சொல் |
பொருள் |
தமிழ்ச் சொல் |
மூலச்சொல்லும் தோன்றும் முறையும் |
கடயம் |
கைவளை, விலங்கு |
கட்டயம் |
கட்டு (=மணிக்கட்டு, வளைத்துப்பிடி, அணி) + அயம் (=இரும்பு) = கட்டயம் >>> கடயம் = மணிக்கட்டை வளைத்துப் பிடிக்குமாறு அணியும் இரும்பு. |
கடரி |
மரமஞ்சள் |
கட்டரி |
கட்டு (=உடல், கூட்டு, பூசு) + அரி (=அழகு, ஒளி) = கட்டரி >>> கடரி = உடலுக்கு அழகிய ஒளியைக் கூட்ட பூசப்படுவது = மரமஞ்சள். |
கடாய், கடா |
வாணலி |
கடாழி |
கடு (=சின, எரி) + ஆழி (=வட்டப்பொருள், பள்ளமாகு) = கடாழி >>> கடாயி >>> கடாய், கடா = எரிப்பதற்கான வட்டவடிவ பள்ளமுடைய பொருள். |
கடாகம் |
கோளம், உருண்டை |
கணகம், கட்டகம் |
(1) கணம் (=திரட்சி, வட்டம்) + அகம் (=பொருள்) = கணகம் >>> கடகம் >>> கடாகம் = வட்டமாகத் திரண்ட பொருள். (2) கட்டு (=திரட்டு, வளைவு) + அகம் (=பொருள்) = கட்டகம் >>> கடாகம் = வளைத்துத் திரட்டிய பொருள் = கோளம், உருண்டை. |
கடாகம் |
கொப்பரை |
கடகம் |
கடை (=சுழற்று, வட்டமாகு, தாழ்வு, பள்ளம்) + அகை (=உயர்) + அம் = கடகம் >>> கடாகம் = வட்டவடிவ பள்ளமுடைய உயரமான பொருள். |
கடாசலம் |
யானை |
கடஞ்செலம் |
கடம் (=மதநீர்) + செல் (=ஒழுகு, மலை) + அம் = கடஞ்செலம் >>> கடாசலம் = மதநீர் ஒழுகும் மலை = யானை |
கடாட்சம் |
கடைக்கண் பார்வை |
கடாயம் |
கடை (=இறுதி, பகுதி) + ஆய் (=பார்) + அம் = கடாயம் >>> கடாசம் >>> கடாச்சம் >>> கடாட்சம் = இறுதிப் பகுதியால் பார்த்தல். |
கடாட்சம் |
அருட்பார்வை |
கடாயம் |
கடுமை (=துன்பம்) + ஆய் (=நீக்கு, பார்) + அம் = கடாயம் >>> கடாசம் >>> கடாச்சம் >>> கடாட்சம் = துன்பத்தை நீக்கும் பார்வை. |
கடாயம் |
கசாயம் |
கடாயம் |
கடு (=சின, எரி) + ஆய் (=பிரித்தெடு, வடிகட்டு) + அம் (=மருந்து, நீர்) = கடாயம் = எரித்து வடிகட்டிய மருந்து நீர். |
கடாரம் |
கொப்பரை |
கடேரம் |
கடை (=சுழற்று, வட்டமாகு, தாழ்வு, பள்ளம்) + ஏர் (=உயர்) + அம் = கடேரம் >>> கடாரம் = வட்டவடிவ பள்ளமுடைய உயரமான பொருள். |
கடி |
இடம் |
கடை |
கடை (=பக்கம்) + இ >>> கடி = பக்கம், இடம் |
கடி |
இடுப்பு |
கட்டி |
கட்டு (=உடல், சுற்று, இறுக்கு, உடுத்து, இடம்) + இ = கட்டி >>> கடி = உடலைச் சுற்றி இறுக்கி உடுத்தும் இடம் = இடுப்பு. |
கடி |
பிச்சைப் பாத்திரம் |
கட்டி |
கட்டு (=செலுத்து, கொடு, சம்பாதி, கொள், அடக்கம்) + இ = கட்டி >>> கடி = கொடுப்பதை அடக்கத்துடன் கொள்வதற்கானது = பிச்சைப் பாத்திரம் |
கடி |
நிறைவேறு |
கடி |
கடை (=முடிவு) + இ >>> கடி = முடி, நிறைவேறு |
கடிகாரம் |
காலம் காட்டி |
கடிகாரம் |
கடி (=காலம்) + கை (=காட்டி, பொருள்) + ஆரம் (=வட்டம்) = கடிகாரம் = காலம் காட்டும் வட்டமான பொருள். |
கடிகை |
காலப்பிரிவு |
கடிகை |
கடி (=காலம்) + கை (=சிறுமை) = கடிகை = சிறு காலம் |
கடிகை |
வேகம் |
கடிகை |
கடி (=விரை) + கை = கடிகை = விரைவு, வேகம் |
கடிகை |
கெண்டி |
கடிகை |
கடி (=பாத்திரம்) + இகு (=சொரி, ஊற்று) + ஐ = கடிகை = ஊற்றக்கூடிய பாத்திரம் |
கடிகை, கண்டிகை |
கழுத்து மாலை |
கண்டிகை |
