சனி, 21 ஆகஸ்ட், 2021

83 - (கலாசு -> களை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

கலாசு, KALAACU

 

கப்பலோட்டுதல், SHIPPING

கலாசு

கலம் (=கப்பல்) + ஆசு (=விரைவி, ஓட்டு) = கலாசு = கப்பல் ஓட்டுதல்.

கலாசி, KALAACI

கப்பலோட்டி, SAILOR

கலாசி

கலாசு (=கப்பல் ஓட்டுதல்) + இ = கலாசி = கப்பல் ஓட்டுபவர்.

கலாட்டா, KALAATTAA

கைகலப்பு, QUARREL, RIOT

கலாட்டா

கல (=கூடு, ஒன்றுசேர்) + அடு (=தாக்கு) + ஆ = கலாட்டா = ஒன்றுசேர்ந்து தாக்குதல் = கைகலப்பு, சண்டை.

கலாட்டா, KALAATTAA

பேரொலி, TUMULT

கலாற்றா

கல் (=ஒலி) + ஆற்று (=கூடு, மிகு) + ஆ = கலாற்றா >>> கலாட்டா = மிக்க ஒலி

கலாதி, KALAATHI

சண்டை, QUARREL

கலாத்தி

கல் (=பிரி, ஒலி, பேச்சு) + ஆத்தம் (=நட்பு0 + இ = கலாத்தி >>> கலாதி = நட்பைப் பிரிக்கும் பேச்சு = சண்டை

கலாபம், KALAAPAM, கலாபனை, KALAAPANAI

சண்டை, QUARREL

கலாப்பம்

கல் (=பிரி, ஒலி, பேச்சு) + ஆப்பு (=கட்டு, உறவு) + அம் = கலாப்பம் >>> கலாபம் = உறவைப் பிரிக்கும் பேச்சு = சண்டை

கலாபி, KALAAPI

மயில், PEACOCK

கலாபி

கலாபம் (=தோகை) + இ = கலாபி = தோகையைக் கொண்டது = மயில்

கலாம், KALAAM

போர், WAR

கலி

கலி (=போர்) + அம் = கலம் >>> கலாம்

கலாம், KALAAM

வேறுபாடு, RIVALRY

கலம்

கல் (=பிரி, மாறுபடு) + அம் = கலம் >>> கலாம் = பிரிவு, மாறுபாடு

கலாம், KALAAM

சினம், ANGER, கொடுமை, ARROGANCE

கலி

கலி (=செருக்கு, கொடுமை, சினம்) + அம் = கலம் >>> கலாம்

கலாய், KALAAY

சினமூட்டு, MAKE ANGRY

கலாய்

கலி (=செருக்கு, சினம்) + ஆய் (=குத்து, தூண்டு) = கலாய் = சினத்தைத் தூண்டு

கலாய், களாய், KALAAY, KALHAAY

ஈயப்பூச்சு, TINNING

கலாய்

கலம் (=பாத்திரம்) + ஆய் (=அழகாக்கு, வெண்மை) = கலாய் = பாத்திரத்தை வெண்மையாய் அழகாக்குவது = ஈயப்பூச்சு

கலால், KALAAL

கள், TODDY

கலால்

கல (=மயக்கு) + ஆல் (=வெண்மை, நீர்) = கலால் = மயக்கந்தரும் வெண்ணீர்

கலி, KALI

துன்பம், GRIEF

கலிழ்

கலிழ் (=கலங்கு, அழு, வருந்து >>> கலி = வருத்தம், அழுகை, துன்பம்

கலி, KALI

வறுமை, POVERTY

கலி

கலி (=வளம், நீங்கு) >>> கலி = வளம் நீங்கிய நிலை = வறுமை.

கலி, KALI

வஞ்சகம், FRAUD

களி

கள் (=வஞ்சி) + இ = களி >>> கலி = வஞ்சனை

கலிகை, KALIKAI, களிகை, KALHIKAI

பூமொட்டு, BUD

கலிகை

கால் (=முளை) + இகம் (=பூ) + ஐ = கலிகை = பூவின் முளை = மொட்டு.

கலிங்கம், KALINKAM

ஆடை, DRESS

கலிக்கம்

கலை (=உடல்) + இகு (=தடு, மறை) + அம் = கலிக்கம் >>> கலிங்கம் = உடலை மறைப்பது = உடை

கலிங்கம், KALINKAM

வானம்பாடி, LARK, குருவி, SPARROW

கலீகம்

கல் (=சிறுமை, ஒலி) + ஈகை (=பறவை) + அம் = கலீகம் >>> கலிங்கம் = ஒலிக்கின்ற சிறிய பறவை = வானம்பாடி, ஊர்க்குருவி

கலிங்கம், KALINKAM

மிளகு, PEPPER

கலிக்கம்

கலி (=கருமை, சின, எரி) + இகு (=கொடு) + அம் (=உணவு) = கலிக்கம் >>> கலிங்கம் = எரிச்சல் தரும் கருநிற உணவு = மிளகு.

