனம் |
கொலை |
காயணம் |
காய் (=அழி, கொல்) + அணம் = காயணம் >>> காசனம் |
காசா, KAACAA |
எருமை, BUFFALO |
காழா |
காழ் (=கருமை, தோல்) + ஆ (=மாடு) = காழா >>> காசா = கருந்தோல் கொண்ட மாடு = எருமை |
காசா, KAACAA |
உரிமை |
கெழு |
கெழு (=உரிமை) + ஆ = கேழா >>> காசா |
காசா, KAACAA |
சிறப்பான |
காயா |
கயம் (=பெருமை, சிறப்பு) + ஆ = காயா >>> காசா = பெருமையான / சிறப்புடைய |
காசி, KAACI |
கருஞ்சீரகம், BLACK CUMIN |
காழ்சீ |
காழ் (=கருமை, விதை) + சீ (=சளி, நீக்கு) = காழ்சீ >>> காசி = சளியை நீக்கும் கருப்பு விதை = கருஞ்சீரகம் |
காசி, KAACI |
பற்றாக்குறை, DEFICIT |
கயம் |
கயம் (=குறைபாடு) + இ = காயி >>> காசி = பற்றாக்குறை |
காசிரம், KAACIRAM |
வட்டம், CIRCLE |
காழிறம் |
காழ் (=முற்று) + இறை (=வளை) + அம் = காழிறம் >>> காசிரம் = முற்றும் வளைந்தது = வட்டம். |
காசினி, KAACINI |
பூமி, EARTH |
காழீனி |
காழ் (=விதை) + ஈனு (=படை, பிறப்பி) + இ = காழீனி >>> காசினி = விதைகளைப் பிறக்கச் செய்வது = பூமி. |
காசு, KAACU |
நாணயம், COIN |
காழு |
காழ் (=உலோகம், வட்டம், துண்டு) + உ = காழு >>> காசு = உலோகத்தாலான வட்டத் துண்டு = நாணயம் |
காசு, KAACU |
மணி, பளிங்கு, GEM |
காழ் |
காழ் (=பளிங்கு) + உ = காழு >>> காசு |
காஞ்சனம், KAANCANAM |
தங்கம், GOLD |
காழணம் |
காழ் (=மிகு, தண்டு, இழை, ஒளி) + அணி + அம் = காழணம் >>> காசனம் >>> காஞ்சனம் = தண்டாகவும் இழையாகவும் அணியத்தக்க ஒளிமிக்க பொருள். |
காஞ்சனி, KAANCANI |
மஞ்சள், TURMERIC |
காழணி |
காழ் (=ஒளி, மிகுதி, வலிமை, கிழங்கு) + அணி (=அழகு, பூசு) = காழணி >>> காசனி >>> காஞ்சனி = அழகுக்காக பூசப்படும் ஒளிமிக்க வலுவான கிழங்கு = மஞ்சள். |
காஞ்சி, KAANCI |
மயிர், HAIR |
காழீ |
காழ் (=தோல், கருமை, மிகுதி) + ஈ (=கொடு, நீட்டு, படை) = காழீ >>> காசி >>> காஞ்சி = தோலில் இருந்து நீட்டி மிகுதியாகப் படைக்கப்படும் கரும்பொருள் = மயிர் |
காஞ்சுகம், KAANCUKI, காஞ்சுகி, KAANCUKAM |
மேலாடை, சட்டை, SHIRT, UPPER DRESS |
காழூங்கம் |
(2) காழ் (=ஆடை) + ஊங்கு (=மேலிடம்) + அம் = காழூங்கம் >>> காசுகம் >>> காஞ்சுகம் = மேலாடை. |
காஞ்சுகன், காஞ்சுகி, KAANCUKAN, KAANCUKI |
மெய்க்காப்பாளன், BODY GUARD |
காழூங்கன் |
(2) காழ் (=இரும்பு, உடை) + ஊங்கு (=மேலிடம்) + அன் = காழூங்கன் >>> காசுகன் >>> காஞ்சுகன் = இரும்பு உடையை மேலே கொண்டவன் = மெய்க்காப்பாளன் |
காட்டம், KAATTAM |
விறகு, FIRE WOOD |
காட்டம் |
கடி (=தண்டு, நீங்கு) + அம் (=நீர், ஈரம்) = காட்டம் = ஈரம் நீங்கிய தண்டு = விறகு |
காட்டம், KAATTAM |
காரம், PUNGENCY |
கடு |
கடு (=காரம்) + அம் = காட்டம் |
காட்டம், KAATTAM |
பெரிய மணி, LARGE BELL |
காட்டம் |