கண்டம் (=கழுத்து) + இகு (=வீழ்த்து, தொங்கவிடு) + ஐ = கண்டிகை >>> கடிகை = கழுத்தில் தொங்கவிடப் படுவது = கழுத்து மாலை. |
கடிகை, கண்டிகை |
தோளணி, கைக்காப்பு |
கட்டுகை |
கட்டு (=அணி, தழுவு, வளைத்துப்பிடி) + கை (=கை, தோள், சிறுபொருள்) = கட்டுகை >>> கண்டிகை >>> கடிகை = கையை / தோளை வளைத்துப் பிடிக்குமாறு அணியும் சிறுபொருள். |
கடிகை |
இடுப்பு அணி |
கட்டிக்கை |
கட்டு (=அணி) + இக்கு (=இடுப்பு) + ஐ = கட்டிக்கை >>> கடிகை = இடுப்பில் அணியப்படுவது = இடைக்கச்சை, இடைவார், மேகலை முதலியன. |
கடிகை |
ஊர்ச்சபை |
கட்டிகை |
கட்டு (=கூட்டம்) + இகம் (=இடம், ஊர்) + ஐ = கட்டிகை >>> கடிகை = ஊர்க்கூட்டம் |
கடிஞை |
பிச்சைப் பாத்திரம் |
கடி |
கடி (=பிச்சைப் பாத்திரம்) + ஐ = கடியை >>> கடிஞை |
கடிஞை |
மண் பானை |
கடுழை |
கடி (=பாத்திரம்) + உழி (=இடம், பூமி, மண்) + ஐ = கடுழை >>> கடிஞை = மண் பாத்திரம் |
கடித்தகம் |
கேடகம் |
கடித்தாக்கம் |
கடி (=விலக்கு, பாதுகாப்பு, பிடி) + தாக்கு + அம் = கடித்தாக்கம் >>> கடித்தகம் = தாக்குதலை விலக்கிப் பாதுகாத்துக் கொள்ளப் பிடிக்கப்படுவது. |
கடித்தடம் |
நிதம்பம் |
கடித்தடம் |
கடி (=இடம், இடுப்பு) + தட (=அகன்ற) + அம் = கடித்தடம் = இடுப்பின் அகன்ற இடம் |
கடிதம் |
மடல் |
கட்டிதம் |
கட்டு (=எழுது, அனுப்பு) + இதம் = கட்டிதம் >>> கடிதம் = எழுதி அனுப்பப்படுவது |
கடிதம் |
வரைவுத் துணி |
கட்டிதம் |
கட்டு (=எழுது, வரை) + இதை (=துணி) + அம் = கட்டிதம் >>> கடிதம் = வரையப்படும் துணி |
கடிதம் |
பசை |
கடிதம் |
கடி (=ஒட்டு) + இதம் = கடிதம் = ஒட்டும் பொருள் |
கடிதாசி, கடுதாசி |
கடிதம் |
கட்டிதழி |
(2) கட்டு (=எழுது, அனுப்பு) + இதழ் (=தாள்) + இ = கட்டிதழி >>> கடிதாசி >> கடுதாசி = எழுதி அனுப்பப்படும் தாள். |
கடியாரம் |
கடிகாரம் |
கடியாரம் |
கடி (=காலம்) + ஆரம் (=வட்டம்) = கடியாரம் = காலம் காட்டும் வட்டம் |
கடினம் |
வலிமை, கொடுமை |
கடுமை |
கடுமை (=வலிமை, கொடுமை) + உண்மை (=தன்மை) + அம் = கடுணம் >>> கடினம் = வலிமை / கொடுமைத் தன்மை |
கடுகம் |
காரமான உணவு |
கடுகம் |
கடு (=உறை, எரி) + உகு (=வெளிப்படுத்து) + அம் (=உணவு) = கடுகம் = எரிச்சலை வெளிப்படுத்தும் உணவு.= சுக்கு, மிளகு, திப்பிலி போன்றன. |
கடுகம் |
மீகாரம் |
கடுக்கம் |
கடுமை (=மிகுதி) + உக்கம் (=தீ, எரி) = கடுக்கம் >>> கடுகம் = மிக்க எரிச்சல். |
கடுகு |
கடுகு விதை |
கடுகு |
கடி (=வாசனை, உணவு) + உகு (=உருக்கு, தேய், சிறு, சிதறு, தூவு) = கடுகு = உருக்கிய உணவில் தூவினால் வாசனை தரும் சிறுபொருள். |
கடுத்தம் |
மடல் |
கட்டுந்தம் |
கட்டு (=எழுது) + உந்து (=அனுப்பு) + அம் = கட்டுந்தம் >>> கடுந்தம் >>> கடுத்தம் = எழுதி அனுப்பப்படுவது = மடல். |
கடுபடி |
ஆரவாரம் |
கடுமறி |
கடுமை (=மிகுதி) + அறை (=ஒலி) + இ = கடுமறி >>> கடுபடி = மிக்க ஒலி |
கடுபத்திரம் |
சுக்கு |
கடிவற்றீரம் |
கடி (=வாசனை, மிகுதி, உறைப்பு, உணவு) + வற்று (=உலர்த்து) + ஈரம் = கடிவற்றீரம் >>> கடுபத்திரம் = ஈரம் உலர்த்திய வாசனைமிக்க உறைப்பான உணவு = சுக்கு. |
கடுபலம் |
இஞ்சி |
கடிவளம் |