கலிதம், KALITHAM

விந்து வெளிப்பாடு, SEMINAL DISCHARGE

கலிறம்

கல (=சேர், புணர்) + இறு (=வடி) + அம் (=வெண்மை, நீர்) = கலிறம் >>> கலிதம் = புணரும்போது வெண்ணீர் வடிதல் = விந்து வெளிப்பாடு.

கலியன், KALIYAN

ஏழை, POOR MAN

கலியன்

கலி (=வறுமை) + அன் = கலியன் = வறியவன்

கலிசு, KALICU, கலீசு, KALEECU

சாக்கடை நீர், DITCH

கலிழி

கலிழி (=கலங்கல் நீர்) + உ >>> கலிழு >>> கலிசு >>> கலீசு = கலங்கிய நீர்.

கலினம், KALINAM, கலினை, KALINAI

கடிவாளம், BRIDLE

கலினம்

கலி (=குதிரை, விரைவு, வேகம்) + இனை (=கெடு) + அம் = கலினம் = குதிரையின் வேகத்தைக் கெடுப்பது = கடிவாளம்.

கலினி, KALINI

விதவை, WIDOW

கலினி

கலி (=செழிப்பு, பொலிவு) + இனை (=கெடு, அழி) + இ = கலினி = செழிப்பு / பொலிவு அழிந்தவள் = விதவை.

கலினம், KALINAM, கலினை, KALINAI

மிளகு, PEPPER

கலினம்

கலி (=கருமை) + இனை (=எரி) + அம் (=உணவு) = கலினம் = எரிச்சல் தரும் கருநிற உணவு = மிளகு.

கலினம், KALINAM, கலினை, KALINAI

கொள்ளு, HORSE GRAM

கலினம்

கலி (=குதிரை) + இன் (=இனிய) + அம் (=உணவு) = கலினம் = குதிரைக்கு இன்பமான உணவு = கொள்ளு.

கலுடம், KALUTAM

சாக்கடை நீர், DITCH

கலுறம்

கல் (=கலங்கு) + உறை (=நீர்) + அம் = கலுறம் >>> கலுடம் = கலங்கல் நீர்

கலுடம், KALUTAM

பாவம், SIN

கலூட்டம்

கலி (=துன்பம்) + ஊட்டு + அம் = கலூட்டம் >>> கலுடம் = துன்பம் ஊட்டுதல்.

கலுவடம், KALUVATAM

மொட்டு, BUD

கலிபண்டம்

கலி (=தோன்று, முளை) + பண்டம் (=பூ) = கலிபண்டம் >>> கலுவடம் = பூவின் முளை = பூ மொட்டு.

கலுவம், KALUVAM

குழவிக்கற்சட்டி, MORTAR

கலூழ்மம்

கல் (=பாறைத்துண்டு, பள்ளம்) + ஊழ் (=குழை) + மம் = கலூழ்மம் >>> கலுவம் = குழைப்பதற்கான பள்ளமுடைய பாறைத்துண்டு

கலுழன், KALUZAN

பருந்து, KITE

கலூழம்

கல் (=ஒலி, கிழி) + ஊழ் (=தசை, சுற்று) + அம் (=உணவு, கொடுமை, பறவை) = கலூழம் >>> கலுழன் = தசையைக் கிழித்துண்பதும் ‘கல்’ லென ஒலித்தவாறு சுற்றுவதுமான கொடிய பறவை = கழுகு, பருந்து.

கலேயகம், KALAEYAKAM

மஞ்சள், TURMERIC

கலேயகம்

கலி (=அழகு) + ஏய் (=பொருத்து, பூசு) + அகை (=எரி, ஒளிர்) + அம் = கலேயகம் = அழகுக்காகப் பூசப்படும் ஒளிரும் பொருள் = மஞ்சள்.

கலை, KALAI

பிரிவு, PORTION

கலை

கல் (=பிரி) + ஐ = கலை = பிரிவு

கலை, KALAI

ஒளி, LIGHT

கலை

கலி (=விளங்கு, ஒளிர்) + ஐ = கலை = விளக்கம், ஒளி

கலை, KALAI

காலம், TIME

காலம்

காலம் + ஐ = கலை

கலை, KALAI

கல்வி, நூல், EDUCATION, BOOK

கலை

கல் (=படி, அறி) + ஐ = கலை = (1) அறியப்படுவது (=கல்வி), (2) அறியச்செய்வது (=நூல்)

கலை, KALAI

மொழி, LANGUAGE

கலை

கல் (=ஒலி, சொல்) + ஐ = கலை = சொற்களைக் கொண்டது = மொழி.

