செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

82 - (கயம் -> கலனை) சமக்கிருதத்தில் உள்ள நேரடி & மூலத் தமிழ்ச்சொற்களின் தோற்றம்

 

சொல்

பொருள்

தமிழ்ச் சொல்

மூலச்சொல்லும் தோன்றும் முறையும்

கயம்

தேய்வு, கேடு, குறைபாடு

கயம்

காய் (=மெலி, தேய், குறை, கெடு) + அம் = கயம் = மெலிவு, தேய்வு, குறைபாடு, கேடு

கயம்

இளைப்பு

கயம்

காய் (=மெலி, இளை) + அம் = கயம் = இளைப்பு

கைப்பு, கயிப்பு

போதை

கழுமு

கழுமு (=மயங்கு) >>> கயுபு >>> கயிப்பு >>> கைப்பு = மயக்கம், போதை

கயிரிகம், கைரிகம்

காவிக்கல்

காழுரிகம்

காழ் (=கல்) + உரு (=நிறம், சிவப்பு) + இகு (=கொடு) + அம் = காழுரிகம் >>> கயுரிகம் >>> கயிரிகம் = சிவப்பு நிறம் கொடுக்கும் கல்.

கயிலா, காயலா

காய்ச்சல்

காயலா

காயல் (=காய்ச்சல்) + ஆ = காயலா >>> கய்லா >>> கயிலா = காய்ச்சல் நோய்

கயிலாயம், கைலாயம், கைலாசம்

வற்றாத நீர்நிலை உடைய பூமி

கயிலயம்

காய் (=வற்று) + இல் (=இன்மை) + அயம் (=நீர்நிலை, பூமி) = கயிலயம் >>> கயிலாயம் >>> கைலாயம், கைலாசம் = வற்றாத நீர்நிலை கொண்ட பூமி.

கயிலி, கைலி

வண்ணக் கட்டுடை

காழிலி

காழ் (=உடை, வண்ணம்) + இல் (=வீடு, கட்டம்) + இ = காழிலி >>> கயிலி >>> கைலி = பலவண்ணக் கட்டங்களைக் கொண்ட வீட்டில் அணியும் உடை.

கயிறு

புத்தகம்

காழீரு

காழ் (=கட்டு, தோல், ஏடு) + ஈர் (=எழுது) + உ = காழீரு >>> கயிறு = எழுதிய ஏடுகளின் கட்டு = நூல், புத்தகம்.

கர்க்கசம்

கடினம், மிக்க வலு

கருங்காழம்

கருமை (=வலிமை) + காழ் (=மிகுதி) + அம் = கருங்காழம் >>> கர்க்கசம் = மிக வலுவானது

கர்க்கடகம்

நண்டு

கரக்கடகம்

கரம் (=கை) + கடி (=துண்டி) + அகம் = கரக்கடகம் >>> கர்க்கடகம் = கைகளால் அகப்படுத்தித் துண்டிப்பது = நண்டு.

கர்க்கரி

நீர்ச்சாடி

கரக்கரி

கரகம் (=பாத்திரம்) + அரி (=நீர்) = கரக்கரி >>> கர்க்கரி = நீர்ப்பாத்திரம்

கர்க்கரி

தயிர் கடை மத்து

கரகரீ

கரகர (=ஒலி, அலைக்கழி, சுற்று) + ஈ (=வகு, பிரி) = கரகரீ >>> கர்க்கரி = கரகர என ஒலித்தவாறு சுற்றிப் பிரிப்பது.

கர்ச்சினை, கர்ச்சனை

பேரொலி

கரய்யினை

கரை (=ஒலி) + இனம் (=கூட்டம், மிகுதி) + ஐ = கரய்யினை >>> கரச்சினை >>> கர்ச்சினை = மிகுதியான ஒலி.

கர்ச்சி, கருச்சி

ஒலிசெய்

கரை

கரை (=ஒலி) + இ = கரய்யி >>> கரச்சி >>> கர்ச்சி = ஒலியெழுப்பு

கர்ச்சிதம்

பேரொலி

கரய்யிறம்

கரை (=ஒலி) + இறை (=மிகுதி) + அம் = கரய்யிறம் >>> கரச்சிதம் >>> கர்ச்சிதம் = மிகுதியான ஒலி.

கர்ச்சு, கர்சு

செலவு

கரிழு

கரம் (=கை) + இழி (=நீங்கு) + உ = கரிழு >>> கருசு >>> கர்ச்சு = கையில் இருந்து நீங்கியது = செலவு.

கர்ச்சூரம், கர்ச்சூர்

பேரீச்சை

காழ்ச்சுரம்

காழ்ச்சுரம் (=பேரீச்சை) >>> கர்ச்சூரம் >>> கர்ச்சூர்

கர்ணம், கருணம்

காது

கருணம்

கரை (=ஒலி) + உண் (=நுகர்) + அம் = கருணம் >>> கர்ணம் = ஒலியை நுகர்வது = காது.

