வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

81 - (கதனம் -> கமை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

கதனம்

கடுமை

கறணம்

கறு (=முற்று, கடுமையாகு) + அணம் = கறணம் >>> கதனம் = கடுமை

கதனம்

கலக்கம்

கதணம்

கதுவு / கது (=கலங்கு) + அணம் = கதணம் >>> கதனம் = கலக்கம்

கதி

சொல்லு, ஒலி

கத்து

கத்து (=ஒலி, சொல்லு) + இ = கத்தி >>> கதி = ஒலி, சொல்லு

கதி

நடை, பயணம்

கறி

காலு / காறு (=செல், நட) + இ = கறி >>> கதி = நடை, பயணம்

கதி

விரைவு, விரை

கதி

கதழ் / கத (=விரை) + இ = கதி = விரைவு

கதி

வழி

கறீ

காலு / காறு (=செல்) + ஈ (=வகு) = கறீ >>> கதி = செல்வதற்காக வகுத்தது

கதி

பற்றுக்கோடு, துணை, கருவி

கந்து

கந்து (=பற்றுக்கோடு) + இ = கந்தி >>> கதி = ஆதாரம், புகலிடம், துணை, கருவி

கதி

நிலைபேறு

கந்து

கந்து (=தூண், நிலையானது) + இ = கந்தி >>> கதி = நிலை, நிலைபேறு

கதி

வலிமை

கறி

கறு (=முற்று, வலுவடை) + இ = கறி >>> கதி = வலிமை

கதி

பிரிவு

கது

கது (=பிளவு) + இ = கதி = பிளவு, பிரிவு

கதி

எழு

கறி

காலு / காறு (=வெளிப்படு, எழு) + இ = கறி >>> கதி = எழு

கதி

பெரு, மிகு

கறி

கறு (=முற்று, மிகு, பெரு) + இ = கறி >>> கதி

கதி

கேட்டறி

கதீ

காது (=செவி) + ஈ (=கொடு) = கதீ >>> கதி = செவிகொடு = கேட்டறி

கதிரை, கதிடை

நாற்காலி

கதிறை

கதுவு / கது (=செதுக்கு) + இறை (=உயரம், ஆசனம்) = கதிறை >>> கதிரை, கதிடை = செதுக்கப்பட்ட உயரமான ஆசனம் = நாற்காலி

கதிதம்

சொல்லப்பட்டது

கத்திறம்

கத்து (=ஒலி, சொல்லு) + இறு (=முடி) + அம் = கத்திறம் >>> கதிதம் = சொல்லி முடிந்தது.

கதிமை

பெருமை

கதிமை

கதி (=பெரு) + மை = கதிமை = பெருமை

கதியால்

வேலியில் கட்டும் தண்டு

கந்திழள்

கந்து (=வேலி) + இழை (=கட்டு) + அள் (=தண்டு) = கந்திழள் >>> கதியால் = வேலியில் கட்டுகின்ற தண்டு

கதிர்

ஒளி

கறீர்

கறை (=கருமை, இருள்) + ஈர் (=அறு) = கறீர் >>> கதிர் = இருளை அறுப்பது = ஒளி

கதிர்

பயிர்த் தாள்

கற்றீர்

கற்றை (=கட்டு) + ஈர் (=உண்ணு, அறு) = கற்றீர் >>> கத்திர் >>> கதிர் = அறுத்துக் கட்டப்படும் உணவு = பயிர்த் தாள்.

கதிர்

ஆரக்கால்

கந்தீர்

கந்து (=வண்டி, அச்சு, கட்டு, பிணி) + ஈர் (=இழு, நீளு) = கந்தீர் >>> கதிர் = வண்டியின் அச்சில் பிணிக்கப்படும் நீண்ட பொருள்.

கதை

கேட்கப்பட்டது

கதை

காது (=செவி, கேள்) + ஐ = கதை = செவியால் கேட்கப்பட்டது

கதை

சொல், பேச்சு

கத்தை

கத்து (=ஒலி, சொல்லு) + ஐ = கத்தை >>> கதை = சொல், பேச்சு

கதை

வழிமுறை

கதி

கதி (=வழி) + ஐ = கதை = வழிமுறை

கதை

சொல்லு

கத்து

கத்து (=ஒலி, சொல்லு) + ஐ = கத்தை >>> கதை = சொல்லு, பேசு

கதை

தாக்குகின்ற வலிய கட்டை

காழ்தை

காழ் (=மரக்கட்டை, வலிமை) + தை (=அடி, தாக்கு) = காழ்தை >>> கய்தை >>> கதை = தாக்குவதற்கான வலுவான மரக்கட்டை = கதாயுதம்

கந்தகம்

தானே எரிகின்ற ஒளிரும் பொருள்

கந்தகம்

காந்து (=எரி, ஒளிர்) + அகம் (=தான், பொருள்) = கந்தகம் = தானே எரியக்கூடிய ஒளிரும் பொருள்.