கடி (=பூசை, கயிற்றில் கட்டு, ஒலி, சிறுதண்டு) + அம் (=வளைவு) = காட்டம் = பூசையில் கயிற்றால் கட்டி ஒலிக்கப்படும் சிறுதண்டுடைய வளைபொருள் = மணி. |
காட்டிலம், KAATTILAM |
வாழை, PLANTAIN |
காட்டிலம் |
கடி (=ஒளி, மிகுதி, தண்டு) + இலை + அம் (=நீளம், பழம், இனிமை) = காட்டிலம் = ஒளிமிக்க தண்டும் நீண்ட இலையும் இனிய பழமும் கொண்டது = வாழை. |
காட்டை, KAATTAI |
எல்லை, LIMIT |
கட்டு |
கட்டு (=எல்லை) + ஐ = காட்டை |
காட்டை, KAATTAI |
திசை, DIRECTION |
காட்டை |
காட்டு (=சுட்டு) + ஐ = காட்டை = சுட்டப்படுவது. |
காட்டை, KAATTAI |
காலம், TIME |
கடி |
கடி (=காலம்) + ஐ = காட்டை |
காட்டை, KAATTAI |
கூர்மை, நுனி, POINT |
கடி |
கடி (=கூர்மை) + ஐ = காட்டை = கூர்மையுடையது = நுனி |
காடகம், KAATAKAM |
உடை, DRESS |
கட்டகம் |
கட்டு (=உடு) + அகம் (=உடல், பொருள்) = கட்டகம் >>> காடகம் = உடலில் உடுத்தும் பொருள் = உடை. |
காடி, KAATI |
நெய், GHEE |
கடி |
கடி (=நறுமணம், ஒளி, மிகுதி, விரை, ஓடு, ஒழுகு, இனிமை, உணவு) >>> காடி = நறுமணமும் ஒளியும் இனிமையும் மிக்க ஒழுகும் உணவு. |
காடி, KAATI |
கழுத்து, NECK |
கடி |
கடி (=ஒலி, புதுமை, பிறப்பு, இடம்) >>> காடி = ஒலி பிறக்கும் இடம் = கழுத்து. |
காடி, KAATI |
சக்கரம், வண்டி, WHEEL, CART |
கட்டி |
கட்டு (=வளைவு, பட்டா, அமை, செலுத்து) + இ = கட்டி >>> காடி = பட்டாவுடன் கட்டிச் செலுத்தப்படும் வளைவான பொருள் = சக்கரம், வண்டி. |
காடி, KAATI |
அகழி, TRENCH |
கடி |
கடி (=காவல், பாதுகாப்பு, வெட்டு, பள்ளமாக்கு, தொடர், நீளு) >>> காடி = பாதுகாப்புக்காக வெட்டப்படும் நீண்ட பள்ளம் = அகழி. |
காடி, KAATI |
நீண்ட பள்ளம், LONG GROOVE |
கடி |
கடி (=வெட்டு, பள்ளமாக்கு, தொடர், நீளு) >>> காடி = நீண்ட பள்ளம். |
காடி, KAATI |
கொட்டில், SHED |
கட்டி |
கட்டு (=பிணி, அடை, இடம்) + இ = கட்டி >>> காடி = பிணித்து அடைத்து வைக்கும் இடம் = கொட்டில். |
காடிகம், KAATIKAM |
உடை, DRESS |
கட்டிகம் |
கட்டு (=உடு) + இகம் (=உடல், பொருள்) = கட்டிகம் >>> காடிகம் = உடலில் உடுத்தும் பொருள் = உடை. |
காடினியம், KAATINIYAM |
கடினத்தன்மை, HARDNESS |
கடினம் |
கடினம் + இயம் (=தன்மை) = காடினியம் = கடினத்தன்மை |
காடு, KAATU |
வனம், JUNGLE |
காடு |
கடி (=தண்டு, மரம், மிகுதி, இடம்) + உ = காடு = மரங்கள் மிகுந்திருக்கும் இடம் = வனம். |
காடு, KAATU |
எல்லை, LIMIT |
கட்டு |
கட்டு (=எல்லை) >>> காடு |
காண்டகம், KAANTAKAM |
காடு, JUNGLE |
கட்டகம் |
கட்டு (=செறிவு) + அகம் (=மரம், இடம்) = கட்டகம் >>> காண்டகம் = மரங்கள் செறிந்த இடம் = காடு. |
காண்டகம், KAANTAKAM |
நோய், DISEASE |
கட்டகம் |
கடி (=பற்று, வருத்து) + அகம் (=உடல், மனம்) = கட்டகம் >>> காண்டகம் = உடலை / மனதைப் பற்றி வருத்துவது |
காண்டகம், KAANTAKAM |
கமண்டலம், SACRED WATER POT |