கர்ணம்

வரி கணக்கீடு, வரி கணக்கன்

கரெண்ணம்

கரம் (=குடியிறை, வரி) + எண்ணு (=கணக்கிடு) + அம் = கரெண்ணம் >>> கரணம் >>> கர்ணம் = வரி கணக்கிடுதல், வரி கணக்கிடுபவன்.

கர்ணிகை, கருணிகை

பொகுட்டு

கருணுகை

கரு (=பூ) + உள் (=நடு) + நுகம் (=பாரம், பொதி) + ஐ = கருணுகை >>> கர்ணிகை = பூவில் நடுவில் உள்ள பொதி.

கர்த்தவம், கர்த்தபம், கருத்தபம்

கழுதை

கருந்தமம்

கரு (=பொருள், பாரம்) + உந்து (=மிகு, செல், நட) + அமை (=பொறு, தாங்கு) + அம் = கருந்தமம் >>> கர்த்தவம் = மிக்க பாரம் தாங்கி நடப்பது = கழுதை.

கர்த்தவியம்

செய்யத்தக்கது

கரத்தவியம்

கரை (=வருந்து, உழை, செய்) + அத்தம் (=பொருத்தம்) + இயம் = கரத்தவியம் >>> கர்த்தவியம் = செய்வதற்குப் பொருத்தமானது.

கர்த்தா, கர்த்தன்

வேலை செய்பவன்

கருந்தா

காரம் (=தொழில்) + உந்து (=முயல்) + ஆ = கருந்தா >>> கர்த்தா = தொழில் முயல்வோன் = வேலை செய்பவன்.

கர்த்தா, கர்த்தன், கருத்தா

கடவுள்

கருத்தா

கரு (=உயிர்) + தா (=படை) = கருத்தா >>> கர்த்தா = உயிர்களைப் படைப்பவன் = கடவுள்.

கர்ப்பம், கருப்பம்

கரு

கருப்பம்

கரு (=குழந்தை, உட்பொருள்) + உப்பு (=பெரு, வளர்) + அம் = கருப்பம் >>> கர்ப்பம் = குழந்தை வளரும் உட்பொருள்.

கர்ப்பம்

பெரிய கார்மேகம்

கருப்பம்

கார் (=கருமை, மேகம்) + உப்பு (=பெரு) + அம் = கருப்பம் >>> கர்ப்பம் = பெரிய கரிய மேகம்.

கர்ப்பிணி

சூலுடையவள்

கருப்பினி

கருப்பம் (=சூல்) + இனி = கருப்பினி >>> கர்ப்பிணி = சூலுடையவள்

கர்ப்பூரம், கருப்பூரம்

கற்பூரம்

கற்புரம்

கால் (=காற்று) + புரை (=குறை, இன்மை, அழிவு, இலேசு) + அம் (=அழகு, வெண்மை) = கற்புரம் >>> கற்பூரம் >>> கர்ப்பூரம் = காற்றில் குறைந்து அழியும்  இலேசான வெண்பொருள்.

கர்ப்பூரம்

பசும்பொன்

கருப்பூரம்

கருமை (=பசுமை) + பூரம் (=தங்கம்) = கருப்பூரம் >>> கர்ப்பூரம் = பசும்பொன்

கர்லா

கையால் சுற்றும் கட்டை

கருலா

கரம் (=கை, முழம்) + உலம் (=சுற்று, திரண்டது, வலிமை) + ஆ = கருலா >>> கர்லா = கையால் சுற்றப்படும் முழநீளமுள்ள வலுவான திரண்ட பொருள்.

கர்வடம், கருவடம்

மலையுமாறும் சூழ்ந்தது

கற்படம்

கல் (=மலை) + படு (=வளை, சூழ்) + அம் (=நீர்) = கற்படம் >>> கர்வடம் = மலையாலும் நீராலும் சூழப்பட்டது.

கர்வம்

செருக்கு, அகங்காரம்

கருப்பம்

கரு (=இயற்கை அறிவு, தன் எண்ணம்) + உப்பு (=பெரு, உயர்) + அம் = கருப்பம் >>> கருவம் >>> கர்வம் = தன்னை உயர்வாக எண்ணுதல்.

கர்வம்

பெரிய எண்ணிக்கை

கருப்பம்

கரு (=அறிவு, எண்ணம்) + உப்பு (=பெரு) + அம் = கருப்பம் >>> கருவம் >>> கர்வம் = பேரெண்ணம், பெரிய எண்ணிக்கை

கர்வி, கர்விதன்

செருக்கு உடையவன்

கருப்பி

கருப்பம் (=செருக்கு) + இ = கருப்பி >>> கருவி >>> கர்வி = செருக்கு உடையவன்.

கர்வி

செருக்குறு

கருப்பி

கருப்பம் (=செருக்கு) >>> கருப்பி >>> கருவி >>> கர்வி = செருக்குறு

கர்விதம்

செருக்கு

கருப்பிதம்

கருப்பம் (=செருக்கு) + இதம் = கருப்பிதம் >>> கருவிதம் >>> கர்விதம்

கர்விச்~டன்

செருக்கு மிக்கவன்

கருப்பிற்றன்

கருப்பம் (=செருக்கு) + இற (=மிகு) + அன் = கருப்பிற்றன் >>> கருவிட்டன் >>> கர்விச்~டன் = செருக்கு மிகுந்தவன்.