கடி (=வாசனை, மிகுதி, உறைப்பு, உணவு) + வளம் (=பசுமை, நீர், சாறு) = கடிவளம் >>> கடுபலம் = வாசனைமிக்க சாறுடைய உறைப்பான பசுமை உணவு = இஞ்சி. |
கடும்பு |
சொந்தம் |
கட்டும்பு |
கட்டு (=சேர், கூட்டு) + உம்பு (=தோன்று, பிற) = கட்டும்பு >>> கடும்பு = பிறப்பால் சேர்ந்த கூட்டம் = சொந்தம். |
கடுவங்கம் |
இஞ்சி |
கடிபாக்கம் |
கடி (=வாசனை, மிகுதி, உறைப்பு, உணவு) + பை (=பசுமை) + ஆக்கம் (=நீர், சாறு) = கடிபாக்கம் >>> கடுவங்கம் = வாசனைமிக்க சாறுடைய உறைப்பான பசுமை உணவு = இஞ்சி. |
கடூரம், கடோரம் |
மீவலிமை, மீக்கொடுமை |
கடூரம் |
கடுமை (=கொடுமை, வலிமை) + உரு (=மிகு) + அம் = கடூரம் >>> கடோரம் = மிகக் கொடுமை / மிக வலிமை |
கண்டகம் |
மரத்தின் வைரம் |
கட்டகம் |
கட்டு (=உறுதி, பகுதி) + அகம் (=மரம், நடு) = கட்டகம் >>> கண்டகம் = மரத்தின் நடுவில் உள்ள உறுதியான பகுதி = மர வைரம். |
கண்டகம் |
முள், வாள், ஆணி |
கட்டகம் |
கடி (=கூர்மை) + அகம் (=பொருள்) = கட்டகம் >>> கண்டகம் = கூரிய பொருள் = முள், ஆணி, வாள். |
கண்டகம் |
காடு |
கட்டகம் |
கட்டு (=கூட்டம், இடம்) + அகம் (=மரம்) = கட்டகம் >>> கண்டகம் = மரங்கள் கூட்டமாக உள்ள இடம் = காடு. |
கண்டகம் |
கொடியது |
கட்டகம் |
கடுமை (=கொடுமை) + அகம் = கட்டகம் >>> கண்டகம் = கொடியது |
கண்டகன் |
கொடியவன் |
கட்டகன் |
கண்டகம் (=கொடுமை) + அன் = கண்டகன் = கொடியவன் |
கண்டகி |
கொடியவள் |
கட்டகி |
கண்டகம் (=கொடுமை) + இ = கண்டகி = கொடியவள் |
கண்டகி |
தாழை, மூங்கில், இலந்தை |
கட்டகி |
கடு (=முள்) + அகம் (=மரம்) + இ = கட்டகி >>> கண்டகி = முள்ளுடைய மரவகைகள் = தாழை, மூங்கில், இலந்தை போன்றன.. |
கண்டகி |
முதுகெலும்பு |
கட்டக்கி |
கடை (=பின்புறம், முதுகு) + அக்கு (=எலும்பு) + இ = கட்டக்கி >>> கண்டகி = முதுகெலும்பு. |
கண்டம் |
தொண்டை, மணி |
கட்டம் |
கடி (=ஒலி, நிகழ், தோன்று, இடம்) + அம் = கட்டம் >>> கண்டம் = ஒலி தோன்றும் இடம் = தொண்டை, கழுத்து, குரல்வளை, மணி |
கண்டம் |
துண்டு, பகுதி, பிரிவு |
கட்டம் |
கடி (=வெட்டு, பிரி) + அம் = கட்டம் >>> கண்டம் = வெட்டப்பட்டது / பிரிக்கப்பட்டது = துண்டு, பிரிவு, பகுதி |
கண்டம் |
எல்லை |
கட்டம் |
கடி (=வெட்டு, பிரி) + அம் = கட்டம் >>> கண்டம் = பிரிப்பது = எல்லை |
கண்டம் |
வாள் |
கட்டம் |
கடி (=வெட்டு) + அம் = கட்டம் >>> கண்டம் = வெட்டுவது = வாள். |
கண்டம் |
வெல்லம் |
கட்டம் |
கடி (=உண்ணு, தண்டு, அழுத்து, நீக்கு, எரி) + அம் (=நீர், சாறு, இனிமை) = கட்டம் >>> கண்டம் = தண்டை அழுத்தி நீக்கிய இனிய சாற்றை எரித்துப் பெற்ற உணவு |
கண்டம் |
எழுத்தாணி |
கட்டம் |
கடி (=இறுக்கிப்பிடி, வடுப்படுத்து, எழுது, கூர்மை) + அம் = கட்டம் >>> கண்டம் = இறுக்கிப் பிடித்து எழுதப்படும் கூரிய பொருள். |
கண்டம் |
கவசம் |
கட்டம் |
கட்டு (=உடல், காவல், பாதுகாப்பு, அணி) + அம் = கட்டம் >>> கண்டம் = உடலைப் பாதுகாக்க அணியப்படுவது = கவச உடை. |
கண்டம் |
ஆபத்து |
கேடு |
கேடு (=துன்பம்) + அம் = கெட்டம் >>> கண்டம். |
கண்டயம் |
வீரக்கழல் |
கெண்டையம் |
கெண்டை (=கணுக்கால்) + அம் = கெண்டையம் >>> கண்டயம் = கணுக்காலில் அணியப்படுவது |