கந்தம்

நறுமணம், நறுமணப்பொருள்

கந்தேம்

கம் (=வாசனை) + தேம் (=இனிமை) = கந்தேம் >>> கந்தம் = இனிய வாசனை = நறுமணம், நறுமணப் பொருள்.

கந்தம்

கிழங்கு, பூண்டு, வெங்காயம்

கந்தம்

கந்து (=நடு, புதை) + அம் (=உணவு) = கந்தம் = புதைந்துள்ள உணவு = கிழங்கு, பூண்டு, வெங்காயம் முதலியன.

கந்தம்

பாதரசம்

கந்தம்

கந்து (=கெடு) + அம் (=நீர், வெண்மை) = கந்தம் = கேடு தரும் வெண்ணிற நீர் = பாதரசம்

கந்தரசம்

சந்தனம்

கந்தரசம்

கந்தம் (=நறுமணப் பொருள்) + அரசு (=அரசன்) + அம் = கந்தரசம் = நறுமணப் பொருட்களின் அரசன் = சந்தனம்

கந்தரம்

கழுத்து

கத்தறம்

கத்து (=ஒலிஎழுப்பு, உடற்பொருத்து) + அறை (=உறுப்பு) + அம் = கத்தறம் >>> கந்தரம் = ஒலி எழுப்புகின்ற உடற்பொருத்தாகிய உறுப்பு.

கந்தரம்

மேகம்

கற்றரம்

கால் (=மழை) + தரு + அம் = கற்றரம் >>> கத்தரம் >>> கந்தரம் = மழைதருவது

கந்தரம்

மலைக்குகை, மலைப்பிளவு

கற்றறம்

கல் (=மலை) + தறி (=வெட்டு, பிள) + அம் = கற்றறம் >>> கத்தரம் >>> கந்தரம் = மலைப்பிளவு, மலைக்குகை

கந்தருவம், கந்தர்வம்

குதிரை

கத்தாரவம்

கதி (=பயணம், தன்மை) + ஆரம் (=வட்டம்) + அம் = கத்தாரவம் >>> கந்தர்வம் = வட்டமாகப் பயணிக்கும் தன்மை கொண்டது.

கந்தருவம், கந்தர்வம்

இன்னிசை

கத்தார்வம்

காது (=செவி) + ஆர்வு (=விருப்பம், ஒலி) + அம் = கத்தார்வம் >>> கந்தர்வம் = செவிக்கு விருப்பமான ஒலி = இன்னிசை

கந்தல், கந்தை

கிழிந்த துண்டு

கத்தை, கத்தல்

கது (=பிளவு, துண்டு, கிழிசல்) + ஐ = கத்தை >>> கந்தை = கிழிந்த துண்டு

கந்தல்

அறியாமையால் வரும் கேடு

கந்தல்

கந்து (=கெடு) + அல் (=மயக்கம், அறியாமை) = கந்தல் = அறியாமையால் வரும் கேடு

கந்தரகோளம்

ஒழுங்கற்ற நிலை

கந்தறைகோலம்

கந்து (=கட்டு, ஒழுங்கு) + அறை (=இன்மை) + கோலம் (=நிலை) = கந்தறைகோலம் >>> கந்தரகோளம் = ஒழுங்கற்ற நிலை

கந்தல்கூளம்

ஒழுங்கற்ற நிலை

கந்தல்கோலம்

கந்து (=கட்டு, ஒழுங்கு) + அல் (=இன்மை) + கோலம் (=நிலை) = கந்தல்கோலம் >>> கந்தல்கூளம் = ஒழுங்கற்ற நிலை

கந்தவகம்

மூக்கு, மோப்பம்

கந்தவகம்

கந்தம் (=மணம்) + அகம் (=உறுப்பு, அறிவு) = கந்தவகம் = உறுப்பால் மணம் அறிதல் (=மோப்பம்), மணம் அறியும் உறுப்பு (=மூக்கு)

கந்தவகன், கந்தவாகன்

காற்று

கந்தவகன்

கந்தம் (=வாசனை) + அகை (=செலுத்து) + அன் = கந்தவகன் = வாசனையைச் செலுத்துபவன் = காற்று.

கந்தவாரம்

அந்தப்புரம்

கந்தவேறம்

கந்து (=வேலி, தடுப்பு) + அவை (=இடம்) + ஏறு (=ஆண்) + அம் = கந்தவேறம் >>> கந்தவாரம் = ஆண்கள் தடுக்கப்பட்ட இடம் = அந்தப்புரம்

கந்தளம்

கவசம்

கந்தளம்

கந்து (=உடல், மார்பு, வேலி, மறைப்பு) + அள் (=இரும்பு) + அம் = கந்தளம் = மார்பை மறைக்கின்ற இரும்பு = கவசம்.