கரகம்

நீர்ச்சாடி

கரகம்

கார் (=நீர்) + அகம் (=உள்ளடக்கம், பொருள்) = கரகம் = நீரை உள்ளடக்கிய பொருள்

கரகம்

ஆலங்கட்டி

கரெக்கம்

கார் (=மழை, நீர்) + எக்கு (=குவி, திரள், கட்டியாகு, வீசு) + அம் (=அழகு, வெண்மை) = கரெக்கம் >>> கரகம் = மழையின் போது வீசப்படும் வெண்ணிற நீர்க்கட்டி = ஆலங்கட்டி.

கரகம்

நீர், நீர்த்துளி

கரகம்

கார் (=மழை) + அகம் (=உட்பொருள்) = கரகம் = மழையின் உட்பொருள்.

கரடகம்

வஞ்சனை, பொய்

கரடக்கம்

கரி (=உண்மை) + அடக்கு (=மறை) + அம் (=சொல்) = கரடக்கம் >>> கரடகம் = உண்மையை மறைத்துச் சொல்லுதல்.

கரடகம்பம்

வஞ்சனை, பொய்

கரடகம்மம்

கரி (=உண்மை) + அடை (=மறை) + அகம் (=மனம்) + அம் (=சொல்) = கரடகம்மம் >>> கரடகம்பம் = உண்மையை மனதில் மறைத்துச் சொல்லுதல்.

கரடகன்

தந்திரக்காரன்

கரடகன்

கரடகம் (=பொய், தந்திரம்) + அன் = கரடகன் = தந்திரக்காரன்

கரடம்

காக்கை

கரடம்

(2) கரை (=அழை) + அடு (=நெருங்கு, கூடு) + அம் (=உணவு) = கரடம் = அழைத்துக் கூடி உண்பது = காக்கை.

கரடம்

மதநீர்த் துவாரம்

கறடம்

கறை (=சினம், மதம்) + அடை (=வழி, ஓட்டை) + அம் (=நீர்) = கறடம் >>> கரடம் = மதநீருக்கான ஓட்டை.

கரடி

கொடிய விலங்கு வகை

கரடி

(2) கரம் (=கருமை, கை, வலிமை) + அடு (=தாக்கு, கொல்) + இ = கரடி = வலுவான கருநிறக் கையால் தாக்கிக் கொல்வது.

கரடி, கரடிகை

பறை

கரடி

கரை (=ஒலி) + அடி = கரடி = அடித்து ஒலிக்கப்படுவது = பறை

கரடி

தடுத்துத் தாக்குமாட்டம்

கரடி

கர (=மறை, தடு) + அடு (=தாக்கு) + இ = கரடி = தடுத்துத் தாக்குதல்.

கரடி

பொய்

கரடி

கரி (=உண்மை) + அடை (=மறை) + இ = கரடி = உண்மையை மறைத்தல்

கரடிகை

பறை

கரடிகை

கரை (=ஒலி) + அடி + கை = கரடிகை = கையால் அடித்து ஒலிக்கப்படுவது

கரண்டகம்

தென்னை ஓலைக்கூடை

கரேடகம்

கர (=பொருத்து, பின்னு) + ஏடகம் (=தென்னை) = கரேடகம் >>> கரண்டகம் = தென்னையால் பின்னப்பட்டது = தென்னங்கூடை

கரண்டகம்

சுண்ணாம்பு, சுண்ணாம்புப் பெட்டி

கரடகம்

காரம் + அடை (=வெற்றிலை, சேர், பெட்டி) + கம் (=வெண்மை) = கரடகம் >>> கரண்டகம் = வெற்றிலையுடன் சேர்க்கப்படும் காரமான வெண்பொருள் = சுண்ணாம்பு, சுண்ணாம்புப் பெட்டி.

கரண்டம்

நீர்க்காகம்

கராடம்

கருமை (=கருப்பு) + ஆடு (=பற, நீந்து) + அம் (=நீர்) = கராடம் >>> கரண்டம் = நீரில் நீந்தக்கூடிய கருநிறப் பறவை = நீர்க்காகம்.

கரண்டம்

அணிகலப் பெட்டி

கறட்டம்

காறை (=அணிகலன்) + அடை (=பெட்டி) + அம் = கறட்டம் >>> கரண்டம் = அணிகலப் பெட்டி

கரண்டம், கரண்டி

கைபோன்ற பொருள்

கரட்டி, கரட்டம்

கரம் (=கை) + அடு (=சமை, பொருந்து, ஒப்பு, பிடி) + இ = கரட்டி >>> கரண்டி = சமைப்பதற்குப் பிடிக்கப்படும் கையை ஒத்த பொருள்.