கலை, KALAI

உடல், BODY

கலை

கால் (=காற்று, உயிர், பற்றுக்கோடு) + ஐ = கலை = உயிர்க்கான பற்றுக்கோடு.

கலை, KALAI

கிளை, BRANCH

கலை

கால் (=தோன்று, முளை, தண்டு) + ஐ = கலை = முளைக்கும் தண்டு

கலை, KALAI

அணிகலன், ORNAMENT

கலை

கலம் (=அணி) + ஐ = கலை = அணிகலன்

கவுடா, கவ்டா, KAVTAA, KAVUTAA

ஊர்த்தலைவன், VILLAGE HEAD

கப்பிறா

காப்பு (=ஊர்) + இறை (=தலைவன்) + ஆ = கப்பிறா >>> கவிடா >>> கவுடா, கவ்டா = ஊர்த்தலைவன்.

கவ்வம், கவம், KAVVAM, KAVAM

மத்து, CHURN

கவ்வம்

கவை (=சூழ், சுற்று) + அம் (=உணவு, நீர், வெண்மை) = கவ்வம் = வெண்ணிற நீர் உணவைச் சுற்றுவது = மத்து

கவ்வா, KAVVAA

அங்கி, TUNIC

கப்பா

காப்பு (=உடை) + ஆ (=நீளு) = கப்பா >>> கவ்வா = நீண்ட உடை

கவ்வியம், KAVVIYAM

உண்ணத்தக்கது, EDIBLES

கவ்வியம்

கவ்வு (=உண்ணு) + இயை (=தகு) + அம் = கவ்வியம் = உண்ணத்தக்கது = உணவு.

கவசம், கவயம், KAVAYAM, KAVACAM

இரும்பு அணி, ARMOUR

கப்பயம்

கப்பு (=மூடு, மறை) + அயம் (=இரும்பு) = கப்பயம் >>> கவயம் >>> கவசம் = மூடும் / மறைக்கும் இரும்பு

கவசம், KAVACAM

காப்பணி, AMULET

கப்பசம்

காப்பு + அசை (=கட்டு, அணி) + அம் = கப்பசம் >>> கவசம் = பாதுகாப்புக்காக அணியப் / கட்டப் படுவது = காப்பணி

கவசி, KAVACI

பாதுகா, மூடு, PROTECT, COVER

கவசி

கவசம் (=பாதுகாப்பு) >>> கவசி = பாதுகா, மூடு

கவடம், KAVATAM

வஞ்சனை, FRAUD

கப்படம்

(3) கப்பு (=மூடு, மறை) + அடை (=பொருந்து) + அம் (=சொல்) = கப்படம் >>> கபடம் >>> கவடம் = மறைப்பு பொருந்திய சொல் = பொய், வஞ்சனை

கவடி, கபடி, KAPADI, KAVADI

விளையாட்டு வகை, A GAME

கவடி

கவை (=கவடு, தொடைசந்து) + அடை (=புகுத்து, கொள், பிடி) + இ = கவடி >>> கபடி = தொடைசந்திற்குள் புகுத்திப் பிடித்துக் கொள்ளுதல்.

கவடி, KAVADI

வஞ்சகன், CHEATER

கவடி

கவடம் (=வஞ்சனை) + இ = கவடி = வஞ்சகன்

கவந்தம், கபந்தம், KAVANTHAM, KAPANTHAM

தலையற்றது, HEADLESS

கமந்தம்

கம் (=தலை) + அந்தம் (=இன்மை) = கமந்தம் >>> கவந்தம், கபந்தம் = தலை இல்லாதது = தலையற்ற உடல், தலையற்ற மரம்,

கவந்தம், கபந்தம், KAVANTHAM, KAPANTHAM

பேய், DEMON

கமந்தம்

கம் (=உயிர்) + அந்தம் (=இன்மை) = கமந்தம் >>> கவந்தம், கபந்தம் = உயிரற்றது = பேய்.

கவந்தம், கபந்தம், KAVANTHAM, KAPANTHAM

கடல், SEA

கமத்தம்

கம் (=நீர்) + அதி (=மிகுதி) + அம் = கமத்தம் >>> கவந்தம், கபந்தம் = மிக்க நீருடையது = கடல்.

கவந்தம், கபந்தம், KAVANTHAM, KAPANTHAM

செக்கு, OIL PRESS

கம்பாதம்

கம்பு (=தண்டு) + ஆதி (=சுற்று) + அம் = கம்பாதம் >>> கபந்தம் >>> கவந்தம் = சுற்றுகின்ற தண்டினைக் கொண்டது = செக்கு.