கந்தாரம்

கள்

கத்தாரம்

கதுவு / கது (=கலங்கு, மயங்கு) + ஆர் (=உண்டாக்கு, உண்ணு) + அம் (=நீர்) = கத்தாரம் >>> கந்தாரம் = மயக்கம் உண்டாக்கும் நீருணவு.

கந்தாரம்

இன்னிசை

கத்தாரம்

காது (=செவி) + ஆர் (=விரும்பு, ஒலி) + அம் = கத்தாரம் >>> கந்தாரம் = செவிக்கு விருப்பமான ஒலி = இன்னிசை

கந்தி

வாசப் பொருள்

கந்தீ

கந்தம் (=வாசனை) + ஈ (=தா) >>> கந்தீ >>> கந்தி = வாசனை தருவது

கந்தி

பாக்கு, கமுகு

காழ்த்தீ

காழ் (=ஒளி, நிறம், முற்று, வலிமை, கொட்டை) + தீ = காழ்த்தீ >>> கந்தி = தீ நிறத்தில் முற்றிய வலுவான கொட்டை.

கந்தி

கந்தகம்

கற்றீ

கால் (=காற்று, வெளிப்படு) + தீ (=எரி) = கற்றீ >>> கத்தி >>> கந்தி = காற்றில் வெளிப்பட்டதும் எரியக் கூடியது = கந்தகம்

கந்திரி, கந்தூரி

பிச்சைக்காரன்

கந்திரீ

கந்து (=நாணு, வளை, பணி) + இரை (=உணவு) + ஈ (=கொடு) = கந்திரீ >>> கந்திரி >>> கந்தூரி = உணவு கொடு எனப் பணிபவன்.

கந்து

பாய்ச்சல்

கற்று

காலு / காறு (=குதி, பாய்) + உ = கற்று >>> கத்து >>> கந்து = பாய்ச்சல்

கந்து

கட்டுத்தறி, மரத்தூண்

காழ்த்தூ

காழ் (=மரக்கட்டை) + தூ (=வலிமை) = காழ்த்தூ >>> கந்து = வலுவான மரக்கட்டை = மரத்தூண்.

கந்து

பற்றுக்கோடு

கத்து

கதுவு / கது (=பற்று) + உ = கத்து >>> கந்து = பற்றுவதற்கானது.

கந்து

உடல் மூட்டு

கற்றூ

கற்றை (=கட்டு, மூட்டு) + ஊ (=தசை, உடல்) = கற்றூ >>> கத்து >>> கந்து = உடல் மூட்டு = உடற் சந்துகள்.

கந்து

அச்சுமரம்

கற்று

கால் (=சக்கரம், தண்டு) + தை (=பொருத்து) + உ = கற்று >>> கத்து >>> கந்து = சக்கரத்துடன் பொருத்தப்பட்ட தண்டு.

கந்துகம்

பந்து

கந்திகம்

கந்து (=வேலி, வளைவு) + இகு (=திரள்) + அம் = கந்திகம் >>> கந்துகம் = வளைந்து திரண்ட பொருள் = பந்து.

கந்துகம்

குதிரை

கத்துகம்

கதி (=விரைவு) + உகை (=செலுத்து) + அம் = கத்துகம் >>> கந்துகம் = விரைவாகச் செலுத்தப்படுவது = குதிரை

கந்தோதம்

தாமரை

கந்துறம்

காந்து (=எரி) + உறை (=மலர், ஒப்பு, நீர்) + அம் = கந்துறம் >>> கந்தோதம் = நீரில் எரிவதைப் போன்ற மலர் = தாமரை.

கப்சா

பொய்யுரை

கப்புயா

கப்பு (=கவடு, வஞ்சனை) + உய் (=சொல்) + ஆ = கப்புயா >>> கப்புசா >>> கப்சா = வஞ்சனைச் சொல்.

கப்படம்

கிழிந்த ஆடை

கப்பாடம்

கப்பு (=பிளவு, கிழிசல்) + ஆடை + அம் = கப்பாடம் >>> கப்படம் = கிழிந்தவுடை

கப்படா

இடுப்பு

கவடு

கவடு (=தொடை சந்து) + ஆ = கவடா >>> கப்படா = தொடை சந்துள்ள இடம்

கப்பணம்

கைவேல்,முள்முனைத் தண்டு

கம்பாணம்

கம்பு (=கோல், தண்டு) + ஆணி (=கூரிரும்பு, மேன்மை, மேல்) + அம் = கம்பாணம் >>> கப்பணம் = மேலே கூரிரும்பு கொண்ட தண்டு = கைவேல்.

கப்பணம்

அரிகண்டம்

காழ்மென்னம்

காழ் (-இரும்பு, வட்டம்) + மென்னி (=கழுத்து) + அம் = காழ்மென்னம் >>> கப்பென்னம் >>> கப்பணம் = கழுத்தில் அணியும் வட்டமான இரும்பு.