கரண்டம், கரண்டை

கைநீர்ச்சாடி

கரட்டம்

கரம் (=கை) + அடை (=தாங்கி, பாத்திரம்) + அம் (=நீர்) = கரட்டம் >>> கரண்டம் = கையில் தாங்கப்படும் நீர்ப் பாத்திரம்.

கரண்டம்

சுண்ணாம்பு, சுண்ணாம்புப் பெட்டி

கரட்டம்

காரம் + அடை (=வெற்றிலை, சேர், பெட்டி) + அம் (=அழகு, வெண்மை) = கரட்டம் >>> கரண்டம் = வெற்றிலையுடன் சேர்க்கப்படும் காரமான வெண்பொருள் = சுண்ணாம்பு, சுண்ணாம்புப் பெட்டி.

கரண்டிகை

பூக்கூடை

கரட்டிகை

கரு (=பூ) + அடை (=சேர், பெட்டி) + இகு (=திரட்டு) + ஐ = கரட்டிகை >>> கரண்டிகை = பூக்களைத் திரட்டிச் சேர்க்கும் பெட்டி.

கரணம்

கைத்தொழில்

கரணம்

கரம் (=கை) + அணை (=உண்டாக்கு, செய்) + அம் = கரணம் = கையால் செய்யப்படுவது = கைத்தொழில்.

கரணம்

பொறி

கரணம்

கரு (=இயற்கை அறிவு) + அணி (=உறுப்பு) + அம் = கரணம் = இயற்கையை அறியும் உறுப்பு = ஐம்பொறிகள்.

கரணம்

அறிவு, மனம்

கரணம்

கரு (=இயற்கை அறிவு) + அணம் = கரணம் = அறிவு, மனம்

கரணம்

திருமணம்

கரணம்

கரம் (=கை) + அணி (=அன்பு, கூட்டம், சூழ், அணிகலன், சூட்டு) + அம் = கரணம் = கூட்டம் சூழ்ந்திருக்க அன்புடையார் கையில் அணிகலன் சூட்டுதல்.

கரணம்

புணர்ச்சி

கரணம்

கரம் (=கை) + அணை (=தழுவு) + அம் = கரணம் = கைகளால் தழுவுகை.

கரணம்

குப்புறடிப்பு

கராணம்

கர (=சுற்று, உருளு) + ஆணம் (=சிறுமை, குறுக்கம், உடல்) = கராணம் >>> கரணம் = உடலைச் சிறிதாகக் குறுக்கி உருளுதல்.

கரணம்

கருவி

கரணம்

காரம் (=செயல்) + அணை (=உதவி) + அம் = கரணம் = செயலுக்கு உதவுவது

கரணம்

எண்ணிக்கை

கரணம்

கரு (=அறிவு, எண்ணம்) + அணம் = கரணம் = எண்ணிக்கை

கரணம்

ஆவணம், சாசனம்

கராணம்

கரு (=உரிமை) + ஆணம் (=பற்றுக்கோடு, ஆதாரம் = கராணம் >>> கரணம் = உரிமைக்கான ஆதாரம்.

கரணம், கரணன்

கணக்கு, கணக்கன்

கரணம், கரணன்

கரு (=அறிவு, கணக்கு) + அணம் = கரணம் = கணக்கு, கணக்கன்.

கரணி

மருந்து

கரணி

கரை (=மெலி, வருந்து, நோயுறு) + அணை (=அவி, அழி) + இ = கரணி = நோயை அழிப்பது = மருந்து.

கரணிகம்

புலனறிவு

கரணிங்கம்

கரணம் (=ஐம்பொறி) + இங்கம் (=அறிவு) = கரணிங்கம் >>> கரணிகம் = ஐம்பொறிகளின் அறிவு.

கரணிகம்

புணர்ச்சி

கரணிகம்

கரம் (=கை) + அணை (=தழுவு) + இகம் (=உடல்) = கரணிகம் = உடலைக் கைகளால் தழுவுதல் = புணர்ச்சி.

கரணை

கரண்டி

கரணை

கரம் (=கை) + அணை (=ஒப்பு, உதவி) = கரணை = கைபோல உதவுவது.

கரந்தை

குரு

கராற்றை

கரு (=அறிவு) + ஆற்று (=ஊட்டு) + ஐ = கராற்றை >>> கரத்தை >>> கரந்தை = அறிவை ஊட்டுபவர் = ஆசான், குரு.

கரபத்திரம்

இரம்பம், வாள்

கரம்பற்றீரம்

கரம் (=கை) + பற்று (=பிடி) + ஈர் (=அறு) + அம் (=நீளம்) = கரம்பற்றீரம் >>> கரபத்திரம் = கையால் பிடித்து அறுக்கப்படும் நீண்ட பொருள் = இரம்பம்

கரபம்

முன் கை

கரவம்

கரம் (=கை) + அம் (=கொடுமை, வளைவு) = கரவம் >>> கரபம் = கையின் வளையக் கூடிய பகுதி = முன் கை.