கவயம், KAVAYAM

காட்டுப்பசு, WILD COW, BISON

கவாயம்

கா (=சோலை, காடு) + ஆயம் (=பசு) = கவாயம் >>> கவயம் = காட்டுப்பசு,

கவரி, KAVARI

மான் வகை,  A DEER

கவரி

கவர் (=கிளைத்த கொம்பு) + இ = கவரி = கிளைத்த கொம்புகளைக் கொண்டது

கவரி, KAVARI

எருமை, BUFFALO

காழ்பறி

காழ் (=கருமை, தோல்) + பறி (=உடல், நட, தணி, பொறு) = காழ்பறி >>> கவரி = பொறுமையாக நடக்கின்ற கருந்தோல் கொண்ட உடலினது.

கவரி, KAVARI

சாமரை, HAIRY FAN

கம்பரி

கம்பு (=தண்டு) + அரி (=செலுத்து, இடைவிடு, மயிர், கட்டு, காற்று) = கம்பரி >>> கவரி = காற்றை இடைவிட்டுச் செலுத்தும் மயிர்க்கட்டுடைய தண்டு = சாமரை

கவலை, KAVALAI

வயல்நீரேற்றம், A WATERLIFT

கமலை

கமலை (=வயல் நீரேற்றம்) >>> கவலை

கவழிகை

திரைச்சீலை

கப்பேழிகை

காப்பு (=துணி, மறைப்பு) + ஏழ் (=ஏழு, நிறம்) + இகு (=தாழ்த்து, வீழ்த்து) + ஐ = கப்பேழிகை >>> கவழிகை = மறைப்பதற்காக வீழ்த்தப்படும் எழுநிறத் துணி.

கவளம், KAVALHAM

உணவுண்டை, RICE BALL

கவளம்

கவ்வு (=உண்ணு) + அள் (=செறி, திரள்) + அம் = கவளம் = திரட்டிய உணவு

கவளி, KAVALHI, கவளிகை, KAVALHIKAI

கட்டு, BUNDLE

காழ்வலி

காழ் (=நூல், கயிறு, வலிமை, மிகுதி) + வல (=கட்டு) + இ = காழ்வலி >>> கவளி = நூலால் / கயிற்றால் மிக வலுவாகக் கட்டப்பட்டது = கட்டு, பொதி.

கவனம், KAVANAM

போர், படை, WAR, ARMY

கமணம்

கம் (=உயிர்) + அணை (=கூடு, அவி, அழி) + அம் = கமணம் >>> கவனம் = (1) கூடி உயிரை அழித்தல் (=போர்) (2) உயிரை அழிக்கும் கூட்டம் (=போர்ப்படை)

கவனம், KAVANAM

வெப்பம், HEAT

கப்பணம்

கப்பு (=எரி) + அணம் = கப்பணம் >>> கவனம் = எரிச்சல், வெப்பம்

கவனம், KAVANAM

கலக்கம், BEWILDERMENT

கவணம்

கவை (=கல, கலக்கு) + அணம் = கவணம் >>> கவனம் = கலக்கம்

கவனம், KAVANAM

பாடும் திறன், POETIC SKILL

கவ்வாணம்

கவ்வை (=ஒலி, பாட்டு) + ஆண் (=வலிமை, ஆற்றல்) + அம் = கவ்வாணம் >>> கவனம் = பாடும் ஆற்றல்.

கவனம், KAVANAM

எண்ணக் குவிப்பு, ATTENTION

கவெண்ணம்

கவை (=சேர், குவி) + எண்ணம் (=அறிவு) = கவெண்ணம் >>> கவனம் = எண்ணத்தைக் குவித்தல்.

கவனம், KAVANAM

விரைவு, SWIFTNESS

கமணம்

கம் (=விரை) + அணம் = கமணம் >>> கவனம் = விரைவு.

கவனம், KAVANAM

சோலைக்காடு, GROVEFOREST

கவனம்

கா (=சோலை) + வனம் (=காடு) = கவனம் = சோலைக்காடு

கவாட்சி, KAVAATCI

சாளரம், WINDOW

கமற்றி

கம் (=காற்று) + அறை (=பகுதி, ஓட்டை) + இ = கமற்றி >>> கவட்டி >>> கவாட்சி = அறையில் காற்றுக்கான ஓட்டைகளைக் கொண்டது = சாளரம்.

கவாடம், KAVAATAM

பொதிச்சுமை, PAY LOAD

கவாறம்

(2) கவை (=சேர், கட்டு) + ஆறு (=பொறு, சும) + அம் = கவாறம் >>> கவாடம் = சுமக்கக்கூடிய கட்டு = பொதிச்சுமை.