கப்பணம்

காப்புக் கயிறு

கப்பணம்

காப்பு + அண் (=கயிறு) + அம் = கப்பணம் = காப்புக் கயிறு

கப்பணம்

சணல் கயிறு

காழ்பன்னம்

காழ் (=கயிறு) + பன்னி (=சணல்) + அம் = காழ்பன்னம் >>> கப்பணம் = சணல் கயிறு

கப்பம்

திறை, வரி

கவ்வம்

கவி (=வளை, பணி, கொடு) + அம் = கவ்வம் >>> கப்பம் = பணிந்து கொடுப்பது

கப்பரை

திருநீற்றுப் பாத்திரம்

கப்பறை

காப்பு (=திருநீறு) + அறை (=பாத்திரம்) = கப்பறை >>> கப்பரை = திருநீற்றுப் பாத்திரம்

கப்பரை

பிச்சைக்கலம்

கவ்வறை

காவு (=சும) + அறை (=பாத்திரம்) = கவ்வறை >>> கப்பரை = சுமக்கும் பாத்திரம்

கப்பரை

மட்கலம், செப்புப் பாத்திரம்

கவ்வறை

காவி (=சிவப்பு) + அறை (=பாத்திரம்) = கவ்வறை >>> கப்பரை = செந்நிறப் பாத்திரம் = மட்கலம், செப்புப் பாத்திரம்

கப்பல்

மரக்கலம்

கவ்வால், கம்மாள்

(1) கா (=தண்டு, மரம், பாதுகாப்பு) + ஆல் (=ஒலி, நீர், ஆடு, அசை, செல்) = கவ்வால் >>> கப்பல் = ஒலிக்கும்நீரில் அசைந்துசெல்லும் பாதுகாப்புடைய மரம். (2) கம் (=நீர், விரை) + ஆள் (=வழங்கு) = கம்மாள் >>> கப்பல் = நீரில் விரையுமாறு வழங்கப்படுவது = மரக்கலம்.

கப்பாசு

பருத்திக் காய்

காய்பஞ்சு

காய் + பஞ்சு = காய்பஞ்சு >>> கப்பச்சு >>> கப்பாசு = பஞ்சுடைய காய்

கப்பி

பொய்யுரை

கப்புய்

கப்பு (=கவடு, வஞ்சனை) + உய் (=சொல்) = கப்புய் >>> கப்பு >>> கப்பி = வஞ்சிக்கும் சொல் = பொய்யுரை.

கப்பி

கயிறிழுக்கும் வட்டப் பொருள்

காழ்புய்

காழ் (=கயிறு, இரும்பு, மரம், வட்டம்) + புய் (=பறி, இழு) = காழ்புய் >>> கப்பு >>> கப்பி = கயிறு இழுப்பதற்கான வட்டமான இரும்பு / மரம்.

கப்பு

பேச்சு

கவ்வை

கவ்வை (=ஒலி, பேச்சு) + உ = கவ்வு >>> கப்பு

கப்புரம்

கற்பூரம்

கப்புரம்

கப்பு (=ஒளிர், துண்டு) + உரு (=எரி) + அம் (=வெண்மை) = கப்புரம் = எரிந்து ஒளிதரும் வெண்ணிறத் துண்டு.

கபடம்

வஞ்சனை

கவடு

கவடு (=கவர், வஞ்சனை) + அம் = கவடம் >>> கபடம்

கபந்தம்

முட்டாள்

கப்பறம்

கப்பு (=மூடு) + அறி + அம் = கப்பறம் >>> கபதம் >>> கபந்தம் = அறிவு மூடப்பட்டவன் = முட்டாள்

கபம்

சளி, கோழை

கப்பம்

கப்பு (=பேச்சு, மூடு, அடை, அடர்த்தி) + அம் (=நீர், வெண்மை) = கப்பம் >>> கபம் = பேசும்போது அடைக்கின்ற அடர்த்தியான வெண்ணிற நீர்ப்பொருள் = கோழை

கபர்

செய்தி

கப்பார்

கப்பு (=பேச்சு) + ஆர் (=பூமி, உலகம்) = கப்பார் >>> கபர் = உலகப் பேச்சு.

கபளீகரம்

முழுமையாக விழுங்குதல்

கப்பலைகரம்

கப்பு (=விழுங்கு) + அலை (=முழுமை) + கரம் (=செயல்) = கப்பலைகரம் >>> கபலிகரம் >>> கபளீகரம் = முழுமையாக விழுங்கும் செயல்.

கபாடம்

கதவு

கப்பாறம்

(1) கப்பு (=மூடு, அடை) + ஆறு (=வழி) + அம் = கப்பாறம் >>> கபாடம் = வழியை மூடி அடைப்பது. (2) காப்பு + ஆறு (=வழி) + அம் = கப்பாறம் >>> கபாடம் = வழியைக் காப்பது = கதவு.