கரபம்

யானை

கரமம்

கரம் (=கை) + மா (=கருமை, பெருமை, விலங்கு) + அம் = கரமம் >>> கரபம் = கையுடைய கரிய பெரிய விலங்கு = யானை

கரபம்

கழுதை

கரமம்

கரு (=உயிரி, பொருள், பாரம்) + அமை (=பொறு, சும) + அம் = கரமம் >>> கரபம் = பாரம் சுமக்கும் உயிரி = கழுதை

கரபம்

முட்டாள்

கரவம்

கரு (=அறிவு) + அவி (=கெடு) + அம் = கரவம் >>> கரபம் = அறிவு கெட்டவன்

கரம்

கை

கரம்

கரை (=பக்கம்) + அம் (=நீளம்) = கரம் = பக்கவாட்டில் நீண்டிருப்பது = கை

கரம்

ஒளிக்கதிர், ஒளி

கரம்

கரு (=பிறப்பு, தோற்றம்) + அம் (=ஒளி, நீளம்) = கரம் = ஒளியின் நீண்ட தோற்றம் = ஒளிக்கதிர், ஒளி

கரம்

வரி

கரம்

கரு (=பொருள், திரள், குவி) + அம் (=அரசன், ஆணை, பணிவு) = கரம் = அரசனின் ஆணைக்குப் பணிந்து குவிக்கப்படும் பொருள்.

கரம்

வெப்பம், சினம்

கறம்

கறு (=சின, எரி) + அம் = கறம் >>> கரம் = சினம், எரிச்சல், வெப்பம்

கரம்

உயர்வு

கரம்

கருமை (=பெருமை) + அம் = கரம் = பெருமை, உயர்வு

கரம்

கழுதை

கரம்

கரு (=உயிரி, பொருள், பாரம்) + அம் (=பொறு) = கரம் = பாரம் பொறுக்கும் உயிரி = கழுதை.

கரம்

நஞ்சு

கரம்

கரை (=அழி, கொல்) + அம் (=உணவு) = கரம் = கொல்லும் உணவு = நஞ்சு

கரம்

கடுமை

கரம்

கருமை (=வலிமை, கடுமை) + அம் = கரம்.

கரவடம்

திருட்டு, வஞ்சகம்

கரவடம்

கரவு (=மறைப்பு, ஏமாற்று) + அடை (=பெறு) + அம் = கரவடம் = மறைவாகப் பெறுதல் (=திருட்டு), ஏமாற்றிப் பெறுதல் (=வஞ்சகம்)

கரவடன்

திருடன், வஞ்சகன்

கரவடன்

கரவடம் (=திருட்டு, வஞ்சகம்) + அன் = கரவடன் = திருடன், வஞ்சகன்

கரவாகம்

காக்கை

கரைபகம்

கரை (=அழை) + பகு (=பகிர்) + அம் (=உண்) = கரைபகம் >>> கரவாகம் = அழைத்துப் பகிர்ந்து உண்பது = காகம்

கரவரம்

கையை உயர்த்துதல்

கரவாரம்

கரம் (=கை) + வார் (=உயர்த்து) + அம் = கரவாரம் = கையை உயர்த்துதல்

கரளம்

நஞ்சு

கரலம்

கரு (=உயிர்) + அலை (=கொலை) + அம் (=உணவு) = கரலம் >>> கரளம் = உயிரைக் கொல்லும் உணவு = நஞ்சு

கரன்

கடவுள்

கரன்

கரு (=மூலம்) + அன் = கரன் = கருவானவன், மூலமானவன்.

கராசலம்

யானை

கரஞ்செலம்

கரம் (=கை) + செல் (=மலை) + அம் = கரஞ்செலம் >>> கராசலம் = கையுடைய மலை = யானை.

கராத்திரி

யானை

கரந்திரி

கரம் (=கை) + திரம் (=மலை) + இ = கரந்திரி >>> கராத்திரி = கையுடைய மலை = யானை.

கராம்பு, கிராம்பு

கிராம்பு

கரம்பூ

கரம் (=கருமை, வெப்பம், எரிச்சல்) + பூ = கரம்பூ >>> கராம்பு >>> கிராம்பு = எரிச்சல் தருகின்ற கருநிறப் பூ.

கரார்

உறுதி

கரார்

கருமை (=வலிமை) + ஆர் (=நிறை, மிகு) = கரார் = மிக்க வலிமை = உறுதி.

கராளம், கராளி

தீக்குணம்

கராளம்

கருமை (=கொடுமை) + ஆள் (=செய்) + அம் = கராளம் = கொடுஞ்செயல்

கராளம்

அச்சந்தருவது

கரளம்

கரி (=அஞ்சு) + அளி (=கொடு) + அம் = கரளம் >>> கராளம் = அச்சந் தருவது

கரி

யானை

கரி

கருமை (=கருநிறம், வலிமை, பெருமை) + இ = கரி = வலிமையும் பெருமையும் கருநிறமும் கொண்டது = யானை.

கரி

பெண் கழுதை

கரி

கரம் (=கழுதை) + இ = கரி = பெண் கழுதை

கரி

தீமை

கரி

கருமை (=கொடுமை, தீமை) + இ = கரி = தீமை, தீங்கு.