கவாடம், KAVAATAM

கதவு, DOOR

கபாடம்

கபாடம் (=கதவு) >>> கவாடம்

கபாத்து, கவாத்து, KAPAATHTHU, KAVAATHTHU

பாதுகாப்புப் பயிற்சி, DEFENCE TRAINING

கப்பயிற்று

கா (=பாதுகாப்பு) + பயிற்று = கப்பயிற்று >>> கபைத்து >>> கபாத்து >>> கவாத்து = பாதுகாப்பதற்கான பயிற்சி.

கவாளம், KAVAALHAM

காயக்கட்டு, SORE BANDAGE

கவளம்

கவை (=பிளவு, வெட்டு, காயம்) +  அளை (=சேர், கட்டு) + அம் (=மருந்து) = கவளம் >>> கவாளம் = காயத்திற்கு மருந்துடன் கட்டப்படுவது.

கவான், KAVAAN

மலைச்சாரல், HILL SLOPE

கமண்

கமை (=மலை) + அண் (=பக்கம்) = கமண் >>> கவான் = மலைப்பக்கம்

கவான், KAVAAN

தொடை, THIGH

கவண்

கவை (=தொடைசந்து) + அண் (=பக்கம்) = கவண் >>> கவான் = தொடைசந்தின் பக்கம் = தொடை.

கவி, KAVI

புலவன், POET

கவ்வீ

கவ்வை (=ஒலி, பாட்டு) + ஈ (=படை) = கவ்வீ >>> கவி = பாட்டைப் படைப்பவன்

கவி, KAVI

பாட்டு, POEM

கவி

கவ்வை (=ஒலி, பாட்டு) + இ = கவி = பாட்டு.

கவி, KAVI

பாடகன், SINGER

கவி

கவ்வை (=ஒலி, பாட்டு) + இ = கவி = பாடுபவன்.

கவுசனம், கவிசனம், KAVICANAM, KAVUCANAM

கோவணம், JETTY

கவையணம்

கவை (=தொடைசந்து) + அணி + அம் = கவையணம் >>> கவிசனம் >>> கவுசனம் = தொடைசந்தில் அணியப்படுவது = கோவணம்.

கவிஞன், KAVIGNAN

புலவன், POET

கவ்வைநன்

கவ்வை (=ஒலி, பாட்டு) + நன் = கவ்வைநன் >>> கவிஞன் = பாடகன்

கவிதை, KAVITHAI

இனிய பாட்டு, SWEET POEM

கவிதை

கவ்வை (=ஒலி, பாட்டு) + இதம் (=இனிமை) + ஐ = கவிதை = இனிய பாட்டு

கவியம், KAVIYAM

கடிவாளம், BRIDLE

கமிழம்

கம் (=விரை) + இழை (=விதி, கட்டுப்படுத்து, கயிறு) + அம் (=நீளம்) = கமிழம் >>> கவியம் = விரைவைக் கட்டுப்படுத்தும் நீண்ட கயிறு = கடிவாளம்.

கவீனம், KAVEENAM

நெய், GHEE, வெண்ணெய், BUTTER

கவினம்

கவின் (=அழகு, ஒளி) + அம் (=இனிமை, உணவு) = கவினம் >>> கவீனம் = ஒளியுடைய இனிய உணவு = நெய், வெண்ணெய்.

கவுசி, KAVUCI

வருத்தம், GRIEF

கவிழி

கவிழ் (=நிலைகுலை, கலங்கு) + இ = கவிழி >>> கவுசி = கலக்கம், வருத்தம்

கவுசி, KAVUCI

இசைப்பாட்டு, MUSICAL POEM

கவிசி

கவ்வை (=ஒலி, பாட்டு) + இசை + இ = கவிசி >>> கவுசி = இசைப்பாட்டு

கவுசிகம், KAVUCIKAM

வெண்பட்டு, WHITE SILK

காழ்மோழிகம்

காழ் (=உடை, கருமை) + மோழை (=மென்மை) + இக (=நீங்கு) + அம் = காழ்மோழிகம் >>> கமுசிகம் >>> கவுசிகம் = கருமை நீங்கிய மெல்லிய உடை.

கவுசிகம், KAVUCIKAM

ஆந்தை, OWL

காழ்மூசுகம்

(2) காழ் (=கருமை, இருள்) + மூசு (=ஒலி) + உகு (=பற) + அம் = காழ்மூசுகம் >>> கவுசிகம் = இருளில் ஒலித்தவாறு பறப்பது = ஆந்தை.