கண்டரை |
குருதிப் பெருநாடி |
கட்டாரை |
கடி (=ஓட்டு, வெளிச்செலுத்து, சிறுகொடி, மென்குழாய்) + ஆர் (=சிவப்பு, நீர்) + ஐ = கட்டாரை >>> கண்டரை = செந்நீரை வெளிச்செலுத்தும் மென்குழாய் |
கண்டறை |
மலைக்குகை |
கற்றறை |
கல் (=மலை) + தறி (=வெட்டு, பிள) + ஐ = கற்றறை >>> கட்டறை >>> கண்டறை = மலைப்பிளவு = மலைக்குகை |
கண்டன் |
வீரன் |
கட்டன் |
கடி (=உறுதி, துணிவு) + அன் = கட்டன் >>> கண்டன் = துணிவுடையவன் = வீரன் |
கண்டன் |
கணவன் |
கண்டன் |
கண் (=நூல், கயிறு) + தை (=பொருத்து, கட்டு) + அன் = கண்டன் = கயிற்றைக் கட்டியவன் = கணவன்.. ஒ.நோ: கண் (=நூல், கயிறு) + அமை (=பொருத்து, கட்டு) + அன் = கணமன் >>> கணவன் = கயிற்றைக் கட்டியவன். |
கண்டனம் |
கண்டிப்பு |
கட்டணம் |
கடி (=கண்டி) + அணம் = கட்டணம் >>> கண்டனம் = கண்டிப்பு |
கண்டாங்கி |
கட்டமுடைய சேலை |
கட்டாக்கி |
கட்டம் + ஆக்கம் (=அமைப்பு, உடை) + இ = கட்டாக்கி >>> கண்டாங்கி = கட்டம் கட்டமாய் அமைப்புக்களைக் கொண்ட ஆடை. |
கண்டாயம் |
வழி |
கடை |
கடை (=வழி) + அம் = கடயம் >>> கட்டயம் >>> கண்டாயம் |
கண்டாளம் |
விலாப்பக்க மூட்டை |
கட்டளம் |
கட்டு (=பிணி, பொதி) + அள்ளை (=விலாப்பக்கம்) + அம் = கட்டளம் >>> கண்டாளம் = விலாப்பக்கமாகக் கட்டப்படும் பொதி |
கண்டி |
கழுத்து மாலை |
கண்டீ |
கண்டம் (=கழுத்து) + ஈ (= படை, கட்டு) = கண்டீ >>> கண்டி = கழுத்தில் கட்டுவது = கழுத்து மாலை. |
கண்டி |
கடிந்துகூறு, வெட்டு |
கடி |
கடி (=கடிந்துகூறு, வெட்டு) >>> கண்டி = கடிந்துகூறு, வெட்டு |
கண்டி |
பகிர் |
கட்டீ |
கடி (=வெட்டு, பிரி) + ஈ (=கொடு) = கட்டீ >>> கண்டி = பிரித்துக்கொடு |
கண்டி |
முடிவுசெய் |
கட்டீ |
கடை (=முடிவு) + ஈ (=படை, செய்) = கட்டீ >>> கண்டி = முடிவுசெய் |
கண்டி |
தடிமனாகு |
கட்டீ |
கட்டை (=தடிமன்) + ஈ (=படை, ஆக்கு) = கட்டீ >>> கண்டி = தடிமனாகு |
கண்டி |
எடை அளவு |
கட்டி |
கட்டி (=எடை அளவு) >>> கண்டி |
கண்டி |
நில அளவு |
கட்டி |
கட்டு (=இடம், அளவு) + இ = கட்டி >>> கண்டி = இட அளவு. |
கண்டிகை |
பறை வகை |
கட்டிகை |
கட்டு (=பிணி, வளைப்பு, வட்டம்) + இகு (=அடி, ஒலி) + ஐ = கட்டிகை >>> கண்டிகை = அடித்து ஒலிக்கப்படும் வட்டமாகப் பிணித்த பொருள். |
கண்டிகை |
பதக்கம் |
கட்டிகை |
(1) கடி (=சிறப்பு) + இகு (=கொடு, தொங்கவிடு) + ஐ = கட்டிகை >>> கண்டிகை = சிறப்பு கொடுப்பதற்காகத் தொங்கவிடப் படுவது. (2) கட்டு (=மரியாதை, அணிவி) + இகு (=தொங்கவிடு) + ஐ = கட்டிகை >>> கண்டிகை = மரியாதைக்காக அணிவித்துத் தொங்கவிடப் படுவது = பதக்கம். |
கண்டிகை |
நகைப் பெட்டி |
கெண்டீகை |
கெண்டி (=பாத்திரம், பெட்டி) + ஈகை (=பொன்) = கெண்டீகை >>> கண்டிகை = பொன் நகைகளை வைக்கும் பெட்டி. |
கண்டிகை |
நிலப்பிரிவு |
கட்டிகை |
கடி (=வெட்டு, பிரி) + இகம் (=நிலம்) + ஐ = கட்டிகை >>> கண்டிகை = நிலப்பிரிவு. |
கண்டிகை |
எடை அளவு |
கட்டி |
கட்டி (=எடை அளவு) + கை = கட்டிகை >>> கண்டிகை |
கண்டிகை |
நில அளவு |
கட்டிகை |
கட்டு (=அளவு) + இகம் (=நிலம்) + ஐ = கட்டிகை >>> கண்டிகை = நில அளவு |