கரிஞ்சம்

அன்றில்

கரிச்சம்

கரு (=உடல், உயிர்) + இசை (=பொருந்து, இணை) + அம் (=நீர், பறவை) = கரிச்சம் >>> கரிஞ்சம் = உடலும் உயிருமாய் இணைந்த நீர்ப்பறவைகள்.

கரிணி

பெண் யானை

கரினி

கரி (=யானை) + இனி = கரினி >>> கரிணி = பெண் யானை

கரிமா

பெரிதாகும் ஆற்றல்

கரிமா

கரி (=பெருகு, பெரு) + மா (=ஆற்றல்) = கரிமா = பெருக்கின்ற அதாவது பெரிய உருவெடுக்கின்ற ஆற்றல்.

கரீரம்

பெரிய நீர்ச்சாடி

கரூறம்

கருமை (=பெருமை) + உறை (=கூடு, பாத்திரம், நீர்) + அம் = கரூறம் >>> கரீரம் = பெரிய நீர்ப் பாத்திரம்

கரீரம்

முளை

கரீரம்

கரு (=மூலம், பிறப்பு, பல், கூரியது) + ஈர் (=பசுமை) + அம் = கரீரம் = கூர்மையாகப் பிறக்கும் பசிய மூலம் = முளை.

கரீரம்

தந்த மூலம்

கரீரம்

கரு (=மூலம், பல்) + ஈர் (=நீளு) + அம் = கரீரம் = நீண்ட பல்லின் மூலம்

கருடம், கருடன்

கழுகு, பருந்து

கரூறம்

கருமை (=பெருமை, வலிமை, செம்மை) + ஊறு (=உடல், கொலை) + அம் (=பறவை) = கரூறம் >>> கருடம் = வலுவான பெரிய சிவந்த உடலைக் கொண்ட கொல்லும் பறவை.

கருடி

தடுத்துத் தாக்குமாட்டம்

கரிடி

கர (=மறை, தடு) + இடி (=தாக்கு) = கரிடி >>> கருடி = தடுத்துத் தாக்குதல்.

கருணை

அவலச்சுவை, அழுகை

கருநை

கரு (=அறிவு, உணர்ச்சி) + நை (=வருந்து, அழு) = கருநை >>> கருணை = அழுகை உணர்ச்சி = அவலச்சுவை, வருத்தம்.

கருணை

உயிர் மீதான அன்பு

கருநெய்

கரு (=உயிர்) + நெய் (=நட்பு, பாசம்) = கருநெய் >>> கருநை >>> கருணை = உயிர் மீதான பாசம் = அன்பு.

கருத்தமம், கர்த்தமம்

சேறு

கரைத்தாமம்

கரை (=நெகிழ், குழை) + தாமம் (=இடம், நிலம்) = கரைத்தாமம் >>> கர்த்தமம் = குழைவான / நெகிழ்ந்த நிலம் = சேறு.

கருமசம்

அரசமரம்

கருபசம்

கரு (=நிறம், கூர்மை) + பசுமை (=பச்சை, இலை) + அம் (=நீளம்) = கருபசம் >>> கருமசம் = கூர்மையாக நீண்ட பச்சைநிற சிலைகளைக் கொண்டது = அரசு

கருமம், கர்மம்

ஆக்கம், செயல்

கருமம்

(2) கரு (=பிறப்பு, ஆக்கம்) + மம் = கருமம் >>> கர்மம் = ஆக்கம், செயல்

கருமம், கர்மம்

சினம், வெப்பம்

கறுமம்

(2) கறு (=சின, எரி) + மம் = கறுமம் >>> கருமம் >>> கர்மம் = சினம், வெப்பம்

கருமாதி

உடல் தகனம்

கரிபறி

கரி (=எரி, கரியாக்கு) + பறி (=உடல்) = கரிபறி >>> கருமதி >>> கருமாதி = உடலை எரித்துக் கரியாக்குதல் = தகனம்

கருமாந்தம், கருமாந்தரம்

உடல் தகனம்

கரிபற்றம்

கரி (=எரி, கரியாக்கு) + பறி (=உடல்) + அம் = கரிபற்றம் >>> கருமத்தம் >>> கருமாந்தம் = உடலை எரித்துக் கரியாக்குதல் = தகனம்

கருமி

தீயவன்

கருமி

கருமை (=கொடுமை, தீமை) + இ = கருமி = தீமை செய்பவன்

கருமி

செய்பவன்

கருமி

கருமம் (=செயல்) + இ = கருமி = செய்பவன்

கருமி

கஞ்சன்

கருவீ

கரு (=நுண்மை, சிறுமை, பொருள்) + ஈ (=கொடு) = கருவீ >>> கருமி = சிறிதளவே பொருள் கொடுப்பவன் = கஞ்சன்.

கருமை

சினம், வெப்பம்

கறுமை

கறு (=சின, எரி) + மை = கறுமை >>> கருமை = சினம், வெப்பம்.