கபாடம்

கடுங்காவல்

கப்படம்

காப்பு (=காவல்) + அடை (=திணி) + அம் = கப்படம் >>> கபாடம் = திணிகாவல்

கபாடம்

பொதி, மூட்டை

கவடம்

காவு (=சும) + அடை (=திணி) + அம் = கவடம் >>> கபாடம் = திணித்த சுமை

கபாத்து, கவாத்து

கிளைகளை ஒழுங்காக்குதல்

கப்பாறு

கப்பு (=இளமை, கிளை) + ஆறு (=முறை, ஒழுங்கு, அறுத்தல்) = கப்பாறு >>> கபாது >>> கபாத்து = இளங்கிளைகளை அறுத்து ஒழுங்கு செய்தல்.

கபாபு

எரிக்கப்பட்ட தசை உணவு

கப்பாப்பு

கப்பு (=ஒளிர், எரி, உண்ணு) + ஆப்பு (=உடல், தசை) = கப்பாப்பு >>> கபாபு = எரிக்கப்பட்ட தசை உணவு.

கபாலம்

மண்டை ஓடு

காழ்பாலம்

காழ் (=தோல், ஓடு, வலிமை) + பால் (=வெண்மை, பிரிவு, நீக்கம்) + அம் = காழ்பாலம் >>> கபாலம் = தோல் நீக்கிய வலுவான வெண்ணிற ஓடு.

கபி, கவி

குரங்கு

கப்புழு

கப்பு (=கிளை, உண்ணு) + உழு (=தாவு, பாய், மயிர்கோது) = கப்புழு >>> கப்பு >>> கபி >>> கவி = கிளைகளில் உண்பதும் தாவிப் பாய்வதும் மயிர் கோதுவதுமான விலங்கு = குரங்கு.

கபிலம்

செம்பழுப்பு

கவிலம்

காவி (=செம்மை, பழுப்பு) + இலை (=தோன்று) + அம் = கவிலம் >>> கபிலம் = செம்மையும் பழுப்பும் தோன்றுவது = செம்பழுப்பு

கபிலை

பசு

காழ்முலை

காழ் (=மிகு, பெரு) + முலை = காழ்முலை >>> கபுலை >>> கபிலை = பெருத்த முலையைக் கொண்டது = பசு.

கபிலை

யானை

காழ்புலை

காழ் (=கருமை, மிகு, பெரு) + புலை (=தசை, உடல்) = காழ்புலை >>> கபுலை >>> கபிலை = பெரிய கருநிற உடலைக் கொண்டது = யானை.

கபூல், கபூலி

உடன்பாடு, சம்மதம்

கப்பூள்

கப்பு (=வளைவு, பணிவு, ஒப்பு) + உள் (=உள்ளம்) = கப்பூள் >>> கபூல், கபூலி = உள்ளத்தே ஒப்புதல் = சம்மதம்

கபூலேத்து

உடன்படிக்கைப் பத்திரம்

கப்பூளெழுத்து

கப்பூள் (=சம்மதம், உடன்பாடு) + எழுத்து = கப்பூளெழுத்து >>> கபூலேத்து = எழுதப்பட்ட உடன்படிக்கை.

கபோதகம்

புறா

கவுதாகம்

காவி (=செம்மை) + உதை (=கால்) + ஆகம் (=கண்) = கவுதாகம் >>> கபுதகம் >>> கபோதகம் = சிவந்த கால்களையும் கண்களையும் கொண்டது = புறா.

கபோதம்

புறா

கப்போதம்

கப்பு (=ஒளிர், எரி, நிறம், கால்) + ஓதி (=கண்) + அம் = கப்போதம் >>> கபோதம் = எரிநிறக் கால்களையும் கண்களையும் கொண்டது = புறா.

கபோதம்

கரும்புறா

காழ்புறம்

காழ் (=கருமை) + புறா + அம் = காழ்புறம் >>> கபுதம் >>> கபோதம் = கரும்புறா

கபோதி

குருடன்

கப்போதி

கப்பு (=மூடு) + ஓதி (=கண்) = கப்போதி >>> கபோதி = மூடிய கண்ணுடையவன் = குருடன்.

கபோதி

முட்டாள்

கப்போத்தி

கப்பு (=மூடு) + ஓத்து (=கல்வி, அறிவு) + இ = கப்போத்தி >>> கபோதி = மூடிய அறிவுடையவன் = முட்டாள்.

கபோலம்

கன்னம்

கவுள்

கவுள் (=கன்னம்) + அம் = கவுளம் >>> கபுலம் >>> கபோலம்

கம்

நீர்

கயம்

கயம் (=நீர்) >>> காம் >>> கம். ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்

மண்டையோடு, தலை

கழம்

காழ் (=வலிமை, ஓடு) + அம் (=வெண்மை) = கழம் >>> காம் >>> கம் = வலிமையான வெண்ணிற ஓடு = மண்டையோடு.  ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்

கார்மேகம்

கழம்

காழ் (=கருமை, முற்று) + அம் (=நீர்) = கழம் >>> காம் >>> கம் = நீர் முற்றிய கரும்பொருள் = மேகம்.  ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்

ஆகாயம்

கயம்

கை (=இடம், செலுத்து, வீசு) + அம் (=ஒளி) = கயம் >>> காம் >>> கம் = ஒளி வீசும் இடம் = ஆகாயம்.  ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்

உயிர், காற்று

கழம்

கழி (=தசை, உடல், நீங்கு, சாவு) + அம் = கழம் >>> காம் >>> கம் = சாகும்போது உடலில் இருந்து நீங்குவது = உயிர்க் காற்று.