காண்டகம் |
காண்டம் (=புனிதநீர்) + அகம் = காண்டகம் = புனிதநீரைக் கொண்டது = கமண்டலம். |
காண்டம், KAANTAM, காண்டவம், KAANTAVAM |
காடு, JUNGLE |
காட்டம் |
கடி (=தண்டு, மரம், மிகுதி, இடம்) + அம் = காட்டம் >>> காண்டம் = மரங்கள் மிகுந்திருக்கும் இடம் = வனம். |
காண்டம், KAANTAM |
மலை, MOUNTAIN |
காட்டம் |
கடி (=காவல், மிகுதி, குவியல், இடம், நிலம்) + அம் = காட்டம் >>> காண்டம் = காவலாக விளங்கும் குவிந்த நிலம் = மலை. |
காண்டம், KAANTAM |
புனித நீர், SACRED WATER |
காட்டம் |
கடி (=பூசை, சிறப்பு) + அம் (=நீர்) = காட்டம் >>> காண்டம் = பூசிக்கப்பட்ட சிறப்பு நீர் = புனித நீர். |
காண்டம், KAANTAM |
கமண்டலம், SACRED WATER POT |
காட்டம் |
கடி (=காவல், பாத்திரம், பூசை, சிறப்பு) + அம் (=நீர்) = காட்டம் >>> காண்டம் = பூசிக்கப்பட்ட சிறப்பு நீரைக் காக்கும் பாத்திரம் = கமண்டலம். |
காண்டம், KAANTAM |
தண்டு, STEM, POLE |
கடி |
கடி (=தண்டு, கோல்) + அம் = காட்டம் >>> காண்டம் |
காண்டம், KAANTAM |
அம்பு, ARROW |
காட்டம் |
கடி (=அழி, கொல், விரைவு, செலுத்து, கூர்மை, தண்டு) + அம் = காட்டம் >>> காண்டம் = கொல்வதற்காக விரைந்து செலுத்தப்படும் கூர்மையுடைய தண்டு = அம்பு |
காண்டம், KAANTAM |
பிரிவு, SECTION |
காட்டம் |
கடி (=வெட்டு, பிரி) + அம் =காட்டம் >>> காண்டம் = பிரிவு |
காண்டம், KAANTAM |
முடிவு, LIMIT |
கட்டு |
கட்டு (=எல்லை, முடிவு) + அம் = கட்டம் >>> காண்டம் |
காண்டம், KAANTAM |
நிகழ்காலம், சமயம், OPPURTUNITY, SEASON |
காட்டம் |
கடி (=, நிகழ், காலம்) + அம் = காட்டம் >>> காண்டம் = நிகழ்வதற்கான காலம். |
காண்டம், KAANTAM |
கூட்டம், CROWD |
கட்டு |
கட்டு (=மிகுதி, கூட்டம்) + அம் = கட்டம் >>> காண்டம் |
காண்டம், KAANTAM |
அணிகலப் பெட்டி, JEWEL BOX |
கட்டம் |
கட்டு (=அணி, காவல், பாதுகாப்பு, மூடு, அமை) + அம் = கட்டம் >>> காண்டம் = அணிகலன்களைப் பாதுகாக்க மூடியுடன் அமைக்கப்பட்டது = அணிகலப் பெட்டி |
காண்டம், KAANTAM |
உடை, DRESS |
கட்டம் |
கட்டு (=உடல், உடு) + அம் = கட்டம் >>> காண்டம் = உடலில் உடுத்துவது = உடை. |
கதுப்பு, KATHUPPU |
கன்னம், CHEEK |
கதுவுழை |
காது + உழை (=அருகு, இடம்) = கதுவுழை >>> கதுப்பு = காதுக்கு அருகில் உள்ள இடம் = கன்னம் |
களரவம், KALHARAVAM |
புறா, PIGEON |
கலாரமம் |
(2) கல் + ஆர் (=உண்ணு) + அம்மை (=அழகு) + அம் (=பறவை) = கலாரமம் >>> களரவம் = கற்களை உண்ணும் அழகிய பறவை = புறா. |
கோதுமை, WHEAT |
உணவு வகை, A FOOD |
கோழ்துவை |
கோழ் (=கொழகொழப்பு) + துவை (=தோய், அடி, பிசை, உருட்டு, கூழ், உணவு) = கோழ்துவை >>> கோதுமை = தோய்த்துக் கொழகொழப்பாக்கிக் கூழாகவும் அடித்துப் பிசைந்து உருட்டியும் உணவாவது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.