கருவம்

கரு

கரு

கரு + அம் = கருவம்

கருவம், கர்வம்

செருக்கு

கருவம்

கருமை (=வலிமை, செருக்கு) + அம் = கருவம் >>> கர்வம்

கருளம், கருளன்

கழுகு, பருந்து

கருலம்

கருமை (=பெருமை, வலிமை, செம்மை) + உலை (=கொலை) + அம் (=பறவை) = கருலம் >>> கருளம் = வலுவினால் கொல்லும் பெரிய செந்நிறப் பறவை.

கரேணு

யானை

கரேணு

கரு (=கருப்பு, உடல்) + ஏண் (=உயரம், வலிமை) + உ = கரேணு = உயரமான வலுவான கருநிற உடலைக் கொண்டது = யானை.

கரோடி, கரோடிகை

சிரமாலை

கரோடி

கரு (=திரட்டு, கட்டு) + ஓடு (=மண்டையோடு) + இ = கரோடி = மண்டை ஓடுகளால் கட்டப்பட்டது = சிரமாலை

கல்கம்

நீர் கூட்டிய மருந்து

கலக்கம்

கலக்கு (=சேர், கூட்டு) + அம் (=நீர், மருந்து) = கலக்கம் >>> கல்கம் = நீருடன் மருந்தைக் கூட்டியது.

கல்காரம், கற்காரம்

பாறைக்கல் கட்டிடம்

கல்கரம்

கல் (=பாறைக்கல்) + கரு (=கட்டு) + அம் = கல்கரம் >>> கல்காரம் >>> கற்காரம் = பாறைக்கற்களால் கட்டப்பட்டது.

கல்மசம்

சீழ்

கல்பசம்

கால் (=வழி, துளை, வெளிப்படு) + பச (=ஒழுகு) + அம் (=நீர், வெண்மை) = கல்பசம் >>> கல்மசம் = துளையில் இருந்து வெளிப்பட்டு ஒழுகும் வெண்ணீர் = சீழ்

கல்மசம்

பாவம், குற்றம்

கல்மாசம்

கால் (=உண்டாக்கு, செய்) + மாசு (=குற்றம்) + அம் = கல்மாசம் >>> கல்மசம் = குற்றச் செயல் = பாவம்

கல்யாணம், கலியாணம்

திருமணம்

களியாணம்

(2) களம் (=கூட்டம், இன்னோசை, கழுத்து) + இயை (=பொருத்து, பூட்டு) + அணி (=சூழ், அன்பு, அணிகலன்) + அம் = களியாணம் >>> கலியாணம் >>> கல்யாணம் = கூட்டம் சூழ்ந்திருக்க இன்னோசை ஒலிக்க அன்புடையார் கழுத்தில் அணிகலன் பூட்டுதல் = திருமணம்.

கல்யாணம், கலியாணம்

நன்மை, நற்குணம், நற்செயல்

களியணம்

களி (=மகிழ்ச்சி) + அணை (=உண்டாக்கு) + அம் = களியணம் >>> கலியாணம் >>> கல்யாணம் = மகிழ்ச்சி உண்டாக்குவது = நன்மை, நற்குணம், நற்செயல்

கல்யாணம், கலியாணம்

தங்கம்

களியாணம்

களம் (=கூட்டம், இன்னோசை, கழுத்து) + இயை (=பொருத்து, பூட்டு) + அணி (=சூழ், அன்பு, அணிகலன்) + அம் = களியாணம் >>> கலியாணம் >>> கல்யாணம் = கூட்டம் சூழ்ந்திருக்க இன்னோசை ஒலிக்க அன்புடையார் கழுத்தில் பூட்டும் அணிகலன் = தங்கம்.

கல்லியம்

கள்

கல்லீயம்

கல் (=மயங்கு, உண்ணு) + ஈ (=கொடு) + அம் (=நீர், வெண்மை) = கல்லீயம் >>> கல்லியம் = மயக்கம் தரும் வெண்ணிற நீர் உணவு.

கல்லி, கேலி

விளையாட்டு

கலி

கலி (=மகிழ், ஒலி, கூடு, விரை, ஓடு) + இ = கல்லி >>> கேலி = கூடி ஓடி ஒலித்து மகிழ்தல் = விளையாட்டு, வேடிக்கை.

கல்லூரி

உயர்கல்விக்கான இடம்

கல்லூரீ

கல் (=கல்வி) + ஊர் (=உயர், இடம்) + ஈ (=கொடு) = கல்லூரீ >>> கல்லூரி = உயர் கல்வி தரும் இடம்.

கல்லோலம்

கடலலை

கல்லோலம்

கலி (=தோன்று, உயர், ஒலி, விரை) + ஓலம் (=கடல்) = கல்லோலம் = கடலில் தோன்றி உயர்ந்து ஒலித்தவாறு விரைவது = கடலலை.