கண்டிதம் |
கண்டிப்பு |
கட்டிதம் |
கடி (=கடிந்துகூறு) + இதம் = கட்டிதம் >>> கண்டிதம் = கடிந்து கூறுதல் |
கண்டியர் |
பாணர் |
கடியர் |
கடி (=ஒலி, பாட்டு, சிறப்பு) + அர் = கடியர் >>> கண்டியர் = சிறப்பித்துப் பாடுவோர். |
கண்டில் |
எடை அளவு |
கட்டி |
கட்டி =எடை அளவு) + இல் = கட்டில் >>> கண்டில் = எடை அளவு |
கண்டீரவம் |
சிங்கம் |
கட்டிறைமம் |
காடு + இறை (=அரசன்) + மா (=விலங்கு) + அம் = கட்டிறைமம் >>> கண்டீரவம் = காட்டுக்கு அரசனாகிய விலங்கு = சிங்கம். |
கண்டீரை |
மிளகு |
கட்டீரை |
கடி (=வாசனை, காரம், உண்ணு) + இருமை (=கருமை) + ஐ = கட்டீரை >>> கண்டீரை = காரமும் வாசனையும் கொண்ட கருநிற உணவு. |
கண்டு |
பந்து |
கட்டு |
கட்டு (=வளைப்பு, வட்டம், பொதி) >>> கண்டு = வட்டமான பொதி = பந்து |
கண்டு |
கட்டி |
கட்டி |
கட்டி + உ = கட்டு >>> கண்டு |
கண்டு |
கற்கண்டு |
கட்டி |
கட்டி (=கற்கண்டு) + உ = கட்டு >>> கண்டு |
கண்டூதி |
அரிப்பு, சொரி |
கட்டுந்தி |
கடை (=அரி) + உந்து (=தோல்) + இ = கட்டுந்தி >>> கண்டூதி = தோலை அரித்தல். |
கண்டூயம், கண்டூயை |
சொரி, அரிப்பு |
கட்டூழம் |
கடை (=அரி) + ஊழ் (=தோல்) + அம் = கட்டூழம் >>> கண்டூயம் >>> கண்டூயை = தோலை அரித்தல் = சொரி, அரிப்பு. |
கண்டை |
ஆடை |
கட்டை |
கட்டு (=உடுத்து) + ஐ = கட்டை >>> கண்டை = உடுத்தப்படுவது = உடை. |
கண்டை |
சரிகை |
கண்டை |
கண் (=நூல், இழை) + தை (=அலங்காரம், சூழ், தையல்) = கண்டை = அலங்காரத்திற்காக சூழத் தைக்கப்படும் இழை = சரிகை. |
கண்டை |
பெருமணி |
கண்டை |
கண்டம் (=மணி) + ஐ (=பெருமை) = கண்டை = பெரிய மணி |
கண்டை |
வீரக்கழல் |
கெண்டை |
கெண்டை (=கணுக்கால்) >>> கண்டை = கணுக்காலில் அணிவது |
கண்டோக்தம், கண்டோக்தி |
தெளிவான சொல் |
கட்டோத்தி |
கடி (=தேற்றம், தெளிவு) + ஓது (=சொல்) + இ = கட்டோத்தி >>> கண்டோக்தி = தெளிவான சொல். |
கண்ணராவி |
வறுமை, துன்பம் |
கன்ணறவி |
காணம் (=பொன், பொருள்) + அறவு (=இன்மை) + இ = கண்ணறவி >>> கண்ணராவி = பொருள் இல்லாமை = வறுமை, துன்பம் |
கண்றாவி |
காணக் கூடாதது |
கண்ணறவி |
காண் + அறம் (=தகுதி) + அவி (=அழி, இல்லாகு) = கண்ணறவி >>> கண்றாவி = காணும் தகுதி இல்லாதது. |
கண்ணாடி |
கண்ணுக்குக் காட்டுவது |
கண்ணாடி |
கண் (=முன்புறம், உறுப்பு, உருவம்) + ஆடு (=பிற, தோன்று) + இ = கண்ணாடி = கண்ணுக்கு முன்பாக உருவத்தைத் தோன்றச் செய்வது. |
கண்ணாலம் |
திருமணம் |
கயினலம் |
கயில் (=பூண்கடைப்பூட்டு, பிடரி) + நலம் (=பெண்மை, அறச்செயல்) = கயினலம் >>> கைண்ணலம் >>> கண்ணாலம் = பெண்ணின் பிடரியில் பூண்கடைப் பூட்டும் அறச்செயல் = திருமணம். ஒ.நோ: நலம் (=பெண்மை) + ஆர் = நல்லார் = பெண்டிர். |
கண்ணிகை |
பொகுட்டு |
கண்ணிக்கை |
கண்ணி (=பூ) + இக்கு (=இடை, நடு, முடிச்சு, பொதி) + ஐ = கண்ணிக்கை >>> கண்ணிகை = பூவில் நடுவில் உள்ள பொதி. |
கண்ணியம் |
பெருமை |
கண்ணியம் |
கண் (=பெருமை) + இயம் = கண்ணியம் |
கண்ணியம் |
மஞ்சள் |
கண்ணீயம் |
கண் (=உருவம், தோற்றம், பொருந்து) + ஈ (=கொடு) + அம் (=அழகு, ஒளி) = கண்ணீயம் >>> கண்ணியம் = அழகிய ஒளி பொருந்திய தோற்றத்தைத் தருவது. |