கவுசிகம், KAVUCIKAM

விளக்குத்தண்டு, LAMP STAND

கவூழிகம்

கா (=சுமக்கும் தண்டு) + ஊழ் (=ஒளி) + இகம் = கவூழிகம் >>> கவுசிகம் = ஒளியைச் சுமக்கும் தண்டு = விளக்குத் தண்டு

கவுஞ்சம், KAVUNJAM

அன்றில், INDIAN LOVE BIRD

கவொழம்

கவை (=பிரிவு) + ஒழி (=அழி) + அம் (=பறவை) = கவொழம் >>> கவுசம் >>> கவுஞ்சம் = பிரிந்தால் அழியும் பறவை = அன்றில்.

கவுணம், KAVUNAM

இரண்டாவது, இழிவகை, SECONDARY

கவீனம்

(1) கவை (=பிள, இரண்டாகு) + ஈனு (=பிற, தோன்று) + அம் = கவீனம் >>> கவுணம் = இரண்டாவதாகத் தோன்றுவது. (2) கவி (=இழி) + இனம் (=வகை) = கவீனம் >>> கவுணம் = இழிவகை.

கவுத்துவம், KAVUTHTHUVAM

வஞ்சகம், FRAUD

கவிழ்த்துவம்

கவிழ்த்து (=ஏமாற்று) + அம் = கவிழ்த்துவம் >>> கவுத்துவம் = ஏமாற்றுவேலை

கவுதகம், KAVUTHAKAM

சுற்றுச்சுவர், PARAPET WALL

கவிதகம்

கவி (=வளை, சூழ்) + தகை (=தடு) + அம் = கவிதகம் >>> கவுதகம் = வளைந்து சூழ்ந்திருக்கும் தடுப்பு = கைப்பிடிச் சுவர், சுற்றுச்சுவர்.

கவுரம், KAVURAM

வெண்ணிறம், WHITE COLOR

கமுரம்

கம் (=வெண்மை) + உரு (=நிறம்) + அம் = கமுரம் >>> கவுரம் = வெண்ணிறம்

கவுரவம், கௌரவம், KAVURAVAM, KOURAVAM

ஊர் மதிப்பு, RESPECTABILITY,

கமூரெவ்வம்

கமம் (=நிறைவு) + ஊர் + எவ்வம் (=மானம், மதிப்பு) = கமூரெவ்வம் >>> கமுரவம் >>> கவுரவம் >>> கௌரவம் = ஊரில் நிறைந்துள்ள மதிப்பு.

கவுளி, KAVULHI

பல்லி, LIZARD

கப்பொலி

(2) காப்பு (=சுவர்) + ஒலி = கப்பொலி >>> கபுளி >>> கவுளி = சுவரில் இருந்து ஒலிப்பது = பல்லி.

கவுனி, KAVUNI

கோட்டைவாசல், FORTGATE

கப்பொணி

காப்பு (=கோட்டை) + ஒண் (=இயலு, செல்) + இ = கப்பொணி >>> கபுனி >>> கவுனி = கோட்டைக்குள் செல்வதற்கானது = கோட்டை வாசல்.

கழகம், KAZAKAM, கழகு, KAZAKU

சூதாடுமிடம், GAMBLING PLACE

கழங்கம்

கழங்கு (=சூதாடுகருவி) + அம் = கழங்கம் >>> கழகம் = சூதாடுமிடம்

கழகம், KAZAKAM, கழகு, KAZAKU

கல்விச்சாலை, COLLEGE

கழகம்

காழ் (=முற்று, முதிர்) + அகம் (=மனம், அறிவு, இடம்) = கழகம் = மனம் / அறிவு முதிரும் இடம் = கல்விச்சாலை.

கழல், KAZAL

காலில் செறிவது, TOE FIT, LEG FIT

கலள்

கால் + அள் (=செறி) = கலள் >>> கழல் = காலில் செறிவது = சிலம்பு, மெட்டி, செருப்பு போன்றன.

கழல், KAZAL

காற்றுத் திசைகாட்டி, WEATHER COCK

கலால்

கால் (=காற்று, பக்கம்) + ஆல் (=ஆடு, அசை) = கலால் >>> கழல் = காற்று அசையும் பக்கமாக ஆடுவது = காற்றுத் திசைகாட்டி.

கள்வன், KALHVAN

யானை, ELEPHANT

கலாப்பன்

கால் (=உறுப்பு, தூண், கருமை) + ஆப்பு (=உடல்) + அன் = கலாப்பன் >>> களவன் >>> கள்வன் = தூண் போன்ற கால்களும் கருநிற உடலும் கொண்டது.