கல்வம், கலுவம்

குழியுடைய கல்

கல்மம்

கல் (=தோண்டு, பள்ளமாக்கு, பாறைத்துண்டு) + மம் = கல்மம் >>> கல்வம் >>> கலுவம் = தோண்டிப் பள்ளமாக்கிய பாறைத்துண்டு

கலகம்

சண்டை, பிரிக்கும் சொல்

கலகம்

கல் (=பிரி, ஒலி, பேச்சு) + அகம் (=அன்பு, நட்பு) = கலகம் = நட்பைப் பிரிக்கும் பேச்சு = சண்டை, பிரிவினை உண்டாக்கும் சொல்.

கலகம்

போர்

கலகம்

கல (=கூடு, ஒன்றுசேர்) + அகை (=அடி, வெட்டு, கொல்) + அம் = கலகம் = ஒன்றுசேர்ந்து அடித்தும் வெட்டியும் கொல்லுதல் = போர்.

கலகம்

பேரொலி

கலாக்கம்

கல் (=ஒலி) + ஆக்கம் (=மிகுதி) = கலாக்கம் >>> கலகம் = மிக்க ஒலி.

கலகி

சண்டையிடு

கலகி

கலகம் (=சண்டை) + இ = கலகி = சண்டையிடு

கலயம், கலசம்

குடம், கிண்ணம்

கலயம்

கலம் (=பாத்திரம்) + அயம் (=பள்ளம், குழி) = கலயம் >>> கலசம் = குழியுடைய பாத்திரம் = குடம், கிண்ணம்.

கலணை, கலனை

குதிரைச் சேணம்

கலேணை

கால் (=மிதி, நடை, பயணம்) + ஏணி + ஐ = கலேணை >>> கலணை >>> கலனை = பயணத்திற்காக மிதிக்கப்படும் ஏணி

கலதி

வழுக்கை நோய்

களத்தி

களை (=நீக்கு) + அத்தம் (=மயிர்க்கற்றை, நோய்) + இ = களத்தி >>> கலதி = மயிர்க் கற்றையை நீக்கும் நோய் = வழுக்கை நோய்

கலதி, கலதிமை

கேடு, துன்பம்

கலறி

கலி (=மகிழ்ச்சி, இன்பம்) + அறு (=இல்லாகு) + இ = கலறி >>> கலதி = இன்பம் இல்லாதது = கேடு, துன்பம்

கலதி

வஞ்சகன்

களறி

களம் (=கழுத்து) + அறு + இ = களறி >>> கலதி = கழுத்தறுப்பவன்

கலப்பை

ஏர்

கலமை

கல் (=கிழி) + அம் (=இடம், நிலம்) + ஐ = கலமை >>> கலப்பை = நிலத்தைக் கிழிப்பது = ஏர்.

கலபம், கலவம், கலாவம், கலாபம்

தோகை, மயில்

கலாவம்

கலி (=செருக்கு, மகிழ், பெருக்கு, விரி) + ஆவம் (=வில்) = கலாவம் >>> கலாபம், கலவம், கலபம் = மகிழ்ச்சிப் பெருக்கால் செருக்கி வில்லென விரிக்கப்படுவது = தோகை >>> தோகை உடையது = மயில்.

கலம்

ஏர்

கலம்

கல் (=கிழி) + அம் (=இடம், நிலம்) = கலம் = நிலத்தைக் கிழிப்பது = ஏர்.

கலர்

வஞ்சகர்

கலர்

கலி (=வஞ்சகம்) + அர் = கலர் = வஞ்சகர்

கலவகம்

காகம்

கலவகம்

(2) கல (=சேர், கூடு) + அகவு / அக (=அழை) + அம் (=உண்ணு) = கலவகம் = அழைத்துக் கூடி உண்பது = காகம்.

கலனம்

முன்கூட்டிய விந்து வெளிப்பாடு

கலணம்

கலி (=விரை, வெளிப்படு, ஒழுகு) + அணை (=புணர்) + அம் (=நீர், வெண்மை) = கலணம் >>> கலனம் = புணரும்போது வெண்ணீர் விரைந்து வெளிப்பட்டு ஒழுகுதல்

கலனம்

படுத்தவாறு பிதற்றுதல்

களணம்

களி (=மயக்கம்) + அணை (=படுக்கை) + அம் (=சொல், பேச்சு) = களணம் >>> கலனம் = படுக்கையில் மயக்கத்தில் பேசுதல்.

கலனை

கலப்பை

கலாணை

கல் (=கிழி) + ஆணம் (=நிலம்) + ஐ = கலாணை >>> கலனை = நிலத்தைக் கிழிப்பது = ஏர்.

அன்னம்

பூமி, நிலம்

ஆணம்

அணை (=தாங்கு) + அம் = ஆணம் >>> அன்னம் = தாங்குவது = பூமி

கச்சூரம்

பேரீச்சம் பழம்

காழ்ச்சுரம்

காழ் (=வலிமை, கொட்டை, முற்று, பழு, இரத்தினம், நிறம்) + சுரம் (=பாலைநிலம்) = காழ்ச்சுரம் >>> கச்சூரம் = இரத்தின நிறமும் வலுவான கொட்டையும் கொண்ட பாலைநிலப் பழம் = பேரீச்சம் பழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.