கண்ணுறை |
மசாலா |
கண்ணுறை |
கண் (=நுட்பம், பொடி) + உறை (=காரம்) = கண்ணுறை = காரப்பொடி |
கண்மாய், கம்மாய் |
பெருங்குளம் |
கண்மை |
கண் (=பெருமை, இடம், தாங்கி) + மை (=நீர்) = கண்மை >>> கண்மய் >>> கண்மாய் = நீரைத் தாங்கியுள்ள பெரிய இடம் |
கணக்கு |
எண்ணிக்கை |
கணக்கு |
கண் (=கருது, எண்ணு) + அகம் (=பொருள்) + உ = கணக்கு = பொருளின் எண்ணிக்கை |
கணக்கு |
திட்டம் |
கணக்கு |
கண் (=கருது, எண்ணு) + அகம் (=மனம்) + உ = கணக்கு = மனதிற்குள் எண்ணப்பட்டது = திட்டம் |
கணக்கு |
செய்முறை, வழக்கு |
கணக்கு |
கண் (=ஓட்டை, வழி) + அகை (=செய்) + உ = கணக்கு = செய்யும் வழி = செய்முறை, வழக்கு, ஏற்பாடு |
கணம் |
பொடி |
கணம் |
கண் (=நுட்பம், பொடி) + அம் = கணம் |
கணம், கணன் |
கூட்டம் |
கணம் |
கண் (=பொருந்து, கூடு) + அம் = கணம் = கூட்டம், திரட்சி |
கணம் |
பேய் |
கணம் |
கண் (=விழி, பெருமை) + அம் (=கொடுமை) = கணம் = பெரிய கொடிய விழிகளைக் கொண்டது = பேய். |
கணம் |
நட்சத்திரம் |
கணம் |
கண் (=ஆகாயம்) + அம் (=ஒளி) = கணம் = ஆகாயத்தில் ஒளிர்வது = நட்சத்திரம் |
கணம் |
கோளம் |
கணம் |
கண் (=உருவம், பொருந்து, திரள்) + அம் (=கொடுமை, வளைவு) = கணம் = வளைந்து திரண்ட உருவம் = கோளம் |
கணம் |
வட்டம் |
கணம் |
கண் (=உருவம்) + அம் (=கொடுமை, வளைவு) = கணம் = வளைவுடைய உருவம் = வட்டம். |
கணம் |
காலநுட்பம் |
கணம் |
கண் (=நுட்பம்) + அம் (=பொழுது, காலம்) = கணம் = காலநுட்பம், அற்பப் பொழுது |
கணனம், கணனை |
கணக்கீடு, கணக்கு |
கணணம் |
கணி + அணம் = கணணம் >>> கணனம் >>> கணனை = கணக்கீடு, கணக்கு |
கணி |
ஆய்வாளன், சோதிடன் |
கணி |
கண் (=நுட்பம், கருது, ஆய்) + இ = கணி = நுட்பமாக ஆய்பவன் = ஆய்வாளன், கணக்கன், சோதிடன் |
கணி |
ஓவியன் |
கணீ |
கண் (=உருவம்) + ஈ (=ஈனு, படை) = கணீ >>> கணி = உருவத்தைப் படைப்பவன் |
கணி |
நுண்ணறிவு |
கணி |
கண் (=நுட்பம், கருது, அறி) + இ = கணி = நுண்ணறிவு |
கணி |
எண்ணு |
கணி |
கண் (=கருது, எண்ணு) + இ = கணி = எண்ணு |
கணி |
உண்டாக்கு |
கணீ |
கண் (=உருவம்) + ஈ (=படை) = கணீ >>> கணி = உருவத்தைப் படை |
கணி |
கூடி ஓது |
கணீ |
கணம் (=கூட்டம், ஒலி) + ஈ (=கொடு) = கணீ >>> கணி = கூட்டமாக ஒலி கொடு |
கணிகம் |
நூறுகோடி |
கணிகம் |
கண் (=கருது, எண்ணு) + இக (=அளவுகட) + அம் = கணிகம் = அளவு கடந்த எண்ணிக்கை = நூறு கோடி |
கணிகம் |
தற்காலிக மானது |
கணிகம் |
கணம் (=அற்பப் பொழுது) + இக (=கட, கழி) + அம் = கணிகம் = அற்பப் பொழுதில் கழிவது |
கணிகன் |
சோதிடன் |
கணிகன் |
கண் (=ஆகாயம், நுட்பம், ஆய்) + இக (=கட, நட) + அன் = கணிகன் = ஆகாயத்தில் நடப்பதை நுட்பமாக ஆய்பவன் = சோதிடன் |
கணிகை |
விலைமாது |
கணீகை |
கண் (=உடல், பொருந்து, கூடு) + ஈகை (=கொடை, பொன், பொருள்) = கணீகை >>> கணிகை = பொருளுக்காக உடலைக் கூடுவதற்குக் கொடுப்பவள். |
கணிசம் |
கருத்து, மதிப்பு, அளவு |
கணியம் |
கண் (=கருது, மதி, அள) + இயம் = கணியம் >>> கணிசம் = கருத்து, மதிப்பு, அளவு |
கணிசம் |
மரியாதை |
கண் |
கண் (=பெருமை) + இயம் = கணியம் >>> கணிசம் = மரியாதை |