களபம், களவம், KALHAPAM, KALHAVAM

யானை, ELEPHANT

கலாப்பம்

கால் (=உறுப்பு, தூண், கருமை) + ஆப்பு (=உடல்) + அம் = கலாப்பம் >>> களபம் >>> களவம் =  தூண் போன்ற கால்களும் கருநிற உடலும் கொண்டது.

களக்கம், KALHAKKAM, களங்கம், KALHANKAM

கருஞ்செயல், குற்றம், FRAUD, CRIME

களாக்கம்

களம் (=கருமை) + ஆக்கம் (=செயல்) = களாக்கம் >>> களங்கம் = கருஞ்செயல், குற்றம்.

களகம், KALHAKAM

பெருச்சாளி, BANDICOOT, எலி, RAT

கலகம்

கால் (=வாய்க்கால், கூட்டம், கருமை) + அகம் (=உள், உயிரி, தங்குமிடம்) = கலகம் >>> களகம் = வாய்க்காலுக்குள் கூட்டமாகத் தங்கும் கருநிற உயிரி = பெருச்சாளி, எலி.

களகம், KALHAKAM

நெற்கதிர், PADDY SHEAF

களாக்கம்

களம் (=நெற்களம்) + ஆக்கம் (=உற்பத்தி) = களாக்கம் >>> களகம் = நெற்களத்தில் உற்பத்தி ஆனது = நெற்கதிர்.

களகம், KALHAKAM

சுண்ணாம்பு, LIME

கலகம்

கல + அகை (=எரி, வெப்புறு) + அம் (=நீர், வெண்மை) = கலகம் >>> களகம் = நீருடன் கலந்தால் வெப்பமடையும் வெண்பொருள் = சுண்ணாம்பு..

களகம், KALHAKAM

அன்னம், SWAN

களகம்

களம் (=கருமை) + அகை (=நீங்கு) + அம் (=நீர், பறவை) = களகம் = கருமை நீங்கிய நீர்ப்பறவை = அன்னம்.

களங்கம், களங்கு, KALHANKAM, KALHANKU

கறை, மறு, STAIN, BLOT

களங்கம்

களம் (=கருமை, இடம்) + அங்கம் (=உடல், பொருள்) = களங்கம் = உடலில் / பொருளில் கருமையான இடம் = கறை, மறு.

களங்கன், KALHANKAN

சந்திரன், MOON

களக்கன்

களம் (=கருமை, இருள்) + அகை (=எரி, ஒளிர்) + அன் = களக்கன் >>> களங்கன் = இருளில் ஒளிர்பவன் = சந்திரன்.

களங்கு, KALHANKU

உலோகக் கலவைக் குளிகை, METAL COMPOUND PILL

கலாக்கு

கல (=சேர்) + ஆக்கம் (=உலோகம், திரட்சி) + உ = கலாக்கு >>> களங்கு = உலோகங்களைச் சேர்த்துத் திரட்டப்பட்டது = உலோகக் கலவைக் குளிகை

களஞ்சம், KALHANCAM

போதைப்பொருள், NARCOTICS

களாசம்

களி (=போதை) + ஆசு (=பொடி) + அம் (=உணவு) = களாசம் >>> களஞ்சம் = போதைதரும் பொடி உணவு.

களஞ்சியம், KALHANCIYAM

உணவுக்கிடங்கு, GRANARY

களச்சியம்

களம் (=கொட்டகை) + அசை (=உண்ணு, கிட) + இயை (=நிறை) + அம் = களச்சியம் >>> களஞ்சியம் = உணவு நிறைந்து கிடக்கும் கொட்டகை.

களத்திரம், KALHATHTHIRAM

மனைவி, WIFE

களாத்திரம்

களம் (=கழுத்து) + ஆ (=கட்டு) + திரி (=கயிறு, பெண்) + அம் (=ஒளி, மஞ்சள்) = களாத்திரம் >>> களத்திரம் = கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிய பெண் = மனைவி

களபம், களவம், KALHAPAM, KALHAVAM

சுண்ணாம்பு, LIME

கலவம்

கல + அவி (=வெப்புறு) + அம் (=நீர், வெண்மை) = கலவம் >>> களவம் >>> களபம் = நீருடன் கலந்தால் வெப்பமடையும் வெண்பொருள் = சுண்ணாம்பு..

களம், KALHAM

இடம், PLACE

கால்

கால் (=இடம்) + அம் = கலம் >>> களம்

களம், KALHAM

அறிவு, மனம், MIND

கலம்

கல் (=படி, அறி) + அம் = கலம் >>> களம் = அறிவு, மனம்

களம், KALHAM

கூட்டம், CROWD

கலம்

கலி (=பெருகு, கூடு) + அம் = கலம் >>> களம் = கூட்டம்

களம், களன், KALHAM, KALHAN

இன்னோசை, MELODY

கலம்

கலி (=ஒலி, மகிழ்) + அம் = கலம் >>> களம் = மகிழ்ச்சி தரும் ஒலி.