கம்

தொழில், செயல்

கயம்

கை (=செயல்) + அம் = கயம் >>> காம் >>> கம் = செயல், தொழில்.  ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்

நுட்பவேலை, கம்மியர் தொழில்

கயம்

கை (=சிறுமை, நுட்பம், செயல்) + அம் = கயம் >>> காம் >>> கம் = நுட்பமான செயல்.  ஒ.நோ: (1) மயல் (=மயக்கம்) >>> மால். (2) பயல் (=பாதி) >>> பால். (3) கழல் (=கால்) >>> கால். (4) அழல் (=நஞ்சு) >>> ஆல்.

கம்பத்தம், கம்மத்தம்

விவசாயம்

கம்பாத்தம்

கம் (=தொழில்) + பாத்தி (=வயல்) + அம் = கம்பாத்தம் >>> கம்பத்தம் = வயலுக்கான தொழில் = விவசாயம்

கம்பத்தம், கம்மத்தம்

விவசாய பூமி

கப்பத்தம்

கப்பு (=விழுங்கு, உண்ணு) + அத்து (=கூட்டு, பெருக்கு, இடம்) + அம் = கப்பத்தம் >>> கம்பத்தம் = உணவைப் பெருக்கும் இடம் = விவசாய பூமி

கம்மத்து, கம்பத்து

ஆடம்பரம்

கம்மத்து

கம் (=செயல்) + மதம் (=செருக்கு, பெருமை) + உ = கம்மத்து >>> கம்பத்து = பெருமைச் செருக்குடைய செயல்.

கம்பத்து

கப்பலின் ஓட்டை

கப்பற்று

கப்பல் + அறை (=ஓட்டை) + உ = கப்பற்று >>> கம்பத்து = கப்பலின் ஓட்டை

கம்பம்

தூண்

கப்பு

கப்பு (=தூண்) + அம் = கப்பம் >>> கம்பம்

கம்பம்

தண்டு

கப்பு

கப்பு (=கிளை, தண்டு) + அம் = கப்பம் >>> கம்பம்

கம்பம், கம்பனம்

அசைவு, நடுக்கம்

கவ்வம்

கவ்வை (=ஒலி, அதிர்வு) + அம் = கவ்வம் >>> கம்பம் = நடுக்கம், அசைவு

கம்பல்

ஆடை

கப்பாள்

கப்பு (=மூடு, உடுத்து) + ஆள் (=மனிதர்) = கப்பாள் >>> கம்பல் = மனிதர் உடுத்துவது = ஆடை

கம்பலம், கம்பளம், கம்பளி

கயிற்றாலான துணி

காழ்வாளம்

காழ் (=துணி) + வாள் (=கயிறு, நார்) + அம் = காழ்வாளம் >>> கவ்வளம் >>> கப்பளம் >>> கம்பலம் = கயிற்றால் / நாரால் ஆன துணி.

கம்பலம்

மேற்கட்டி, மேல் மறைப்பு

கப்பாலம்

கப்பு (=மூடு) + ஆலம் (=ஆகாயம்) = கப்பாலம் >>> கம்பலம் = ஆகாயத்தை மறைப்பது = மேற்கட்டி, மேல்மறைப்பு

கம்பலை, கம்பலம்

நடுக்கம், அச்சம்

கவ்வள்ளை

கவ்வை (=ஒலி, அதிர்வு) + அள்ளை (=விலாப்பகுதி) = கவ்வள்ளை >>> கம்பலை = விலாப்பகுதி அதிர்தல் = அச்ச நடுக்கம்.

கம்பலை

துன்பம்

கம்மலை

காமம் (=இன்பம்) + அல் (=இன்மை) + ஐ = கம்மலை >>> கம்பலை = இன்பம் அற்றது = துன்பம்.

கம்பலை

சண்டை

காழ்ப்பாலை

காழ்ப்பு (=வெறுப்பு) + ஆலு (=ஒலி, சத்தமிடு) + ஐ = காழ்ப்பாலை >>> கம்பலை = வெறுப்புடன் சத்தமிடுதல்

கம்பளம்

சிவப்புத் துணி

காழ்மாலம், காழ்ப்பாளம்

(1) காழ் (=துணி) + மால் (=சிவப்பு) + அம் = காழ்மாலம் >>> கம்மலம் >>> கம்பளம் = சிவப்புத் துணி. (2) காழ் (=சின, எரி, நிறம்) + பாளம் (=துணி) = காழ்ப்பாளம் >>> கம்பளம் = எரிநிறத் துணி.