கணிசம் |
விருப்பம் |
கணிசம் |
கண் (=கருது) + இசை (=ஒப்பு) + அம் = கணிசம் = ஒப்புதல் கருத்து = விருப்பம் |
கணிசம் |
ஒலி |
கணம் |
கணம் (=ஒலி) + இயம் = கணியம் >>> கணிசம் |
கணிசி |
மதிப்பிடு, கருது, ஒலி, விரும்பு |
கணிசி |
கணிசம் (=மதிப்பு, கருத்து, விருப்பம், மரியாதை, ஒலி) >>> கணிசி = மதிப்பிடு, கருது, விரும்பு, மரியாதை செய், ஒலி எழுப்பு |
கணிதம் |
எண்ணறிவு |
கணிதம் |
கண் (=கருது, எண்ணு, அறி) + இதம் = கணிதம் = எண்ணறிவு |
கணிதம் |
சோதிடம் |
கணிறம் |
கண் (=ஆகாயம், கருது, ஆய்) + இற (=கட, நட) + அம் = கணிறம் >>> கணிதம் = ஆகாயத்தில் நடப்பதை ஆய்தல் = சோதிடம் |
கணிதன் |
சோதிடன் |
கணிதன் |
கணிதம் (=சோதிடம்) + அன் = கணிதன் = சோதிடன் |
கத்தணம் |
மார்புக் கவசம் |
காழ்த்தனம் |
காழ் (=இரும்பு, தோல்) + தனம் (=மார்பு) = காழ்த்தனம் >>> கத்தணம் = மார்புக்கான இரும்புத் தோல் |
கத்தபம் |
கழுதை |
கற்றமம் |
கற்றை (=பொதி) + அமை (=பொறு, சும) + அம் = கற்றமம் >>> கத்தபம் = பொதி சுமப்பது = கழுதை |
கத்தம் |
கழிவு |
கற்றம் |
கறை (=மாசு, கழிவு) + அம் = கற்றம் >>> கத்தம் |
கத்தரி, கத்திரி |
வெட்டுக் கருவி |
கத்தரி |
காது (=உறுப்பு, வெட்டு) + அரி (=ஆயுதம், கருவி) = கத்தரி = வெட்டுவதற்கான காதுடைய கருவி. |
கத்தரி |
எலிப்பொறி |
கற்றெலி |
கற்றை (=கட்டு, பிடி) + எலி = கற்றெலி >>> கத்தெலி >>> கத்தரி = எலி பிடிப்பது |
கத்தரி |
பச்சைப்பாம்பு |
கத்தரி |
கதம் (=பாம்பு) + அரி (=பச்சை) = கத்தரி = பச்சைப் பாம்பு |
கத்தரி, கத்திரி |
வெட்டு |
கத்தரி |
கத்தரி (=வெட்டுக்கருவி) >>> கத்தரி = வெட்டு |
கத்தரி, கத்திரி |
அக்கினி வெயில் |
காழ்த்தெறி |
காழ் (=ஒளி, வெயில், முற்று, அளவுகட) + தெறு (=சுடு) + இ = காழ்த்தெறி >>> கத்தரி = அளவு கடந்து சுடும் முற்றிய வெயில். |
கத்தரிகை, கத்திரிகை |
வெட்டுக் கருவி |
கத்தரிகை |
காது (=உறுப்பு, வெட்டு) + அரி (=ஆயுதம், கருவி) + கை (=சிறுமை) = கத்தரிகை = வெட்டுவதற்கான காதுடைய சிறிய கருவி. |
கத்தரை |
கோத்திரம் |
கற்றறை |
கற்றை (=கூட்டம்) + அறு (=பிரி) + ஐ = கற்றறை >>> கத்தரை = கூட்டப் பிரிவு |
கத்தன் |
கடவுள் |
கந்தன் |
கந்து (=ஆதாரம்) + அன் = கந்தன் >>> கத்தன் = ஆதாரமானவன் = கடவுள் |
கத்தி |
வெட்டுவது |
கற்றி |
கறி (=கடி, வெட்டு) + இ = கற்றி >>> கத்தி = வெட்டுவது |
கத்திகை |
மாலை |
கற்றிகை |
கற்றை (=கட்டு) + இகு (=தாழ், தொங்கு) + ஐ = கற்றிகை >>> கத்திகை = தாழ்ந்து தொங்குமாறு கட்டப்படுவது = மாலை. |
கத்தியம் |
வசனநடை |
கற்றியம் |
கற்றை (=கட்டு) + இயம் (=சொல், வசனம்) = கற்றியம் >>> கத்தியம் = வசனக்கட்டு |
கத்திரி |
பறை |
கத்தெறி |
கத்து (=ஒலி) + எறி (=அடி) = கத்தெறி >>> கத்திரி = அடித்து ஒலிக்கப்படுவது |
கத்திரியன் |
போர் வீரன் |
கத்தெறியன் |
கத்தி (=வாள்) + எறி (=வீசு) + அன் = கத்தெறியன் >>> கத்திரியன் >>> வாள் வீசுபவன் = போர் வீரன் |
கத்திரு |
கடவுள் |
கந்திறு |
கந்து (=ஆதாரம்) + இறை (=உலகம்) + உ = கந்திறு >>> கத்திரு = உலகின் ஆதாரம் |
கத்து |