களம், KALHAM

கருமை, BLACK

கள்ளம்

கள்ளம் (=மறைப்பு, இருள்) >>> களம் = இருள், கருமை

களம், KALHAM

மேகம், CLOUD

கலம்

கலி (=கடல், தோன்று, எழு, பெருகு, செருக்கு, ஒலி, ஒழுகு) + அம் (=நீர்) = கலம் >>> களம் = கடலில் தோன்றி எழுந்து பெருகிச் செருக்குடன் ஒலித்து நீரை ஒழுக்குவது = மேகம்.

களம், KALHAM

மனைவி, WIFE

கலம்

கலி (=நெருங்கியிரு, மகிழ், பெருகு) + அம் = கலம் >>> களம் = நெருங்கி இருந்து மகிழ்ச்சியைப் பெருக்குபவள் = மனைவி.

களம், களன், KALHAM, KALHAN

கழுத்து, THROAT

கலம்

கலி (=ஒலி, தோன்று) + அம் = கலம் >>> களம் = ஒலியைத் தோற்றுவிப்பது = தொண்டை, கழுத்து.

களம், KALHAM

நஞ்சு, POISON

களம்

களை (=அழி, கொல்) + அம் (=உணவு) = களம் = கொல்லும் உணவு

களமம், KALHAMAM

நெல், PADDY

களமம்

களம் (=நெற்களம்) + அமை (=உண்டாக்கு) + அம் (=உணவு) = களமம் = நெற்களத்தில் உண்டாக்கிய உணவு = நெல்.

களரவம், KALHARAVAM

புறா, PIGEON

கலாரேவம்

கால் (=உறுப்பு, அழகு) + ஆர் (=கட்டு) + ஏவு (=செலுத்து) + அம் (=பறவை, சொல், செய்தி) = கலாரேவம் >>> களரவம் = காலில் செய்தியைக் கட்டி ஏவப்படும் அழகிய பறவை = புறா.

கலாபம், KALAAPAM, கலாவம், KALAAVAM, களாபம், KALHAAPAM, களாவம், KALHAAVAM

இடையணி, GIRDLE

கலழுவம்

கலம் (=அணி) + அழுவம் (=நடு, இடை) = கலழுவம் >>> கலய்வம் >>> கலாவம் >>> கலாபம், களாபம், களாவம் = இடையில் அணியப்படுவது.

களிகை, KALHIKAI

கழுத்தணி, NECKLACE

களிகை

களம் (=கழுத்து) + இகு (=தாழ்த்து, தொங்கவிடு) + ஐ = களிகை = கழுத்தில் தொங்கவிடப் படுவது = கழுத்தணி

களிதம், KALHITHAM

வழுக்கல்,சேறு, MIRE, SLIPPER

களிறம்

களி (=குழைவு) + இறை (=நிலம்) + அம் (=நீர்) = களிறம் >>> களிதம் = நீரால் குழைந்த நிலம் = வழுக்கல், சேறு.

களிதம், KALHITHAM

பாறை, ROCK

கலிறம்

கல் + இறை (=பெருமை) + அம் = கலிறம் >>> களிதம் = பெருங்கல்

களிமம், KALHIMAM

எலி, RAT, பெருச்சாளி, BANDICOOT

கலுய்மம்

கால் (=கருமை, வாய்க்கால், கூட்டம்) + உய் (=வாழ், உயிரி) + மம் = கலுய்மம் >>> களிமம் = வாய்க்காலில் கூட்டமாக வாழும் கருநிற உயிரி = எலி, பெருச்சாளி.

களேபரம், KALHAEPARAM

உடல், BODY

கலேமாரம்

கால் (=காற்று, உயிர், பிறப்பிடம்) + ஏமம் (=பாதுகாப்பு) + ஆர் (=தங்கு, இடம்) + அம் = கலேமாரம் >>> களேபரம் = உயிரின் பிறப்பிடமாகவும் பாதுகாப்பான தங்குமிடமாகவும் இருப்பது = உடல்.

களேபரம், KALHAEPARAM

குழப்பக்கூச்சல், TUMULT

கலேமாரம்

கல் (=ஒலி) + ஏம் (=மயக்கம், குழப்பம்) + ஆர் (=நிறை, பெருகு) + அம் = கலேமாரம் >>> களேபரம் = குழப்பத்தால் பெருகிய ஒலி.

களை, KALHAI

அழகு, BEAUTY

கலை

கால் (=ஒளி) + ஐ = கலை >>> களை = ஒளியுடையது = அழகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.