கம்பளம்

செம்மறி

கம்மாலம்

கம் (=ஆடு) + மால் (=சிவப்பு) + அம் = கம்மாலம் >>> கம்பளம் = சிவப்பாடு

கம்பளம், கம்பலை

வயல்

கப்பளம்

கப்பு (=விழுங்கு, உண்ணு) + அளம் (=செறிவு, நிலம்) = கப்பளம் >>> கம்பளம் = உணவு செறிந்திருக்கும் நிலம் = வயல்.

கம்பளி

தாறுமாறு, ஒழுங்கின்மை

கய்ம்மாலி

கை (=ஒழுங்கு, வரிசை) + மால் (=மயங்கு) + இ = கய்ம்மாலி >>> கம்பளி = வரிசை மயங்குதல் = தாறுமாறு.

கம்பளி

வீண், பயனற்றது

காழ்பலி

காழ் (=ஓட்டை, இன்மை) + பலம் (=பலன்) + இ = காழ்ப்பலி >>> கப்பளி >>> கம்பளி = பலன் இல்லாதது = வீண்.

கம்பாகம்

கப்பல் கயிறு

கப்பக்கம்

கப்பல் + அக்கம் (=கயிறு) = கப்பக்கம் >>> கம்பாகம் = கப்பலின் கயிறு

கம்பான்

கப்பல் கயிறு

கப்பண்

கப்பல் + அண் (=கயிறு) = கப்பண் >>> கம்பான் = கப்பலின் கயிறு

கம்பி

ஒலி, அதிர், நடுங்கு, அசை

கவ்வி

கவ்வை (=ஒலி, அதிர்வு) + இ = கவ்வி >>> கம்பி = ஒலி, அதிர், நடுங்கு, அசை

கம்பிதம்

நடுக்கம்

கவ்விதம்

கவ்வை (=ஒலி, அதிர்வு, நடுக்கம்) + இதம் = கவ்விதம் >>> கம்பிதம் = நடுக்கம்

கம்பீரம்

மிக்க வலிமை

காழ்ப்பீரம்

காழ் (=வலிமை) + பீர் (=பெருக்கு, மிகுதி) + அம் = காழ்ப்பீரம் >>> கம்பீரம் = மிக்க வலிமை.

கம்பீரம்

முதிர்ந்த அறிவு

காழ்வீறம்

காழ் (=முதிர்) + வீறு (=அறிவு) + அம் = காழ்வீறம் >>> கவ்வீரம் >>> கம்பீரம் = முதிர்ந்த அறிவு

கம்பீரம்

மிக்க பள்ளம், ஆழம்

கப்பீரம்

கப்பி (=பெருகு, மிகு) + இரு (=உள்ளிறங்கு, பள்ளமாகு) + அம் = கப்பீரம் >>> கம்பீரம் = மிகுதியான பள்ளம், ஆழம்.

கம்பு

தூண், தண்டு

கப்பு

கப்பு (=தூண், தண்டு) >>> கம்பு

கம்பு

சங்கு

கம்முழை

கம் (=வெண்மை, உயிர்க்காற்று) + உழை (=ஒலி) = கம்முழை >>> கம்புயை >>> கம்பு = உயிர்க்காற்றால் ஒலிக்கப்படும் வெண்பொருள்.

கம்புள்

சங்கு

கம்புள்

கம் (=வெண்மை, உயிர்க்காற்று) + புள் (=ஒலி) = கம்புள் = உயிர்க்காற்றால் ஒலிக்கப்படும் வெண்பொருள்.

கம்மம்

கொல்லர் தொழில்

காழ்வம்

காழ் (=இரும்பு, பொன்) + வே (=எரி, புடம்வை) + அம் = காழ்வம் >>> கவ்வம் >>> கம்மம் = இரும்பை / பொன்னைத் தீயில் புடம் வைத்தல்.

கம்மி

தொழிலாளி

கம்மி

கம் (=வேலை) + இ = கம்மி = வேலைக்காரன்

கம்மி

குறைவு

கம்மி

கம்மு (=அடங்கு, குறை) + இ = கம்மி = குறைவு

கம்மியம்

கொல்லர் தொழில்

காழ்ப்பிழம்

காழ் (=இரும்பு, பொன்) + பை (=சின, எரி) + இழு (=நீட்டு) + அம் = காழ்ப்பிழம் >>> கம்மியம் = இரும்பை / பொன்னை எரித்து நீட்டுதல் = கொல்லர் தொழில்

கமகம்

குறிப்பு

கமகம்

கம் (=அடங்கு, குறை) + அகம் (=அறிவு) = கமகம் = குறையறிவு = குறிப்பு

கமகன்

குறிப்பறிபவன்

கமகன்

கமகம் (=குறிப்பறிவு) + அன் = கமகன் = குறிப்பை அறிபவன்

கமடம்

ஆமை

காழ்பாடம்

காழ் (=வலிமை, ஓடு) + பாடு (=கேடு, நிகழ்வு, உடல், மறைப்பு) + அம் = காழ்பாடம் >>> கமடம் = கேடு நிகழ்ந்தால் வலுவான ஓட்டுக்குள் உடலை மறைத்துக் கொள்வது = ஆமை.