கடிதம் |
கட்டு |
கட்டு (=எழுது) >>> கத்து = எழுத்து, எழுதப்பட்டது = கடிதம் |
கத்தூரி |
மான் வகை |
கந்துரி |
கந்தம் (=வாசனைப் பொருள்) + உரு (=உடல், மான்) + இ = கந்துரி >>> கத்தூரி = வாசனைப் பொருளை உடலில் கொண்ட மான். |
கத்தூரிகை |
மிளகு |
கற்றுறிகை |
கறி (=உணவு) + உறை (=காரம்) + இக (=மிகு) + ஐ = கற்றுறிகை >>> கத்தூரிகை = காரம் மிக்க உணவு = மிளகு. |
கத்தை |
கழுதை |
கழுதை |
கழுதை >>> கய்தை >>> கத்தை |
கதகம் |
தேற்றான் கொட்டை |
காழ்த்தகம் |
காழ் (=கொட்டை, கருமை, கறை) + தகை (=அடக்கு, படியச்செய்) + அம் (=நீர்) = காழ்த்தகம் >>> கதகம் = நீரின் கறையைப் படியச்செய்யும் கொட்டை. |
கதம் |
ஓட்டம், சென்றது |
கறம் |
காலு / காறு (=செல், விரை, ஓடு) + அம் = கறம் >>> கதம் = விரைவு, ஓட்டம், சென்றது |
கதம்பம் |
மனிதர் கூட்டம் |
கந்தவம் |
கந்து (=பிணி, கூட்டு) + அவை (=மனிதர்) + அம் = கந்தவம் >>> கதபம் >>> கதம்பம் = மனிதர் கூட்டம் |
கதம்பம் |
கூட்டாஞ் சோறு |
கந்தவம் |
கந்து (=பிணி, கூட்டு) + அவி (=சோறு) + அம் = கந்தவம் >>> கதபம் >>> கதம்பம் = கூட்டாஞ்சோறு |
கதம்பம் |
நறுமணப் பொடி |
கைதேமம் |
கை (=சிறுமை, பொடி) + தேம் (=நறுமணம்) + அம் = கைதேமம் >>> கதாபம் >>> கதம்பம் = நறுமணப் பொடி. |
கதம்பம் |
மேகம் |
காறாவம் |
கால் (=மழை) + தா (=கொடு) + அம் = காறாவம் >>> கதபம் >>> கதம்பம் = மழை தருவது = மேகம் |
கதர் |
கையால் நூற்றது |
காழ்தார் |
கை (=உறுப்பு, நேர்த்தி, அணி) + தார் (=கயிறு, நூல்) = கய்தார் >>> கதர் = கையால் நேர்த்தியாக நூற்கப்பட்டு அணியப் படுவது.. |
கதலம், கதலி, கதலிகை |
செவ்வாழை |
காழ்தளம் |
(2) காழ் (=சிவப்பு, முற்று, தோல், கொத்து, குலை) + தள்ளு + அம் (=உணவு, பழம்) = காழ்தளம் >>> கதலம் = சிவந்து முற்றிய தோலுடன் குலை தள்ளும் பழம். |
கதலி |
வண்ணக் கொடி |
காழ்தலி |
காழ் (=ஒளி, நிறம், தண்டு, ஆடை, துணி) + தலை (=கூடு, பிணி, உச்சி) + இ = காழ்தலி >>> கதலி = தண்டின் உச்சியில் பிணித்த வண்ணத் துணி. |
கதலி |
காற்றாடி |
காறாளி |
கால் (=காற்று, பரவு, பற) + தாள் + இ = காறாளி >>> கதலி = காற்றில் பறக்க விடப்படும் தாள். |
கதலி |
தேற்றான் கொட்டை |
காழ்தளீ |
காழ் (=கருமை, கறை, கொட்டை) + தளி (=நீர்) + ஈ (=வகு, பிரி) = காழ்தளீ >>> கதலி = நீரிலிருந்து கறையைப் பிரிக்கும் கொட்டை = தேற்றான் கொட்டை |
கதலிகை |
வண்ணக் கொடி |
காழ்தலிகை |
காழ் (=தண்டு, ஆடை, துணி, நிறம்) + தலை (=உச்சி) + இக (=கட, பற) + ஐ = காழ்தலிகை >>> கதலிகை = தண்டின் உச்சியில் பறக்கும் வண்ணத் துணி. |
சத்திரியன், சத்ரியன் |
போர் வீரன் |
எத்தெறியன் |
ஏதி (=வாள்) + எறி (=வீசு) + அன் = எத்தெறியன் >>> அத்திரியன் >>> சத்திரியன் >>> ச~த்ரியன் = வாள் வீசுபவன் = போர் வீரன் |
கணவன் |
தாலி கட்டியவன் |
கணமன் |
(1) கண் (=நூல், கயிறு) + அமை (=பொருத்து, கட்டு) + அன் = கணமன் >>> கணவன் = கயிற்றைக் கட்டியவன். (2) கண் (=உறுப்பு, ஆதாரம்) + அமை + அன் = கணமன் >>> கணவன் = கண்ணாக / ஆதாரமாக அமைந்தவன். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.