கமண்டலம்

தொங்குநீர்ப் பாத்திரம்

கம்மண்டாலம்

கம் (=நீர்) + மண்டை (=பாத்திரம்) + ஆலு (=தொங்கு) + அம் = கம்மண்டாலம் >>> கமண்டலம் = தொங்குகின்ற நீர்ப் பாத்திரம்

கமம்

விவசாயம், வயல்

கப்பம்

கப்பு (=விழுங்கு, உண்ணு, பெருக்கு) + அம் = கப்பம் >>> கம்மம் >>> கமம் = உணவைப் பெருக்குதல் = விவசாயம், விவசாய நிலம்.

கமலம்

தாமரை

கப்பாலம்

(2) கப்பு (=மூடு) + ஆலம் (=கருமை, இருள், நீர், பூ) = கப்பாலம் >>> கம்மாலம் >>> கமலம் = இரவில் மூடிக்கொள்ளும் நீர்ப்பூ..

கமலம்

நீர்

கழிமலம்

கழி (=நீக்கு) + மலம் (=கறை) = கழிமலம் >>> கய்மலம் >>> கமலம் = கறைகளை நீக்குவது = நீர்.

கமலம்

எல்லை அற்றது, பேரெண்

கம்பலம்

கம்பை (=வரம்பு, எல்லை) + அல் (=இன்மை) + அம் = கம்பலம் >>> கம்மலம் >>> கமலம் = எல்லை அற்றது.

கமலம்

பட்டை தீட்டிய வைரம்

காழ்பாலம்

காழ் (=ஒளி, வைரம்) + பால் (=பக்கம்) + அம் = காழ்பாலம் >>> கமலம் = ஒளிரும் பக்கங்களைக் கொண்ட வைரம்.

 

 

 

 

கமலை

வயல் நீரேற்றம்

கமாலை

கமம் (=வயல், நிறைவு) + ஆல் (=பாத்திரம், நீர்) + ஐ = கமாலை >>> கமலை = பாத்திரத்தால் வயலில் நீர் நிறைத்தல்.

கமனம்

வானில் பறக்கும் பேராற்றல்

கய்வானம்

கை (=செலுத்து, செல், ஆற்றல், மனிதன்) + வான் (=ஆகாயம், பெருமை) + அம் = கய்வானம் >>> கமனம் = ஆகாயத்தில் செல்லக்கூடிய மனிதனின் பேராற்றல்.

கமனம்

செல்லுகை

கமணம்

கம் (=விரை, செல்) + அணம் = கமணம் >>> கமனம் = செல்லுகை

கமனி

செல்

கமணி

கமணம் (=செல்லுகை) + இ = கமணி >>> கமனி = செல்லு

கமான்

குறடு, வளைவு

கவண்

கவண் (=கவட்டை) >>> கமான் = கவட்டை போன்றது = குறடு, வளைவு

கமி

மிளகு

கப்பீ

கப்பு (=எரி, தொண்டையை அடை, உண்ணு) + ஈ (=கொடு, வகு, நீக்கு) = கப்பீ >>> கம்மி >>> கமி = தொண்டை அடைப்பை நீக்கும் எரிச்சல் தரும் உணவு.

கமி

நட, செல்

கமி

கம் (=விரை, செல்) + இ = கமி = செல், நட

கமி, கமை

பொறு, தாங்கு

காவு

காவு (=சும, பொறு) + இ = கவி >>> கமி = பொறு, தாங்கு

கமிச்சு, கமீசு

மேலாடை

காழ்மிச்சு

காழ் (=ஆடை) + மிசை (=மேல்) + உ = காழ்மிச்சு >>> கமிச்சு = மேலாடை

கமீர்

புளிப்பு

கவீர்

கவ்வை (=கள்) + ஈர் (=இனிமை, சுவை) = கவீர் >>> கமீர் = கட்சுவை

கமுகு

பாக்கு

காழ்முகு

காழ் (=மரம், வலிமை, கொட்டை) + முகை (=தோன்று, கூட்டம்) + உ = காழ்முகு >>> கமுகு = மரத்தில் கூட்டமாகத் தோன்றும் வலுவான கொட்டை.

கமை

பொறுமை

கவை

காவு (=பொறு) + ஐ = கவை >>> கமை = பொறுமை

கமை

மலை

கமை

கா (=பொறு, சும) + மை (=மேகம்) = கமை = மேகங்களைச் சுமப்பது = மலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.